Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 34

34. உதீயின் பிரபாவம் (பகுதி 2)
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 உதீயின் மஹிமைபற்றிய நிகழ்ச்சிகள் நடந்தது நடந்தவாறு கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன. இந்த அத்தியாயத்திலும் உதீயின் குணலக்ஷணங்களை விவரிக்கும் வகையில் உதீயின் மஹிமைபற்றி மேற்கொண்டு பேசுவோம்.

2 கேட்பவர்கள் சுகத்தையும் சகல செல்வங்களையும் பெறுவதற்காகக் கடந்த அத்தியாயத்தைப் போலவே இந்த அத்தியாயத்திலும் உதீயின் வைபவத்தை அமைதியான மனத்துடன் கேட்பீர்களாகõ

3 புரையோடிப்போய் எந்த வைத்தியத்திற்கும் ஆறாமல் தீராத வியாதியாகிவிட்ட ரணம், பாபாவின் கையால் அளிக்கப்பட்ட விபூதியைப் பூசியதால் நிர்மூலமாகியது.

4 இவ்வாறான உதீயின் கதைகள் அநேகம். திசை காட்டுவதுபோல் ஒரு காதையை மட்டும் சொல்கிறேன். அனுபவபூர்வமான காதையானதால் கேட்பவர்கள் ரசித்து மகிழ்வார்கள்.

5 நாசிக் ஜில்லாவில் மாலே காங்வ் என்னும் ஊரில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற டாக்டர்1 ஒருவர் இருந்தார். அவர் அண்ணன் மகனுக்கு எந்தச் சிகிச்சையாலும் குணப்படுத்தமுடியாத ஒரு வியாதி இருந்தது.

6 அவரே ஒரு பட்டம் பெற்ற, தேர்ச்சி பெற்ற டாக்டர். அவர் நண்பரும் ஒரு டாக்டர். இருவருமே திறமை வாய்ந்த, புகழ்பெற்ற அறுவை மருத்துவ நிபுணர்கள். பலவிதமான அணுகுமுறைகளைக் கையாண்டும், கடைசியில் களைத்துப்போய் செய்வதறியாது திகைத்தனர்.

7 வியாதி, எலும்பில் புரையோடிய ஆறாத ரணம். ஹாட்யாவ்ரணம் என்று இந்த வியாதிக்கு மராட்டி மொழியில் பெயர்; இச் சொல் திரிந்து ஹாட்யாவர்ணம் என்றாகியது. இது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத ஒரு விசித்திரமான, தீராத வியாதி.

8 மனத்திற்குத் தோன்றிய உள்நாட்டு, வெளிநாட்டு வைத்தியமுறைகளனைத்தும் கையாளப்பட்டன; எதுவும் பலனளிக்கவில்லை. அறுவை மருத்துவமும் செய்யப்பட்டது; அதுவும் டாக்டருக்குப் பெருமை தேடித் தரவில்லை.

9 அண்ணன் மகன் சிறுவயதினன்; வேதனையைப் பொறுக்க முடியாது தவித்தான்; பிராண அவஸ்தைப்பட்டான். இதைக் கண்ட நெருங்கிய உறவினர்கள் மனமுடைந்து போயினர்.

10 எல்லாவிதமான உபாயங்களும் செய்யப்பட்டன; வியாதி சிறிதளவும் குறையவில்லை. ஆகவே, நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் சம்பந்திகளும், ''தேவதைகளை ஆராதனம் செய்யலாம்ஃஃ என்று கூறினர்.

11 தெய்வமும் தேவதைகளும் குலதேவதையும் திருப்திசெய்யப்பட்டன. இவற்றில் எதுவும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுதுதான் டாக்டருக்கு சிர்டீயில் ஓர் அவ­யா வசித்துவந்தது தெரிந்தது.

12 அவர் ஸாயீ மஹராஜ்; யோகீசுவரர்; ஞானிகளில் தலைசிறந்தவர்; அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளைப் பரிஹாரம் செய்கிறது. இதைத்தான் டாக்டர் கேள்விப்பட்டார்.

13 ஆகவே ஸாயீ தரிசனம் செய்ய விருப்பம் ஏற்பட்டது. தாயும் தந்தையும் தெய்வத்தின் பெயரில் இந்த நிவாரணத்தைச் செய்து பார்க்கலாம் என்று நிச்சயித்தனர்.

14 ''அவர் மிகப் பெரிய அவ­யா என்றும் அவருடைய கையால் உதீ தடவினால், தீராத கொடிய வியாதிகளும் குணமடைகின்றன என்றும் கேள்விப்படுகிறோம். இதை முயன்று பார்ப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்?--

15 ''வாருங்கள் போவோம்; அவருடைய பாதங்களை வந்தனம் செய்வதற்கு. இந்தக் கடைசி முயற்சியையும் செய்துபார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும்õ இதுவே கடைசி உபாயம்õஃஃ

16 ஆகவே தாயும் தந்தையும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டு ஸாயீ தரிசனம் செய்யும் ஆவலுடன் சிர்டீக்கு உடனே சென்றனர்.

17 சிர்டீ வந்து சேர்ந்தவுடன் ஸாயீதரிசனம் செய்து பாதங்களை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய சன்னிதியில் நின்றுகொண்டு பாலனின் துக்கத்தை விவரித்தனர்.

18 கூப்பிய கைகளுடன் கூம்பிய முகங்களுடனும் சோகம் ததும்பிய குர­ல் ஸாயீயைப் பிரார்த்தனை செய்தனர்,--

19 ''இந்த பாலன் வியாதியால் பீடிக்கப்பட்டு வேதனைப்படுகிறான். இவனுடைய துக்கத்தைப் பார்க்க எங்களுக்கு சகிக்கவில்லை; அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எங்களுக்கு கதிமோட்சம் என்னவென்று தெரியவில்லையேõ--

20 ''ஓ, ஸமர்த்த ஸாயீயேõ புத்திரன் படும் பாட்டைப் பார்த்து துக்கப்பட்டுக் களைத்துவிட்டோம். உங்களுடைய அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவனுடைய வியாதியை நிவாரணம் செய்யுங்கள்.--

21 ''உங்களுடைய மஹிமையைக் கேள்விப்பட்டு நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம். அனன்னிய பா(ஆஏஅ)வத்துடன் உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு இவனுடைய உயிரை தானமாகக் கொடுங்கள்õஃஃ

22 கருணாமூர்த்தியான ஸாயீ அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், ''இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்கதி (கெடுகதி) அடையமாட்டார்கள்; யுகம் முடியும் காலம்வரை.--

23 ''இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துக்கொண்டு போய் ரணத்தின்மீது தடவுங்கள். எட்டு நாள்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.--

24 ''இது சாதாரணமான மசூதி அன்று; ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் காலெடுத்து வைத்தவர் உடனே க்ஷேமத்தையும் ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்õ--

25 ''இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக.ஃஃ

26 பிறகு, பாபாவின் ஆணைப்படி வியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவன் பாபாவின் எதிரில் உட்காரவைக்கப்பட்டான். பாபா அவனுடைய காலைத் தடவிவிட்டார்; அவன்மேல் தம்முடைய அருட்பார்வையைச் செலுத்தினார்.

27 இது தேஹ சம்பந்தமான வியாதிதான். ஸாயீதரிசனம், விதியால் விளைவிக்கப்பட்ட ஆபத்துகளையும், நிவாரணமே இல்லாத மனோவியாதிகளையுங்கூட நிர்மூலமாக்கிவிடுகிறதுõ

28 ஸாயீயின் முகத்தைப் பார்க்கப் பார்க்க, சிறுவனின் சகல துக்கங்களும் குறைந்தன. அவருடைய திருவாய்மொழியைக் கேட்டு ரோகத்தி­ருந்து விடுபட்டுப் பரம சுகம் அடைந்தான்.

29 பிறகு, நான்கு நாள்களுக்கு அவர்கள் சிர்டீயில் தங்கினர். வியாதி படிப்படியாகக் குறைந்தது; ஸாயீயின் மீதிருந்த விசுவாசம் படிப்படியாக வளர்ந்தது.

30 பின்னர் அவர்கள் மூவரும் பாபாவின் பரிபூரணமான அனுமதியுடன் ஆனந்தம் நிறைந்த மனத்தினராகவும் திருப்தியடைந்தவர்களாகவும் கிராமத்திற்குத் திரும்பினர்.

31 இது என்ன அற்பசொற்பமான அற்புதமா? புரையோடிப்போன ரணம் மறைந்து போயிற்று; செய்யப்பட்ட அபூர்வமான வைத்தியம், பாபாவின் அருட்பார்வையும் உதீயுமேõ

32 இதுவே ஒரு மஹாபுருஷரின் தரிசன மஹிமை. ஒரு மஹாபுருஷரின் ஆறுதல் மொழியையும் ஆசிகளையும் பெறும் பாக்கியம் யாருக்காவது கிடைத்தால், அவருடைய வியாதி நிர்மூலமாகிவிடும்.

33 இவ்வாறு சிலநாள்கள் கழிந்தன. உதீ ரணத்தின்மீது தடவப்பட்டுக் குடிப்பதற்கும் நீருடன் கலந்து அளிக்கப்பட்டது. ரணம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறி உலர்ந்துவிட்டது. சிறுவன் ஆரோக்கியமான வாழ்விற்குத் திரும்பினான்.

34 மாலே காங்வில் இருந்த சிறுவனின் சிற்றப்பா (டாக்டர்) இதைப்பற்றிக் கேள்விப்பட்டு, ஸாயீதரிசனம் செய்வதற்கு உற்சாகங்கொண்டார். பம்பாய் செல்லும்போது சிர்டீக்குச் சென்று மனவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமக்குள்ளேயே தீர்மானித்தார்.

35 ஆனால், பின்னர் அவர் பம்பாய்க்குப் புறப்பட்டபோது, மாலேகாங்விலும் மன்மாடிலும் சிலர் அவருடைய மனத்தில் விகற்பத்தைக் கிளறிவிட்டனர். டாக்டர் சிர்டீ செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்.

36 எந்த நல்ல காரியத்திற்கும் இதுவே ரீதி. ஆரம்பத்திலேயே கெடுமதியாளர்கள் சில தடங்கல்களை உண்டாக்குவர். அவர்கள் சொல்வதை லட்சியம் செய்யாதவர்களே கடைசியில் நல்ல பாதையில் சென்று நன்மையடைவர்.

37 டாக்டர், ஞானியை தரிசனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு நேராக பம்பாய்க்குச் சென்றார். மீதியிருந்த விடுப்பை அலீபாக்கில் கழிக்கலாம் என முடிவெடுத்தார்.

38 இவ்வாறு அவர் முடிவு செய்தபின், தொடர்ச்சியாக மூன்று இரவுகளில், ''இன்னும் என்மேல் அவநம்பிக்கையா?ஃஃ என்ற குரல் அவருக்குத் தூக்கத்தில் கேட்டது.

39 தொடர்ச்சியாக மூன்று இரவுகளில் தோன்றிய அந்த அசரீரிச் செய்தியைக் கேட்டு டாக்டர் வியப்படைந்தார். அந்தச் செய்தியைப் பொருள் செறிந்ததாக ஏற்றுக்கொண்டு அவர் சிர்டீ பிரயாணத்தை நிச்சயம் செய்துகொண்டார்.

40 ஆயினும், அவர் அந்த சமயத்தில், டைபாய்டு ஜுர நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண் டிருந்தார். அவருக்குச் சிறிது குணமேற்பட்டவுடனே சிர்டீ செல்லலாம் என நினைத்தார்.

41 நோயாளிக்கோ ஜுரம் அதிகமாக இருந்தது; எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. நோயாளி லவலேசமும் (சிறிதளவும்) குணமடையவில்லை. ஆகவே சிர்டீ செல்வதற்கு முடியவில்லை.

42 டாக்டர் தமது மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார், ''இந்த நோயாளியின் நிலைமையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிந்தால், மேலும் ஒரு கணமும் தாமதியாது நாளை நான் சிர்டீ செல்வேன்.ஃஃ

43 இந்த திடமான சங்கேதத்தை (குறிப்பை) ஏற்றுக்கொண்டபின், ஆறு மணி நேரத்திற்குள்ளாக ஜுரம் கொஞ்சங்கொஞ்சமாக இறங்கியது. அவருடைய வேண்டுதல் நிறைவேறியதால் டாக்டர் உடனே சிர்டீக்குக் கிளம்பினார்.

44 சங்கற்பம் செய்துகொண்டவாறே டாக்டர் சிர்டீக்குச் சென்றார். பக்தியுடன் பாபாவின் பாதங்களை வணங்கினார். இவ்விதமாக, பாபா அவருக்கு அகமுகமான அனுபவத்தின் மூலம் விசுவாசம் ஏற்படச் செய்து, அவரை குருசேவைக்கு இழுத்தார்.

45 டாக்டரின் தலைமேல் அருட்கரத்தை வைத்து உதீ பிரசாதமும் அளித்தார். ஸாயீயின் அளப்பரிய சக்தியைக் கண்டு டாக்டர் பிரமித்துப்போனார்.

46 டாக்டர் சிர்டீயில் நான்கு நாள்கள் தங்கியபின் ஆனந்தமான மனத்துடன் வீடு திரும்பினார். பதினைந்து நாள்கள்கூட முடியவில்லை; விஜாபூருக்குப் பதவி உயர்வில் அனுப்பப்பட்டார்õ

47 வேதனை மிகுந்த ஹாட்யாவ்ரணம் ஸாயீதரிசனத்திற்கு வழிவகுத்தது. தரிசனம் ஞானியின் பாதங்களின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வீர்ப்பு என்றும் குறையாத ஆனந்தத்தை அளித்தது.

48 இவ்வாறே டாக்டர் பிள்ளை ஒரு சமயத்தில் நரம்புச்சிலந்தி நோய் கண்டு வருந்தினார். ஒன்றன்பின் ஒன்றாக ஏழு சிலந்திகள் தோன்றின. டாக்டர் மிகவும் கஷ்டப்பட்டார்.

49 இந்த டாக்டர் ஸாயீ பாபாவின்மீது மிகுந்த பிரேமை வைத்திருந்தார். பாபாவும் அவரைச் செல்லமாக பாவூ என்று அழைத்தார். அவரை தினமும் மிகுந்த அன்புடன் குசலம் விசாரிப்பார்.

50 மசூதியில், மரத்தாலான கிராதியின் அண்மையே காலையிலும் மாலையிலும் பாவூவின் இடம். நெடுநேரம் பாபாவும் பாவூவும் அநேக விஷயங்களைப்பற்றிப் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வர்.

51 பாவூ இல்லாமல் பாபா சிலீம் பிடிக்கமாட்டார்; பீடி பிடிக்கும்போது பாவூ அருகில் இருக்கவேண்டும்; நியாயம் பேசுவதற்கும் பாவூ அருகில் இருக்கவேண்டும். சுருங்கச் சொன்னால், பாவூ இல்லாமல் பாபாவுக்குப் பொழுது இனிமையாக நகராது.

52 அதுவே அப்போதைய நிலைமை. ஆயினும் நரம்புச்சிலந்தி நோயின் வேதனை பொறுக்கமுடியாமற்போன நிலையில் பாவூ படுத்த படுக்கையாகிவிட்டார். வ­யும் வேதனையும் மனக்கொந்தளிப்பையும் சோகத்தையும் அளித்தன.

53 இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் அவருடைய வாய் இடைவிடாது ஸாயீ நாம ஜபத்தைச் செய்துவந்தது. ''போதும், இந்த யாதனை (நரக வேதனை); மரணமே இதைவிட மேல்ஃஃ என்று சொல்­ அவர் ஸாயீயிடம் சரணாகதி அடைந்தார்.

54 அவர் பாபாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார், ''இந்தத் துன்பத்தை அனுபவித்து நான் ஓர் எல்லைக்கே வந்துவிட்டேன். அங்கமெல்லாம் எத்தனையோ ரணங்கள்õ இனியும் சகித்துக்கொள்ள எனக்குத் திராணியில்லைõ--

55 ''நல்வழி நடக்கும் நான் ஏன் இந்த வேதனையை அனுபவிக்கவேண்டும்? கெட்ட செயல்களின் பாதையில் நான் சென்றதில்லையே. நான் என்ன பாவம் செய்தேன், என்மீது இவ்வளவு துன்பத்தையளிக்கும் அவஸ்தை இறங்கியிருக்கிறது?--

56 ''நரம்புச்சிலந்தி நோயின் வேதனை மரணவேதனைக்கு ஒப்பாக இருக்கிறது. பாபா, என்னால் இப்பொழுது இந்த வேதனையை சகித்துக்கொள்ள முடியவில்லையேõ நான் மரணமடைவதே நல்லது. என்ன யாதனை மீதமிருக்கிறதோ அதை அடுத்த பிறவியில் அனுபவித்துக்கொள்கிறேன். --

57 ''அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டும். அதற்காகவே பல ஜன்மங்கள் எடுக்கவேண்டியிருக்கலாம். ஊழ்வினையால் விதிக்கப்பட்டதைத் தவிர்க்கமுடியாது. மந்தமதி படைத்த எனக்கும் இது தெரிந்திருக்கிறது.--

58 ''என்னுடைய கர்மவினையை அனுபவிப்பதற்குப் பத்து ஜன்மங்கள் வேண்டுமானாலும் சந்தோஷமாக எடுக்கிறேன். ஆனால், இந்த ஜன்மத்தை இத்தோடு முடித்துக் கொடுத்து எனக்கு தருமம் செய்யுங்கள்.--

59 ''போதும், போதும், போதும் இந்த ஜன்மம்õ எனக்கு இந்த ஜன்மத்தி­ருந்து விடுதலை தாருங்கள். என்னால் இந்தக் கஷ்டத்தை இனியும் அனுபவிக்கமுடியாது. இதுவே உங்களிடம் நான் செய்யும் பிரார்த்தனை, ஒரே பிரார்த்தனை.ஃஃ

60 சித்தர்களின் அரசராகிய ஸாயீ இந்தப் பிரார்த்தனையைக் கேட்டு தயையால் உள்ளம் நெகிழ்ந்தார். டாக்டர் பிள்ளைக்கு ஆறுதல் கூற அவர் பொழிந்த கருணாமிருதத்தைக் கேளுங்கள்.

61 மேலும், பக்தர்களின் கற்பகவிருக்ஷமான ஸாயீ, பக்தனின் இன்னல் தரும் அவஸ்தையை விலக்குவதற்கு எப்படி ஓர் உபாயத்தைத் துவக்கிவைத்தார் என்பதையும் கேளுங்கள்.

62 டாக்டர் பிள்ளை பாபாவுக்கு அனுப்பிய செய்தி தீக்ஷிதரால் கொண்டுவரப்பட்டது. அதைக் கேட்ட பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், ''போய் அவரிடம் சொல்லுங்கள். 'நிர்பயமான மனத்துடன் இருக்கவும்ஃ என்று.ஃஃ

63 பாபா மேலும் டாக்டருக்குப் பாடம் சொல்­யனுப்பினார், ''இந்த அவதியைப் பத்து ஜன்மங்களுக்குப் பரப்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பத்து நாள்களுக் குள்ளாகவே பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதன்மூலம் இதை ஒழித்துவிடலாம்õ--

64 ''ஓ, உமக்கு இகவுலகில் நல்வாழ்வும் பரவுலகில் மேன்மையும் மோக்ஷமும் அளிக்கக்கூடிய ஸமர்த்தன் நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் மரணத்தை வேண்டுகிறீரேõ இதுதான் உமது புருஷார்óத்தமோ (நீர் அடைய வேண்டியதோ)?--

65 ''அவரை எழுப்பித் தூக்கிக்கொண்டு இங்கு வாருங்கள். அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கட்டும். பயத்தால் அவர் மனங்கலங்க வேண்டா. அவரை இங்கு உங்களுடைய முதுகிலாவது தூக்கிக்கொண்டு வாருங்கள்.ஃஃ

66 ஆகவே, அந்த நிலையிலேயே டாக்டர் உடனே மசூதிக்குக் கொண்டுவரப்பட்டார். பாபா தாம் சாய்ந்துகொண்டிருந்த தலையணையை அவருக்குக் கொடுத்தார்.

67 தலையணை பாபாவின் வலப்பக்கத்தில், பக்கீர் பாபா வழக்கமாக உட்காரும் இடத்தில் வைக்கப்பட்டது. ''இதன்மேல் சாய்ந்துகொண்டு அமைதியாகப் படுத்துக்கொள்ளுங்கள். அனாவசியமாக மனத்தைக் குழப்பிக்கொள்ளாதீர்ஃஃ என்று பாபா சொன்னார்.

68 ''மெதுவாகக் காலை நீட்டி உட்காரும். அது சிறிது நிவாரணம் அளிக்கும். ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். அதுவே வினையைத் தீர்க்கும் வழி. வேறு வழி ஏதும் இல்லை.--

69 ''வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ -- இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா.--

70 ''எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். அல்லாமா­க் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரேõ--

71 ''மனம், செல்வம், உடல், பேச்சு ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம் செய்தால் லீலைகள் அனுபவமாகும்.ஃஃ

72 டாக்டர் பிள்ளை அப்பொழுது சொன்னார், ''நானாஸாஹேப் சாந்தோர்கர் புண்ணின்மேல் கட்டுப்போட்டிருக்கிறார்; ஆயினும் நிவாரணம் சிறிதும் ஏற்படவில்லை.ஃஃ

73 பாபா பதில் சொன்னார், ''நானா ஒரு பித்துக்குளிõ அந்தக் கட்டைப் பிரித்துவிடும்; இல்லையெனில் நீர் செத்துப்போவீர். ஒரு காக்கை வந்து இப்பொழுது உம்மைக் கொத்தும்; அதன் பிறகு நீர் குணமடைவீர்.ஃஃ

74 அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண் டிருந்தபோது, அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதற்காக அப்துல்லா அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக, அடுத்ததாக என்ன நடந்தது தெரியுமா?

75 மசூதி ஏற்கெனவே ஒரு குறுகலான இடம்; பக்தர்களும் பலர் இருந்தனர். போதாததற்கு டாக்டர் பிள்ளையின் நிலைமைவேறு ஒரு நெருக்கடியை உண்டுபண்ணியிருந்தது. அப்துல்லாவுக்குக் கால் வைப்பதற்கும் வசதி இல்லாதிருந்தது.

76 மேலும், அப்துல் காரியமே கண்ணாக அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதிலேயே குறியாக இருந்தார். பிள்ளை அங்கு உட்கார்ந்திருந்ததை ஒருகணம் கவனிக்கவில்லை. அப்பொழுது சற்றும் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது.

77 அப்துல்லாவால்தான் என்ன செய்ய முடியும் பாவம்õ நடப்பது நடந்தே தீரும் அன்றோ? வேதனை குறைவதற்காக நீட்டி வைத்திருந்த பிள்ளையின் காலைத் தவறுதலாக அப்துல் மிதித்துவிட்டார்.

78 ஏற்கெனவே வீங்கிப் போயிருந்த பிள்ளையின் காலை அப்துல்லாவின் பாதம் பதம்பார்த்துவிட்டது. ''ஐயோõஃஃ பிள்ளை பயங்கரமாக அலறினார்; வ­யால் துடிதுடித்தார்.

79 ஒருமுறை, ஒரே ஒரு முறைதான் பாவூ வ­ பொறுக்கமாட்டாமல் அலறினார். அந்த அலறல் அவருடைய தலையைத் துளைத்துக்கொண்டு சென்றது போலும்õ கூப்பிய கைகளுடன் அவர் பாபாவின் கருணைநாடி வேண்ட ஆரம்பித்தார். வேண்டுதலைக் கேளுங்கள்õ

80 கட்டி உடைந்து, சீழ் வெளிவர ஆரம்பித்தது. பிள்ளை மிகக் கலவரமடைந்து ஒரு பக்கம் ஓவென்று அழுதார்; மறுபக்கம் பாட ஆரம்பித்தார். ''ஓ, கரீம் (அல்லா)õ என் நிலைமையைப் பார்த்து மனமிரங்கமாட்டீரா? ரஹிமான் (கருணாமூர்த்தி) என்றும் ரஹீம் (தயாளர்) என்றும் உம்மை அழைக்கின்றனரேõ நீரே இரண்டு உலகங்களுக்கும் சுல்தான் (சக்கரவர்த்தி); இவ்வுலகமே உம்முடைய மஹிமையின் வெளிப்பாடன்றோõ இவ்வுலக வியாபாரம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்; உம்முடைய புகழோ என்றும் நிலைத்திருக்கும்õ நீங்களே என்றும் உம் அடியவர்களின் அடைக்கலம்.ஃஃ

81 குத்துவ­ அவ்வப்பொழுது வந்து போயிற்று. டாக்டர் பிள்ளையின் மனம் கொந்தளித்தது; அவர் சோர்வடைந்து பலமிழந்துபோனார். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஈதனைத்தும் பாபாவின் விளையாட்டே என்றறிந்தனர்.

82 பாபா சொன்னார், ''பாவூவைப் பாருங்கள்; பாட ஆரம்பித்துவிட்டார்.ஃஃ பிள்ளை பாபாவைக் கேட்டார், ''பாபா, அந்தக் காக்கை வந்து என்னுடைய புண்ணைக் கொத்தப் போகிறதா?ஃஃ

83 பாபா சொன்னார், ''நீர் போய் வாடாவில் அமைதியாகப் படுத்துக்கொள்ளும். காக்கை1 கொத்துவதற்கு மறுபடியும் வாராது.--

84 ''உம்முடைய காலை மிதித்தாரே, அவர் இப்பொழுது வரவில்லை? அவர்தான் உம்மைக் கொத்திவிட்டுப் புண்ணின் வ­யையும் குறைத்துவிட்டுப் பறந்துபோன காக்கைஃஃ.--

85 காக்கையாவது, கொத்துதலாவதுõ இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்தவர் அவரே. காக்கை அப்துல்லாவின் உருவத்தில் தோன்றியது. பாபா தாம் சொன்னது உண்மையென்பதை நிரூபித்துவிட்டார்õ

86 பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை. அற்ப அவகாசத்திற்குள் (சிறிய இடைவெளியில்) பாவூ குணமடைந்தார்.

87 உதீயைத் தடவுவதும் நீருடன் சேர்த்து உட்கொள்ளுவதுமே மருந்தும் அனுபானமும் (மருந்துக்கு வீரியம் சேர்க்க இணைத்து அருந்தும் பானமும்). பத்தாவது நாளன்று பொழுது விடிந்தபோது வியாதி வேரோடு அறுக்கப்பட்டது.

88 புண்ணி­ருந்து ஏழு நரம்புச்சிலந்திப் புழுக்கள் உயிரோடு வெளிவந்தன. பொறுக்க முடியாத வேதனை ஒழிந்தது. டாக்டர் பிள்ளையினுடைய துன்பம் ஒரு முடிவுக்கு வந்தது.

89 பிள்ளை இந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தார். பாபாவின் லீலையை நினைத்து நினைத்துக் கண்களி­ருந்து பிரேமதாரை வடித்தார்.

90 பிள்ளை பாபாவின் பாதங்களில் விழுந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்குத் தொண்டை அடைத்தது. வாயி­ருந்து ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை.

91 இன்னும் ஒரு அனுபவத்தைச் சொல்­விட்டு, உதீயின் பிரபாவம்பற்றிய விவரணத்தை முடித்துவிடுகிறேன். இந்தத் தொடரின் சாராம்சம் என்னவென்றால், 'மனத்தின் பா(ஆஏஅ)வம் எப்படியோ, அப்படியே அனுபவம்õஃ என்பதே.

92 இரு சகோதரர்களில் மூத்தவர் மாதவராவ்; இளையவர் பாபாஜீ. ஒருசமயம் துன்பம் நேர்ந்தபோது, உதீயை உபயோகித்து பாபாஜீ எவ்வாறு விடுதலையடைந்தார் என்பது பற்றிக் கேளுங்கள்.

93 இந்த உதீயின் பிரபாவம் சொல்லுக்கடங்காதது. அதை நான் எவ்வாறு தகுந்த அளவிற்குப் புகழ்வேன்? பிளேக் நோய் வீக்கங்களுக்கும் மற்றெல்லா வியாதிகளுக்கும் உதீயைப் போன்ற ஸர்வரோக நிவாரணி வேறெதையும் நான் கண்டதில்லை.

94 பாபாஜீ ஸாவூல்1 விஹிரில் வசித்துவந்தபோது, அவர் மனைவிக்கு ஜுரம் கண்டு வயிற்றுக்குக் கீழே இரண்டு வீக்கங்கள் தோன்றின. பாபாஜீ மனக்கலக்கம் அடைந்து அரண்டு போனார்.

95 அந்த பயங்கரமான இரவு நேரத்தில் மனைவி பட்டபாட்டைப் பார்த்த பாபாஜீ பீதியடைந்து தைரியமிழந்தார்.

96 திகிலாலும் பயத்தாலும் நடுநடுங்கியவாறு இரவோடிரவாக சிர்டீக்கு ஓடிவந்தார். தம் அண்ணனிடம் விவரங்களைத் தெரிவித்தார்.

97 ''இரண்டு வீக்கங்கள் தோன்றியிருக்கின்றன; கடுமையான ஜுரம் அடிக்கிறது; அவஸ்தைப்படுகிறாள்; நீங்களே வந்து பாருங்கள்; இதொன்றும் நல்லதற்கு அறிகுறியாகத் தெரியவில்லை.ஃஃ

98 பாபாஜீயின் சோகம் ததும்பிய முகத்தையும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகளையும் கேட்ட மாதவராவ் திடுக்கிட்டார். அவரும் மனங்கலங்கி தைரியமிழந்தார்.

99 மாதவராவ் விவேகம் நிறைந்தவரானாலும், வீக்கங்கள் என்று கேள்வியுற்றபோது திகிலடைந்தார். பிளேக் நோய் வீக்கங்கள் கண்டால், சீக்கிரமே மரணம் சம்பவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

100 சுபமான நிகழ்ச்சியானாலும் அசுபமான நிகழ்ச்சியாயினும், இஷ்டமான செயலாயினும் கஷ்டமான செயலாயினும், பாபாவின் அறிவுரையைக் கேட்பதென்பது சிர்டீ மக்களின் வழக்கம்.

101 பிறகு, அவர் எப்படி எப்படியெல்லாம் சொல்கிறாரோ, அப்படி அப்படியெல்லாம் செயல்படவேண்டும். ஏனெனில், அவரே பக்தர்களை சங்கடங்களி­ருந்து விடுவித்தார். ஓ, எத்தனை அனுபவங்களை நான் வர்ணிக்க முடியும்õ

102 ஆகவே, இந்த நித்திய பாடத்தின்படியே மாதவராவும் முடிவெடுத்தார். பாபாவுக்கு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு பயபக்தியுடன் முத­ல் அவரிடம் விவரங்களைச் சொன்னார்.

103 மாதவராவ் வேண்டினார், ''ஜய ஜய ஸாயீநாதாõ இந்த அநாதைகளின் மீது தயை காட்டுவீராக. ஓ, இதென்ன புதிதாக ஒரு சங்கடம்õ இதென்ன வேண்டாத மனக்கலக்கம்õ--

104 ''ஆயினும் உங்களைத் தவிர நாங்கள் யாரிடம் மன்றாடுவோம்? அந்தப் பெண்ணின் யாதனையை (நரக வேதனையை) விலக்குங்கள்; அவளை ஆசீர்வாதம்
செய்யுங்கள்.--

105 ''இந்த சங்கடத்தி­ருந்து எங்களைக் காத்தருளுங்கள். உம்மையல்லால் எங்களை ரட்சிப்பவர் வேறு யார்? கட்டுக்கடங்காத இந்த ஜுரத்தை சமனம் செய்து உம்முடைய வாக்கைக் காப்பாற்றுங்கள்.ஃஃ

106 தம்பியுடன் ஸாவூல் விஹிர் செல்வதற்கு பாபாவை அனுமதி கேட்டார் மாதவராவ். பாபா அப்பொழுது சொன்னார், ''இந்த நேரங்கெட்ட நேரத்தில் போகவேண்டா. ஆயினும் அவளுக்குக் கொஞ்சம் உதீ கொடுத்தனுப்பு.--

107 ''வீக்கமென்ன, ஜுரமென்னõ அல்லாமா­க் நம் பிதா அல்லரோ? அது தானாகவே சுகமாகிவிடும். அவள் நலமடைவாள்; இதில் சந்தேகத்திற்கு இடமேதுமில்லை.--

108 ''எப்படியும் காலை சூரிய உதயத்தின்போது நீ ஸாவூல் விஹிருக்குச் செல்வாயாக. இப்பொழுதே போகவேண்டுமென்று அவசரப்படாதேõ இங்கேயே அமைதியான மனத்துடன் இரு.--

109 ''நாளைக்கும், போனவுடனே திரும்பி வா. காரணமில்லாமல் ஏன் தொந்தரவுக்கு உள்ளாகிறாய்? உதீயைப் பூசிவிட்டு, நீருடன் கலந்து கொடுத்தபின் நாம் ஏன் பயப்படவேண்டும்?ஃஃ

110 இதைக் கேட்ட பாபாஜீ பயந்தார்; தைரியமிழந்துபோனார். மாதவராவுக்கு மூ­கை மருந்துகள்பற்றிய ஞானம் இருந்தது; ஆனால், அது அந்த சமயத்தில் உபயோகப்படாது.

111 எது எப்படி இருந்தாலும் மாதவராவ் பாபாவின் குறிப்பைப் பூரணமாக அடையாளம் கண்டுகொண்டார். எந்த மருந்தும் பாபாவின் அருளின்றி வேலை செய்யப் போவதில்லைõ--

112 ஆகவே அவர் பாபாவின் ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து, தம்பியிடம் உதீயைக் கொடுத்தனுப்பிவிட்டுத் தாம் அமைதியாக சிர்டீயில் இருந்தார். பாபாஜீ மனமுடைந்தவராகக் கவலையுடன் வீடு திரும்பினார்.

113 உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்குக் கொடுத்துவிட்டு வீக்கங்களின்மேலும் பூசினார். மனைவி சிறிது நேரத்தில் உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டி, நித்திரையில் ஆழ்ந்தார்.

114 சூரியோதய காலத்தில் அவருக்குத் தெம்பு வந்துவிட்டது. ஜுரமோ வீக்கங்களோ இருந்த இடம் தெரியவில்லைõ பாபாஜீ ஆச்சரியமடைந்தார்.

115 மாதவராவ் காலையில் எழுந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு முகம் கழுவி ஸாவூல் விஹிருக்குக் கிளம்புவதற்குமுன், தரிசனம் செய்வதற்கு மசூதிக்கு வந்தார்.

116 பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்தபின், உதீயையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டவுடன் ஸாவூல் விஹிரை நோக்கி நடந்தார்.

117 மசூதியின் படிகளில் இறங்கும்போது பாபா ஆணையிட்டது கேட்டது. ''சாமா, நீ போனவுடனே திரும்பிவிடுõ தாமதம் செய்வதற்கு அங்கு ஒரு வேலையும் இல்லை.ஃஃ

118 போகும் வழியில் மாதவராவ், ''தம்பியின் மனைவி என்ன பாடுபடுகிறாளோõ எப்படி இரண்டு வீக்கங்களின் எரிச்சலைப் பொறுத்துக்கொள்ளப் போகிறாள்õ ஓ, பெரும் துன்பத்தால் வாடிப் படுத்துக்கிடக்கிறாள் போலும்õஃஃ என்று கவலைப்பட்டுக்கொண்டே சென்றார்.

119 ''ஆயினும், பாபா எதையோ குறிப்பால் உணர்த்தினார் போ­ருக்கிறதேõ இல்லையெனில் என்னை ஏன் போனவுடனே திரும்பிவிடு என்று சொன்னார்?ஃஃ இவ்வாறு சாமா கலவரமடைந்து காலை எட்டிப்போட்டு வழி நடந்தார்.

120 நேரம் கடப்பதுபற்றிப் பொறுமை இழந்து வேகவேகமாக ஸாவூல் விஹிரை நோக்கி நடந்தார். வீட்டு வாயிற்படியை மிதித்தபோது, அவருடைய கண்களை அவராலேயே நம்பமுடியவில்லைõ

121 முன்னாள் இரவு பிளேக் நோயால் படுத்துக்கிடந்த பெண்மணி, வழக்கம்போல் தேநீர் தயாரித்துக்கொண் டிருந்ததைப் பார்த்தார். பெண்மணியின் நிலைமையில் ஏற்பட்டிருந்த திடீர் மாற்றத்தைக் கண்டு சாமா வியப்படைந்தார்.

122 அவர் பாபாஜீயிடம் கேட்டார், ''எப்படி உன் மனைவி தினப்படி வேலைகளைச் செய்துகொண் டிருக்கிறாள்?ஃஃ பாபாஜீ பதில் சொன்னார், ''அனைத்தும் பாபாவின் உதீ செய்த அற்புதமே.--

123 ''நான் வீடு வந்து சேர்ந்தவுடனே உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்குக் கொடுத்தேன்; உடல் முழுவதும் பூசினேன். உடனே அவளுடைய உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டியது; நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள்.--

124 ''பின்னர், சூரியோதய நேரத்தில் தெம்பாகவும் நலமாகவும் எழுந்து உட்கார்ந்தாள். ஜுரமும் வீக்கங்களும் மறைந்துவிட்டன. உண்மையில் இது பாபாவின் அருட்சக்தியேயன்றி வேறெதுவுமில்லை.ஃஃ

125 இந்த நிலைமையைப் பார்த்தவுடனே சாமாவுக்கு பாபா 'போனவுடனே திரும்பிவிடுஃ என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சாமாவின் மனம் ஆச்சரியத்தால் நிரம்பியது.

126 சாமா வருவதற்கு முன்பே வேலை முடிந்துவிட்டது. ஆகவே அவர் தேநீர் குடித்தவுடன் சிர்டீ திரும்பினார். நேராக மசூதிக்குச் சென்று பாபாவின் பாதங்களை வணங்கினார்.

127 சாமா கேட்டார், ''பாபா, இதென்ன விளையாட்டு? நீங்களே மனத்தில் கலவரத்தை உண்டுபண்ணுகிறீர். உம்முடைய இடத்தில் உட்கார்ந்தவாறே ஒரு சுழற்காற்றைக் கிளப்பிவிடுகிறீர். பிறகு நீங்களே அதை நிச்சலமாக்குகிறீர்.ஃஃ

128 பாபா பதிலுரைத்தார், ''இதோ பார், இதெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறதுõ--

129 ''விதியின் வ­மையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.--

130 ''நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்ஃகுமல்லேன் (கடவுளுமல்லேன்); பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்ஃ (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.--

131 ''எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.ஃஃ

132 இப்பொழுது ஒரு இரானியரின் மஹத்தான அனுபவத்தைக் கேளுங்கள். அவருடைய பெண்குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாதிருந்தது. அவ்வப்பொழுது நினைவிழந்துவிடும்.

133 இப் பெண்குழந்தைக்கு மணிக்கொருமுறை காக்காய்வ­ப்பு கண்டு, உடல் வில்லைப்போல் வளைத்துக்கொள்ளும். உயிர் பிரிந்துவிட்டதுபோல் நினைவின்றிக் கிடப்பாள். இந்த வியாதிக்கு எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.

134 பின்னர், நண்பரொருவர் உதீயின் பிரபாவத்தைச் சொன்னார், ''ராமபாணத்தைப் போன்று, குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து எங்கும் இல்லை.--

135 ''உடனே விலேபார்லேவிற்குச்1 சென்று, தீக்ஷிதரை உதீ வேண்டும் என்று கேளுங்கள். அவர் எப்பொழுதும் தம்மிடம் உதீ வைத்திருப்பவர்; மிகுந்த உற்சாகத்துடன் உதீ அளிப்பார்.--

136 ''ஸாயீயை மனத்தில் நினைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குழந்தைக்குக் கொடுத்தால் காக்காய் வ­ப்பு மறைந்துவிடும். நீங்கள் எல்லாருமே சந்தோஷமடைவீர்கள்.ஃஃ

137 இதைக் கேட்ட பார்ஸி கனவான் (இரானியர்) தீக்ஷிதரிடமிருந்து உதீ பெற்றுக்கொண்டு வந்தார். தினமும் தம் பெண்குழந்தைக்கு நீருடன் கலந்து குடிக்கக் கொடுத்தார். குழந்தை ஆரோக்கியம் அடைந்தது.

138 ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கலவரம் அடையும் குழந்தைக்கு உதீயால் உடனே நிவாரணம் கிடைத்தது. அடுத்தடுத்த வ­ப்புகளின் இடைவெளி படிப்படியாக ஏழு மணிகளாக உயர்ந்தது.

139 இவ்வாறாக, மணிக்கொருதரம் ஏற்பட்ட வ­ப்பு ஏழு மணி நேரத்திற்கு ஒருதரம் ஏற்பட்டது. காலக்கிரமத்தில் சுவடேயில்லாமல் வ­ப்பு மறைந்துவிட்டதுõ

140 ஹர்தாவுக்கருகில் இருந்த கிராமமொன்றில் ஒரு முதிய இல்லறவாசி வாழ்ந்துவந்தார். 'சிறுநீரகக் கற்கள்ஃ வியாதியால் பீடிக்கப்பட்டு வ­யும் வேதனையும் அடைந்தார்.

141 இந்த வியாதிக்கு அறுவை மருத்துவத்தைத் தவிர வேறு வழி ஏதும் இல்லாததால், திறமை வாய்ந்த அறுவை மருத்துவ நிபுணர் யாரையாவது அணுகும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறினர்.

142 நோயாளி மிகுந்த விசாரமுற்றார்; என்ன செய்வதென்று தெரியாது தவித்தார். மரணத்தின் வாயி­­ருப்பவர்போல் மெ­ந்து போனார். வேதனையளிக்கும் வ­யைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

143 அறுவை மருத்துவம் செய்துகொள்வதற்கு தைரியம் தேவை. முதியவருக்கு அந்த தைரியம் இல்லை. தெய்வாதீனமாக அவருடைய துரதிருஷ்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அற்புதம் என்ன நடந்ததென்று கேளுங்கள்õ

144 நோயாளியின் நிலைமை இவ்வாறு இருந்தபோது, அந்த கிராமத்தின் இனாம்தார்2 கிராமத்திற்கு வரப்போகிறார் என்ற செய்தி வந்தது. இனாம்தார் ஸாயீ பாபாவின் சிறந்த பக்தர்.

145 அவர் எப்பொழுதும் தம்மிடம் பாபாவின் உதீயை வைத்திருந்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். உதீயைப் பிரார்த்தித்து வாங்குவதற்கு நோயாளியின் உறவினர்களும் நண்பர்களும் இனாம்தாரிடம் வந்தனர்.

146 இனாம்தார் உதீ கொடுத்தார். மகன் அதை நீருடன் கலந்து தந்தைக்குக் (நோயாளி முதியவருக்குக்) குடிப்பதற்குக் கொடுத்தான். குடித்து ஐந்து நிமிடங்கூட ஆகவில்லை; ஓர் அற்புதம் நிகழ்ந்ததுõ

147 உதீ பிரசாதம் உள்ளே சென்றவுடன், சிறுநீரகக் கல் இடத்தி­ருந்து நகர்ந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிட்டது.

148 சந்திர சேனீய காயஸ்த ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தவர் ஒருவர் பம்பாயில் வாழ்ந்துவந்தார். அவர் மனைவி பிரசவ நேரம் வரும்போது உயிருக்குப் போராடுவாள்.

149 எத்தனையோ வைத்திய முறைகளைக் கையாண்டு பார்த்தனர். எதுவும் குணமளிக்கவில்லை. பிரசவ நேரத்தில் பெண்மணியின் ஜீவன் கலங்கும்; கணவர் கவலையில் மூழ்குவார்.

150 ஸ்ரீராம மாருதி என்ற பெயர்கொண்ட, பிரசித்திபெற்ற ஸாயீ பக்தரொருவர் அளித்த அறிவுரையின்படி கணவர் சிர்டீக்குப் போவதென்று முடிவுகட்டினார்.

151 பிரசவ சமயம் நெருங்கும்போது, இருவருமே பெரும் சங்கடத்துக்குள்ளாயினர். ஆகவே சிர்டீக்குப் போவதால் பயத்தி­ருந்து விடுபடுவதென்று இருவரும் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.

152 என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் சன்னிதியில்தானே நடந்தாகவேண்டும்? இந்த திடமான ஸங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருவரும் வந்து சிர்டீயில் தங்கினர்.

153 சிர்டீயில் அவர்கள் ஆனந்தமாக பாபாவுக்குப் பூஜை செய்துகொண்டும் அவருடைய சகவாசத்தை அனுபவித்துக்கொண்டும் பல மாதங்கள் வசித்தனர்.

154 இவ்வாறு சிலகாலம் கழிந்தபிறகு, பிரஸவகாலம் நெருங்கியது. சங்கடத்தி­ருந்து எவ்வாறு விடுபடுவது என்ற மனக்கலக்கத்தையும் கூடவே கொண்டுவந்தது.

155 இவ்வாறு அவர்கள் யோசித்துக்கொண் டிருந்தபோதே பிரஸவம் ஆகவேண்டிய நாள் வந்துவிட்டது. கர்ப்பப்பையின் வாய் அடைத்திருப்பது கண்டு எல்லோரும் விசாரமடைந்தனர்.

156 பெண்மணி மிகுந்த யாதனைக்கு (நரக வேதனைக்கு) உள்ளானார். யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாபாவை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை ஓடியது. அவரன்றி வேறு யார் கருணைகாட்டப்போகிறார்?

157 அக்கம்பக்கத்தி­ருந்த மகளிர் ஓடிவந்தனர்; அவர்களில் ஒருவர் பாபாவைப் பிரார்த்தனை செய்துகொண்டே ஒரு லோட்டாவில் கொஞ்சம் நீர் எடுத்து அதில் உதீயைக் கரைத்து அப் பெண்மணியைக் குடிக்கவைத்தார்.

158 ஐந்து நிமிடங்களுக்குள் அப் பெண்மணி பிரஸவித்தாள். கர்ப்பத்திலேயே உயிரிழந்த சிசு, ஜீவனற்றுக் காணப்பட்டது.

159 அதுவே சிசுவின் கர்மகதி. பிற்காலத்தில் அப் பெண்மணிக்கு நல்ல குழந்தை பிறக்கலாம். தற்சமயத்திற்கு உயிர் பிழைத்துக்கொண்டாள்; பயத்தி­ருந்தும் விடுதலை பெற்றாள்.

160 வேதனையின்றி கர்ப்பத்தை வெளிக்கொணர்ந்தாள்; உடல் அங்கங்கள் ஆரோக்கியமாக இருந்தன. மிகுந்த அபாயகரமான கட்டம் தாண்டிவிட்டது. அப் பெண்மணி பாபாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டவள் ஆனாள்.

161 அடுத்த அத்தியாயம் மேலும் சிறப்பானது. கேட்பவர்களின் ஆவல் செழிப்பாக நிறைவேறும். எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும் கெட்டகுணம் விலகும்; பக்தி வளரும்.

162 ''நாங்கள் உருவமற்ற கடவுளையே வணங்குவோம்; தக்ஷிணை கொடுக்கமாட்டோம்; நாங்கள் யாருக்கும் தலைவணங்கமாட்டோம். இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால்தான் தரிசனத்திற்கு வருவோம்.ஃஃ

163 இவ்வாறு நிச்சயம் செய்துகொண்டு வந்தவர்கள் ஸாயீயின் பாதங்களைப் பார்த்தவுடன் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்õ

164 மேலும், உதீயின் அபூர்வ மஹீமையையும் நெவாஸ்கர் இல்லற தர்மத்தை ரட்சிக்கும் வகையில் ஒரு நல்லபாம்பிற்குப் பால் வார்த்ததையும் சொல்கிறேன், கேளுங்கள்.

165 இதுபோன்ற உத்தமமான கதைகளை பக்தியுடனும் பிரேமையுடனும் செவிமடுத்தால், சம்சார இன்னல்கள் சாந்தமடையும். அதைவிடப் பரம சுகம் வேறெதுவும் உண்டோ?

166 ஆகவே, ஹேமாட் ஸாயீபாதங்களில் வணங்கி, கதை கேட்பவர்களுக்குப் பிரேமையை அருளுமாறு வேண்டுகிறேன். அவர்களுடைய மனம் ஸத் சரித்திரம் கேட்பதில் ரமிக்கட்டும் (மகிழட்டும்).

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்ஃ என்னும் முப்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.Share :
Get it on Google Play