TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
அத்தியாயம் - 1
1. கடவுள் வாழ்த்து
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 சான்றோர்கள் எந்தப் பணியை ஆரம்பிக்கும் போதும் அது விக்கினம் ஏதுமின்றி பரிபூரண வெற்றியாக முடிவடைய வேண்டி, ரக்ஷிக்கும் தெய்வங்களைத் துதிபாடி வரம் வேண்டுவர்.
2 எல்லாத் தடைகளும் விலகி, விரும்பிய பலனை அடையவேண்டுமென்பதே அனைத்துத் தெய்வங்களுக்கும் மங்கள வாழ்த்துப் பாடுவதன் நோக்கமாகும்.
3 ஆகவே நாம் இப்பொழுது வளைந்த தும்பிக்கையை உடையவரும் எளியவர்களைக் காப்பவரும் ஆனைமுகத்தவரும் பதினான்கு சாஸ்திரங்களுக்கு அதிபதியுமான கணபதியை முதல் துதிபாடுவோம்.
4 ஈரேழு உலகங்களையும் வயிற்றில் அடக்கியதால் பெருவயிறன் எனப் பெயர் பெற்றீர். பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய இடைஞ்சல்களையும் தடங்கல்களையும் வெட்டி வீழ்த்துவதற்காகவே கையில் கோடாரி ஏந்தினீர்.
5 ஓ சிவகணங்களுக்குத் தலைவரேõ யானை முகத்தோரேõ விக்கினங்களால் ஏற்படும் ஹிம்ஸையைப் போக்குபவரேõ என்னுடைய வாக்கில் உமதருளைப் பொழியவேண்டுமென்று வேண்டி, ஸாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.
6 நீர் பக்தர்களுக்கு ஸஹாயம் செய்பவர். உமது தண்டைச் சலங்கைகளிருந்து தடங்கல்கள் அனைத்தும் உருண்டோடுகின்றன. ஒரு கண்வீச்சாலேயே தரித்திரத்தை விரட்டியடிக்கிறீர்.
7 நீர் சம்சாரக் கடலைக் கடக்க உதவும் நாவாய்; அஞ்ஞான இருளில் ஞானஜோதிõ பெருமானேõ ருத்திதேவி, ஸித்திதேவியுடன்கூடிய நீர் எனக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.
8 ஜய ஜய மூஞ்சூறு வாஹனரே, தடங்கல்களாகிய காட்டை அழிப்பவரே, உமையவளின் மைந்தரே, மங்களமான முகத்தோரே, உம்மை வணங்குகிறேன்; போற்றிõ போற்றி
9 இங்கு நான், முன்னோர்கள் சென்ற பாதையில், எடுத்த காரியம் தடங்கன்றி முடிவதற்காகவும் மங்களம் வேண்டியும் ரக்ஷிக்கும் தெய்வங்களை வணங்குகிறேன்.
10 ஆயினும் ஸாயீயே ஆனைமுகத்தோனும் கணபதியும் அல்லரோ? கையில் கோடாரி ஏந்தித் தம்முடைய காதை பிரவசனம் (காலட்சேபம்) செய்யப்படும்போது ஏற்படும் விக்கினங்களை வெட்டி வீழ்த்துவார் அல்லரோ?
11 ஆனைமுகத்தோரும் அவரே; நெற்றியில் பிறையணிந்த பாலசந்திரரும் அவரே; ஒற்றைக் கொம்பரும் அவரே; யானை போன்ற காதுகளையுடையவரும் அவரே; விக்கினமாகிய காடுகளை பயங்கரமாக அழிக்கும் உடைந்த தந்தமுடையவரும் அவரேõ
12 ஓõ எல்லா மங்களங்களுக்கும் மங்களமானவரே, பெருவயிறு படைத்தவரே, கருணையுள்ளம் கொண்டவரே, சிவகணங்களுக்குத் தலைவரேõ நீர் ஸாயீயைத் தவிர வேறு எவருமல்லர். நிஜமான சுகத்தை அளிக்கக்கூடிய பரமபதப் பாதையில் என்னை நடத்திச் செல்வீராக.
13 அடுத்ததாக, பிரம்மாவின் புத்திரியான ஸரஸ்வதியை வணங்குகின்றேன். அவர், கலைச் செல்வத்துடனும் கற்பனைச் சக்தியுடனும் என்னுடைய நாவைத் தம்முடைய வாஹனமாகிய ஹம்ஸமாகக் (அன்னப் பறவை) கருதி அதில் அமரட்டும்.
14 தூய வெள்ளையுடை தரித்தவளேõ ஹம்ஸவாஹினியேõ நெற்றியில் சிவப்புக் குங்குமம் அணிந்தவளேõ பிரம்ம வீணையை ஒப்பவளேõ என் மீது கிருபை செய்வாய் அம்மா
15 ஜகன்மாதாவும் வாக்கின் தேவதையுமான ஸரஸ்வதியின் கடாக்ஷமின்றி கலையோ, இலக்கியமோ, கவியோ, காதையோ எப்படி என்னை வந்தடையும்? அவருடைய அருளின்றி யான் இந்த ஸாயீ புராணத்தை எங்ஙனம் எழுத முடியும்?
16 உலகனைத்தையும் ஈன்றவரும் வேதமாதாவுமான ஸரஸ்வதியே ஸகல கலைகளுக்கும் தாயல்லரோõ அடியேனுடைய கரம் வழியாக ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம் என்னும் இவ்வமுதத்தை எல்லாரையும் பருகவைக்க அவரை வேண்டுகிறேன்.
17 பகவதியும் ஸரஸ்வதியுமான ஸாயீ, ஓங்கார வீணையைக் கையிலேந்தி பக்தர்களை உத்தாரணம் (தீங்கினின்று மீளச்) செய்வதற்காகத் தம்முடைய வாழ்க்கைச் சரித்திரத்தைத் தாமே பாடுகிறாரல்லரோõ
18 படைத்தல் காத்தல் அழித்தல் பணிகளைச் செய்யும் முறையே பிரம்மாவையும் விஷ்ணுவையும் சங்கரனையும் வணங்குகின்றேன். ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களின் அதிபதிகளல்லரோ அவர்கள்.
19 ஓ, சுயஞ்ஜோதியான ஸாயீநாதரேõ நீரே எமக்கு கணபதியும் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவீர்.
20 நீரே எமது ஸத்குரு, நீரே எங்களை சம்சாரக் கடலை பத்திரமாகத் தாண்டவைக்கும் கப்பல். பக்தர்களாகிய நாங்கள் இக்கப்பல் பிரயாணிகள்; எங்களை அக்கரை சேர்ப்பீர் ஐயனே
21 பூர்வ ஜன்மங்களில் செய்த சுகிருதங்களால் (புண்ணியச் செயல்களால்) அல்லவோ உமது பாதகமலங்களை நோக்கி நாங்கள் பலமாக இழுக்கப்பட்டிருக்கிறோம்; அதுவே எங்களுடைய அடைக்கலம்.
22 இப்பொழுது, குலதேவதையாகியவரும் பாற்கடல் பள்ளிகொண்டவருமான ஆதிநாராயணரை வணங்குகின்றேன்; எல்லாருடைய துக்கத்தையும் வேதனையையும் வயையும் அழிப்பவர் அவரே.
23 எப்பொழுது பரசுராமர் ஸமுத்திரத்தைப் பின்னடையச் செய்து, கொங்கணம் என்னும் புதிய பூமி கண்டாரோ, அப்பொழுது அங்கே நாராயணர் பிரஸன்னமானார்.
24 நாராயணர் ஸகல ஜீவராசிகளினுள்ளும் உறைபவர்; ஹிருதயத்தை ஆள்பவர்; கிருபாகடாக்ஷத்தினால் காப்பவர். அவரிடமிருந்துதான் நான் உந்துதல் பெறுகிறேன்.
25 அடுத்ததாக என் குலத்தின் மூலபுருஷரான ரிஷியை (பரத்வாஜர்) வணங்குகின்றேன். பரசுராமர் சிறந்த யாகமொன்றை நிறைவேற்றுவதற்காக இவரை வங்காளத்திருந்து அழைத்துவந்தார்.
26 ரிஷிகளில் அரசரும், என்னுடைய கோத்திரத்தின் மூலபுருஷரும், இருக்கு வேத (சாகலக் கிளை) விற்பன்னரும், ஆத்யகௌட பிராம்மண குலத்தை ஸ்தாபனம் செய்தவருமான பரத்வாஜ ரிஷியை நமஸ்கரிக்கின்றேன்.
27 அடுத்தபடியாக, பர பிரம்மத்தின் வடிவங்களும் பூலோகத்தில் வாழும் தேவர்களுமான வேதம் ஓதும் அந்தணர்களை வணங்குகின்றேன். பிறகு மஹாயோகீச்வரர்களான யாக்ஞியவல்கியர், பிருகு, பராசரர், நாரதர் போன்றவர்களை வணங்குகின்றேன்.
28 பராசரரின் புத்திரரான வேதவியாஸர், பிரம்மாவின் மானஸபுத்திரர்களான ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், ஸனத்ஸுஜாதர் ஆகிய நால்வர், சுகர், சூத்திரம் எழுதிய சௌனகர், விச்வாமித்திரர், வசிஷ்டர்,
29 வால்மீகி, வாமதேவர், ஜைமினி, வைசம்பாயனர், நவமுனிகளாகிய யோகீந்திரர்கள், இவர்களுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கின்றேன்.
30 அடுத்ததாக, நிவ்ருத்தி, ஞானதேவர், முக்தா, ஸோபான், ஏகநாதர், ஸ்வாமி ஜனார்த்தனர், துகாராம், கான்ஹோபா, நரஹரி போன்ற ஞானிகளையும் மஹான்களையும் வந்தனம் செய்கின்றேன்.
31 எல்லா ஞானிகளின் பெயர்களையும் எழுத இப்புத்தகத்தில் இடமில்லாத காரணம்பற்றி, அவர்கள் அனைவரையும் வந்தனம் செய்து, அவர்களுடைய ஆசீர்வாதங்களை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றேன்.
32 புண்ணியப் பிரபாவம் நிறைந்த என் பாட்டனாராகிய சதாசிவ தாபோல்கரை வணங்குகின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் சாரமின்மையை உணர்ந்த அப் பெருமகனார், தம்முடைய கடைசிக் காலத்தில் குடும்பத்தைத் துறந்து பத்ரிநாத், கேதார்நாத் க்ஷேத்திரங்களில் வாழ்ந்தார்.
33 சிவனை இஷ்டதேவதையாகக் கொண்டு, எப்பொழுதும் ருத்திராக்ஷம் தரித்து சிவபக்தராக வாழ்ந்த என் பிதாவை வணங்குகின்றேன் (ரகுநாத சதாசிவ தாபோல்கர்).
34 எனக்கு இந்த ஜன்மத்தை அளித்தவரும் இரவு பகல் பாராமலும் சோர்ந்துபோகாமலும் பல கஷ்டங்களை அனுபவித்து என்னை வளர்த்தவருமான என் அன்னையின் பாதங்களில் விழுந்து வணங்குகின்றேன். அன்னையின் சேவைகளுக்கு நான் என்று எவ்விதமாகக் கைம்மாறு செய்ய முடியும்?
35 ஆயினும், நான் குழந்தையாக இருந்தபோதே என்னை விட்டுவிட்டு அன்னை இறந்துவிட்டார். பிறகு ஹரிபக்தையான அத்தை என்னை சிரமப்பட்டு வளர்த்தார். அவருடைய பாதங்களில் விழுந்து வணங்குகின்றேன்.
36 எனக்கு அண்ணன் என்மீது எல்லையில்லாத அன்பும் பாசமும் உடையவர். எனக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார். அவருடைய பாதங்களில் வணங்கும்போது என் மனத்துள் நன்றியுணர்ச்சி பொங்குகிறது.
37 கதைகேட்பவர்களே (வாசகர்களே) உங்கள் அனைவரையும் நான் வணங்குகின்றேன். ஒருமுனைச்சித்தமாகக் கதையைக் கேட்கும்படி வேண்டுகின்றேன். நீங்கள் கவனமாகக் கேட்கவில்லையென்றால், நான் எவ்வாறு மகிழ்ச்சியடையமுடியும்?
38 மேலும் மேலும் கேட்கவேண்டுமென்ற ஆவல் எவ்வளவுக்கெவ்வளவு சிறந்த ரசிகருக்கு இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கதை சொல்பவருக்கு உற்சாகமும் தெம்பும் பெருகி, மேலும் மேலும் சொல்க்கொண்டே போவார்.
39 நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், நான் கதை சொல்ப் பிரயோஜனம் என்ன? ஆகவே நான் உங்களை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, அகமலர்ச்சியுடன் இக்கதையைச் செவிமடுக்குமாறு கெஞ்சுகிறேன்.
40 நான் இலக்கிய ஞானம் படைத்தவன் அல்லேன்; காவியங்களைப் படித்தவன் அல்லேன்; கதா கீர்த்தனங்கள்கூடக் கேட்டவன் அல்லேன். இது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
41 எனக்கு என்னுடைய குறைகள் தெரிந்திருக்கின்றன; தகுதியின்மையையும் நன்கு உணர்கிறேன். குருவின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே அவருடைய திவ்ய சரித்திரத்தை எழுத முயற்சி செய்கிறேன்.
42 உங்களுடைய முன்னிலையில் நான் ஒரு சிறு துரும்பே என்பதை என் மனமே சொல்கிறது. ஆயினும், குறைகள் எவ்வளவு இருப்பினும் கருணை கூர்ந்து என்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்.
43 ஆகவே இப்பொழுது நாம் நமது ஸத்குருவை நினைப்போம்; அவருடைய பாதகமலங்களை அன்புடனும் பக்தியுடனும் தொழுவோம். ஸகல ஞானங்களுக்கும் கற்பனை வளத்திற்கும் ஆதாரமான அவரை மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் சரணடைவோம்.
44 சாப்பிடும்போது இனிப்புப் பண்டத்தைக் கடைசியில்தானே உண்கிறோம்; அது போலவே, குருவந்தனம் கடவுள் வாழ்த்தின் கடைசிப் பகுதியாக அமைகிறது.
45 ஓம் ஸ்ரீஸத்குருராயாõ நகரும் நகராப் பொருள்களாலான இவ்வுலகின் ஒரே அடைக்கலமாகிய உமக்கு நமஸ்காரம். நீரே உம்முடைய தயையினால் இப்பிரபஞ்சத்தை சாசுவதமாக ரக்ஷிக்கிறீர்.
46 பிரம்மாண்டம் எனப் பிரஸித்தி பெற்றது ஹிரண்யகர்ப்பம் (முழுமுதற்பொருளிருந்து தோன்றிய தங்கமயமான முட்டை). இதிருந்தே பூமியும் ஏழு தீவுகளும் ஒன்பது கண்டங்களும் மேலுலகங்கள் ஏழும் கீழுலகங்கள் ஏழும் பிறந்தன.
47 பிரம்மாண்டத்தை சிருஷ்டி செய்வது மாயை; இதற்கே 'தோன்றாததுஃ என்றும் பெயர். ஸத்குரு மாயைக்கு அப்பாலுக்கப்பால் வசிக்கிறார்.
48 ஸத்குருவினுடைய மஹிமையை வர்ணிக்க முயன்று வேதசாஸ்திரங்கள் மௌனமாகிவிட்டன. யுக்தியும் வாதமும் இங்கே செல்லுபடியாகா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
49 ஸத்குருவேõ உமக்கு எதையுமே உபமானமாகக் காட்ட இயலாது; ஏனெனில், உம்முடைய இயற்கையான குணத்தினால், எந்தப் பொருள் உபமானமாகக் காட்டப்படுகிறதோ அதில் ஏற்கெனவே உறைந்திருக்கிறீர். எப்பொருளின்மீது கண்பார்வை விழுந்தாலும், அது நீர் எடுத்துக்கொண்ட ஓர் உருவமே ஆகும்.
50 ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாதரேõ நீர் கருணைக் கடல்; அனைத்தையும் கடந்தவர்; ஆதியும் அந்தமும் இல்லாதவர்; எம்மை நீரே நன்கு அறிவீர்; உமக்கு நமஸ்காரம்.
51 குருமார்களில் உத்தமமானவரேõ நித்தியானந்தமே திருப்தி நிறைந்தவரே சுயவொளி படைத்தவரே மங்களத்தின் இருப்பிடமே ஆத்மாராமரே உமக்கு வணக்கம்.
52 தேவரீர் பெருமையைப் பாட இறங்கிவிட்டேன்; வேதங்களும் மௌனம் சாதிக்கின்றன; என்னுடைய சொல்பமான ஞானம் உம்மை வருணிக்க எப்படிப் போதுமானதாக ஆகும்?
53 கருணைப் பொக்கிஷமே ஜயஜய கோதாவரிக் கரையில் நடமாடுபவரே ஜயஜய பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனுமாகியவரே ஜயஜய தத்தாத்ரேயரின் அவதாரமாகிய உமக்கு நமஸ்காரம்.
54 பிரம்மத்தின் (முழுமுதற்பொருள்) அருள் குருரூபமாக மட்டுமே வருகிறது. ஸத்குருவின் அனுக்கிரஹமின்றி பிரம்மத்தை அறிய முடியாது. குருவினுடைய பாதகமலங்களில் ஐந்து பிராணன்களையும் பரிபூரணமாக சரணாகதி செய்துவிட வேண்டும்.
55 குருவின் ஸந்நிதியில் நம் தலை வணங்கட்டும்; கைகள் அவருடைய பாதங்களை மெதுவாகப் பிடித்துவிடட்டும்; கண்கள் அவருடைய முகத்தையே விழுங்கட்டும்; மூக்கு அவருடைய பாதங்களைக் கழுவிய நீரின் நறுமணத்தை முகரட்டும்;
56 காதுகள் ஸாயீயின் கீர்த்தியைக் கேட்கட்டும்; சித்தம் மனக்கண்ணில் ஸாயீயின் உருவத்தைக் கொணர்ந்து நிறுத்தி அகண்டமாக (இடைவிடாமல்) தியானம் செய்யட்டும்; சம்சார பந்தம் தானாகவே கீழே விழும்.
57 உடல், மனம், செல்வம், அனைத்தையும் ஸத்குருவின் பாதகமலங்களில் ஸமர்ப்பணம் செய்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் குருசேவை செய்வோம்.
58 குருநாமமும் குருவின் அண்மையும் குருவின் அருளும் குருவின் பாதங்களை அலம்பிய பாலும் குருவின் வீட்டில் வசிக்கும் பாக்கியமும் குருமந்திரமும் எவ்வளவோ பிரயாசைகளுக்குப் (முயற்சிகளுக்குப்) பிறகுதான் அடையக்கூடியன.
59 இவையனைத்தும் மஹாசக்தி வாய்ந்தவை. ஏனெனில், இவை பக்தனுக்குத் தெரியாமலேயே அவனை மோக்ஷமார்க்கத்தில் உந்துகின்றன. ஒருமுகமான பக்தி இவ்வுண்மையை அப்பியாசம் செய்தும் பரீக்ஷை செய்தும் பார்த்தாகிவிட்டது.
60 குருவின் சங்கம் கங்காஜலம்; மனமலங்களை எல்லாம் க்ஷணப்பொழுதில் சுத்தம் செய்து, நம்மை நிர்மலமாக ஆக்கிவிடுகிறது. மனித மனத்தைவிடச் சஞ்சலமுடையது வேறெதுவும் உண்டோ? இக் குரங்கையும் ஆடாது அசையாது ஹரியின் பாதங்களில் நிலைக்கும்படி குரு செய்துவிடுகிறார்.
61 ஸத்குருவின் பாதகமலங்களுக்கு நாம் செய்யும் சேவையே வேதமும் சாஸ்திரமும் புராணமும். அவருடைய பாதங்களை நமஸ்கரிப்பதே யோகமும் யாகமும் தவமும் மற்றும் முக்திமார்க்க சாதனைகள் அனைத்துமாகும்.
62 ஸத்குருவின் பவித்திரமான நாமமே வேதசாஸ்திரம்; 'ஸமர்த்த ஸாயீஃ என்பதே நமது தாரக மந்திரம். அதுவே, நமது யந்திரமும் தந்திரமும் ஆகும்.
63 'பிரம்மம் (முழுமுதற்பொருள்) ஒன்றே ஸத்தியம்ஃ என்ற நிஜமான நம்பிக்கையையும் 'இந்த உலகம் ஒரு மாயைஃ என்னும் இடையறாத விழிப்புணர்வையும் சொந்த அனுபவத்திலேயே கண்டறியும் உயர்ந்த ஆன்மீக நிலைக்கு நிஜமான பக்தர்களை ஸாயீ உயர்த்துகிறார்.
64 பரமாத்ம சுகம், பிரம்மானந்தம், பிரம்மத்துடன் ஐக்கியமாதல், ஆத்மஞானம், இவையெல்லாம் வார்த்தை ஜாலமே (சொற்சிலம்பம்); நமக்கு வேண்டியது கட்டுக்கடங்கிய மகிழ்ச்சியான மனநிலையே
65 எப்பொழுது இம் மனநிலை ஆழங்கொண்டு சாசுவதமாகிறதோ, அப்பொழுது சுகமும் சாந்தியும் திருப்தியும் நம்மை வந்தடைகின்றன. இதுவே நாம் வாழ்க்கையில் அடையக்கூடிய உன்னதமான நிலையாகும்.
66 ஸாயீ ஆனந்தத்தின் சுரங்கம்; அவர் பரிபூரணமான ஸமுத்திரம்; உண்மையான ஸாயீ பக்தன் பாக்கியசாயாவான்; பரமானந்தம் அவனுக்குத் தேவையில்லை
67 சிவனும் சக்தியும் ஒன்றே; புருஷனும்3 பிரகிருதியும்4 ஒன்றே; பிராணனும் அதனுடைய ஓட்டமும் ஒன்றே; விளக்கும் அதன் ஒளியும் ஒன்றே; இரண்டாக நாம் கற்பனை செய்துகொள்கிறோம். இவையனைத்தும் முழுமுதற்பொருளின் பரிமாணங்களே.
68 'பிரம்மம் தனியாக இருப்பதை விரும்புவதில்லை; பலவாக விரிவதையே நாடுகிறதுஃ என்கின்றன வேதங்கள். விரும்பியும் நாடியும் பலவாக விரிவடைந்த போதிலும், அவையனைத்தும் மறுபடியும் ஒரே பொருளாக ஆகின்றன.
69 சுத்தமான பிரம்ம நிலையில் புருஷனும் இல்லை; பிரகிருதியும் இல்லை. சூரியன் அஸ்தமிக்காத நிலையில் இரவேது? பகலுமேது?
70 ஸாயீபாபா குணங்களேதும் இல்லாதவர்; குணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். பக்தர்களின் மங்களத்துக்காகத் தூய நற்குணங்களுடன் ஓர் உருவம் ஏற்றுக்கொண்டார். அவருடைய பாதாரவிந்தங்களில் நான் முழுமனத்தோடு சரணடைகின்றேன்.
1 யந்திரம் என்பது நேர்க்கோடுகளாலும், முக்கோணங்களாலும், சதுரங்களாலும், சில எழுத்துகளாலும், புள்ளியாலும் அமைந்த ஒரு ஜியோமிதி உருவம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு ஜியோமிதி உருவம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜியோமிதி உருவத்தை ஓர் உலோகத் தகட்டில் வரைந்து, அதையே தெய்வமாகக் கருதிப் பூஜை செய்வது ஹிந்துக்களின் தொன்றுதொட்ட வழிபாட்டு முறையாகும்.
2 தந்திரம் என்பது தந்திர சாஸ்திரம் என்னும் ஹிந்து வழிபாட்டுமுறை. ஆபத்துகள் நிறைந்த பாதை; கரணம் தப்பினால் மரணம்தான்
3 இறைவன்
4 இயற்கை
71 ஸமர்த்த ஸாயீயை அடைக்கலமும் பாதுகாப்பும் வேண்டி சரணடைந்தவர்கள் எத்தனையோ அனர்த்தங்கள் (தீங்கு/கேடு) நேராமல் தப்பித்துக்கொண்டார்கள். யானும் அந்தச் சுயநலத் தேவைக்காகவே அவருடைய பாதங்களில் தலை சாய்க்கின்றேன்.
72 பக்தர்களின் பிரேமையைச் சுவைப்பதற்காகவும் அவர்களுடன் லீலைகள் புரிவதற்காகவும் உருவமற்ற ஒன்றேயான ஸாயீ, உருவத்தையும் பன்மையையும் ஏற்றுக்கொண்டார். அவருடைய அன்புக்கு நமஸ்காரம்.
73 எவர் எல்லா உயிர்களிலும் உறைகின்ற மெய்யுணர்வோ, எவர் எல்லா ஞானங்களுக்கும் ஆதாரமோ, எவர் தம்மை அனைத்துச் சேதனப் (உயிருள்ள) பொருள்கள் மூலமாகவும் ஜடப்பொருள்கள் மூலமாகவும் வெளிப்படுத்திக்கொள்கிறாரோ, அந்தக் காருண்ய மூர்த்தியை வணங்குகின்றேன்.
74 ஓ குருராயரேõ ஓ ஆனந்த மூர்த்தியேõ நீரே பாதையும் முடிவாகச் சென்றடையும் இடமுமாகும். நீரே நான் இளைப்பாறும் சோலை; ஏனெனில், உம்மால்தான் என்னைப் பீடிக்கும் துன்பங்களையும் வயையும் சுகப்படுத்த முடியும்.
75 இப் பாசுரத்தை (பாமாலை) முடிக்கும் தறுவாயில், எவ்வுயிரிலும் இறைவனே உறைகின்றான் என்பதன் நிரூபணமாக, உயிரினங்கள் அனைத்தும் என்னை அருள் கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன்.
76 எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நின்று, இருமை என்பதேயின்றி ஒன்றேயாக நிற்கும் முழுமுதற்பொருள் மகிழ்ச்சியடையும் வகையில் எல்லா உயிரினங்களுக்கும் வணக்கம் செலுத்துகின்றேன்.
77 ஒரு சாதனையின் ஆரம்பத்திலும் முடிவிலும் வழக்கமாகப் பாடப்படும் துதிபாடலை இத்துடன் நிறைவு செய்கிறேன். இதுவே இக் காவியத்தின் கடவுள் வாழ்த்தும் ஞானியர் வாழ்த்துமாகும். இப்பொழுது, இக் காவியத்தின் முக்கியமான பிரயோஜனம் என்ன என்பதை நிவேதனம் (தெரியவைத்தல்) செய்கிறேன்.
78 ஸாயீ கிருபைகூர்ந்து எனக்கு என்று அனுக்கிரஹம் செய்தாரோ, அன்றிருந்து இரவுபகலாக அவரையே நினைத்துக்கொண் டிருக்கிறேன். அதுவே பிறவிப் பயத்தை அழித்துவிடும்.
79 இனி எனக்கு ஜபம் வேறேதுமில்லை, தவமும் வேறெதுவுமில்லை, ஸாயீயின் சுத்த ஸ்வரூபத்தையும் ஸகுண ரூபத்தையும்தான் (குணங்களோடு கூடிய மானிட உருவம்) நான் பார்க்கின்றேன்.
80 ஸாயீயின் முகத்தை நிலைத்துப்பார்த்தால், பசி, தாகம், அனைத்தும் மறந்து போகின்றன. இதற்கு நிகரான சுகம் ஏதும் உண்டோ? வாழ்க்கையின் சோதனைகளும் வேதனைகளும் மறந்தே போகின்றன.
81 பாபாவின் நயனங்களுக்குள் பார்க்கும்போது என்னையே மறந்துவிடுகிறேன். உள்ளிருந்து பிரேமை பொங்குவதால் மனம் சொல்லொணாத மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோகிறது.
82 என்னைப் பொறுத்தவரை, கர்மமும் தர்மமும் சாஸ்திரங்களும் புராணங்களும் அனுஷ்டானங்களும் (விதிக்கப்பட்ட தினப்படித் தொழுகைகள்) யோகமும் யாகமும் தவமும் தீர்த்தயாத்திரையும் அனைத்தும் பாபாவின் திருவடிகளேõ
83 குருவாக்கிய பரிபாலனம் சிரத்தையுடனும் மனவுறுதியுடனும் வேரூன்றும்போது நிச்சலமான சாந்தியைக் கொணர்கிறது.
84 இது கர்மானுபந்தத்தினால் விளைந்தது; ஸாயீ பாதங்களின்மேல் என்னுடைய அபிமானம் ஓங்கியது; பாதங்களின் மறைமுகமான சக்தியை நான் அனுபவித்தேன்; இந்த சக்தியை யான் எவ்விதம் வர்ணிப்பேன்?
85 இந்த சக்தி பக்தியைப் பெருகச்செய்து ஸாயீ பாதங்களின்மேல் பற்றுதலையும் ஓங்கச் செய்கிறது. இப் பற்று, உலக வாழ்க்கையில் உழன்றுகொண் டிருக்கும்போதே பற்றற்ற நிலையை வளர்த்து ஆனந்தமளிக்கிறது.
86 பக்தியோகத்தில் பல ஸம்பிரதாயங்களில் பல மார்க்கங்கள் (வழிகள்) விவரிக்கப்பட்டிருக்கின்றன. சுருக்கமாகவும் மிகுந்த கவனத்துடனும் இம்மார்க்கங்களுடைய தனிப்பண்புகளை விவரிக்கிறேன்.
87 வேதசாஸ்திர விற்பன்னர்களான 'தன்னை அறிந்தஃ முனிவர்கள், இடைவிடாத 'நான் யார்ஃ சிந்தனையே பக்தியின் முக்கியமான லக்ஷணம் என்று செப்புகிறார்கள்.
88 பராசரரின் புத்திரரான வேதவியாஸ மஹரிஷி1, பூஜை செய்து இறைவன்மீது அன்பு செலுத்தும் வழியை வகுத்தார். இதற்கு அர்ச்சன பக்தி என்று பெயர்.
89 முதல், பாரிஜாதம் போன்ற மணமுள்ள பூக்களைத் தோட்டத்திருந்து குருவின் பிரீதிக்காகப் பறித்துக்கொண்டு வரவேண்டும். குருவின் வீட்டு வாயில்முற்றம் சுத்தமாகப் பெருக்கப்பட்டு, கழுவப்பட்டபின், சாணத்தால் மெழுகப்படவேண்டும்.
90 அதன் பிறகு, ஸ்நானம் செய்துவிட்டு ஸந்தியாவந்தனம் (ஸூரிய வழிபாடு) செய்யவேண்டும். பிறகு சந்தனம் அரைக்கப்பட வேண்டும். தேவதைகளுக்கும் குருவுக்கும் பஞ்சாமிருத அபிஷேகம் செய்த பிறகு சந்தனம் இடப்பட வேண்டும். தீப தூப (சாம்பிராணிப் புகை) ஆராதனைகள் செய்யப்படவேண்டும்.
91 அதன்பிறகு, படையல் ஸமர்ப்பித்துவிட்டு பூஜை முடிவுற்றதன் அறிகுறியாக ஹாரதி காட்டப்பட வேண்டும். ஈதனைத்தையும் அன்புடனும் ஈடுபாட்டுடனும் செய்வது 'அர்ச்சன பக்திஃ எனப் பெயர் பெறுகிறது.
92 சித்தமிசை குடிகொண்ட தூயவடிவான தெய்வத்தைப் பூஜை செய்யப்படும் விக்கிரஹத்தில் ஆவாஹனம் (எழுந்தருளச் செய்தல்) செய்த பின்பே, பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
93 பூஜை முடிந்தபிறகு தெய்வத்தை விக்கிரஹத்திருந்து இறக்கி, நம்முடைய ஹிருதயத்தில் ஏற்றிவிடவேண்டும்.
1 வேதங்களைச் சுலபமாக ஓதும் வகையில் இருக்கு, யஜுர், ஸாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரித்துக் கொடுத்தவர். பதினெட்டுப் புராணங்களையும் மஹாபாரதத்தையும் எழுதியவர்.
94 இப்பொழுது, கர்க்காசாரியார்1 உபதேசித்த ஸம்பிரதாயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த மார்க்கத்தில் இறைவனுடைய கயாணகுணங்களையும் லீலைகளையும் பாடுவதால், மனம் ஹரிகீர்த்தனம் செய்யும் ஆனந்தத்தில் மூழ்கிப்போகிறது.
95 'நான் யார்ஃ சிந்தனை செய்து கொண்டும் ஹரிகதை கீர்த்தனங்களைப் பாடியும் கேட்டும் சாஸ்திரவிதிகளின்படி வாழ்க்கை நடத்துதல், சாண்டில்ய முனிவர்2 கூறிய முறையாகும்.
96 ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற விரும்புபவர்கள் வேதநெறியின்படி வாழ்க்கை நடத்துவர். பாதகம் விளைவிக்கும் என்னும் காரணத்தால், வேதங்களில் விதிக்கப்படாதவைகளையும் வேதங்களால் விலக்கி வைக்கப்பட்டவைகளையும் ஒதுக்கியே அவர்கள் வாழ்வர்.
97 மனத்திருந்து அகந்தை முழுமையாக வெளியேறிய பிறகு, 'காரியங்களைச் செய்பவனும் நானில்லை, பலனை அனுபவிப்பவனும் நானில்லைஃ என்கின்ற நிலையை அடைந்தபிறகுதான், எல்லாம் இறைவனுக்கே அர்ப்பணம் என்னும் யோகம் பிறக்கிறது.
98 இம் மனநிலையில் செயல்புரிந்துகொண்டே வந்தால், கர்மபந்தத்திருந்து விடுதலை கிடைக்கிறது. யாராலும் கர்மாவை (விதிக்கப்பட்ட கடமைகள்) விட்டுவிடமுடியாது; விட்டவிட வேண்டியது 'நான்தான் கர்த்தாஃ (செயல்புரிவோன்) என்னும் அஹந்தையைத்தான்õ
99 முள்ளை முள்ளால் எடுப்பது போல, கர்மாவைச் செய்துதான் கர்மாவிருந்து விடுபடவேண்டும்õ ஆத்மஞானம் பிறந்துவிட்டால் கர்மா தானாகவே விலகி விழுந்துவிடும்.
100 கர்ம பலன்களின் மேலுள்ள ஆசையைத் துறந்துவிடுவதுதான் பற்றறுப்பதிலுள்ள ரஹஸியமாகும். தினமும் செய்யப்பட வேண்டிய வழிபாடுகளையும் விசேஷமாகச் செய்யப்படவேண்டிய கிரியைகளையும் சடங்குகளையும் செய்வதே சுத்தமான ஸ்வதர்மம் (சுயநெறி) ஆகும்.
101 செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்; க்ஷண நேரத்தில் அனைத்தையும் மறந்துவிட வேண்டும்; மனம் பற்றற்று இருக்க வேண்டும். நாரதமுனி சொன்ன பக்திமார்க்கத்தின் குணாதிசயங்கள் இவையே.
102 இவ்வாறு பக்தியின் லக்ஷணங்கள் விதவிதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை குருவின் திவ்விய சரித்திரத்தைப் பாராயணம் செய்வதன் மூலமே சுழல்கள் நிறைந்த சம்சாரக் கடலைச் சிறிதும் பாதிப்பில்லாமல் கடப்போமாக.
103 எனக்கும் குருவின் சரித்திரத்தைக் கேட்பதில் ஆவல் ஏற்பட்டு, அதுவே காதலாக மாறி, இத் தேடல் ஆழமாக மூழ்கிவிட்டேன். அனுபவ பூர்வமானதும் நிஜமான
1 பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த யாதவ வம்சத்தின் குலகுரு.
2 கிருஹஸ்தன் வாழவேண்டிய வழிமுறைகளை ஸூத்திரமாக அருளிய முனிவர். பக்தி ஸூத்திரமும் எழுதியிருக்கிறார். இவருடைய பெயரில் ஓர் உபநிஷதமும் இருக்கிறது. ஆகவே, உபநிஷதகால ரிஷியாக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சிகளுமான இக் காதைகளை ஒரு காதைத்தொகுப்பு நூலாக எழுதவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
104 ஒரு முறை நான் சிர்டீயில் இருந்தபோது பாபாவை தரிசனம் செய்வதற்காக மசூதிக்குச் சென்றிருந்தேன். பாபா கோதுமைமாவு அரைத்துக்கொண் டிருந்ததைப் பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.
105 முதல் இக் காதையைச் சொல்கிறேன், சாவதானமாகக் கேளுங்கள். பிறகு, இந் நிகழ்ச்சியிருந்து ஸாயீயின் சரித்திரத்தை எழுதவேண்டுமென்ற எண்ணம் எவ்வாறு என் மனத்தில் எழுந்ததென்பதையும் கேளுங்கள்.
106 ஒரு மஹானின் உன்னதமான குணங்களைத் திரும்பத் திரும்ப விவரிப்பதாலும் மனத்தைக் கவரும் அவருடைய காதைகளை ஸத்ஸங்கத்துடன் கலந்துரையாடுவதாலும் மனம் சுத்தமடைகிறது; புத்தி தெளிவடைகிறது.
107 காதால் கேட்டாலே புண்ணியம் அளிக்கக்கூடிய கயாண குணங்களைப் பாடுவதாலும் அவருடைய லீலைகளையும் கதைகளையும் கேட்பதாலும் இறைவன் பூரிதம் அடைகிறான். முத்தோஷங்கள்1 நமக்கு விளைவிக்கும் துயரங்களும் துன்பங்களும் நிவாரணம் ஆகின்றன.
108 ஆகவே, முத்தோஷங்களால் அவதிப்படுபவர்களும் சுயமுயற்சியால் மேன்மையுற வேண்டும் என்ற ஆவலால் உந்தப்படுபவர்களும் ஆன்மீக சிந்தனை உடையவர்களும் முனிவர்களின் பாதங்களை சரணடைகிறார்கள்; சுயானுபவத்தால் மேன்மையுறுகிறார்கள்.
109 இப்பொழுது, கவர்ச்சியான இக் காதையை கவனத்துடன் கேளுங்கள். பாபாவினுடைய கிருபையையும் காருண்யத்தையும் கண்டு, மிகுந்த ஆச்சரியப்படுவீர்கள்.
110 ஒரு நாள் காலையில் பல் தேய்த்து முகம் கழுவிய பின், பாபா மாவு அரைப்பதற்காக ஏந்திரத்தின் அருகே உட்கார்ந்தார்.
111 கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு, கோதுமை மூட்டையருகில் சென்று முழுமுழுப் படிகளாக கோதுமையை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டார்.
112 ஒரு கா சாக்குப்பையைத் தரையில் விரித்து, மாவு அரைக்கும் ஏந்திரத்தை அதன்மேல் வைத்து, அரைக்கும்போது அச்சு ஆடிப்போகாத வகையில் அச்சை அடித்து இறுக்கினார்.
113 (கப்னியின்) கைகளை மடித்துவிட்டுக்கொண்டு, கப்னி2 தரையில் படாதவாறு மடக்கியும் விட்டுக்கொண்டு, மாவு அரைக்கும் ஏந்திரத்தின் அருகில் உட்கார்ந்தார்.
1 மூன்று தோஷங்கள் அல்லது மூன்று தாபங்கள் பின்வருமாறு.
1. ஆத்யாத்மிகம் - தேஹத்திலுண்டாகும் பிணி.
2. ஆதிதைவிகம் - மழை, காற்று, இடி போன்ற இயற்கை சக்திகளால் உண்டாகும் துன்பங்கள்.
3. ஆதிபௌதிகம் - தேள், பாம்பு, பு, கரடி முதய பிராணிகளால் உண்டாகும் துன்பம்.
2 வடநாட்டு ஸந்நியாஸிகள் அணியும் ஒற்றை உடை. கை, கால், உடம்பு முழுவதையும் பாதம்வரை மறைக்கும் குளிர்ப்பிரதேசத்திற்கு ஏற்ற அங்கி.
114 ''எதையும் தமக்கென்று வைத்துக்கொள்ளாதவரும் ஒரு பைசாவும் கையில்லாத ஏழையுமானவருக்கு உலகியல் சஞ்சலங்கள் எதற்கு?ஃஃ என்று குழப்பமடைந்த நான், ''இதென்ன கோதுமைமாவு அரைக்கவேண்டுமென்ற பைத்தியக்கார எண்ணம்ஃஃ என்று நினைத்தேன்.
115 இருப்பினும் தலையைக் குனிந்துகொண்டு கெட்டியாக அச்சைப் பிடித்துக்கொண்டு, பாபா ஏந்திரத்தைச் சுழற்றிக்கொண் டேயிருந்தார். அவர் தம்முடைய கைகளாலேயே அரைத்தது கோதுமையை அன்று; எல்லாருடைய வெறுப்புணர்ச்சியையும் பகையுணர்ச்சியையும்தான்
116 அநேக மஹான்களை ஏற்கெனவே பார்த்திருக்கின்றேன்; ஏந்திரத்தில் மாவு அரைப்பவர் இவர் ஒருவர்தான். மாவு அரைப்பது அவருக்கு என்ன மகிழ்ச்சியை அளிக்கமுடியும்? அவருடைய குதூகலம் அவருக்குத்தான் தெரியும்õ
117 மக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனரே தவிர, என்ன செய்கிறார் என்று வினவ ஒருவருக்கும் தைரியம் இல்லை. இச் செய்தி கிராமத்துள் பரவ, ஆண்களும் பெண்களும் ஓடிவந்தனர்.
118 பெண்கள் மூச்சிரைக்க ஓடிவந்தனர். அவர்களில் நால்வர் 'தபதபஃ வென்று மசூதியின் படிகளில் ஏறிவந்து, பாபாவின் கையைப் பிடித்துப் பலவந்தமாக இழுத்துவிட்டுவிட்டு, ஏந்திரத்தின் அச்சைப் பிடித்துக்கொண்டனர்.
119 பாபா அவர்களுடன் சச்சரவு செய்தார். ஆனால், அவர்கள் அதை அசட்டை செய்துவிட்டு உடனே மாவு அரைக்க ஆரம்பித்தனர். மாவு அரைத்துக்கொண்டே பாபாவின் பெருமைகளையும் அற்புதமான லீலைகளையும்பற்றிப் பாடினர்.
120 அவர்களுடைய உண்மையான பாசம் மனத்தைத் தொட்டவுடன், மென்மைக்கும் அன்பிற்கும் இடமளித்துவிட்டு பாபாவின் பொய்க்கோபம் மறைந்தது; சகிப்புத்தன்மையும் அகமலர்ச்சியும் புன்னகையாக உருவெடுத்து முகத்தில் மலர்ந்தது.
121 நான்கு சேர் கோதுமையும் முழுமையாக அரைக்கப்பட்டது; கூடை காயாகிவிட்டது. பெண்களின் மனத்தில் எண்ணங்களும் யூகங்களும் அதிவேகமாக ஓட ஆரம்பித்தன.
122 ''பாபா தமக்காக ரொட்டி செய்துகொள்வதில்லை; பிச்சை எடுத்தே ஜீவனம் செய்கிறார். இவ்வளவு மாவையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்?ஃஃ மனத்துள்ளே வாதம் ஓடியது.
123 ''அவருக்கு மனைவியோ பிள்ளைகுட்டியோ இல்லை. வீடு, வாசல், அடுப்பு, துடுப்பு, சட்டி, பானை, ஏதும் இன்றித் தனியாக வாழ்கிறார். எதற்காக அவருக்கு இவ்வளவு மாவு தேவைப்படுகிறது?ஃஃ
124 ஒரு பெண்மணி சொன்னார், ''ஓõ பாபா கருணையே உருவானவர்õ இந்தக் கண்ணாம்பூச்சியெல்லாம் நமக்காகவே; வேண்டுமானால் பாருங்கள்; இந்த மாவையெல்லாம் இப்போது நமக்குக் கொடுத்துவிடுவார்
125 ''இப்பொழுது அவர் நமக்கு ஆளுக்கொன்றாக இந்த மாவை நான்கு பங்குகளாகப் பிரித்துவிடப் போகிறார்ஃஃ. அவர்கள் மனக்கோட்டை கட்ட ஆரம்பித்தனர்.
126 பாபாவினுடைய விளையாட்டு பாபாவுக்குத்தான் புரியும்; எந்த முடிவிற்காக எதை ஆரம்பிக்கிறார் என்பதை எவராலும் கண்டுபிடிக்க இயலாது. நிலைமை இவ்வாறு
இருப்பினும், அவர்களுடைய பேராசை, மாவைக் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடலாம் எனத் தூண்டியது.
127 கோதுமை முழுவதும் அரைத்து முடிந்ததும் மாவு பரப்பப்பட்டது. ஏந்திரம் சுவரின்மீது சார்த்தி வைக்கப்பட்டது. வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவதற்குத் தயாராக, மாவு பூராவும் கூடையில் நிரப்பப்பட்டது.
128 இதுவரை பாபா ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் அவர்கள் மொத்த மாவையும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்க ஆரம்பித்தபோது, பாபா என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.
129 ''உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? மாவை எங்கே எடுத்துக்கொண்டு போகிறீர்கள்? உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தையா எடுத்துக்கொண்டு போகிறீர்கள்? உடனே கிராம எல்லைக்குச் சென்று ஓடையின் கரையில் இந்த மாவனைத்தையும் கொட்டிவிடுங்கள்õ--
130 ''எல்லாம் தண்டச்சோறு தின்ன வந்தவர்கள்õ என்னைக் கொள்ளையடிக்க எப்படி ஓடி வந்தார்கள்õ அது என்ன கடன் வாங்கின கோதுமையா என்ன, நீங்கள் இப்போது மாவுக்குச் சொந்தம் கொண்டாட?ஃஃ (என்று கடிந்துகொண்டார்)
131 (பெண்கள்) உள்ளுக்குள் பொருமிக்கொண்டு அதே சமயம் தங்களுடைய பேராசையை உணர்ந்து, தலைகுனிந்து நிலைகொள்ளாமல் தங்களுக்குள்ளேயே 'குசுகுசுஃ என்று ரஹஸியம் பேசிக்கொண்டனர். எது எப்படியிருப்பினும், ஆணையிடப்பட்டவாறு கிராமத்தின் எல்லையை நோக்கிக் கிளம்பினர்.
132 முதல் பாபாவின் நோக்கம் என்ன என்பதை எவரும் புரிந்துகொள்ளவில்லை. 'காரண காரிய சம்பந்தம்ஃ ஒருவருக்குமே விளங்காதது போன்றுதான் இருந்தது. பொறுமையுடன் காத்திருந்தது, பாபாவின் அற்புதமான செயலைப் புரிந்துகொள்ளும் பலனை அளித்தது.
133 நான், பாபா ஏன் இவ்வாறு செய்தார் என்று ஜனங்களைப் பின்னர்க் கேட்டேன். இச்செயலால் கிராமத்திருந்து காலராவை பாபா முழுமையாக விரட்டிவிட்டார் என்று சொன்னார்கள்.
134 பாபா அரைத்தது கோதுமையை அன்று; காலரா கொள்ளை நோயையே ஏந்திரத்திட்டு அரைத்தார். பிறகு, கரகரவென்று அரைக்கப்பட்ட மாவைக் கிராமத்தின் எல்லையில் இருந்த ஓடைக்கரையில் கொட்டிவிடும்படி செய்தார்.
135 மாவைக் கொட்டிய நாளிருந்து கொள்ளைநோய் பின்வாங்கி மறைந்துவிட்டது. கிராமத்தினுடைய துரதிருஷ்டமான நாள்கள் முடிவுக்கு வந்தன. இதுவே பாபாவின் கைவேலைõ
136 காலரா கொள்ளைநோய் கிராமத்தில் எப்படியோ புகுந்துவிட்டது. அதை எதிர்க்க பாபா உபயோகித்த சூக்குமமான வைத்தியம் இதுவே. காலரா ஒழிக்கப்பட்டது; கிராமத்தில் மறுபடியும் அமைதி நிலவியது.
137 பாபா ஏந்திரத்தில் மாவு அரைத்த காட்சி என் ஜீவனுள்ளே ஆச்சரியத்தையும் வியப்பு கலந்த மரியாதையையும் நிரப்பியது. இந்நிகழ்ச்சியின் காரணத்தையும் காரியத்தையும் எவ்வாறு சம்பந்தப்படுத்துவது?
138 கோதுமைக்கும் காலராவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? கற்பனைக்கும் எட்டாத விஷயமாகவன்றோ இருக்கிறதுõ இதைப்பற்றிக் கட்டாயமாக ஒரு புத்தகம் எழுதவேண்டுமென்ற எண்ணம் என்னுள்ளே எழுந்தது.
139 என் மனம் பூரணமாகத் திருப்தியடையும் வரையில் பாபாவின் அழகான வாழ்க்கைச் சரித்திரத்தைப் பாடவேண்டுமென்ற பலமான உந்துதல் எழுந்தபோதே, பாற்கடல் பொங்கும் அலைகளைப்போல் என்னுள்ளே அன்பு எழும்பியது.
140 கடவுள் வாழ்த்து இங்கு முடிவடைகிறது. மஹான்களுக்கும் இஷ்டமித்திர பந்துக்களுக்கும் நமஸ்காரமும் முடிகிறது. குருவந்தனமோ அகண்டம்õ ஹேமாட் ஸாயீநாதனின் பாதகமலங்களைச் சரணடைகிறேன்.
141 இக் காவியம் யாருக்காக எழுதப்பட்டதென்பதையும் பிரயோஜனம் என்ன என்பதையும் இவ்விரண்டிற்கும் உள்ள சம்பந்தத்தையும்பற்றி, அடுத்த அத்தியாயத்தில் எவ்வளவு திறமையுடன் விளக்கமுடியுமோ அவ்வளவு திறமையுடன் விளக்குகிறேன்; ஆசுவாசமாய்க் கேளுங்கள்.
142 வாசகர்களுக்கும் தமக்கும் நன்மையளிக்கக்கூடிய இந்த ஸாயீ ஸத் சரித்திரத்தை இயற்றிய ஹேமாட் பந்த் என்பவர் யார் என்பதையும் பிறகு விளக்குகிறேன்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு. ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட. 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில். 'கடவுள் வாழ்த்துஃ என்னும் முதலாவது அத்தியாயம் முற்றும்,
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்,
சுபம் உண்டாகட்டும்