Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 52

52. பாராயண பலன் - விடைகொடுங்கள்
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 இப்பொழுது சிம்ம அவலோகனம்1 செய்வோம். அதன் பிறகு, ஒரு பொருளடக்கம்2 எழுதி சாராம்சத்தை அளித்தபின் இக் காவியத்தை ஸம்பூர்ணம் செய்வோம்.

2 தேகத்துடன் வாழ்ந்தபோது தம் பக்தர்களுக்கு அவ்வப்பொழுது ஈந்த அனுபவங்களை 'ஸ்ரீ ஸாயீ லீலாஃ என்னும் பத்திரிகையில் ஒரு தொடராக எழுதவைத்து, பக்தர்கள் என்றும் நினைவுகூர ஓர் அழியாத வழியைச் செய்துவிட்டார் ஸமர்த்த ஸாயீ.

3 'ஸ்ரீ ஸாயீ லீலாஃ பரம பவித்திரமான பத்திரிகை. நம் குருவின் சரித்திரத்தின் உருவத்தில், இகத்தைப்பற்றியும் பரத்தைப்பற்றியும் போதனைகளை அளிக்கும் பல காதைகளை அதில் எல்லாரும் படிக்கலாம்.

4 எண்ணற்ற நிகழ்ச்சிகளைச் சேகரித்து வைத்திருந்தவனாயினும், கற்பனைவளமோ உயர்கல்வியோ இல்லாத ஹேமாட் பந்தின் கையைப் பிடித்தவாறு, தம்முடைய ஸத் சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொண்டார்.

5 சில குருமார்கள் தங்களுடைய கியாதியைத் தாங்களே மொழிந்து சிஷ்யர்களைச் செவிமடுக்க வைக்கிறார்கள். இதுதான், குரு ஸித்தியடைந்த பிறகு அவருடைய சரித்திரத்தை எழுதுவதற்கு அடித்தளமாகவும் உணர்வூட்டாகவும் அமைகிறது.

6 ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த உன்னதமான கதைகளை பாபா சொன்னபோது, கேட்டவர்கள் பசியையும் தாகத்தையும் மறந்து முழுமனத்தையும் ஈடுபடுத்திக் கவனமாகச் செவிமடுத்தனர்.

7 எவரெவரெல்லாம் ஸாயீயின் சொரூபத்தைக் கண்டனரோ, அவரவரெல்லாம் முவ்விதத் தாபங்களி­ருந்தும் விடுபட்டனர். அந்த சக்தி ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதாபத்தை எப்படிப் போதிய அளவிற்கு வர்ணிக்க முடியும்?

8 உதாரகுணத்திற்குப் பிரசித்தபெற்ற ஸாயீ தம்மை வழிபடுபவர்களை உத்தாரணம் செய்வதற்காகத் (தீங்கினின்றும் மீட்கத்) தம் சரித்திரத்தைத் தாமே எழுதினார்.

9 பவித்திரமான கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தபின் ஸமாதியை தரிசனம் செய்துவிட்டு, ஸத் சரித்திரத்தைச் செவிமடுக்கவோ பாராயணம் செய்யவோ வேண்டும். மூன்று வகையான தாபங்களும் தணியும்.

10 அவருடைய கதைகளைத் தற்செயலாகச் சொல்லும்போதே நமக்கு ஆன்மீக நன்மை ஏற்படுகிறது. அது அந்த சமயத்தில் நமக்குத் தெரியாமல் போகலாம். ஆகவே, பிரேமையுடன் இக் காவியத்தின் உள்ளே செல்லுங்கள். கோடி பாவங்கள் நிவிர்த்தியாகும்

11 ஜனனமரண யாதனைகளி­ருந்து தப்பிக்கவேண்டுமென்று மனத்தில் எவர்களெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களெல்லாம் அகண்டமாக நினைவில் நிற்கும் பக்தியையும் குருபாதங்களின்மீது ஆசக்தியையும் (பெரும்பற்றையும்) விருத்தி செய்துகொள்ள வேண்டும்.

12 கவனக்குறைவால் ஏற்படும் பிழைகளே அஞ்ஞான காரணம். 'நான் யார்ஃ சிந்தனையைத் தடுப்பனவும் அவையே. அதி­ருந்து விளைவதுதான் எல்லா அனர்த்தங்களுக்கும் (கேடுகளுக்கும்) இருப்பிடமான ஜனனமரணச் சுழல்.

13 மோஹத்தைப் 'பொய்யான ஞானம்ஃ என்று சொல்லலாம். ஆத்மாவைக் காணாமல் 'உடம்பே நான்ஃ என்று கருதி அதனிடம் பற்றுவைத்தல் மரணத்திற்கு சமானம் என்பது சான்றோர் வாக்கு.

14 இதுகாறும் சொல்லப்பட்ட நித்தியநூதனமான (என்றும் புதிய) கதைகளாகிய சமுத்திரத்தைக் கடைந்தால், கேட்பவர்களின் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்படும்.

15 ஸாயீயின், குணங்களுடன்கூடிய தூல சொரூபத்தை இடைவிடாது தியானம் செய்தால், தூல உருவம் மறைந்து சூக்கும ஆத்மசொரூபம் வெளிப்படும்.

16 குணங்களுடன் கூடிய உருவத்துள் நுழையாமல் ஆத்மஜோதியைக் காண இயலாது. குணமற்றதும் ஆழங்காணமுடியாததுமான பர பிரம்மத்தை முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது.

17 தேவரீர், ஓர் உட­ல் வாழ்ந்துகொண்டே, விசுவாசமுள்ள பக்தர்களைப் பிரேமையுடன் உமது பாதங்களுக்கு இழுத்தீர். தேகத்துடன் வாழ்ந்துகொண் டிருந்தவர்களை தேகத்தை மறக்கச் செய்து, அவர்களே அறியாதவாறு அவர்களைப் பரமார்த்த வாழ்வில் நடத்திச் சென்றீர்.

18 கடலைத் தழுவிய நதி தன்னுடைய அடையாளத்தைத் துறந்துவிடுவதைப் போன்று, தேவரீரிடம் சரணடைந்த பக்தர்களின் 'இரண்டுண்டுஃ என்னும் சிந்தனையை முழுமையாக நீக்கிவிடுகிறீர்.

19 இரண்டு தீபங்கள் ஒன்றையொன்று ஆ­ங்கனம் செய்யும்போது (தழுவும்போது) இருமை நிலையை இழந்து, இரண்டும் ஒன்றாகி ஒரே தீபமாக ஒளிர்கின்றன.

20 கற்பூரத்தின் நறுமணம் கற்பூரத்தி­ருந்தோ, சூரியவொளி சூரியனி­ருந்தோ, பளபளப்புப் பொன்னி­ருந்தோ பிரிந்து தனியாக இருக்கமுடியுமா?

21 நதி, கட­ல் சங்கமமான பிறகு கடலாகவே மாறிவிடுகிறது. கட­ல் விழுந்த உப்புப்பொம்மை கடலாகவே மாறிவிடுகிறது. அதுபோலவே,--

22 ஸாயீபாதங்களில் சரணடையும் பக்தர் இருமை நிலையை இழந்துவிடுகிறார். தம்முடைய தனிப்பட்ட இருப்பைத் தியாகம் செய்துவிட்டு ஸாயீயுடன் ஒன்றிவிடுகிறார்.

23 விழித்திருக்கும்போதும் கனவுகாணும்போதும் தூங்கும்போதும் ஸாயீமயமான நிலை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலைக்கு 'உலகவாழ்வி­ருந்து நிவிர்த்தியடைந்த நிலைஃ என்றல்லாது வேறென்ன பெயர்?

24 ஆக, இப்பொழுது, தேவரீருடைய பாதங்களில் நமஸ்காரம் செய்து நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே. உம்மைத் தவிர வேறெதிலும் என்னுடைய வாஞ்சை (விருப்பம்) அலைந்து திரிய வேண்டா.

25 பானையின் உள்ளும் புறமும் விண்வெளியால் நிரம்பியிருப்பதுபோல், படைப்போனி­ருந்து புல்பூண்டுவரை எல்லா உயிர் வர்க்கங்களிலும் பரிபூரணமாக எவர் நிரம்பியிருக்கிறாரோ, எவர் அணுவளவும் விஷமம் (சமமின்மை)
அறியாதவரோ,--

26 எவருக்கு சகல பக்தர்களும் சரிசமானமோ, எவர் மானமும் அவமானமும் அறியாதவரோ, எவருடைய மனம் பிரியத்தையோ அப்பிரியத்தையோ (வெறுப்பையோ) அறியாதோ, எவர் பக்தர்களை ஆதரிப்பதில் எள்ளளவும் பாரபட்சம் காட்டமாட்டாரோ,--

27 அந்த ஸமர்த்த ஸாயீயை சரணடைவோமாக. எவர், நாம் அவரை நினைப்பதால் மாத்திரமே நம்முடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுகிறாரோ, அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கிப் பேறுபெற்றவர்களாக ஆவோமாக.

28 ஆக, கதைகேட்கும் சான்றோர்களே, சிறந்த பக்தர்களே, உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரம். நண்பர்களாகிய உங்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.

29 இதுவரை ஒருவருடைய காதைகளைக் கேட்பதில் மாதாமாதம் சிறிது நேரம் செலவிட்டீர்கள். அவரை இனிமேல் நீங்கள் ஒருகணமும் மறக்கக்கூடாது.

30 நீங்கள் எந்த அளவுக்குப் பிரேமை நிரம்பிய மனத்துடன் ஆர்வமாக ஸாயீயின் காதைகளைக் கேட்கிறீர்களோ, அந்த அளவுக்குச் சொல்லுபவனான எனக்கு ஸாயீ உல்லாசம் அளிப்பார்.

31 அதுபோலவே, கேட்பவர்கள் ஒருமைப்பட்ட மனத்துடன் கேட்காவிடின் சொல்லுபவர் மகிழ்ச்சியடையமுடியாது. இந்தப் பரஸ்பர சந்தோஷம் இல்லாமற்போனால், சொல்லுவது, கேட்பது இரண்டுமே வீண்.

32 பிறவிக்கடல் கடப்பதற்கு அரியது. மாயையால் எழும்பும் அலைகள் கட்டுப்படுத்த முடியாதவை. அவை ஆன்மீக ஆராய்ச்சியற்ற கரைகளில் மோதி, தைரியம் என்னும் ஓங்கி வளர்ந்த மரங்களை வீழ்த்திவிடும்.

33 அகங்காரப் புயல் பிறவிக்கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது. கோபம், வெறுப்பு முதலாகிய பயங்கரமான சுறாமீன்கள் இக் கட­ன் ஆழத்தில் நிர்ப்பயமாக (பயமேயின்றி) வாழ்கின்றன.

34 'நான், எனதுஃ என்னும் முதலைகளும், முன்ஜன்ம அனுபவங்கள் விளைவிக்கும் பற்றுகள் மற்றும் விகற்ப சிந்தனைகள் ஆகியன உருவாக்கும் நீர்ச்சுழல்களும், இக் கட­ல் அனேகம். நிந்தை செய்தல், அசூயை (பொறாமை), வெறுத்து ஒதுக்குதல் ஆகிய எண்ணற்ற, நீரில் வாழும் உயிரிகள் இக் கட­ன் மேல்மட்டத்தில் மிதந்தவாறு சுற்றிவருகின்றன.

35 இக் கடல் பயங்கரமாகத் தோன்றினும், நம் பரமகுரு, அகத்தியர் உருவத்தில் அதை உள்ளங்கையில் ஏந்திக் குடித்துவிடுவார். ஸத்குருவின் பாததூளிகளில் ஏவலாள்களாக இருப்பவர்கள் இக் கடலைக் கண்டு லவலேசமும் பயப்பட வேண்டா.

36 சொல்கிறேன், ஸத்குரு ஸமர்த்த ஸாயீ பிறவிக்கடலைக் கடக்க உதவும் நாவாய். அவரிடம் அடைக்கலம் புகுந்தவர்களனைவரையும் அக்கரை சேர்ப்பார்.

37 பிறவிக்கடல் கடப்பதற்கு மிக அரியது. ஸாயீயின் பாதங்களை ஒரு படகாகச் செய்துகொள்ளுங்கள். எந்த பயமுமின்றி அவர் உங்களை அக்கரை சேர்ப்பார். நிஷ்டையின் அற்புதம் அத்தகையது

38 இந்த விரதத்தைப் பா­த்தால் சம்சார சுகதுக்கங்களின் தீவிரம் நம்மை வாட்டாது. இதற்கு ஒப்பான லாபம் ஏதும் உண்டோ? இதுவே நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் சாமர்த்தியம்.

39 ஸாயீபாதங்களில் அத்தியந்த பக்தியுடன் ஸாயீயின் உருவம் கண்களில் நிலைக்கட்டும். எல்லா உயிர்களிலும் ஸாயீ தெரியட்டும். இந்த மனநிலையை எல்லா பக்தர்களும் அடையட்டும்.

40 என்னுடைய பூர்வஜன்மத்தில், மனம்போன போக்கில் திரிந்து கீழே விழுந்தேன். இந்த ஜன்மத்திலாவது எனக்குப் புலனின்பங்களி­ருந்து விடுபெறும் பலம் உண்டாகி நற்கதி லாபமாகட்டும்.

41 ''(எனக்குப்) பின்னால் ஸாயீ நிற்கும்போது, யாரும் (என்மீது) கைநீட்ட முடியாது.ஃஃ இந்த நம்பிக்கையில் நிலைபெற்ற ஸாயீ பக்தர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.

42 ஆகவே, பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, எல்லா பக்தர்களின் சார்பாகவும் அவரிடம் ஒரு பிரார்த்தனை செய்யவேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகிறது.

43 இந்தப் புத்தகம் தினமும் படிப்பதற்காக எல்லாருடைய இல்லங்களிலும் இருக்கவேண்டும். ஏனெனில், இதை நியமமாகப் பிரேமையுடன் பாராயணம் செய்பவரின் சங்கடங்கள் அனைத்தையும் இது விலக்கும்.

44 உடலைச் சுத்தம் செய்துகொண்டபின், பிரேமையுடனும் சிரத்தையுடனும் ஏழு நாள்களில் படித்துமுடிப்பவரின் அனிஷ்டம் (வெறுக்கத்தக்க நிகழ்வு-சூழ்நிலை) சாந்தமடையும்.

45 இக் காவியம் பரமாத்ம இழைகொண்டு நெய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ண பிரம்மத்தின் கதைகளால் நிரம்பியிருக்கிறது. பிரம்மமும் ஆத்மாவும் ஐக்கியமாவதால்

46 ஞானி ஏகநாதர் இயற்றிய நந்தவனமும், முப்பத்திரண்டு அத்தியாயங்களைக் கொண்ட பிருந்தாவனமுமாகிய சுத்தமான பசும்பா­ன் இனிமையை ஞானியும் அஞ்ஞானியும் சமமாகவே சுவைக்கின்றனர். (ஆசிரியர் இங்கு ஏகநாத பாகவதத்தைப்பற்றிப் பேசுகிறார். இக் காவியத்தை ஏகநாத பாகவதத்தின் செய்யுள் வடிவிலேயே அமைத்ததன் தாக்கம் போலும் இக் காவியம் ஏகநாத பாகவதத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அமைந்திருக்கிறதென்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் என்றும் தோன்றுகிறது. - தமிழாக்கியோன்)

47 இந்த ஸத் சரித்திரம் தினமும் செவிமடுக்கப்பட்டாலும், அல்லது நியமமாகப் பாராயணம் செய்யப்பட்டாலும், ஸமர்த்த ஸாயீயின் பாதங்கள் சங்கடங்களனைத்தையும் நிவாரணம் செய்யும்.

48 செல்வத்தை விரும்புபவர்கள் செல்வத்தைப் பெறுவர். தூய்மையான தினசரி நடவடிக்கைளில் பூரணமான வெற்றி பெறுவர். பலன் நிட்டைக்குச் சமமாகத்தான் கிடைக்கும். ஏனெனில், பா(ஆஏஅ)வம் இல்லாது அனுபவம் ஏது?

49 இந்த கிரந்தத்தை (நூலை) பயபக்தியுடன் படித்தால், ஸமர்த்த ஸாயீ இன்முகம் காட்டி அஞ்ஞானத்தையும் தரித்திரத்தையும் அழிப்பார்; ஞானத்தையும் செல்வத்தையும் அருள்வார்.

50 இக் காவியம் எழுதத் திட்டமிட்டவர் ஸாயீ; அதுவே அவருடைய ரஹஸியமான விருப்பமுங்கூட. அவருடைய பாதங்களில் காதல் கொள்பவனின் வாழ்க்கை பெரும்பேறு பெற்றது.

51 சித்தத்தை ஒருமுகப்படுத்தி நேமநிட்டையுடன் ஸத் சரித்திரத்தில் ஓர் அத்தியாயமாவது தினமும் படிப்பவருக்கு அளவற்ற சுகம் விளையும்.

52 தமக்கு இதம் ஏற்படவேண்டும் என்னும் சிந்தனை உள்ளவர் இக் காவியத்தை ஆசாரத்துடன் படிக்கவேண்டும். ஜன்மத்திற்குப்பின் ஜன்மமாக அவர் ஸாயீயின் உபகாரங்களை ஆனந்தம் நிரம்பியவராக நினைவுகொள்வார்.

53 குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி, மஹாஸமாதி நாள், ராமநவமி ஆகிய உற்சவ தினங்களில், ஒரு நியமமாக இந்த கிரந்தம் இல்லத்தில் வாசிக்கப்படவேண்டும்.

54 எப்படியெப்படி மனத்தின் சங்கமோ அப்படியப்படி அடுத்த பிறவி அமைகிறது. 'இறக்கும் நேரத்தில் மதி எப்படியோ அப்படியே கதிஃ என்பது சாஸ்திர விதி.

55 பக்தர்களின் ஆதாரம் ஸ்ரீஸாயீ. அவரின்றி விக்கினங்கள் நாசமாவதில்லை. ஒரு தாய் தன் குழந்தையிடம் கருணைகாட்டுவதில் வியப்பென்ன?

56 இதற்குமேல் என்னால் என்ன சொல்லமுடியும்? சொற்கள் ஒரு முடிவுக்கு வந்தபின் மௌனமாக இருப்பதே சிறப்பு என்று நான் உணர்கின்றேன். ஏனெனில், அதுவே மிகச் சிறப்பான துதியாகும்.

57 ஆகவே, மோட்சம் அடைவதில் தீவிரமாக மனத்தைச் செலுத்தி, சுபகாரியங்களைத் தினமும் செய்துகொண்டு, இறைவனின் பெருமையைக் கேட்டல் முதலாகிய ஒன்பது

58 ஆனால், இது ஸத்குருவின் அருளின்றி விளையாது. அவரின்றி, பரதத்துவ ஞானமும் 'நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன்ஃ என்னும் இடைவிடாத நினைவும் ஏற்படா. குருவின்மீது நிட்டையும் உண்டாகாது.

59 தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்கு, குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள சம்பந்தத்தை உபமானமாகக் கூறுதல் பெயரளவுக்கு மட்டுமே. பிதா, புத்திரனை இவ்வுலக சுகங்களுக்குத்தான் பாத்திரமாக்க முடியும். குருவோ இகத்திலும் பரத்திலும் சுகம் அளிக்கும் சக்தி பெற்றவர்

60 தந்தை அளிக்கும் செல்வம் அழியக்கூடியது. குரு அளிக்கும் செல்வமோ அழிவுக்கு அப்பாற்பட்டது. என்றும் நிலைத்திருக்கும் வஸ்துவின் அனுபவத்தைக் கண்ணெதிரில் கையில் இடுவார்

61 ஒரு தாய் தன் குழந்தையை ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து பிரசவ நேரத்தில் வெளியுலகில் விடுகிறாள். குருமாதாவோ இச் செய்கைகயைத் தலைகீழாகச் செய்கிறார். வெளியுலகில் இருக்கும் சிஷ்யனைத் தம்முள்ளே ஏற்றுக்கொள்கிறார்.

62 அந்திமநேரத்தில் (இறக்குந்தறுவாயில்) 'குரு, குருஃ என்று நினைக்கும் சிஷ்யன் ஸாயுஜ்ய1 பதவியை அடைகிறான். இதில் சந்தேகமேயில்லை. மாறாக, ஜீவிதமாக இருக்கும்போது குரு சிஷ்யனைக் கைதீண்டி அடித்துவிட்டால், சிஷ்யன் பூரண பிரம்மமாகவே ஆகிவிடுகிறான்.

63 குருவால் கொடுக்கப்பட்ட அடி ஜனனமரணச் சுழலை நிறுத்தும். குருவால் தமது மனிதவுடலுக்கு ஒரு முடிவு கண்டவரைவிட பாக்கியவான் எவரும் உளரோ?

64 வாள், தடி, கோடரி, சூலம் இத்தியாதி ஆயுதங்களில் ஒன்றைக் கையில் எடுத்தே ஆகவேண்டும். அடி விழுந்தவுடன் சிஷ்யன் சுத்தமடைவான்; பிறகு ஸத்குருவின் உருவம் தெரியும்.

65 இந்த உடம்பை எவ்வளவுதான் பாதுகாத்தாலும் அது என்றோ ஒருநாள் கீழே விழத்தான் போகிறது. மாறாக, குருவின் கையால் அது அழிவடைந்தால், மறுபடியும் ஜனனம் இல்லாது ஒழியும்.

66 என்னை அடிமேல் அடியாகச் சாகும்வரை அடியுங்கள். என்னுடைய அகங்காரத்தை வேரோடு வெட்டி எறியுங்கள். எனக்குப் புனர்ஜன்மம் ஏற்படாத அளவுக்கு என்னை அடித்து நொறுக்குங்கள்.

67 என்னுடைய கர்மங்களையும் (செயல்களையும்) அகர்மங்களையும் (பற்றின்றிச் செய்த செயல்களையும்) எரித்துச் சாம்பலாக்குங்கள். என்னுடைய தர்மத்தையும் அதர்மத்தையும் விலக்குங்கள். மோஹத்தால் விளைந்த பிரமையை விரட்டுங்கள்.

68 என்னுடைய சங்கற்பங்களையும் (திடமான தீர்மானங்களையும்) விகற்பங்களையும் (மனக்கோணல்களையும்) அகற்றிப் பொருளின் உண்மையை மாத்திரம் அறியும் உணர்வை அளியுங்கள். எனக்குப் பாவம் வேண்டா; புண்ணியமும் வேண்டா; பிறவியெடுக்கும் உபத்திரவமே வேண்டா.

69 நான் உங்களிடம் சரணடையும்போது என்னுடைய நான்கு புறங்களிலும் கிழக்கு, மேற்கு முதலான எல்லா திசைகளிலும் மேலே ஆகாயத்திலும் கீழே பாதாளத்திலுமாகத் தாங்கள் நிற்கிறீர்கள்.

70 தேவரீர் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள்; என்னுள்ளுங்கூட இருக்கிறீர்கள் இன்னும் சரியாகக் கூறுமிடத்து, 'நான், நீர்ஃ என பேதப்படுத்தும் எண்ணமே எனக்குத் துன்பத்தை உண்டாக்குகிறது.

71 சொல்கிறேன், ஹேமாட் அனன்னியமாக ஸாயீயிடம் சரணடைகிறேன். ஸத்குருவின் பாதங்களை திடமாகப் பற்றிக்கொண்டு புனர்ஜன்மத்தி­ருந்தும் மரணத்தி­ருந்தும் விடுபடுகிறேன். இவ்வாறாக என் உத்தாரணத்தை சம்பாதிக்கிறேன்.

72 கணக்கற்ற பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காக, ஹேமாடை ஒரு கருவியாக்கித் தம்முடைய சரித்திரத்தைத் தாமே இயற்றிய லீலை ஒரு சிறிய அற்புதமா என்ன?

73 இந்த 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ சரிதம்ஃ என் கையால் எழுதப்பட்டது என்பதே ஒரு பெரிய அற்புதம். ஸாயீயின் கிருபையின்றி பாமரனாகிய என்னால் இதைச் செய்திருக்கமுடியாது.

74 என்னுடைய ஸாயீசகவாசம் நாட்பட்டதில்லை. ஒரு ஞானியை அடையாளம் கண்டுகொள்ளும் பயிற்சியும் எனக்கு இருக்கவில்லை. உட்புகுந்து சூக்குமமாகவும் துணிவுடனும் பார்க்கும் திறமையும் என்னிடம் இருக்கவில்லை. என்னிடம் இருந்ததெல்லாம் விசுவாசமற்ற மனம் ஒன்றுதான்

75 நான் அனன்னிய பா(ஆஏஅ)வத்துடன் என்றுமே உபாசனை செய்தவன் அல்லேன். ஒருகணமும் என்றாவது பஜனையில் உட்கார்ந்தவன் அல்லேன். ஆயினும், அத்தகைய கரங்களால் தம் சரித்திரத்தை எழுதி வாங்கி ஜனங்களுக்கு எடுத்துக்காட்டினார்

76 தம்முடைய சொல்லைக் காப்பாற்றுவதற்காக, எனக்கு இக் காவியம்பற்றி ஞாபகப்படுத்தித் தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டார். ஹேமாட் வெறும் சாக்குப்போக்கு அன்றோ

77 கொசுவால் மேருமலையைத் தூக்க முடியுமா? சிட்டுக்குருவியால் கடல்நீரை வற்றும்படி செய்ய முடியுமா? ஆனால், ஸத்குரு பின்னால் நின்றால் அற்புதங்கள் விளையும்

78 ஆகவே, கதைகேட்பவர்களே, நான் உங்களுக்கு வந்தனம் செய்கிறேன். இக் காவியம் முழுமை பெற்றுவிட்டது. ஸாயீயின் காவியம் ஸாயீக்கே ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது.

79 கதைகேட்பவர்கள் பெரியவர்களானாலும் சிறியவர்களானாலும் ஒவ்வொருவராக உங்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன். உங்களுடைய ஸத்சங்கத்தின் உதவியுடன் ஸாயீ சரித்திரமாகிய இக் கதைத்தொடரை நிறைவு செய்துவிட்டேன்.

80 அடடா, நான் யார் இதை நிறைவு செய்ய? இது வீண் அகங்காரம் அன்றோ? சூத்ரதாரியாக (பொம்மலாட்டத்தில் நூல்களை இழுப்பவராக) எங்கு ஸாயீ இருக்கின்றாரோ, அங்கு நான் எப்படி இவ்விதம் பேசமுடியும்?

81 ஆகவே, ஆதிவியாதியாகிய அகங்காரத்தை விடுத்து, நம் குருவின் புகழைத் திரும்பத் திரும்பப் பாடுவோமாக மனத்தின்மேல் ஆணைசெலுத்துவதும்

82 இக் காவியம் இங்கே பூரணமடைகிறது. என்னுடைய மனோரதமும் நிறைவேறுகிறது. ஸாயீ தம் மனத்திற்கொண்ட வேலையும் முழுமை பெறுகிறது. நான் கிருதார்த்தன் (பேறுபெற்றவன்) ஆனேன்.

83 இம்மாதிரியான காவியம் முழுமையாக அத்தியயனம் செய்யப்பட்டால் (ஓதப்பட்டால்) மனத்தின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஸத்குருவின் பாதங்களை இதயத்தில் தரித்துக்கொண்டால் பிறவிக்கடல் பத்திரமாகக் கடக்கப்படும்.

84 ரோகத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவர்; தரித்திரர்கள் செல்வர்களாவார்கள். சந்தேகங்களும் மனக்கோணல்களும் அகன்று உறுதியும் தெளிவும் பிறக்கும். தீனர்களும் வள்ளன்மை பெறுவர்.

85 இப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பத் படித்தால், பிசாசு பிடித்தவர்களும் காக்காய் வ­ப்பு நோயால் அவதிப்படுபவர்களும் அவற்றி­ருந்து விடுதலை பெறுவர். ஊமைகள், ஊனமுற்றோர், நொண்டிகள், செவிடர்கள் ஆகியோர் அனைவரும் இக் காவியத்தைப் படித்தாலும் கேட்டாலும் மகிழ்ச்சியுறுவர்.

86 அஞ்ஞானத்தால் மூடப்பட்டு சர்வசக்தி வாய்ந்த இறைவனையே மறந்தவர்களும் உத்தாரணம் செய்யப்படுவர்.

87 மனிதர்களாகப் பிறந்தும் அசுர நடத்தையால் தங்களுடைய உடம்பைப் பாழ்படுத்துபவர்களும், உலகியல் வாழ்வில் உழல்வதே சுகம் எனக் கருதுபவர்களும், தீங்கினின்றும் மீட்கப்படுவர்.

88 ஸாயீநாதரின் செயல்கள் கற்பனைக்கெட்டாதவை அல்லவோ ஹேமாடைத் தம்முடைய பாதங்களில் உறுதியாக ஸ்தாபனம் செய்து (நிலைநிறுத்தி), சேவையில் இழுத்துத் தம்முடைய வேலையைச் செய்து முடித்துக்கொண்டார்.

89 முடிவாக, இவ்வுலகத்தைச் செலுத்துபவரும் பாதுகாப்பவரும் புத்திக்கு எழுச்சியூட்டுபவருமான ஸத்குருவின் பாதங்களில் என் எழுதுகோலையும் என்னையும் அர்ப்பணம் செய்கிறேன்.

(இதுகாறும் எழுதப்பட்ட அத்தியாயங்களைப்போல் அல்லாமல், இந்த அத்தியாயத்தைப் பூர்த்திசெய்யும் சுலோகம், மூலக் கையெழுத்துப் பிரதியில் காணப்படவில்லை என்று மராட்டிப் புத்தகத்திலுள்ள அடிக்குறிப்புத் தெரிவிக்கிறது.)

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.Share :
Get it on Google Play