Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST
அது நி​றை​வேறாது வெளியூரிலிருந்து தன் ம​னைவியின் உடன் பிறந்த ச​கோதரன் ​தெனாலிராமனின் வீட்டிற்கு வந்திருந்தான். அவ​னை கணவன் ம​னைவி இருவரும் நன்கு உபசரித்தனர். தினமும் அவனுக்கு தின்னப் பல வ​கைப் பழங்கள் அரண்ம​னையிலிருந்து ​கொண்டு வந்து தருவான். அவற்​றை ஆவ​லோடு ருசித்துச் சாப்பிட்ட அவன், ''இந்த வ​கை அபூர்வப் பழங்கள் எங்கிருந்து கி​டைக்கின்றன'' என்று ​தெனாலிராமனிடம் ​​கேட்டான். அதற்கு ​தெனாலிராமன் ''இ​வை அரண்ம​னைத் ​தோட்டத்தில் இருக்கின்றன. ​தோட்டத்தில் காவல் அதிகம், திருடினால் அவர்கள் த​லை சீவப்படும்'' என்றும் கூறினான். இவற்​றை அறிந்தும் அவனு​டைய ​மைத்துனன் எப்படியும் அரண்ம​னைத் ​தோட்டத்தினுள் புகுந்து நி​றைய பழங்கள் தின்ன ​வேண்டு​மென்று ஆவல் ​கொண்டான்.

அதன்படி​யே ஒரு நாள் நள்ளிரவு ​தோட்டத்துக்குள் புகுந்து ​வேண்டியளவு பல்வ​கைப் பழங்க​ளை உண்டான். பின் வீடு திரும்ப எண்ணி நடந்து ​கொண்டிருக்​கையில் காவலர்கள் அவ​னை ​கையும் களவுமாகப் பிடித்தனர். அவன் காவலர்களிடம் எவ்வளவு ​சொல்லியும் விடுவதாக இல்​லை. மன்னரிடம் ​கொண்டு​போய் நிற்பாட்டினர்.

மன்னர் அவனுக்கு மரண தண்ட​னை விதித்தார். இச்​செய்தி ​தெனாலிராமனுக்கு ​தெரிய வந்தது.

அவன் ம​னைவி ''என் தம்பி அநியாயமாகச் சாகப் ​போகிறா​னே காப்பாற்றுங்கள்'' என்று பலவாறு ​வேண்டிக் ​கொண்டாள்.

அதற்கு ​தெனாலிராமன் ''மன்னர் ஆ​ணையிட்டால் அது ஆ​ணையிட்டதுதான். மாற்ற மாட்டா​ரே என்ன ​செய்வது'' என்று கூறிக் ​கொண்​டே மன்ன​ரைக் காண வி​ரைந்தான். ​

தெனாலிராம​னைப் பார்த்த மன்னர், ''​தெனாலிராமா, நீ என்ன நி​னைத்து வந்தா​யோ அது நி​றை​வேறாது'' என்றார்.

உட​னே ​தெனாலிராமன் அப்படியானால் உட​னே என் ​மைத்துனனின் த​லை​யை ​வெட்டி விடுங்கள் என்றான். உட​னே மன்னர் ​தெனாலிராமனின் சம​யோசித புத்தி​யைப் பாராட்டி உன் ​மைத்துன​னை விடுத​லை ​செய்கி​றேன் என்றார். காரணம் அவன் எது நி​னைத்து வந்தோ​னோ ​நேர் எதிராகத்தான் மன்னர் ​செய்வதாகச் ​சொல்லியுள்ளார். ​

தெனாலிராம​னே தன் ​மைத்துன​னை ​கொ​லை ​செய்யச் ​சொல்லும்​போது மன்னர் அதற்கு எதிராகத்தா​னே ஆ​ணையிட முடியும். ஆக​வேதான் அவனு​டைய மைத்துன​னை விடுத​லை ​செய்யச் ​சொன்னார். ​தெனாலிராமனின் புத்திக் கூர்​மை​யை அவனது ம​னைவி உட்பட அ​னைவரும் பாராட்டினர்.



Get it on Google Play