Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 40

40. உத்தியாபன (விரதங்களின் நிறைவு) விழா
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 இக் காவியத்தின் மூலமாகத் தம் பக்தர்களுக்கு உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் போதனையளித்து வாழ்க்கையில் அடையவேண்டியதை அவர்களை அடையச் செய்து, தம்முடைய வேலையையும் நிறைவேற்றிக்கொண்ட ஸாயீ பூஜிக்கத் தக்கவர், பூஜிக்கத் தக்கவர்.

2 எவர், பேதம் பார்க்காது தம்முடைய கையை பக்தரின் தலைமேல் வைப்பதன் மூலமாக சக்தியைப் பாய்ச்சி, பக்தருக்குக் கிடைக்காத வஸ்துவும் (பொருளும்) கிடைக்கும்படி செய்கிறாரோ, அவர் பூஜிக்கத் தக்கவர்.

3 'நீர்-நான்ஃ என்ற பேதபா(ஆஏஅ)வமின்றி ஸாயீக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அனன்னியமாக எவர் சரணாகதி அடைகிறாரோ, அவரை ஸாயீ அன்புடன் அணைத்துத் தம் இதயத்துள் தரிக்கிறார்.

4 கடலும் நதியும் பெயரளவில் வேறுபட்டவை. ஆனால், மழைக்காலத்தில் இரண்டும் ஒன்றாகிவிடும்போது எந்த வித்தியாசமும் இன்றிப் பார்ப்பதற்கு ஒரே உருவமாகிவிடுகின்றன.

5 அதே பா(ஆஏஅ)வத்தில் ஸத்குருநாதரிடம் பக்தர்கள் அனன்னியமாக சரணடையும்போது அவர்களுடைய பக்தியைக் கண்டு அவரும் தம்மையே அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்.

6 ஜய ஜய தீனதயாளாõ பக்தர்களை உத்தாரணம் செய்பவரேõ அன்புக்கடலேõ பிரம்மாண்ட மண்டலங்கள் அனைத்திலும் வியாபித்திருப்பினும், சிர்டீயில் தனிமையில் வாழும் தெய்வமேõ ஜய ஜயõ

7 ஞானியாகிய தேவரீர் கால்களைப் பரப்பிக்கொண்டவாறு, நடுவே ஏந்திரத்தை வைத்து, அச்சை ஆடவிடாமல் இறுக்கி, முதல் பிடி தானியத்தை இட்டு மாவு அரைக்க ஆரம்பித்தபோது என் சித்தம் வியப்படைந்ததுõ

8 அதுவே இந்தக் காவியத்தின் மூலம். அதுமாதிரியான நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதினால் மனத்தின் மலங்கள் அழியும் என்ற பலமான ஆர்வம் என் மனத்தே எழுந்தது.

9 ஹரியும் மிகுந்த மகிழ்ச்சியடைவார். தம்மைப் புகழ்ந்து பாடுவதைவிடப் பக்தர்களுடைய பெருமையையும் குணாதிசயங்கள்பற்றியும் பாடுவதையே அவர் பெரிதும் விரும்புகிறார்.

10 இது ஆதாரமில்லாத கருத்து என்று சந்தேகப்படுபவர்கள் ப(ஆஏஅ)விஷ்யோத்தர புராணத்தைப் படிக்கலாம். அந்தப் புராணத்தில், திரிபுரம் எரித்த சிவனே இவ்வாறு திருவாய்மொழிந்திருக்கிறார்.

11 ஈதனைத்தும் ஸாயீயின் அருள்வெளிப்பாடே. ஆயினும், உலகியல் ரீதிக்கு உட்பட்டும் பக்தர்களின் நன்மை கருதியும் இக் காவியம் இயற்றுவதற்கு எனக்கு அனுமதி தந்தார்.

12 அதன் பிறகு, ஸமர்த்த ஸாயீயின் கதையை பக்தர்கள் ஸாயீ லீலா பத்திரிகையில் மாதந்தோறும் மிகுந்த பிரேமையுடன் கேட்டுவருகிறார்கள்.

13 அனுமதி அளித்த ஸாயீதான் எனக்கு புத்தியையும் அளித்தார். அவர்தான் ஆதாரமான உணர்வையும் எனக்கு ஊட்டினார். அவர்தான் தம்முடைய கதையைத் தாமே எழுதவைக்கிறார்.

14 ஹேமாட் தம்முடைய புத்தியை உபயோகித்து இக் காவியத்தை இயற்றுகிறார் என்ற விகற்பமான சிந்தனை உங்கள் மனத்தில் சிறிதளவும் வேண்டா. ஆகவே, உங்களை மிகுந்த விநயத்துடன் கேட்டுக்கொள்கிறேன்; குணத்தையோ தோஷத்தையோ என்னுடையது ஆக்காதீர்õ

15 குணம் (சிறப்பு) தெரிந்தால் அது ஸாயீயினுடையது. தோஷம் (பிழை) ஏதாவது தெரிந்தால் அதுவும் அவருடையதேõ நான் ஸாயீயின் கையி­ருக்கும் பொம்மை; நூல்களின் இழுப்புக்கேற்ப நான் நடனமாடுகிறேன்.

16 நூல்களனைத்தும் பொம்மலாட்டக்காரரின் கைகளில் இருக்கின்றன. கதைக்கேற்றவாறு பலவிதமான வண்ணங்களிலும் உருவங்களிலுமுள்ள விசித்திரமான பொம்மைகளைக் கதாபாத்திரங்களாக்கி நடிக்கவைக்கிறார்.

17 இப்பொழுது இந்த அறிமுகவுரை போதும்õ கதை மேற்கொண்டு தொடரவேண்டுமென்ற ஆர்வமுள்ள கதைகேட்வர்கள், ''அடுத்த அற்புதமான கதை என்ன?ஃஃ என்று கேட்பது இயல்பே. குருவின் பெருமையையும் பக்தர்களின் அருமையையும் அவர்களுக்கு விவரிக்கிறேன்.

18 சென்ற அத்தியாயத்தை முடிக்கும் சமயத்தில், எனக்கு எந்தக் கதை ஞாபகப்படுத்தப்படுகிறதோ, அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்வதென்று முடிவு செய்யப்பட்டது. ஆகவே, இப்பொழுது என் மனத்தில் உதித்திருக்கும் கதையைக் கேளுங்கள்.

19 பக்தர் பிரேமையுடன் போஜனம் (உணவு) அளிக்கும்போது ஸாயீ எவ்வாறு பரம திருப்தி அடைகிறார் என்பதுபற்றிய இனிமையான கதையைச் சொல்கிறேன்; ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

20 வாஸ்தவமாக, சிசுவுக்குத் தாயார் எப்படியோ அப்படியே பக்தருக்கு ஸாயீ பிரத்யட்சம். குழந்தையைக் காக்கத் தாய் எப்படி ஓடி வருகிறாளோ, அப்படி பக்தன் எங்கிருந்தாலும் ஸாயீ ஓடிவருகிறார். யாரால் அவருக்குக் கைம்மாறு செய்யமுடியும்?

21 உடலளவில் அவர் சிர்டீயில் சுற்றிவந்துகொண் டிருந்தார்; ஆயினும் அவர் மூன்று உலகங்களிலும் சஞ்சாரம் செய்தார். இது சம்பந்தமாக ஒரு சுவாரசியமான விருத்தாந்தம் சொல்கிறேன்; சாந்தமான மனத்துடன் கேளுங்கள்.

22 பாலாஸாஹேப்1 தேவ் என்று பெயர்கொண்டவர் பாபாவின் பரமபக்தர். ஸாயீ பாதங்களில் சிறந்த நிட்டை வைத்திருந்தவர். தேவின் தாயார் தம்முடைய நன்மைக்காகவும் எல்லாரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

23 ஒருசமயம், தேவின் தாயார் பல விரதங்களை முடித்திருந்தார். விரதங்களை நிறைவுபெறச் செய்வதற்காகக் கொண்டாடப்படவேண்டிய உத்தியாபன (நிறைவு) விழா பாக்கியாக இருந்தது.

24 விரதங்களின் எண்ணிக்கை பூரணமடையும்போது உத்தியாபன விழா கொண்டாடப்பட வேண்டும். இல்லையெனில் விரதங்கள் பூரணமடையாமல் புண்ணியம் சேராது போய்விடும்.

25 இருபத்தைந்து-முப்பது விரதங்கள் முடிந்ததை முன்னிட்டுக் கொண்டாடப்படவேண்டிய உத்தியாபன விழாவிற்கு, நூறு-இருநூறு பிராமணர்களை தேவ் விருந்திற்கு அழைத்திருந்தார்.

26 உத்தியாபன விழாவிற்கு நாள் குறித்து பாபாவைத் தம்முடைய சார்பில் விருந்திற்கு அழைப்பதற்காக ஜோக்(எ)கிற்குக் கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை செய்யச்சொல்­ ஒரு கடிதம் எழுதினார்.

27 ''நீங்கள் வாராதுபோனால் உத்தியாபனம் சிறப்பாக முடிவு பெறாது. ஆகவே, பணிவுள்ள சேவகனாகிய என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அருள்செய்யுங்கள்.--

28 ''நானோ வயிற்றுப்பிழைப்புக்காக அரசாங்கத்திற்குப் பணி செய்பவன். என்னால் முடிந்த அளவிற்கு ஆன்மீக சாதனைகளையும் செய்கிறேன். இது விஷயம் உங்கள் மனத்திற்கே நன்கு தெரியும்.-- (ஆ,ய, தேவ் டஹாணூவில் தாசீல்தாராக வேலை செய்துவந்தார்.)

29 ''ஆகவே, டஹாணூவி­ருந்து நெடுந்தூரம் சிர்டீக்கு வருவதென்பது என்னுடைய சக்திக்கு மீறிய செயல். ஆயினும், என்னுடைய அழைப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசையும் நம்பிக்கையும்.ஃஃ

30 பாபுஸாஹேப் ஜோக்(எ) கடிதம் முழுவதையும் பாபா கேட்குமாறு படித்தபின் அவரிடம் சொன்னார், ''தேவுக்கு உதவி செய்யுங்கள். உத்தியாபன விழாவைச் சிறப்பாக நிறைவேற்றிக்கொடுங்கள்.ஃஃ

31 தூய்மையான மனத்துடன் அனுப்பப்பட்ட அந்த அழைப்புக் கடிதத்தை முழுக்கக் கவனமாகக் கேட்டபின் பாபா சொன்னார், ''யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.--

32 ''எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்.--

33 ''நீரும் நானும் மூன்றாவது நபர் ஒருவரும் ஒன்றுசேர்ந்து போவோம். அவருக்கு அவ்வாறு கடிதம் எழுதுங்கள். அழைப்புக் கடிதம் எழுதியவர் சந்தோஷப்படுவார்.ஃஃ

34 பாபா சொன்னதை ஜோக்(எ) தேவுக்கு அவ்விதமாகவே தெரிவித்தார். என்றும் சோடைபோகாத திருவாய்மொழிபற்றி அறிந்த தேவ் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

35 தேவ் முழு நம்பிக்கை வைத்திருந்தார், ''பாபா கட்டாயம் வருவார். அதை நான் அனுபவிக்கும் நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும்.ஃஃ

36 சிர்டீயைத் தவிர மூன்று கிராமங்களுக்குத்தான் பாபா செல்வார்; அதுவும் எப்போதோ ஒருமுறைதான் செல்வார். மற்றபடி நிரந்தரமாக சிர்டீயில்தான் இருந்தார். இதையும் தேவ் நன்கு அறிந்திருந்தார்.

37 போகவேண்டுமென்று தோன்றினால், ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ரஹாதாவிற்கோ சில சமயங்களில் ருயீக்கோ நிம்காங்விற்கோ சென்றார். மற்றபடி அவர் எப்பொழுதும் சிர்டீயிலேயே வாசம் செய்தார்.

38 ''இந்த மூன்று கிராமங்களைத் தவிர அவர் எப்பொழுதும் வேறெங்கும் செல்வதில்லை. அவர் எப்படி இவ்வளவு தூரம் கடந்து எனக்காக டஹாணூவிற்கு வரப்போகிறார்?--

39 ''ஆயினும் அவர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர்.--

40 ''அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பிப் போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில், அவர் வானத்திலும் நிரம்பியிருக்கிறார்.--

41 ''பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்னõ நினைத்தபோது தேவையான இடத்தில் தோன்றுகிறார்õஃஃ (38-41 தேவின் எண்ண ஓட்டம்.)

42 இது இப்படியிருக்க, உத்யாபன விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு சன்னியாசி தம்முடைய நோக்கம் கருதி டஹாணூ ஸ்டேஷன் மாஸ்டரிடம் வந்தார்.

43 சன்னியாசி ஒரு கோசாலைப் (பசுமடம்) பிரசாரகர். பசுக்களைப் பாதுகாக்கும் இயக்கம் ஒன்றின் தன்னார்வத் தொண்டர். அந்த இயக்கத்தின் மூலதனத்தை விருத்திசெய்யும் பொருட்டு நிதி திரட்டுவதற்காக வந்திருந்தார்.

44 உடையைப் பார்த்தால் வங்காளியைப் போன்றிருந்தார். ஸ்டேஷன் மாஸ்டர் அவருக்கொரு யுக்தி சொல்­க்கொடுத்தார். ''ஊருக்குள் செல்லுங்கள்; உங்களுடைய நிதி திரட்டும் முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.--

45 ''மாம்லேதார் (தாசீல்தார்) ஊரினுள் இருக்கிறார். நீங்கள் அங்கு சந்திக்கப்போகும் சேட்டுகளும் சௌகார்களும் உங்களுக்கு உதவி செய்வர்.--

46 ''மாம்லேதார் உங்களுக்கு சாதகமாக 'ஆம்ஃ என்று சொல்­விட்டால், தர்மகாரியத்திற்கான நிதி சுலபமாகத் திரளும். ஆகவே, தெம்பாக ஊருக்குள் செல்லுங்கள்.ஃஃ

47 ஸ்டேஷன் மாஸ்டர் இவ்வாறு தமது அறையில் சொல்­க்கொண் டிருந்தபோதே வெளியில் குதிரைக் குளம்படி ஒ­ கேட்டது. மாம்லேதாரே (தேவ்) அங்கு வந்துவிட்டார். குதிரையி­ருந்து இறங்கி ஸ்டேஷனுக்குள் சென்றார்.

48 ஸ்டேஷன் மாஸ்டரை சந்திக்க அவர் உள்ளே நுழைந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் சன்னியாசியிடம் சொன்னார், ''இதோ பாருங்கள்; மாம்லேதாரே இங்கு வந்துவிட்டார்õ--

49 ''இப்பொழுது நீர் அவரிடம் என்ன சொல்லவிரும்புகிறீரோ அதைச் சொல்லலாம். தெய்வாதீனமாக அவரை சுலபமாகவே சந்தித்துவிட்டீர்கள்.ஃஃ பிறகு, சன்னியாசி தாம் அங்கு வந்த நோக்கத்தை மாம்லேதாருக்கு விவரித்தார்.

50 இருவரும் வெளியே வந்து ஒரு பெட்டியின்மீது அமர்ந்தனர். சன்னியாசி விநயமாக தேவ் அவர்களை வேண்டினார், ''இந்த முயற்சி வெற்றி பெறவேண்டும்.--

51 ''கோமாதா ஸம்ரட்சணம் (நன்கு காப்பாற்றுகை) தருமகாரியம். உங்களுடைய கைகளால் எடுத்துக் கொள்ளப்படாவிடின், என் போன்ற வெளியூர்க்காரனால் எள்ளளவும் எப்படி சாதிக்க முடியும்?--

52 ''நீóங்கள் தாலூகாவின் அதிகாரி; நானோ பசுக்கள் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க, வீடுவீடாக அலையும் பிச்சைக்காரன்.--

53 ''நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் என்னுடைய நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமேயில்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; கோமாதாவின் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள்.ஃஃ

54 சன்னியாசியின் வேண்டுகோளைக் கேட்ட தேவ் பதில் சொன்னார், ''நாங்கள் இப்பொழுதுதான் வேறொரு தர்மகாரியத்திற்காக நிதி திரட்டும் வேலையில் இறங்கியிருக்கிறோம்.--

55 ''ராவ்ஸாஹேப் நரோத்தம் சேட் என்ற கௌரவம் மிக்க சமூகத் தலைவர், ஏழைகளின் நண்பர், முனைப்புடன் செயல்படுபவர், இப்பொழுதுதான் நிதி திரட்ட ஆரம்பித்திருக்கிறார்.--

56 ''இந்த சமயத்தில் உங்களுடைய நிதி திரட்டும் முயற்சி எப்படி ஒத்துப்போகும் என்பதை நீங்களே சொல்லுங்கள். ஆகவே, இது உங்களுக்கு சாதகமான நேரம் அன்று. ஆயினும், சில காலம் கழித்துப் பார்க்கலாம்.--

57 ''நீங்கள் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் இங்கு வாருங்கள். அப்பொழுது நாம் முயற்சி செய்வோம். இப்பொழுது உம்முடைய முயற்சி அனுகூலமாகாது.ஃஃ

58 சன்னியாசி கிளம்பிப் போய்விட்டார். சற்றேறக்குறைய ஒரு மாதம் கழித்து டஹாணூவுக்கு மறுபடியும் ஒருநாள் வந்தார். (தேவ் அன்று உத்தியாபன விழா கொண்டாடிக்கொண் டிருந்தார்õ)

59 தேவின் இல்லத்திற்கு எதிரே பராஞ்ஜ்பே என்று பெயர்கொண்ட வக்கீல் ஒருவர் வசித்துவந்தார். தேவ் அவ் வீட்டுக்கெதிராக ஒரு குதிரைவண்டி வந்து நிற்பதையும் சன்னியாசி வண்டியி­ருந்து இறங்குவதையும் கவனித்தார்.

60 தேவின் மனத்தில் உடனே ஒரு சந்தேகம் எழுந்து, தம் மகனிடம் சொன்னார், ''இவர் நிச்சயமாக முன்பு வந்த சன்னியாசிதான். நான் பரிந்துரைத்த காலத்திற்கு முன்பாகவே நிதி திரட்ட மறுபடியும் வந்துவிட்டார்.--

61 ''ஒரு மாதங்கூட முழுவதுமாகக் கழியவில்லையே. இவர் ஏன் இங்கு வந்தார்? முந்தைய சம்பாஷணையை மறந்துவிட்டாரா?ஃஃ இதுவே தேவின் சந்தேகத்தின் வேர்.

62 இறங்கிய இடத்திலேயே சன்னியாசி குதிரைவண்டியை விடுவித்துவிட்டார். அங்கேயே சிறிது நேரம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தேவின் இல்லத்திற்கு வந்தார். அவர் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

63 அப்பொழுது காலை மணி பத்து. பிராமணர்களுக்கு போஜனம் தயாராகிக்கொண் டிருந்த நேரம். தேவின் தவிப்பைக் கண்ட சன்னியாசி சொன்னார், ''நான் பணத்திற்காக அவசரப்படவில்லை.--

64 ''நான் பணத்திற்காக வரவில்லை. இன்று எங்களுக்குப் போஜனந்தான் தேவை.ஃஃ தேவ் சொன்னார், ''வாருங்கள் வாருங்கள்; ஆனந்தம் ஆனந்தம்õ இதை உங்களுடைய இல்லமாகக் கருதுங்கள்.ஃஃ

65 இதைக் கேட்ட சன்னியாசி சொன்னார், ''என்னுடன் இரண்டு பையன்கள் இருக்கின்றனர்.ஃஃ தேவ் சொன்னார், ''நல்லது, நிரம்பவும் நல்லது.ஃஃ

66 தேவ் மேலும் சொன்னார், ''சாப்பாட்டிற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? உங்களை அழைக்க நான் எங்கே ஆள் அனுப்பவேண்டும்?ஃஃ

67 சன்னியாசி இடைமறித்துச் சொன்னார், ''அதற்கென்ன தேவை? நான் எத்தனை மணிக்கு இங்கு வரவேண்டும்? நீங்கள் சொல்லும் நேரத்திற்கு வருகிறேன்.ஃஃ

68 ''நல்லது, பையன்களையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு பன்னிரண்டு மணிக்கு வாருங்கள். ஞானியே, வந்து என் இல்லத்தில் போஜனம் செய்யுங்கள்ஃஃ என்று தேவ் சொன்னார்.

69 சன்னியாசி கிளம்பிச் சென்றுவிட்டார். சரியாகப் பகல் பன்னிரண்டு மணிக்குத் திரும்பிவந்தார். மூவரும் சாப்பிட அமர்ந்து யதேஷ்டமாக (திருப்தியடையும் வரை) உணவுண்டனர்.

70 சமையல் முடிந்தவுடன் பிராமணர்கள் பந்திகளாக (வரிசை வரிசையாக) உட்கார்ந்தனர். சன்னியாசி, அவருடன் வந்த இரு பையன்கள், பிராமணர்கள், அனைவரையும் விருந்தோம்பியவர் (தேவ்) திருப்திசெய்தார்.

71 சன்னியாசி இரண்டு பையன்களுடன் தாமாகவே போஜனத்திற்கு வந்தாராயினும், அவருடைய முதல் விஜயத்தின் நோக்கம் ஒரு மாயைத் திரையை விரித்துவிட்டது.

72 ஆகவே, தேவின் மனத்தை, 'யாரோ ஓர் எதிர்பாராத விருந்தாளி போஜனம் செய்வதற்காக வந்திருக்கிறார் போ­ருக்கிறதுஃ என்ற திடமான எண்ணம் கவ்விக்கொண்டது.

73 இவ்வாறாக போஜனம் முடிந்தது. போஜனம் செய்பவர்கள் கடைசியில் சம்பிரதாயமாக உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவேண்டிய நீரும் அளிக்கப்பட்டது. வாய், முகம் கழுவிக்கொள்ளக் குளிர்ந்த நறுமண நீரும் அளிக்கப்பட்டது.

74 தேவ் ஆசாரநியமத்தின்படியும் சம்பிரதாயத்தின்படியும் சந்தனம், மலர்கள், தாம்பூலம், பன்னீர், அத்தர், ஆகிய பொருள்களை மிகுந்த மரியாதையுடன் அனைவருக்கும் அளித்து மகிழ்ச்சியடைந்தார்.

75 இவ்விதமாக நடந்து முடிந்த பிறகு அனைவரும் தம் தம் இடங்களுக்குத் திரும்பினர். சன்னியாசியும் தம்முடன் வந்த இரண்டு பையன்களுடன் அவருடைய ஊருக்குச் சென்றுவிட்டார்.

76 அழைக்கப்படாமல் சந்தர்ப்பவசமாக மூவரும் வந்தனர். எனினும், சரியான நேரத்திற்கு வந்து உணவுண்டனர். ஆனால், தேவுக்கு சன்னியாசி பாபாவாகத் தெரியவில்லை; மனத்தில் சந்தேகமே நிறைந்திருந்தது.

77 ஈதனைத்தும் அவருக்குப் பிரத்யட்சமாக நடந்தபோதிலும், எதிர்பாராமலேயே, அழைக்கப்படாத விருந்தாளிகள் மூவருக்கு அவருடைய கண்ணெதிரில் உணவளிக்கப்பட்டபோதிலும், தேவின் மனத்தில் சந்தேகமே நிலவியது. பாபா வந்ததற்குச் சாட்சி என்னவென்று ஜோக்(எ)கைக் கேட்டார்.

78 சந்தேகத்தின் விளைவாக, உத்தியாபன விழா நடந்து முடிந்த பிறகு ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். ''பாபா எப்படி என்னை இவ்வாறு ஏமாற்றலாம்? டஹாணூவிற்கு வருவதாக ஏன் உறுதியளித்தார்?--

79 ''அந்த உறுதி, நீங்களும் அவருடன் சேர்ந்து வருவீர்கள் என்றும், அவருடைய வார்த்தை மாறாது என்றும், என்னுடைய ஆசை நிறைவேறுமென்றும் என்னை நம்பவைத்ததா, இல்லையா?--

80 ''ஆயினும் நடந்தது என்ன? என்னுடைய ஆசை மாத்திரம் ஏன் நிராசையாகிவிட்டது? பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். ஒருவரும் சொன்னவாறு வரவில்லை.--

81 ''பிரேமையுடன் பாபாவை அழைத்தேன். சரணாகதியடைந்த எனக்கு, வருவேன் என்று அவரும் சொன்னார். ஆனால், நடந்ததோ வேறுவிதமாக. இது எவ்வாறு இப்படி நடந்தது என்று எனக்கு விளங்கவில்லையேõ--

82 ''நான் உத்தியோகம் செய்து பிழைப்பவனானதால், என்னால் நேரில் வர இயலவில்லை. மனப்பூர்வமாக மன்றாடிக் கடிதம் எழுதினேன். என் கடிதத்தையும் மதித்து நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்து நான் பெரும்பேறு பெற்றவனென்று நினைத்தேன்.--

83 ''ஏதோவொரு சாக்குப்போக்கை வைத்தோ, ஏதாவதொரு மாறுவேஷத்திலோ வருவீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறு எப்படி நடக்காதுபோயிற்று என்பது எனக்கு விசேஷமான ஆச்சரியத்தை அளிக்கிறது.ஃஃ

84 ''ஜோக்(எ) கடிதத்தின் முழு விவரத்தையும் ஸாயீயின் பாதங்களில் நிவேதனம் செய்தார். பாபா ஆச்சரியமடைந்து என்ன பதில் சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

85 ''என்னெதிரில் ஒரு கடிதம் பிரிக்கப்படும்போதே கடிதம் எழுதியவரின் எண்ண ஓட்டத்தை நான் அறிகிறேன். ஆதியி­ருந்து அந்தம்வரை எழுதியவரின் எண்ணங்கள் என்முன்னே உருவெடுத்து நிற்கின்றன.--

86 ''நான் வாக்குறுதி அளித்தபிறகு அவரை ஏமாற்றிவிட்டேன் என்று சொல்கிறார். என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதவர், எனக்கு ஏன் அழைப்பு விடுத்தார் என்று அவரைக் கேளும்.--

87 ''மற்றவர்களின் கண்களுக்கு நான் இங்கிருந்து நகராததுபோலத் தெரியலாம். ஆயினும், நான் உத்தியாபன விழாவில் விருந்துண்டேன். என்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு வருவேன் என்று சொன்னேன்; அவ்வாறே என்னுடன் இருவரை அழைத்துச் சென்றேன்.--

88 ''சாப்பாட்டு நேரத்திற்கு அவகாசம் இருந்தது. ஆகவே, முத­ல் நான் மட்டும் சாவகாசமாகச் சென்றேன். உமக்கு சன்னியாசி வேஷம் தெரியாதா? அந்த ரீதியில் நான் முத­ல் பிரவேசம் செய்தேன்.--

89 ''நான் எதிர்பாராது வந்ததைக் கண்டவுடன், பைசாவுக்காக வந்திருப்பதாக நீர் பீதியடையவில்லை? பின்னர், நான் உம்முடைய சந்தேகங்களை நிவிர்த்தி செய்தேன்.--

90 ''நான் சாப்பாட்டிற்காகத்தான் வந்திருக்கிறேனென்றும் என்னுடன் இருவரை அழைத்துவருவேன் என்றும் சொல்லவில்லையா? சொன்னவாறே சரியான நேரத்திற்கு இருவருடன் வந்து சாப்பிடவில்லையா?--

91 ''இதோ பாரும்; என் வாயி­ருந்து வெளிப்பட்ட வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக என்னுடைய பிராணனையும் கொடுப்பேன். என்னுடைய வார்த்தை என்றுமே பொய்யாகாது.ஃஃ

92 ஸாயீநாதர் இவ்வாறு சொன்னபோது ஜோக்(எ)கின் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. பாபா அளித்த உறுதிகள் என்றுமே வேறுவிதமாக நடந்ததில்லை. எப்பொழுதும் எல்லாருடைய அனுபவங்களும் அப்படியேõ

93 பின்னர், மிகுந்த சந்தோஷத்துடன் ஜோக் எல்லா விவரங்களையும் தேவுக்கு ஒரு நீண்ட கடிதத்தின் மூலமாகத் தெரிவித்தார்.

94 தேவ் அந்தக் கடிதத்தைப் படித்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார். ''நான் ஸாயீயைக் குற்றம் சொன்னது வெட்கக்கேடுõஃஃ என்று நினைத்துத் தலைகுனிந்தார்.

95 ''ஸாயீயின் மஹிமை மஹத்தானது, எல்லாம் தெரிந்தவனென்ற என்னுடைய கர்வம் ஒரு வெட்கக்கேடு. ஆனால், அன்று வந்த சன்னியாசி பாபாதான் என்று நான் எப்படி அனுமானம் செய்திருக்கமுடியும் என்று எனக்கு விளங்கவில்லையே?--

96 ''நான் பாபாவை உத்தியாபன விழாவிற்கு அழைப்பதற்கு முன்பாகவே சன்னியாசி அவருடைய முதல் விஜயத்தை முடித்துவிட்டாரேõ அதுவும் நிதி திரட்டுவதற்காக வன்றோ விஜயம் செய்தார்?--

97 ''நான் ஏற்கெனவே அவரை இரண்டு-நான்கு மாதங்கள் கழித்து மறுபடியும் வாருங்கள் என்று சொல்­யிருந்தேன். அதே சன்னியாசி, அந்தக் காலகட்டத்திற்கு முன்பாகவே வந்து, சாப்பாடுதான் வேண்டுமென்று கேட்டால் நான் எப்படி அவர்தான் பாபாவென்று யூகிக்கமுடியும்?--

98 ''ஆனால், 'நான் மதியம் சாப்பிட வரும்போது என்னுடன் இரண்டு பேர்கள் வருவார்கள்ஃ என்று பாபா சொன்ன வார்த்தையைப் புரிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டுவிட்டேன். --

99 ''பாபாவுக்கு அழைப்பு விடுத்த பிறகு, சன்னியாசி முதன்முறையாக, அதுவும் சாப்பாட்டிற்கென்று வந்திருந்தால் நான் இவ்வாறு ஏமாறியிருக்கமாட்டேன். --

100 ''ஆனால், அவர் கோ ஸம்ரட்சண நிமித்தமாகவும் பசுக்களுக்குத் தீனி வாங்க நிதி திரட்டுவதற்காகவுமே வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே நான் உத்தியாபன விழாவிற்கு வருகை தரும்படி பாபாவுக்கு அழைப்பு அனுப்பினேன்.--

101 ''இவ்விதமாக என் மனம் மயங்கிய காரணத்தால்தான் எல்லாம் இவ்வாறு நடந்தது. அவர் இரண்டு பேர்களுடன் சேர்ந்து வந்து போஜனம் செய்துவிட்டுச் சென்றாராயினும், அவரை அன்னத்தை நாடிவந்த வழிப்போக்கர் என்று நான் நினைத்துவிட்டேன்.--

102 ''எதிர்பாராது போஜனநேரத்தில் இரண்டு பேர்களுடன் வந்தவர், எனக்கு ஏற்கெனவே அறிமுகமாகாதவராக இருந்திருந்தால், அவர் ஸாயீ என்று நான் நிச்சயமாக அறிந்துகொண் டிருப்பேன்.ஃஃ

103 ஆனால், ஞானிகளின் ரீதி இவ்வாறே. அவர்களுடைய கற்பனைக்கெட்டாத லீலைகளும் அற்புதச் செயல்களும் இவ்வாறே. பக்தர்களின் இல்லத்தில் என்னென்ன நடக்கவேண்டுமென்பதை அவர்கள் முன்கூட்டியே நிச்சயிக்கிறார்கள்.

104 பாதங்களைப் பணியும் பக்தர்களுடைய இல்லங்களில், எதிர்பாராமலேயே மங்கள நிகழ்ச்சிகள் இம்மாதிரியாக வெற்றிகரமாக நிறைவேறுகின்றன. சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.

105 சிந்தாமணி நாம் கேட்பதைக் கொடுக்கும். கற்பக விருட்சம் நாம் மனத்தில் நினைப்பதைக் கொடுக்கும். காமதேனு நாம் ஆசைப்படுவதை உற்பத்தி செய்யும். ஆனால், குருவாகிய தாயோ நாம் நினைத்தே பார்க்காதவற்றையும் அருள்செய்வார்.

106 இந்த சந்தர்ப்பத்தில் பாபா விருந்துக்கு அழைக்கப்பட்டார்; சன்னியாசி ரூபத்தில் வந்தார். சில சந்தர்ப்பங்களில் அழைக்காமலும் வந்து அற்புத லீலை புரிந்தார்õ

107 சில சமயங்களில் புகைப்பட உருவத்தில்-சில சமயங்களில் களிமண் பொம்மை உருவத்தில் - அவருடைய கிருபைக்கு எல்லையேயில்லைõ சில சமயங்களில் தாமே தோன்றினார்õ

108 இது சம்பந்தமாக என்னுடைய அனுபவத்தைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். இந்த விநோதமானதும் அபூர்வமானதுமான காதையி­ருந்து, கதைகேட்பவர்கள் ஸாயீ லீலையின் பிரபாவத்தை அறிவர்.

109 சிலர் இவ்வாறு சொல்லலாம், ''இதுவென்ன உண்மையாக நடந்த நிகழ்ச்சியா, கற்பனைக் கதையா?ஃஃ அவர்கள் விரும்பியவாறு ஏதாவது சொல்லட்டும்; நீங்கள் பயபக்தியுடன் காதையைக் கேளுங்கள்.

110 சோம்பலும் நித்திரையும் அயர்ச்சியும் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும். 'முழுக்கவனத்துடன் கேள்விஃ என்னும் தானத்தை எனக்களித்தால்தான் நான் திருப்தியுறுவேன்.

111 சிறிது நேரம் சலனங்களைத் தூர விரட்டிவிட்டு மனத்தை சமநிலைப்படுத்தினால் கேள்வி சிறப்புறும். மனத்தில் அசைபோடுதலும் சிந்தனையும் தொடரும்.

112 அதன் பிறகு நேரிடை அனுபவம் ஏற்படும். இவை அனைத்திற்கும் கேள்வியே (காதால் கேட்டலே) ஆதாரம்; கேள்வியே சாரம். அதை வைத்து, நிச்சயமாகப் பிறவிக்கடலைக் கடந்துவிடலாம்.

113 1917 ஆம் ஆண்டு பங்குனி மாதப் பௌர்ணமியன்று நான் படுக்கையில் உறங்கிக்கொண் டிருந்தபோது விடியற்காலை நேரத்தில் கனவொன்று கண்டேன்.

114 ஸாயீயின் விசேஷமான செயலைப் பாருங்கள்õ அவர் எனக்கு அழகான சன்னியாசி உடையில் காட்சி தந்தார். என்னை எழுப்பி, ''இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்ஃஃ என்று சொன்னார்.

115 கனவி­ருந்து விழித்துக்கொள்வது கனவின் ஒரு பகுதியே. ஆகவே, தூக்கத்தி­ருந்து விழித்துக்கொண்ட பிறகு, நான் கனவில் கண்டதை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயன்றேன்.

116 நான் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஸாயீயோ வேறெவருமோ அங்கு இல்லை. சற்று முன்பு நான் கண்டது கனவுதான்; கொஞ்சமும் விழிப்பில்லாத நிலையே.

117 இவ்விதமாகத் தெளிவடைந்த பிறகு, கனவை நினைவிற்குக் கொண்டுவர முயன்றேன். அவர் சொன்ன சொற்களைக் கொஞ்சமும் மறந்துவிடாமல், ஓர் எழுத்தையும் விட்டுவிடாமல் மனத்தில் திரும்பக் கொணர்ந்தேன்.

118 ''இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்ஃஃ என்ற ஸாயீயின் தெளிவான வார்த்தைகளைக் கேட்டு என்னுடைய ஜீவன் ஆனந்தம் அடைந்தது. இந்த விவரத்தை என் மனைவியிடம் சொன்னேன்.

119 மனத்திலும் இதயத்திலும் ஸாயீ தியானமே இருந்தது. அதுவே நிரந்தரமான அப்பியாசம் ஆகிவிட்டது. ஆயினும், இந்த ஏழுவருட சகவாசத்தில், அவர் போஜனத்திற்காக என் இல்லத்திற்கு வருவார் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ என்றும் இருந்ததில்லை.

120 ஆயினும், நான் என் மனைவியிடம் சொன்னேன், ''இன்று ஹோ­ப் பண்டிகை. ஞாபகமாக ஒரு கால் சேர் அரிசி அதிகமாகப் பொங்கு.ஃஃ

121 இதை மாத்திரம் அவளிடம் சொன்னதால், அவள் காரணம் கேட்க ஆரம்பித்தாள். நான் சொன்னேன், ''இன்று, இப் பண்டிகை நன்னாளில், ஒரு விருந்தாளி சாப்பிட வருகிறார்.ஃஃ

122 அவள் ஆர்வம் மே­டக் கேட்டாள், ''யாரென்று எனக்குச் சொல்லுங்கள்.ஃஃ நான் உண்மையைச் சொன்னால் அது பரிஹாசத்திற்குரிய விஷயமாக ஆகிவிடும்.

123 இதையும் நான் நன்கு அறிந்திருந்தேன். ஆயினும் உண்மையில்லாத விஷயத்தைச் சொல்லக்கூடாது என்று நினைத்து, நான் நடந்ததை நடந்தவாறு சிரத்தையுடன் அவளிடம் விவரித்தேன்.

124 இது ஒருவருடைய நம்பிக்கையைச் சார்ந்த விஷயமன்றோõ உள்ளே உணர்வு எப்படியோ அப்படியே பொய்யும் மெய்யும். ஈதனைத்தும் ஒருவருடைய மனத்தைச் சார்óந்தது.

125 நான் எவ்வளவு முயன்றபோதிலும் அவளை நம்பவைக்க முடியவில்லை. அவள் கேட்டாள், ''பாபா சிர்டீயி­ருந்து நெடுந்தூரம் கடந்து இங்கு எதற்காக வரவேண்டும்?--

126 ''நம்மால் என்ன பெரிய விருந்தளிக்க முடியும்? நாமென்ன விசேஷமாகவா ஹோ­ப் பண்டிகை கொண்டாடுகிறோம்? சிர்டீயில் கிடைக்கக்கூடிய இனிப்புகளையும் ருசி மிகுந்த உணவுப்பண்டங்களையும் விட்டுவிட்டு நம்முடைய ருசியற்ற முரட்டுச் சோற்றையா சாப்பிடப்போகிறார்?ஃஃ --

127 என்று அவள் கேட்டாள். நான் பதில் சொன்னேன், ''கால் சேர் அரிசி அதிகமாக வடிப்பதில் நமக்கென்ன பெரிய ஆயாசம்? உன்னிடம் கால் சேர் அரிசி இல்லாமல் போய்விடவில்லையேõ --

128 ''ஸாயீ, தாமே விருந்தாளியாக வருவார் என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆயினும், யாரோ ஒரு விருந்தாளி வரப்போகிறார் என்று எனக்கு சந்தேகமில்லாமல் தோன்றுகிறது.--

129 ''அவரை நீ யாரென்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்; நான் அவரை ஸாயீக்கு சமானமாக எடுத்துக்கொள்கிறேன். இல்லை, இல்லை, ஸாயீயாகவே எடுத்துக்கொள்கிறேன்; என்னுடைய சொப்பனமும் உண்மையாகிவிடும்.ஃஃ

130 இதுவே எங்களுக்குள் நடந்த சம்பாஷணை. பிறகு மதியநேரம் வந்தது. விதிமுறைகளின்படி ஹோ­கா பூஜையும் (அக்கினி பூஜையும்) செய்யப்பட்டது; போஜனத்திற்காகத் தைய­லைகள் போடப்பட்டன.

131 மகன்கள், பேரன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் -- அனைவருக்கும் பந்தியாகத் தைய­லைகளும் மணைகளும் போடப்பட்டன; குடிநீர்ப் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. பந்தியில் இலைகளைச் சுற்றி அழகான கோலங்கள் போடப்பட்டன.

132 இந்த அமைப்பின் முக்கிய பந்தியின் மத்தியில் ஸாயீக்காக ஒரு மணையும் தட்டும் போடப்பட்டன. மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது இந்தத் தட்டிலும் பரிமாறப்பட்டது.

133 இந்தத் தட்டைச் சுற்றிப் பல வண்ணங்களில் அழகாகக் கோலம் போடப்பட்டிருந்தது. சாப்பிடுபவர் ஒவ்வொருவருக்கும் குடிநீர்ப் பாத்திரம் ஒன்றும் உத்தரணியுடன் கூடிய பஞ்சபாத்திரம் ஒன்றும் வைக்கப்பட்டன. இது எல்லாருக்கும் ஒரேமாதிரியாகச் செய்யப்பட்டது.

134 அப்பளம், ஸாண்டகே, பச்சடி, காரமான ஊறுகாய், பலவிதமான காய்கறிகள், பாயசம் ஆகியவை பரிமாறப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன.

135 மணி பன்னிரண்டு ஆகிவிட்டதென்று தெரிந்து, சாப்பிடப்போகிறவர்கள் மடி வேட்டிகளைக் கட்டிக்கொண்டபின் ஒவ்வொருவராக வந்து மணைகளில் அமர்ந்தனர். அப்பொழுதும் விருந்தாளி எவரும் வரவில்லைõ

136 பந்தியில் எல்லா இடங்களும் நிரம்பிவிட்டன. சோறு, போளி, பருப்பு, சப்பாத்தி ஆகியவை பரிமாறப்பட்டன. சாப்பிட ஆரம்பிக்க, மத்தியில் கா­யாக இருந்த ஆசனத்தில் அமரவேண்டிய விருந்தாளியைத் தவிர வேறெதுவும் தேவைப்படவில்லைõ

137 விருந்தாளி யாராவது வருவாரென்று எல்லாரும் காத்திருந்தனர். எனக்கே மனத்தில் சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது. வாயிற்படியைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது?

138 ஆகவே, வாயிற்கதவு அடைக்கப்பட்டது. அன்னத்தை சுத்தம்1 செய்வதற்காக நெய் பரிமாறப்பட்டது. வைச்வதேவ2 நைவேத்தியமும் முடிந்துவிட்டது. சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.

139 போஜனம் செய்பவர்கள் பிராண3 ஆஹுதி செய்யப்போகும் சமயத்தில் வீட்டிற்கு வெளியே காலடி சத்தம் கேட்டது. ''ராவ்ஸாஹேப் எங்கிருக்கிறார்?ஃஃ என்று யாரோ வினவும் குரலும் கேட்டது. சாப்பிட உட்கார்ந்தவர்கள் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

140 யாரோ வந்திருக்கிறார் என்று நினைத்து நான் வாயிற்கதவுக்குச் சென்றேன். மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தேன்; படிகளில் இருவர் நின்றுகொண் டிருந்தனர்.

141 அவர்களில் ஒருவர் அல்லீ முஹமது. மற்றவர் இஸ்மூ முஜாவர் என்ற பெயர் கொண்டவர்; முஸ்லீம்ஞானி மௌலானாவின் சிஷ்யர். இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

142 போஜனத்திற்கு எல்லாம் தயார் நிலையில் இருந்ததையும் இலைகளில் உணவுப் பொருள்கள் பரிமாறப்பட் டிருந்ததையும் எல்லாரும் சாப்பிடக் காத்துக்கொண் டிருந்ததையும் இருவரும் கண்டனர். இதையெல்லாம் பார்த்த அல்லீ முஹமது பணிவுடன் கேட்டுக்கொண்டார், ''நான் தொந்தரவு கொடுப்பதற்கு மன்னித்துவிடுங்கள்.--

143 ''சாப்பிட உட்கார்ந்த நீங்கள் எனக்காக எழுந்து வந்திருக்கிறீர்கள் போ­ருக்கிறது. உங்களுக்காக மற்றவர்களும் காத்திருக்கின்றனர்.--

144 ''ஆகவே, உங்களுடைய வஸ்துவை (பொருளை) ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களைப் பின்னர் சந்திக்கிறேன். சமயம் வரும்போது இதுபற்றிய மிக ஆச்சரியமானதும் அற்புதமானதுமான விஷயத்தை விவரமாகச் சொல்கிறேன்.ஃஃ

145 இவ்வாறு சொல்­க்கொண்டே, அல்லீ முஹமது கையிடுக்கி­ருந்த ஒரு பார்சலைத் தமக்கெதிரி­ருந்த மேஜையின்மீது வைத்துக் கட்டுகளைப் பிரிக்க ஆரம்பித்தார்.

146 மேலே சுற்றியிருந்த செய்தித்தாள் காகிதங்களைப் பிரித்தகணமே, ஸாயீயின் மூர்த்தி (களிமண்ணாலான புடைச்சிற்பம் - ஆஅந-தஉகஐஉஊ4) கண்களுக்குத் தென்பட்டது. அவர் சொன்னார், ''என்னுடைய வேண்டுகோளை ஏற்று, இதை எடுத்துக்கொள்ளுங்கள்.ஃஃ

147 ஸாயீயின் சிற்பத்தைப் பார்த்தவுடனே உணர்ச்சிவசத்தால் எனக்கு உடல் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. இதயம் அன்பினாலும் ஆனந்தத்தாலும் பொங்கிவழிந்தது. உடனே ஸாயீ பாதங்களில் தலையை வைத்தேன்.

148 ஸாயீயின் விசித்திரமான லீலையைக் கண்டு அதை ஒரு பேரதிசயம் என்று நினைத்தேன். 'தம்முடைய சக்தியை இவ்வாறு வெளிப்படுத்தி என்னை அவர் ஆசீர்வதித்திருக்கிறார்ஃ என்று நினைத்தேன்.

149 மனத்தில் பேரெழுச்சியும் ஆர்வமும் ஏற்பட, அந்தப் புடைச்சிற்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டேன். அல்லீ முஹமது சொன்னார், ''நான் இதை ஒரு கடையி­ருந்து விலைகொடுத்து வாங்கினேன்.ஃஃ

150 பிறகு அவர் ஒருகணமும் தாமதியாது சொன்னார், ''நாங்கள் இப்பொழுது சென்றுவருகிறோம். நீங்களெல்லாம் நிம்மதியாகச் சாப்பிடுங்கள்.--

151 ''நான் இப்பொழுது முகாந்தரத்தைச் சொல்ல ஆரம்பித்தால், சாப்பிட உட்கார்ந்திருப்பவர்கள் அனாவசியமாகக் காத்திருக்கும்படி நேரும். நான் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்.ஃஃ

152 நானும் அதுதான் சரியென்று நினைத்தேன். மேலும், கடைசி விநாடியில் பாபாவின் சிற்பம் வந்துசேர்ந்த ஆனந்தத்தில் நான் மூழ்கிப்போயிருந்தேன். ஆகவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நான் சொன்னேன்,--

153 ''நல்லது, நீங்கள் சென்றுவாருங்கள்.ஃஃ நானும் கதைகேட்பவர்களுக்கு பாபாவின் புடைச்சிற்பம் வந்துசேர்ந்த விவரத்தைப் பின்னர்ச் சொல்கிறேன். அதை இன்றே சொல்லவேண்டிய அவசியம் என்னõ

154 ஆகவே, அவர்களிருவரும் கிளம்பிச் சென்ற பிறகு, ஏற்கெனவே பாபாவுக்காக இடப்பட்டிருந்த மணையின்மேல் புடைச்சிற்பம் வைக்கப்பட்டது.

155 எல்லாரும் சந்தோஷமடைந்தனர். ஸாயீ லீலை கற்பனைக்கெட்டாதது. சிற்ப ரூபத்தில் வந்து கனவில் சொன்ன வார்த்தைகளை சத்தியமாக்கிவிட்டார்õ

156 ஒருவேளை யாராவது விருந்தாளி வந்தால், தங்களுடன் அவரும் பந்தியில் அமர்வார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் அடைந்த ஆச்சரியந்தான் என்னேõ

157 புடைச்சிற்பத்தி­ருந்த அழகான மூர்த்தியைப் பார்த்து அனைவரும் பரம சந்தோஷமடைந்தனர். சற்றும் எதிர்பாராதவிதமாக அது வந்துசேர்ந்ததைக் கண்டு எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

158 சிற்பம் மணையின்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, அர்க்யம், பாத்யம் போன்ற சடங்குகளுடன்கூடிய பூஜை செய்யப்பட்டது. பிரேமையுடனும் பக்தியுடனும் படையல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு எல்லாரும் உணவுண்டனர்.

159 அன்றி­ருந்து இன்றுவரை, ஒவ்வொரு ஹோ­ப் பண்டிகையன்றும் இந்தச் சிற்பத்திற்கு ஆசாரவிதிகளின்படி எட்டு உபசாரங்கள் கொண்ட பூஜை நடந்துவருகிறது.

160 பூஜையறையில் மற்ற தெய்வங்களுடன் இந்தச் சிற்பமும் வழிபடப்படுகிறது. இதுவே ஸாயீயின் அபூர்வமான லீலை; சரித்திரம். பக்தர்களுக்கு ஒவ்வொரு படியிலும் ஸாயீ வழிகாட்டுகிறார் அல்லரோõ

161 அல்லீ முஹமதும் இஸ்மூ முஜாவரும் விவரம் சொல்வதற்காகச் செய்யவேண்டிய வருகையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போயினர். ஒன்பது ஆண்டுகள் கடந்தன; என்னால் அவர்களைச் சந்திக்கமுடியவில்லை.

162 கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்து, ஒருநாள் நான் இயல்பாகச் சாலையில் நடந்து சென்றுகொண் டிருந்தபோது அல்லீ முஹமது அவர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன்.

163 சந்தித்தபோது, எனக்களிக்கப்பட்ட ஸாயீயின் புடைச்சிற்பம்பற்றிய அற்புதத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்துடன் அவரைக் கேட்டேன், ''இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்?--

164 ''அன்று எப்படியோ, இன்றும் அப்படியே எதிர்பாராதவிதமாகச் சந்தித்திருக்கிறோம். இந்த நல்வாய்ப்பு நமக்கு சகஜமாக அமைந்திருக்கிறது. ஆகவே, சுவாரசியமான அந்த விருத்தாந்தத்தை முழுவதும் சொல்லுங்கள்.--

165 ''நீங்களும் ஒரு ஸாயீபக்தர் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆயினும், சற்றும் எதிர்பாராதவிதமாக, அந்தக் குறிப்பிட்ட நாளில் வருவதுதான் சிறப்பு என்று நீங்கள் எப்படி நிச்சயித்தீர்கள்?ஃஃ

166 பிறகு, அல்லீ முஹமது முழு விருத்தாந்தத்தையும் சொன்னார், ''ஆச்சரியம் நிரம்பியதும் மிக அற்புதமானதுமான ஸாயீயின் லீலையை ஆதியோடந்தமாகச் சொல்கிறேன்; கேளுங்கள்.--

167 ''இந்த லீலைக்கு என்ன அர்த்தம்? லீலை எதற்காகச் செய்யப்பட்டது? இதன்மூலம் பக்தர்கள் அறியவேண்டியது என்ன? அனைத்தும் ஸாயீக்கே வெளிச்சம்õ--

168 ''நம்மைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் லீலைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்; வாயினால் பாடவேண்டும். இரண்டுமே நமக்கு நற்பேறுகளை அளிக்கும்.ஃஃ

169 மேற்கொண்டு வரும் கதை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். கேட்கும் மக்கட்கூட்டம் ஆனந்தமடையும். ஸாயீயின் சரித்திரம் அமோகமாக நன்மையளிக்கும்.

170 ஸாயீ, ஆனந்தம் நிறைந்த கனமேகம்; துவேஷமென்பதே இல்லாதவர். அவரை எப்பொழுதும் இடைவிடாமல் தொழுபவர்கள் ஆனந்தமும் திருப்தியும் அடைவார்கள்; மனம் விருப்புவெறுப்புகளி­ருந்து விடுபடும்.

171 சாதகப் பறவை சுயநலத்திற்காக மேகத்தை நாடுகிறது. மேகமோ சகல சிருஷ்டிக்குமே மழையாகப் பொழிகிறது. பாலாஸாஹேப் (தேவ்) பாபாவை விருந்துக்கு அழைத்தார். பாபாவோ பக்தர் குழாமைத் தம்முடன் அழைத்துச் சென்றார்.

172 பந்தியாக உட்கார்ந்து உத்தியாபன விழா கதையைக் கேட்டவர்களும் இந்த பக்தர் குழாமில் அடக்கம். ஸாயீயின் சங்கம் என்னும் விருந்தை அனுபவித்துத் திருப்தியை ஏப்பம்விட்டுத் தெரிவிக்கின்றனர்.

173 அழைக்காமலேயே வந்தார்õ வேறு உருவத்தில் தோன்றினார்õ தம் பக்தர்களைக் கடமைப்பட்டவர்களாகச் செய்தார்õ ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வூட்டினார்õ

174 ஹேமாட் ஸாயீயை சரணடைகிறேன். அடுத்த அத்தியாயத்தின் அரங்கேற்றத்தை அவருடைய விரும்பம்போல் ஏற்பாடு செய்வார். அடுத்த அத்தியாயமும் சென்ற அத்தியாயத்தைப் போலவே மலரும்.

175 ஸாயீ சரணாகதியடைந்தவர்களைப் பாதுகாக்கிறார். ஸாயீயின் இந்த வாக்குறுதிக்காகவே ஹேமாட் அவருடைய பாதங்களைப் பற்றிக்கொள்கிறேன்; அவரும் உதைத்துத் தள்ளுவதில்லைõ

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'உத்தியாபன விழாஃ என்னும் நாற்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.Share :
Get it on Google Play