TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
அத்தியாயம் - 10
10. ஸமர்த்த ஸ்ரீ ஸாயீயின் மஹிமை
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 எவர் சகல உலகங்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மத்திலேயே சதா லயித்திருக்கிறாரோ, அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக்கொண் டிருப்போமாகõ
2 யாரைப்பற்றிய நினைவே நம்மை ஜனனமரணச் சுழருந்து விடுவிப்பதற்குப் போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீகப் பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இப்பயிற்சிக்கு ஒரு பைசாவும் செலவு இல்லை.
3 சொற்பப் பயிற்சியால் பெரும்பலன் அனாயாசமாகக் கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
4 இதர தேவதைகள் அனைத்தும் மாயை; குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம்முடைய தலையெழுத்தையே மாற்றிவிடுவார்.
5 எங்கே தூய நேர்மையான குருஸேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலமாகிவிடுகிறது. நியாயம், மீமாம்ஸை, போன்ற சாஸ்திரங்களைப் படித்துவிட்டு ஒரு தலைமுடியை இரண்டாகப் பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திபூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.
6 ஸத்குரு நாவாயைச் செலுத்தும்போது ஆதிபௌதிகம்1, ஆத்யாத்மிகம்2, ஆதிதைவிகம்3 ஆகிய இன்னல்களிருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
7 கடலைக் கடப்பதற்கு கப்பன் தளபதியின்மீது விசுவாசம் வைக்கவேண்டும்; அதுபோலவே, ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்கு குருவின்மீது விசுவாசம் வைக்கவேண்டும்.
8 ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்குக் கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தம்முடைய லீலையால், ஆனந்தத்தை லக்ஷணமாக உடைய மோக்ஷத்தை அளிக்கிறார்.
9 எந்த ஸத்குருவின் தரிசனம் ஹிருதயத்தின் முடிச்சுகளை அவிழ்க்குமோ, புலனடக்கம் கிடைக்கச் செய்யுமோ, முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும் இந்த
10 எட்டாவது அத்தியாயத்தில் மனிதஜன்மம் கிடைத்ததன் பயன் என்ன என்பது சொல்லப்பட்டது. ஒன்பதாவது அத்தியாயத்தில் பாபா பிச்சை எடுத்துப் பிழைத்ததன் சூக்குமமான காரணம் சொல்லப்பட்டது.
11 பாயஜாபாயி மதியத்தில் சோளரொட்டியும் பாஜியும் அளித்தது, குசால்சந்தின் நல்வாழ்வுபற்றி பாபா கொண்ட அக்கறை, தாத்யா, மஹால்ஸாபதி இவர்களுடன் பாபா உறங்கியதுபற்றியும்கூடப் பிரவசனம் செய்யப்பட்டது. பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
12 கதை கேட்பவர்களேõ பாபா எப்படி வாழ்ந்தார், எங்கு உறங்கினார், எவ்வளவு அலக்ஷியமாகச் சுற்றிவந்தார் (சூக்கும சரீரப் பயணங்கள்), என்பன சம்பந்தப்பட்ட சரித்திரப் பகுதியை இப்போது சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.
13 பாபாவினுடைய உலகியல் வாழ்க்கை எவ்வளவு போற்றுதற்குரியதுõ ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர் அன்னை; புயும் ஆடும் பயமின்றிப் பிரேமையுடன் உலவிவந்த சூழ்நிலையை அளித்த, நம்பிக்கைக்குகந்த புகடம் அவர்.
14 செவிமடுப்பவர்களேõ ஸாயீ எப்படி வாழ்ந்தார்? எங்கு உறங்கினார்? என்பனபற்றியெல்லாம் இப்பொழுது சிரத்தையுடன் கேளுங்கள். பாபா வாழ்க்கை நடத்திய முறை இதுவேõ
15 நான்கு முழம் நீளமும் ஒரு சாண் அகலமுமுள்ள ஒரு மரப்பலகை இரண்டு பக்கங்களிருந்தும் கந்தைத் துணிகளால் பிணைக்கப்பட்டு தூலத்திருந்து ஓர் ஊஞ்சலைப்போல் தொங்கவிடப்பட்டிருந்தது.
16 அந்தப் பலகையின்மேல் பாபா தூங்கினார். அவருடைய படுக்கையின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அகல் விளக்குகள் எரிந்தன. எப்பொழுது ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பது ஒருவருக்கும் தெரியாது.
17 அப்பலகையின்மேல் அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பார்; அல்லது உறங்கிக்கொண் டிருப்பார். ஆனால், அவர் எப்பொழுது பலகையின்மேல் ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பதை எவரும் பார்த்ததில்லை.
18 பலகை கந்தல் துணிப்பட்டைகளால் பிணைக்கப்பட்டிருந்தது; அது எப்படி பாபாவின் பளுவைத் தாங்கியது? அஷ்டமஹாஸித்திகள் ஒருவரிடம் உறைந்திருந்தால் பலகை எல்லாம் பெயரளவுக்குத்தானேõ
19 அணிமா1 ஸித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியளவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ பாபா சுலபமாக ஸஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.
20 அணிமா ஸித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்கமுடிந்தவருக்கு மரப்பலகை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?
21 அணிமா, மஹிமா, லகிமா என்னும் அஷ்டமஹா1ஸித்திகளும் நவநிதிகளும்2 அவருடைய ஸந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையேõ
22 புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி -- அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார்.
23 பார்வைக்கு அவர் சிர்டீவாசியைப் போலத் தெரிந்தார்; மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனத்திலும் வசிக்கிறார்.
24 அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார்; வெளியுலகில் மக்களை நற்பாதையில் செலுத்தவேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனத்துள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின்மேல் பாசம் இருந்தது.
25 அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; பஹிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார்.
26 அந்தரங்கத்தில் பர பிரம்மத்துடன் லயித்த நிலையில் இருந்தவர், பஹிரங்கத்தில் சிலசமயம் பிசாசைப்போல் நடந்துகொண்டார். உள்ளே அத்வைத ஆனந்தத்தில் திளைத்த அவர், வெளியே உலகியல் செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டார்.
27 சிலசமயங்களில் மக்களின்மீது பிரேமை காட்டினார்; சிலசமயங்களில் கல்லெறிந்து அவர்களை விரட்டினார். சிலசமயங்களில் சாபங்களையும் திட்டுகளையும் மழையாகப் பொழிவார்; சிலசமயங்களில் ஆனந்தமாக அணைத்துக்கொள்வார்.
28 ஆனால், உண்மையில் அவர் சாந்தமுள்ளவராகவும் தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டவராகவும் பற்றற்றும் பொறுமையாகவும், எந்நேரமும் தியானத்தில் இருந்தவாறு தம்மிலேயே ரமித்து, பக்தர்களுக்கு இனிய மனமும் முகமும் காட்டினார்.
29 எப்பொழுதும் உள்முகமாகத் திருப்பப்பட்ட மனத்துடன் ஆடாது அசையாது ஒரே தோரணையில் உட்கார்ந்துகொண்டு, இங்குமங்கும் அலையவேண்டிய தொந்தரவு
30 செல்வத்தையோ புகழையோ சிறிதும் விரும்பாமல் பிச்சை எடுப்பதையே பிழைப்பாக ஏற்றுக்கொண்டு, புலன்கள் அனைத்தையும் உள்ளே இழுத்துக்கொண்ட யோகநிலையில் அவர் வாழ்நாளைக் கழித்தார்.
31 ஒரு யதி ஸந்நியாஸியைப்போல உடையுடுத்திக்கொண்டு, தம்முடைய ஸட்காவை ஸந்நியாஸிகள் எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டிய தண்டமாகக் கொண்டார். 'அல்லாமாக்ஃ என்னும் வார்த்தைகளே அவருடைய இடைவிடாத ஜபம்; பக்தர்களிடம் அவர் காட்டிய பிரீதி அகண்டம்.
32 மானிட உருவத்தில் அவதரித்த ஸாயீயின் உருவ லக்ஷணங்கள் இவ்வாறே; பூர்வஜன்மத்தில் சம்பாதித்த புண்ணியத்தால்தான் இப்புதையல் நமது கைகளுக்கு எதிர்பாராமலேயே கிடைத்திருக்கிறது.
33 ஸாயீ ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதி படைத்தவர்கள்; துரதிருஷ்டசாகள். அவர்களுடைய விதி விசித்திரமானதுõ அரிதாகக் கிடைக்கும் இவ்வதிருஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?
34 ஸாயீ ஆத்மபோதத்தின் சுரங்கம்; பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம். ஸம்ஸார ஸாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக்கொள்வோமாகõ
35 படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிருந்து புல்பூண்டுவரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும், அளவற்றதும் முடிவற்றதும் பின்னமில்லாததுமான முழுமுதற்பொருளே பாபாவாக உருவெடுத்திருக்கிறது.
36 கயுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து இரண்டாயிரம் ஆண்டுகள்; இதில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகு பாபா அவதாரம் செய்திருக்கிறார்.
37 பாபாவினுடைய பிறந்த தேதி தெரியாமல், இந்தக் காலத்தை எவ்வாறு நிர்ணயம் செய்யமுடியுமென்று கதை கேட்பவர்கள் இங்கு ஒரு சந்தேகத்தை எழுப்பலாம். ஆகவே, இப்பொழுது கவனமாகக் கேளுங்கள்.
38 புனிதமான சிர்டீ கிராமவாசியாக இருக்கவேண்டுமென்று ஸங்கல்பம் செய்துகொண்டு ஒரு க்ஷேத்திர ஸந்நியாஸியாக2 பாபா தமது கடைசிநாள்வரை 60 ஆண்டுகள் சிர்டீயில் வாழ்ந்தார்.
39 முதன்முதலாக, பாபா 16 வயது பாலகனாக சிர்டீயில் தோன்றினார்; அச்சமயத்தில் அங்கு 3 ஆண்டுகள் தங்கினார்.
40 பிறகு, அவர் சிர்டீயிருந்து மறைந்துவிட்டார்; மறுபடியும் தூரதேசமான நிஜாம் ராஜ்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கல்யாணக்கோஷ்டியுடன் சிர்டீக்கு வந்தார்; வந்தவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டார்.
41 அப்போது அவருக்கு 20 வயது; அடுத்த 60 ஆண்டுகள் அவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டது எல்லாருக்கும் தெரிந்ததேõ
42 சகவருஷம் 1840ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் விஜயதசமியன்று (கி.பி. 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி) பாபா மஹாஸமாதியடைந்தார்.
43 பாபாவினுடைய வாழ்நாள் 80 ஆண்டுகள். இதிருந்து பாபா பிறந்த ஆண்டு, சக வருஷம் 1760 (கி.பி. 1838) ஆக இருக்கவேண்டும் என்று அனுமானிக்கலாம்.
44 மரணத்தை வென்ற ஞானிகளின் ஜீவிதகாலத்தை நிர்ணயிக்க முடியுமா? அது செயற்கரிய செயலாகுமன்றோõ
45 சூரியன் உதிக்காமலும் அஸ்தமிக்காமலும் நிலையாக ஓரிடத்திலேயே இருக்கும் உலகத்தில், பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில், மஹான்கள் அவர்களுடைய இடத்திலேயே இருக்கின்றனர்.
46 கி.பி. 1681ஆம் ஆண்டு ஞானி ராமதாஸர் ஸமாதியடைந்தார். அதிருந்து இருநூறு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே இந்த மூர்த்தி அவதரித்தார்.
47 பாரத பூமி மொகலாயர்களின் படைகளால் தாக்கப்பட்டது; ஹிந்து அரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பக்திமார்க்கம் படிப்படியாக நசித்துப்போயிற்று; மக்கள் அறவழியிருந்து புரண்டனர்.
48 அந்த சமயத்தில் ஞானி ராமதாஸர் அவதரித்தார். சிவாஜி மஹாராஜின் உதவியுடன் ராஜ்ஜியத்தையும் பிராமணர்களையும் பசுக்களையும் முஸ்லீம்களின் தாக்குதல்களிருந்து அவர் காப்பாற்றினார்.
49 இது நடந்து இரு நூற்றாண்டுகள் முடிவதற்குள்ளேயே மறுபடியும் அதர்மம் தலை தூக்கியது. ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது; பாபா இப்பிளவைச் சரிக்கட்ட முயன்றார்.
50 ராமனும் ரஹீமும் ஒன்றே; அவர்கள் இருவருக்குள் ஒரு வித்தியாசமும் இல்லை. இவ்வாறிருக்கும்போது அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏன், ராமன் வேறு, ரஹீம் வேறு என வற்புறுத்த வேண்டும்? ஒருவரையொருவர் ஏன் வெறுக்க வேண்டும்?
51 ஓõ என்ன மூடத்தனமான குழந்தைகள் நீங்கள்õ நட்புறவின் பந்தங்கள் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றுசேர்க்கட்டும். பரந்த மனப்பான்மையும் தரும சிந்தனையும் உங்களுடைய மனத்தில் ஆழமாக வேர்விடட்டும்.
52 வாதப்பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டா; ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டா. அவரவர் அவரவருடைய க்ஷேமத்தைப்பற்றியே விசாரம் செய்யட்டும். ஸ்ரீஹரி நம்மைக் காப்பார்.
53 யோகமும் யாகமும் தவமும் ஞானமும் ஸ்ரீஹரியை அடைவதற்குண்டான வழிகள். இவையனைத்தும் ஒருவரிடம் இருந்தாலும், இதயத்தில் இறைவன் இல்லாவிட்டால் அவருடைய பக்தியும் வீண்; வாழ்க்கையும் வீண்.
54 ''யாராவது உனக்கு அபகாரம் (கெடுதல்) செய்தாலும், அவர்களுக்குப் பிரதிகாரம் (எதிரடி) செய்ய வேண்டா; உபகாரமே செய்ய வேண்டும்.ஃஃ இதுதான் பாபாவின் உபதேச சாரம்.
55 ஒருவருடைய உலகியல் முன்னேற்றத்துக்கும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் இந்த உபதேசம் நன்மையளிக்கக்கூடியது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், மகளிர், பிற்படுத்தப்பட்டோர், அனைவருமே இந்த நேர்வழிப் பாதையில் நடக்கலாம்.
56 கனவில் கண்ட ராஜ்ஜிய வைபவங்கள் விழித்துக்கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று பாபா கூறுவார்.
57 எவர் 'இவ்வுலகவாழ்வின் சுகமும் துக்கமும் மாயைஃ என்னும் பிரபஞ்ச தத்துவத்தை ஏற்றுக்கொண்டு வாழ்கிறாரோ, அவர் சுகதுக்கப் பிரமையைத் தம்முடைய வாழ்நெறியால் வென்று முக்தியடைகிறார்.
58 சிஷ்யர்களின் உலக பந்தங்களைக் கண்டு அவருடைய இதயம் கருணையால் துடித்தது. அவர்களை எப்படி தேஹாபிமானத்தை விட்டுவிட வைப்பது என்பதுபற்றியே பாபா இரவுபகலாகச் சிந்தித்தார்.
59 'யானும் இறைவனும் ஒன்றேஃ என்னும் பா(ஆஏஅ)வமும் அகண்டமான ஆனந்தநிலையும் உருவெடுத்து வந்து, எந்நேரமும் நிர்விகல்ப ஸமாதியில் திளைத்தது. அவரிடம் பற்றற்ற நிலையும் துறவும் அடைக்கலம் புகுந்தன.
60 வீணையையும் தாளத்தையும் கையிலேந்தி, பரிதாபமான தோற்றத்துடன் வீடுவீடாக அலைந்து கைநீட்டுவது என்பது பாபாவுக்கு என்றுமே தெரியாது.
61 மக்களைப் பிடித்து, அவர்களுடைய காதில் பலவந்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை ஓதி, அவர்களை சிஷ்யர்களாக மாற்றி, பணத்திற்காக அவர்களை ஏமாற்றும் குருமார்கள் எத்தனை எத்தனையோõ
62 தாங்களே அதர்மநெறியில் வாழ்ந்துகொண்டு, சிஷ்யர்களுக்கு தருமநெறியை போதனை செய்வர். எப்படி இந்த குருமார்கள் தங்கள் சிஷ்யர்களை ஸம்ஸாரக் கடலைத் தாண்டவைத்து, ஜனனமரணச் சுழருந்து விடுதலை பெற்றுத்தர முடியும்?
63 தம்முடைய தருமநெறிப் பெருமையை விளம்பரம் செய்துகொள்ள வேண்டும், உலகத்தை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் வெற்றிபெற வேண்டும், என்ற எண்ணமே இல்லாத தனித்தன்மை கொண்ட மூர்த்தியாக ஸாயீ விளங்கினார்.
64 தேஹாபிமானத்திற்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் பக்தர்களின்மீது அத்தியந்தமான பிரீதியைச் செலுத்தும் மாண்புடையவர் இந்த ஸாயீ.
65 குருமார்களில் இரண்டு வகையுண்டு; 'நியதஃ (இறைவனால் நியமிக்கப்பட்டவர்), 'அநியதஃ (இறைவனால் அவ்வாறு நியமிக்கப்படாதவர்). இவ்விருவகை குருமார்களின் செயல்பாட்டு முறைகளைக் கதை கேட்பவர்களுக்கு விளக்கம் செய்கிறேன்.
66 நற்பண்புகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து மனத்தைத் தூய்மைப்படுத்தி, சிஷ்யனை மோக்ஷமார்க்கத்தில் வழிநடத்துவதற்கு உண்டான வரப்பிரஸாதத்தை மாத்திரம் உடையவர் 'அநியதஃ குரு.
67 ஆனால், 'நியதஃ குருவினுடைய சம்பந்தமோ, துவைத பா(ஆஏஅ)வத்தை அழித்து, 'தத்வமஸிஃ (நீயே அதுவாக இருக்கிறாய்) என்னும் ஸாமவேத மஹாவாக்கியத்தின் பொருளை நேரிடையாக உள்ளுக்குள்ளே மலரச் செய்கிறது.
68 இம்மாதிரியான 'நியதஃ குருமார்கள் தோன்றாநிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்றனர்; பக்தர்களுடைய நன்மைக்காக உருவமெடுத்துக்கொண்டு
அவதரிக்கின்றனர். தங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று தெரியும்போது உடலை உகுத்துவிடுகின்றனர்.
69 ஸாயீ நியத பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய லீலைகளை நான் எவ்வாறு முழுமையாக விவரிக்க முடியும்? அவர் என்னுடைய புத்திசக்தியை எப்படித் தூண்டுகிறாரோ, அப்படியே இப்பிரவசனம் உருவெடுக்கும்.
70 உலகியல் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் அநேக குருமார்கள் உண்டு. ஆனால், யார் நமக்கு ஆத்மஞானத்தை அளிக்கிறாரோ, அவரே ஸத்குரு. ஸத்குருவே சம்சாரக் கடன் மறுகரையைக் காட்டமுடியும்; அவருடைய மஹிமை எண்ணத்திற்கப்பாற்பட்டது.
71 யார் பாபாவை தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்தகால, நிகழ்கால, எதிர்கால ரஹஸியங்களனைத்தும் அவர் கேட்காமலேயே அவருக்குச் சொல்லப்படும்.
72 இறைவனின் படைப்புகள் எல்லாவற்றிலும் அவனைக் கண்ட ஸாயீ, நண்பனையும் விரோதியையும் சரிசமமாகவே பார்த்தார்; எள்ளளவும் வித்தியாசம் காட்டவில்லை.
73 அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் ஒன்றுபோலவே சமமாகப் பார்த்தார். அபகாரம் செய்தவர்களுக்கும் அமுதத்தைப் பொழிந்தார். அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவருடைய சமநிலையைப் பாதிக்கவில்லை. விகற்பம் (மனக்கோணல்) அவரைத் தொடவேயில்லை.
74 அழியக்கூடிய மனித உடலை ஏற்றுக்கொண்ட நிலையிலும், அவருக்கு உடல், வீடு, வாசல் போன்ற உலகியல் பொருள்களின்மேல் பற்றேதும் இல்லை. வெளிப்பார்வைக்கு உடல் இருந்தாரே தவிர, அகமுகமாக உடன்மீது பற்றற்றே இருந்தார். அவ்வாறு யாராலாவது இருக்கமுடிந்தால், அவருக்கு அந்த ஜன்மத்திலேயே முக்தி கிடைத்துவிடும்.
75 உணவுண்ணும்போதும் நீரருந்தும்போதும் தூங்கும்போதும் ஸாயீயையே இடைவிடாது ஞாபகப்படுத்திக்கொண்டு, ஸாயீ வழிபாட்டையே தெய்வ வழிபாடாகக் கொண்டவர்களான சிர்டீ மக்கள் புண்ணியசாகள்.
76 கொட்டிலும் முற்றத்திலும் வேலை செய்யும்போதும் உரலே தானியத்தைக் குற்றும்போதும் ஏந்திரத்தில் மாவு அரைக்கும்போதும் தயிர் கடையும்போதும் அவர்களை பாபாவின் மஹிமையைப் பாடச்செய்யும் பக்தியும் பிரேமையும் புனிதமானவை; புனிதமானவை.
77 சாவகாசமாக உட்கார்ந்துகொண் டிருக்கும்போதும் சாப்பிடும்போதும் தூங்கும்போதுங்கூட, பாபாவினுடைய திருநாமம் அவர்களுடைய உதடுகளில் தவழ்ந்தது. பாபாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் அவர்கள் வழிபடவில்லைõ
78 ஓ, சிர்டீயின் மகளிர் பாபாவின்மேல் எவ்வளவு அன்பு பாராட்டினார்கள்õ அவர்களுடைய அன்பார்ந்த பக்தி எவ்வளவு இனிமையானதுõ இம்மாதிரியான தூய அன்புதான், மகிழ்ச்சிதரும் பாட்டுகளைக் கவனம் செய்வதற்குண்டான (இயற்றுவதற்குண்டான) உணர்வை ஊட்டுகிறது; பாண்டித்தியம் இங்கே செல்லாது.
79 மொழி சரளமாகவும் கருத்து வெளிப்பாடு நேரிடையாகவும் புலமையின் சாயல் ஏதுமில்லாமலும் இருந்தபோதிலும், சொற்களின் மூலமாக வெளிப்பட்ட கவிநயம், பண்டிதர்களும் தலையாட்டி ரஸிக்கும்படியாக இருந்ததுõ
80 உயர்ந்த கவிதை பரிசுத்தமான அன்பின் நேர்மையான வெளிப்பாடு அன்றோ? கேட்பவர்கள் இதை இம் மகளிரின் சொற்களில் உணர முடியும்.
81 ஸாயீபாபா விரும்பினால், சிர்டீயின் மகளிர் பாடிய எல்லாப் பாட்டுகளையும் ஒன்று சேர்த்து ஒரு தனி அத்தியாயமாகவே என்னால் செய்யமுடியும். உங்களுக்கும் இப்பாட்டுகளைக் கேட்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறும்.
82 உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால், ஸாயீயினுடைய உருவத்தில் சிர்டீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு, முதல், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டுவிடவேண்டும். பக்தியாலும் பிரேமையாலுந்தான் அவனை அறியமுடியும்.
83 சிர்டீ மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்தகாலத்தில் பழுத்து, ஸாயீ என்னும் முளை விட்டிருக்கலாம். இது சிலகாலம் கழித்து சிர்டீக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது.
84 விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.
85 புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கொடை-இந்த ஆறு மஹோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன.
86 பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாவென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றாநிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக்கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக்கொண்டார்.
87 ஆஹாõ அவருடைய கிருபைதான் என்னேõ பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய நிஜமான இயல்பை இறைவனே அறிவார்õ
88 வாக்கின் தேவதையாகிய ஸரஸ்வதியும் சொல்லத்துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலைகுனியச் செய்தன. ஸாயீ இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே பேசினார்.
89 இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது; இருப்பினும், கடமை தவறக்கூடாது என்னும் காரணத்தால் சொல்யே தீரவேண்டியிருக்கிறது.
90 பக்தர்களின்மீது கருணை கொண்ட ஸாயீ, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார், ''அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன்.--
91 ''உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசா.ஃஃ
92 ஓ, பாபா எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார்õ எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல்õ எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலைõ எவ்வளவு மரியாதைõ
93 பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
94 என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டுவிட்டது எனில், அதைக் காதுகொடுத்துக் கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்துகொள்ள வேண்டுமெனில், ஸாயீநாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் அகன்றுவிடும்.
95 ஸாயீயினுடைய அருள் பலஜன்மங்களில் செய்த தவத்தால் கிடைத்த பயன். தாகத்தால் தவிக்கும் பயணி தண்ணீர்ப்பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவதுபோல் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
96 சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியதுபோல் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபோதிலும், அவருடைய நாக்கு சுவையே அறியாததால் அவருக்கு அந்த உணர்வே கிடையாது.
97 புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றிருந்து வரும் இன்பங்களை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிக்கொள்வார்?
98 கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லை.
99 ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரம்மசரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும் தவிர வேறு எவருமே அதைப் பார்த்ததில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மசரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறெவரைச் சொல்லமுடியும்?
100 தாயே பிறவி உறுப்புகளைப் பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப்பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரம்மசரியமும் அவ்வாறானதே; பூர்ணமானது; அபூர்வமானது.
101 அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக்கொண் டிருந்தார். சிறுநீர் கழிப்பதைத் தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக்கோளங்களைப் போல, இருக்கவேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை.
102 பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்தவிதமான ஆசையும் இல்லை; ஆசைகள்பற்றிய விழிப்புணர்வே இல்லைõ
103 ஸத்துவம், இராஜஸம், தாமஸம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பதுபோல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தது; 'செயல் புரிபவரைப்ஃ
104 பற்றற்றவராகவும் தூயஞானத்தின் உருவமாகவும் தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார்.
105 உலகவிவகாரங்களே பிரம்மமாகத் தெரியும் முக்திநிலையில் அவர் இருந்தார். பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை அது.
106 தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ1 ஆசனத்திருந்து எழுந்திருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
107 இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை; பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள்புரிவதற்கென்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மஹிமை இவ்வாறே.
108 கருணாமூர்த்தியான ஞானிகள் மக்களுக்கு அருள்புரிவதற்காகவே இப்பூவுலகில் அவதாரம் செய்கின்றனர். பிறருக்கு நன்மை செய்வதற்காகவே பூரண கிருபையுடன் செயல்படுகின்றனர்.
109 சிலர் ஞானிகளுடைய மனம் வெண்ணெயைப்போல் இளகியது என்று கூறுகிறார்கள். வெண்ணெய் சூடுபடுத்தினால்தான் உருகுகிறது; ஞானிகளுடைய மனமோ, மற்றவர்கள் துன்பத்தினால் தாபமடைவதைக் கண்டே உருகிவிடுகிறது.
110 நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துக் கொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு?
111 அம்மாதிரியான சிம்மாசனம் அவருக்கு ஒரு தொந்தரவாகத்தான் இருக்க முடியும். இருப்பினும், அதை பக்தர்கள் பின்னாருந்து அவருக்கடியில் திணிக்க முயன்றால், அவர்களுடைய அன்பையும் பக்தியையும் மதிக்கும் வகையில், அதை எதிர்த்து அவர் போராடப்போவதில்லை.
112 நிர்மலமான சிர்டீ என்னும் நீர்நிலையில் ஓர் அழகான தாமரை பாபாவின் ரூபத்தில் பூத்தது. விசுவாசமுள்ளவர்கள் அதன் மணத்தை மூக்கால் நுகர்ந்து ஆனந்தமடைந்தனர்; நம்பிக்கையும் பாக்கியமுமற்ற தவளைகள் சேற்றிலும் சகதியிலுமே உழன்றுகொண் டிருந்தன.
113 பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ விதிக்கவோ இல்லை. பக்தர்கள் காதில் மந்திரங்கூட ஓதவில்லை.
114 மேலெழுந்தவாறு பார்க்கும்போது அவர் மற்றவர்களைப் போலவே பழக்கவழக்கங்கள் கொண்டவர் போன்று தெரிந்தார்; ஆனால், அகமுகமாக அவர் முற்றிலும் வேறுபட்டிருந்தார். உலகியல் செயல்பாடுகளில் அவர் மிக்க கவனமுடையவராகவும் கறாராகவும் இருந்தார். இது விஷயத்தில் அவருடைய திறமைக்கு ஈடு எவரிடமும் கிடையாதுõ
115 பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
116 ஸாயீ மஹராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
117 மஹராஜ் தன்னிஷ்டமாக எவ்விடத்திற்கு நடந்து வந்தாரோ, அது மஹா புண்ணியம் செய்த புனிதமான இடம். பூர்வ ஜன்மங்களில் ஏகமாகப் புண்ணியம் சேர்த்திராவிட்டால் இப்பொக்கிஷம் கிடைப்பதரிது.
118 சுத்தமானதும் பலமானதுமான கொட்டை, ரஸமுள்ள ருசியான பழங்களைக் கொடுக்கும் என்பது பழமொழி; இது சிர்டீ வாழ் மக்களால் பரீக்ஷை செய்து பார்க்கப்பட்டுவிட்டது.
119 பாபா ஹிந்துவுமல்லர்; முஸ்லீமுமல்லர்; வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். ஆனால், அவரால் உலகியல் துன்பங்களை நிர்மூலமாக அழிக்க முடியும்.
120 எல்லையற்ற, முடிவேயில்லாத, பரந்த வானத்தைப் போன்ற பாபாவினுடைய வாழ்க்கைச் சரித்திரம் எவருக்கும் புரியாதது. அவரைத் தவிர வேறு யாரால் அதைப் புரிந்துகொள்ள முடியும்?
121 மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது, ஆலோசிப்பது. அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது. புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப்பற்றியே சிந்திக்கும்; குருவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் குருவைப்பற்றியே சிந்திக்கும்.
122 எல்லா இந்திரியங்களையும் செவிப்புலனில் ஒன்றுசேர்த்து குருவினுடைய மஹிமையை நீங்கள் கேட்டபோது, அதுவே குருவைப்பற்றிய ஸஹஜமான சிந்தனையாகவும் ஸஹஜமான கீர்த்தனையாகவும் ஸஹஜமான பஜனையாகவும் அமைந்துவிட்டது.
123 பஞ்சாக்னி1 தவம், யாகம், மந்திரம், தந்திரம், அஷ்டாங்க யோகம் -- இந்த வழிபாட்டு முறைகள் அனைத்தும் உயர்குலத்து ஆண்களுக்கே உரியது. மற்றவர்களுக்கு இவற்றால் என்ன பிரயோஜனம்?
124 ஞானிகளின் காதைகள் அவ்வாறு அல்ல; அவை சகல ஜனங்களையும் நல்வழிப்படுத்தும். உலக வாழ்வின் பயங்களையும் இன்னல்களையும் அழித்துவிடும். உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
125 அக்காதைகளைக் கேட்பதாலும் சிந்திப்பதாலும் மனமொன்றிப் படிப்பதாலும் பரிசீலனை செய்வதாலும் தியானிப்பதாலும் உயர்குலத்து ஆண்கள் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரும் மகளிரும்கூடத் தூய்மையடைவர்.
126 பிரேமை சிறிதும் இல்லாத மனிதனே இல்லை. ஒருவருக்கு ஒன்றின்மேல் பிரேமை; மற்றவருக்கு வேறொன்றின்மேல் பிரேமை. எதைப் பிரேமை செய்கிறார்கள் என்பதில்தான் மக்கள் வேறுபடுகிறார்கள்õ
127 சிலருக்கு சந்ததியின்மேல் பிரேமை. மற்றவர்களுடைய பிரேமை செல்வத்தின்மேல், புகழின்மேல், ஸம்பத்துகளின்மேல், உடன்மேல், வீட்டின்மேல், உலகியல் கீர்த்தியின்மேல் இருக்கலாம். சிலருக்கு அறிவை விருத்தி செய்துகொள்வதில் பிரேமை.
128 ஒருவர் விஷயசுகங்களில் தாம் செலுத்தும் பிரேமை அனைத்தையும் ஒன்றுசேர்த்து வடித்து, இறைவனின் பாதங்கள் என்னும் அச்சில் ஊற்றிவிட்டால், அது பக்தியாக மலரும்.
129 ஆகவே, உம்மிடம் இருக்கும் உலகியல் பொருள்கள் அனைத்தையும் ஸமர்ப்பித்துவிட்டு, உம்மையே ஸாயீபாதங்களுக்கு சரணமாக்கிவிடுங்கள். அவர் உம்மிடம் கிருபை காட்டுவார்; இது ஒரு சுலபமான உபாயம்.
130 மக்கள் இம்மாதிரியான சொல்பமான சாதனைகளால் பெருலாபத்தை அடையலாம். நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்த உதாசீனம்?
131 'மிகப் பெரிய லாபங்களை அல்பமான சாதனைகளால் பெறமுடியுமென்றால், பொதுவாக ஏன் மக்கள் இதில் ஈர்ப்பு இல்லாமல் அசிரத்தையாக இருக்கிறார்கள்?ஃ என்று கதை கேட்பவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கையே.
132 அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது. இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்துவிட்டால், கதை கேட்கவேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் உடனே எழும்.
133 ஆகவே ஸாயீயை சரணடையுங்கள்; இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். இக் கதையைக் கேட்கவேண்டுமென்ற விருப்பமும் ஆவலும் எழும்; சுலபமான ஆன்மீக ஸாதனையை அடைந்தவர்களாவீர்கள்.
134 குரு சரித்திரத்தின்1 ஸத் ஸங்கத்தை நாடுங்கள்; உலகியல் சங்கிகளிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். இதில்தான் உங்களுடைய ஆன்மீக முன்னேற்றமே இருக்கிறது. இதைப்பற்றி யாதொருவிதமான சந்தேகமும் வேண்டா.
135 உங்களுடைய சாதுரியமான வாதங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். அதற்குப் பதிலாக, ஸாயீ ஸாயீ என்று ஸ்மரணம் (நினைத்தல்) செய்யுங்கள்; அக்கரைக்கு எவ்வளவு சுலபமாக நீந்திச் செல்கிறீர்கள் என்று பாருங்கள்õ இதைப்பற்றி எந்த சந்தேகமும் வேண்டா.
136 இவை என்னுடைய வார்த்தைகளல்ல; ஸாயீயினுடைய திருவாய்மொழியாகும். இவை வெறும் வார்த்தைகளல்ல; எடை போடவும் முயற்சி செய்ய வேண்டா.
137 துர்ச்சங்கம் என்றும் கெடுதலையே விளைவிக்கும்; நீங்கள் அறியாமலேயே உங்களைத் தடம் புரளச் செய்யும்; மஹா துக்கங்களின் இருப்பிடம்; எல்லா சுகங்களையும் விரட்டிவிடும்.
138 ஸத்குரு ஸாயீநாதரைத் தவிர வேறு யாரால் அம்மாதிரியான துர்ச்சங்கத்தினால் நமக்கு விளையக்கூடிய கெடுதல்களை விலக்க முடியும்?
139 கருணையால் விளைந்து, ஆதங்கத்தினால் வெளிவந்த, ஸாயீயின் திருவாய்மொழிகளை சிரத்தையுடன் பத்திரப்படுத்துங்கள். பக்தர்களேõ இது துர்ச்சங்கத்தால் விளையக்கூடிய இன்னல்கள் வராது தடுக்கும்.
140 சிருஷ்டி செய்யப்பட்ட இவ்வுலகத்தைக் கண்களால் பார்த்தவுடனேயே, மனம் சௌந்தரியத்தினால் ஈர்க்கப்பட்டு ரமித்துப்போகிறது. அதே கண்களை அகமுகமாகச் செலுத்தினாலோ, மனம் ஞானிகளின் ஸத்ஸங்கத்தில் ஈடுபடுகிறது.
141 நம்முடைய அஹங்காரத்தை நிர்மூலமாக அழிக்குமளவுக்கு ஸத்ஸங்கம் மஹிமையுடையது. வேறு எந்த மார்க்கத்திற்கும் ஸத்ஸங்கத்தைப்போல சாதனை புரியும் திறமை கிடையாது.
142 ஞானிகளின் ஸங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள்; மற்ற ஸங்கங்கள் அனைத்துமே குறையுடையவை. ஸத்ஸங்கமே மருவில்லாதது; எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூய்மையானது.
143 ஸத்ஸங்கம் உங்களை உடன்மேல் வைத்த ஆசையிருந்து விடுவிக்கும். ஸம்ஸார பந்தங்களிருந்து விடுதலை அளிக்கக்கூடிய அளவுக்கு பலமுடைய ஸத்ஸங்கத்தில் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும்.
144 ஸத்ஸங்கம் கிடைக்கும் பாக்கியம் இருந்தால், உபதேசங்கள் ஸஹஜமாக வந்து சேரும். அந்தக் கணமே துர்ச்சங்கம் மறைந்தோடிவிடும். மனம் ஸத்ஸங்கத்தில் மூழ்கிவிடும்.
145 உலகவிஷயங்களில் விரக்தி ஏற்படுவதே ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு உபாயமாகும். ஸத்ஸங்க நாட்டமென்னும் பலமான உந்துதல் இன்றி, 'நான் யார்ஃ என்பதைக் கண்டுபிடிக்கமுடியாது.
146 சுகத்திற்குப் பிறகு துக்கம் விளைகிறது; துக்கத்திற்குப் பிறகுதான் சுகம் விளைகிறது. ஆனால், மானிடன் எப்பொழுதும் சுகத்திற்கு இன்முகம் காட்டுகிறான்; துக்கத்திற்குக் கடுமுகம் காட்டுகிறான்.
147 வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும். ஞானிகளுடைய சங்கம்தான் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டுசெல்ல முடியும்.
148 ஸத்ஸங்கம் தேஹாபிமானத்தை நாசம் செய்கிறது. ஸத்ஸங்கம் ஜனன மரணச் சுழலை உடைக்கும். ஸத்ஸங்கம் உலக பந்தங்களைப் பட்டென்று அறுத்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது.
149 உத்தமமான கதியை அடைவதற்கு ஸத்ஸங்கமே புனிதத்தை அளிக்கக்கூடியது. வேறெதிலும் கவனம் செலுத்தாது ஞானிகளை சரணடைந்துவிட்டால், நிஜமான விச்ராந்தி கிடைக்கிறது.
150 இறைவனை வணங்காதவர்களையும் நாமத்தைச் சொல்லாதவர்களையும் நம்பிக்கையும், பக்தியும் இல்லாதவர்களையும் பஜனை பாடாதவர்களையும் இறைநாட்டமுடையவர்களாகச் செய்வதற்கே ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்கிறார்கள்.
151 கங்கை, பாகீரதி, கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, காவிரி, நர்மதை ஆகிய புண்ணிய நதிகள் ஸாதுக்களுடைய பாதங்களைத் தொடவேண்டுமென்று ஆவல் கொண்டு, அவர்கள் ஸ்நானம் செய்வதற்கு வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
152 இப்புண்ணிய நதிகள் உலகத்து மக்களுடைய பாவங்களையெல்லாம் அடித்துச் சென்றாலும், தங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்துகொள்ள ஸாதுக்களின் பாதங்களையே நாடுகின்றன.
153 பல ஜன்மங்களில் செய்த பாக்கியங்களாலேயே நாம் ஸாயீயின் புனிதமான பொன்னடிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஜனனமரணச் சுழல் நிறுத்தப்பட்டு விட்டது. பிறவிப்பயம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது.
154 நன்மக்களான வாசகர்களேõ சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு ஏற்கெனவே கேட்ட கதைகளை அசை போடுவோம். மேற்கொண்டு பிரவசனம் பிறகு தொடரும்.
155 ஹேமாட் ஸாயீயிடம் சரணடைகின்றேன். நான் அவருடைய பாதரக்ஷைகளே. மேலும் மேலும் அவருடைய காதைகளைச் சொல்க்கொண்டே போவேன்; அதுவே, எனக்கு மேலும் மேலும் சுகத்தை அளிக்கும்.
156 ஆஹாõ என்ன கவர்ச்சியான உருவம் ஸாயீ மஹராஜுக்குõ மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு, பக்தர்களுடைய நல்வாழ்வையே மனத்திற்கொண்டு அவர்களுக்கு உதீ பிரஸாதம் விநியோகிப்பார்.
157 எவர் 'இந்த உலகமே ஒரு மாயைஃ என்றறிந்தவரோ, எவர் பிரம்மானந்தத்தில் இடைவிடாது லயிப்பவரோ, எவர் முழுமையாக விகசித்த (மலர்ந்த) மலர் போன்ற மனம் படைத்தவரோ, அவர் முன்னே நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
158 எவர் ஞானமென்னும் மையைக் கண்களில் தடவி பிரம்ம ஞானத்தை வழங்குகிறாரோ, அந்த மஹிமை வாய்ந்த ஸாயீயை நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
159 அடுத்த அத்தியாயம் இதைவிட மேன்மையாக இருக்கும். செவிகளின் வழியே உங்களுடைய இதயத்தில் புகுந்து எல்லா மலங்களையும் போக்கி, இதயத்தைப் புனிதமாகச் செய்துவிடும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'ஸமர்த்த ஸ்ரீ ஸாயீயின் மஹிமைஃ என்னும் பத்தாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.