Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் -26


26. குலகுருவிடம் விசுவாசத்தை நிலைபெறச்
செய்த செம்மை-காக்காய்வ­ப்பு நோய்
தீர்த்த அருள்-தற்கொலை முயற்சியைத் தடுத்தாட்கொண்ட கருணை




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 அனைத்து உயிர்வர்க்கங்களையும் உயிரற்ற ஜடப்பொருள்களையும் தன்னகத்தே கொண்ட அகில உலகமும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் போன்று தெளிவாகக் காணப்படினும், இவையனைத்தும் மாயையால் சிருஷ்டிக்கப்பட்ட ஜாலக்காட்சிகளே.

2 உயிருள்ளவை, உயிரில்லாதவை என்ற சிருஷ்டி வகையெல்லாம் ஒரு வெளிப்பாடே யில்லை. மனத்தில் ஏற்படும் மாயம் ஈதெல்லாம் நிஜமாகவே இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

3 கண்ணாடியில் தெரியும் பிம்பம் கண்ணாடிக்குள் இல்லை. கனவில் அனுபவித்த சுகங்கள் அனைத்தும் விழிப்பு ஏற்பட்டவுடன் காணாமற்போகின்றன.

4 கண்விழித்தெழுந்தவுடன் கனவுலகம் மறைந்துபோகிறது. வேத மஹா வாக்கியங்களுக்கு குருவின் விளக்கத்தைக் கேட்ட பிறகு, அத்வைத ஆனந்தப் பிரகாசம் தோன்றுகிறது.

5 இறைவனின் அவதாரமும் தன்னலமற்ற தியாகத்தின் அடித்தளமும் இப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த சக்தியுமான ஸத்குரு மனம் கனிந்தால்தான், இந்த சாட்சாத்காரம் (வேத மஹா வாக்கியங்களின் நேர் அனுபவம்) வெளிப்படும்.

6 சுயஞ்ஜோதியானதும் என்றும் நிலைத்திருப்பதுமான ஆத்ம சொரூபமே அது. உயிருள்ளவற்றையும் உயிரில்லாதவற்றையும் தன்னுள் அடக்கிய பஞ்சபூதங்களாலான இப்பிரபஞ்சம், மாயை காட்டி இன்புறும் இறைவனின் லீலையே.

7 பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை நம் கண்முன் விரியும் பஞ்சபூதங்களாலான உலகம் மாயையால் விளைவிக்கப்பட்ட வெறும் காட்சியே.

8 அஞ்ஞான இருட்டில் ஒரே பொருள் கயிறாகவும் பாம்பாகவும் குச்சியாகவும் தண்ணீராகவும் தெரியக்கூடும். இப் பிரம்மாண்டமான உலகமும் அவ்வாறே தெரிகிறது. அதற்கென்று உண்மையான சொரூபம் ஏதுமில்லை.

9 கண்ணால் அறியப்படும் உலகம் மாயை மயமானது. தத்துவஞானம் கிடைத்த பிறகே இம்மாயை விலகும். பிராப்தம் வரும்பொழுது குருவின் உபதேசம் தரும் எழுச்சியால் தத்துவஞானம் விளைகிறது.

10 ஸமஸ்கிருத மூலச் சொல்லாகிய 'க்ருஃ (எதம) வி­ருந்து உருவான 'க்ருணாதிஃ என்னும் சொல்­ன் ரூபத்தையும் அர்த்தத்தையும் மனத்திற்கொண்டு பார்க்கும்போது, சிஷ்யனுக்குத் தத்துவ உபதேசம் செய்யும் சக்தியுள்ளவர் குருவே என்பது தெள்ளத் தெளிவாகிறது.

11 ஆகவே நாம் பாபாவை அகமுகச் சிந்தனையில் நாட்டமளிக்குமாறும் எது நித்தியம், எது அநித்தியம் என்னும் விவேகத்தை மனத்திற்கு அளிக்குமாறும் உலகப் பற்று இல்லாத நிலைக்கு நம்மை உயர்த்துமாறும் பிரார்த்தனை செய்வோமாக.

12 நானோ விவேகமில்லாதவன்; மூடன்; குதர்க்கம் ஆட்சி செய்யும் புத்தியையுடையவன்; மறைபொருள் அறியாத அஞ்ஞானி. இதுதான் என்னுடைய குழப்பத்திற்கெல்லாம் காரணம்.

13 ஓ ஸாயீõ என்னுடைய மனத்தைக் கண்ணாடியைப்போல் தெளிவானதாகவும் தூய்மையானதாகவும் ஆக்கிவிடுங்கள். குருவின் வசனத்திலும் வேதாந்தக் கருத்துகளிலும் அசையாத நம்பிக்கையை என் மனம் பெறட்டும். ஆத்மபோதனையை என் மனத்துள் முத்திரையிடுங்கள்.

14 ஸமர்த்த ஸாயீ ஸத்குருவேõ இவையனைத்திற்கும் மேலாக, ஞானத்தின் சூக்குமங்கள் எனக்குப் புரியும்படி செய்யுங்கள். அனுபவஞானம் இல்லாத சொற்சிலம்பம் எத்தகைய ஆன்மீக முன்னேற்றத்தை சாதிக்க முடியும்?

15 ஆகவே, பாபாõ எனக்கு அருள் புரியுங்கள். உம்முடைய சக்தியினால் என்னை ஆத்மஞான அனுபவத்தில் மூழ்கும்படி செய்யுங்கள். ஸஹஜமாகவே யான் இறையுடன் இரண்டறக் கலக்க உமது கிருபையாகிய தானத்தைச் செய்தருளுமாறு வேண்டுகின்றேன்.

16 ஓ என் இறைவனேõ ஸத்குரு ஸாயீõ என்னுடைய அஹங்காரத்தை உம்முடைய பாதங்களில் சரணடையச் செய்கிறேன். என்னுடைய சுமைகளும் பொறுப்புகளும் உம்முடையனவே. ஏனெனில், எனக்கென்று தனிப்பட்ட இருப்பு ஏதும் இனியில்லை.

17 என்னுடைய தேஹாபிமானத்தை நீக்கிவிடுங்கள். எனக்கு சுகமும் வேண்டா; துக்கமும் வேண்டா. என் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தேவரீர் விரும்பியவாறு பொம்மலாட்ட நூல்களை இழுக்கலாம்.

18 அல்லது, நீங்களே நானாகிவிடுங்கள். சுகதுக்கங்களின் அனுபவங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு அவைபற்றிய தொல்லை எதுவுமே வேண்டா.

19 விருப்பங்களனைத்தும் நிறைவேறியவரே ஜயஜயõ உம்மிடத்தில் என் அன்பு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளரட்டும். மங்களங்களுக்கெல்லாம் அடித்தளமானவரேõ அலைபாயும் என் மனம் தேவரீர் பாதங்களில் ஓய்வு பெறட்டும்.

20 நீங்களல்லாது வேறு யார் எங்களிடம் இதமான வார்த்தைகளைப் பேசப்போகிறார்? வேறு எவர் எங்களுடைய துன்பங்களுக்கும் துக்கங்களுக்கும் முடிவு கண்டு மனத்திற்கு சாந்தியளிக்க முடியும்?

21 பாபாõ தாங்கள் சிர்டீக்கு வந்ததும் இங்கேயே வசிப்பதும் சிர்டீ செய்த சுகிர்தம் (நல்வினை) அன்றோõ தாங்கள் வாழ்வதால் சிர்டீ புண்ணியத் தலம் ஆகிவிட்டது.

22 சிர்டீ கிராமம் புண்ணியம் செய்தது. கிருபாமூர்த்தியான ஸாயீ சிர்டீயைத் தாம் வாழும் இடமாக அலங்கரித்து இக்கிராமத்திற்கு பாக்கியத்தையும் பேரதிருஷ்டத்தையும் வழங்கியிருக்கிறார்.

23 நீரே எனக்கு உணர்வூட்டி ஊக்கப்படுத்துகிறீர்; நீரே என்னுடைய நாவை அசைக்கிறீர். அவ்வாறிருக்க உம்முடைய புகழைப்பாட நான் யார்? நீரே வினையாற்றுபவரும் வினையாற்றவைப்பவரும் அல்லீரோõ

24 தேவரீர் கூட்டுறவே எங்களுக்கு ஆகமங்களும் நிகமங்களும் ஆகும். தினந்தோறும் உங்களுடைய சரித்திரத்தைக் கேட்பதே எங்களது பாராயணமாகும்.

25 ஒரு கணமும் வீணாக்காமல் உமது நாமத்தை ஜபம் செய்வதே எங்களுக்குக் கதாகீர்த்தனமாகும்; அதுவே எங்களது இடையறாத ஓதுகை; அதுவே எங்களுக்கு மன நிம்மதி.

26 உங்களுடைய வழிபாட்டி­ருந்து மனத்தைத் திசைதிருப்பிவிடும் எந்தவிதமான சுகமும் எங்களுக்கு வேண்டா. ஆன்மீக மார்க்கத்தில் அதைவிடப் பெரிய வீழ்ச்சி ஏதுமுண்டோ?

27 எங்களுடைய ஆனந்தக்கண்ணீரே உமது பாதங்களைக் கழுவும் வெந்நீர்; சுத்தமான பிரேமையே சந்தனப்பூச்சு; தூய்மையான சிரத்தை உங்களுக்கு அணிவிக்கப்படும் ஆடை.

28 சடங்குகளுடன் கூடிய பூஜையைவிட மேற்கூறியவிதமான மானசீக (மனத்தால் செய்யும்) பூஜையாலேயே உங்களை மகிழ்ச்சியடையச் செய்வோமாக.

29 அஷ்டபா(ஆஏஅ)வங்களையே1 நிர்மலமான எட்டு இதழ்களையுடைய தாமரையாக ஒருமுகப்பட்ட தூய்மையான மனத்துடன் உமது பாதங்களில் ஸமர்ப்பித்து அதற்குண்டான பலன்களைப் பெறுவோம்.

30 எளிமையான விசுவாசமென்னும் கஸ்தூரி திலகத்தை நெற்றியில் இடுவோம். திடமான பக்தியை மேகலையாக அணிவிப்போம். பரிபூரண சரணாகதியாகத் தலையைப் பாதங்களின் கட்டைவிரல்களில் தாழ்த்துவோம். அசாதாரணமான இப் பூஜையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம்.

31 அன்பை ரத்தினங்கள் பதித்த ஆபரணங்களாக அணிவிப்போம். பஞ்சப் பிராணன்களை விசிறியாக்கி விசிறுவோம். உம்மிலேயே முழுமையாக மூழ்குதலைக் குடையாக ஆக்கி உஷ்ண நிவாரணம் செய்வோம். எல்லாரும் சேர்ந்து உமக்கு திருஷ்டி கழிப்போம்.

32 இவ்விதமாக நாங்கள் தங்களுக்குச் சந்தனம், அக்ஷதை இத்தியாதி பொருள்களால் அஷ்டாங்க2 பூஜையை ஆனந்தமாகச் செய்வோம். ஓ ஸாயீராஜாõ எங்களுடைய நன்மைக்காக தேவரீர் கடாக்ஷத்தை சம்பாதிப்போம்.

33 எங்களுடைய விருப்பங்கள் நிறைவேற, 'ஸமர்த்த ஸாயீஃ என்னும் மந்திரத்தை ஸதா ஜபம் செய்வோம். அதுவே எங்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிக்கும். நிட்டையின் மூலமாக நற்செயலைச் செய்த திருப்தியையும் பெறுவோம்.

34 முந்தைய அத்தியாயத்தில், தயாபரரான ஸமர்த்த ஸாயீ எவ்வாறு பக்தர்களின் மங்களம் கருதி சிக்ஷை (போதனை-பயிற்சி) அளித்தார் என்பது விவரிக்கப்பட்டது.

35 இந்த அத்தியாயத்தில், அவர் ஒரு பக்தருக்குக் குலகுருவின் மீதிருந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எவ்வாறு நிலைபெறச் செய்தார் என்பது விவரிக்கப்படும். விந்தையான இக் காதையைக் கேளுங்கள்.

36 செவிமடுப்பவர்களேõ சித்தம் சிதறாமல் மனமொன்றி, பந்த் என்னும் பெயர் கொண்ட பக்தரின் இனிமையான காதையைக் கேளுங்கள். தத்துவம் மனத்தில் ஆழமாகப் பதியும்.

37 எந்த விதமான அனுபவம் எப்படிக் கொடுக்கப்பட்டது, நம்பிக்கை என்னும் அஞ்சனம் (மை) எவ்வாறு அவருடைய கண்ணுக்கிடப்பட்டது, குலகுருவிடம் கொண்ட விசுவாசம் எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது, அவருடைய மனம் சாந்தியடைந்த விவரம், இவற்றையெல்லாம் விளக்குகிறேன்; கேளுங்கள்.

38 ஒரு சமயம் பந்த் என்ற பெயர்கொண்ட பக்தரொருவர் மிக சிரமப்பட்டுத் தம் நண்பர்களுடன் ஸாயீதரிசனம் செய்யும் ஆவலுடன் சிர்டீக்கு வந்தார்.

39 அவர் ஏற்கெனவே தம் குலகுருவிடம் தீட்சை (மந்திர உபதேசம்) பெற்றவர். குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஆகவே, அவருடைய மனத்தில் சிர்டீக்கு எதற்காகச் செல்லவேண்டும் என்ற சம்சயம் (ஐயம்) இருந்தது.

40 ஆயினும், ஏற்கெனவே விதிக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக எப்படியாவது நடந்தே தீரும். ஸாயீதரிசனம் செய்யும் நல்வாய்ப்பு, முயற்சி ஏதும் செய்யாமலேயே வந்தது; அதனால் அமோகமான நன்மையும் விளைந்தது.

41 மனிதன் ஒன்று நினைக்க, தெய்வம் வேறுவிதமாக நினைக்கிறது. விதியை எதிர்த்து எதுவும் நடக்காது. அமைதியான மனத்துடன் இந்த அனுபவத்தைக் கேளுங்கள்.

42 சிர்டீக்குப் போவதென்ற திட்டத்துடன் சில பக்தர்கள் தத்தம் இடங்களி­ருந்து சந்தோஷமாகக் கிளம்பி ஒரு கோஷ்டியாகப் புகைவண்டியில் ஏறினர்.

43 ரயில் பெட்டியில் ஏறும்பொழுது பந்த் உள்ளே உட்கார்ந்திருந்ததைப் பார்த்தனர். அவர்கள் சிர்டீக்குப் பயணப்பட்டிருந்தார்கள் என்று பந்த் அறிந்துகொண்டார்.

44 அந்த கோஷ்டியில் பந்த்தின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்கள் சிலரும் இருந்தனர்õ இதன் விளைவாக, சிர்டீக்குச் செல்ல நாட்டமேதும் இல்லாத பந்த்தும் அவர்களுடைய நிர்ப்பந்தத்திற்கு இணங்கி, கோஷ்டியுடன் சேர்ந்துகொள்ள நேர்ந்தது.

45 பார்க்கப்போனால், அவரிடம் ஆரம்பத்தில் செல்லநினைத்த இடம் வரைக்குமே பயணச்சீட்டு இருந்தது. ஆனால், அவர் சூழ்நிலையால் மனத்தை மாற்றிக்கொண்டார்.

46 ''நாமெல்லோரும் ஒன்றாக சிர்டீக்குப் பயணம் செல்வோம்ஃஃ என்று நண்பர்களும் உறவினர்களும் கூறினர். தம்முடைய விருப்பதிற்கு மாறாக, அவர்களுடைய வற்புறுத்தலுக்குப் பந்த் இணங்க வேண்டியதாயிற்று.

47 பிறகு அவர் 'விராரில்ஃ இறங்கிக்கொண்டார். மற்றவர்கள் நேராக பம்பாய்க்குச் சென்றனர். பந்த், பயணச் செலவுக்காக ஒரு சிறுதொகையைக் கடன் வாங்கிக்கொண்டபின், பம்பாயில் கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டார்.

48 பந்த்திற்கு நண்பர்களை ஏமாற்றமடையச் செய்ய மனமில்லை. ஆகவே அவர் சிர்டீ சென்றுவர தம் குருவிடம் அனுமதி பெற்றுக்கொண்டார். எல்லாரும் ஆனந்தமாக சிர்டீக்குச் சென்றனர்.

49 காலை பதினொன்று மணியளவில் அவர்கள் மசூதியை அடைந்தனர். பாபாவுக்குப் பூஜை செய்வதற்காக மக்கள் குழுமியிருந்ததைப் பார்த்து உற்சாகமடைந்தனர்.

50 பாபாவைக் கண்களால் கண்டு மனத்தாலும் தியானம் செய்தபொழுது அவர்களனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கியது. ஆயினும், பந்த் திடீரென்று வ­ப்பு கண்டு மயங்கிக் கீழே விழுந்தார்.

51 அவருடைய உடல் அசைவற்றிருந்தது; ஜீவ சக்தியே ஒடுங்கியது போ­ருந்தது. கோஷ்டியினர் விசாரமுற்றனர்; மனம் கலங்கினர்.

52 ஆயினும், பாபாவின் கிருபை மிகுந்த பார்வையாலும் சுற்றியிருந்தவர்கள், முகத்தில் தண்ணீர் தெளித்துச் செய்த உதவியாலும் மயக்கம் உடனே தெளிந்தது.

53 பிரக்ஞை (உணர்வு) திரும்பியவுடனே அவர் தூக்கத்தி­ருந்து விழித்தவர்போல விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தார்.

54 பூரணமான அந்தர்ஞானியான பாபாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. பந்த் தமது குலகுருவிடம் மிகுந்த பக்தி வைத்திருந்ததை நன்கு அறிந்திருந்த பாபா, அவருக்கு அபயமும் ஆசுவாசமும் (இளைப்பாறுகையும்) அளித்து, அவருக்குத் தம் குருவிடம் இருந்த விசுவாசத்தை உறுதிப்படுத்தி நிலைபெறச் செய்தார்.

55 பாபா அறிவுரை அளித்தார், ''எக்காரணம்பற்றியும் உம்முடைய தலையணையைத் தூக்கி எறியாதீர். சதா சர்வ காலமும் நிச்சலமாக இரும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பீராக.ஃஃ (குருமார்கள் அனைவரும் ஒருவரே என்று அறிந்துகொள்ளும்.)

56 பாபாவின் சங்கேத மொழியைப் (குறிப்பால் உணர்த்துதல்) பந்த் புரிந்துகொண்டார். உடனே எண்ணம் அவருடைய குருவை நாடிச் சென்றது. பாபா செய்த கருணையை வாழ்நாள் முழுவதும் அவர் மறக்கவில்லை.

57 இதுபோலவே, மும்பையைச் சேர்ந்த ஹரிச்சந்திர பிதலே எனும் பெயர்கொண்ட கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஒருவர், தம் மகன் காக்காய்வ­ப்பு நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால் மிகுந்த துயரத்தி­ருந்தார்.

58 உள்நாட்டு வெளிநாட்டு வைத்திய முறைகளனைத்தையும் செய்துபார்த்தார்; பிரயோஜனம் இல்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில், அவரால் செய்ய முடிந்தது ஸாதுக்களையும் ஞானிகளையும் நாடுவதே.

59 1910ஆம் ஆண்டு கவி தாஸகணு கீர்த்தனங்கள் பல செய்வதன்மூலம் பாபாவின் புகழை எங்கும் பரப்பி வந்தார். இதன் விளைவாக சிர்டீயில் பக்தர்கள் வெள்ளமாகக் கூடினர்.

60 குக்கிராமமான சிர்டீ பாக்கியம் பெற்றது; பண்டரிபுரத்திற்கு ஒப்பான புனிதத் தலம் ஆகியது. சிர்டீயின் மஹிமை அளவில்லாமல் பெருகியது. யாத்திரிகர்களின் வருகைக்குக் கணக்கே இல்லாமல் போயிற்று.

61 தரிசனமாத்திரத்தாலோ, கிருபையுடன் நோக்குவதாலோ, கையால் தொடுவதாலோ வியாதிகள் குணமானதை பக்தர்கள் அனுபவத்தில் கண்டனர்.

62 வேறெதிலும் நாட்டமின்றி சரணாகதி செய்ததால் பக்தர்கள் பரம மங்கள சுகங்களை அடைந்தனர். எல்லாருடைய மனோகதியையும் (எண்ண ஓட்டம்) அறிந்துகொண்டு அவர்களுடைய விருப்பங்களையும் கோரிக்கைகளையும் பாபா நிறைவேற்றிவைத்தார்.

63 அவரளித்த உதீயைப் (விபூதியைப்) பூசிக்கொண்டவுடன் பிசாசுகள் ஓட்டம்பிடித்தன. ஆசீர்வாதத்தால் பீடைகள் அகன்றன. கிருபையான பார்வையினால் சகல தீங்குகளும் விலக்கப்பட்டன. ஆகவே, அவரை தரிசனம் செய்ய மக்கள் ஓடி வந்தனர்.

64 பாபாவின் மஹாத்மியத்தைக் கவி தாஸகணு செய்த கதாகீர்த்தனங்களின் மூலமாகவும் இயற்றிய நூல்களின் மூலமாகவும் செவிவழிச் செய்தியாகவும் கேள்விப்பட்ட ஹரிச்சந்திர பிதலே, பாபாவை தரிசனம் செய்ய மிக்க ஆவல் கொண்டார்.

65 பாபாவை தரிசனம் செய்வதற்காகத் தம்முடன் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பலவிதமான பழங்களைக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு, பிதலே சிர்டீ வந்து சேர்ந்தார். இது பூர்வஜன்ம புண்ணியத்தால் அமைந்தது.

66 நோயாளிப் புதல்வனை பாபாவின் பாதங்களில் சேர்த்துவிட்டு பாபாவை நமஸ்காரம் செய்தார். அந்த சமயத்தில் திடீரென்று விபரீதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பிதலே கதிகலங்கிப் போனார்.

67 மகனுடைய கண்கள் பாபாவினுடைய கண்களை நேருக்குநேராக சந்தித்தபோது, திடீரென்று பையன் விழிகளை உருட்டிக்கொண்டே பிரக்ஞை இழந்துபோனான். தாயும் தந்தையும் அதிர்ந்துபோனார்கள்.

68 பையன் வாயில் நுரை தள்ளியவாறே உணர்விழந்து பூமியில் விழுந்தான். தாயும் தந்தையும் படபடத்து உணர்ச்சிவசப்பட்டனர்; விதியை நொந்தனர்.

69 மூச்சு நின்றுவிட்டது போலத் தோன்றியது; வாயி­ருந்து நுரை வெளிவந்துகொண்டே யிருந்தது; உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. பிழைத்தெழுவான் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

70 இதற்கு முன்பாக பல முறைகள் காக்காய்வ­ப்புத் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும் இவ்வளவு நீண்ட பாதிப்பு ஏற்பட்டதேயில்லை.

71 'ஏற்பட்டதும் இல்லை, இனி ஏற்படப்போவதும் இல்லைஃ என்று வர்ணிக்கத்தக்க வகையாக வ­ப்பு ஏற்பட்டது; மரணத்தின் வாயிலுக்கே கொண்டுபோய்விட்டது. புதல்வனின் நிலையைக் கண்ட தாயின் கண்களி­ருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.

72 ''நாங்கள் இங்கு எதற்காக வந்தோம், இங்கு என்ன நடந்ததென்று பாருங்கள்õ உபாயம் (நிவாரண வழி) என்று நினைத்து வந்தது அபாயமாகிவிட்டதேõ இந்தப்

73 ''திருடனுக்கு பயந்து ஒரு வீட்டில் நுழைந்தால் அந்த வீடே நம் தலையில் இடிந்து விழுமோõ நாம் இங்கு வந்தது அதற்கொப்பானதே.--

74 ''பு­ அடித்துத் தின்றுவிடும் என்று பயந்தோடிய பசு, வழியில் கசாப்புக் கடைகாரனிடம் மாட்டிக்கொண்டதுõ நமக்கு நிகழ்ந்தது இதுவேஃஃ என்று தாயார் புலம்பினார்.

75 வழிப்போக்கன் கடுமையான வெயி­­ருந்து தப்பிக்க மர நிழ­ல் ஒதுங்கியபோது, மரமே வேரறுந்து சாய்ந்து அவன்மீது விழுந்தது போ­ருந்தது அவர்களுடைய நிலைமை.

76 பயபக்தியுடன் இறைவனுக்குப் பூஜை செய்யக் கோயிலுக்குச் சென்றவன்மேல் கோயிலே இடிந்து விழுந்தாற்போ­ருந்தது அவர்களுடைய நிலைமை.

77 ஆயினும், பாபா அவர்களுக்கு ஆறுதலளித்தார், ''மனத்தில் பொறுமையும் தைரியமும் கொள்ளுங்கள். பையனை ஜாக்கிரதையாகத் தூக்கி எங்காவது எடுத்துச் செல்லுங்கள். அவன் மறுபடியும் உணர்வு பெறுவான்.--

78 ''பையனை நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லுங்கள். இன்னும் ஒரு நாழிகையில் (24 நிமிடங்களில்) ஜீவனுள்ளவனாவான். அவசரப்பட்டு எக்காரியத்தையும் செய்யாதீர்கள்.ஃஃ

79 ஆகவே அவர்கள் அப்படியே செய்தனர். பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின. குடும்பத்துடன் பிதலே ஆனந்தமடைந்தார். கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் அடியோடு மறைந்தன.

80 வாடாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடனே பையனுக்கு மறுபடியும் பிரக்ஞை வந்தது. தாயும் தந்தையும் முத­ல் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்; பிறகு ஆனந்தமடைந்தனர்.

81 பின்பு, பிதலே மனைவியுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தார். மிகுந்த பணிவுடன் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

82 தம் மகன் பிழைத்தெழுந்ததைக் கண்ட பிதலே, நன்றியும் மகிழ்ச்சியும் பொங்க பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட்டார். பாபா அப்பொழுது புன்னகை பூத்த முகத்துடன் கேட்டார்.

83 ''என்ன, உம்முடைய கோணல் சிந்தனையும் சந்தேக அலைகளும் இப்பொழுதாவது அடங்கினவா? யார், முழுநம்பிக்கை வைத்து தைரியமாகப் பொறுமை காக்கிறாரோ அவரை ஸ்ரீஹரி ரக்ஷிக்கிறார்.ஃஃ

84 செல்வரும் பெருங்குடிமகனுமாகிய பிதலே, இந்த சந்தர்ப்பத்தைப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் கொண்டாடினார். அனைவருக்கும் இனிப்புகளும் தின்பண்டங்களும் வழங்கினார். பாபாவுக்குப் பழங்களையும் பூக்களையும் தாம்பூலத்தையும் ஸமர்ப்பணம் செய்தார்.

85 பிதலேவின் மனைவி பரம ஸாது; பிரேமையும் பக்தியும் சிரத்தையும் நிரம்பியவர். அவர் தூணுக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு பாபாவையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.

86 அவ்வாறு பார்த்துக்கொண் டிருக்கும்போதே, அவருடைய கண்களில் நீர் நிரம்பிவிடும். இது தினமும் நிகழ்ந்தது. அவருடைய அற்புதமான அன்பைப் பார்த்து, பாபா மிகுந்த சந்தோஷமடைந்தார்.

87 இறைவன் எப்படியோ அப்படியே ஞானிகளும். இருவருமே அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். பராதீனமாகவும் (சுதந்திரத்தை இழந்தும்) வேறெதிலும் நாட்டமின்றியும் எவரெல்லாம் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களெல்லாருக்கும் அருள்புரிகின்றனர்.

88 பிதலே குடும்பத்தினர் பம்பாய் திரும்புவதற்கு முன், பாபாவை தரிசனம் செய்வதற்காக மசூதிக்கு வந்தனர். பாபாவிடமிருந்து உதீயும் அனுமதியும் பெற்றுக்கொண்டு கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள்.

89 திடீரென்று பாபா பிதலேவைக் கூப்பிட்டுக்கொண்டே மூன்று ரூபாய்களைத் (நாணயங்களை) தம்முடைய பாக்கெட்டி­ருந்து எடுத்தார். அப்பொழுது பாபா என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

90 ''பாபுõ நான் இரண்டு (ரூபாய்) ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன். இந்த மூன்றையும் அவற்றுடன் சேர்த்து வைத்துக்கொண்டு முறை தவறாது பூஜை செய்வீராக. அது சகல மங்களங்களையும் அளிக்கும்.ஃஃ

91 ஹரிச்சந்திர பிதலே பெருமகிழ்ச்சியுடன் அந்த நாணயங்களைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டார். பாபாவின் பாதங்களை நமஸ்காரம் செய்த பின், ''கிருபை செய்வீர் மஹாராஜாõஃஃ என்று வேண்டினார்.

92 இருந்தபோதிலும், அவருடைய மனத்தில் ஒரு கேள்வி உடனே எழுந்தது. ''இப்பொழுதுதான் நான் முதன்முறையாக பாபாவிடம் வந்திருக்கிறேன். அப்படியிருக்க, பாபா சொன்னதற்கு என்ன பொருள்? எனக்குப் புரியவேயில்லையேõ --

93 ''நான் பாபாவை இதற்கு முன்பு பார்த்ததேயில்லை. எனக்கு எப்படி ஏற்கெனவே அவர் இரண்டு ரூபாய் கொடுத்திருக்க முடியும்õஃஃ பிதலே மனத்துள் வியப்படைந்தார்.

94 பாபா சொன்ன வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. ஆனால், பாபா வேறு குறிப்பு ஏதும் அளிக்காததால், அந்தப் புதிர் விடுவிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

95 ஞானிகள் ஸஹஜமாக ஏதாவது பேசுவார்கள்; ஆயினும் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். பிதலேவின் உள்மனத்திற்கு இது தெரிந்திருந்ததால், அவருடைய ஆர்வம் அதிகமாகியது.

96 அவர் பம்பாய்க்குத் திரும்பி வீடு சேர்ந்தவுடன் அகத்தி­ருந்த ஒரு மூதாட்டி இப்புதிருக்கு விளக்கமளித்தார்.

97 அம் மூதாட்டி பிதலேவின் தாயார். சிர்டீ சென்றுவந்த அனுபவங்களைப்பற்றி அவர் கேட்டறிந்தபொழுது மூன்று ரூபாய் சமாசாரம் வெளிவந்தது. அதற்கும், ஏற்கெனவே

98 அதைப்பற்றிச் சிறிது நேரம் யோசித்த மூதாட்டிக்குத் திடீரென்று ஞாபகம் வந்தது. மூதாட்டி பிதலேவிடம் கூறினார், ''ஆ, இப்பொழுது ஞாபகம் வந்துவிட்டது. பாபா சொன்னது ஸத்தியமேõ--

99 ''இப்பொழுது நீ உன் புதல்வனை பாபாதரிசனம் செய்வதற்காக சிர்டீக்கு அழைத்துக்கொண்டு சென்றாய். இதுபோலவே, நீ சிறுவனாக இருந்தபொழுது, உன் தகப்பனாரும் உன்னை அக்கல்கோட்டிற்கு அழைத்துச் சென்றார்.--

100 ''அக்கல்கோட் மஹராஜ் ஒரு சித்தர்; பரோபகாரி; அந்தர்ஞானி; அறிவொளி

படைத்த யோகி; மிகப் பிரசித்தமானவர். உன் தகப்பனாரும் தூயவர்;
நல்லொழுக்கம் மிகுந்தவர்.--
101 ''உன் பிதா செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்த யோகிராஜா, பிரசாதமாக இரண்டு ரூபாய்களை (நாணயங்கள்) அளித்து அவற்றைப் பூஜித்துவரச் சொன்னார்.--

102 ''ஏற்கெனவே கொடுக்கப்பட்ட அந்த இரண்டு ரூபாய்களுங்கூட, பிரசாதமாகவும் நித்திய பூஜைக்காகவுமே அக்கல்கோட் சுவாமியால் கொடுக்கப்பட்டன.--

103 ''அந்த இரண்டு ரூபாய்கள் இல்லத்து வழிபாட்டு விக்கிரகங்களுடன் வைக்கப்பட்டு நியம நிஷ்டையுடன் பூஜிக்கப்பட்டன.--

104 ''இது விஷயமாக உன் தந்தைக்கிருந்த பக்தியும் சிரத்தையும் எனக்கு மட்டுமே தெரியும். இந்த நம்பிக்கைதான் அவருக்கு அன்றாட நடவடிக்கைகளில் வழிகாட்டியது. அவருக்குப் பிறகு, பூஜை சாமான்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களாகிவிட்டன.--

105 ''கடவுள் நம்பிக்கை தேய்ந்துபோய், பூஜை செய்வதென்பது கூச்சப்படும் செயலாகிவிட்டது. குழந்தைகள் பூஜை செய்ய ஏவப்பட்டனர். அந்நிலையில், ரூபாய் நாணயங்கள் இரண்டைப்பற்றி யாருக்கென்ன கவலை?--

106 ''பல வருடங்கள் இவ்வாறு உருண்டோடின. ரூபாய் நாணயங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. காலப்போக்கில் அவற்றைப்பற்றிய நினைவே அழிந்துபோயிற்று. இவ்விதமாக அந்த ரூபாய் நாணயங்கள் இரண்டும் தொலைந்துபோயின. --

107 ''இருந்தபோதிலும் உன்னுடைய பாக்கியம் பெரிது. நீ ஸாயீ ரூபத்தில் அக்கல்கோட் மஹராஜையே சந்தித்திருக்கிறாய். பல்லாண்டுகளாக மறந்துபோன விஷயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் தீங்குகளை விலக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.--

108 ''ஆகவே, இப்பொழுதி­ருந்தாவது சந்தேகங்களையும் தர்க்கவாதத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு முன்னோர்கள் சென்ற பாதையில் நடப்பாயாக. உலக விவகாரங்களில் குறுக்குவழி வேண்டா.--

109 ''இந்த ரூபாய் நாணயங்களை முறைதவறாது வழிபட்டு வருவாயாக. ஞானி அளித்த இந்தப் பிரசாதத்தை ஓர் ஆபரணமாகக் கருதுவாயாக. ஸமர்த்த ஸாயீ உன்னுடைய பக்தியைப் புனருஜ்ஜீவனம் (மறுபடி உயிர்பெறச்) செய்வதற்கு இதை ஒரு சூசகமாக அளித்திருக்கிறார்.ஃஃ

110 தாயாரிடமிருந்து இக் கதையைக் கேட்ட பிதலே பரமானந்தமடைந்தார். ஸாயீயின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையும் தரிசனத்தால் விளைந்த நன்மையும் அவருடைய மனத்தில் அழியாத முத்திரை பதித்துவிட்டன.

111 தாயாரின் அமிருதமயமான வார்த்தைகள், பல ஆண்டுகளாக நசித்துப்போன தெய்வபக்தியைப் புத்துயிர் பெறச் செய்தன. பிராயச்சித்தம் (பாவத்தைப் போக்குவதற்கான சடங்கு) செய்யவேண்டுமென்ற மனோபாவமும் பச்சாத்தாபமும் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுத்தன.

112 ஆகவே, எது நடக்கவேண்டுமோ அது நடந்துவிட்டதுõ தூங்கிக்கொண்டிருந்த தமது கடமையுணர்வை ஸாயீ பாபா எழுப்பிவிட்டதுபற்றிப் பிதலே மிக்க நன்றியுடையவரானார். தம்முடைய கடமைகளைச் செய்வதில் கண்ணுங்கருத்துமாக வாழ்க்கை நடத்தினார்.

113 இப்பொழுது அதே போன்ற இன்னொரு நிகழ்ச்சிபற்றிச் சொல்கிறேன்; நிறைந்த மனத்துடன் கேளுங்கள். கட்டவிழ்ந்து தெறித்தோடிய பக்தர்களின் மனத்தை பாபா எவ்வாறு அடக்கி அமைதியுறச் செய்தார் என்பதை இக்காதை காட்டும்.

114 கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்றொரு சிறந்த பக்தர் பூனாவில் வாழ்ந்து வந்தார். அவருடைய கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

115 அவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் கலால் வரி இலாகாவில் (உஷ்ஸ்ரீண்ள்ங் ஈங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற்) உத்தியோகம் பார்த்துவந்தார். பத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு உத்தியோகத்தை விட்டுவிட்டு, வேறு வேலை ஏதும் பாராமல் வீட்டிலேயே இருந்தார்.

116 அவருக்குக் கெட்டகாலம் தொடங்கியது. வாழ்நாள் முழுவதும் சீராக ஒரே மாதிரியாக அமையுமோ? நவக்கிரஹங்கள் விளைவித்த சுழற்சியில் மாட்டிக்கொண்டார். யார்தான் விதியின் பயனை அனுபவிக்காது தப்பிக்க முடியும்?

117 அவர் ஆரம்பகாலத்தில் தாணே ஜில்லாவில் வேலை செய்தார். பிறகு ஜவ்ஹர் ஜில்லாவில் வேலை செய்ய நேர்ந்தது. அங்கு அவர் ஆபீஸராக உத்தியோகம் பார்த்தார். பிறகு வேலையே இல்லாமல் போய்விட்டது.

118 உத்தியோகம் என்பது தாமரை இலையின்மேல் ததும்பும் நீர்த்துளி அன்றோõ அது எவ்வாறு பழைய இடத்துக்கே திரும்பும்? அந்த சமயத்தில் தீவிரமாகப் பிரயத்தனங்கள் செய்தார்.

119 ஆனால், அவருக்கு அதிருஷ்டமில்லைõ ஆகவே அவர் தமது சுதந்திரத்தைக் காத்துக் கொள்வதென்று முடிவு செய்தார். துன்பத்திற்குப் பின் துன்பம் தொடர்ந்தது; அவர் எல்லாவிதத்திலும் சோர்வடைந்துவிட்டார்.

120 வருடாவருடம் நிதிநிலைமை படிப்படியாக க்ஷீணமடைந்தது (நசித்தது). ஆபத்துகள் வரிசையாகத் தொடர்ந்தன. குடும்பநிலைமை சகிக்கமுடியாதபடி ஆகிவிட்டது.

121 ஏழு ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. ஒவ்வோர் ஆண்டும் சிர்டீக்குச் சென்று பாபாவிடம் தம்முடைய துன்பங்களைப்பற்றி ஒப்பாரி வைத்தார். இரவுபகலாக பாபாவை வணங்கினார்.

122 1916 ஆம் ஆண்டில் அவருடைய துன்பங்களும் வாழ்க்கையின்மீது வெறுப்பும் உச்சநிலையை எய்தின. புனிதமான சிர்டீயிலேயே பிராணனை விட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.

123 அச்சமயத்தில் அவர் குடும்பத்துடன் சிர்டீயில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். ஓரிரவு என்ன நடந்ததென்று கேளுங்கள்.

124 தீக்ஷிதர் வாடாவுக்கு எதிரே நிறுத்தியிருந்த ஒரு மாட்டுவண்டியின்மேல் ஆம்ப்டேகர் உட்கார்ந்திருந்தார். மனத்துள்ளே கட்டுக்கடங்காத எண்ணங்கள் ஓடின.

125 ஆர்வம் இழந்துபோய் மனமுடைந்து வாழ்க்கையையே வெறுத்தார். அவர் எண்ணினார், ''போதும், போதும், இந்தத் துன்பங்கள். எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.ஃஃ

126 இவ்வாறு நினைத்து வாழ்க்கையையே வெறுத்து ஆம்ப்டேகர் கிணற்றில் குதித்துவிடத் தயாரானார்.

127 அவர் நினைத்தார், ''யாரும் அருகில் இல்லை. அமைதியான இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வேன். துன்பங்களி­ருந்தும் துக்கத்தி­ருந்தும் விடுபடுவேன்.ஃஃ

128 தற்கொலை செய்துகொள்வது மஹாபாவம்; ஆயினும் அவர் இந்த உறுதியான முடிவை எடுத்தார். ஆனால், சூத்ரதாரியான ஸாயீ பாபா இந்த மூடத்தனமான செயலைத் தடுத்துவிட்டார்.

129 ஆம்ப்டேகர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில், உணவுவிடுதி முதலாளியான ஸகுண்மேரு நாயக்கரின் வீடு இருந்தது. ஸகுண், பாபாவின் நெருங்கிய பக்தர்; சேவகர்.

130 ஸகுண் திடீரென்று வீட்டின் வாயிற்படிக்கு வந்து, உடனே ஆம்ப்டேகரை வினவினார், ''அக்கல்கோட் மஹராஜின் இந்தப் போதியை (புராணம்) நீர் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீரா?ஃஃ

131 ''எங்கே? பார்க்கிறேன்; பார்க்கிறேன்õஃஃ என்று சொல்­க்கொண்டே ஆம்ப்டேகர் ஆர்வத்துடன் அப் புத்தகத்தைக் கையில் வாங்கிக்கொண்டார். மேலெழுந்தவாரியாக ஒரு முறை புரட்டினார். பிறகு, நடுவில் ஏதோ ஒரு பக்கத்தி­ருந்து படிக்க ஆரம்பித்தார்.

132 கர்மமும் தர்மமும் நன்கு பிணைந்ததுபோல (அதிருஷ்டவசமாக), அவர் எடுத்துப் படிக்க ஆரம்பித்த பகுதி அவருடைய அந்தரங்கமான எண்ணங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி இருந்தது; மின்னலைப்போல் அவருடைய மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

133 ஆம்ப்டேகர் தற்செயலாகப் படிக்க நேர்ந்த கதையை இப்பொழுது விவரிக்கிறேன்; எல்லாரும் கேளுங்கள். இந்நூல் பெரிதும் விரிந்துவிடும் என்ற பயம் காரணமாகச் சுருக்கமாக சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன்; கேளுங்கள்.

134 அகமுக நிட்டையில் சிறந்த ஞானியான மஹராஜ் அக்கல்கோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவருடைய பக்தர்களில் ஒருவர் கடுமையான வியாதிகளால் பீடிக்கப்பட்டுப் பொறுக்கமுடியாத அளவிற்குத் துன்பத்திலாழ்த்தப்பட்டார்.

135 வியாதிகளி­ருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் அவர் அக்கல்கோட் மஹராஜருக்குப் பல தினங்கள் சேவை செய்தார். துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மனம் கலங்கி சோகத்திலாழ்ந்தார்.

136 ஆத்மஹத்தி (தற்கொலை) செய்துகொள்வது என்று நிர்ணயம் செய்துகொண்டு, இரவு நேரத்தில் சுற்றிலும் நிசப்தமாக இருந்தபோது ஒரு கிணற்றிற்குச் சென்று அதனுள் குதித்துவிட்டார்.

137 திடீரென்று அக்கல்கோட் மஹராஜ் அங்கே தோன்றினார். தம்முடைய கைகளாலேயே பக்தரை வெளியே கொண்டுவந்து போட்டார்; உபதேசமும் செய்தார். ''எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீரவேண்டும்.--

138 ''நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வ­யாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?--

139 ''மேலும், துன்பத்தையும் வ­யையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்கவேண்டும். ஆகவே இந்தத் துன்பத்தை இன்னுங்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அழித்துக்கொள்ளாதே.ஃஃ

140 தம்முடைய மனநிலைக்கு மிகப் பொருத்தமான இக் கதையைப் படித்த ஆம்ப்டேகர் மெய்சி­ர்த்துப்போனார். உடனே, 'எங்கும் நிறைந்திருக்கும் பாபாவின் சமூகத்தில் நாம் இக் காரியத்தைச் செய்யத் துணிந்தோமேஃ என்று நினைத்து மனம் நொந்தார்.

141 ஆம்ப்டேகருடைய மனத்திற்கு, 'விதிக்கப்பட்டதை அனுபவித்தே தீர வேண்டும்ஃ என்பது நன்கு விளங்கியது. சரியான சமயத்தில் அதுவே குறிப்பாக அருளப்பட்டது. தாம் செய்ய நினைத்த சாகசச் செயல், தமக்கு நன்மை தரக்கூடியதன்று என்பதும் தெளிவாகியது.

142 அவர் படித்த கதை, உண்மையில் வானத்தி­ருந்து தோன்றிய அசரீரியே. செயற்கரிய செயலான இந்த லீலையைக் கண்ட ஆம்ப்டேகருக்கு ஸாயீ பாதங்களில் நம்பிக்கையும் விசுவாசமும் மேலும் பலப்பட்டன.

143 சற்றும் எதிர்பாராத வகையில், ஸகுண்மேரு நாயக்கரின் வாய்மொழி மூலமாகவும் போதி புத்தகத்தின் மூலமாகவும் வந்த எச்சரிக்கை, கொஞ்சம் தாமதப்பட்டிருந்தாலும் அவருடைய ஜன்மமே அழிந்துபோயிருக்கும்.

144 அவர் நினைத்தார், ''என்னுடைய உயிரே போயிருக்கும். என்னுடைய குடும்பத்திற்குப் பெரும் தீங்கும் என் மனைவிக்குத் தாங்கொணாத கஷ்டங்களும் விளைந்திருக்கும். இகத்திலும் பரத்திலுமாக இரட்டை நஷ்டம் அடைந்திருப்பேன்.--

145 ''ஸகுண்மேரு நாயக்கரின் மனத்தைத் தூண்டிவிட்டுப் போதியைக் கருவியாக வைத்துத் தற்கொலைத் திட்டத்தி­ருந்து என்னை மனம் மாற வைத்திருக்கிறார் பாபா.ஃஃ

146 அவ்வாறு நிகழ்ந்திராவிட்டால், அந்த ஏழை (ஆம்ப்டேகர்) வீணாக மரண மடைந்திருப்பார். ஆனால், ஸாயீயைப் போன்ற ரட்சகர் இருக்கும்போது சாவு எப்படி நெருங்கும்?

147 ஆம்ப்டேகரின் தந்தை அக்கல்கோட் சுவாமியின் சிறந்த பக்தராக விளங்கினார். இவ்வனுபவத்தின் மூலமாக, அவ்வழிபாடு தொடர்ந்து அதுமாதிரியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் பாபா அறிவுறுத்தினார்.

148 இவ்விதமாகக் காலப்போக்கில் எல்லாம் நல்லபடியாக நடந்தன. கெட்டகாலம் கழிந்தது. ஆம்ப்டேகர் பெருமுயற்சி செய்து ஜோதிடம் கற்றுக்கொண்டார். அதற்கான பலனும் கிடைத்தது.

149 ஸாயீகிருபையாகிய பிரசாதத்தைப் பெற்ற அவருக்கு நல்லகாலம் பிறந்தது. ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்றார். பழைய வறுமை பறந்தோடியது.

150 குருவினிடம் பிரேமை வளர்ந்தது. செல்வச் செழிப்பும் சந்தோஷமும் பின்தொடர்ந்தன. குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் நிலவின. எல்லாவிதத்திலும் ஆனந்தமுடையவராக வாழ்ந்தார்.

151 ஒன்றைவிட மற்றொன்று சுவையில் மீறும் இம்மாதிரியான லீலைகள் எண்ணிலடங்கா. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், கிரந்தம் (நூல்) மிக விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, சாரத்தை மட்டும் சொல்கிறேன்.

152 ஹேமாட் ஸாயீ பாதங்களில் சரணடைகிறேன். பாபா விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை (புத்தகத்தை) சாமாவுக்கு அன்பளிப்பாகத் தந்த சுவையான நிகழ்ச்சியை அடுத்த அத்தியாயம் விவரிக்கும்.

153 சாமா 'வேண்டா, வேண்டாஃ என்று சொன்னபோதிலும், அவர் மீதிருந்த அளவற்ற பிரேமையால் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் சுந்தரமான மஹாத்மியத்தை வர்ணித்த பின், அதை சாமாவின்மீது பாபா திணித்தார்.

154 சிஷ்யனுக்கு இச்சை இல்லாம­ருந்த போதிலும், அநுக்கிரஹம் செய்யக்கூடிய சமயம் வந்தபோது உபதேசம் அளித்த பாபாவின் கருணையை அடுத்த அத்தியாயத்தில் காணலாம். அக் கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

155 அத்தியாயத்தின் முடிவில், ஸத்குரு உபதேசம் செய்யும் முறை எவ்வளவு விசித்திரமானது என்பதும் விளங்கும். செவிமடுப்பவர்களேõ கவனத்துடன் கேளுங்கள்.

156 மங்களங்களுக்கெல்லாம் மங்களமான ஸாயீ தலைசிறந்த குணங்களின் சுரங்கம். அவருடைய புனிதமான கதையைக் கேட்கும் வாய்ப்பை பாக்கியவான்களே பெறுகின்றனர்õ

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'குலகுருவிடம் விசுவாசத்தை நிலைபெறச் செய்த செம்மை - காக்காய்வ­ப்பு நோய் தீர்த்த அருள் - தற்கொலை முயற்சியைத் தடுத்தாட்கொண்ட கருணைஃ என்னும் இருபத்தாறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play