Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 9

9. பாபாவுக்குக் கீழ்ப்படியாததன் விளைவுகள் -
பாபா பிச்சை எடுத்தது ஏன்?
இல்லறத்தோரின் ஐந்து பாவங்களும் (பஞ்சஸூனா) பாவநிவிர்த்தியும் - தர்கட் தம்பதியின் பக்தி
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 முந்தைய அத்தியாயத்தின் கதையைத் தொடரும் விதமாக, பாபாவின் அனுமதியின்றித் தம் தம் இல்லங்களுக்குத் திரும்பிச்செல்ல முயன்றவர்கள், எவ்வாறு சங்கடங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார்கள் என்பதை விவரிக்கிறேன்.

2 அதுபோலவே, இல்லறத்தோரின் பஞ்சஸூனா போன்ற பாவங்களை நிவிர்த்தி செய்யும் விதமாகவும் மக்களுக்கு நன்மையளிக்கும் விதமாகவும் பாபா மதுகரீ1 பிச்சை எடுத்துப் பிழைத்ததையும் சொல்கின்றேன்.

3 மேலும், படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவி­ருந்து புல்பூண்டு வரை ஸாயீ எவ்வாறு எங்கும் வியாபித்துள்ளார் என்பதையும், ஸாயீயே அருள்கூர்ந்து, இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை நம்முடைய மனத்தில் பதியுமாறு செய்ததையும் சொல்கின்றேன்.

4 ஆகவே, என்னிடம் கதை கேட்கும் மக்களேõ நீங்கள் கவனத்துடன் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். ஏனெனில், இப்புனிதமான கதைகளை சிரத்தையுடன் கேட்டால் க்ஷேமமடைவீர்கள்.

5 சிர்டீக்குச் செல்லும் புனிதப் பயணம் ஒரு லக்ஷணத்தை உடையது. பாபாவினுடைய அனுமதியின்றிப் புனிதப் பயணி எவரும் வீடு திரும்ப முயன்றால், அவர் விக்கினங்களையே எதிர்கொள்வார்.

6 வீடு திரும்ப அனுமதி கிடைத்தவர் சிர்டீயில் மேற்கொண்டு தங்கினாலும், சிரமங்களை அனுபவிப்பார். இதை எல்லாருமே நடைமுறையில் பார்த்துவிட்டனர்.

7 பாபாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் திரும்பும் வழியில் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. பலர் திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டார்கள்; அவ்வனுபவம் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஞாபகம் இருந்தது.

8 உணவுண்ட பிறகே செல்லும்படி சொல்லப்பட்ட பின்னும், பசியுடன் அவசரமாக ஊருக்குக் கிளம்பியவர்கள் ரயிலைக் கோட்டைவிட்டதுமல்லாமல், பசியாலும் எரிச்சலாலும் வருந்தினார்கள். இது பல பக்தர்கள் தாங்களே அனுபவித்தவாறு. (மூலநூல் ஆசிரியரும் ஒருமுறை இவ்வனுபவம் பெற்றார்).

9 ஒரு முறை தாத்யா கோதே பாடீல் கோபர்காங்வ் வாரச்சந்தைக்குப் போக விரும்பினார்; ஆகவே, மசூதிக்கு வந்தார்.

10 குதிரைவண்டியை வெளியே நிறுத்திவிட்டு வந்து, பாபாவை தரிசனம் செய்தார். அனுமதி பெறும் பாவனையில் பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டுக் கிளம்ப முயன்றார்.

11 திரும்பத் திரும்ப பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெறுவதைத் தவிர்க்க முயன்றார்கள், அல்லது தள்ளிப்போட்டார்கள். ஆனால், பாபாவுக்கு நல்லநேரம் எது, கெட்டநேரம் எது என்பது தெரியும். தாத்யா வெளியேற அவசரப்பட்டதைக் கண்ட பாபா கூறினார், ''கொஞ்சம் பொறுõ--

12 ''சந்தைக்குப் போவது இருக்கட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம்õ கிராமத்தை விட்டு வெளியே போகவேண்டா.ஃஃ ஆயினும், தாத்யா கட்டாயப்படுத்துவதைக் கண்டு அவர் சொன்னார், ''சாமாவைக் கூட்டிக்கொண்டு போ.ஃஃ

13 'சாமாவை எதற்காகக் கூட்டிக்கொண்டு போகவேண்டும்ஃ என்று தமக்குள்ளேயே நினைத்துக்கொண்டு, பாபாவினுடைய பரிந்துரையை அலக்ஷியம் செய்துவிட்டு, தாத்யா சந்தைக்குப் போவதற்காகப் போய் வண்டியில் உட்கார்ந்தார்.

14 இரண்டு குதிரைகளில் ஒன்று அதிவேகமானது; முந்நூறு ரூபாய் விலை. ஸாவூல் விஹீர் கிராமத்தை (சிர்டீயி­ருந்து 3 மைல்) நெருங்கியபோது கட்டுக்கடங்காமல் நாலுகால் பாய்ச்சலாக ஓடியது.

15 சந்தைக்குச் சடுதியில் செல்லக்கூடிய, சவுக்கையே அறியாத குதிரை, கால்தடுக்கிக் கீழே விழுந்தது. குதிரைவண்டி தடாலென்று சாய்ந்தது. தாத்யா கீழே விழுந்ததால் இடுப்புக்குமேல் சுளுக்கிக்கொண்டது.

16 ஐயோõ என்ன சந்தைõ என்ன சரக்குகள் வாங்குதல்õ தாத்யாவுக்கு உடனே தம் அன்னை ஸாயீயின் ஞாபகம் வந்தது. 'ஸாயீயினுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம்; நடந்தது நடந்துவிட்டது; இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாதுஃ என்று தாத்யா வருத்தப்பட்டார்.

17 இன்னொரு சமயத்தில் இதேபோன்ற நிகழ்ச்சி நடந்தது. இம்முறை தாத்யா கோல்ஹார் கிராமத்திற்குச் செல்ல ஆயத்தம் செய்தார். குதிரைகளை வண்டியில் பூட்டிக்கொண்டு முழுத் தயார் நிலையில், பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக பாபாவின் பாதங்களை வணங்கினார்.

18 ''சீக்கிரமாகத் திரும்பிவிடுகிறேன்ஃஃ என்று சொல்­விட்டு, பாபாவினுடைய அனுமதியைத் தெளிவாகப் பெறாமலேயே கிளம்பிவிட்டார். என்ன ஆயிற்று என்று இப்பொழுது கேளுங்கள்.

19 குதிரைவண்டி சிறியதும் லேசானதுமானது. குதிரைகள் கட்டுப்பாடில்லாமல் பள்ளம் படுகுழிகளைக்கூடப் பார்க்காமல் மூர்க்கத்தனமாக ஓடின. தாத்யாவினுடைய உயிர் மயிரிழையில் தொங்கியது.

20 ஆனால், ஸாயீயினுடைய அருள் அவரைக் காப்பாற்றிவிட்டது. நல்லகாலமாக, பெரிய ஆபத்து ஏதும் நேராமல், வண்டி ஒரு கருவேலமரத்தின்மேல் மோதி அங்கேயே உடைந்து விழுந்துவிட்டது.

21 அவ்விதமாகவே ஒருசமயம், பெருந்தகையும் கனவானும் கிருஹஸ்தருமான ஓர் ஆங்கிலேயர், மனத்தில் ஏதோ ஒரு நிச்சய நோக்கத்துடன் பாபாவை தரிசனம் செய்வதற்காக பம்பாயி­ருந்து வந்தார்.

22 சாந்தோர்க்கரிடமிருந்து மாதவராவுக்கு விலாஸமிடப்பட்ட சிபாரிசுக் கடிதம் ஒன்று கொண்டுவந்தார். தங்குவதற்கு ஒரு கூடாரம் கேட்டு வாங்கிக்கொண்டு அதில் சுகமாகத் தங்கினார்.

23 பாபாவினுடைய விருப்பமின்றி, மசூதியின் படிகளில் ஏறித் திருப்தியாக அவரை தரிசனம் செய்வதென்பது முடியாத காரியம் என்பது எல்லாருக்குமே தெரியும்.

24 மூன்று முறைகள் அந்த கனவான் மசூதியின் படிகளில் ஏற முயன்றார்; ஆயினும், அம்முயற்சிகள் வீண் போயினõ வந்தவர் பெரிதும் மனமுடைந்துபோனார்.

25 மசூதியின் படிகளில் ஏறி, மண்டியிட்டு வணங்கி, பாபாவின் கைகளை முத்தமிட்டுவிட்டுச் சிறிதுநேரம் அங்கு அமரவேண்டும் என்னும் ஆவல் அவருடைய மனத்தின் அடித்தளத்தில் இருந்தது.

26 அவருடைய ஆவல் அவ்வாறு இருந்தாலும், பாபா அவரை அந்த நேரத்தில் மசூதிக்குள் வந்து தம்மருகில் உட்கார அனுமதிக்க விரும்பவில்லை.

27 அவர் ஸபாமண்டபத்தில் இருக்கவேண்டுமென்று பாபா விரும்பினார். விருப்பமிருந்தால் அங்கிருந்தே தரிசனம் செய்யட்டுமென்றும் நினைத்தார்.

28 ஆகவே, ஆங்கிலேயர் எழுந்து முற்றத்திற்கு வந்து, வீடு திரும்பிப் போவதற்கு விடைபெற்றுக்கொள்ள முயன்றார். பாபா அவரிடம் கூறினார், ''ஏன் இந்த அவசரம்? நீர் நாளைக்குப் போகலாமேஃஃ.

29 சுற்றியிருந்த மக்களும் அவரைப் போகவேண்டாம் என்று பலவிதமாக மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். பாபாவின் அனுமதியின்றி வீடு திரும்பியவர்கள் எவ்விதம் வருத்தப்பட்டனர் என்பதையும் எடுத்துக் கூறினர்.

30 ஆனால், எவருமே விதியை எதிர்த்துச் செயல்படமுடியாதுõ அவர் அதை ஒப்புக்கொள்ளாது, அனுமதியில்லாமலேயே கிளம்பிவிட்டார். சங்கடங்களும் சோதனைகளும் எதிர்கொண்டிருந்தன.

31 ஆரம்பத்தில் குதிரைவண்டி ஒழுங்காகத்தான் ஓடியது. ஆனால், பின்னர்க் குதிரைகள் தடம்மாறி ஓட ஆரம்பித்தன. ஸாவூல் விஹீர் கிராமத்தைத் தாண்டிச் சிறிது தூரம் சென்றபோது, திடீரென்று ஒரு சைக்கிள்வண்டி குறுக்கே வந்தது.

32 ஆங்கிலேயர் வண்டியில் பின்பக்கத்தில் உட்கார்ந்துகொண் டிருந்தார். முன்னால் கட்டப்பட்டிருந்த குதிரைகளோ, திடீரென்று ஏற்பட்ட தடங்கலால், மிரண்டு ஓடின. ஆங்கிலேயர் நிலைதடுமாறிப் பாதையின் குறுக்கே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.

33 பெரும் பிரயத்தனம் செய்து குதிரைவண்டி நிறுத்தப்பட்டது. பாதையில் இழுத்துக்கொண்டு போகப்பட்டவர், தூக்கி நிறுத்தப்பட்டு வண்டியில் உட்காரவைக்கப்பட்டார். குதிரைவண்டி மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தது.

34 ஐயகோõ சிர்டீ ஒரு பக்கம் இருக்க, பம்பாய் மற்றொரு பக்கம் இருக்க, கோபர்காங்வி­ருந்த மருத்துவமனைக்குக் குதிரைவண்டி சென்றதுõ

35 பாபாவினுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாத பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ததுபோல, குற்றவுணர்ச்சியால் தம்மைத்தாமே நொந்துகொண்டு, ஆங்கிலேயர் சில நாள்கள் அம்மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது.

36 ஜனங்களுக்கு இம்மாதிரியாகக் கணக்கற்ற அனுபவங்கள் இருந்தன. அதன் விளைவாக, இம்மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு சந்தேகமும் பயமும் ஏற்பட்டது. பாபாவினுடைய ஆக்ஞைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொண்டார்கள்; கீழ்ப்படியாமல் நடப்பதற்கு ஒருவருக்குமே தைரியம் இருக்கவில்லை.

37 சிலசமயங்களில் வண்டியின் சக்கரம் கழன்றோடியது. சிலசமயங்களில் குதிரைகள் சோர்ந்துபோயின; ரயில்கள் தவறவிடப்பட்டன. மக்கள் பட்டினிகிடக்கும்படியும் விரக்தியில் மனம் புழுங்கிக் குமுறும்படியும் நேர்ந்தது.

38 அவருடைய ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்கள் ரயிலைத் தவறவிடாது நேரத்தில் பிடித்தார்கள்; சிலசமயங்களில் ரயில்கள் நேரம் தவறி அவர்களுக்கு சௌகரியமாக வந்தனõ இனிமையாகவும் சௌகரியமாகவும் பிரயாணம் செய்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் அவர்கள் மறக்கவில்லை.

39 பிச்சையெடுத்துப் பிழைப்பதை பாபா ஏன் பல வருடங்களுக்கு வாழ்நெறியாகக் கொண்டார் என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், இந்த விவரணத்தைக் கேளுங்கள்.

40 பாபாவினுடைய வாழ்நெறியையும் நடத்தையையும்பற்றி முழுமையில் யாராவது சிந்தித்தால், பிச்சை எடுத்துப் பிழைத்ததே பாபாவுக்கு மிக்க ஒப்பிதம் என்பது விளங்கும். அவ்வாறு செய்ததால், சிர்டீ வாழ் மக்களுக்கு, இல்லறத்தோருக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்கு நல்வாய்ப்பளித்தார். அவர்களுடைய நன்மைக்காகச் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆனந்தமும் அளித்த நற்செயலாகும் அது.

41 வேறெதிலும் ஈடுபடாத விசுவாசத்துடன், மனம், வாக்கு, உடல், செல்வம், அனைத்தையும் ஸாயீ பாதங்களில் ஸமர்ப்பணம் செய்துவிடுபவரே பாபாவுக்கு அத்தியந்த (மிக நெருங்கிய) பக்தராகிறார்.

42 இல்லறத்தோர் தாம் சமையல் செய்யும் உணவில் ஒரு சிறிய பகுதியை தினமும் பிரம்மசாரிகளையும் ஸந்நியாஸிகளையும் நினைத்துக்கொண்டு, ஹோமத்தில் (புனித அக்கினியில்) இடவேண்டும்.

43 அவ்வாறு செய்யத் தவறிவிட்டு உணவுண்டால், அதற்குப் பிராயச்சித்தமாக மனம், வாக்கு, செயல் மூன்றையும் தூய்மைப்படுத்திக்கொள்ள, சாஸ்திர விதிப்படி சாந்திராயண1 விரதம் மேற்கொள்ளவேண்டும்.

44 ஸந்நியாஸிகளும் பிரம்மசாரிகளும் சமையல் செய்யவேகூடாது. சமையல் செய்யும்படி நேர்ந்துவிட்டால், அவர்களும் நிச்சயமாகச் சாந்திராயண விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

45 அவர்களுக்கு உணவளிக்கும் கடமையை சாஸ்திரங்கள் இல்லறத்தாரிடம் ஒப்படைத்திருக்கின்றன. ஸந்நியாஸிகள் வயிறு வளர்ப்பதற்காக எத்தொழிலையும் செய்வதில்லை.

46 பாபா இல்லறத்தாரும் அல்லர்; வானப்பிரஸ்தரும்2 அல்லர்; அவர் பால பருவத்திலேயே உலகத்தைத் துறந்த பிரம்மசாரி. அம்மாதிரியான ஒருவருக்குப் பிச்சை எடுத்துப் பிழைப்பதே மிக்க உகந்தது.

47 அகில உலகங்களையும் தம்முடைய வீடாகக் கருதிய பாபா, தாமே வாஸுதேவனும் விசுவம்பரனும் (உலகத்தை ஆடையாக அணிந்தவன்) என்பதையும், தாமே அழிவில்லாத பிரம்மம் என்பதையும் உறுதியாக அறிந்திருந்தார்.

48 உலகமே ஒரு குடும்பம் என்று நினைப்பவரே பிச்சை எடுத்துப் பிழைப்பதற்குப் பூரணமான அதிகாரம் பெற்றவர். மற்றப் பிச்சைக்காரர்கள் இதைக் கேவலமான செய்கையாகவும் பரிஹாஸத்திற்குரியதாகவும் செய்துவிடுகின்றனர்.

49 முதலாவதாக, வம்ச விருத்தி செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசையை விட்டுவிட வேண்டும். அடுத்ததாகச் செல்வத்தின்மீது ஆசையையும் புகழ்மீது ஆசையையும் விட்டுவிட வேண்டும். இம்மூன்று ஆசைகளையும் அறவே விட்டுவிட்டவனே பிச்சை எடுத்துப் பிழைப்பதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

50 இல்லையெனில், ''ஓடேந்திப் பிழைப்பது மானமற்ற செயல்ஃஃ என்னும் துகாராமின் பாட்டு, ஸாரமில்லாததாகவும் அர்த்தமில்லாததாகவும் ஆகிவிடும்.

51 இளையோரும் முதியோரும் சிறியவரும் பெரியவரும் ஸமர்த்தஸாயீ எவ்வளவு பெரிய ஸித்தர் என்பதை நன்கு அறிந்திருந்தனர். உலகியல் எதிர்பார்ப்புகளிலும் ஆசைகளிலும் கட்டுப்பட்ட நாம்தான், அவருடைய புனிதமான பாதங்களில்மேல் வைக்கும் பக்தியில் உறுதியில்லாமல் இருக்கிறோம்.

52 எந்த ஐந்து யக்ஞங்களைச்1 செய்யாமல் இல்லறத்தோர் உணவருந்தக்கூடாதோ, அந்த ஐந்து யக்ஞங்களை பாபா சிர்டீயில் தினமும் நடத்திவைத்தார். இவ்விதமாக சிர்டீ மக்கள் சமைத்த உணவு புனிதமாகியது.

53 ஒவ்வொரு நாளும், இல்லறத்தோர் அதிதிக்கு (எதிர்பாராத விருந்தினருக்கு) முத­ல் உணவளிக்க வேண்டிய கடமையை நினைவுறுத்தும் வகையில், அவர் தினமும் ஐந்து வீடுகளுக்குச் சென்றார். வீட்டில் உட்கார்ந்தவாறே இப்பாடத்தைக் கற்றுக்கொண்ட கிருஹஸ்தர்கள் (இல்லறத்தோர்) பாக்கியசா­கள்õ

54 ஐந்து மஹாயக்ஞங்களைச் செய்த பிறகு, மீந்த உணவை அருந்தும் இல்லறத்தோருக்கு அவர்கள் அறியாமலேயே செய்த ஐந்து பாவங்கள் முற்றும் அழிந்துவிடுகின்றன.

55 1. குற்றுதல்அல்லது இடித்தல், 2. அடுப்பெரித்தல், 3. மாவு அரைத்தல்,
4. குடங்களையும் பாத்திரங்களையும் தேய்த்துக் கழுவுதல், 5. பெருக்குதல் / மெழுகுதல் ஆகிய ஐந்து செயல்களும் ஐந்து பாவங்கள் (பஞ்சஸூனா) என்பதை மக்கள் பிரஸித்தியாக அறிவர்.

56 உர­ல் தானியத்தை இட்டு, உலக்கையால் குற்றி, உமியும் தவிடும் நீக்கிச் சுத்தம் செய்யும்போது நாம் அறியாமலேயே பல நுண்ணிய ஜந்துகள் இறந்துபோகின்றன.

57 ஆனால், அவ்வாறு செய்யாவிடின் தானியம் வேகாது. ஆகவே, ஐந்து கிருஹஸ்த பாவங்களில் 'குற்றுதல்ஃ (கண்டணீ) முதற்பாவம் ஆகிறது.

58 சமையல் செய்வதற்காக அடுப்பெரிக்க விறகை உபயோகிக்கிறோம். அடுப்பு எரியும்போதும் விறகைத் தூண்டிவிடும்போதும் நாம் விரும்பாமலும் நமக்குத் தெரியாமலும் சில உயிரினங்கள் இறந்துபோகின்றன. இல்லறத்தோரின் ஐந்து பாவங்களில் 'அடுப்பெரித்தல்ஃ (சுள்ளீ) இரண்டாவதாகிறது.

59 ஏந்திரத்தில் தானியங்கள் மாவாக அரைக்கப்படும்போது சில நுண்ணிய உயிரினங்களும் அரைபட்டு இறந்துபோகின்றன. 'அரைப்பதுஃ (பேஷணீ) ஐந்து பாவங்களில் மூன்றாவது.

60 ஒரு குடம் தண்ணீர் கிணற்றி­ருந்தோ குளத்தி­ருந்தோ எடுக்கப்படும்போதும், ஆண்களும் பெண்களும் துணி துவைத்துச் சலவை செய்யும்போதும், பல நுண்ணுயிர்கள் இறந்துபோகின்றன.

61 குடங்களையும் சமையல் செய்த பாத்திரங்களையும், சாம்பலையும் மண்ணையும் உபயோகித்துத் தேய்த்துச் சுத்தம் செய்யும்போது பல ஜந்துகள் நாம் இச்சிக்காமலேயே இறந்துபோகின்றன. இவ்விதமாக, 'குடங்களைத் தேய்த்துக் கழுவுதல்ஃ (உதக்கும்பீ) இல்லறத்தோர் செய்யும் நான்காவது பாவம் ஆகிறது.

62 அதுபோலவே, குளிர்ந்த நீரிலோ வெந்நீரிலோ குளிக்கும்போதும் வீட்டைப் பெருக்கிச் சாணமிட்டு மெழுகும்போதும் உயிரினங்கள் மடிந்துபோகின்றன. 'சுத்தம் செய்தல்ஃ (மார்ஜனீ) கிருஹஸ்தர்கள் செய்யும் ஐந்தாவது பாவம் ஆகிறது.

63 பஞ்ச பாவங்களி­ருந்து விடுபடுவதற்காக, கிருஹஸ்தர்கள் பஞ்ச மஹாயக்ஞங்களைச் செய்ய வேண்டும். பஞ்சஸூனா பாவங்களி­ருந்து விடுபட்டால் கிருஹஸ்தர்கள் மனத்தூய்மையையும் அடைவர்.

64 தூய மனத்தின் பலத்தால்தான் புனிதமான ஞானம் கிடைக்கும். புனித ஞானம் அடைந்தவர்களில், சில பாக்கியசா­களுக்கு நிலையான முக்தியும் கிடைக்கும்.

65 பாபா பிச்சை எடுத்துப் பிழைத்த விவரங்களைச் சொன்னதால் இந்த அத்தியாயம் பெரியதாகிவிட்டதுõ ஆயினும், இப்பொழுது இது சம்பந்தமாக நடந்த உண்மை நிகழ்ச்சியொன்றைக் கேளுங்கள். அதன் பிறகு, இந்த அத்தியாயத்தை முடித்துவிடுவோம்.

66 பாபாவுக்கு நீங்கள் எதை அனுப்பினாலும், யார் மூலம் அனுப்பினாலும், அது மனம் கனிந்த அன்போடு அனுப்பப்பட்டால், அச்சிறிய நைவேத்தியத்தைக் கொண்டுசென்றவர் மறந்துவிட்டாலும், பாபா தவறாது அதைக் கேட்டு வாங்கிக்கொள்வார்.

67 அது சோளரொட்டியோ, பாஜியோ, பால்கோவாவோ எவ்வளவு எளிய தின்பண்டமாக இருந்தாலும் சரி, பக்தி பா(ஆஏஅ)வத்துடன் அளிக்கப்பட்டதைப் பார்த்தபோது, பாபாவினுடைய இதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது.

68 இது அம்மாதிரியாக அன்பு செய்த பக்தர் ஒருவரின் காதை. இதைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். எந்த பக்தராவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மறந்துவிட்டால், ஸாயீயே அவரைக் கடமையின் பாதையில் வழிநடத்தினார்.

69 பாபாவினுடைய போதனைமுறை இனிமையானது; மென்மையானது. அதைக்கேட்டு, கடமையை மறந்துபோன பக்தர் தாமே விழிப்படைந்துவிடுவார். அதைத் தாங்களே அனுபவித்தவர்கள் மஹாபாக்கியசா­கள். அவர்களுடைய ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

70 விச்ராந்தியின் இருப்பிடமான ஸாயீயை அடைக்கலமாக அடைந்த ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்ட ஸாயீபக்தர் ஒருவர் இருந்தார். தந்தையின் பெயர் ஆத்மாராம்; குடும்பப் பெயர் தர்கட். (ஆகவே அவருடைய முழுப்பெயர் ராமச்சந்திர ஆத்மாராம் தர்கட்)

71 ஆயினும், அவர் பாபாஸாஹேப் தர்கட் என்றே அழைக்கப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட காதையைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்; வேறு காரணம் ஏதுமில்லை.

72 ஸாயீபிரேமையால் இதயம் பொங்க, தர்கட் அவருடைய அனுபவங்களை அவரே விவரித்தபோது கேட்பதற்கு எவ்வளவு சுகமாக இருந்ததுõ

73 ஒவ்வொரு நிகழ்ச்சியாக, ஒன்றைவிட மற்றொன்று புதிய அனுபவமாக, பக்திபா(ஆஏஅ)வத்துடனும் அங்க அசைவுகளுடனும் படிப்படியாக அவர் விவரித்தபோது, எவ்வளவு உயர்ந்த பக்தியை அது வெளிப்படுத்தியதுõ

74 ஒப்புயர்வற்ற பிரேமையுடையவராக இருந்ததால், பாபாஸாஹேப் தமது இல்லத்தில் தினமும் காலை, மதியம், மாலை வழிபாட்டுக்காக பாபாவினுடைய படத்தை ஒரு சந்தனமண்டபத்தில் ஸ்தாபனம் செய்திருந்தார்.

75 அவருக்குப் புத்திரனும் பக்திமான்; ஸாயீக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பாட்டைத் தொடமாட்டான். ஆகவே, தர்கட் மஹாபுண்ணியசா­.

76 ஒவ்வொரு நாளும் காலைவேளையில் ஸ்நானம் செய்துவிட்டு, உடலாலும் பேச்சாலும் உள்ளத்தாலும் ஒன்றி, ஸாயீக்குப் பூஜை செய்துவிட்டுக் கடைசியாக நிவேதனம் (படையல்) செய்வான்.

77 இந்த நித்திய பூஜையைத் தவறாதும் ச­க்காமலும் செய்துகொண்டுவந்தபோது, அவனுடைய முயற்சிகளனைத்தும் உன்னதமான பலன்களை அளித்தன; உயர்ந்த அனுபவமும் பெற்றான்.

78 சிறந்த ஸாயீ பக்தையான அவன் அன்னை, சிர்டீக்குப் போக விரும்பினார். பயணத்தின்போது அன்னையுடன் மகனும் செல்லவேண்டும் என்று தந்தை நினைத்தார்.

79 அன்னை சிர்டீக்குச் சென்று ஸாயீ தரிசனம் செய்து, அங்கே சில நாள்கள் தங்கி பாபாவுக்குப் பாதஸேவை செய்யவேண்டுமென்று விரும்பினார்.

80 தந்தையினுடைய விருப்பம் அவ்வாறு இருந்தபோதிலும், மகனுக்கு சிர்டீ போவதில் இஷ்டமில்லை. அவனுடைய கவலையெல்லாம், தான் வீட்டில் இல்லாதபோது, யார் தினமும் தவறாமல் பாபாவுக்குப் பூஜை செய்வார் என்பதே.

81 தகப்பனார் ஒரு பிரார்த்தனா1 ஸமாஜி. அவரைப் பூஜை செய்யவைத்துத் தொந்தரவு செய்வது நியாயமா? அதுவே மகனுடைய சந்தேகம்.

82 எனினும், தன் மனத்துள்ளே மறைந்திருந்த ஆசையை அறிந்திருந்த மகன், சிர்டீ போவதற்குத் தயாராக இருந்தான். அவன் தகப்பனாரை அன்புடன் என்ன வேண்டிக்கொண்டான் என்பதைக் கேளுங்கள்.

83 ஸாயீக்கு நிவேதனம் செய்யாமல் யாருமே இந்த வீட்டில் சாப்பிடமாட்டார்கள் என்று உறுதிமொழி அளிக்கப்படாவிட்டால், நான் நிச்சயமாக சிர்டீக்குப் போகமுடியாது.

84 தந்தைக்கு ஏற்கெனவே மகனுடைய நித்தியவிரதம் தெரிந்திருந்தது. ''நீ போய் வா. நான் தினமும் நிவேதனம் செய்கிறேன்; நீ இதை முழுமையாக நம்பலாம்ஃஃ என்று அவர் கூறினார்.--

85 ''ஸாயீக்கு நைவேத்தியம் படைக்காமல் நாங்கள் யாருமே உணவருந்தமாட்டோம். என்னுடைய வார்த்தைகளை நம்பு, சந்தேகம் வேண்டா; குழப்பம் ஏதுமின்றி நீ சென்றுவாஃஃ.

86 இவ்வாறு உறுதிமொழி பெற்றுக்கொண்டு பையன் சிர்டீக்குச் சென்றான். அடுத்தநாள் காலையில் தர்கட் அவர்களே பூஜை செய்தார்.

87 அன்று பூஜையை ஆரம்பிக்கும் முன்பே, பாபாஸாஹேப் தர்கட் ஸாயீயின் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டுப் பிரார்த்தனை செய்தார்,--

88 ''பாபாõ நான் செய்யும் பூஜை என் மகன் செய்யும் பூஜையைப் போலவே அமையட்டும். என்னுடைய கைகளில் பூஜை ஓர் இயந்திரகதியான அப்பியாஸமாக இல்லாமல், பூஜை செய்யும்போது என்னுடைய இதயத்தில் தூய அன்பு பொங்கி வழியட்டும்ஃஃ.

89 பூஜை செய்வதற்குகந்த விடியற்காலை நேரத்தில் தினமும் இப் பிரார்த்தனையுடன் பூஜையை ஆரம்பித்துக் கடைசியாக நிவேதனம் செய்து முடித்தார்.

90 நைவேத்தியமாகக் கற்கண்டை ஸமர்ப்பித்தார். தடங்கல் ஏதுமில்லாமல் பூஜை நடந்துகொண் டிருந்தது; ஒருநாள் இந்த நித்திய நிவேதனத்திற்குத் தடங்கலேற்பட்டது.

91 ஒருநாள் அவருடைய மனம் அலுவலக விஷயங்களில் மூழ்கியிருந்ததால், தர்கட் நிவேதனம் செய்வதற்கு மறந்துவிட்டார். பாபாவுக்கு நிவேதனம் ஏதும் செய்யப்படாமலேயே அனைவரும் அன்று உணவுண்டுவிட்டனர்.

92 தர்கட் ஸாஹேப் ஒரு நெசவாலைக்கு முக்கிய அதிகாரி. ஆகவே, தினமும் காலை நேரத்திலேயே ஆலைக்குச் செல்லவேண்டிய அவசியம் இருந்தது.

93 தினந்தோறும் பிற்பக­ல் அலுவலகத்தி­ருந்து திரும்பிவந்தபோது, சாப்பாட்டு நேரத்தில், காலையில் நிவேதனம் செய்யப்பட்ட கற்கண்டு அவருக்குப் பிரஸாதமாகப் பரிமாறப்பட்டது.

94 இதுவே தினசரி வழக்கமாக இருந்தது. ஒருநாள் காலையில் அவர் நிவேதனம் செய்ய மறந்துவிட்டதால், மதிய சாப்பாட்டு நேரத்தில் பிரஸாதம் இல்லை.

95 அவர் சாப்பிட உட்காரும்போது, சமையற்காரர் அவருடைய தட்டில் உண்ணும் பொருள்களைத் தூயனவாக்கும் வகையில், மீந்த கற்கண்டை அவருக்குப் பரிமாறுவார்.

96 ஆனால், அன்று எக்காரணத்தாலோ, அவர் பூஜையை அவசரமாகச் செய்யவே, நிவேதனம் செய்வதற்கு மறந்துவிட்டார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அன்று பிரஸாதம் பரிமாறப்படவில்லை.

97 சட்டென்று தர்கட் சாப்பிடாமல் எழுந்துவிட்டார். குற்றவுணர்ச்சியால் மனம் நொந்து, பாபாவின் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டு, விழிகளி­ருந்து நீர் வடியக் கூறினார்.

98 ''பாபாõ இது என்ன உம்முடைய மாயை? எப்படி என்னை மதிமயக்கம் அடையச் செய்தீர்? நீர் என்னைச் செய்யவைத்தது பூஜையன்று, இயந்திரகதியான ஓர் அப்பியாஸமேõ ஆனால், இப்பொழுது முத­ல் என்னை மன்னித்துவிடுங்கள்õ--

99 ''இது வெறும் மனக்குழப்பம் அன்று, மஹாபாவத்தைச் செய்துவிட்டேன்; அனுதாபத்தினால் தவிக்கின்றேன். இது என்னுடைய தவறு; முழுக்கமுழுக்க என்னுடைய தவறே; வெட்கங்கெட்டவன் நான். மஹாராஜரேõ என்மீது கிருபை காட்டுவீராக.ஃஃ

100 படத்தி­ருந்த ஸாயீ பாதங்களுக்கு அவர் நமஸ்காரம் செய்தார். குற்றவுணர்ச்சியாலும் அனுதாபத்தாலும் உருகிய மனத்துடன் அவர் கூறினார், ''தயை மிகுந்த மஹாராஜரேõ என்னிடம் கருணை செலுத்துவீராக.ஃஃ

101 இவ்வாறு வேண்டிவிட்டு, வருத்தந்தோய்ந்ததும் செயலாற்றமுடியாததுமான மனநிலையில் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். ''பாபாவினுடைய மன்னிப்பை வேண்டு; என்னால் ஒரு பெரிய பாவம் செய்யப்பட்டுவிட்டதுõ--

102 ''பரிபூரணமாக சரணாகதியடைந்தவன்மேல் தயை காட்டுவீராக. இந்த வார்த்தைகளால் அவருடைய கருணையை மலரச் செய்து அவருடைய மன்னிப்புக்கும் அருளுக்கும், தீனனும் தாஸனுமான என் சார்பில் அபயவரம் வேண்டுஃஃ.

103 பாந்த்ராவில்1 இது நடந்துகொண் டிருந்தபோது, 200 மைல்களுக்கு அப்பா­ருந்த சிர்டீக்கு உடனே செய்தி வந்துவிட்டதுõ பாபா அங்கு என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

104 ஸாயீ மஹாராஜருக்கு நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் இடம், காலம் என்னும் எந்தத் தடைகளுமின்றி எல்லாமே தெரிந்திருந்தன என்பதற்கு இதுவே பிரத்யக்ஷமான (கண்கூடான) நிரூபணம்.

105 பையன் (மகன்) சிர்டீயில் இருந்தாலும், அவன் பாபாவுக்கு வணக்கம் செலுத்துவதற்கு அதே நாளில் அதே நேரத்தில் சென்ற போது, என்ன நடந்தது என்பதைக் கேளுங்கள்; கதை கேட்பவர்களேõ

106 பையன் தாயுடன் உற்சாகமாக வந்து, பாபாவின் பாதங்களைப் பணிந்தபோது ஸாயீ தாயாரிடம் கூறியதைக் கேட்டு வியப்படைந்தான்.

107 ''தாயே, இன்று என்னால் என்ன செய்ய முடிந்தது? தினமும் செய்வதுபோல் நான் இன்றும் பாந்த்ராவுக்குச் சென்றேன். ஆனால், அங்கு சோறோ கஞ்சியோ எதுவுமே உண்பதற்கோ குடிப்பதற்கோ இல்லை. நான் பட்டினியாகத் திரும்பிவர நேரிட்டதுõ--

108 ''இந்த ருணானுபந்தத்தைப்2 பார்; கதவு மூடியிருந்தாலும் நான் இஷ்டமாக உள்ளே நுழைந்துவிட்டேன்; யார் என்னைத் தடுக்க முடியும்?--

109 ''முதலாளி வீட்டில் இல்லை. என்னுடைய குடலைப் பசி பிடுங்கியது. உடனே அந்த நண்பகல் நேரத்தில் ஒருபிடி அன்னங்கூட இல்லாமல் திரும்பிவிட்டேன்õஃஃ

110 இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, அநேகமாகத் தந்தை நிவேதனம் செய்ய மறந்துவிட்டிருப்பார் என்று மகன் யூகித்துவிட்டான்.

111 ''என்னை வீட்டிற்குத் திரும்பிப்போக அனுமதியுங்கள்õஃஃ என்று பாபாவை வேண்டினான். பாபா அறவே மறுத்துவிட்டார்õ அதற்குப் பதிலாகப் பையனை அங்கேயே பூஜை செய்ய அனுமதித்தார்.

112 மகன் அன்றைய தினமே சிர்டீயி­ருந்து விவரமான கடிதம் அனுப்பினான். அதைப் படித்த தந்தை மனமுருகிப்போனார்õ

113 பாந்த்ராவி­ருந்து எழுதப்பட்ட கடிதமும் சிர்டீக்கு வந்துசேர்ந்ததுõ பையன் ஆச்சரியமடைந்தான். அவனுடைய விழிகளி­ருந்து கண்ணீர் தாரைதாரையாகப் பெருகிக் கன்னங்களில் வழிந்தோடியது.

114 ஸாயியினுடைய இந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்õ அன்பு ஏன் இதயத்தில் பொங்கி எழாது? இந்த சம்பவத்தால் உருகாத கல்மனமும் உண்டோ?

115 இந்தப் பையனின் அன்பான தாயார்தான், ஒரு சமயம் சிர்டீயி­ருந்தபோது பாபாவால் அநுக்கிரஹிக்கப்பட்டார். இப்பொழுது அந்த நூதனமான காதையைக் கேளுங்கள்õ

116 அவர் சாப்பாட்டுக் கூடத்தில் இருந்தார்; எல்லாருக்கும் உணவு பரிமாறி முடிக்கப்பட்டது; சாப்பிடப் போகும் தருணம். திடீரென்று அந்த மதிய நேரத்தில், பசியால் வாடிய நாய் ஒன்று அவ்வம்மையார் உட்கார்ந்திருந்த கதவருகில் வந்து நின்றது.

117 அம்மையார் உடனே ஒரு கால்சோளரொட்டியைத் தம்முடைய தட்டி­ருந்து எடுத்து நாய்க்குப் போட்டார். அதே நேரத்தில், உடம்பெல்லாம் சேற்றுடன், பசியால் வாடிய பன்றியும் ஒன்று வந்தது. (அதற்கும் அவர் உணவளித்தார்).

118 ஈதனைத்தும் சுபாவமாகவே நடந்ததால், அவர் இச் சம்பவத்தை அறவே மறந்துபோனார். ஆனால், பிற்பகல் நேரத்தில் பாபாவே இச் சம்பவத்தைக் கிளறினார்.

119 உணவுண்ட பிறகு, பிற்பக­ல் அவ்வம்மையார் வழக்கம்போல் மசூதிக்கு வந்து, சிறிது தூரத்தில் அமர்ந்தபோது பாபா அவரிடம் அன்புடன் கூறினார்.

120 ''அன்னையே, இன்று எனக்கு நீர் உணவளித்தீர்; என்னுடைய வயிறு தொண்டைவரை நிரம்பிவிட்டது. நான் பிராணனே போய்விடும் போன்ற பசியால் மிக வாடினேன். நீர் எனக்கு உணவளித்துத் திருப்தி செய்துவிட்டீர்.--

121 ''இதைத்தான் நீர் எப்பொழுதுமே செய்ய வேண்டும். இதுவே உமக்கு ஸத்தியமாக க்ஷேமத்தையளிக்கும். மசூதியில் அமர்ந்துகொண்டு நான் அஸத்தியத்தை என்றுமே, எப்பொழுதுமே பேசமாட்டேன்.--

122 ''இந்தக் காருண்யம் உம்மிடம் எப்பொழுதும் இருக்கட்டும். முத­ல் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்துவிட்டுப் பிறகு சாப்பிடும். இந்த ஆசாரத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பீராகஃஃ.

123 அம்மையாருக்கு ஸாயீ சொன்னது ஒன்றுமே விளங்கவில்லை. ஸாயீ சொன்னதன் பொருள் என்ன? அவருடைய வார்த்தைகள் எப்பொழுதுமே அர்த்தபுஷ்டியில்லாமல் இருக்காதேõ (இவ்வாறு அம்மையார் சிந்தித்தார்.)

124 ஆகவே அவர் கேட்டார், ''நான் எப்படி உங்களுக்கு உணவளித்திருக்க முடியும்? நானே மற்றவர்களைச் சார்ந்து காசு கொடுத்துச் சாப்பிட்டுக்கொண் டிருக்கிறேனே?ஃஃ

125 ''எனக்கு மிகுந்த அன்புடன் அளிக்கப்பட்ட சோளரொட்டியைத் தின்று நான் உண்மையிலேயே பசியாறினேன்; இல்லை, இல்லை, அந்தத் திருப்தியில் நான் இன்னும் ஏப்பம் விட்டுக்கொண் டிருக்கிறேன்.--

126 ''நீர் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தபோது திடீரென்று பசியால் வாடிய, வயிறு காய்ந்த நாயொன்றை வாயி­ல் பார்த்தீர் அல்லவா? நானும் அந்த நாயும் ஒன்றே என்று அறிவீராகõ--

127 ''அவ்வாறே உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்ட பன்றியும் பசியால் வாடுவதைப் பார்த்தீர். அப் பன்றியும் நான்தான்õஃஃ

128 பாபாவின் திருவாய்மொழியைக் கேட்ட அவ்வம்மையார் மனத்துள்ளே வியப்படைந்துபோனார். எத்தனையோ நாய்களும் பன்றிகளும் பூனைகளும் சுற்றி அலைகின்றன. அவை எல்லாவற்றிலுமா பாபா இருக்கிறார்? இது எப்படி சாத்தியம்? (என்று அம்மையார் நினைத்தார்.)

129 ''சில சமயம் நான் ஒரு நாய்; சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை; சில சமயம் ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர்வாழ் பிராணி -- பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன்.--

130 ''உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேதபுத்தியை விட்டுவிடும்; அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்.ஃஃ

131 இவை வெறும் வார்த்தைகளல்ல; தேவாமிருதமான திருவாய்மொழியாகும். இதைக் கேட்ட அம்மையார் உணர்ச்சிவசத்தால் திக்குமுக்காடிப்போனார்; தொண்டை அடைத்தது; ஆனந்தக்கண்ணீர் பெருகியது.

132 இவ்வம்மையாரின் அன்பார்ந்த பக்தியை விளக்கும் இன்னுமொரு இனிமையான காதை உண்டு. ஸமர்த்த ஸாயீ, பக்தர்களுடன் ஐக்கியமானவர் என்பதற்கு அது நிரூபணமாக அமைந்திருக்கிறது.

133 ஒரு சமயம் புரந்தரே1 என்று பெயர் கொண்ட ஸாயீ பக்தரொருவர் மனைவிமக்களுடன் சிர்டீக்குக் கிளம்பினார். இவ்வம்மையார் (ஸ்ரீமதி தர்கட்) அவர்மூலமாக பாபாவுக்குச் சில கத்தரிக்காய்களை அனுப்பினார்.

134 ஒரு கத்தரிக்காயை பரீத்2 செய்தும் இன்னொன்றை காச்ர்யா3 செய்தும் பாபாவுக்குத் திருப்தியாக உணவளிக்கும்படியாகப் புரந்தரேவின் மனைவியை வேண்டிக்கொண்டார்.

135 ''அவ்வாறே செய்கிறேன்ஃஃ என்று சொல்­விட்டு ஸ்ரீமதி புரந்தரே கத்தரிக்காய்களை எடுத்துக்கொண்டு போனார். சிர்டீக்குப் போய் பரீத் செய்து எடுத்துக்கொண்டு பாபாவுக்கு அளிப்பதற்காக மதிய உணவு நேரத்தில் ஹாரதிக்குப் பிறகு சென்றார்.

136 எப்பொழுதும்போல் நைவேத்தியத்தை ஒரு தட்டில் பாபாவுக்காக வைத்துவிட்டுத் தங்குமிடத்திற்குச் சென்றுவிட்டார். எல்லாருடைய நைவேத்தியங்களையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு பாபா சாப்பிட உட்கார்ந்தார்.

137 பாபா பரீத்தை ருசி பார்த்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாரும் பாபா அதை மிகவும் சுவைத்து உண்டார் என்று நினைத்தனர். காச்ர்யா சாப்பிட வேண்டுமென்று நினைத்தாரோ என்னவோ, ''காச்ர்யா உடனே கொண்டு வாஃஃ என்று சொன்னார்.

138 உடனே ராதாகிருஷ்ண பாயிக்கு, 'பாபா காச்ர்யா சாப்பிட விரும்புகிறார்ஃ என்று செய்தி அனுப்பப்பட்டது. பாபா சாப்பிட ஆரம்பிக்காமல் காச்ர்யாவுக்காகக் காத்துக்கொண் டிருந்தார். சுற்றி இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

139 அது கத்தரிக்காய் கிடைக்கக்கூடிய பருவம் அன்று. எப்படிக் காச்ர்யா செய்யமுடியும்? பரீத் நைவேத்தியம் கொண்டுவந்து வைத்த ஸ்ரீமதி புரந்தரேவை உடனே வலைபோட்டுத் தேடினர்.

140 அவர் கொண்டுவந்த தட்டில்தான் பரீத் இருந்தது; ஆகவே, அவருடைய மூட்டைமுடிச்சுகளில் இன்னும் சில கத்தரிக்காய்கள் இருக்கலாம் என்று நினைத்தனர்.

141 ஸ்ரீமதி புரந்தரேவைக் கேட்டவுடன், காச்ர்யாவின்மீது பாபா கொண்ட திடீர்மோஹத்தின் மர்மம் புலனாகிவிட்டது. பாபா ஏன் அதை அவ்வளவு விரும்பினார் என்பதும் எல்லாருக்கும் விளங்கிவிட்டதுõ

142 ஒரு கத்தரிக்காயைச் சுட்டு, அன்று பரீத் செய்ததாகவும் இன்னொன்றை மறுநாள் காச்ர்யா செய்யலாம் என்று துண்டுதுண்டாக நறுக்கி வைத்திருப்பதாகவும் ஸ்ரீமதி புரந்தரே விளக்கம் கூறினார்.

143 பின்னர், வாய்வார்த்தையாக எல்லாருக்கும் கத்தரிக்காய்களின் கதை ஆரம்பத்தி­ருந்தே தெரியவந்தது. ஸாயீயின் எங்கும் நிறைந்த சக்தியைக் கண்டு எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

144 மற்றொரு சந்தர்ப்பத்தில், 1915ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்ரீமதி தர்கட் ஒரு பால்கோவாவை பாபாவுக்குப் பிரேமையுடன் அனுப்பிவைத்தார்.

145 பாலாராம் மான்கர் பரலோகவாசியாகிவிட்டார். மான்கரின் மகன் ஈமச்சடங்குகளைச் செய்ய சிர்டீக்குப் போகுமுன், தர்கட் அவர்களிடம் விஷயத்தைச் சொல்வதற்காக வந்தான்.

146 தான் சிர்டீக்குப் போவதைத் தர்கட் அவர்களிடம் தெரிவிப்பதற்காக வந்தான். ஸ்ரீமதி தர்கட் அவன்மூலமாக பாபாவுக்கு ஏதாவது தின்பண்டம் கொடுத்தனுப்பவேண்டும் என்று விரும்பினார்.

147 வீடு முழுவதும் தேடியும் ஒரு பால்கோவா, அதுவும் ஏற்கெனவே நிவேதனம் செய்யப்பட்டது, அதைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை; பையனோ கிளம்புவதற்கு அவசரப்பட்டான்.

148 பையனோ சாவுத்தீட்டில் இருந்தான்; வீட்டி­ருக்கும் ஒரே பால்கோவா (தூத்பேடா) ஏற்கெனவே நிவேதனம் செய்யப்பட்டது; இருப்பினும் ஸாயீக்கு அர்ப்பணமாக அந்தப் பேடாவை ஸ்ரீமதி தர்கட் கொடுத்தனுப்பினார்õ

149 ''வேறு எதுவுமே இல்லை; இந்தப் பால்கோவாவை எடுத்துக்கொண்டுபோய் அன்புடன் பாபாவுக்கு ஸமர்ப்பணம் செய். ஸாயீ இதை விருப்பத்துடன் உண்பார்ஃஃ என்றும் சொன்னார்.

150 கோவிந்தஜீ (பாலாராம் மான்கரின் மகன்) பால்கோவாவை எடுத்துக்கொண்டு போனான். ஆயினும், பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது பால்கோவாவைத் தான் தங்கிய இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். பாபா பொறுமையாக இருந்தார்.

151 பிற்பக­ல் மறுபடியும் ஸாயீயின் தர்பாருக்கு வந்தான். இம்முறையும் பால்கோவாவை மறந்துவிட்டு வெறுங்கையுடன் மசூதிக்கு வந்தான்.

152 ''நீ எனக்கு என்ன கொண்டுவந்தாய்?ஃஃ என்று கேட்டு அவனுக்கு ஞாபகமூட்டுவதற்கு பாபா முயன்றார். ''ஒன்றுமில்லைஃஃ என்று அவன் பதில் சொன்னவுடன்,

153 ''வேறு யாராவது உன்மூலம் எனக்கு ஏதாவது கொடுத்தனுப்பினார்களா?ஃஃ என்று கேட்டு பாபா அவனுக்கு மறைமுகமாக ஞாபகமூட்டினார். ''இல்லைஃஃ என்று பையன் சொன்னவுடன் ஸமர்த்த ஸாயீ அவனை நேரிடையாகவே கேட்டார்.

154 ''மகனேõ நீ கிளம்பும்போது அன்னை எனக்காக அன்புடன் இனிப்புகள் கொடுத்தனுப்பவில்லை?ஃஃ இவ்வாறு கேட்ட பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வந்ததுõ

155 பையன் வெட்கத்தால் குன்றிப்போனான். அதை எப்படி அவனால் மறக்கமுடிந்ததுõ வெட்கத்தால் தலை குனிந்து பாபாவின் பாதங்களைத் தொட்டு மன்னிப்புக்கேட்டு வணங்கிவிட்டு ஓடினான்.

156 தான் தங்கியிருந்த இடத்திற்கு ஓடிச்சென்று பால்கோவாவை எடுத்துக்கொண்டுவந்து பாபாவுக்கு ஸமர்ப்பணம் செய்தான். கைக்கு வந்துசேந்தவுடனே பாபா அதை வாயில் போட்டுக்கொண்டு அன்னையின் (ஸ்ரீமதி தர்கட்) ஆசையை நிறைவேற்றினார்.

157 இவ்வாறு இம்மஹானுபாவரான ஸாயீ, பக்தரின் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு அவருக்கு அனுபவங்களைக் கொடுத்து பக்தரின் அன்பையும் பக்தியையும் கௌரவிக்கிறார்.

158 இந்தக் கதைகளி­ருந்து வெளிவரும் மற்றொரு முக்கியமான பாடம், எல்லா உயிர்களிலும் நாம் இறைவனைக் காணவேண்டும் என்பதே. இதுதான் சகல சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது; இதுவே இங்கு நடைமுறைக்குக் கொண்டுவந்து காட்டப்பட்ட முடிவுமாகும்.

159 அடுத்த அத்தியாயத்தைக் கேட்பதில், பாபா எவ்விதமாக வாழ்ந்தார், எங்கு, எந்த இடத்தில் அவர் தூங்கினார் என்பனபற்றித் தெரிந்துகொள்வீர்கள். கவனமாகக் கேளுங்கள்.

160 ஹேமாட் பந்த் ஸாயீ பாதங்களில் சரணடைகிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கதைகளை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்; மேலும் சிந்திக்கவேண்டும்; அவ்விதம் செய்வது அவர்களுக்கு க்ஷேமத்தை அளிக்கும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ''ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃஃ என்னும் காவியத்தில், ஒன்பதாவது1 அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.Share :
Get it on Google Play