Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 47


47. பாம்பும் தவளையும்
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜன்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான ஸாயீயின் முகம் புனிதமானது.

2 ஸாயீயின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களி­ருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றிப் பெறுகின்றனர்.

3 எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ, அவருடைய அருளெனும் சூரியவொளியில் உலகியல் வாழ்வெனும் மின்மினிப்பூச்சி ஒளியிழந்துபோய்க் காணாமற்போகிறது.

4 உலகமக்களின் பாவங்களையெல்லாம் கங்கைநதி கழுவித் தள்ளுகிறாள். இச் செய்கையால் தானே மாசடைகிறாள். தன்னை அந்த அசுத்தத்தி­ருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, சாதுக்களின் பாததூளிக்காக (அடிப்பொடிக்காக) கங்கை ஏங்குகிறாள்.

5 'ஓ, எப்பொழுது சாதுக்கள் என்னுடைய கரையில் திருவடி பதிப்பார்கள்? எப்பொழுது அவர்கள் என்னுடைய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வார்கள்?ஃ என்று கங்கை ஏங்குகிறாள். அவ்வாறு நடைபெறாவிட்டால், தன்னுடைய பாவங்கள் விலக வழியில்லாமல் போகும் என்பதை அவள் நிச்சயமாக அறிவாள்.

6 சான்றோர்களே, அதுமாதிரியான சாதுக்களில் மகுடமணியான ஸமர்த்த ஸாயீயின் திருவாய்மொழி இது என்பதை நன்கு அறிந்து, தூய்மையளிக்கும் இக் கதையை மிகுந்த பயபக்தியுடன் கேளுங்கள்.

7 இக் கதையின் மஹத்துவம் என்னவென்றால், கேட்பவர் ஞானியாக இருப்பினும், அஞ்ஞானியாக இருப்பினும், கேட்பவரின் கர்மபந்தங்களை அறுத்து வீழ்த்தும் பரம பாவனமான (தூய்மையளிக்கும்) கதை இது

8 எல்லாருடைய கண்களின் ஒளியும் எல்லாருடைய காதுகளின் ஒ­யுமான ஸாயீ, தாமே என்னுடைய இதயத்துள் புகுந்துகொண்டு இக் கதையைச் சொல்கிறார்.

9 மஹானுபாவரான ஸாயீ, அவரே சொல்லும் கதையின் அற்புதத்தைக் கேட்டுக் கதை கேட்பவர்கள் மெய்ம்மறந்து போவார்கள். அன்பால் விளையும் அஷ்டபா(ஆஏஅ)வம்1 அவர்களை ஆட்கொள்ளும்

10 இக் கதை ஸாயீயின் நேரிடைத் திருவாய்மொழி. இதனுடைய தாத்பரியத்தின்மீது (உட்கருத்தின்மீது) கண்வைத்து நுண்பொருள் உணர்பவர் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவர் ஆவார்.

11 கதைகேட்பவர்களே, என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பீர்களாக. நான்தான் இக் கதையைச் சொல்லுபவன். ஆயினும், நான் சாரமறிந்து ஈடுபாட்டுடன் சொல்லாவிட்டால், நானும் உங்களுக்குச் சமானமாகிவிடுவேன் (கதை சொல்லும் தகுதியை இழந்துவிடுவேன்).

12 பக்தர்களின்பால் ஸாயீ வைத்திருந்த பிரேமையை ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது, மனம் தன்னுடைய இயல்பை மறந்துவிடுகிறது. உலகவாழ்க்கையின் நடுக்கம் மறைந்து, சாந்தி பிறக்கிறது. இதைவிடப் பெரிய லாபம் ஏதும் உண்டோ?

13 கதைகேட்பவர்களே, முன்பு சொன்ன கதைக்கும் இந்தக் கதைக்கும் உண்டான தொடர்பைக் கவனத்துடன் கேளுங்கள். மனம் சிதறாமல் கேட்டால், உங்களுடைய ஜீவன் திருப்தியடையும்.

14 கடந்த அத்தியாயத்தின் முடிவில் ஆடுகளின் கதையைக் கேட்டீர்கள். பாபாவுக்கு ஆடுகளின்மீது ஏற்பட்ட பிரீதிபற்றியும், அவற்றின் பூர்வஜன்ம வரலாறு அவருக்கு ஞாபகம் வந்த விவரத்தையும் கேட்டீர்கள்.

15 அந்தக் கதையைப் போலவே, பணத்தாசை எவ்வாறு மனிதனை பரம அவஸ்தைக்குள்ளாக்கி அதலபாதாளத்தில் வீழ்த்துகிறது என்பதை விளக்கும் இந்தக் கதையையும் கவனத்துடன் கேளுங்கள்.

16 ஸாயீயே பூரணமான அருள்நோக்குடன் ஒன்றன்பின் ஒன்றாக எந்தக் கதையைச் சொல்லவேண்டுமென்று சூசகமாகத் தெரிவித்துக் கதை கேட்பதில் தடங்கல் ஏதும் வாராமல் செய்கிறார். இதனால், கேட்பவர்களின் சுகமும் திருப்தியும் அதிகமாகின்றன அல்லவோ?

17 கதையும் கதையைச் சொல்லுபவரும் விவரணமும் ஸாயீயாக இருக்கும்போது, இந்த ஹேமாட் பந்துக்கு இங்கென்ன வேலை? அது வெறும் புனைபெயர் அன்றோ

18 ஸாயீகதை என்னும் சமுத்திரக்கரையில் உட்கார்ந்திருக்கும் நாம், கதைகளுக்காகக் கல்லுடைத்துக் கஷ்டப்பட வேண்டுமா என்ன? கற்பகவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பவரின் ஆசை, உதித்தகணமே நிறைவேறும் அன்றோ

19 சூரியனின் இல்லத்தில் விளக்கைப்பற்றி எவராவது கவலைப்படுவாரா? நிரந்தரமாக தேவாமிர்தத்தை அருந்திக்கொண் டிருப்பவருடைய மனத்தில் விஷத்தைப்பற்றிய எண்ண அலைகள் எழுமா?

20 ஸாயீயைப் போன்ற தெய்வம் நம்மை என்றும் காத்து அருள் செய்யும்போது, அமிர்தம் போன்று இனிக்கும் கதைகளுக்கு நமக்கென்ன பஞ்சம்? உங்கள் இதயம் திருப்தியடையும்வரை கதைகளை ருசித்து அருந்துங்கள்.

21 கர்மவினையின் சூத்திரம் ஆகாயத்தைப் போலப் பெரியது. அதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மஹா பண்டிதர்களும் இந்த விஷயத்தில் ஏமாற்றமடைகின்றனர். பா(ஆஏஅ)வமுள்ள பக்தர்களோ, அதிகம் படிக்காதவர்களாயினும் காப்பாற்றப்படுகின்றனர்.

22 அதுபோலவே, இறைவனின் நியமத்தைத் தாண்டுவது இயலாத காரியம். அதனுடைய கிரமத்தை எவரால் மீறமுடியும்? ஆகையால், உலகியல் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தருமநெறிகளின்படி ஒழுகி, எப்பொழுதும் கடமைகளைச் செவ்வனே செய்யுங்கள்.

23 அவ்வாறு செய்யாமல் அதருமநெறியில் வாழ்பவன், மரணத்திற்குப் பிறகு, தான் என்னென்ன தீவினைகளைச் செய்தானோ, அவற்றுக்கேற்றவாறு அடுத்த ஜன்மம் எடுக்கிறான்.

24 மரணத்திற்குப் பிறகு, தன்னுடைய கர்மவினைகளுக்கும் கேள்விஞானத்திற்கும் ஏற்றவாறு சுக்கிலபீஜமாக (விந்தாக) மாறி, யோனித்துவாரத்திற்குள் அவன் பிரவேசிக்கிறான். மறுபடியும் மனிதஜன்மம் எடுக்கிறான். வேறொருவன், அதே சட்டத்தின்படி ஸ்தாவர (நகரமுடியாத பொருளாக) ஜன்மம் எடுக்கிறான்.

25 'கடைசி பிரக்ஞை எப்படியோ அப்படியே மறுபிறப்புஃ என்னும் வேதவசனத்தின் பொருளை அறியாதவர் யார்? இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமென்று விரும்புபவர், அவர் ஆசைப்படும் பிறவியைப் பெறவேண்டாமா?

26 இன்னுமொரு சரீரமும் எடுக்கவேண்டுமென்று ஆர்வம் கொள்ளும் அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மூடர்கள், அவர்கள் சம்பாதித்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்றவாறுதான் அடுத்த சரீரம் கிடைக்கும் என்பதை நன்கு அறியவேண்டும்.

27 ஆகையால், விலைமதிப்பற்ற மனிதஜன்மம் எடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தேஹம் கீழே விழுவதற்கு முன்னதாகவே ஆத்மஞானம் பெறுபவனை உண்மையிலேயே விவேகமுள்ளவன் என்று சொல்லுவேன்.

28 அவனே சம்சார பந்தத்தி­ருந்து விடுதலையடைகிறான். மற்றவர்கள் வாழ்க்கைச் சுழ­ல் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களால் இன்னுமொரு பிறவி எடுப்பதைத் தவிர்க்கமுடியாது. மறுபிறவியின் யாதனைகளையும் தடுக்கமுடியாது.

29 இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால், 'இந்த உடல்தான் நான்ஃ என்னும் தீய இயல்பு கீழே அமிழ்த்தப்பட்டு சாத்துவிகமான அஷ்டபா(ஆஏஅ)வம் எழுப்பப்படும்.

30 கோடிகோடியாய்ப் பணத்தை வைத்துக்கொண்டு சுபாவத்தில் கடுங்கஞ்சனாக வாழ்பவனின் ஜீவன் பரிதாபத்திற்குரியது. மரணபரியந்தம் (மரணமடையும்வரை) அவன் அலுப்பையும் ச­ப்பையுமே அனுபவிப்பான்.

31 மேலும், விரோதத்தை வளர்ப்பது எக்காலத்தும் நன்றன்று. விரோதம் தோன்ற முயலும்போது, உன் மனத்தால் அதை அடக்கு. அடக்காவிட்டால், அது உன் வாழ்வையே நாசம் செய்துவிடும்.

32 பரஸ்பர விரோதம் உத்தமமான ஜன்மத்தி­ருந்து இழிவான ஜன்மத்துக்கு இழுத்துச் செல்லும். கடன், விரோதம், கொலை இவற்றின் விளைவுகள், ஒரு மனிதனை ஜன்மத்தை அடுத்து ஜன்மமாக, வினை தீரும்வரை தொடரும்.

33 இது சம்பந்தமாக, ஸாயீயின் திருவாய்மொழியாக வெளிவந்த அமிர்தவாணியும் தூய்மையை அளிக்கக்கூடியதுமான ஒரு கதையைப் பயபக்தியுடன் சொல்லுகிறேன். கேட்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

34 அக் கதை நான் கேட்டவாறே என் மனத்தில் பதிந்திருக்கிறது. அதை ஸாயீமாதாவின் கூற்றாகவே விவரிக்கிறேன்.

35 ஸாயீயே தம்முடைய கதைக்குச் சரித்திரகாரர். கதையை விஸ்தாரமாக அவரே எழுதவைக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே; சூத்ரதாரி அவரே

36 ஒரு நாள் காலை எட்டு மணி அளவில், என்னுடைய வழக்கமான காலைச் சிற்றுண்டியை முடித்தபின் நான் வெளியே உலாவச் சென்றேன்.

37 வழி நடந்து, நடந்து களைத்துப்போனேன். ஆகவே ஒரு நதியின் கரையை அடைந்தபோது, பாதங்களைக் கழுவியபின் ஸ்நானம் செய்தேன்; புத்துணர்ச்சி பெற்றேன்.

38 அந்த நதியும் ராஹாதாவுக்கு அருகிலுள்ள நதியளவிற்குப் பெரியது. வெள்ளம் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடிக்கொண் டிருந்தது. இருமருங்கிலும் தருப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து மண்டிக்கிடந்தது.

39 அங்கு ஓர் ஒற்றையடிப்பாதையும் தெளிவாகத் தெரிந்த வண்டிப்பாதையும் இருந்தன. ஆற்றங்கரையில் பல மரங்கள் ஓங்கிப் பருத்து வளர்ந்திருந்தன. அவற்றின் நிழலும் உன்னதமாக இருந்தது.

40 மெல்­ய பூங்காற்று வீசி மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காடு போன்று வளர்ந்திருந்த மரங்களைக் கண்டு நான் நிழ­ல் நிம்மதியாக உட்கார்ந்தேன்.

41 புகைகுடிக்கச் சிலீமை நிரப்பவேண்டும். 'சாபியைஃ1 நீரில் நனைப்பதற்காகத் துறைக்குச் சென்றேன். அப்பொழுது ''க்ரோக், க்ரோக்ஃஃ என்ற சத்தம் கேட்டது. அது ஒரு தவளை எழுப்பும் ஒ­ என்று நான் நினைத்தேன்.

42 அதில் என்ன ஆச்சரியம்? தண்ணீர் இருக்குமிடத்தில் தவளையும் இருப்பது இயற்கையன்றோ? சாபியை நனைத்தபின் நான் திரும்பி வந்து சிக்கிமுக்கிக்கல்லைக் கையிலெடுத்தேன்.

43 சிக்கிமுக்கிக்கல் நெருப்புப்பொறி தந்தது. சிலீம் பற்றிக்கொண்டு தயாராகியது. அந்த சமயத்தில் அங்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். எனக்கு வணக்கம் செலுத்திவிட்டு என்னருகில் அமர்ந்தார்.

44 மிகுந்த பணிவுடன் சிலீமைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டு கூறினார், ''நீங்கள் நெடுந்தூரம் வந்திருக்கிறீர்கள்--

45 ''மசூதி வெகுதொலைவில் இருக்கிறது. நீங்கள் திரும்பிப் போவதற்குள் கடுமையான வெப்பமாகிவிடும். என்னுடைய வீடு அருகில்தான் இருக்கிறது. சிலீம் பிடித்துவிட்டு அங்கே செல்வோம்.--

46 ''தாங்கள் என்னுடைய இல்லத்திலேயே கொஞ்சம் சோளரொட்டி உண்ணலாம். பின்னர்ச் சிறிது ஓய்வெடுக்கலாம். வெயில் தாழ்ந்தபின் சௌகரியமாகத் திரும்பிச் செல்லலாம்.--

47 ''திரும்புகா­ல் நானும் உங்களுடன் வருகிறேன்.ஃஃ இவ்வாறு என்னிடம் பேசியபின் அந்த வழிப்போக்கர் சிலீமைத் தயார்செய்து, பயபக்தியுடன் என்னிடம் புகைகுடிக்கக் கொடுத்தார்.

48 அங்கோ, தவளை பரிதாபகரமான குர­ல் கதற ஆரம்பித்தது. ஆகவே, அந்த வழிப்போக்கர் என்னை வினவினார், ''யார் இப்படி அலறுவது?ஃஃ

49 அவருக்கு நான் பதில் சொன்னேன், ''ஒரு தவளை நதிக்கரை அருகில் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அவனுடைய கர்மவினை அவனைத் துரத்துகிறது. நான் உமக்குச் சொல்லப்போகும் கதையைக் கேளும்.ஃஃ

50 போன ஜன்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜன்மத்தில் அனுபவி. கர்மவினையின் விளைவுகளை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். இப்பொழுது அலறுவதால் என்ன பயன்? (தவளைக்கு உபதேசம்)

51 இதைக் கேட்ட வழிப்போக்கர் சிலீமை என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நிதானமாக நடந்தவாறே சொன்னார், ''நான் போய்ப் பார்க்கிறேன்.--

52 ''இவ்விதம் கத்துவது தவளையா அல்லது வேறு ஏதாவது பிராணியா? மனத்தி­ருந்து சந்தேகம் நீங்கவேண்டும். அதற்கு நேர்ந்திருக்கும் ஆபத்து என்னவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.ஃஃ

53 அவருடைய நாட்டம் அதுவே என்று தெரிந்துகொண்ட நான் சொன்னேன், ''நீரே போய்ப் பாரும். பெரிய பாம்பு ஒன்றின் வாயில் பிடிபட்டு ஒரு தவளை
ஓலமிடுகிறது.--

54 ''இருவருமே மஹா கொடியவர்கள். பூர்வஜன்மத்தில் பயங்கர பாவம் செய்தவர்கள். அந்த வினையை அனுபவிக்க இப்பொழுது வேறு சரீரங்களை அடைந்திருக்கின்றனர்.ஃஃ

55 இதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டே அந்த வழிப்போக்கர் அவ்விடத்திற்குச் சென்று அங்கு நடந்துகொண் டிருந்ததை பிரத்யட்சமாகப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் சொன்னார், ''நீங்கள் சொன்ன விவரம் உண்மைதான்.--

56 ''விசாலமான வாய் படைத்த அப் பாம்பு யமனைப் போலத் தோன்றுகிறது. தவளையும் பயமுறுத்தும் தோற்றம் உடையது. ஆயினும், தவளை பாம்புக்கு இரையாகிவிட்டது.--

57 ''இன்னும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள், தவளை பாம்பின் வாய்க்கு ஆஹுதி (அக்கினியில் இடும் படையல்) ஆகிவிடும். என்னே கர்மவினையின் விசித்திரமான வழி சீக்கிரமே அந்தத் தவளை கவலையற்ற நிலையை (மரணம்) அடையும்ஃஃ

58 ஆகவே நான் அவரிடம் கூறினேன், ''ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும் பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.--

59 ''நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.--

60 ''இப்பொழுது, நான் அவர்கள் இருவரையும் பிரித்த பிறகு நீர் உமது வீட்டிற்குச் செல்லும்; நான் என் வசிப்பிடத்திற்குச் செல்கிறேன். போம், போம், சிலீமை மறுபடியும் நிரப்பும். பாம்பு அடுத்ததாக என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடுவோம்ஃஃ

61 சிலீம் உடனே தயார் செய்யப்பட்டது. வழிப்போக்கர் அதைப் பற்றவைத்துத் தாம் ஒரு தடவை புகை உறிஞ்சினார். பின்னர் என்னிடம் அளித்தார். நான் புகைகுடிப்பதற்காகச் சிலீமைக் கையில் வாங்கிக்கொண்டேன்.

62 நான் இரண்டு தடவைகள் புகை உறிஞ்சினேன். பின்னர் வழிப்போக்கரை என்னுடன் அழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தை அடையும்வரை தருப்பைப் புதர்களின் ஊடே புகுந்து நடந்துசென்றேன்.

63 மறுபடியும் பாம்பைப் பார்த்த வழிப்போக்கர் பீதியடைந்தார். ''ஓ, எவ்வளவு பயங்கரமான பிராணிஃஃ என்று சொல்­ வியந்தார். பயமடைந்த அவர், நான் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முயன்றார்.

64 அவர் கூறினார், ''ஆ, தயவுசெய்து இதற்குமேல் போகவேண்டா. அந்தப் பாம்பு நம்மை நோக்கி வரும். இந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருக்கிறது. தப்பித்து ஓடவும் இயலாது. மேற்கொண்டு அடியெடுத்து வைக்கவேண்டா.ஃஃ

65 அந்தக் காட்சியைப் பார்த்த வழிப்போக்கர் மரணபீதி அடைந்தார். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த விரோதபாவம் சம்பந்தமாக அப்பொழுது நான் நிகழ்த்திய உபதேசத்தைக் கேளுங்கள்.

66 ''அடே, அப்பா, வீரபத்ரப்பா, உன் விரோதியான சனபஸப்பா தவளையாகப் பிறந்த பின்னரும் நீ அனுதாபம் (கழிவிரக்கம்) கொள்ளவில்லையா?--

67 ''நீயும் ஒரு பாம்பாகப் பிறந்திருக்கிறாய். இன்னுமா இந்தக் கொலை விரோதம்? இப்பொழுதாவது உன்னுடைய செய்கைகளுக்காக வெட்கப்படு விரோதத்தை விடுத்து சாந்தமாக இருஃஃ

68 என்னுடைய வாயி­ருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பாம்பு சட்டென்று தவளையை விடுவித்தது. சரசரவென்று நழுவியோடித் தண்ணீருக்குள் நுழைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

69 மரணத்தின் வாயி­ருந்து விடுபட்டு எகிறிக் குதித்த தவளை சட்டென்று அங்கிருந்த செடி கொடிகளிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

70 அவர் சொன்னார், ''இது என்னவென்றே எனக்கு விளங்கவில்லை உங்களுடைய வாயி­ருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டவுடன் எப்படி அந்தப் பாம்பு தவளையை விடுவித்தது பாம்பு எப்படி மறைந்துபோயிற்று --

71 ''இவ்விருவரில் யார் வீரபத்ரப்பா? அதுபோலவே, யார் இவ்விருவரில் சனபஸப்பா? இவர்களுடைய விரோதத்துக்குக் காரணம் என்ன? எனக்கு அனைத்து விவரங்களையும் சொல்வீர்களா?ஃஃ

72 ''சரி, சரி; முத­ல் நாம் ஒரு மரத்தடிக்குச் செல்வோம். கொஞ்சம் சிலீம் பிடிப்போம். பிறகு நான் உம்முடைய விஷய ஆர்வத்தைப் பூர்த்திசெய்கிறேன். அதன் பிறகு நான் என்னுடைய வசிப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்.ஃஃ

73 நாங்கள் இருவரும் ஒரு நிழலடர்ந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம். இதமான குளிர்ந்த காற்று வீசிக்கொண் டிருந்தது. மறுபடியும் சிலீம் பற்றவைக்கப்பட்டது.

74 வழிப்போக்கர் முத­ல் புகைகுடித்தார். பிறகு சிலீமை என் கையில் கொடுத்தார். நான் புகைகுடித்துக்கொண்டே அவருக்கு அந்தக் கவர்ச்சியான கதையைச் சொன்னேன்.

75 என்னுடைய இடத்தி­ருந்த ஐந்து அல்லது ஆறு மைல் தூரத்தில் ஒரு மஹிமைவாய்ந்த, பவித்திரமான புண்ணியத்தலம் இருந்தது.

76 அங்கே புராதனமான, பாழடைந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. அதை ஜீரணோத்தாரணம் (பழுதுபார்த்துப் புதுப்பித்தல்) செய்யவேண்டுமென்று எல்லா மக்களும் விரும்பினர்.

77 மக்கள் அதன்பொருட்டு நன்கொடை வசூ­த்தனர். ஒரு பெரிய நிதி வசூலாகியது. நித்திய பூஜை, அர்ச்சனை ஆகிய வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரைபடங்களுடன் முழுமையான திட்டம் தயாரிக்கப்பட்டது.

78 அவ்வூரி­ருந்த ஒரு பெரிய பணக்காரன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டான். முழுப்பணமும் பூரணமான, முடிவெடுக்கும் அதிகாரமும் அவனிடம் அளிக்கப்பட்டன.

79 கோயிலுக்கென்று அவன் தனிக்கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய நன்கொடையைப் பணமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இச் செயல்களை அவன் நேர்மையாகவும் பிழையின்றியும் செய்வான் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

80 ஆனால், அம்மனிதன் இயல்பாகவே ஒரு பெருங்கஞ்சன். எச்சிற்கையால் காக்காய் ஓட்டாதவன். அதே தோரணையில் வேலையை நடத்த முயன்றான். இதன் விளைவாக, வேலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

81 எல்லாப் பணமும் செலவழிந்துவிட்டது. ஆனால், வேலையோ அரைகுறையாகத்தான் முடிந்திருந்தது, தன்னுடைய ஜேபியி­ருந்து எதையும் அவன் செலவழிக்கவில்லை. ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

82 அவன் ஒரு பெரிய லேவாதேவிக்காரன்; ஆயினும், கஞ்சத்தனத்தின் பூரணமான அவதாரம். பேச்சிலோ எப்பொழுதும் இனிமை; ஆனால் வேலை நடக்கவில்லை.

83 ஒரு கட்டத்தில், பணம் வசூ­த்த மக்கள் எல்லாரும் அவனுடைய வீட்டில் கூடினர். ''உமது வட்டிக்கடை வியாபாரத்தால் என்ன பயன்?--

84 ''உமது கையால் பாரம் தூக்காமல், சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி எவ்வாறு நிறைவேறும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே இதைப்பற்றிக் கொஞ்சம் சிந்துத்துப் பாருங்கள்.--

85 ''மக்களை இசையச் செய்து, மறுபடியும் நிதி வசூல் செய்கிறோம். அந்தத் தொகையையும் உம்மிடம் தருகிறோம். ஆனால், நீங்கள் சிவன் கோயில் வேலையை முடித்துக் கொடுக்கவேண்டும்.ஃஃ

86 இவ்வாறாக, மேற்கொண்டும் நிதி திரட்டப்பட்டு நேர்மையான முறையில் கஞ்சனின் கைக்கு வந்துசேர்ந்தது. அப்படியும் ஒரு பயனும் ஏற்படவில்லை. பணக்காரன் ஒன்றும் செய்யாமல் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டான்.

87 இவ்வாறு சில நாள்கள் கழிந்தபின் இறைவனே மனம்வைத்தான். அந்த சமயத்தில் கஞ்சனின் மனைவிக்கு ஒரு சொப்பனக்காட்சி ஏற்பட்டது.

88 ''நீயாவது எழுந்துபோய்க் கோயி­ன் கோபுரத்தைக் கட்டு. நீ செலவழிப்பதைப்போல நூறுமடங்கு நீலகண்டன் (சிவன்) உனக்கு அளிப்பான்.ஃஃ

89 மறுநாள் காலையில், தன் கனவுக்காட்சி விவரங்களை அவள் தன் கணவனின் காதில் போட்டாள். கணவனோ ஒரு பைசா செலவழிப்பதற்கும் உயிரை விடுபவன். ஆகவே, இச் செய்தி அவனைக் கலவரமடையச் செய்தது.

90 இரவுபகலாகப் பணம் பண்ணுவதைத் தவிர வேறு விஷயம் எதைப்பற்றியும் சிந்திக்காதவன், பணம் செலவழிக்கும்படி வந்த சொப்பனச் செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வான்?

91 அவன் தன் மனைவியிடம் சொன்னான், ''நான் இந்தக் கனவுக்காட்சியை நம்பமாட்டேன். இது விஷயமாக எனக்கு அறவே விசுவாசம் இல்லை.ஃஃ மேலும் அவளைப் பரிகாசம் செய்யவும் ஆரம்பித்தான்.

92 ஒருவருடைய மனப்போக்கு எப்படியோ, அப்படியே அவருக்கு உலகம் காட்சியளிக்கிறதன்றோ வஞ்சக இயல்பு உடையவனுக்கு மற்றவர்களும் வஞ்சகர்களாகவே தெரிகின்றனர்

93 ''கடவுள் என்னிடமிருந்துதான் தனம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாரானால், நான் என்ன உன்னிடமிருந்து வெகுதூரத்திலா இருந்தேன்? ஏன் அவர் உனக்கு மட்டும் கனவில் தோன்றினார்?--

94 ''உனக்கு மட்டும் ஏன் கனவுக்காட்சி ஏற்பட்டது? எனக்கு ஏன் கடவுள் காட்சியளிக்கவில்லை? ஆகவே, இது ஏதும் பொருள் பொதிந்ததாக எனக்குத் தெரியவில்லை. கனவுக்காட்சியின் முக்கியத்துவமும் எனக்குப் பிடிபடவில்லை.--

95 ''இந்த சொப்பனம் ஒரு போ­; அல்லது, கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படுத்த விரும்பும் ஒரு தெய்வ எத்தனம். எனக்கு இந்த அறிகுறிதான்
தெரிகிறது.--

96 ''ஜீரணோத்தாரணப் பணியில் என்னுடைய நன்கொடை கம்மியா என்ன? மாதந்தோறும் நாம் நிரப்பிவைக்கும் பணப்பை கா­யாகிவிடுகிறது. --

97 ''மக்கள் ஏராளமான நிதியைக் கொண்டுவருவதுபோல வெளிப்பார்வைக்குத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், இந்தப் பத்ததியில் (முறையில்) கணக்கு வைத்துக்கொள்வது என்பது எனக்குப் பெருநஷ்டம்.--

98 ''ஆயினும், மக்களுக்கே விளங்காததை நீ எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறாய்? ஆகவே, நீ கண்ட சொப்பனக்காட்சியை யதார்த்தமென்று ஏற்றுக்கொள்ள
முடியாது.--

99 ''அதை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், நாம் முற்றும் ஏமாறிப்போவோம். தூக்கம் கெட்டதால் ஏற்பட்ட கனவை யாராவது வாஸ்தவமானதாக ஏற்றுக்கொள்வார்களா?ஃஃ பணக்காரன் கடைசியில் வந்தடைந்த சித்தாந்தம் (முடிந்த முடிவு) இதுவே

100 இதைக் கேட்ட மனைவி பேச்சிழந்துபோனாள். அவளால் கணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் நிதி திரட்டியது என்னவோ உண்மைதான்; ஆயினும், சந்தோஷத்துடன் கொடுத்தவர்கள் மிகச் சிலரே.

101 தெய்வக்குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்மசங்கடத்தி­ருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துணைச் சிறியதானாலும் அதை விலையுயர்ந்த பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான்.

102 எப்போதெல்லாம் நிதி திரட்டப்பட்டதோ அப்போதெல்லாம் வேலை முன்னேறியது. பணம் வருவது நின்றபோது வேலையும் நின்றது. இவ்வாறாக வேலை தாமதமாகிக்கொண்டே போயிற்று.

103 பணக்காரக் கஞ்சன் தன்னுடைய பணப்பையி­ருந்து ஒரு பைசாவும் செலவழிக்க மறுத்த நிலையில், அவன் மனைவிக்கு மறுபடியும் ஒரு கனவுக்காட்சி ஏற்பட்டது. எப்படியென்று சொல்கிறேன்; கேளும்.

104 ''கோயிலுக்காகப் பணம் செலவிடவேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு.--

105 ''உன்னுடைய பணத்தி­ருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்.--

106 ''வீணாகச் ச­ப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதி­ருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.--

107 ''இது விஷயத்தில் பா(ஆஏஅ)வமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடுஃ என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள்.--

108 ''ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை.--

109 ''பா(ஆஏஅ)வம் இல்லாது எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமேதுமின்றி அனுபவபூர்வமாக அறிந்துகொள்வான்.ஃஃ

110 கனவுக்காட்சியில் இந்தச் சொற்களைக் கேட்ட பிறகு, தன் தந்தையால் சீதனமாக அளிக்கப்பட்ட அலங்கார ஆபரணங்களை விற்று, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வது என்று அவள் நிச்சயஞ்செய்துகொண்டாள்.

111 பின்னர்த் தன்னுடைய தீர்மானத்தைக் கணவனிடம் தெரிவித்தாள். கணவன் இந்தத் திட்டத்தைக் கேட்டான். உள்ளுக்குள்ளே பெருங்கலவரமடைந்தான்.

112 பேராசை கோலோச்சுமிடத்தில் விவேகம் எப்படி இருக்கும்? அதுவும் இறைபணிக்குத் தருமம் அளிக்கும் விவேகமா? அவன் மனத்துக்குள் எண்ணினான், 'ஐயோ எவ்வளவு விவேகமற்ற செயல் தவறான நம்பிக்கை கொண்டு முழுக்க ஏமாறிவிட்டாள்.--

113 'அவளுடைய ஆபரணங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஓராயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தபின், ஒரு நிலத்தை அவள் பெயரில் எழுதிவைத்துவிட வேண்டும்.ஃ

114 ஆகவே, மனைவியின் ஆபரணங்களைக் கஞ்சனே விலைக்கு வாங்கினான். கடுமையான உழைப்பால் மேடுபள்ளம் திருத்தப்பட்ட சிறிய நிலம் ஒன்று யாராலோ அவனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. பணத்திற்குப் பதிலாக அந்த நிலத்தைக் கஞ்சன் மனைவிக்குக் கொடுத்தான்.

115 அந்த நிலமும் ஒரு தரிசு; மழை பெய்தாலும் எதுவும் விளையாத நிலம். அவன் மனைவியிடம் சொன்னான், ''இதைப் பினாகபாணிக்கு (சிவனுக்கு) சமர்ப்பணம் செய்.--

116 ''இந்த நிலத்தின் மதிப்பு ஓராயிரம் ரூபாய். உன் கனவுக்காட்சியின்படி இதை நீ கடவுளுக்கு தானம் செய்யலாம். கடவுள் மகிழ்ச்சியடைவார். நீயும் உன் கடனைச் செலுத்தியவளாவாய்.ஃஃ

117 கணவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கஞ்சனின் மனைவி அந்த நிலத்தை சங்கரருக்கு சந்தோஷத்துடன் சமர்ப்பணம் செய்தாள்.

118 உண்மை நிலை என்னவென்றால், அந்த நிலம் டுபகீ என்னும் பெண்மணிக்குச் சொந்தமானது. அவள் இருநூறு ரூபாய் கடனுக்காக அந்த நிலத்தைப் பணக்காரக் கஞ்சனிடம் அடைமானம் வைத்திருந்தாள்.

119 டுபகீ ஓர் அநாதைப் பெண்மணி; நிலம் அவளுடையது. ஆபத்துக் காலத்தில், அந்த நிலத்தையும் பணத்துக்காக அடைமானம் வைக்கவேண்டியதாயிற்று.

120 ஆயினும், பணக்காரனோ ஒரு மஹாலோபி. அவன் சங்கரரையும் ஏமாற்றுவதற்கு பயப்படவில்லை. கபடமான வழியில் மனைவியின் சீதனத்தை ஜேபியில் போட்டுக் கொண்டான். எனினும், லாபமடைந்ததுபற்றி மகிழ்ச்சியடைந்தான்.

121 புலன்களின் வ­ய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட வலையில் மாட்டிக்கொள்ளலாகாது.

122 வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது.

123 புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை. செல்வத்தைத் தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதி­ருந்து விடுபடவே முடிவதில்லை

124 நிலம் தரிசு என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாடுபட்டாலும் ஒன்றும் விளையாத நிலம். அந்த நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னான் கஞ்சன் இந்த தானத்தால் என்ன புண்ணியம்?

125 மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம் (தூய்மையான செயல்). கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுப்பாவச் செயல். கடைசியில் துக்கத்தையே தரும்.

126 சிவன் கோயி­ல் பூஜை செய்துவந்த ஏழை அந்தணர், கோயில் மானியமாக நிலம் சம்பாதிக்கப்பட்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

127 ஆனாலும், சிறிது காலம் கழிந்த பிறகு ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிருத்திகை நட்சத்திர நாளன்று பயங்கரமாகப் புயல் அடித்தது. அடைமழை பெய்தது. பெருஞ்சேதத்தை விளைவித்தது.

128 மின்னலுக்குமேல் மின்னலாக அடித்தது. வீடுகள் நாசமாயின. உரிமையாளர் எவர் என்று தெரியாதுபோயினும், வீடுகள் இருந்த பூமி மட்டும் ஆபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மற்றதனைத்தும் மிச்சம்மீதியின்றி எரிந்துபோயின.

129 பணக்காரனும் வீழ்ச்சிக்குள்ளானான். அவனும் மனைவியுடன் இறந்துபோனான். டுபகீயும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிட்டாள். மூவரின் வாழ்க்கையும் முடிந்துபோயிற்று.

130 பின்னர் அப் பணக்காரன் மதுரா நகரத்தில் ஓர் ஏழைப் பிராமணனுக்கு மகனாகப் பிறந்தான். பக்தையான அவன் மனைவி ஒரு பூஜாரியின் குடும்பத்தில் பிறந்தாள்.

131 அவள் கௌரி என்று பெயரிடப்பட்டாள். டுபகீயின் விதியோ வேறுவிதமாக அமைந்தது. அவள் ஒரு சிவன் கோயில் 'கு(எ)ரவரின்ஃ (கோயி­ல் சுற்றுவேலை செய்பவரின்) மகனாகப் பிறந்தாள்.

132 நாமகரண தினத்தன்று இந்தப் பையன் சனபஸப்பா என்று பெயரிடப்பட்டான். இவ்வாறாக இம்மூவரும் அவரவரின் கர்மபலனுக்கேற்ப நிலைமாறினர் (அடுத்த ஜன்மம் எடுத்தனர்).

133 புனர்ஜன்மம் எடுத்த பணக்காரன் வீரபத்ரன் என்று பெயரிடப்பட்டான். பிராரப்த கர்மத்தின் (பழவினையின்) செயல்பாடு இவ்வாறே. முற்றிலும் நாம் அனுபவித்த பிறகுதான் வினைதீரும்.

134 சிவன் கோயில் பூஜாரியின்மேல் எனக்கு மிகுந்த பிரியம். அவர் தினமும் என்னுடைய வீட்டுக்கு வருவார். என்னுடன் சேர்ந்து புகை(சிலீம்)குடிப்பார்.

135 பிறகு நாங்கள் இருவரும் ஆனந்தம் நிரம்பியவர்களாய் இரவு முழுவதும் பேசிக்கொண் டிருப்போம். ஆண்டுகள் கடந்தன. கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். அவளையும் பூஜாரி தம்முடன் அழைத்துக்கொண்டு வருவார்.

136 கௌரியும் என்னிடம் பக்தி செலுத்தினாள். ஒருநாள் பூஜாரி என்னிடம் கேட்டார், ''கௌரிக்கு ஏற்ற நல்ல வரன் கிடைப்பானா என்று தேடிக்கொண் டிருக்கிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.--

137 ''பாபா, மாப்பிள்ளை தேடித் தேடி நான் களைப்படைந்ததுதான் மிச்சம். எந்த முயற்சியும் பயன் தரவில்லை; மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை.ஃஃ நான் பதிலுரைத்தேன், ''நீர் எதற்காகக் கவலைப்படுகிறீர்? மாப்பிள்ளை வழி நடந்து வந்துகொண் டிருக்கிறான்--

138 ''உம் மகள் பாக்கியசா­. பெரும் பணக்காரியாக ஆவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் மாப்பிள்ளை வருகிறான்; தன்னிச்சையாகவே வருகிறான்.--

139 ''அவன் கூடியசீக்கிரத்தில் உமது வீட்டுக்கு வருவான். உமது விருப்பத்தைப் பூர்த்திசெய்வான். உம்முடைய வார்த்தையை மதித்து கௌரியைப் பாணிக்கிரஹணம் (திருமணம்) செய்துகொள்வான்.ஃஃ

140 அங்கு, பரிதாபகரமான வறுமையில் வாடிய வீரபத்ரன் பெற்றோர்களுக்குத் தைரியமளித்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினான்.

141 கிராமம் கிராமமாகப் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்தான். சிலசமயம் சிறுபணி செய்து பிழைத்தான். கிடைத்ததை உண்டு திருப்தியடைந்தான்.

142 அலைந்து திரிந்து தெய்வாதீனமாக இந்தப் பூஜாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிகழமுடியாதவற்றை நிகழவைக்கும் அல்லாமியாவின் லீலைதான் என்னே எல்லாருக்கும் அவன்மீது பிரியம் ஏற்பட்டது.

143 கொஞ்சங்கொஞ்சமாகப் பூஜாரியின் அன்பை வென்றான். பூஜாரியும் கௌரியை அவனுக்குக் கன்னிகாதானம் செய்யவேண்டுமென்று விரும்பினார். கோத்திரம், நாடி, கணம், யோகம் முத­யன பொருத்தமாக இருந்தன. பூஜாரி ஆனந்தமடைந்தார்

144 ஒருநாள் தம்முடன் வீரபத்ரனை அழைத்துக்கொண்டு பூஜாரி வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் எனக்கொரு எண்ணம் உதித்தது.

145 எண்ணம் உடனே சொல்லாக மலர்ந்தது, ''ஒரு நல்ல முஹூர்த்த நாளாகப் பார்த்து கௌரியை இவனுக்கு மணம் முடித்துவிடும்; உமது கடமையி­ருந்து விடுபடும்.ஃஃ

146 பூஜாரி தம் மனைவியின் சம்மதத்தைப் பெற்றபின், வீரபத்ரனை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார். ஒரு சுபமுஹூர்த்த நாளில் க­யாணம் சிறப்பாக நடந்தேறியது.

147 திருமணச் சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமக்கள் என்னை தரிசனம் செய்ய வந்தனர். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்களை வேண்டினர்.

148 நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு ஆசியளித்தேன். 'சுகமாக அன்னம் கிடைக்கும்ஃ என்ற ஆசியைக் கேட்ட வீரபத்ரனின் மனக்கண்முன் சுகபோகங்களைப்பற்றிய எண்ணங்கள் விரிந்தன; முகம் மலர்ந்தது.

149 அவனுக்கும் என்னிடம் பக்தி ஏற்பட்டது. சில நாள்களுக்குப்பின் அவர்கள் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆயினும், கையில் காசில்லை என்று குறைசொல்லாத பாக்கியசா­ எவனும் இவ்வுலகில் உளனோ

150 பணம் என்பது ஒரு கண்ணி. பெரியோர்களும் பணக்காரர்களுங்கூட அதன் அலைக்கழிப்பி­ருந்து தப்பிக்கமுடியாது. வீரபத்ரனையும் அவ்வப்பொழுது பணத்தட்டுப்பாடு கிள்ள ஆரம்பித்தது. பணத்தின் சேஷ்டை அத்தகையது

151 ''பாபா, இல்லறத்தின் தளைகள் மிகத் துன்பமூட்டுபவை. பணத்தட்டுப்பாட்டால் நான் துன்பப்படுகிறேன். குடும்பப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு வழி காட்டுங்கள்.--

152 ''உங்களுடைய பாதங்களில் விழுகிறேன். இவ்விதம் என்னை ஏமாற்றுவது தகாது. என்னுடைய சங்கடத்தை நிவாரணம் செய்யுங்கள். நீர்தான் என்னுடைய திருமணத்திற்குக் காரணகர்த்தாஃஃ

153 நானும் அவனுக்குப் பல தருணங்களில் போதனை அளித்தேன். ''இதை அல்லா மா­க்தான் அறிவார். அவர்தான் உன் சங்கடத்தையும் நிவாரணம் செய்வார்ஃஃ என்று சொல்­ அவனைப் பிரேமையுடன் ஆசீர்வாதமும் செய்தேன்.

154 வீரபத்ரனின் மனப்போக்கை அறிந்து, அவனுடைய மனோரதம் நிறைவேறவேண்டும் என்பதற்காக நான் அவனை ஆசுவாசப்படுத்துவேன். 'சிறிதளவும் கவலைப்பட வேண்டாஃ என்றும் சொல்லுவேன்.--

155 ''உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாகக் கிளர்ச்சியடையாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்குச் செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதியாவாய்.ஃஃ (பாபாவின் நல்வாக்கு)

156 ''செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ 'இதைக் கொண்டுவா, அதைக் கொண்டுவாஃ என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கௌரவமே வேண்டா.ஃஃ (வீரபத்ரனின் பதில்)

157 ஆனால், பின்னர் ஓர் அற்புதம் நிகழ்ந்தது கௌரியின் கிரகயோகத்தைப் பாரும் தரிசு நிலத்தின் மதிப்பு திடீரென்று உயர்ந்தது. இறைவனின் லீலை மனித அறிவுக்கெட்டாதது

158 ஒரு லக்ஷம் ரூபாய் கொடுக்கத் தயார் என்று சொல்­க்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார். பாதிப்பணத்தை ரொக்கமாகக் கொடுத்தார். மீதிப்பணத்தைத் தவணைகளில் செலுத்துவதாக வாக்களித்தார்.

159 அவர் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் ரூபாய், வட்டியுடன் சேர்த்துச் செலுத்தவேண்டும் என்றும், இவ்விதமாக மீதிப்பணம் முழுவதையும் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் கொடுத்துத் தீர்த்துவிடவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இம்முறையில் கௌரி பெரும்பணம் சேர்ப்பாள்.

160 இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், சனபஸப்பா எழுந்து நின்று சொன்னான், ''சங்கரருக்கு எது சமர்ப்பிக்கப்பட்டாலும் அதற்கு எஜமானன் கு(எ)ரவர் வம்சத்தவனே.ஃஃ

161 அவன் மேலும் சொன்னான், ''வருடாந்திர வட்டியில், கு(எ)ரவரின் பங்கான பாதி வட்டித்தொகை என்னிடம் வந்து சேரவேண்டும். அது வராமல் நான் திருப்தி அடையமாட்டேன்.ஃஃ

162 வீரபத்ரப்பா எதையும் கொடுக்க விரும்பவில்லை. சனபஸப்பாவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இருவரும் சூடான வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இருவரும் என்னிடம் வந்தனர்.

163 நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், ''அந்த நிலத்தின் பூரண உரிமையாளர் சங்கரரே. வேறு எவருக்கும் அது உபயோகப்படாது. ஆகவே, நீங்கள் இருவரும் வீணாகப் பேராசையில் மூழ்கவேண்டா.--

164 ''நிர்ணயிக்கப்பட்ட விலை, சங்கரரைப் பிரீதிசெய்ய அர்ப்பணம் செய்யப்பட்ட நிலத்தினுடையதுதான் என்பது சர்வ நிச்சயம். கௌரியைத் தவிர வேறு எவனாவது இப் பணத்திற்கு ஆசைப்பட்டால், அவன் பட்டினிகிடந்து சாக நேரிடும்.--

165 ''இறைவனின் சம்மதமின்றி இந்தப் பணத்தை எவனாவது தொட்டால், அவன் இறைவனின் கோபத்திற்குக் காரணமாவான். ஏனெனில், இந்தச் செல்வம் சம்பூரணமாக இறைவனுடையது.ஃஃ

166 அந்த நிலம் பூஜாரிக்குச் சொந்தம். பூஜாரியின் வாரிசான கௌரிக்குத்தான் நிலத்தின்மேல் உரிமை உண்டு. வெளியார் இது விஷயமாக என்ன செய்யமுடியும்? செல்வம் முழுவதும் கௌரிக்கே சொந்தம்.

167 ஆகவே, நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், ''செல்வம் கௌரியினுடையது என்பதை ஒப்புக்கொண்டு அவளுடைய அனுமதியின்படி நடந்தால்தான் நீங்கள் இருவரும் பேறுபெற்றவர்கள் ஆவீர்கள்.--

168 ''அப்படியின்றி அவளுடைய விருப்பத்துக்கு எதிராக நீங்கள் நடந்தால், அது இறைவனுக்கு சம்மதமாகாது. இந்த விவகாரத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு வீரபத்ரப்பாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.ஃஃ

169 நான் என்னுடைய புடம்போட்ட அபிப்பிராயத்தை இவ்வாறு வெளிப்படுத்தியதால், வீரபத்ரன் என்மேல் கடுங்கோபம் கொண்டான்; என்னை இகழ்ந்து பேசினான்.

170 அவன் சொன்னான், ''பாபா, என் மனைவியின் சொத்து உரிமையை நிர்த்தாரணம் செய்தபின், மொத்தப் பணத்தையும் விழுங்கிவிட்டு சுகமாக வாழலாம் என்ற சுயநல நோக்கம் உங்கள் மனத்தில் இருக்கிறது.ஃஃ

171 அவன் அவ்வாறு பேசியதைக் கேட்ட நான் வியப்பால் பேச்சிழந்துபோனேன் அல்லாமியாவின் செயல்கள் கற்பனைக்கெட்டாதவை அல்லவோ ஆகையால், நான் எதற்காக வருத்தப்படவேண்டும்?

172 வீரபத்ரப்பா என்னிடம் இவ்வாறு பேசினான். வீட்டிலோ மனைவியின்மேல் கடுஞ்சினங்கொண்டு நெருப்பைக் கக்கினான். ஆகவே, பிற்பக­ல் அவள் தரிசனம் செய்ய வந்தாள்; என்னிடம் கெஞ்சினாள்.

173 ''பாபா, வேறெவரோ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கிருபை செய்யாது அலட்சியப்படுத்திவிடாதீர்கள். பயபக்தியுடன் நான் வேண்டுகிறேன். உங்கள் மகளாகிய என்னிடம் இரக்கம் காட்டுங்கள்.ஃஃ

174 அவள் அவ்விதம் கெஞ்சியதைக் கேட்டு நான் அவளுக்கு மீண்டும் பூரணமாக உறுதியளிக்கும் வகையில் சொன்னேன், ''என்னுடைய கிருபையால் உனக்கு

175 அன்று இரவே, தூங்கிக்கொண் டிருந்தபோது கௌரிபாயி ஒரு கனவுக்காட்சி கண்டாள். சங்கரர் கனவில் தோன்றினார். சங்கரர் என்ன சொன்னார் என்பதைக் கேளும்.

176 ''பணம் அனைத்தும் உன்னுடையது. எவருக்கும் எதையும் கொடுக்காதே. நான் சொல்லும்படி செயல்பட்டு நிரந்தரமாக அதை நிர்வாகம் செய்வாயாக.--

177 ''இறைவனைப் பிரீதிசெய்ய என்ன செலவழிக்கிறாயோ அதைச் சனபஸப்பாவின் சொற்படி செய். ஏனெனில், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். இதை ஒரு கண்டிப்பான நியதியாக அனுசரிப்பாயாக.--

178 ''இதர காரியங்களில் பணம் செலவழிப்பதாக இருந்தால், நிர்வாக ஒழுங்கீனம் ஏதும் நேராமல் தடுக்கும் பொருட்டு, மசூதியி­ருக்கும் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் திட்டம் எதுவும் தீட்டக்கூடாது.ஃஃ

179 கௌரிபாயி தன் கனவுக்காட்சி முழுவதையும் எனக்கு விவரித்தாள். நானும் என் மனத்தில் உதித்தவாறு கனவுக்காட்சியை நம்பும்படி அவளுக்கு அறிவுரை
கூறினேன்.

180 ''உன்னுடைய அசலை நீ எடுத்துக்கொள். வட்டியில் பாதியை சனபஸப்பாவுக்குக் கொடு. இந்த விதியை முறைபிறழாது பின்பற்று. வீரபத்ரனுக்கு இதில் ஏதும் சம்பந்தம் இல்லை.ஃஃ

181 நானும் கௌரியும் இவ்வாறு பேசிக்கொண் டிருந்தபோது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சண்டைபோட்டுக்கொண்டு அங்கு வந்தனர். இருவரையும் சாந்தமடையச் செய்ய நான் மிகவும் முயன்றேன்.

182 சங்கரர் கௌரிக்கு அருளிய கனவுக்காட்சியை இருவருக்கும் விவரமாக எடுத்துரைத்தேன். அதைக் கேட்ட வீரபத்ரன் உன்மத்தனானான் (வெறிகொண்டான்).

183 வீரபத்ரன் தன் எதிரியின்மேல் வசைமாரி பொழிந்தான். கன்னாபின்னாவென்று கத்தினான். அதைக் கேட்ட சனபஸப்பா பயத்தால் வெலவெலத்துப்போனான்.

184 வெறிபிடித்த வீரபத்ரப்பா எதிரியின்மேல் அபத்தமான சாபங்களை வாரியிறைத்துக்கொண்டே சூளுரைத்தான், ''உன்னை நான் எங்கே பிடித்தாலும் அங்கேயே அழித்துவிடுவேன்.ஃஃ

185 வெறிபிடித்த வீரபத்ரப்பா சனபஸப்பாவை நோக்கிக் கத்தினான், ''உன்னைத் துண்டுதுண்டாக வெட்டி எல்லாத் துண்டுகளையும் தின்றுவிடுவேன்.ஃஃ

186 பீதியால் பீடிக்கப்பட்ட சனபஸப்பா என் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான், ''என்னை இந்தப் பேராபத்தி­ருந்து காப்பாற்றுங்கள்.ஃஃ நான் அப்பொழுது அவனுக்கு அபயமளித்தேன்.

187 தீனனாகிய சனபஸப்பாவுக்கு அந்நேரத்தில் தைரியமளித்துச் சொன்னேன், ''வீரபத்ரப்பாவின் கைகளில் நீ சாகும்படி நான் விடமாட்டேன்.ஃஃ

188 காலப்போக்கில் வீரபத்ரப்பா மரணமடைந்தான். பின்னர் ஸர்ப்பயோனியில் (பாம்பின் வயிற்றில்) பிறந்தான். இவ்விதமாக அவன் வேறு உடலுக்கு மாறினான்.

189 சனபஸப்பா பயந்துகொண்டே வாழ்ந்தான்; அதுவே அவனுடைய முடிவுக்குக் காரணமாகியது. அவன் மறுபிறவியில் தவளையோனியில் பிறந்தான். அவனுடைய கதை அவ்வாறு.

190 பூர்வஜன்ம விரோதத்தால் வீரபத்ரப்பா பாம்பாகப் பிறந்தான். தவளையாகப் பிறந்த சனபஸப்பாவைப் பின்தொடர்ந்தான். கடைசியில் பிடித்துவிட்டான்.

191 தவளையாகப் பிறந்த தீனன் சனபஸப்பா, வீரபத்ரப்பாவின் (பாம்பின்) வாயில் மாட்டிக்கொண்டான். அவனுடைய பரிதாபகரமான கதறலைக் கேட்டு என் மனம் இரங்கியது.

192 முன்னம் அளித்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வந்தது. சனபஸப்பாவை விடுவித்து என்னுடைய வாக்கை நான் பா­த்தேன் (காப்பாற்றினேன்).

193 பக்தனுக்கு ஆபத்து நேரும்போது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்லா ஓடிவருகிறார் அல்லரோ அவர்தான் என்னை இங்கு அனுப்பி பக்தனை ரக்ஷித்தார்

194 அதுவே இங்கு பிரத்யக்ஷமான (கண்கூடான) அனுபவமாக மலர்ந்தது. வீரபத்ரப்பா எங்கோ ஓடிவிட்டான். சனபஸப்பா ஆபத்தி­ருந்து தப்பித்துக்கொண்டான். ஈதனைத்தும் இறைவனின் லீலை

195 சரி, இப்பொழுது சிலீமை நிரப்பும். புகைகுடித்த பிறகு நான் என் இருப்பிடத்திற்குச் செல்கிறேன். நீரும் உமது கிராமத்திற்குத் திரும்பிச் செல்வீராக. ஆயினும், என்னுடைய நாமத்தைக் குறியாகக் கொள்வீராக

196 இவ்வாறு பேசிய பிறகு நாங்கள் இருவரும் சிலீம் பிடித்தோம். சத்சங்கத்தின் சௌக்கியம் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு நான் மெதுவாக வழி நடந்து திரும்பி வந்தேன். என் உள்ளத்தில் பரம திருப்தி நிலவியது.

(ஸாயீ சொன்ன கதை இங்கு முடிகிறது.)

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'பாம்பும் தவளையும்ஃ என்னும் நாற்பத்தேழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.Share :
Get it on Google Play