TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
அத்தியாயம் - 17
17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 இந்த அத்தியாயத்தில் சிரேயஸ் (ஆன்மீக ஈடுபாடு) மற்றும் பிரேயஸ் (உலகியல் ஈடுபாடு) இவற்றின் லக்ஷணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாகக் கேளுங்கள்.
2 ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும் அவை ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.
3 எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்துவிட சபிக்கப்பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேகரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.
4 ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.
5 பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்பநாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின்மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.
6 ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையிருந்து மானஸஸரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே,--
7 தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசாகள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக்கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பிவிடுவர்.
8 இந்த மந்தபுத்திக்காரர்களைப் பாருங்கள்õ உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப்போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள்; அவற்றையே அடைகிறார்கள்.
9 சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மீகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டிருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
10 இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பதென்பது கடினமான செயல். மந்தபுத்திரக்காரனைப் புலனின்பங்கள் வென்றுவிடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆங்கனம் (தழுவுதல்) செய்துகொள்கிறது.
11 தண்ணீர் கலந்த பால் பாலை மட்டும் பிரித்தருந்தும் அன்னத்தைப்போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.
12 ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையேயாயினும், மந்தபுத்தி படைத்த விவேகமற்ற மனிதன் இரண்டிற்குமிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.
13 வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றிபெற முடியும்.
14 இங்கேதான் மனிதன் சக்திமிகுந்ததும் உறுதிபடைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனத்தில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.
15 வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாததுõ அது இரவுபகலாகச் சுழன்றுகொண்டே மூவகை1 இன்னல்களையும் மனிதனுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கமுடியாதது.
16 அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களிருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.
17 காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்கமுடியாத நிலையை அடையும்போது, ''இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?ஃஃ என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயற்சி செய்கிறான்.
18 ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப்போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, ஸாதகன் தன்னுடைய நன்மை கருதி லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளுகிறான்.
19 அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்சல் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்றுக் காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாகத் தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெறிய வேண்டும்.
20 கனவில் ஆலங்கட்டிமழை பொற்காசுகளாகப் பொழிகிறதுõ தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெருமுயற்சியெடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய்விடுகிறது.
21 ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது, எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது-இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே அவற்றை முதல் ஒழிக்கவும்.
22 எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்தபின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பிவிடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக்கூட வைத்து ஊன்றமுடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.
23 ஞானம் பெறுவதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் ஸமாதி நிலையையும் அடையவிடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனத்தின் வியாதிகள்.
24 கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளிவிடுமா? இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகிவிடுகிறது.
25 விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாயாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?
26 அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?
27 போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடல் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான்.
28 சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கைச் சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்ப்பேச்சு ஸாமர்த்தியம் என்ன சாதித்துவிட முடியும்?
29 ஆகையால் வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமேயில்லை; ஸாரம் அப்பியாஸமே (பயிற்சியே)õ நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.
30 இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனத்துடன் யஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.
31 வெற்றி பெறுவதற்குச் சிரமமானவையும், பரம்பரையாக வருவனவுமாகிய புலனின்ப நாட்டங்களைக் கடந்துசெல்லத் தேரோட்டிக்கு வழிகாட்டவும். பத்து இந்திரியங்களாகிய முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களை உம்முடைய மனம் கட்டுப்பாடு செய்யட்டும். (கர்மேந்திரியங்கள் 5 + ஞானேந்திரியங்கள் 5)
32 குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களைத் தேரோட்டியிடம் (புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும்.
33 தேரோட்டி நிபுணனாகவும் சாமர்த்தியசாயாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனத்தின்) பிடியில் மாட்டிக்கொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும்.
34 மனத்தின்மீது முழுக்கட்டுப்பாடுடைய விவேகமுள்ள புத்தியாலும் ஒருமுனைப்பட்ட சித்தத்தாலும் ஆட்சிசெய்யப்படும் மனிதனே பரமபதத்தை அடைவான். மற்றவர்கள் வழியிலேயே சோர்ந்து வீழ்வார்கள்.
35 சதா கட்டுப்பாடில்லாத மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடையமாட்டான்; அந்தப் பதவியையும் (பரமபதம்) அடையமாட்டான்; சம்சாரச் சுழருந்தும் அவனால் விடுபடமுடியாது.
36 எங்கிருந்து இதைப் பெறுவது என்ற சந்தேகத்தையும் கேள்விகளையும் தீர்த்து வைத்துத் தானாகவே மிகச் சிறந்த பரமபதம் தோன்றுகிறது.
37 இங்கே தர்க்கவாதமும் சப்பைக்கட்டு வாதமும் சொற்கேள்வியும் உரையாடலும் உதவா. இறைவனுடைய அருளால்தான் தடங்கல்கள் விலக்கப்படுகின்றன. வாதங்களனைத்தும் வியர்த்தமே.
38 தர்க்கவாதத்தின் ஸாமர்த்தியம் இங்கே செல்லுபடியாகாது. மெத்தப்படித்த தர்க்கசாஸ்திர பண்டிதரும் திக்குமுக்காடிப் போகிறார். கபடமில்லாத, கேள்வி எழுப்பாத விசுவாசமே இங்கு வெற்றியடைகிறது. அற்புதம் இதுவேõ
39 ஆத்ம ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை வித்தியாசமானது; புத்தியும் வித்தியாசமானது; அதைச் சொல்க்கொடுக்கக்கூடிய சாஸ்திர பண்டிதரும் வித்தியாசமானவர். இது ஞாபகத்தில் இருக்கட்டும்.
40 விலைமதிக்கமுடியாத மனித உடல், எதற்கும் உபயோகமில்லாமல் உளுத்துப்போக அனுமதிக்கப்படுகிறது. பணத்தாசை என்பது உச்சிவெயில் நிழலைப்போலக் கண்டறியக் கஷ்டமான விஷயம். ஹரியின் மாயையை வெல்வது கடினம். ஈதனைத்தையும் அறிந்து, ஞானிகளின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும்.
41 ஞானிகள் பிறவிக்கடலைக் கடக்க உதவும் கப்பலாவர். இக் கப்பல் ஒரு பிரயாணியாகிவிடுங்கள். வேறு எவருக்கு நம்மை அக்கரை சேர்க்கும் ஸாமர்த்தியம் இருக்கிறது?
42 களிமண் புத்தியுடைய மூடனாயினும் சரி, விவேகமும் வைராக்கியமும் இருந்தால், பிறவிக்கடலைக் கடப்பது சிரமமாக இராது.
43 இறைவனின் குணங்களான ஆறு ஐசுவரியங்களில் முதலானதும் மிகச் சிறந்ததுமான ஐசுவரியம் பற்றற்ற நிலையே. பெரும் பாக்கியம் செய்தவர்களைத் தவிர, வேறு எவரும் இதில் பங்கு எதையும் எதிர்பார்க்கமுடியாது.
44 சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களைச் செய்யாது சித்தம் தூய்மையடையாது. சித்தம் தூய்மையடையாதவனால் ஞானத்தை ஸம்பாதிக்க முடியாது என்று அறியவும்.
45 ஞானம் அடைவதற்கு மூலகாரணம் கர்மங்களைச் செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்திருக்கட்டும். பூஜை, உபாஸனை, போன்ற நித்திய கர்மாக்களையும் சிறப்பு நாள்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனத்திலுள்ள மலத்தைக் கழுவித் தூய்மையடையும் ஒரே வழி.
46 இவ்வாறு தூய்மை எய்திய மனத்தில் விவேகமும் வைராக்கியமும் பிறக்கின்றன. பிரம்ம ஞானம் அடைவதற்குத் தேவையான ஸாதனை ஸம்பத்துகளான சமம்1, தமம், ஆகியவையும் பிறகு தோன்றும். இவ்வாறாக, உடல் உயிர் இருக்கும்போதே முக்திநிலையும் கைக்கு எட்டுகிறது.
47 செயல்களின் பலனைத் துறந்துவிட்டவர், ஸங்கல்பத்தையும்2 தியாகம் செய்துவிட்டவர், ஒருமுனைச் சித்தம் எய்தியவர், குருவிடம் சரணமடைந்துவிட்டவர், ஸத்குருவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.
48 புறவுலகச் செயல்பாடுகள் அனைத்தையும் சூனியமாக்கிவிட்டு, வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர் ஆத்ம ஞானத்தைப் பெறுவார். வேறெந்த உபாயமும் அங்கே பிரயோஜனப்படுவதில்லை.
49 அவ்விதமாக ஞானம் பெற்ற பிறகும் அவர் அதர்மமான மார்க்கத்தில் இறங்கினால், அவர் பூமியிலும் இல்லாமல் சுவர்க்கத்திலும் இல்லாமல் திரிசங்குபோல்3 மாட்டிக்கொள்வார்.
50 ஜீவனுடைய அஞ்ஞானமே அவனை ஸம்ஸாரப் பிரவிருத்தியில் இழுக்கிறது. ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால் ஸம்ஸாரத்திருந்து நிவிர்த்தி ஏற்பட்டுவிடும். அவர் இந்த உலகத்தில்தான் வாழ்கிறார்; ஆனால், இவ்வுலகத்தைச் சார்ந்தவரல்லர்.
51 ஆத்ம ஞானம் அடைந்தவர் எந்நேரத்திலும் அஹம்பாவத்திற்கு இடங்கொடுக்க மாட்டார். அவருக்கு, தர்மம் / அதர்மம் - சுபம் / அசுபம் - எதுவுமே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவருக்கு ஹிதமானது எது, ஹிதமில்லாதது எது?
52 தேஹம்பற்றிய அஹங்காரம் நசித்துவிட்டால், பற்றற்ற மனோபாவம் விரைவில் வந்திறங்கிவிடுகிறது. இதுவே இறைவனுடன் ஒன்றிய நிலை என்பதை நிச்சயமாக அறிக.
53 நண்பனும் பகைவனும் பிரவிருத்தி மார்க்கத்தில்தான் (செயல் நிறைந்த உலக வாழ்க்கை) உண்டு. நிவிர்த்தி மார்க்கமோ விசித்திரமானது. தன்னையே எல்லாவற்றிலும் எப்பொழுதிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டபோது, நட்பேது, பகையேது?
54 இந்த மஹாசுகத்தின் முன்னர் உடன் கடுமையான உபாதிகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த சுகம் கிடைத்த பிறகு நிலையில்லாத உலக சுகங்களுக்காகக் கண்ணீர் விடுபவர் யார்?
55 ஆத்ம ஞானம் தரும் தீரமாகிய மலையை, உலகவாழ்வின் இன்னல்கள் மற்றும் துக்கங்களாகிய கற்கள், எத்தனை உருண்டு வந்து தாக்கினாலும் ஓர் இம்மியும் நகர்த்தமுடியாது.
56 இறைவன் எவர்மீது சந்தோஷம் கொள்கிறாரோ, அவருக்குப் பற்றறுக்கும் மனோபாவத்தை அளிக்கிறார். விவேகத்துடன் சீர்தூக்கிப் பார்க்கும் திறமையெனும் சக்தியையும் ஊட்டுகிறார். சம்சாரக்கடலை பத்திரமாகத் தாண்டவைக்கிறார்.
57 எவருடைய ஆத்மதரிசன நாட்டம் கண்ணாடியில் தெரியும் முகம்போலத் தெளிவாக இருக்கிறதோ, அவர் ஒன்று பூலோகத்தில் வாழ்வார்; அல்லது பிரம்மலோகத்தில் இருப்பார். மூன்றாவதான இடம் என்பது அவருக்கு இல்லை.
58 தேவர்களைத் திருப்தி செய்யும் யாகங்களையும் ஹோமங்களையும் செய்யின், பித்ருலோகம் கிடைக்கும். செய்பவர் கர்மபலன்களை நன்கு அனுபவிப்பார்; ஆனால், ஆத்ம ஞானம் கிடைக்காது.
59 கந்தர்வலோகம், மஹாலோகம், ஜனலோகம், தபலோகம், ஸத்யலோகம் ஆகிய லோகங்களில் கிடைக்கக்கூடிய ஆத்ம ஞானம் தெளிவில்லாததும் மங்கலானதும் ஆகும். ஆகவே ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள் பூலோகத்திலேயே தாங்கள் விரும்பும்வரை வாழவேண்டுமென்று நினைக்கிறார்கள்.
60 ஏனெனில் இங்கே சித்தம் சுத்தமடைந்து, புத்தி கண்ணாடியைப்போல் நிர்மலமாகி, உண்மையானதும் புனிதமானதுமான ஆத்மசொரூபத்தைப் பிரதிபக்கிறது.
61 ஆத்மதரிசனம் பிரம்மலோகத்தின் இரண்டாவது நிலையிலும் கிடைக்கும். ஆனால், அங்கு அனேக ஆயாஸமான, கஷ்டங்களை விளைவிக்கக்கூடிய பயிற்சிகள் தேவைப்படும்.
62 மாயை, ஒரு மலைப்பாம்பைப்போல் உடலைச் சுற்றிக்கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்திருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்துவிடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது?
63 ''நான்கேட்ட ஐந்து ரூபாயைப்போல ஐம்பது மடங்கு வைத்துக்கொண்டு, எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் அங்கு உட்கார்ந்திருக்கிறீர்õ அதை இப்பொழுது வெளியே எடும்õ அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறதுõஃஃ
64 பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்தார்; இருபத்தைந்து பத்துரூபாய் நோட்டுகளை எண்ணினார்.
65 மனத்தின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிப்போனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.
66 பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், ''உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக்கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது.--
67 ''மக்கள், மாடுகன்று, பொருள் தேடுதல், முதயவற்றிலேயே மூழ்கிப்போனவருக்கு பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? செல்வம் என்னும் முட்டுக்கட்டையை அகற்றாதவரையில், ஞானம் எப்படிக் கிடைக்கும்?--
68 ''பணத்தாசையை வெல்வது மிகக்கடினம். அது துக்கமும் இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்நதியில் பல பேராசைச் சுழல்களும் திமிர், பொறாமை போன்ற எதிர்த்துப் போராடமுடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அதிருந்து தப்பிக்க முடியும்.--
69 ''பேராசை பிரம்மத்தின் அகண்ட வைரியாகும்; மனக்குவிப்பிற்கோ தியானத்திற்கோ நேரமிருப்பதில்லை. பிறகு விரக்தியோ முக்தியோ எங்கிருந்து வரும்? பேராசை பிடித்தவர் ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்லை.--
70 ''பேராசைக்கு சாந்தியில்லை; திருப்தியில்லை; நிம்மதியுமில்லை. பேராசை மனத்துள்ளே புகுந்துவிட்டால், ஆன்மீக முன்னேற்றத்திற்குண்டான அத்தனை கதவுகளையும் மூடிவிடும்.--
71 ''சுருதிகளாலும் ஸ்மிருதிகளாலும் 'செய்யக்கூடாதுஃ என்று விதிக்கப்பட்ட காரியங்களையே முழுதும் செய்துகொண்டிருக்கும் மனிதருக்கு சாந்தியென்பதே இருக்காது.--
72 ''இதற்குக் 'குழம்பிய அல்லது பிரமித்துப்போன மனம்ஃ என்று பெயர். புலனின்பச் சேற்றில் உழன்றுகொண்டு, கெடுதலான செயல்களையே எந்நேரமும் செய்துகொண்டு, தமக்கு எது நன்மை என்று தெரியாமலேயே இம் மனிதர் வாழ்கிறார்.--
73 ''அவர் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் பெறலாம்; ஆயினும் செயல்களின் பலனைத் துறக்காவிட்டால், ஆத்ம ஞானத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளனைத்தும் வீண். அவருக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது.--
74 ''யார் வந்து எதை வேண்டினாலும், ஞானிகள் முதல் அவருடைய (ஆன்மீக) அதிகாரத்தையே1 நோக்குகின்றனர். பிறகு, யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே கொடுக்கின்றனர்.--
75 ''இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப்போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப்போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப்போகிறார்; ஆன்மீக வாழ்விலும் தோற்றுப்போகிறார். --
76 ''இதயத்தைத் தூய்மை செய்துகொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞானகர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி.--
77 ''ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்; எவ்வளவு ஜீரணிக்கமுடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே.--
78 ''என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக்கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்கமுடிந்த அளவே கொடுப்பேன்.--
79 ''இதை கவனமாகச் செவிமடுத்தால் உங்களுக்கு மங்களமுண்டாகும். புனிதமான இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் ஒருபோதும் ஸத்தியமில்லாததைப் பேசமாட்டேன்ஃஃ.
80 இதயத்தில் முழுநம்பிக்கையுடன் ஞானிகளின் திருவாய்மொழி என்னும் அமிருதம் பெருகும் ஆற்றில் நீராடினால், எல்லா மலங்களும் கழுவித் துடைக்கப்பட்டு உள்ளும் புறமும் தூய்மையடையும்.
81 இதுவே ஸாயீநாதரின் மஹிமை; வர்ணிக்க முடியாதது. ஒப்புநோக்கமுடியாத விஷயத்திற்கு எதை உதாரணமாகக் கூறுவேன்? தூய்மையான பிரேமையினால்தான் அதை அடையமுடியும்.
82 எல்லாருக்கும் அன்னையாகிய அவர், துக்கத்தாலும் வயாலும் அவதிப்படுபவர் களுக்கும் வாழ்க்கையில் இன்னல்படுபவர்களுக்கும் அடைக்கலமாவார். தீனர்களுக்கும் பலஹீனர்களுக்கும், குளிர்நிழலும் அடைக்கலமும் தரும் கற்பகத் தருவாவார்.
83 ஒருவர் ஆன்மீக முன்னேற்றம் கருதி, உலக வாழ்வைத் துறந்து ஏகாந்தமாக தியானம் செய்ய மலைகளுக்கோ பள்ளத்தாக்குகளுக்கோ செல்லலாம்.
84 அவ்வாறு சுயநலமாக ஆன்மீக லாபமடைந்து வெற்றிகண்ட ஞானியர் எத்தனையோ பேர்; ஆனால், அவர்களால் மற்றவர்களுக்கு என்ன பிரயோஜனம்?
85 ஸாயீ பாபா அத்தகைய மஹான் அல்லர். நண்பர்கள், உற்றார், உறவினர், வீடு, மனைவி, மக்கள், குடும்பம் ஆகியன ஏதுமில்லாமருந்தும் அவர் ஜனங்களிடையே வாழ்ந்தார்.
86 ஐந்து இல்லங்களின் வாயிற்படிகளில் நின்று கையேந்திப் பிச்சையெடுத்த உணவையுட்கொண்டு, தம்முடைய உடைமையான ஒருசில பொருள்களைத் தம்மைச் சுற்றிலும் வைத்துக்கொண்டு, உலகத்தாருக்கு வாழும் நெறியைப் பயிற்றுவிக்கும் வகையில் எந்நேரமும் ஒரு மரத்தடியில் வாழ்ந்தார்.
87 தாம் பிரம்ம ஐக்கிய நிலையில் இருந்தபோதிலும், உலகமக்களின் க்ஷேமத்திற்காகவும் மங்களத்திற்காகவும் அநேக சிரமங்களை ஏற்கும் பேருள்ளமும் மன்னிக்கும் பெருந்தன்மையும் உடைய இதுபோன்ற ஸாதுக்களைக் காண்பதரிது.
88 இந்த நிர்மலமான ரத்தினத்தை வயிற்றில் சுமந்த அன்னை மஹாபுண்ணியசா; தூய்மையான பெற்றோர்கள் புண்ணியசாகள்; பிறந்த குலம் புண்ணியம் செய்தது; பிறந்த தேசம் புண்ணிய பூமி.
89 எம் முயற்சியும் செய்யாமலேயே இந்தத் 'தொட்டதைப் பொன்னாக்கும் ரத்தினம்ஃ அவர்களுக்குக் கிடைத்தது; ஆனால், அவர்களோ இதை ஒரு சாதாரணமான கல் என்று தவறாக எண்ணித் தூக்கியெறிந்துவிட்டனர். வெகுகாலத்திற்கு சிர்டீ மக்களுக்கு இப் பரமபாகவதரின் அருமை தெரியாதுபோய்விட்டது.
90 சாணக்குவியல் கிடந்த ஒரு விலைமதிப்பற்ற மாணிக்கத்தைச் சிறுவர்கள் எடுத்து, ஒரு சாதாரணக் கல்லைப்போல் எறிந்து உதைத்து ஏறிநின்று விளையாடுவதைப் போன்று, சிர்டீ மக்கள் இம்மாணிக்கத்தின் அருமை தெரியாதிருந்துவிட்டனர்.
91 இவ்விதமாகவே, 'பிரம்மத்தைக்காட்டுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவர் பாபாவினுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுத் திருப்தி அடைந்துவிட்டார். நீங்களும் நானும் நாமெல்லாருமே, ஒரேவிதமாகத்தான் செயல்படுகிறோம்; பாதை கடினமாகும்போது பயணத்தையே கைவிட்டுவிடுகிறோம்õ
92 ஒயின் இனிமையையும் தொடும் உணர்வின் சுகத்தையும் நறுமணத்தை மோத்தலையும் (மூக்கால் நுகர்தலையும்) வெளிக்காட்சிகளைக் காணும் மகிழ்ச்சியையும் நாம் நாடிச்சென்று இன்பம் தேடும்வரை புலன்களை அடக்கமுடியாது.
93 புலன்களை ஒடுக்காமல் புலனின்பங்களிருந்து விடுபடமுடியாது, ஆத்மாவினுடைய குணாதிசயங்களைத் தெரிந்துகொள்ளமுடியாது; ஆத்ம ஞானம் பெறமுடியாது.
94 முதலாவதாக, ஒருவர் எல்லா ஆசைகளிருந்தும் விடுபடவேண்டும்; பிறகு வேறெதிலும் நாட்டமின்றி குருவை சரணடைய வேண்டும். திடமான சிரத்தையுள்ளவரே ஆத்ம விஞ்ஞானம் பெறுவதற்குத் தகுதியான பாத்திரமாவார்.
95 ஐந்து ஞானேந்திரியங்களும் தங்களுடைய புலன்களின்மேல் உண்டான நாட்டங்களை விட்டுவிடும்போதும், தீர்மானங்கள் செய்வது, தேவையில்லாத கற்பனைகள் செய்வது போன்ற நடப்புகளை மனம் தானாகவே நிறுத்திவிடும்போதும்; --
96 இவ்வாறு மனம் அடங்கிவிட்ட நிலையில், புத்தியும் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திவிடும்போது, அதுவே மிக உன்னதமான நிலை அல்லது மோக்ஷம்; அதுவே நிர்விகாரமான பிரம்மத்தை அடைதல்.
97 தீர்மானங்கள் செய்யும் விஷயத்தில் எவருடைய புத்தி சூனியமாகிவிட்டதோ, எவர் 'நான் யார்ஃ என்று உணர்ந்துகொண்டவரோ, அவரே புண்ணியசா; அவரே ஆத்ம ஞானம் பெறுவார்; மற்றவர்கள் பெறமாட்டார்கள்.
98 உலக சுகங்களுக்குப் பராமுகம் காட்டுபவருடைய புலன்கள் ஆத்மாவையே நாடும்; பேரின்பம் விளையும். இதன் பிறகு வேறெதுவுமே மகிழ்ச்சியைத் தராது.
99 ஆத்மா சூக்குமமானது; உணர்ந்துகொள்வதற்கு மிகக்கடினமானது. உலக விவகாரங்களாலும் புலன்களின் ஆசைகளாலும் மறைக்கப்பட்டு, அறிந்துகொள்ள முடியாததாக ஆகிவிடுகிறது. ஆத்ம ஞானத்தைப் பெறுதலே பரமானந்தத்தை அடையும் வழியாகும்.
100 எவர் இவ்வுலகத்திலும் மேலுலகத்திலுமிருக்கும் எப்பொருளின் மீதும் ஆசை வைக்காதவரோ, நான்முகனாகப் (படைக்கும் கடவுளாகப்) பதவி பெறுவதற்கும் ஆசை இல்லாதவரோ, அவரே பிரம்மபதத்தை அடைகிறார். அவரையே முக்தியடைந்தவராகக் கருதவேண்டும்.
101 மெதுவாகவும் படிப்படியாகவும் மனத்தைப் புலனின்பங்களிருந்து விடுபடச்செய்து, ஆத்ம ஞானம் பெறுவதற்காக 'நான் யார்ஃ என்ற சிந்தனையில் செலுத்தவேண்டும்.
102 புத்திமான்களால்தான் இவ்வுலக வாழ்விலும் மேலுலக வாழ்விலும் செயல்களின் பலன்களிருந்து விடுபட முடியும்; சுகம் / துக்கம் போன்ற இரட்டைச் சுழல்களிருந்தும் விடுபடமுடியும். அத்யாத்ம யோகத்தின் உண்மையான வழி இதுவே.
103 ஆதிதைவிகம்1, ஆத்யாமிகம்1, ஆதிபௌதிகம்1, ஆகிய மூவகைத் துன்பம் என்னும் ஊழித்தீயின் ஜுவாலைகளால் கொதித்துக்கொண் டிருக்கும் ஸம்ஸாரக் கடல் யாரால் சந்தோஷமாக வாழமுடியும்?
104 இத்துன்பங்களிருந்து விடுபட, ஸாயீயினுடைய அருளை நாடுங்கள். அவருடைய சுந்தரமான சரித்திரத்தை பயபக்தியுடன் கேளுங்கள்; பாராயணம் செய்யுங்கள்; மனத்திரையில் ஓடவிடுங்கள்.
105 மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு இந்த 'ஸ்ரீ ஸாயீநாத சரித்திரம்ஃ செவிமடுக்கப்பட்டால், அவர்களுக்கு இவ்வுலகிலும் மேலுலகிலும் விரும்பினவெல்லாம் கிடைக்கும். பாபாவின் லீலைகள் விசித்திரமானவைõ
106 பாக்கியம் செய்தவர்களே இக்காவியத்தை சிரத்தையுடன் கேட்பார்கள். பக்தியுடன் கேட்பவர்கள் சாந்தமயமாகிவிடுவார்கள்.
107 இக்காதையின் அருவி ஓட்டத்தில் கர்மமென்னும் உப்பு (நற்செயலோ, தீச்செயலோ) கரைந்துவிடும். கேட்கக் கேட்க, ஸாயீயின் சுந்தரமான உருவம் கண்முன்னே தோன்றும்.
108 ஸாயீயின் காதைகளைக் கேட்டால் பாவங்கள் அழியும். இக்காதைகளைக் கேட்பவர்கள் போராடி மரணத்தையும் வெல்லும் சக்தி பெறுகிறார்கள்; ஆயாஸம் ஏதுமில்லாமல் பரம உல்லாஸத்தை அடைகிறார்கள்.
109 ஸாயீ சரித்திரத்தைக் கேட்பது மனத்தைத் தூய்மையடையச் செய்கிறது. ஜனன மரணச் சுழருந்து விடுபடச் செய்கிறது; செயல்களின் பலனை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி செய்து, உயர்ந்த பதவியான பிரம்மபதத்தை அடைய வழிகோலுகிறது.
110 இவ்வாறாக, ஸாயீநாதருக்கு ஸேவை செய்யவேண்டுமென்கிற ஆசை, ஸேவகர்களை நிரந்தரமாக மற்ற ஆசைகள் அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. ஸ்ரீஸாயீராமன் அவர்களுக்கு ஸதாஸர்வகாலமும் (எந்நேரமும்) அடைக்கலம் அளிக்கிறார்.
111 செவிமடுப்பவர்களேõ இக்காவியத்தின் ஒரு பகுதியையாவது தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள்; அல்லது காதால் கேளுங்கள். படித்தபின் பரிசீலனை செய்யுங்கள்; படித்ததைச் சிந்தனை செய்யுங்கள்; மறுபடியும் மறுபடியும் படித்த விஷயத்தை தியானம் செய்யுங்கள்.
112 தைத்திரீய உபநிஷதத்தின் சித்தாந்தமான, ''ஆனந்தமே பிரம்மம்; இதை நான் உறுதியுடன் அறிகிறேன்ஃஃ என்பதை பக்தர்களுக்கு பாபா திரும்பத் திரும்ப உபதேசம் செய்ததுபோல் தோன்றியது.
113 ''சிறிதளவும் கவலைக்கு இடங்கொடாதீர்கள்; எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்; மரண பரியந்தம் கவலை வேண்டா; கவலையே வேண்டா.ஃஃ இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்.
114 இந்த அத்தியாயத்தின் லட்சியம் பிரம்மதத்துவத்தை நிர்த்தாரணம் செய்வதே. ஸாயீயிடம் சரணமடைபவர்களுக்கு அதுவே ஸம்ஸாரக் கடலைக் கடக்கும் நாவாயாக அமையும்.
115 சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப, ''இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்; பரோபகாரம் செய்யுங்கள்ஃஃ என்று உபதேசம் செய்கின்றன. பாபாவும் சாஸ்திர விதிகளின்படியே நடந்தார்.
116 'இது பொருத்தமா, பொருத்தமில்லாததா?ஃ என்பதெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடும் அபிப்பிராயங்கள். இக் காவியமோ சாமானிய மக்களுக்குப் பிரீதியையும் நன்மையையுமே குறிக்கோளாக ஏற்றுக்கொண் டிருக்கிறது.
117 அதுதான் இங்கே பிரயோஜனம். பாபாவுக்குக் காரண காரிய சம்பந்தம் நன்கு தெரியும். பாபாவின் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அது நடந்துவிடும் என்பதை உறுதியாக அறியவும்.
118 குருவினுடைய திருவாய்மொழியாக வெளிவரும் கதைகளைக் கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
119 ஸாயீயின் அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும் துயரங்களும் ஒழிந்துபோகும்; இவர்களுடைய கெட்டகாலம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
120 பாபாவினுடைய அற்புதமான லீலைகளைக் கேட்டு ஆச்சரியப்படாதவரோ, அவருடைய தரிசனத்தினால் மன அமைதி பெற்று, அவருடைய பாதகமலங்களில் பணிவுடன் சரணமடையாத அபாக்கியசாயோ எவரும் உண்டோ?
121 புனிதமானதும் தூய்மையானதுமான ஸாயீயின் சரித்திரம் திறந்த மனத்துடன் கேட்கப்படவேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்புக் கிடைக்கும்போது யார் அதை நழுவவிடுவார்?
122 புத்திரன், மித்திரன் (நண்பன்), மனைவி இவர்களெல்லாம் ஸம்ஸாரக் கடன் சுழல்கள். இக்கடல் காமம், குரோதம், போன்ற முதலைகள் அநேகம். இக்கடன் அலைகள் பலவிதமான நோய்கள் என்னும் திமிங்கிலங்களாலும் எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் உயரமாக எழுப்பப்பட்டு ஆர்ப்பரிக்கின்றன.
123 சில சமயங்களில் மனிதன் சப்பிலும் துயரத்திலும் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். இரட்டைச் சுழல்கள் (இன்பம் / துன்பம் - குளிர் / வெப்பம்) வாழ்க்கையில் அடிப்படை சந்தேகங்களை எழுப்புகின்றன. ஆயினும் மனிதனால் பற்றறுக்கும் நிலைக்கு உயர முடிவதில்லை.
124 'நான் சுத்தமான பிரம்மம்; ஒரு மனித உடல் மாட்டிக்கொண் டிருக்கிறேன்; கூண்டுக்குள் இருக்கும் குறுக்குத் தண்டைக் கெட்டியாகக் கால்களால் பிடித்துக் கொண்டு தலைகீழாகத் தொங்கும் கிளி நான்ஃ என்னும் கருத்தை அடிக்கடி உங்களுக்கே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.
125 மாயையின் மோஹத்தில் நீங்கள் வழிதவறிவிட்டீர்கள்; அதன் காரணமாக உங்களுக்கு எது சாசுவதமான நன்மை என்பதை மறந்துவிட்டீர்கள். சுயமுயற்சியாலேயே விழித்தெழுந்து, உஷாராக ஆகி, உங்களுடைய உண்மையான சொரூபத்தை நாடுங்கள்.
126 வழிதவறிப் போவது வாழ்க்கையில் பிரமிப்பை அதிகமாக்குகிறது. தேஹாபிமானமும் 'நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் உணர்வுகளும் மாயைகள்; கானல் நீரைப் போன்ற ஏமாற்றுத் தோற்றங்கள். ஆகவே, 'நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் எண்ணங்களை வென்றுவிடுங்கள்.
127 'நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் வலைகளில் ஏன் மாட்டிக்கொள்ளவேண்டும் என்பது பற்றித் தீவிரமாகச் சிந்தனை செய்யுங்கள். உன்னுடைய தளைகளிருந்து விடுபடு; கிளியேõ வானத்தில் சிறகடித்து உயரமாகப் பறக்கலாம்õ
128 முக்தியை நாடினாலே பந்தப்பட்டிருக்கிறாய் என்று பொருள்õ பந்தத்திருந்துதானே விடுதலை பெறமுடியும்? பந்தமும் வேண்டா, முக்தியும் வேண்டா என்று ஒதுக்கிவிட்டு, உன்னுடைய சுத்தமானதும் உண்மையானதுமான நிலையில் ஒடுங்கு.
129 எல்லா ஞானங்களும் ஒன்றுக்கொன்று சார்புடையவையே; சுகமும் துக்கமும் அஞ்ஞானத்தின் விளைவுகளே. இவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு உள்ளுணர்வு அனுபவத்தை விருத்தி செய்துகொள்; பிரம்ம ஞானம் கைக்கெட்டிய தூரத்தில் வந்துவிடும்.
130 'உன்னுடையதுஃ 'என்னுடையதுஃ என்னும் உணர்வுகள் இருக்கும்வரை உனக்கு எது உண்மையான நன்மை என்பதை நீ பொருட்படுத்தவில்லை என்றே அறிக. இவ்வுணர்வுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, உடன்மேல் உள்ள பேராசையை உதறிவிட்டு உன்னுடைய உண்மையான சொரூபத்தை நோக்கித் திரும்பு.
131 குபேரனைப் போன்ற ஒரு பணக்காரர் பிச்சை எடுக்கப் போவது துர்ப்பாக்கியம் அன்றோõ அஞ்ஞானத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவன்றோ?
132 தினமும் நல்ல சாஸ்திரங்களைக் காதால் கேளுங்கள்; குருவினுடைய திருவாய்மொழிக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடங்கள்; எந்நேரமும் பிரதமமான லட்சியத்தை அடைவதைப்பற்றி விழிப்புடன் இருங்கள்.
133 இவ்வாழ்நெறியைக் கடைப்பிடிப்பதால் மக்கள் சுயமுயற்சியால் மேன்மையுறும் பாதையைக் காண்பர். இவ்விதமாக எண்ணற்ற ஜீவர்கள் எழுச்சியுற்று உயர்வு பெறுவர்.
134 எவர் இரவுபகலாக 'எப்பொழுது ஸம்ஸார பந்தங்களிருந்து விடுதலை கிடைக்கும்ஃ என்று ஏங்குகிறாரோ, அவர் பந்தங்களை சீக்கிரமே அறுத்துவிடுவார்.
135 இவ்வுலக வாழ்க்கை ஸாரமற்றது என்பதை உறுதியாக உணர்ந்துகொண்டு, எப்பொழுதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அத்யயனமும் (சிறந்த நூல்களைக் கற்றல்) ஆத்ம சிந்தனையும் செய்யுங்கள்.
136 சிஷ்யன் பக்தியுடனும் சிரத்தையுடனும் விநயத்துடனும் பூரணமாக சரணாகதியடைந்து ஸாஷ்டாங்கமாக1 நமஸ்காரம் செய்யாவிடின் குரு ஞானக்கருவூலத்தை அளிக்கமாட்டார்.
137 உங்களை முழுமையாக குருவிடம் சரணாகதியாக்கிவிட்டு, குருவிற்கு சிசுருஷை (பணிவிடை) செய்யுங்கள். குருவினிடமிருந்து முழுப்பலனையும் அடையும் வகையில்
138 ஜீவாத்மா எது, பரமாத்மா எது, என்பதை குருவைத் தவிர வேறெவராலும் விளக்க முடியாது. சிஷ்யன் பூரணமாக சரணமடையாவிட்டால் குருவும் ஞானத்தை அளிக்கமாட்டார்.
139 குருவைத் தவிர வேறெவரும் ஞானம் அளித்தால் மனத்தில் பதியாது; ஸம்ஸாரத்திருந்து நிவிர்த்தியைத் தராது; மோக்ஷத்தையும் அளிக்காது.
140 ஆகவே, குருவின்றி ஞானம் இல்லை; எல்லா வித்வான்களும் அறிவாளிகளும் இதை நன்கு அறிவர். பிரம்மமும் (முழுமுதற்பொருளும்) மனிதனுடைய ஆத்மாவும் ஒன்றே என்னும் அனுபவத்தை அளிக்க குருவைத் தவிர வேறெவருக்கும் ஸாமர்த்தியம் இல்லை.
141 தயக்கமும் கூச்சமும் இங்கு வேண்டா. கர்வத்தையும் அஹங்காரத்தையும் அறவே ஒழித்துவிட்டு பூமியில் விழுந்து தண்டனிடுங்கள்; குருவின் பாதங்களில் பணிவுடன் தலையை வையுங்கள்.
142 திடமான மனத்துடன் இவ்வுறுதிமொழியைக் கூறுங்கள், ''நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை; உங்களிடம், உங்களிடம் மாத்திரமே, விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்.ஃஃ
143 பிறகு அவர் செய்யும் அற்புதங்களைப் பாருங்கள்õ தயாஸாகரமான குரு, உம்மீது கருணைகூர்ந்து உம்மை அலைகளுக்குமேலே தூக்கிப் பிடித்துக்கொள்வார்.
144 உம்முடைய தலைமேல் தம் அபயக்கரத்தை வைத்து, எல்லா இன்னல்களையும் துயர்களையும் அழித்துவிடுவார்; பாவமூட்டைகளை எரித்துவிடுவார்; உம்முடைய நெற்றியில் உதீ அணிவிப்பார்.
145 'ஜீவனும் சிவனும் ஒன்றேஃ என்பதை பக்தர்களுக்கு விரிவாக பாபா விளக்கிய நிகழ்ச்சிக்கு, 'பிரம்ம ஞானம் கொடுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவர் ஒரு சாக்குப்போக்குதான்.
146 ஸாயீ மஹராஜ் ஈடிணையற்ற அறிவும் ஞானமும் படைத்திருந்தபோது, அவர் பரிஹாஸத்திற்கும் நகைச்சுவைக்கும் ஏன் இவ்வளவு இடம் கொடுத்தார்? தமாஷில் இவ்வளவு ஆர்வம் ஏன்?
147 இந்த ஸந்தேஹம் மனத்தில் எழுவது இயற்கையே. ஆயினும் ஆழமாகச் சிந்தித்தால், அதற்கு ஒரே ஒரு நல்ல காரணம் இருப்பது தெளிவாக விளங்கும்.
148 நாம் குழந்தைகளுடன் பேசி அவர்களுடைய மழலையைக் கேட்டு மகிழும்போது, அறிவு முதிர்ந்த மும்முரமான பேச்சுக்கு இடமேது?
149 இதனால் நாம் குழந்தைகளிடம் அன்பு காட்டவில்லை என்றா பொருள்? இவ்வாறே பாபாவினுடைய பரிஹாஸமும் நகைச்சுவையும் கோமாளிக்கூத்தும் என்றறிய வேண்டும்.
150 ஒரு குழந்தைக்குத் தனக்கு என்ன வியாதி என்று தெரியுமா? குழந்தை மருந்தைக் குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் செய்யும்போது, தாய் பலவந்தமாக மருந்தைக் குடிக்கவைக்கிறாள்.
151 சில சமயங்களில் கெஞ்சிக் கூத்தாடுவாள்; சில சமயம் கோபத்துடன் முறைத்துப் பார்ப்பாள்; சில சமயம் குச்சியால் அடிப்பாள்; சில சமயம் அணைத்துக்கொள்ளவும் செய்வாள் (மருந்தைக் குடிக்கவைக்க).
152 குழந்தைகள் வளர்ந்துவிட்ட பிறகும் அவர்களுக்குச் செல்லம் கொடுக்கும்போதோ, கொஞ்சும்போதோ, அவர்களுடைய புத்திவளர்ச்சியை அறிந்துகொண்டே செயல்பட வேண்டும். இவ்வறிவுரை ஞானபோதனைக்கும் பொருந்தும்.
153 புத்தி எவ்வளவு கூர்மையாக இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரமாக கிரஹிக்கும் சக்தியும் செயல்படும். ஒரேகணத்தில் உபதேசம் என்னவென்பது புரிந்துவிடும். மந்தபுத்தியாக இருந்தால் நிலையே வேறு; உபதேசம் செய்யப் பிரயாசை (உழைப்பு) அதிகமாகத் தேவைப்படும்.
154 ஸமர்த்த ஸாயீ ஒரு ஞானநிதி. பக்தனுடைய புத்திசக்தியை எடைபோட்டபின், பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு பாத்திரத்தின் கொள்ளளவிற்கு ஏற்றவாறு ஞானச்செல்வத்தை அளிக்கிறார்.
155 அவருடைய அந்தர்ஞானம் பூரணமானது; எல்லாரையும்பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியும். ஒவ்வொரு பக்தருக்கும் என்ன தகுதி இருக்கிறது என்றறிந்து அதற்கேற்ற ஸாதனைமுறையை அவருக்கு வழங்குவார்.
156 ஒவ்வொருவருடைய ஆன்மீக அதிகாரத்தின் பிரகாரம் தகுதியுள்ளவரா, தகுதியற்றவரா, என்றறிந்த பின்னரே பக்தரின் பாரத்தைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்.
157 அதுபோலவே, ஆண்டுகளில் முதியவர்கள் என நம்மை நாம் கருதினாலும், ஸாயீ என்னும் ஸித்தபுருஷரின் முன்பு நாம் அனைவரும் குழந்தைகளே. இதனால்தான் நாம் நகைச்சுவையிலும் நையாண்டியிலும் சதா ஆர்வம் காட்டுகிறோம்.
158 பாபா விநோதங்களின் பெட்டகமாக வாழ்ந்தார். ஒவ்வொரு பக்தருக்கும் எது மிக விருப்பமோ அதை யதேஷ்டமாகக் (விருப்பம் நிறையுமாறு) கொடுத்தார்.
159 புத்திகூர்மையானவர்களும் சரி, மந்தபுத்திக்காரர்களும் சரி, இந்த அத்தியாயத்தைப் படிப்பதால் பரமானந்தம் அடைவார்கள். எல்லாருமே மேலும் இக்காதையைக் கேட்கவேண்டுமென்று விரும்புவர். தியானம் செய்யின் சந்தோஷமடைந்து திருப்தியுறுவர்.
160 திரும்பத் திரும்பப் படித்தால் ஆன்மீகப் பாதை புலப்படும்; எந்நேரமும் மனத்திரையில் ஓடவிட்டால் பேரானந்தத்தையும் தங்குதடையில்லாத மனமகிழ்ச்சியையும் அடைவர். இதுவே ஆராய்ச்சிக்கப்பாற்பட்ட பாபாவின் லீலைõ
161 மிகச் சிறிய அளவிலும் இந்த அனுபவத்தைப் பெறும் பாக்கியம் எவராவது பெற்றால், மனத்தாலும் வாக்காலும் செயலாலும் அவர் பாபாவோடு இணைந்துகொள்வார். ஸாயீயின் லீலைகள் கற்பனைக்கெட்டாதவைõ
162 ஹேமாட் ஸாயீ பாதங்களில் சரணடைகிறேன். நகைச்சுவையாலும் கேசெய்தும் ஞானத்தை அளிப்பது, பக்தர்களைக் கைதூக்கிவிட்டு மங்களம் அளிக்கும் வழிகளில் ஒன்று. 'பிரம்மத்தைக் காட்டுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவர் ஒரு நொண்டிச்சாக்குதான்õ
163 அடுத்த அத்தியாயம் மேலும் இனிமையானதுõ செவிமடுப்பவர்கள் திருப்தியடைவார்கள். என்னுடைய இதயத்தின் ரஹஸிய தாபம் நிறைவேறும்.
164 நான் எவ்வாறு பாபாவின் செய்தியை எடுத்துக்கொண்டு மாதவராவிடம் (சாமா) சென்றேன் என்பதுபற்றியும் அதன் பிறகு எவ்வாறு பாபாவின் அநுக்கிரஹத்தைப் பெற்றேன் என்பதுபற்றியுமான விவரங்களைச் சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்ஃ என்னும் பதினேழாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.