TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
போர்க்களம்
ஒரு நாள் மாலை நேரம் அரண்மனைத் தோட்டத்தில் அரசரும் பெரிய தன்வந்தர்களும் படைத் தளபதிகளும் கூடினர். ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீரதீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர், அப்போது தெனாலிராமனும் அங்கு இருந்தான். அவர்கள் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை.
''போங்கள் ஐயா. நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள். நானும் போர்க்களம் சென்று இருக்கிறேன். அதில் ஒருவனுடைய காலை என் வாளால் வெட்டி விழ்த்தி விட்டேன்''என்றான். அதைக் கேட்ட அனைவரும் தெனாலிராமன் கூடவா போர்க்களம் சென்றிருப்பான் என்று யோசிக்கத் தொடங்கினர்.
பின் அதில் ஒருவன் காலை வெட்டியதாகச் சொல்லுகிறாயே அவன் தலையை வெட்டுவதற்கு என்ன என்று கேட்டான். அதைக் கேட்ட தெனாலிராமன் ''தலையைத் தான் எனக்கு முன்பு எவனோ வெட்டிவிட்டானே நான் என்ன செய்ய'' என்று சொன்னதுதான் தாமதம் மன்னர் உட்பட அனைவரும் கொல்லெனச் சிரித்து விட்டனர்.