Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 43


43. மஹாஸமாதி (இரண்டாம் பகுதி)




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடந்த அத்தியாயத்தில் ஸமர்த்த ஸாயீயின் நிர்யாணம் விவரிக்கப்பட்டது. விட்டுப்போனதும் நிறைவு பெறாததுமான விவரங்கள் இந்த அத்தியாயத்தில் சம்பூரணம் (நிறைவு) செய்யப்படும்.

2 ஸமர்த்த ஸாயீயின்மீது எனக்கு ஏற்பட்ட அற்புதமான பிரேமை அவருடைய அருள் வெளிப்பாடே. ஸாயீயின் பொற்பாதங்களில் மூழ்கிய ஹேமாட் அவருடைய இந்தச் சரித்திரத்தை எழுதுகிறேன்.

3 அவரே பிரேமபக்தியை அளிக்கிறார்; சரித்திரத்தின் மஹிமையை மேம்படுத்துபவரும் அவரே. இக் காரணம்பற்றியே அவரை ஆராதிக்கும் நெறிமுறை பெருமை வாய்ந்தது. அதுவே உலகியல் பற்றுகளி­ருந்து நம்மைப் பிரிக்கிறது.

4 ஆத­ன், நான் என் உடலாலும் பேச்சாலும் மனத்தாலும் அவரை ஆயிரம் தடவைகள் வணங்குகிறேன். சிந்தனை செய்வதால் அவருடைய மஹிமையை உணரமுடியாது; அனன்னியமான சரணாகதியால்தான் முடியும்.

5 மூட்டையாகச் சேர்ந்திருக்கும் பாவங்களையும் மலங்களையும் கழுவித் தள்ளி மனத்தூய்மை அடைவதற்கு இதர சாதனைகளால் பயனில்லை.

6 மனத்தூய்மை பெறுவதற்கு ஹரிபக்தர்களின் கீர்த்தியை நினைப்பதும் பஜனையாகவும் கீர்த்தனையாகவும் பாடுவதையும்விட சுலபமான சாதனை எவ்வளவு தேடினாலும் அகப்படாது.

7 ஆகவே, நாம் முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் பிடிப்போம்; அதைப்பற்றிச் சிறிது ஆலோசனை செய்வோம். நம்முடைய ஆனந்தத்தின் இருப்பிடமான ஸாயீயைப்பற்றிய வியாக்கியானத்தைத் தொடர்ந்து சொல்லுவோம்.

8 அவருடைய நிர்யாணம் ஏன் விஜயதசமியன்று நிகழ்ந்தது என்பதும், எவ்வாறு தாத்யாவைச் சாக்குப்போக்காக வைத்து வரும்பொருள் உரைக்கப்பட்டது என்பதும், ஏற்கெனவே விவரமாகச் சொல்லப்பட்டன.

9 தேஹத்தை விடுக்கப்போகும் சமயத்திலும் தருமம் செய்யவேண்டியதுபற்றி விழிப்புடன் இருந்தது, லக்ஷ்மீ பாயீக்கு தானம் செய்தது, ஆகிய அனைத்து விவரங்களும் பின்னர் எடுத்துரைக்கப்பட்டன.

10 இந்த அத்தியாயத்தில், தம்முடைய முடிவு நெருங்கிய காலத்தில் பாபா எவ்வாறு ஒரு பிராமணரை ராமாயணம் படிக்கச் சொல்­ச் செவிமடுத்தார் என்ற
விவரமும்,--

11 ஸமாதி அமைய வேண்டிய இடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விவரமும், நினைவுச்சின்னமாக பாபா பாதுகாத்துவந்த செங்கல் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து உடைந்த விவரமும் சொல்லப்படும். இவையனைத்தையும் கவனமாகக் கேளுங்கள்.

12 அதுபோலவே, முன்பொரு சமயம் பாபா பிரம்மாண்டத்தில் தம்முடைய பிராணனை மூன்று நாள்கள் வைத்தபோது (நிர்விகல்பஸமாதி நிலை), அது ஸமாதி நிலை இல்லை என்றும், பாபா இறந்துவிட்டார் என்றும் சிர்டீ மக்கள் உறுதிபட நினைத்ததுபற்றியும் கேளுங்கள்.

13 உத்தரகிரியைகள் (இறுதிச் சடங்குகள்) செய்வதற்குத் தயார் செய்துகொண் டிருந்தபோது பாபா திடீரென்று உயிர்த்தெழுந்ததைக் கண்டு மக்கள் திடுக்கிட்ட விவரத்தையும் கேளுங்கள்.

14 ஆயினும், இது யாரும் கேட்க விரும்பாத நிர்யாணக் காதை. பாபா தேஹத்தை விடுத்ததுபற்றிய சங்கதிகள், கேட்பவர்களுக்கு மனவேதனையையும் சிரமத்தையும் அளிக்கும்.

15 இருந்தபோதிலும், ஸாதுக்கள் மற்றும் ஞானிகளுடைய முக்தி சம்பந்தமான காதைகள், கேட்பவர்களையும் சொல்லுபவரையும் புனிதப்படுத்தும். ஆகவே, விஸ்தாரத்திற்கு (விரிவுக்கு) பயந்து, பகுதி பகுதியாக முடிந்தவரை கேட்டு சமாதானமடையுங்கள்.

16 பூதவுடலை உகுத்ததால், எளிதில் அடையமுடியாததும் மறுபிறப்பில்லாததும் என்றும் அழியாததுமான பேரின்ப நிலையை பாபா அடைந்தார்.

17 தேஹத்தைத் தரித்தபோது அவர் உருவ நிலையில் இருந்தார். தேஹத்தைத் தியாகம் செய்ததால் அருவ நிலைக்கு மாறிவிட்டார். ஓர் உட­ல் எடுத்த அவதாரம் முடிந்தது; எல்லா உடல்களிலும் வியாபித்திருக்கும் நிலைக்குத் திரும்பிவிட்டார்.

18 ஓரிடத்தில் இருந்த நிலைமையை முடித்துக்கொண்டு எங்கும் நிறைந்த நிலைமைக்குத் திரும்பினார். ஆதியந்தமில்லாத முழுமுதற்பொருளுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

19 எல்லாருடைய வாழ்க்கையும் ஸாயீயை மையமாக வைத்தே சுழன்றது; இல்லை; ஸாயீயே அவர்கள் எல்லாருடைய பிராணன் என்று சொல்வதே பொருத்தம். ஸாயீ இல்லாது, சிர்டீ கிராம மக்கள் ஹீனர்களாகவும் தீனர்களாகவும் ஆயினர்.

20 தேஹம் அசைவின்றிச் சில்­ட்டுப்போக ஆரம்பித்தபோது ஒரு பெரும் ஓலம் எழுந்தது. பாலர்களி­ருந்து வயோதிகர்கள்வரை அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கே முடிவு வந்துவிட்டதுபோலப் பெருந்துயரத்தில் மூழ்கினர்.

21 ஜுரம் போன்ற உடல் உபாதிகள் உலகியல் வாழ்வில் கட்டுண்டவர்களைத்தான் பீடிக்கும். எக்காலத்திலும் யோகிகளை நெருங்கி அவமரியாதை செய்வதில்லை.

22 ஞானிகள் தம்முள் இருக்கும் தேஜசைத் (ஒளியைத்) தூண்டிவிட்டு அதில் தங்களுடைய தேஹங்களை எரித்துவிடுவர். பாபாவும் அந்த விதமாகவே செயல்பட்டார்.

23 எது நேர்ந்திருக்கவே கூடாதோ அது நடந்து முடிந்துவிட்டது. மஹராஜ் ஸாயுஜ்யம் (முழுமுதற் பொருளுடன் ஒன்றுதல்) அடைந்துவிட்டார். மக்கள் அடியோடு மனமுடைந்து அழுது தீர்த்தனர்.

24 ''ஐயகோõ நான் அவரை விட்டு விலகிப் போகாம­ருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்õ கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டேனேõ ஒருவேளை நான் உபயோகமாக ஏதாவது சேவை செய்திருப்பேனோ என்னவோõ ஓ, எப்படி, எப்படி என் மனம் நெருக்கடியான நேரத்தில் அவ்வாறு குழம்பியது?ஃஃ

25 இதுபோன்ற நாலாவிதமான எண்ணங்கள் மக்களுடைய மனத்தை துக்கப்பட வைத்தன. ஆயினும், பாபாவின் மனத்தி­ருந்த எண்ணங்களை யாரால் அறிந்துகொள்ள முடிந்தது?

26 தொண்டையில் கரகரவென்று இழுக்கவில்லை; மூச்சும் திணறவில்லை; இருமலுமில்லை; ஜீவன் துடிக்கவுமில்லை. பாபா உல்லாசமாகப் பிரயாணம் கிளம்பிவிட்டார்õ

27 ஐயகோõ இப்பொழுது ஸாயீதரிசனம் எங்கே? இனிமேல் கால்களைப் பிடித்துவிடுவது எப்படி? பாதங்களை அலம்புவது எங்ஙனம்? தீர்த்தத்தை அருந்துவது எவ்வாறு?

28 அந்திமவேளை நெருங்கிவிட்டதென்று தெரிந்து, சுற்றிலுமிருந்த, பிரேமை மிகுந்த பக்தர்களைக் கலைந்து போகச் சொல்­ அவர்களை மனவேதனை அடையச் செய்தது ஏன்?

29 ஒருவேளை இப்படி இருக்குமோ? நிர்யாணகாலத்தில் உயிருக்குயிரான பக்தர்களைப் பார்த்துக்கொண் டிருந்தால் பாபாவின் மனத்தில் அந் நேரத்தில் அன்பின் அலைகள் பொங்க வாய்ப்பு இருந்தது.

30 இம்மாதிரியான பிரேமபந்தங்கள் ஸாயுஜ்யம் அடைவதற்குத் தடையாக அமையும். இவற்றை சரியான நேரத்தில் அறுத்தெறியாவிட்டால், மனம் எவ்வாறு வாசனைகளி­ருந்து (பற்றுகளி­ருந்து) விடுபடும்?

31 பற்றுகளி­ருந்து விடுபடாமல் ஜீவன் பிரிந்தால், அக்கணமே சம்சார வாழ்வில் ஒரு புதிய ஈடுபாடு ஜனனமாகிறது. கூடவே எத்தனையோ புதிய எதிர்பார்ப்புகளையும் அவாக்களையும் கூட்டிவருகிறது.

32 ஞானிகளும் ஸாதுக்களும் என்றும் இந் நிலையைச் சட்டென்று தவிர்த்துவிடுவர். அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பாபா மனத்தில் நிர்த்தாரணம் செய்துகொண்டார்.

33 அந்திமகாலத்தில் சாந்தியாக இருக்கவேண்டும்; ஏகாந்தமாக இருக்கவேண்டும்; அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அந் நிலையில்தான் மனம் இஷ்டதெய்வத்தை தியானம் செய்ய முடியும். இவ்வுணர்வை, வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எவரும் நிலைநிறுத்த வேண்டும்.

34 'அந்திமத்தில் மதி எப்படியோ, அப்படியே கதி.ஃ (உயிர் பிரியும் நேரத்தில் மனம் எதை நினைக்கிறதோ அதற்கேற்றவாறே மறுபிறவி ஏற்படுகிறது.) இந்தப் பிரசித்தி

பெற்ற சொற்களை அனைவரும் அறிவர். உலகவழக்கைக் காக்கும் ரீதியில் இறையடியார்கள் இந்த நியதியின்படி நடந்துகாட்டினர்.

35 பாபாவின் முடிவு நெருங்கியது; இன்னும் பதினான்கு நாள்களே இருந்தன. ஆகவே, பாபா வஜே1 அவர்களை ராமவிஜயம் (ராமாயணம்) படிக்கச் சொல்­ நியமித்தார்.

36 வஜே மசூதியில் அமர்ந்தார். போதி பாராயணம் ஆரம்பித்தது. பாபாவும் செவிமடுக்க ஆரம்பித்தார். எட்டு நாள்கள் கழிந்தன.

37 பிறகு பாபா ஆணையிட்டார், ''போதி பாராயணம் தடையின்றித் தெளிவாக நடக்கட்டும்.ஃஃ வஜே மேலும் மூன்று நாள்கள் இரவுபகலாக வாசித்துக்கொண்டே யிருந்தார்.

38 மொத்தம் பதினொன்று நாள்கள் உட்கார்ந்து வாசித்தார். பின்னர் வலுவிழந்து சோர்ந்துபோனார். வாசித்துக்கொண் டிருந்தபோதே குரல் மங்கியது. இவ்வாறு மூன்று நாள்கள் கழிந்தன.

39 பிறகு பாபா என்ன செய்தாரென்றால், போதி வாசிப்பை ஸமாப்தம் (முடிவு) செய்துவிட்டு, வஜேயை அப் பணியி­ருந்து விடுவித்தார். தாம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்துகொண்டார்.

40 'வஜேயை விடுவித்து அனுப்பியதற்குக் காரணம் என்னவென்று சொல்லுங்கள்ஃ என்று கதைகேட்பவர்கள் கேட்கலாம். என் மதிக்கு எட்டிய அளவுக்குச் சிறப்பாகச் சொல்கிறேன். கவனத்துடன் கேளுங்கள்.

41 ஞானிகளும் ஸாதுக்களும் சான்றோர்களும் தேகத்தை உதிர்க்கும் காலம் வரும்போது போதிபுராணத்தைப் படிக்கச் சொல்­க் கவனத்துடன் கேட்பார்கள்.

42 ராஜா பரீக்ஷித்துக்கு2 சுக மஹரிஷி3 ஏழு நாள்கள் பாகவதம் (ஸ்ரீகிருஷ்ணரின் கதை) வாசித்தார். அதைக் கேட்டுத் திருப்தியடைந்த ராஜா தேகத்தி­ருந்து விடுதலை பெற்றார்.

43 பகவானுடைய லீலைகளைக் கேட்டுக்கொண்டும், பகவானுடைய உருவத்தைக் கண்களால் பார்த்துக்கொண்டும் உயிர் நீப்பவர் நிச்சயமாக நற்கதியடைகிறார்.

44 இதுவே, உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களின் நிலைமை. ஞானிகளோ நிரந்தரமாக இக் கோட்பாட்டின்படி நடந்துகாட்டினர். உலக மக்களுக்கு வழிகாட்டும் பாதையி­ருந்து ஞானிகள் என்றும் விலகுவதில்லை. சிந்தித்துப் பார்த்தால், ஞானிகளின் அவதார நோக்கமே மக்களுக்கு வழிகாட்டுவதுதான்õ

45 உடலை உதிர்க்கும்போது துக்கமோ சோகமோ படாதிருத்தல், பௌதிக உட­ன்மேல் ஆசைகொள்ளாதவர்களின் சுபாவம் அன்றோõ

46 கதைகேட்பவர்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் எழலாம். பிரம்மானந்த சுகத்தில் திளைத்துக்கொண் டிருப்பவர்கள் மாயையாலும் மோஹத்தாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லுவது பொருத்தமாகுமா?

1. ஒரு நெருங்கிய பக்தர்.

2. பாண்டவ வம்சத்து ராஜா. அர்ஜுனனின் பேரர். அபிமன்யுவின் புத்திரர்.

3. மஹரிஷி வேதவியாஸரின் புத்திரர்.

47 தம்மிலேயே மூழ்கி எந்நேரமும் 'அல்லா மா­க்ஃ ஜபம் செய்பவருக்கு, சன்னிதானத்தில் பக்தர்கள் இருப்பது எப்படி ஒரு பிரதிபந்தமாக (மாற்றுத் தளையாக - தடையாக) ஆக முடியும்?

48 அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சமே இல்லாமற்போய் வீடுபேற்றில் உறைந்துவிட்டார். 'இரண்டுண்டுஃ என்னும் பா(ஆஏஅ)வம் வேருடன் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது. தம்முடைய நிஜமான சொரூபத்திலேயே மூழ்கியிருந்தார்.

49 இதில் ஒவ்வொரு அக்ஷரமும் ஸத்தியம்; அணுவளவும் அஸத்தியம் இல்லை. ஆயினும் உலகத்திற்கு வழிகாட்டுவதால்தான், ஞானியர் தங்களுடைய அவதார நோக்கமான கடமையை நிறைவேற்றியவர்கள் ஆகின்றனர்.

50 ஞானிகள் ஆறு குணதோஷங்களி­ருந்தும் (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் ஆகியவை) விடுபட்டவர்கள். நிரந்தரமாக உருவமற்ற நிலையில் இருப்பவர்கள். பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே உருவம் ஏற்பவர்கள். அவர்களுக்கு ஏது மரணம்?

51 தேகமும் இந்திரியங்களும் ஒன்றுசேர்வது ஜனனம்; அவை பிரிவது மரணம். பாசபந்தங்களில் மாட்டிக்கொள்வது ஜனனம்; அவற்றி­ருந்து விடுபடுவது மரணம்.

52 பிறப்பை இறப்பு தவிர்க்கமுடியாதவாறு தொடர்கிறது. ஒன்றி­ருந்து மற்றதைப் பிரிக்கமுடியாது. ஜீவனுடைய இயற்கையான லக்ஷணம் மரண நிலை; ஜீவன் உயிருடன் இருப்பது செயற்கையான நிலை.

53 தம்மிச்சையாக அவதாரம் செய்பவர்களுக்கும், காலனின் தலைமேல் காலை வைத்து மரணத்தை அடித்து வீழ்த்தும் சக்தி பெற்றவர்களுக்கும், வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் என்பதுபற்றி என்ன விசாரம்õ

54 பக்தர்களுக்கு மங்களம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே விருப்பத்தால் பல அவதாரங்கள் எடுப்பவர்களை ஜனனமும் மரணமும் எப்படிக் கட்டிவைக்க முடியும்? இரண்டுமே மாயையான கற்பனைகள் அல்லவோ?

55 தேஹம் கீழே விழுவதற்கு முன்னமேயே தேஹத்தைச் சாம்பலாக்கிவிட்டவருக்கு மரணம்பற்றி என்ன பயம்? அவர் மரணத்தை வென்றவர் அல்லரோ?

56 மரணமே தேஹத்தின் இயற்கையான நிலை. மரணமே தேஹத்தின் சுகமான நிலை. உயிரோடு இருப்பதுதான் தேஹத்தின் செயற்கையான நிலை. இது சிந்தனையாளர்களின் கருத்து.

57 ஜன்மமென்பது என்னவென்று அறியாத ஆனந்தமேகமான ஸமர்த்த ஸாயீநாதரின் உடல் எவ்வாறு மரணமடைய முடியும்? தேஹம் என்று ஒன்று இருக்கிறது என்ற உணர்வை உதறியவரல்லரோ ஸாயீõ

58 ஸாயீ பூரணமான பர பிரம்மம். அவருக்கேது ஜனனமும் மரணமும்? 'பிரம்மமே ஸத்தியம்; ஜகமனைத்தும் மாயைஃ என்றுணர்ந்தவருக்கு உடலைப்பற்றிய உணர்வு ஏது?

59 அவர் பிராணனைத் தரித்ததும், ஒரு நிலையில் அதை விடுத்ததும், எவரும் காணமுடியாதவாறு உலகெங்கும் சுற்றிவந்ததும், அவருடைய யோகசக்தியால் விளைந்த, பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே செய்யப்பட்ட லீலைகள்.

60 சூரியனை கிரஹணம் பிடித்திருக்கிறது என்றும், அது கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது என்றும் மக்கள் சொல்லுகின்றனர். ஆனால், அது வெறும் பார்வையின் குணதோஷமே. ஞானியரின் மரணமும் அப்படியே.

61 ஞானிகளுக்கு உடல் என்பது கேவலம் ஓர் உபாதி. அவர்களுக்கு ஏது பிறவிப்பிணி? பழவினையால் ஏதேனும் பந்தம் இருப்பினும் அதை அவர்கள் அறியமாட்டார்கள்.

62 உருவமற்ற நிலையில் இருந்தபோது அடியவர்களின் பக்தியால் நிரம்பி வழிந்ததாலும், பக்தர்கள் பூர்வஜன்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தாலும், அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டார். பக்தர்களுக்குக் கைதூக்கி வாழ்த்துக் கூறுவதற்காகவே சிர்டீயில் காணப்பட்டார்.

63 'பக்தர்களுக்காகத் தோன்றிய காரியம் முடிவடைந்தது; ஆகவே, அவர் உடலை உதிர்த்துவிட்டார்ஃ என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தைகளை யார் நம்புவர்? யோகிகளுக்குப் போவதும் வருவதும் உண்டோ?

64 இச்சாமரண சக்தி (விரும்பியபோது உயிர் பிரிக்கும் சக்தி) படைத்த ஸமர்த்த ஸாயீ, தேகத்தை யோகாக்கினியில் எரித்துவிட்டு மூலப்பிரகிருதியுடன் கலந்துவிட்டார். ஆயினும், பக்தர்களுடைய இதயத்தில் என்றும் வாசம் செய்கிறார்.

65 எவருடைய நாமத்தை நினைத்தால் ஜனனமரண எண்ணமே ஓடி மறைந்துவிடுகிறதோ, அவருக்கு மரண அவஸ்தை ஏது? முத­­ருந்த தோன்றா நிலைக்கு அவர் திரும்பிவிட்டார் என்றே அறிதல் வேண்டும்.

66 பௌதிக நிலையி­ருந்து தாவி, தோன்றாநிலையில் பாபா கலந்தார். அந் நேரத்தில், தம்மிலேயே மூழ்கிய நிலையை அனுபவித்துக்கொண் டிருந்தபோதிலும், பக்தர்களை விழிப்புடன் இருக்கச் செய்தார்.

67 எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த தேகம் மறைந்துபோயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்? மனம் அந்த வார்த்தைகளை ஏற்க மறுக்கிறது.

68 ஆதியும் அந்தமுமில்லாத இந்த ஸாயீ பிரளய (ஊழிக்) காலத்திலும் இருப்பார். ஜனனமரண அபாயத்தில் என்றுமே மாட்டிக்கொள்ளமாட்டார்.

69 மஹராஜ் ஞானேச்வரர் எங்கே போனார்? மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தரிசனம் தந்தார் அல்லரோõ ஞானி ஏகநாதர் அவரை சந்தித்தார். அந்த உபகாரத்துக்கு உலகம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

70 கிருபாசமுத்திரமான ஏகநாதர் பைடணின் ஜோதியாக எவ்வாறு பிரகாசித்தாரோ, அவ்வாறே துகாராம் மஹராஜ் தெஹூவிலும், நரஸிம்ஹ ஸரஸ்வதி ஆலந்தியிலும் பிரகாசித்தனர்.--

71 பரளியில் ஸமர்த்த ராமதாசர்; அக்கல்கோட்டில் அக்கல்கோட் மஹராஜ்; ஹுமாணாபாத்தில் மாணிக்கப் பிரபு; அவ்வாறே சிர்டீயில் இந்த ஸாயீ.

72 மனம் எப்படியோ அப்படியே பா(ஆஏஅ)வம். பா(ஆஏஅ)வம் எப்படியோ அப்படியே என்றும் அனுபவம். புகழ் பெற்ற ஸித்திகளை உடையவருக்கு மரண நிலை ஏது?

73 பக்தர்களுக்குக் கைதூக்கி வாழ்த்துக் கூறியவர் தம்முடைய பூதவுடலை சிர்டீயில் நீத்துவிட்டபோதிலும், நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமர்த்தியமுடையவர் அல்லரோõ

74 'ஸமர்த்த ஸாயீதான் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட்டாரே, இப்பொழுது சிர்டீயில் என்ன இருக்கிறது?ஃ இது போன்ற சந்தேகங்களுக்கு மனத்தில் இடமளிக்க வேண்டா. ஏனெனில், ஸ்ரீஸாயீ மரணத்துக்கு அப்பாற்பட்டவர்.

75 ஞானிகள், பரோபகாரம் கருதி கர்ப்பவாசம் இல்லாமல் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்ளக் கூடியவர்கள். ஞானிகள் பாக்கியவந்தர்கள்; பிரம்ம சொரூபமானவர்கள்; உருவமேற்று அவதாரம் செய்பவர்கள்.

76 அவதார புருஷர்களுக்கு ஜனன நிலையும் இல்லை; மரண நிலையும் இல்லை. வந்த வேலை முடிந்தவுடன் சொந்த ரூபத்திற்குத் திரும்பித் தோன்றாநிலையில் ஒன்றிவிடுகின்றனர்.

77 மூன்றரைமுழ நீள உடல்தானா பாபா? அவருக்கு ஓர் உருவத்தையோ குறிப்பிட்ட வண்ணத்தையோ கற்பிப்பது அயுக்தமான (பொருத்தமில்லாத) பேச்சு அன்றோ?

78 அணிமா, கரிமா ஆகிய எட்டு மஹா ஸித்திகள் அவர் வருவதாலும் போவதாலும் குறைவதுமில்லை; நிறைவதுமில்லை. அகண்டமான ஸம்ருத்தி (நிறைவு) அவருக்குச் சொந்தமானது. அதுவே அவருடைய புகழ்.

79 இம்மாதிரியான மஹானுபாவர்களின் உதயம் உலக மங்களத்திற்காகவே. உதயம் நீடித்த­லும் நிற்ற­லும் ஒரு தொடர்ச்சியைக் காணலாம். ஞானிகள் உலக மக்களைக் கைதூக்கிவிட எப்பொழுதும் தயார்.

80 ஆத்மாவில் ஒன்றி, அழிவில்லாத நிலையில் இருக்கும் இவர்களுக்கு ஜனனம்பற்றிய பிராந்தியும் (மன மயக்கமும்) மரணம்பற்றிய பிராந்தியும், கனவில் ஏற்படும் சுகங்களையும் சம்பத்துகளையும் போலாகும்.

81 இதையே வேறுவிதமாகப் பார்த்தாலும், ஞானச் சுரங்கமாகவும் ஆத்மாவில் மூழ்கியவராகவும் வாழ்பவருக்கு, உடலைப் பேணுதலும் வீழ்த்துதலும் சரிசமானம்.

82 ஆக, அவர்களனைவரையும் மலைபோன்ற துக்கத்தில் அமிழ்த்திவிட்டு பாபாவின் உயிரற்ற உடல் சாய்ந்தது. சிர்டீ கிராமமெங்கும் 'ஹாஹாஃ என்ற அவல ஓலம் கட்டுக்கடங்காமல் எழும்பியது.

83 பாபா நிர்யாணம் அடைந்த செய்தி கிராம மக்களை அம்புபோல் துளைத்தது. தினசரி நடவடிக்கைகள் தடங்கி நின்றன. கலவரமடைந்த மக்கள் சிதறி இங்குமங்கும் திசை தெரியாது ஓடினர்.

84 அமங்கலச் செய்தி பரவி, மக்களின் தலைமேல் இடிபோல் விழுந்தது. சிந்தனையாளர்கள் திகைப்புற்று அமர்ந்தனர். மற்றவர்கள் ஓலமிட்டு அழுதனர்.

85 பேரன்பாலும் பொங்கும் துக்கத்தாலும் தொண்டை அடைத்தது; கண்களில் நீர் பெருகியது. மக்கள் 'சிவ சிவ ஹரேஃ என்று புலம்பினர்.

86 ஒவ்வொரு வீட்டிலும் குழப்பம் நிலவியது. மக்கள் கூக்குர­ட்டனர்; இதயம் படபடவென்று துடிக்க இங்குமங்கும் ஓடினர்.

87 மஹராஜ் தேகத்தை விடுத்துவிட்டார். கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உயிருக்கே உலை வந்ததுபோல் உணர்ந்தனர். ''இறைவாõ எவ்வளவு கொடுமையான வேளை இதுõ இதயத்தைப் பிளக்கிறதேõஃஃ என்று மக்கள் கூவினர்.

88 அனைவரும் மசூதியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். சபாமண்டபம் நிரம்பி வழிந்தது. இதயத்தைப் பிளக்கும் காட்சியைக் கண்டு மக்கள் துக்கத்தால் தொண்டை அடைக்க விம்மி விம்மி அழுதனர்.

89 'சிர்டீயின் வைபவம் தொலைந்துபோயிற்றுõ சுக சௌபாக்கியங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்ஃ என்று நினைத்து எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் நிரம்பியது. மக்கள் அனைவரும் தைரியமிழந்தனர்.

90 அந்த மசூதியின் மஹத்துவந்தான் என்னேõ முக்தி தரும் ஸப்தபுரிகளில்1 ஒன்றாகக் கருதப்பட்டதன்றோõ 'துவாரகா மாயீஃ என்று பாபா சர்வ நிச்சயமாகப் பெயரிட்ட இடமன்றோ?

91 நிர்யாணமாக (கடைசிப் பயணமாக) இருப்பினும், நிர்வாணமாக (முக்தி நிலையாக) இருப்பினும், நிதனமாக (மரணமாக) இருப்பினும், துவாரகா மாயீயே இறையுடன் ஒன்றாகக் கலக்கக்கூடிய தலம். எவர் இறைவனை இடையறாது சிந்திக்கிறாரோ அவருக்கு அங்கு இடம் உண்டு.

92 காருண்யம் மிகுந்த தாயுந்தந்தையுமானவரும், பக்தர்களுக்கு விச்ராந்தி அளிக்கும் புக­டமானவருமான குருராஜர், ஸாயீராயர், இத்தன்மை படைத்தவர்; என்றும் ஞாபகத்தில் இருப்பவர்.

93 பாபா இல்லாமல் சிர்டீ பாழடைந்தது. பத்துத் திசைகளும் சூனியமாகத் தெரிந்தன. பிராணனை இழந்த உடல்போல் சிர்டீ காட்சியளித்தது.

94 குளத்தில் நீர் வற்றிப்போகும்போது மீன்கள் துள்ளிப் புரண்டுத் துடிக்கும். அதுபோலவே சிர்டீ மக்களும் துக்கத்தால் துடித்தனர்; களையிழந்தனர்.

95 தாமரை இல்லாத நீர்நிலையைப் போலவும், புத்திரன் இல்லாத இல்லத்தைப் போலவும், தீபம் இல்லாத கோயிலைப் போலவும், மசூதியும் சுற்றுப்புறமும் களையிழந்து போயின.

96 தலைவன் இல்லாத குடும்பத்தைப் போலவும், அரசன் இல்லாத நகரத்தைப் போலவும், செல்வம் இல்லாத கஜானா போலவும், பாபா இல்லாத சிர்டீ வனமாகியது.

97 சிசுவுக்குத் தாயார் எப்படியோ, சாதகப் பறவைகளுக்கு மேகநீர் எப்படியோ, அப்படியே சிர்டீயில் வாழ்ந்த மக்களுக்கும் சகல பக்தர்களுக்கும் பாபாவின் அன்பு.

98 சிர்டீ, ஹீனமும் தீனமும் அடைந்து மரணமுற்றதுபோல் ஒளியிழந்தது. நீரி­ருந்து அகற்றப்பட்ட மீன்களைப் போல மக்கள் வேதனையால் துடிதுடித்தனர்.

99 மக்களனைவரும், கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியைப் போலவும், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைப் போலவும், வழி தவறிய பசுவின் கன்றைப் போலவும் பரிதவித்தனர்.

100 சிர்டீ மக்கள் எல்லாரும் துக்கம் தாங்கமுடியாமல் வீதிகளிலும் சந்துகளிலுமாக நான்கு திசைகளிலும் சிதறி ஓடினர்.

101 சிர்டீயின் புனிதத்திற்கு ஸாயீயே மூலம். சிர்டீயின் வரலாற்றுக்கும் ஸாயீயே வேர். சிர்டீ புனிதத் தலம் ஆனதும் ஸாயீயால்தான். ஸாயீயே எல்லாருக்கும் நிழல் தந்த குடைõ

102 சிலர் கோவென்று கதறி அழுதனர்; சிலர் பூமியில் புரண்டனர்; சிலர் மூர்ச்சையடைந்தனர்; அனைவருமே துக்கத்தால் தாக்கப்பட்டனர்.

103 துக்கக்கண்ணீர் கண்களி­ருந்து பெருக, ஆடவரும் பெண்டிரும் பெருந்துயருற்றனர். அன்னத்தையோ பானத்தையோ தொடமுடியவில்லை. அவர்களுடைய முகங்கள் பரிதாபகரமாகத் தோன்றின.

104 பாபா கிடந்த கோலத்தைப் பார்த்த கிராம மக்கள் சொல்லொணாத வேதனை அடைந்தனர். சிறுபிள்ளைகளி­ருந்து முதியோர்கள்வரை சமத்த பக்தர்களும் பெருங்கவலையில் மூழ்கினர்.

105 எங்கே இனிய உன்னதமான கதைகள் கிடைத்தனவோ, எங்கே பல வழிகளிலும் ஆனந்தம் பொங்கியதோ, எங்கே சட்டென்று நுழைந்துவிட முடியாதோ, அங்கே, அதே மசூதியில் இப்பொழுது வெற்றிடந்தான் தெரிந்தது.

106 சிர்டீயில் நிலவிய சகல நித்திய லக்ஷ்மிக்கும் நித்திய மங்களத்திற்கும் பாபாவே மூலகாரணம். ஆதலால், கிராம மக்கள் கலகலத்துப்போனது இயல்பே.

107 ஓ ஸாயீநாதரேõ ஆனந்தத்தின் மூலமேõ ஆனந்த தெய்வத் திருமேனியேõ பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக உருவம் ஏற்றீர். அந்தச் செல்வத்தை சம்பாதித்த பிறகு, ஐயகோõ சிர்டீயிலேயே உடலை உகுத்தீர்õ

108 புத்திதடுமாறிப்போன எங்களுக்கு, சோர்வேதுமில்லாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் எங்கள் நன்மை கருதி உபதேசங்களை அளித்தீர்.

109 எங்களுக்கு அளிக்கப்பட்ட அத்தனை உபதேசங்களும் கவிழ்த்து வைக்கப்பட்ட பானையின்மேல் ஊற்றப்பட்ட நீரைப் போல வீணாகிப் போயின. ஒரு துளி நீர்கூட நிலைக்கவில்லை.

110 ''நீங்கள் யாரையாவது அவமரியாதையாகப் பேசினால் உடனே எனக்கு வ­க்கிறதுஃஃ என்று ஒவ்வொரு படியிலும் எங்களுக்கு அறிவுறுத்தினீர்கள். ஆயினும், நாங்கள் தங்களுடைய வார்த்தைகளை மதிக்கவில்லை.

111 உங்களுடைய நல்லுபதேசங்களைக் கடைப்பிடிக்காத நாங்கள் அபராதிகள் (குற்றாவளிகள்). அவ்வாறு நாங்கள் ஆக்ஞைக்குப் பங்கம் விளைவித்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாகவோ இவ்வாறு செய்துவிட்டீர்?

112 பாபா, இதுதான் நாங்கள் செய்த பாவங்களின் ஒருமித்த விளைவோõ ஆயினும், இப்பொழுது இவ்வாறு வருந்துவதால் என்ன பயன்? அத்தனை தீவினைப் பலன்களையும் அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும்.

113 மேலும், இக் காரணத்தால்தான் தேவரீர் எங்களின்மீது ச­ப்புற்றுத் திரைமறைவாகச் சென்றுவிட்டீரோõ ஐயகோõ காலன் எங்களை மரண அடியாக அடித்துவிட்டானேõ

114 தேவரீர் தொண்டை வறண்டுபோகும்வரை செய்த உபதேசங்கள் எங்களுடைய உதாசீனத்தால் பிரயோஜனமில்லாமல் போனது கண்டு மனமுடைந்துபோய், காதுகளின் வழியாகக் கபாலத்திற்கு போதனை ஏற்றும் முயற்சியைக் கைவிட்டுவிட்டீரோõ

115 நாங்கள் செய்த அசட்டையால் எங்கள்மீது முன்பிருந்த பிரேமையை மறந்துவிட்டீரோ? அல்லது பூர்வஜன்ம சம்பந்தம் இன்றோடு முடிந்துவிட்டதோ? ஒருவேளை, உமது அன்பெனும் தெய்வீக ஊற்று வறண்டுபோய்விட்டதா என்ன?

116 தேவரீர் இவ்வளவு சீக்கிரமாக மறைந்துவிடுவீர்கள் என்பது முன்பாகவே தெரிந்திருந்தால், எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும். மக்கள் ஆரம்பத்தி­ருந்தே உஷாராக இருந்திருப்பார்கள்.

117 ஆனால், நாங்கள் அனைவரும் சோம்பியிருந்தோம். மந்தத்திலும் உற்சாகமின்மையிலும் மூழ்கி வெறுமனே உட்கார்ந்திருந்தோம். கடைசியில் ஏமாறிப்போனோம். நாங்கள் இருத்தலும் இல்லாம­ருத்தலும் சரிசமமாகிவிட்டதுõ

118 குருத் துரோகிகளாகிய நாங்கள் எச் செயலையும் நேரத்தோடு செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாலும் ஏதாவது பலன் கிடைத்திருக்கும். நாங்கள் அதையும் செய்யவில்லைõ

119 நெடுந்தூரம் பயணம் செய்து சிர்டீக்குப் போய் அங்கு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒரு புனிதத் தலத்தில் இருக்கிறோம் என்பதை அடியோடு மறந்து அங்கும் இஷ்டப்படி நடந்துகொண்டோம்.

120 பக்தர்கள் பலவகை - புத்திமான், பற்றுடையோன், விசுவாசமுள்ள அடியவன், தர்க்கவாதி என்று நானாவிதமாக இருந்தனர். அவர்கள் அனைவருடைய குணங்களும் தெரிந்திருந்தும் பாபா எல்லாரையும் ஒன்றாகவே பாவித்தார். அதிகம், குறைவு என்னும் பேதமே அவரிடம் இருந்ததில்லை.

121 உலகத்தில் கடவுளைத் தவிர வேறெதையும் அவர் காணவில்லை. கண்ணோட்டம் அவ்வாறு இருந்ததால், அவர் தம்மைத் தனிமைப்படுத்தியோ வேறுபடுத்தியோ இரண்டாவதாகக் கருதவில்லை.

122 பக்தர்கள்கூடக் கடவுள்தான். குருவும் அவர்களிடமிருந்து வேறுபட்டவர் அல்லர். இரு சாராரும் தங்களுடைய உண்மையான சொரூபத்தை மறந்துபோவதால், தங்களைப் பரஸ்பரம் பேதம் பிரித்துக் காண்கின்றனர்.

123 சிந்தித்துப் பார்த்தால் நாமும் கடவுள்தான். ஆனால், நம்முடைய உண்மையான சொரூபம் மறந்துபோகும்போது, பேதத்தின் லக்ஷணங்கள் (இயல்புகள்) தோன்றுகின்றன. அதுவே பெரும்வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

124 வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பதுபோல ஒரு சக்கரவர்த்தி கனவு காண்கிறார். ஆயினும், விழிப்பு ஏற்பட்டவுடன் தம் சுயநிலை மாறாததை உணர்கிறார்.

125 விழிப்பு நிலையில் செய்யும் செயல்களெல்லாம் கனவு நிலையில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், உண்மையான விழிப்பு பூரணமான அத்துவைத நிலையில் கரையும்போதுதான் ஏற்படுகிறது.

126 அறிவாளியோ மூடனோ, தம்மை அண்டியவர் அனைவரிடமும் பாபா அத்தியந்த (மிகுந்த) அன்பு செலுத்தினார். தம்முடைய ஜீவனைவிட அவர்களை அதிகமாக நேசித்தார். அவர்களுக்குள் சிறிதளவும் பேதம் பார்க்கவில்லை.

127 அவர் மனித உருவத்தில் நடமாடிய தெய்வம். அதை மக்களுக்கு நேரிடை அனுபவமாக அளித்தார். ஆயினும், அனைவரும் அதை உணரத் தவறினர். இதற்குக் காரணம், பாபா அவர்களிடம் காட்டிய இளகிய மனமும் பாசமுந்தான்.

128 சிலருக்கு அவர் செல்வச்செழிப்பை அளித்தார். சிலருக்கு சந்ததியையும் சம்சார சுகங்களையும் அளித்தார். இவற்றால் பெரும்பிரமை அடைந்த மக்கள், ஞானத்தைப் பெறும் வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்.

129 பாபா எவரிடமாவது கே­யும் சிரிப்புமாகப் பேசினால், வேறு எவரிடமும் காட்டாத அற்புதமான அன்பைத் தம்மிடம் மட்டுந்தான் பாபா காட்டுகிறார் என்றெண்ணி அந்த நபர் தலைக்கனம் கொள்வார்.

130 பாபா எவரிடமாவது கோபமாகப் பேசினால், ''பாபாவுக்கு இவரைப் பிடிக்கவில்லை. பாபா நம்மையே அதிகமாக மதிக்கிறார். மற்றவர்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுப்பதில்லைஃஃ என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

131 பாபா அளித்த சலுகைகளைப் பெற நாம் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயன்றபோதிலும், பாபா அந்த ரீதியில் கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறாக, நம் கடமைகளை மறந்துபோய் க்ஷேமலாபமடையாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.

132 தெய்வீக நிகழ்ச்சியாக பர பிரம்மமே மனித உருவமேற்று நம்மருகில் வந்து நின்றது. ஆயினும் நாமோ, செய்யவேண்டிய காரியங்களை மறந்துவிட்டு அவர் செய்த வேடிக்கைகளிலும் தமாஷிலும் பிரியம் காட்டினோம்õ

133 வந்தவுடனே பாபாவை தரிசனம் செய்வோம். மலர்களையும் பழங்களையும் சமர்ப்பணம் செய்வோம். தக்ஷிணை கேட்டால் தடுமாறுவோம்; அவ்விடத்தி­ருந்து நழுவிவிடுவோம்.

134 எங்களுக்கு நன்மை தரும் உபதேசங்களை இதமாக அளித்தீர். ஆனால், எங்களுடைய அற்பபுத்தியையும் சிறுமையையும் கண்டு வாடித் துயருற்றுச் சீக்கிரமாகவே உங்களுடைய நிரந்தரமான இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டீர் என்று நான் நினைக்கின்றேன்.

135 இனிமேல் ஆத்மானந்த நிலையில் தேவரீர் மூழ்கியிருக்கும் அற்புதமான காட்சியை இக் கண்களால் காணமுடியுமா? ஆனந்தமே திரண்டுவந்தது போன்ற உருவத்தைப் பல ஜன்மங்களுக்குக் காணமுடியாதவாறு இழந்துவிட்டோம்õ

136 அந்தோõ நம்முடைய கர்மவினையின் கொடுமைதான் என்னேõ நமக்கு மிக அருகி­ருந்த ஸாயீ என்னும் உயிர்த்துணைவரை இழந்துவிட்டோம். நம்மிடம் காரணமேயின்றி தயை காட்டும் தெய்வம் இன்று நமக்கு அன்னியமாகிவிட்டதேõ

137 ''யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது.ஃஃ பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. நம் இஷ்டம்போலச் சண்டையும் சச்சரவும் செய்தோம்.

138 பக்தர்களையும் பக்தரல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக ஸாயீநாதரை இழந்தோம்õ அவருடைய வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வரும்போது நம்முள் ஓர் அனுதாப அலை எழுகிறது.

139 மஹராஜ் பக்தர்களிடம் சொல்­யிருந்தார், ''எட்டு வயது பாலகனாக மறுபடியும் என்னையே நான் மக்களிடையே வெளிப்படுத்திக்கொள்வேன்.ஃஃ

140 இது ஒரு ஞானியின் திருவாய்மொழி. யாரும் இதை விருதாவான (பயனற்ற) சொல்லாக நினைக்கக் கூடாது. சக்கரபாணியான மஹாவிஷ்ணு கிருஷ்ணாவ தாரத்தில் இவ்வாறுதான் செய்தார்.

141 சுந்தரமான காந்தியுடன் நான்கு கரங்களிலும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, சிறைச்சாலையில், தேவகியின் எதிரில், ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வயது பாலகனாகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்.

142 அங்கு, அக் காலத்தில், பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதாரம். இங்கு, இக் காலத்தில், தீனமான பக்தர்களை உத்தாரணம் (தீங்கி­ருந்து மீட்கை-தூக்கி நிறுத்துகை) செய்வதற்காக அவதாரம். இவ்வாறிருக்கையில், நாம் சந்தேகம் பிறக்க அனுமதிப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது? ஞானிகளின் லீலைகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்லவோõ

143 இது ஒரு ஜன்மத்தில் ஏற்பட்ட பந்தமா என்ன? பாபாவுக்கு பக்தர்களிடம் ஏற்பட்ட பூர்வஜன்ம சம்பந்தம்; எழுபத்திரண்டு தலைமுறைகளாக ஏற்பட்ட ருணானுபந்தம். இவ்வாறு பாபா பேச்சுவாக்கில் பலரறியச் சொல்­யிருக்கிறார்.

144 அன்புப் பிணைப்புகளால் இவ்விதமாகக் கட்டுண்ட மஹராஜ், சிறுபயணமாக எங்கோ சென்றிருக்கிறார்; மறுபடியும் திரும்பிவிடுவார் என்ற பூரணமான நம்பிக்கை பக்தர்களுடைய மனத்தில் இருக்கிறது.

145 நேருக்குநேராக தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர்.

146 நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.

147 சாவடியில் குப்த (ஒளிந்த) ரூபம்; மசூதியில் பிரம்ம ரூபம்; ஸமாதியில் ஸமாதி ரூபம்; மற்றெல்லா இடங்களிலும் சுக சொரூபம்.

148 ஆயினும், தற்சமயத்தில், ஸமர்த்த ஸாயீ இங்கு வாசம் செய்வதற்குப் பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும், அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும், பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்கவேண்டும்.

149 தேவர்கள் அவர்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடுவர். ஞானிகளோ இருக்குமிடத்திலேயே பிரம்ம ஸ்திதியை (நிலையை) அடைந்துவிடுவர். பேரானந்தத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஞானிகளுக்குப் போவதும் வருவதும் கிடையா.

150 ஆகவே, அடியேன் வணக்கம் செய்து சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அனைவர்க்கும் ஒரு பணிவான வேண்டுகோள் விடுக்கிறேன். பயபக்தியுடன் கேளுங்கள்.

151 நாம் உத்தமர்களுடைய சங்கத்தையே நாடுவோமாக. குருவின் பாதங்களில் சுயநலம் பாராத அன்பு செலுத்துவோமாக. குருவின் புகழைப் பாடுவதில் பேரார்வம் காட்டி நிர்மலமான பக்தியைப் பெருக்குவோமாகõ

152 குருவிடம் என்றும் பிளவுபடாத அன்பை வளர்ப்போம். நம்முடைய சிநேகபாசம் என்றும் அறுபடாதிருக்கட்டும். பக்தர்கள் சுகத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்துக்கொண்டு இரவுபகலாக குருவின் பாதங்களில் மூழ்கட்டும். (நிற்க)

153 சிறிது நேரம் கழிந்த பிறகு, பாபாவின் சிஷ்யர்களும் எல்லா கிராம மக்களும் பாபாவின் பூதவுடலை என்ன பண்ணுவது சிறப்பு என்று நிச்சயம் செய்வதற்காகக் கலந்து ஆலோசித்தனர்.

154 பெரும்பக்தரான ஸ்ரீமான் புட்டீ, நடக்கப்போகும் சம்பவத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் போல ஓர் அழகிய விசாலமான மாளிகையை ஏற்கெனவே கட்டியிருந்தார்.

155 பின்னர், பாபாவின் பூதவுடலை எங்கு அடக்கம் செய்வது என்ற விஷயம்பற்றி முப்பத்தாறு மணி நேரம் விவாதம் நடந்தது. கடைசியில், எது நடக்கவேண்டுமென்று இருந்ததோ அதுவே நடந்தது.

156 ஒருவர் கூறினார், ''இந்துக்களை பாபாவின் உடலைத் தொடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது. முஸல்மான்களின் கபரஸ்தானத்திற்கு (இடுகாட்டிற்கு) சடங்குபூர்வமான ஊர்வலமாக எடுத்துச் செல்வோம்.ஃஃ

157 மற்றொருவர் கூறினார், ''பூதவுடல் திறந்தவெளியில் வைக்கப்பட வேண்டும். ஓர் அழகிய சமாதி கட்டுவோம். அங்கேயே அது நிரந்தரமாக இருக்கட்டும்.ஃஃ

158 குசால் சந்தும் அமீர் சக்கருங்கூட அவ்வாறே நினைத்தனர். ஆனால், ''இந்த சரீரத்தை வாடாவில் வையுங்கள்ஃஃ என்பவையே பாபா திணறித் திணறிப் பேசிய கடைசி வார்த்தைகள்.

159 ராமச்சந்திர பாடீல் என்னவோ, மிகக் கறாராக இருந்தார். அவர் கிராமாதிகாரிகளில் ஒருவர். பாபாவிடம் பிரேமை மிகுந்த தொண்டர். அவர் கிராம மக்களிடம் சாற்றினார்.

160 ''உங்களுடைய சிந்தனைகள் எப்படியிருந்தாலும் சரி, அவை எங்களுக்கு அடியோடு ஒப்பிதம் இல்லை. ஸாயீயை புட்டீ வாடாவிற்கு வெளியேயோ வேறெங்குமோ கணநேரங்கூட வைத்திருக்கக்கூடாது.ஃஃ

161 இந்துக்கள் அவர்களுடைய தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடியும், முஸல்மான்கள் அவர்களுடைய மதநெறிகளின் பிரகாரமும், எது செய்யத் தகுந்தது, எது செய்யத் தகாதது, என்பதுபற்றி இரவு முழுவதும் பேசித் தீர்த்தனர்.

162 அங்கு, அவருடைய வீட்டில் லக்ஷ்மண் மாமா தூங்கிக்கொண் டிருந்தபோது, விடியற்காலை நேரத்தில் பாபா அவருடைய கனவில் தோன்றி அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, ''சீக்கிரமாக எழுந்து வாரும்ஃஃ என்று சொன்னார்.--

163 ''பாபூஸாஹேப் ஜோக்(எ) இன்று வரமாட்டார். நான் இறந்துபோய்விட்டேன் என்று அவர் புரிந்துகொண் டிருக்கிறார். ஆகவே, நீராவது வந்து எனக்குக் காகட1 ஆரதியையும் காலைப்பூஜையையும் செய்வீராகõஃஃ

164 லக்ஷ்மண் மாமா உடனே எழுந்து நித்தியக் கிரமங்களை முடித்துக்கொண்டு பூஜைக்குண்டான சாமான்களை எடுத்துக்கொண்டு பூஜை செய்வதற்குச் சரியான நேரத்தில் வந்துசேர்ந்தார்.

165 அவர் சிர்டீயின் கிராம ஜோதிடர்; தினமும் காலைநேரத்துப் பூஜையைச் செய்த மாதவராவின் (சாமாவின்) தாய்மாமன்.

166 லக்ஷ்மண் மாமா வைதீக நெறிகளின்படி செம்மையாகக் கர்மாக்களைச் செய்த ஒரு சிறந்த பிராமணர். தினமும் விடியற்காலையில் ஸ்நானம் செய்துவிட்டுத் தூய ஆடைகளை அணிந்துகொண்டு பாபாவை தரிசனம் செய்துகொள்வார்.

167 பிறகு, அவர் பாபாவின் பாதங்களை அலம்பியபின் சந்தனமும் அக்ஷதையும் இட்டு மலர்களாலும் துளசி இலைகளாலும் அர்ச்சனை செய்வார். அதன் பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், நீராஞ்சனம் (மஞ்சள் நீர் ஆரதி) ஆகிய பூஜை விதிமுறைகளைச் செய்வார். கடைசியாக தக்ஷிணையும் சமர்ப்பிப்பார்.

168 பிரார்த்தனை மந்திரங்களை ஓதிக்கொண்டே ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார். பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, எல்லாருக்கும் பிரசாதம் அளித்துவிட்டு நெற்றியில் திலகமும் இடுவார். பின்னர் அங்கிருந்து சென்றுவிடுவார்.

169 அங்கிருந்து சென்று விநாயகர், சனி தேவர், உமாரமணர் (சிவன்), அஞ்ஜனையின் புத்திரரான ஹனுமார் ஆகிய தெய்வங்களுக்குப் பூஜை செய்வார்.

170 இவ்வாறாக, இந்த கிராமஜோதிடர் கிராமதேவதைகள் அனைத்திற்கும் நித்திய பூஜை செய்தார். இப்பொழுது பாபாவின் பூதவுடலுக்கு மிகுந்த பிரேமையுடன் சடங்குகளுடன் கூடிய பூஜையைச் செய்தார்.

171 லக்ஷ்மண் மாமா ஆதியி­ருந்தே நிட்டையுடன் பணி செய்பவர். அதோடுகூட அவருக்கு ஒரு கனவுக் காட்சியும் கிடைத்திருந்தது. ஆகவே அவர் காகட ஆரதிக்கு வேண்டிய பொருள்களைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தார். ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

172 முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டுப் பிரேமையுடன் முகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு, ஸாயீயின் கைகளையும் பாதங்களையும் அலம்பியபின், ஆசமனத்துக்கு நீரும் அளித்துவிட்டு விதிமுறைகளின்படி பூஜைசெய்தார்.

173 மௌலவியும் மற்ற முஸ்லீம்களும் உடலைத் தொடக்கூடாது என்று ஆட்சேபித்தனர். லக்ஷ்மண் மாமா அதைப் பொருட்படுத்தாது சந்தனம் இட்டபின் பூஜையை முழுமையாகச் செய்து முடித்தார்.

174 பூதவுடலோ, மாமா ஆராதனம் செய்துவந்த தேவர் ஸமர்த்த ஸாயீயினுடையது; அது இந்துவின் உடலா, முஸ்லீமின் உடலா என்ற எண்ணம் மாமாவுக்குக் கனவிலும் ஏற்பட்டிருக்காது.

175 பூஜைக்குத் தகுதியான சரீரம் ஜீவனுடன் இருந்தபோது பூஜை ஓர் உற்சவம் போல் நடத்தப்பட்டது. அவ்வுடல் ஜீவனை இழந்துவிட்ட போதிலும், பூஜை வைபவம் வெறும் உபசாரம் ஆகிவிடக்கூடாது.

176 மேலும், பாபாவை அந்த நிலையில் பார்த்த லக்ஷ்மண் மாமா ஏற்கெனவே துக்கத்தால் தாக்கப்பட்டிருந்தார். மறுபடியும் தரிசனம் செய்வது முடியாதகாரியமாதலால், கடைசிப் பூஜையைச் செய்வதற்காக வந்திருந்தார்.

177 கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. ஸாயீயின் நிலையைப் பார்த்து அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கைகளும் கால்களும் நடுங்கின. மாமாவின் மனம் உடைந்து சுக்குநூறாகியது.

178 ஆனபோதிலும், மூடியிருந்த கையை விரித்து பீடாவையும் தக்ஷிணையையும் அதில் வைத்தார். உடலை முன்பிருந்தவாறே மூடிவிட்டு மாமா அங்கிருந்து சென்றுவிட்டார்.

179 பின்னர், தகுந்த நேரத்தில் பாபூஸாஹேப் ஜோக்(எ) தினமும் செய்ததுபோல் மசூதியில் ஸாயீயின் மதியநேர ஆரதியைச் செய்தார். மற்றவர்களும் அவருடன் இருந்தனர்.

180 இப்பொழுது, இதன் பின்னர் என்னென்ன நடந்தது என்பது அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படும். மிகவும் சிறப்பான இடத்தில் பாபாவின் பூதவுடலுக்குச் செய்யப்பட்ட ஸம்ஸ்காரங்கள் (இந்துமதச் சடங்குகள்) பற்றியும்,--

181 அவருடன் பல ஆண்டுகள் கூட்டுறவு கொண்டதும், அவரால் ஒரு நினைவுச் சின்னமாக மிகவும் நேசிக்கப்பட்டதுமான செங்கல் உடைந்து, தேஹத்திற்கு முடிவு வரப்போவதை சூசகமாகக் காட்டிய அபசகுன நிகழ்ச்சியைப்பற்றியும்,--

182 கொடுமையான தேஹ அவஸ்தை காரணமாக, முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாபா பிரம்மாண்டத்தில் பிராணனை வைத்தார். இப்பொழுது நடந்ததுபோல் அப்பொழுது நடந்திருந்தால் எவ்வளவு மஹத்தான பேரிழப்பு நேர்ந்திருக்கும் என்பதுபற்றியும்,--

183 அந்த சமயம், பக்தர் மஹால்ஸாபதி எவ்வாறு பாபாவின் உடலை இரவுபகலாகப் பாதுகாத்தார் என்பதுபற்றியும், எல்லாரும் நம்பிக்கை இழந்தபோதிலும், பாபா எதிர்பாராதவிதமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்ததுபற்றியும் விவரிக்கப்படும்.

184 மரணபரியந்தம் பிரம்மசரியம் அனுஷ்டித்தவர் - யோகாசாரியர் - ஞானிகளின் சிகரமான ஞானி - அவருடைய ஐசுவரியத்தை (ஈசுவரத் தன்மையை) யாரால் விவரிக்க முடியும்?

185 எவருடைய மஹத்துவம் அத்தகையதோ, அவரை ஸத்துவ பா(ஆஏஅ)வத்துடன் வணங்குவோமாகõ இந்த தீனன் ஹேமாட் அனன்னியமாக அவரை சரணடைகிறான்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'மஹாஸமாதிஃ என்னும் நாற்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play