Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 53

53. பொருளடக்கம் - பாராயணக் கிரமம்
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஸ்ரீஸாயீ ஸாக்ஷாத் (கண்கூடான) பிரம்மமூர்த்தி. சாது ஸாம்ராஜ்ஜியத்தின் (பேரரசின்) சக்கரவர்த்தி. புத்திக்கு உணர்வூட்டி அருள் செய்யும் ஸமர்த்த ஸத்குருவென திக்கெட்டும் கீர்த்தி பெற்றவர்.

2 அனன்னிய பா(ஆஏஅ)வத்துடன் அவருடைய புண்ணிய பாதங்களுக்கு வந்தனம் செய்வோமாகõ ஜனனமரணச் சுழ­­ருந்து விடுவிப்பவராகிய ஸாயீ நம்முடைய சம்சார பயத்தை அழிப்பார்.

3 கடந்த அத்தியாயத்தில், ''முத­ல் சிம்ம1 அவலோகனம் செய்வோம். அதன் பிறகு ஒரு பொருளடக்கம் எழுதி சாராம்சத்தை அளித்தபின், இக் காவியத்தை ஸம்பூர்ணம் செய்வோம்ஃஃ என்று வார்த்தையளிக்கப்பட்டது.

4 ஹேமாட் பந்த் இவ்வாறு சொன்னார். ஆயினும், அவ்வாறு நிகழவில்லை. அவர் பொருளடக்கம் எழுதினாரா அல்லது அதுபற்றி மறந்துவிட்டாரா என்று யாருக்கும் தெரியவில்லை.2

5 யார் ஒரு புத்தகத்தை எழுத ஆரம்பிக்கிறாரோ, அவரே ஒரு முடிவுரையையோ பொருளடக்கத்தையோ எழுதிப் புத்தகத்தை நிறைவுசெய்ய வேண்டும் என்பது எங்கும் அனுசரிக்கப்படும் நியமம்.

6 இருந்தபோதிலும், எல்லா விதிகளுக்கும் விலக்கு என்று ஒன்று உண்டு. அதையே நாம் இங்கே காண்கிறோம். எதுவும் நம் இச்சைபோல் நடப்பதில்லை. பாபாவின் மனோகதி மற்றவை அனைத்தையும்விட வ­யதுõ

7 நம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்திவிட்டு, ஹேமாட் பந்த் எதிர்பாராதவிதமாக தேவலோகம் சென்றுவிட்டார். பொருளடக்கம் அகப்படவில்லை. யாருக்கும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை.

8 அண்ணா ஸாஹேபின் (தாபோல்கரின்) கையெழுத்துப் பிரதியைத் தேடியெடுப்பது கடினமாக இருந்தது. தாபோல்கரின் மகன் சிரஞ்ஜீவி ஸ்ரீ கஜானன் தேடிப்பார்த்து எனக்குத் தேவையான விவரங்களைக் கொடுத்தார்.

9 அண்ணா ஸாஹேப் சிக்கனத்தின் சின்னம். ஒரு சிறிய காகிதத்தையும் வீணாக்கமாட்டார். புத்திநுட்பத்துடன் அதை நேர்த்தியாக உபயோகப்படுத்துவார். அது அவருடைய சுபாவம் (இயல்பு).

10 ஒரு முழு அத்தியாயத்தைத் துண்டுக் காகிதங்களிலேயே எழுதி அச்சடிப்பவரிடம் கொடுத்துவிடுவார். தேவையற்ற செலவு அவருடைய மனச்சாட்சியை உறுத்தியது. இவ்விஷயத்தில் அவருக்கு நிகர் அவரேõ

11 அவருடைய உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்து, 'உயிரற்ற இந்தக் காகிதத் துணுக்குகள்õ ஞானிகளில் சிங்கமாகிய ஸாயீயின் ஸேவையில் ஈடுபடுத்தப்படாமல், இவை எப்படித் தீங்கினின்றும் மீட்கப்படும்?ஃ என்று நினைத்தார் போலும்õ

12 ஹேமாடின் எண்ணங்கள் இவ்வாறு இருந்தன போலும். துண்டுக் காகிதங்களைச் சேகரித்து அவற்றை பாபாவுக்கு ஸேவை செய்யவைத்தார். இதுதான் அவருடைய பெருநோக்காக இருந்திருக்க வேண்டும்.

13 கடைசி அத்தியாயமும் இவ்வாறே துண்டுக் காகிதங்களில் எழுதப்பட்டது. எவ்வளவு தேடிப்பார்த்தும் பொருளடக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

14 கஜானன் ராவுக்கும் மற்றவர்களுக்கும் இந்த விஷயம் சொல்லப்பட்டது. ஸமஸ்தானத்தின் பொருளாளரும் 'ஸ்ரீ ஸாயீ லீலாஃ பத்திரிகையின் ஆசிரியருமான பாபா ஸாஹேப் தர்கடுக்கும் அறிவிக்கப்பட்டது. எல்லாருமே பொருளடக்கம் என்று ஓர் அத்தியாயம் இருக்கவேண்டுமென்று கருதினர்.

15 பாபா ஸாஹேப் தர்கட் இந்தத் தேவையை 'ஸ்ரீ ஸாயீ லீலாஃ பத்திரிகையில், நாள் எல்லை ஒன்றை நியமித்துப் பிரசுரித்தார். நாளெல்லை கடந்ததே தவிர, பொருளடக்கம் கிடைக்கவில்லை.

16 ஹேமாட் கோவிந்த் ஒரு நற்குணவான்; வேதாந்தத்தில் ஊறியவர். காவியத்தில் காணப்படும் அவருடைய கருத்தாழமும் கவிநயமும் நமக்கெல்லாம் பிரசாதம். குருவின் கிருபை செய்யும் அற்புதந்தான் என்னேõ

17 ஸத்குரு ஸாயீயின் பக்தர்கள் எத்தனையோ பேர். அவர்களில் ஹேமாட் பந்த் ஒரு கவிரத்தினம். அவருக்குச் சமமாக அறிவொளி பெற்ற ஒரு மஹானால்தான் பொருளடக்கத்தை எழுதமுடியும்.

18 ஆகவே, எங்கிருந்தும் பொருளடக்கம் வெளிப்படவில்லை. என் மனம் நொந்தது. தத்தகுருவான ஸ்ரீஸாயீ பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். அவரிடம் கருணை வேண்டினேன்,--

19 ''நான் ஒரு மந்தமதி படைத்த பாமரன். வித்யையின் வாசனையையும் அறியாதவன். அடிப்படையில் கவிக்குருடனாகிய நான், ஓவிகளால் (செய்யுள்களால்) ஆன பிரபந்தத்தை (பாமாலையை) எப்படி எழுதப் போகிறேன்?ஃஃ

20 ஆயினும், ஒரே ஓர் ஆதாரம் உண்டு. ஸ்ரீ தத்தகுரு அனுகூலமாக இருந்தால். ஒரு கொசுவும் மேருமலையைத் தூக்கும். அவருடைய சக்தியும் அதிகாரமும் அவ்வாறுõ

21 மறுபடியும் நான் உமாரமணனும் (சிவனும்) நாராயணனுமாகிய ஸாயீயை, என் புத்திக்கு உணர்வூட்டி சீக்கிரமாகப் பொருளடக்கம் எழுதவைக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.

22 எனக்குக் கவி புனையும் சக்தி இல்லை. ஆனாலும், குருராயருக்கு நான் மந்தமதி படைத்தவன் என்பது தெரியும் அன்றோõ ஆகவே, அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு, இப்பொழுது பொருளடக்கம் எழுதத் துவங்குகிறேன்.

23 இக் காவியத்தின் கடைசிப் பகுதியாகிய பொருளடக்கம், வளைந்த தும்பிக்கையை உடையவரும் அற்புத வ­மையுடையவரும் பெருமை படைத்தவருமான ஸாயீயால் எழுதப்படும். நான் அவருடைய கருவி மாத்திரமே.

24 முதல் அத்தியாயம் கடவுள் வாழ்த்து. விக்கினங்களை நாசம் செய்பவரும் உலகத்திற்குக் காரணமானவரும் கௌரீசங்கரரின் கழுத்தை அழகுபடுத்தும் மணிமாலையுமான ஆனைமுகத்தோனைத் துதி பாடுகிறது.

25 எவர், என்றும் புதிய வாக்கின் தேவதையோ, எவர் சாதுரியமான கலைகளுக்கு அதிபதியோ, எவர் உலகைக் கலைகளில் மோகங்கொள்ளச் செய்பவரோ, எவர் இஷ்டப்பட்ட பொருள்களை அளிப்பவரோ, அந்த சாரதா தேவிக்கு நமஸ்காரம் செய்யப்பட்டது.

26 குலகுருவுக்கும், மற்ற குருமார்களுக்கும், உறவினர்களுக்கும், உருவமெடுத்துவந்த அவதாரபுருஷர்களான ஞானியர்க்கும், சரணமடையத்தக்க ஸத்குருவும் வீடுபேறு நிலையின் ஆதிகாரணமுமாகிய ஸாயீ பகவானுக்கும், நமஸ்காரம் செய்யப்பட்டது.

27 அதன் பின்னர், ஸாயீ கோதுமைமாவு அரைத்துக் காலரா கொள்ளைநோயை எவ்வாறு சாமர்த்தியமாக முற்றிலும் அமைதியடையச் செய்தார் என்பது விவரிக்கப்பட்டது.

28 காவியத்தின் பிரயோஜனத்தையும், ஹேமாடின் ஸாயீதரிசனத்தையும், 'குரு அவசியமாஃ என்ற ஏடாகூடமான விவாதம் நடந்ததுபற்றியும், ஹேமாட் என்று தாபோல்கர் பெயரிடப்பட்டதையும் இரண்டாவது அத்தியாயம் விவரிக்கிறது.

29 காவியம் இயற்றச் சொல்­ ஸாயீயின் திருவாய்மொழியாக வெளிவந்த ஆணையும், ரோஹில்லாவின் முழுவிவரமும் மூன்றாவது அத்தியாயத்தில் அடங்கியுள்ள விஷயங்கள்.

30 ஜகத்தை இயக்கும் இறைவன் அணியும் ஆபரணங்களாகிய ஞானியர், பூமண்டலத்தில் எக்காரணம்பற்றி அவதாரம் செய்கின்றனர் என்னும் விஸ்தாரமான விவரணம் நான்காவது அத்தியாயத்தில் இடம் பெறுகிறது.

31 அத்ரி ரிஷியின் புதல்வர் தத்தாத்ரேயரின் அவதாரமும், ஸாக்ஷாத் கற்பக விருக்ஷமுமான ஸாயீ, புனிதத் தலமாகிய சிர்டீக்கு முதன்முத­ல் வந்ததன் முழுவர்ணனையையும் இந்த அத்தியாயத்தில் காணலாம்.

32 ஐந்தாவது அத்தியாயம், பாபா சிர்டீயி­ருந்து காணாமற்போனதையும் எல்லாரும் வியக்கும்படி தனவான் பாடீலுடன் திரும்பிவந்ததையும் விவரிக்கிறது. மேலும்,

33 கங்காகீர் ஆகிய ஸாதுக்களின் சம்மேளனத்தையும், பாபா தூரத்தி­ருந்து தலைமேல் தண்ணீர் சுமந்துவந்து பூந்தோட்டம் வளர்த்ததையும், ஐந்தாவது அத்தியாயம் நிரூபணம் செய்கிறது.

34 ஆறாவது அத்தியாயத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீராமநவமி உற்சவமும், பாலா புவா கீர்த்தனக்காரரின் காதையும், மசூதி ஜீரணோத்தாரணம் (பழுதுபார்த்துப் புத்துயிர் ஊட்டுதல்) செய்யப்பட்டதும் விஸ்தாரமாக விளக்கப்பட்டிருக்கின்றன.

35 பாபாவின் ஸமாதி நிலை, கண்டயோகம், தோதிபோதி ஆகிய யோகப்பயிற்சிகளும், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்ற தர்க்கமும், ஞானிகளின், புரிந்துகொள்ளமுடியாத அந்தரங்கம்பற்றிய வியாசமும், ஏழாவது அத்தியாயத்தில் இடம் பெறுகின்றன.

36 இதே அத்தியாயத்தில், பாபாவின் நடையுடைபாவனைகள், வைத்தியம் செய்தது, சிலீம், துனி, அவருடைய ஜாதிபற்றிய கேள்வி, மசூதியிலும் கோயில்களிலும் விளக்கெரித்தது, அவருக்கு ஏற்பட்ட தீவிபத்து, பக்தர்கள் அவருக்கு ஸேவை செய்த அற்புதமான காட்சி ஆகியனவும் இடம்பெறுகின்றன.

37 பாகோஜி சிந்தேயின் பெருவியாதி, காபர்டேவின் மகனின் பிளேக் நோய் நிவாரணம், நானா ஸாஹேப் சாந்தோர்கர் பண்டர்பூர் செல்ல விரும்பியது - இவையனைத்தும் பாங்குற இதே அத்தியாயத்தில் சொல்லப்பட்டன.

38 நரஜன்மத்தின் அபூர்வ மகிமை, பாபா பிச்சையெடுத்து உண்டது, பாயஜாபாயி பாபாவுக்குச் செய்த ஸேவை, பாபா உணவுண்ட விநோத முறை,--

39 பாபா, தாத்யா, மஹால்ஸாபதி ஆகிய மூவரும் மசூதியில் உறங்கிய விவரம், பாபா இவ்விருவர் மீதும் சரிசமமாக அன்பு செலுத்தியது - இவையெல்லாம் எட்டாவது அத்தியாயத்தில் ஆனந்தமாகச் சொல்லப்பட்டுள்ளன.

40 ராஹாதா கிராமத்தின் குசால்சந்துக்கும், சாந்தியும் ஞானமும் இணைந்த பாபாவுக்கும் இருந்த பரஸ்பர பிரேமசம்பந்தமும் இதே அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

41 பாபாவின் ஆணைகளுக்குப் பங்கம் விளைவித்த தாத்யா கோதே பாடீலும், ஓர் ஆங்கிலேயே கனவானும் அனுபவித்த இன்னல்களை ஒன்பதாவது அத்தியாயம் விவரிக்கிறது.

42 இதே அத்தியாயத்தில், பாபா பிச்சை எடுத்து உண்ட விவரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இல்லறத்தார் செய்யவேண்டிய பஞ்ச மஹா யக்ஞங்களும், பிச்சை எடுப்பதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு என்னும் விஷயமும், திறமையாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

43 சிரேஷ்டமான (தலைசிறந்த) பக்தரும், பிரார்த்தனா ஸமாஜம் என்னும் ஆன்மீக இயக்கத்தின் தீவிர உறுப்பினருமான பாபா ஸாஹேப் தர்கட், நெருங்கிய ஸாயீபக்தராக மாறிய காதையும் இதே அத்தியாயத்தில் கூறப்பட்டது.

44 யோகேசுவரரான ஸாயீ நான்குமுழ நீளமும் ஒருசாண் அகலமும் கொண்ட, மசூதியின் தூலத்தி­ருந்து தொங்கிய பலகையின்மேல் படுத்ததுபற்றியும்,--

45 பாபா எப்பொழுது முதன்முதலாக சிர்டீயில் காலெடுத்து வைத்தார், எத்தனை ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார், எப்பொழுது தேகத்தைத் துறந்தார் என்பனபற்றியெல்லாம் இதயம் கனியும் வகையில் பத்தாவது அத்தியாயம் பேசுகிறது. மேலும்,

46 வெளிப்பார்வைக்குப் பிசாசு பிடித்தவர்போல் தோன்றினாலும், உள்ளுக்குள் பரமசாந்தியையும் பற்றற்ற மனநிலையையும் அனுபவித்த குருராயர், மக்களை நல்வழிப்படுத்துவதில் கண்ணுங்கருத்துமாய் எந்நேரமும் செயல்பட்ட விவரம்,--

47 வேதசாஸ்திர தர்மலட்சணங்களை விளக்குவதிலும், ஆன்மீகம் மற்றும் உலகியல் போதனைகளை அளிப்பதிலும், பக்தர்கள், பக்தரல்லாதவர்கள் இருவகையினரையுமே சோதித்துப் பார்ப்பதிலும் குருராயர் காட்டிய அபாரமான திறமை,--

48 பாபாவின் ஆசனம், ஞானம், தியானம், குருபதவி, சாமர்த்தியம், மஹிமை -- இவையனைத்தும் பத்தாவது அத்தியாயத்தைப் பூரணமாக்குகின்றன.

49 பதினொன்றாவது அத்தியாயம், திக்கெட்டும் பிரக்கியாதி பெற்ற ஸாயீயின் ஸச்சிதானந்த நிலையையும், டாக்டர் பண்டித்தின் பிரேமபக்தியையும், ஸித்திக் பாலகேயின் பயபக்தியையும்,--

50 புயற்காற்றையும் பேய்மழையையும் பாபா எவ்வாறு கட்டுப்படுத்தினார் என்பதையும், துனியின் பெருந்தீயி­ருந்து பக்தர்களைக் காத்ததையும் சுவாரசியமாக விவரிக்கிறது.

51 காகா மஹாஜனி, வக்கீல் துமால், நிமோண்கர், ஒரு மாம்லேதார், அவருக்கு நண்பர் ஒரு டாக்டர், இவர்களைப்பற்றிய பல நிகழ்ச்சிகளை இனிமையாகப் பன்னிரண்டாம் அத்தியாயம் வர்ணிக்கிறது.

52 ஞானி கோலப் ஸ்வாமியின் சீடரும் சந்தேகியுமான நாசிக்கைச் சேர்ந்த முலே சாஸ்திரி, ஸாயீதரிசனம் செய்த அற்புதமும் இதே அத்தியாயத்தில் இடம்பெறுகிறது.

53 கறுப்பு நாய்க்குத் தயிர்ச்சோறு போட்டு பாலா சிம்பி மலேரிய ஜுரத்தி­ருந்து விடுபட்ட நிகழ்ச்சியும், அக்ரோட்டு, பிஸ்தா பருப்புகள் கலந்த பானத்தைக் குடித்து பாபா ஸாஹேப் புட்டி காலராவி­ருந்து நிவாரணமடைந்த நிகழ்ச்சியும்,--

54 ஆலந்தி சுவாமியின் காதுநோய் பாபாவின் ஆசீர்வாதத்தால் நிவிர்த்தியானதும், காகா மஹாஜனியின் பேதியை வேர்க்கடலை தின்னவைத்து நிறுத்தியதும்,--

55 தீராத வயிற்றுவ­யால் பீடிக்கப்பட்ட, ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்தை எல்லார் முன்னிலையிலும் ஆசீர்வதித்து குணப்படுத்தியதும்,--

56 பீமாஜி பாடீ­ன் நுலையீரல் கூடியரோகத்தை உதீயளித்து விரட்டியதுமான பல விருத்தாந்தங்கள் பதின்மூன்றாவது அத்தியாயத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.

57 நாந்தேடின் புகழ்பெற்ற வியாபாரியும் பார்ஸி மதத்தினருமான ஸேட் ரதன்ஜி புத்திர பாக்கியம் இல்லாததால் சோகமாக இருந்தார். அவருக்குப் புத்திரபாக்கியம் அளித்துப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார் பாபா. இக் காதையைப் பதினான்காவது அத்தியாயம் அளிக்கிறது.

58 நாந்தேடில் கூ­வேலை செய்பவராக மறைந்து வாழ்ந்த ஞானி மௌலீ ஸாஹேப்பை, குறிப்பால் எல்லாருக்கும் தெரியும்படி செய்த அற்புதமான காதையும் இதே அத்தியாயத்தில் அடக்கம்.

59 பதினைந்தாவது அத்தியாயம், நாரத கீர்த்தனை பத்ததியை தாஸகணுவிற்குப் போதித்ததையும், சர்க்கரை பூரிதமான தேநீரைக் குடிக்கச்சொல்­ விரதம் நிறைவேறியதைச் சோல்கருக்கு சூசகமாகத் தெரிவித்த லீலையையும் விவரிக்கிறது.

60 மேலும், மசூதியில் பல்­ முக்கமிட்டதைக் கேட்டு, ஔரங்காபாதி­ருந்து அதன் சகோதரி சந்திக்க வரப்போகிறாள் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்து பாபா சொன்ன காதையும் இதே அத்தியாயத்தில் அடக்கம்.

61 பதினாறாம் அத்தியாயத்தின் சுவாரசியமான காதை, செல்வமும் குழந்தைகளும் நிறையப் பெற்றிருந்த கனவான் ஒருவர் பிரம்ம ஞானம் பெறுவதற்காக சிர்டீக்கு வந்த விவரம்.

62 ''பிரம்ம ஞானம் தேடுபவர், முதலாவதாக, பணந்தேடி அலைவதை முழுமையாக விடுத்து உலகியல் பற்றுகளைத் துறக்க வேண்டும்ஃஃ என்று அவருக்குச் சொல்லப்பட்டது.

63 மேலும், கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளைத் தம்மிடம் வைத்திருந்தபோதிலும், பாபாவுக்கு ஐந்து ரூபாய் கடனாகக் கொடுக்க விரும்பாத இம் மனிதர் அவரிடமிருந்து பிரம்ம ஞானத்தை எதிர்பார்த்த சாமர்த்தியந்தான் என்னேõ

64 ஸாயீயின் அழகிய போதனையும் ஹேமாடின் இனிய கவிநடையும் இந்தப் பதினாறாவது அத்தியாயத்தில் ஒன்றுசேர்ந்தது, பாலோடு சர்க்கரை கலந்தது போலாயிற்று.

65 இக் காதையே பதினேழாவது அத்தியாயத்தில் தொடர்கிறது. பணத்தாசையை அறவே ஒழிக்கவேண்டிய அவசியம்பற்றியும், பிரம்ம ஞானம் பெறுவது எப்படி என்பதுபற்றியும், விஸ்தாரமாகவும் சுவையுடனும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

66 ஸாடே என்பவர் 'குரு சரித்திரம்ஃ படித்த காதையும், ராதாபாயி தேச்முக் அம்மையாருக்கு ஸாயீ அளித்த உபதேசமும் போதனையும், ஹேமாட் பந்துக்குக் கிடைத்த அநுக்கிரஹமும் பதினெட்டாவது அத்தியாயத்தில் திறம்படச் சொல்லப்பட் டிருக்கின்றன.

67 பத்தொன்பதாவது அத்தியாயம், ஹோமாட் பந்த் பெற்ற அநுக்கிரஹம்பற்றி மேலும் விஸ்தாரமாகப் பேசுகிறது. ஸாயீ திருவாய்மொழிந்த போதனைகளின்மேல் செய்யப்பட்ட சிந்தனையும் ஆராய்ச்சியும் இதே அத்தியாயத்தில் அடங்கும்.

68 தாஸகணு 'ஈசாவாஸ்ய பா(ஆஏஅ)வார்த்த போதினிஃ எழுத முயன்றதும், எழுதும்போது முளைத்த சந்தேகங்களை பாபாவிடம் எழுப்பியதும் இருபதாவது அத்தியாயம்.

69 ''காகாவின் வீட்டுவேலைக்காரி சந்தேகங்களைத் தீர்த்துவைப்பாள்ஃஃ என்று பாபா பதில் சொன்னார். ஸத்குருவின் அசாதாரண மஹிமை இந்த அத்தியாயத்தில் வெளிப்படுகிறது.

70 இருபத்தொன்றாவது அத்தியாயம், ஒரு சப்-கலெக்டரும், பாடண்கர் என்று பெயர் பெற்ற அறிஞரும், மூன்றாவதாக ஒரு வக்கீலும் ஸாயீயிடம் அநுக்கிரஹம் பெற்ற காதை.

71 ''மசூதிமாயீ பிறவிக்கடலைத் தாண்டவைப்பவள், அவளே துவாராவதி, துவாரகாஃஃ என்று பாபா எல்லாருக்கும் பொதுவாகச் சொன்னபோது ஒருவருக்கும் அதன் உட்பொருள் விளங்கவில்லை.

72 மிரீகரையும் ஸ்ரீமான் புட்டியையும் ஸர்ப்ப கண்டத்தி­ருந்து காத்தும், அமீர் சக்கரின் முடக்குவாதத்தை நிவிர்த்தி செய்தும், அவரைப் பாம்பு கடிக்காமல் காத்தும், மசூதிமாயியின் குணநலன்களை பாபா நிலைநாட்டினார்.

73 ஹேமாட் பந்திற்குத் தேள் கொட்டாமல் காப்பாற்றினார். பல பக்தர்களைப் பாம்புக் கடியி­ருந்து காப்பாற்றி துர்மரணம் நேராது தடுத்தார். ஈதனைத்தையும் இருபத்திரண்டாவது அத்தியாயம் விவரிக்கிறது.

74 இருபத்துமூன்றாவது அத்தியாயம், யோகாப்பியாஸி (யோகம் பயில்பவர்) ஒருவரின் சந்தேகம் நிவிர்த்தி செய்யப்பட்டதையும், மாதவராவ் தேச்பாண்டேவுக்கு பாம்புக்கடி விஷம் ஏறாமல் தடுக்கப்பட்டதையும், பாபாவின் துனியையும் அதற்கு எரிபொருள்பற்றியும், ஓர் ஆடு வெட்டப்பட்டதையும் அழகாகச் சித்திரிக்கிறது.

75 மேலும், படே பாபாவை ஸாயீ மரியாதையாக நடத்தியது, படே பாபா ஸாயீயின் ஆணையை நிறைவேற்றாத விசுவாசக் குறைவு, எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியடையாமல் மேலும் விரும்பும் அவருடைய சுபாவம்,--

76 பக்தசிரேஷ்டரான காகா ஸாஹேப், குருவின் ஆணையைச் சிறந்த நிட்டையுடன் நிறைவேற்றியது, ஸத்குருவின் அற்புதலீலை ஆகியனவும் இதே அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன.

77 ஸத்குருவை நினைவுகொள்ளாமல் உலகசுகம் எதையும் துய்க்கலாகாது என்பதை ஹேமாட் பந்தையும் வறுகடலையையும் சாக்காக வைத்து பாபா அனைவருக்கும் போதனையளித்த பரிகாச நிகழ்ச்சி இருபத்துநான்காவது அத்தியாயம்.

78 இதே அத்தியாயத்தில், அண்ணா ஸாஹேப் பாபரேவுக்கும் மாவசீபாயீக்கும் பாபா சர்ச்சை மூட்டிவிட்டதையும், பாபாவின் ஒளிவீசும் நகைச்சுவை உணர்வையும், கவி (ஹோமாட் பந்த்) அழகாகப் பாடியிருக்கிறார்.

79 இருபத்தைந்தாவது அத்தியாயம், பருத்தியிலும் தானியங்களிலும் பெரிய அளவில் கொள்முதல் வியாபாரம் செய்ய விரும்பிய அஹமத்நகரவாசி தாமுண்ணா காஸாரின் காதை.

80 ஞானசூரியனான ஸாயீ அந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் என்று எச்சரிக்கை செய்தார். மகப்பேறு இல்லாத அவருக்கு, ''மனைவி மாம்பழங்களைத் தின்றால் புத்திரபாக்கியம் ஏற்படும்ஃஃ என்று கூறி மாம்பழங்களைக் கொடுத்து அருள் செய்தார்.

81 இருபத்தாறாவது அத்தியாயம், மற்றொரு ஞானியின் அநுக்கிரஹம் பெற்ற, பந்த் என்னும் பெயர்கொண்ட பக்தருக்கு அதைக் குறிப்பால் உணர்த்தி அவரை மகிழ்ச்சியடையச் செய்த நிகழ்ச்சியையும்,--

82 ஹரிச்சந்திர பிதலேவின் மகனுக்கு ஏற்பட்ட காக்காய்வ­ப்பு நோயைக் கருணைபொங்கும் பார்வையாலேயே நிவிர்த்தி செய்ததையும்,--

83 பிதலேவுக்கு, ''இரண்டு ரூபாய் ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன்ஃஃ என்று சொல்­ மூன்று ரூபாய் கொடுத்துப் பூஜையில் பாதுகாக்கச் சொன்னதையும் விவரிக்கிறது.

84 இருபத்தேழாவது அத்தியாயம், பிரசாதமாகத் திரும்பப்பெறும் நோக்கத்துடன் காகா மஹாஜனி கொடுத்த பாகவதம் போதியை மாதவராவுக்குக் கொடுத்து விட்டதையும்,--

85 ராமதாசி ஒருவருக்குச் சொந்தமான போதிகளில் ஒன்றான விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியை அவருக்குத் தெரியாமல் மாதவராவுக்குக் கொடுத்ததையும்,--

86 தயாசாகரமான ஸாயீ, விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியை மாதவராவுக்குக் கொடுத்து அநுக்கிரஹம் செய்ததையும் விவரிக்கிறது.

87 லக்மீசந்த் முன்சி, பர்ஹாண்பூர்வாசியான சிடீ பாயீ, புண்ணியசா­யான பிராமணர் மேகா ஆகிய மூவர் பாபாவின் திருவடிகளுக்கு இழுக்கப்பட்ட காதையை இருபத்தெட்டாவது அத்தியாயம் விளக்குகிறது.

88 கனவுக்காட்சிகளில் தோன்றி ஓர் அனுபவத்தை அளித்து, விழிப்புநிலையிலும் அதை மெய்யாக்கிய ஸத்குருமாதாவின் கற்பனைக்கெட்டாத லீலைகள் இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

89 இருபத்தொன்பதாவது அத்தியாயத்தில், சிவஸ்வரூபமான, கள்ளங்கபடமற்ற ஸாயீயின் வள்ளன்மையைத் துய்க்க விரும்பி சிர்டீ க்ஷேத்திரத்திற்கு வந்த மதறாஸ் பஜனை மண்ட­யின் விசித்திரமான அனுபவங்கள்,--

90 ரகுநாத் தேண்டூல்கரின் மகன் பரீட்சையில் வெற்றிபெற்ற அற்புதம், தேண்டூல்கரின் ஓய்வூதியம்பற்றிய கவலையை விரட்டியடித்த மனோகரமான லீலை,--

91 ஸாயீபாதங்களில் மிகுந்த பிரேமைகொண்ட டாக்டர் ஹாடே என்னும் பக்தருக்கு விடியற்காலை நேரத்தில் சொப்பன தரிசனம் அளித்த லீலை ஆகியன அடக்கம்.

92 வணீயில் ஸப்தசிருங்கி தேவியின் பூஜகரான காகாஜி வைத்யாவுக்கு, ''ஸாதுக்களின் நாயகரான ஸாயீயை தரிசனம் செய்ஃஃ என்று தேவி கனவில் அருள் செய்தது,--

93 அதே தேவிக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொண்ட நேர்த்திக்கடனை நிறைவேற்ற சாம்ராவ் வணீக்குச் சென்றது,--

94 மேலும், ராஹாதாவைச் சேர்ந்த சேட் குசால், பஞ்சாபி பிராமணரான ராம்லால் இவர்களுக்குக் கனவில் தோன்றி, ''சிர்டீக்கு வருகஃஃ என்று ஸ்ரீஸாயீ சொன்னது, ஆகிய விவரங்கள் முப்பதாவது அத்தியாயத்தில் அடக்கம்.

95 மதறாஸி­ருந்து மானஸஸரோவருக்கு யாத்திரையாகக் கிளம்பிய சன்னியாசி விஜயானந்தர், இருடீகேசராகிய (திருமாலாகிய) ஸ்ரீஸாயீயின் பாதங்களில் தங்கவைக்கப்பட்டு சிர்டீயிலேயே உயிர்நீத்ததும்,--

96 ஸாயீயின் பாதகமலங்களைச் சுற்றிவந்த தேனீயான மான்கர் என்பவரும் துஷ்டமிருகமான ஒரு பு­யும் ஸாயீ சன்னிதியில் உயிர்நீத்து வீடுபேறு பெற்றதும்-- முப்பத்தொன்றாவது அத்தியாயம்.

97 ''நாங்கள் நால்வர் கடவுளைத் தேடிக் காட்டில் அலைந்தோம். நான் அகங்காரத்தை முழுமையாக விடுத்தவுடன் குருராயர் எனக்குக் காட்சிதந்தார்ஃஃ என்று ஸாயீ திருவாய்மொழிந்த (உருவகக்) கதையும்,--

98 உண்ணாவிரதம் இருப்பது என உறுதிபூண்டு சிர்டீக்கு வந்த கோகலேபாயீயின் காதையும் முப்பத்திரண்டாவது அத்தியாயத்தின் உள்ளே அடங்கிய விஷயங்கள்.

99 நாராயண் ஜனீயின் நண்பரைத் தேள்கொட்டியது (உதீயால் நிவாரணம்), மற்றொரு பக்தரின் மகளுக்கு ஜுரம் இறங்கியது (உதீயால் நிவாரணம்),--

100 சாந்தோர்க்கரின் மகள் பிரசவ வ­யால் துடித்தபோது செய்வதென்னவென்று தெரியாது தவித்த சாந்தோர்க்கருக்கு சிர்டீயி­ருந்து பாபா உதீ அனுப்பியது,--

101 சிறந்த பக்தரான குல்கர்ணீ ஸாஹேப், பஜனைப் பாடகர் பாலாபுவா ஆகிய இருவரும் உதீயின் மஹிமையை உணர்ந்தது,--

102 கடைசியாக, சிரத்தையும் பா(ஆஏஅ)வமும் மிகுந்த பக்தர் ஹரிபாவு கர்ணீக் கொடுத்த தக்ஷிணைபற்றிய போதனையூட்டும் கவர்ச்சிகரமான காதை ஆகியன அடங்கியது முப்பத்துமூன்றாவது அத்தியாயம்.

103 மாலேகாங்வ் டாக்டரின் மருமகனுக்கு ஏற்பட்ட, எலும்பில் புரையோடிய ரத்தக்கட்டி, நரம்புச் சிலந்தி நோயால் அவதியுற்ற சிறந்த பக்தர் டாக்டர் பிள்ளை,--

104 பிளேக் ஜுரக் கட்டிகளால் இன்னலுற்ற சிர்டீவாசி பாபாஜீயின் மனைவி, காக்காய்வ­ப்பு நோயால் பீடிக்கப்பட்ட ஓர் இரானியப் பெண் குழந்தை,--

105 சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட ஹர்தாவைச் சேர்ந்த முதியவர், பிரசவ காலத்தில் பெருந்துயருற்ற பம்பாய்வாசியும் காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்தவருமான ஒருவரின் மனைவி,--

106 இவர்களுக்கு நேரிட்ட இன்னல்கள் அனைத்தும் உதீயைப் பூசியதால் கணமாத்திரத்தில் மறைந்துபோன விவரங்கள் முப்பத்துநான்காவது அத்தியாயத்தில் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளன.

107 முப்பத்தைந்தாவது அத்தியாயம், அருவவழிபாட்டை மட்டும் விரும்பியவரும், உருவவழிபாட்டை ஒப்புக்கொள்ளாதவருமான காகாமஹாஜனியின் நண்பர் ஒருவர் பாபாவை தரிசனம் செய்தமாத்திரத்தில் உருவவழிபாட்டை ஏற்றுக்கொண்ட விவரத்தையும்,--

108 பம்பாயி­ருந்து வந்த வக்கீல் தரம்ஸி ஜேடாபாயீ டக்கருக்கு விதையுள்ள திராட்சையை விதையற்ற திராட்சையாக மாற்றி குருவரர் அளித்ததையும் சொல்கிறது.

109 சுகமாகத் தூங்கமுடியாத பிரச்சினையுடன் பாந்த்ராவி­ருந்து வந்த காயஸ்த ஜாதியைச் சேர்ந்த ஒருவரும், நெவாஸாவைச் சேர்ந்த பாலா பாடீ­ன் குடும்பமும், உதீயால் நன்மையடைந்த விவரமும் இதே அத்தியாயத்தில் அடக்கம்.

110 கோவாவி­ருந்து இரண்டு இல்லறத்தார் வந்தனர். ஒருவர் வேலை கிடைத்ததற்காகவும், மற்றவர் திருடுபோன சொத்தைத் திரும்பப் பெற்றதற்காகவும், தனித்தனியாக விரதம் ஏற்றுக்கொண்டவர்கள்.

111 இருவருமே தங்கள் நேர்த்திக்கடனை மறந்துவிட்டனர். பிரம்மாண்டம் முழுதும் நிரம்பியவரும் முக்காலமும் அறிந்தவருமான ஸமர்த்த ஸாயீ அவர்களுக்கு மறந்துபோன விஷயத்தை நினைவூட்டினார். அவருடைய கீர்த்தியை யாரால் வர்ணிக்க முடியும்?

112 ஸகாராம் ஔரங்காபாத்கரின் மனைவி மகப்பேறு வேண்டி ஸாயீபாதங்களை நோக்கித் தாவி ஓடினார். பாபா அவருக்கு ஒரு தேங்காய் கொடுத்தார். அவருடைய ஆசை நிறைவேறியது. மேற்கண்ட காதைகள் முப்பத்தாறாவது அத்தியாயத்தை வியாபிக்கின்றன.

113 வேறெங்கும் காணமுடியாத சாவடி ஊர்வலத்தின் கோலாகலத்தை ஹேமாட் தம் கண்களால் கண்டு சுவையுடன் முப்பத்தேழாவது அத்தியாயத்தில் வர்ணித்திருக்கிறார்.

114 இதைத் தொடரும் முப்பத்தொட்டாவது அத்தியாயம், பாபா பலவிதமான உணவுப்பண்டங்களை ஹண்டியில் சமைத்து எல்லாருக்கும் பிரசாதமாக வழங்கிய விவரங்களை மனோகரமாக வர்ணிக்கிறது.

115 ''தத்வித்தி ப்ரணிபாதேனஃஃ என்று ஆரம்பிக்கும் ஸ்ரீமத் பகவத் கீதை சுலோகத்திற்கு ஓர் ஆபூர்வமான விளக்கம் அளித்துச் சாந்தோர்கரின் வடமொழிப் பாண்டித்தியம் சம்பந்தமான கர்வத்தை அழித்தார் பாபா. இது முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் விளக்கம்.

116 ஸாதுக்களின் மன்னரான ஸாயீ, பாபு ஸாஹேப் புட்டியின் கனவில் தோன்றி, கோயில் ஒன்று கட்டும்படி ஆணையிட்ட விவரமும் இதே அத்தியாயம்.

117 தம் தாயார் நடத்தவிருந்த உத்யாபன விழாவில் பிராமணர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டுமென்றும், அவ்விழாவில் பாபாவும் கலந்துகொள்ள வேண்டுமென்றும், தேவ் பாபாவுக்குக் கடிதம் எழுதினார்.

118 மதிப்பிற்குரிய சன்னியாசிகள் மூவர் உத்யாபன விழாவன்று வருகை தந்து பிராமணர்களுடன் அமர்ந்து உணவுண்டு சென்றனர். பாலகிருஷ்ண விச்வநாத தேவுக்கு (இந்த அத்தியாயத்தை எழுதியவர்) குருவின் லீலை புரியவில்லை.

119 மேலும், ஹேமாட் பந்தின் கனவில் தோன்றி உறுதியளித்தவாறு பாபா அவருடைய இல்லத்திற்கு உணவுண்ண வந்தார்; புடைச்சிற்ப உருவில்õ இந்த விவரங்கள் அனைத்தும் நாற்பதாவது அத்தியாயத்தில் அடக்கம்.

120 புடைச்சிற்பத்தின் காதை நாற்பத்தொன்றாவது அத்தியாயத்திலும் தொடர்கிறது. ஸத்குருவின் சொல்லுக்கடங்காத மஹிமையைக் கவி விஸ்தாரமாக ரமணீயமான (அழகான) செய்யுள்களால் பாடுகிறார்.

121 ருத்ராவதாரம் எடுத்த ஸாயீ, தேவின்மேல் கோபங்கொண்டார். எரியும் நெருப்புத் துண்டங்கள்போல் தோன்றிய கண்களுடன் அவரை ஏசி அருள் செய்தார்.--

122 ஸ்ரீஹரியான ஸாயீ, ''நித்திய நியமமாக ஞானேச்வரி வாசிஃஃ என்று தேவுக்குக் கனவில் ஆணையிட்டு, படிக்கும் கிரமத்தையும் விவரித்தார். இவ்விவரமும் நாற்பத்தொன்றாவது அத்தியாயத்தில் அடங்கும்.

123 ராமச்சந்திர பாடீல், தாத்யா கோதே பாடீல் ஆகிய இருவரின் மரணத்தை ஸாயீ தவிர்த்தார். தம் நிர்யாணத்தைப்பற்றி சூசகமாகத் தெரிவித்தார். இக் காதையை நாற்பத்திரண்டாவது அத்தியாயம் சொல்கிறது.

124 இதன் பிறகு, ஹேமாடின் சித்தத்தைக் கவலைக்குள்ளாக்கி, கதைகேட்பவர்களின் மனத்தையும் சோகமடையச் செய்யும் ஸாயீ ஸத்குருவின் மஹாஸமாதி விவரணம்.

125 அடுத்த இரண்டு அத்தியாயங்களில் (43&44), முந்தைய அத்தியாயத்தில் விட்டுப்போன விவரங்களைச் சொல்­ பாபாவின் நிர்யாண படலத்தை ஹேமாட் நிறைவுசெய்கிறார்.

126 மஹாஜனி, மாதவராவ் இவர்களுடன் ஒருசமயம் ஏகநாத பாகவதம் வாசித்தபோது, காகாஸாஹேப் தீக்ஷிதருக்குத் தம்முடைய தகுதிபற்றிய சந்தேகங்கள் எழுந்தன.

127 மாதவராவின் தேற்றுதலால் தீக்ஷிதர் சமாதானம் அடையவில்லை. ஆனந்தராவ் பாகாடே தம்முடைய கனவை விளக்கி தீக்ஷிதரை சமாதானம் அடையச்செய்தார்.

128 மேலும், மஹால்ஸாபதியால் தொங்கும் பலகையின்மேல் ஏன் தூங்க இயலாது என்பதற்கு பாபா அளித்த விளக்கம். இவையனைத்தும் நாற்பத்தைந்தாவது அத்தியாயத்தில் திறம்பட அளிக்கப்பட்டுள்ளன.

129 இருக்கும் இடத்தில் இருந்தவாறே சுதந்தரமாக உலகெங்கும் சுற்றிவந்த பாபாவின் லீலைகளும், ஜனங்களுக்கு ஓர் அற்புதத்தைக் காண்பிப்பதற்காக விசித்திரமான முறையில் கயாவுக்குச் சென்றதும்,--

130 ஞானிகளில் மாணிக்கமான ஸாயீ, சாமாவைச் சாந்தோர்கரின் மகனுடைய திருமணவிழாவில் பங்குபெறுவதற்கு அனுமதித்ததும், கயாவில் பாபாவின் நிழற்படம் சாமாவிற்கு திடீரென்று காட்சியளித்ததும்,--

131 முக்கண்ணராகிய ஸாயீ இரண்டு ஆடுகளின் முன்ஜன்மக் கதையைத் திருவாய்மொழிந்ததுமான, ரம்மியமானவையும் மதுரமானவையுமான சிறப்பு மிகுந்த கதைகள் நாற்பத்தாறாவது அத்தியாயத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன.

132 பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அவதாரமான ஸாயீ, பாம்பு தவளை இவற்றின் பூர்வஜன்மக் கதையை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கஞ்சன், அவனிடம் கடன்பட்ட பெண்மணி ஒருத்தி இவர்களின் கதையைத் திருவாய்மலர்ந்திருக்கிறார்.

133 கடன், கொலை, விரோதம் ஆகிய பாவங்களைச் செய்பவர்கள் மறுஜன்மம் எடுத்துப் பிராயச்சித்தம் தேடியே ஆகவேண்டும் என்னும் விதியை அமிருதபானம் போன்ற இக் கதையின்மூலம் நாற்பத்தேழாவது அத்தியாயம் விவரிக்கிறது.

134 சிறந்த பக்தரான சேவடேவுக்கு வக்கீல் பரீட்சையில் அருள் செய்ததும், நம்பிக்கையற்ற சக மாணவர் ஸபட்ணேகருக்கும் பிற்காலத்தில் கிருபைசெய்ததும், நாற்பத்தெட்டாவது அத்தியாயத்தின் விஷயம்.

135 குதர்க்க புத்தியுடன் ஸாயீயைப் பரிசோதிப்பதற்காகவே சிர்டீக்கு வந்த பம்பாய்வாசி ஹரி கானோபா மற்றும் ஸோமதேவ சுவாமி ஆகிய இருவரின் காதைகளை விவரிக்கிறது நாற்பத்தொன்பதாவது அத்தியாயம்.

136 தரிசனம் செய்தபோதே அவர்களுடைய எண்ணவோட்டத்தை அறிந்து அவர்களை வெட்கப்படும்படி செய்து, ஜன்மாந்தர பாவங்களை அழித்துத் தம்முடைய சேவடிகளுக்கு இழுத்துக்கொண்டார் ஸாயீ.

137 மேலும், ஒரு பெண்மணியின் அழகைக் கண்டு மனவிகாரம் அடைந்த சாந்தோர்கரின் எண்ணத்தைப் படித்து போதனையளித்த விவரமும் இதே அத்தியாயத்தில்.

138 ஐம்பதாவது அத்தியாயத்தில், முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் மூலக்கருத்திற்கு விஸ்தாரமாக வியாக்கியானம் செய்து செழுமைப்படுத்தியிருக்கிறார் ரகுநாதரின் மைந்தரான கோவிந்த தாபோல்கர்.

139 ஹரி ஸீதாராம் தீக்ஷிதர், பாலாராம் துரந்தர், நாந்தேட் வக்கீல் புண்டலீக ராவ் ஆகிய மூவர் சிர்டீக்கு முதன்முறையாக வந்த விவரங்களை ஐம்பத்தொன்றாவது அத்தியாயம் அளிக்கிறது.

140 ஒவ்வொன்றும் ஓர் அற்புதமான காதை. கேட்பவர்கள் வியப்படைவர்; அவர்களுடைய இதயத்தில் பக்திக்கடல் பொங்கும்.

141 தம்மைக் கருவியாகக் கொண்டு இந்தக் காவியத்தை எழுதிவாங்கிய ஸாயீயின் அருட்பெருக்கையும் அற்புதத்தையும் போற்றியபின், பஸாயதானம்1 வேண்டுகிறார் தாபோல்கர். பாராயணம் செய்யும் முறையையும் பலனையும் எடுத்துச் சொல்கிறார்.

142 காவியத்தை நிறைவுபெறச் செய்து ஸத்குருவின் பாதங்களில் தஞ்சமடைந்து தம்முடைய பேனாவையும் தம்மையும் அர்ப்பணம் செய்து, தாபோல்கர் பேறுபெற்றவர் ஆவது ஐம்பத்திரண்டாவது அத்தியாயம்.

143 இவ்வாறாக, கோவிந்த ராயர் (ஹேமாட் பந்த்) ஸ்ரீ ஸாயீ ஸத் சரித்திரத்தின் அத்தியாயங்களை முடிக்கிறார். பிரேமையுடன் அவருடைய பாதங்களில் வணங்குவதன் மூலம் உலகமாதாவான ஸத்குருவை வணங்குகிறேன்.

144 ஒவ்வொரு அத்தியாயமாக சாரத்தை எடுத்துரைப்பது பொருளடக்கம். முமுக்ஷுகளுக்கு (வீடுபேற்றில் நாட்டமுடையவர்களுக்கு) மோட்சபுரிக்குச் செல்லும் பாதை இது.

145 பொருளடக்கத்தை ஓர் அழகிய சால்வையின் ஜரிகைக் கரையாகக் கருதலாம்; அல்லது கந்தல் துணியாகவும் கருதலாம். எது எப்படி இருப்பினும், கல்விமான்களாகிய கதைகேட்பவர்கள், தாசனாகிய நான் சொல்வதை ஒருமுறையாவது கேட்கவேண்டும்.

146 இந்தக் காவியம் ஒரு சால்வை அன்று. இது ஒரு கொழுகொழுவென்றிருக்கும் அழகிய குழந்தை. அக் குழந்தைக்கு ஸாயீயின் பாலனும் பாலகிருஷ்ண விச்வநாத தேவுமாகிய யான், கண்ணேறு தோஷம் வாராம­ருக்க, தைரியமாகப் பொருளடக்கம் என்னும் கறுப்புப் பொட்டு இட்டிருக்கிறேன்.

147 இக் காவியம் ஓர் அறுசுவை விருந்து. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பதார்த்தம். இப் பொருளடக்கம் அத்தனைப் பண்டங்களையும் ஜீரணிக்க உதவும் மோர்.

148 இக் காவியம் பல அத்தியாயங்களை அழகிய உறுப்புகளாகக் கொண்ட, எக்காலத்தும் பலன் அளிக்கக்கூடிய காமதேனு. இதற்குக் கண்ணேறு வாராமல் தடுக்கப் போடப்பட்ட கருகுமணிமாலை இப் பொருளடக்கம்.

149 ஆகவே, இப்பொழுது ஹேமாட் பந்த் அனுசரித்த அத்தியாய நியமனத்தை என் மனத்து உதித்தவாறு விவரிக்கிறேன். கவனத்துடன் கேட்பீர்களாக.

150 ஆரம்பம் ஸத்குருவைப் போற்றுதல். பின்னர் வேதாந்த நிரூபணம். அதன் பிறகு, பிரம்ம சொரூபமாகிய ஸாயீ வர்ணனை. இதைத் தொடர்ந்து பக்தர்களின் அனுபவங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

151 அடிப்படையாக ஹேமாட் பந்த் ஒரு விற்பன்னர். அத்துடன் சேர்ந்து ஸத்குரு அவருக்கு இன்முகம் காட்டினார். அக் கணத்திலேயே அவருக்கு இக் காவியத்தைச் சமைக்கத் தேவைப்பட்ட, புதிது புதிதாய்ப் பொருளை ஆராய்ந்து அறியும் பேரறிவு உதயமாகியது.

152 இந் நூ­ன் இனிமையை எவர் அனுபவிக்கிறாரோ, அவருடைய ஜனனமரணச் சுழல் அழியும். அவர் என்றும் அழியாத வீடுபேற்றைப் பெறுவார்.

153 ஹேமாட் பந்தின் சொல்லாட்சி ஸாயீயின் பிரசாதம். பாலும் கருப்பஞ்சாறும் கலந்த பானம் போன்ற இக் காவியத்தின் செய்யுட்சுவை மாட்சிமையை யாரால் வர்ணிக்க இயலும்?

154 எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும், ஒரு ஸத்குருவின் அருளைப் பெறாமல் எவருக்கும் கவிநடையும் சொற்பொ­வும் கைகூடாது. ஸத்குருவே ஸ்ரீ மஹாவிஷ்ணு, இவ்வுலகுக்கு ஆதாரம்.

155 ஒருவர் மெத்தப் படித்த பண்டிதராக இருக்கலாம். ஆயினும், ஸத்குருவின் கிருபையின்றி இம்மாதிரியான காவியத்தை எழுதமுடியாது. இது முக்காலமும் ஸத்தியம்.

156 ஸ்ரீ ஸாயீ ஸத் சரித்திரத்தை யாரால் தகுந்த அளவிற்குப் புகழ முடியும்? இக் காவியத்தின் யோக்கியதை உபமானத்திற்கு அப்பாற்பட்டது அன்றோõ

157 இப் புத்தகம் பூமியில் இருக்கும் வரையில் அவருடைய கீர்த்தியும் நிலைத்திருக்கும். காரணம், கோவிந்த ராயர் (ஹேமாட் பந்த்) சரியான காலத்தில், வீடுபேற்றில் நாட்டமுடையவர்களுக்கு ஒளியேற்றி வைத்திருக்கிறார்.

158 ஸத்குருவின் பிரசாதமாகப் பிறந்த இக் காவியம் பேறுபெற்றது, பேறுபெற்றதுõ முமுக்ஷுகள் இதை ஏற்றுக்கொள்வர்; விசாரமற்றுப்போவர்.

159 அனந்த ஜன்மங்களில் செய்த சுகிர்தங்களின் (நற்செயல்களின்) வன்மையால் கோவிந்த ராவுக்கு ஸாயீஸேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது. மதுரமான இந்த நூலை எழுதினார்.

160 ஹேமாட் பந்த் ஒரு சிறந்த பக்தர்; கவி; வேதாந்தம் கற்பதில் பேராவல் காட்டியவர்; ஸத்குருவின் பாதங்களில் அல்லும்பகலும் பேரன்பு செலுத்தியவர்.

161 வேதாந்த விஷயம் வானளாவியது. குருவின் அருளின்றி, விரக்தியையும் பக்தியையும் ஞானத்தையும் அளிக்கும் இதுபோன்ற காவியத்தை நிர்மாணிக்கமுடியாது.

162 இவை அத்தியாயங்கள் அல்ல. ஒவ்வொன்றும் ஒரு பொற்பேழை. ஒவ்வொன்றிலும் விலைமதிக்கமுடியாத கதைகளாகிய ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றி­ருந்து அர்த்தமாகிய ஒளிக்கிரணங்கள் வீசுகின்றன. பெருமுயற்சி செய்து கோவிந்த ராவ் இவற்றைச் செய்திருக்கிறார்.

163 நானாவிதமான அத்தியாயங்கள், கோவிந்த ராவ் என்னும் அன்புள்ள பாலன் நிர்மலமான பா(ஆஏஅ)வத்துடன் தொடுத்து, ஸத்குருவின் கழுத்தில் அணிவித்த நறுமணம்வீசும் மலர்களாலான மாலைகள்.

164 இந்த அத்தியாயங்கள் சுத்தமான பொற்குடங்கள். ரகுநாதரின் மகன் இக் குடங்களில் முமுக்ஷுகளின் கவலையை அழிக்கும் சக்திபெற்ற புனித கங்கைநீரை நிரப்பியிருக்கிறார்.

165 இக் காவியம் என்னும் போர்க்களத்தில், டம்பம், செருக்கு, பற்று ஆகிய அசுரர்களை ரகுநாத மைந்தனின் கூரிய புத்தியாகிய வாள், வெட்டி வீழ்த்தி வெற்றித்தூண்களை அத்தியாயங்களாக நாட்டியிருக்கிறது.

166 இந் நூல் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட பஞ்சாரதி (ஐந்து திரிகளை உடைய ஆரதி விளக்கு). கதைகளின் அர்த்தம் திரிகளின் ஜோதியாக ஒளிர்கிறது. பற்றின்மையும் சாந்தியும், ஞானிகளின் அரசரின் முன்னிலையில் ஆரதியைச் சுழற்றுவதற்கு வருகின்றன.

167 கதைகளின் அர்த்தமாகிய தோள்வளைகளைப் பூண்டு, கைகளை உயரமாகத் தூக்கிக்கொண்டு, பிரம்மமாகிய ஸாயீயை ஆவலுடன் அணைக்க வரும் ஜகன்மோஹினியான மாயை இக் காவியம்.

168 'ஸாயீ ஸத் சரித்திரம்ஃ காவியங்களின் சக்கரவர்த்தி. சிரத்தை, ஞானம், வேதாந்த விஷயங்கள் ஆகியனவற்றின் புகழ்பாடும் அரசவைப் புலவர்களும் பாடகர்களும் இதன் அத்தியாயங்கள்.

169 ஸாயீ ஸத் சரித்திரம் ஓர் ஆன்மீகச் சந்தை. இதில் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு கடை. கவி, அனுபவக் காதைகளாகிய பொருள்களைக் கடைவிரித்திருக்கிறார்.

170 இக் காவியம் பரந்து விரிந்து நீண்ட கங்கை நதி. இதில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு படித்துறை. குருவின் கிருபையால் விளைந்த சக்தியால், கதைகள் அமிருதப் பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

171 இது ஒரு புத்தகம் அன்று. இது கற்பகவிருக்ஷமாகும். சம்சாரத்தில் உழலும் ஜனங்களுக்கு சாரமற்றதாகத் தோன்றலாம். முமுக்ஷுகளுக்கோ1 இது மோட்சமேயாகும். நீங்கள் பிரத்யக்ஷமாக (நேரிடையாக) அனுபவியுங்கள்õ

172 இக் காவியம் உலகியல் வாழ்வின் அஞ்ஞானத்தையும் துக்கத்தையும் அழித்து, மோகத்தினின்றும் மாயையினின்றும் நம்மை விடுவித்து, என்றும் அழியாத சாந்தியை அளிக்கும் மணிமண்டபம் என்று நான் கூறுவேன்.

173 நூலாசிரியராகிய கோவிந்த ராவ், ஸாயீ ஸத்குருவின் பாதகமலங்களில் ஊற்றெடுத்த, என்றும் புதியதான மகரந்தத் தேனைச் சுவைக்கும் பொருட்டுத் தேனுண்ணும் வண்டாக மாறினார்.

174 கோவிந்த ராயரின் குடும்பப் பெயர் தாபோல்கர். அவர் வித்தையும் விநயமும் ஆசாரமும் படைத்தவராக இருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொறுப்புள்ள அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றினார்.

175 அவர் மனைவி ரகுமாயீ நல்லொழுக்கமுடையவர்; பக்தர்; நற்குணங்களுடையவர்; கணவனைத் தொழுபவர்; விநயமான சொல்லுடையவர்; ஸாயீபாதங்களில் திடமாக சரணடைந்தவர்.

176 கவியின் முன்னோர்கள் வெங்குர்லாவுக்கு அருகி­ருக்கும் 'தாபோ­ஃ என்னும் கிராமத்தில் வசித்தவர்கள். பின்னர் 'கேள்வாஃ என்னும் கிராமத்திற்குக் குடிபெயர்ந்தனர்.

177 புண்ணியசா­யான கோவிந்த ராவ், 18591 ஆம் ஆண்டு மார்கழி மாதத்து சுக்கில பக்ஷ பஞ்சமியன்று ரகுநாதரின் மனைவி லக்ஷ்மிபாயீயின் வயிற்றில் உதித்தார்.

178 கௌட ஸாரஸ்வத பிராமண குலத்தில் பாரத்வாஜ கோத்திரத்தில் உதித்த ஹேமாட், 1929 ஆம் ஆண்டு ஆடிமாத சுக்கில நவமியன்று ஸாயீபதம் சேர்ந்தார்.

179 அவர் 1922 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் இக் காவியத்தை எழுத ஆரம்பித்தார். 52 ஆவது அத்தியாயத்தை 1929 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் எழுதி முடித்தார்.

180 கோவிந்த ராவுக்கு ஒரு மகனும் ஐந்து மகள்களும் பிறந்தனர். மகள்கள் நால்வருக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. டாக்டர் படிப்பு படித்துவருகிறார்.

181 இப்பொழுது நான் பாராயண பத்ததியை விவரிக்கிறேன். சுலபமாக ஸப்தாஹ பாராயணம் செய்யும் முறையையும் விவரிக்கிறேன். இவ்வழி, குருசரித்திரம் போன்ற நூல்களில் அளிக்கப்பட்டுள்ளது. கேட்பவர்கள் கவனமாகக் கேளுங்கள்.

182 இதயத்தைத் தூய்மையாக்கிக்கொண்டு பக்தி பா(ஆஏஅ)வத்துடன் பாராயணம் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் பாராயணத்தை நிறைவுசெய்யுங்கள். ஸாயீ நாராயணர் மகிழ்ச்சியடைவார்.

183 அல்லது, ஸப்தாஹம் வாசித்துப் புண்ணியம் சம்பாதியுங்கள். ஸாயீ உங்களுடைய மிகப் பிரியமான விருப்பத்தை நிறைவேற்றிவைப்பார்; பிறவி பயமும் ஒழியும்õ

184 ஸப்தாஹத்தை ஒரு வியாழக்கிழமையன்று ஆரம்பம் செய்யவும். விடியற்காலையில் ஸ்நானம் செய்தபின் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டுப் பாராயணத்திற்கு உட்காரவும்.

185 ரம்மியமானதும் விஸ்தீர்ணமானதுமான ஒரு மண்டபத்தை நிர்மாணம் செய்யவும். அதை வாழைக்கன்றுகள் கட்டியும், பூவாழை (கல்வாழை) இலைகள், பூக்கள், பட்டு வஸ்திரங்கள் இவற்றை உபயோகப்படுத்தியும் அலங்காரம் செய்யவும்.

186 மண்டபத்தினுள்ளே ஓர் உயரமான ஆசனத்தை வைக்கவும். மண்டபத்தைச் சுற்றி வெவ்வேறுவிதமான வண்ணவண்ணக் கோலங்களைப் போடவும்.

187 ஸத்குருவின் உருவச் சிலை ஒன்றையோ அல்லது அழகிய புகைப்படத்தையோ உயரமான ஆசனத்தின்மேல் ஸ்தாபனம் செய்யவும். பிரேம பா(ஆஏஅ)வத்துடன் வந்தனம் செய்யவும்.

188 ஸ்ரீ ஸாயீ ஸத் சரித்திரம் புத்தகத்தைச் சீனத்துப்பட்டினால் சுற்றி, ஸத்குருவின் முன்னே வைக்கவும். படத்திற்கும் புத்தகத்திற்கும் பஞ்சோபசார பூஜை செய்தபின் பாராயணத்தை ஆரம்பிக்கவும்.

189 அடுத்த எட்டு நாள்களுக்கு விரதம் அனுசரிக்கவும். பால், பழம், வறுத்த தானியம் இவற்றை மட்டும் புசிக்கவும்; அல்லது, தினமும் ஒருமுறை மட்டும், பக­லோ இரவிலோ உணவருந்தவும்.

190 கிழக்கு நோக்கி அமர்ந்து, ஸத்குருவின் உருவத்தை மனத்திரைக்குக் கொண்டுவரவும். அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பிய மனத்துடன் ஸத் சரித்திரத்தை வாசிக்கவும்.

191 8, 8, 7, 8, 6, 8, 7 என்கிற கிரமத்தில் அத்தியாயங்களைப் பிரித்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏழு நாள்கள் பாராயணம் செய்யவும். பொருளடக்கத்தை எட்டாவது நாளுக்கு விட்டுவிடவும்,

192 எட்டாவது நாளில் ஸப்தாஹ பாராயணத்தை முடித்து, ஸாயீநாராயணனுக்கு நிவேதனம் செய்யவும். பிராமணர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போஜனம் செய்விக்கவும். சக்திக்கேற்றவாறு பிராமணர்களுக்கு தக்ஷிணை அளிக்கவும்.

193 வைதிக பிராமணர்களை அழைத்து, இரவில் வேதகோஷம் செய்யவையுங்கள். சர்க்கரை கலந்த பாலையும் சம்பாவனையையும் (வெகுமானத்தையும்) அளித்து அவர்களைத் திருப்திசெய்யுங்கள்.

194 முடிவாக, ஸத்குருவின் பாதங்களில் வணங்கி உசிதமான தக்ஷிணையை அர்ப்பணம் செய்யுங்கள். இந்தப் பணம் சிர்டீ ஸமஸ்தானத்தின் நிதியை வளர்க்கும் பொருட்டு ஸமஸ்தானத்தின் பொருளாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.

195 இவ்வாறு செய்தால், ஸாயீபகவான் மகிழ்ச்சியடைந்து பக்தர்களுக்கு 'பஸாயதானம்ஃ வழங்குவார்; பிறவி பயம் என்னும் பாம்பை அழிப்பார்; மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.

196 கதைகேட்பவர்களேõ நீங்கள் சாந்திக்கும் சந்தோஷத்திற்கும் இருப்பிடமானவர்கள். இப் பொருளடக்கத்தைப் படியுங்கள், அல்லது விசிறியடியுங்கள். ஆனால், இந்தக் காவியத்தின் முக்கியத்துவத்தை மனத்தில் இருத்துமாறு இவ்வடிமை உங்களுடைய பாதங்களில் வேண்டுகிறேன்.

197 நற்குணவான்களாகிய கதைகேட்பவர்களேõ நீங்கள் காலனுக்குக் காலன். பாபாவின் பாலனாகிய தாசன் எனக்கு தயை செய்யும்படி உங்களுடைய பாதங்களில் விழுந்து வேண்டுகிறேன்.

198 இப் பொருளடக்கத்தில் குறைகள் ஏதாவது இருந்தால் அவை என்னுடையவை. அவற்றை என்னிடம் கொடுத்துவிட்டு, சாரத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு மனம் மகிழுங்கள். இவ்வாறு நான் கதைகேட்பவர்களை வேண்டுகிறேன்.

199 ஸாயீ சிவநந்தனனுக்கு (பிள்ளையாருக்கு) நமஸ்காரம். ஸாயீ பிரம்ம தேவனுக்கு நமஸ்காரம். ஸாயீ மதுசூதனனுக்கு நமஸ்காரம். ஐந்து முகங்கள் கொண்ட ஸாயீ சங்கரனுக்கு நமஸ்காரம்.

200 அத்ரி நந்தனராகிய ஸாயீ தத்தாத்ரேயருக்கு நமஸ்காரம். ஸாயீ இந்திரனுக்கு நமஸ்காரம். இரவை மகிழ்விக்கும் ஸாயீ சந்திரனுக்கு நமஸ்காரம். ஸாயீ அக்னி நாராயணனுக்கு நமஸ்காரம்.

201 ருக்மிணி வரித்த ஸாயீ விட்டலுக்கு நமஸ்காரம். சித்தத்திற்கு ஒளியூட்டும் ஸாயீ பாஸ்கரனுக்கு நமஸ்காரம். ஞானசாகரமான ஸாயீக்கு நமஸ்காரம். ஞானேச்வரராகிய ஸாயீக்கு நமஸ்காரம்.

202 இப் பொருளடக்கம், வாக்கால் செய்த ஒரு புஷ்பாஞ்ஜ­. அவ்வாறே மேற்கண்ட நாமாவளியும். ஸாயீமாதா சந்தோஷமடைய வேண்டும் என்னும் பிரார்த்தனையுடன் இவற்றை குருவின் பாதத்தாமரைகளில் அர்ப்பணம் செய்கிறேன்.

ஸ்ரீஸாயீ ஸத்குருவால் உணர்வூட்டப்பட்டு, பாபாவின் தாசனான பாலகிருஷ்ண விச்வநாத தேவால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தின் 'பொருளடக்கம்ஃ என்னும் ஐம்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.Share :
Get it on Google Play