TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
அத்தியாயம் - 3
3. காவியம் எழுத பாபா சம்மதம் அளித்தது
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 காதையை விட்ட இடத்தில் தொடர்வோம். ''என்னுடைய சரித்திரத்தை எழுதுவதற்கு உமக்கு ஸம்பூர்ணமான அனுமதி உண்டுஃஃ என்று சொல், ஸாயீ எனக்கு முழுமையான உறுதிமொழி ஈந்தார்.
2 ''உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக; மனத்தில் அணுவளவு தயக்கமும் வேண்டா; என்னுடைய வார்த்தைகளில் முழுவிசுவாசம் வைத்து, மனத்தை திடப்படுத்திக்கொள்வீராக. --
3 ''என்னுடைய லீலைகள் எழுதப்பட்டால், அவித்யையால் (அஞ்ஞானத்தால்) ஏற்பட்ட தோஷங்கள் உடைந்துவிடும். பக்தி பாவனையுடன் கேட்கப்பட்டால், வாழ்க்கையின் சிறுதொல்லைகளும் பிரச்சினைகளும் மறந்துபோகும்.--
4 ''கேள்விக்கடல் பக்தியும் பிரேமையும் அலைகளாக ஆர்ப்பரிக்கும். மீண்டும் மீண்டும் கேள்விக்கடல் முத்துக் குளித்தால், ஞான ரத்தினங்களை உங்களுடைய கரங்களில் கொண்டுவந்து சேர்க்கும்ஃஃ.
5 இதைக் கேட்டவுடன் என் சந்தேகங்கள் அனைத்தும் பறந்தோடிவிட்டன. ஸாயீயின் பாதங்களில் விழுந்து பணிந்து, மனத்துதித்தவாறு அவருடைய சரித்திரத்தை எழுத ஆரம்பித்தேன்.
6 இச் சொற்கள் பாபாவின் உதடுகளிருந்து வெளிவந்தவுடன், பாபாவின் சரித்திரம் நிச்சயமாக எழுதப்படப் போகிறது என்னும் நிகழ்வுக்கு நற்சகுனமாக அதை என் மனத்தில் இருத்திக்கொண்டேன். நான் ஒரு சேவகன் மட்டுமே.
7 ஹரியினுடைய லீலை எம்மாத்திரமும் புரிந்துகொள்ளமுடியாதது என்பதைப் பாருங்கள்õ அவரால்தான் அதைப்புரிந்துகொள்ள முடியும்; வேறெவராலும் முடியவே முடியாதுõ வேதங்களும் உபநிஷதங்களும் சாஸ்திரங்களும் மற்றவையும் ஆழங்காணமுடியாத நிலையில் ஊமைகளாயின.
8 சாஸ்திர விற்பன்னர்களையும் வேதத்தின் பொருள் அறியாது சொல்லேயே மூழ்கியவர்களையும் இலக்கண விதிகளில் ஆர்ப்பரித்து யானையையும் பானையையும் உதாரணங்களாக எடுத்துத் தாம் சொல்வதே சரி என்று விதண்டாவாதம் செய்யும் கூர்த்த மதிபடைத்த பண்டிதர்களையும் பார்த்துப் பிரமித்துப்போகாதீர்கள்.
9 ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான்; அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான்õ பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடி அலைகிறான். பாஷாண்டிகளுக்கு (வெளிவேஷம் போடுபவர்களுக்கு) அவன் என்றுமே அகப்படுவதில்லை.
10 ''உன்னுடைய நல்வாழ்வு இதில்தான் இருக்கிறது; எனக்கும் அவதார நோக்கம் நிறைவேறுகிறது. பார்õ இதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்; இதுவே, என்னுடைய இடைவிடாத மனக்கிலேசமாகவும் இருந்து வருகிறது.--
11 ''சாமா1õ நான் ஒன்று சொல்லுகின்றேன், கேள்õ யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன். இதன் விளைவாக, அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.--
12 ''என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தைச் சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்.--
13 ''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் இக் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--
14 ''என்னுடைய கீர்த்தனங்களைப் பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன். இது ஸத்தியமான வார்த்தை.-
15 ''வேறெதிலும் பற்றில்லாமல் என்னையே சரணடைந்து, முழு விசுவாசத்துடன் என் புகழைப் பாடி, என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.--
16 ''எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள்பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?--
17 ''என்னுடைய கதைகளை மாத்திரம் கேட்டால்கூடப் போதும், வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிருந்தும் விடுவிப்பேன்.--
18 ''பக்தியுடன் இக் கதைகளைச் செவிமடுங்கள்; கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபயுங்கள்; பிரதிபத்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியைப் பெறுவீர்கள்.--
19 ''நான் எனும் பிரக்ஞை மறைந்து, 'நானே அவன் (இறைவன்)ஃ என்னும் உணர்வு உதயமாகும். வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால், சித்தம் தெய்வீக சக்திகளால் நிறைந்து கனக்கும்.--
20 ''ஸாயீ ஸாயீ என்ற நாமஸ்மரணம் கயுகத்தின் மலங்களை எரிக்கும். பேச்சினாலும் கேள்வியினாலும் விளைந்த பாவங்கள் என் முன்பாகச் செய்யப்படும் ஒரே
21 இவ்வேலை (சரித்திரம் எழுதுவது) அவ்வளவு சாமானியமில்லை என்றாலும், மரியாதையுடனும் பக்தியுடனும் நான் அவருடைய ஆணையை சிரமேற்கொண்டேன். பாபாவைப் போன்ற ஒரு தர்மதாதா (கொடைவள்ளல்) இருக்கும்போது, நான் ஏன் ஒரு தாழ்மையான நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
22 அவர் சில பக்தர்களைக் கோயில்கள் கட்டவைத்தார்; வேறு சிலரை நாமஸங்கீர்த்தனம் (பஜனை) செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்ளச்செய்தார்; சிலரைத் தீர்த்தயாத்திரை செல்லவைத்தார்; என்னை எழுதவைத்தார்õ
23 அவர்களின் நடுவே நான் பாமரன். கருணைக்கடலும் தயாஸாகரமுமான ஸாயீ, என்னிடம் என்ன நற்குணம் கண்டு என்மீது பிரியமடைந்தார் என்பது எனக்கு விளங்கவில்லை.
24 ஆயினும், இதுவே குருவருள் செய்யும் அற்புதம். ஒரு துளி ஈரமும் இல்லாது உலர்ந்து காய்ந்துபோன மரமாயினும், ஏதும் செய்யாமலேயே பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்குமன்றோõ
25 வருங்காலத்தில் சிலர் ஆசிரமங்களை அமைப்பர்; சிலர் கோயில்கள் கட்டுவர்; சிலர் நதிக்கரைகளில் படித்துறைகளும் கட்டுவர். ஆனால் நாமோ, ஒற்றையடிப் பாதையிலேயே சென்று ஸாயீயின் சரித்திர பாடத்தைப் படிப்போம்.
26 சிலர் பயபக்தியுடன் பாபாவுக்குப் பூஜை செய்கிறார்கள்; சிலர் அவருடைய பாதங்களை இதமாகப் பிடித்துவிடுகிறார்கள்; என்னுடைய மனமோ பாபாவின் பெருமைகளைப் பாடவேண்டுமென்று ஆவல் கொண்டது.
27 கிருதயுகம் அல்லது ஸத்திய யுகத்தில் தவத்தினால் அடையப்பட்டது, திரேதாயுகத்தில் யாகங்கள் செய்ததால் அடையப்பட்டது, துவாபர யுகத்தில் சடங்குகள் நிறைந்த பூஜைகள் செய்ததால் அடையப்பட்டது, கயுகத்தில் நாமஸங்கீர்த்தனம் செய்வதாலும் குருவைத் தொழுவதாலும் அடையப்படும்.1
28 நான் எல்லாம் சிறிது சிறிது தெரிந்தவன்; எதையும் முழுமையாகத் தெரிந்து கொண்டவன் அல்லேன். இந்நிலைமையால், என்னுடைய தகுதியின்மை (சரித்திரம் எழுத) என்னமோ வெட்டவெளிச்சம்õ அப்படியிருக்க, நான் ஏன் இந்தப் பிரம்மாண்டமானதும் கடினமானதுமான பணியை ஏற்றுக்கொண்டேன்?
29 எம்முயற்சியும் செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பேனானால், ஆக்ஞையை பங்கப்படுத்திய குற்றத்திற்கு ஆளாவேன். ஆணையை நிறைவேற்றவேண்டுமென்று இறங்கலாமென்றால், என்னால் சரிவரச் செய்துமுடிக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லையேõ
1 கிருதயுகம் - முதல் யுகம் - ஸத்தியயுகம் - புண்ணிய யுகம் - 17,28,000 ஆண்டுகள்
திரேதாயுகம் - இரண்டாம் யுகம் - இராமாயணம் நடந்த யுகம் - 12,96,000 ஆண்டுகள்
துவாபரயுகம் - மூன்றாம் யுகம் - மஹாபாரதம் நடந்த யுகம் - 8,64,000 ஆண்டுகள்
கயுகம் - நான்காம் யுகம் - கடைசியுகம் - தற்போது நடக்கும் யுகம் - 4,32,000 ஆண்டுகள்
30 ஸமர்த்த ஸாயீயின் நிஜமான ஸ்திதியை (நிலைமையை) யார்தான் துல்யமாகவும் முழுமையாகவும் விவரிக்க முடியும்? பக்தஜனங்களுக்காக அவரே அருள்செய்து, விவரிக்கும் சக்தியை யாருக்காவது அளித்தால்தான் இது முடியும்.
31 வார்த்தைகளுக்கு எட்டாத விஷயத்தை விவரிக்க நான் ஏன் முயல்கிறேன் என்று எவரும் யூகம் செய்ய நான் இடமேதும் கொடுக்க விரும்பவில்லை.
32 நான் பேனாவைக் கையிலெடுத்தவுடன் பாபா என்னுள் இருக்கும் 'நான்ஃ எனும் கர்வத்தை அடக்கி, அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை அவரே எழுத ஆரம்பித்துவிட்டார். இவ்வாறாக, சரித்திரம் எழுதியதன் பெருமை அவருடையதேõ
33 இதுவோ ஒரு முனிவரின் சரித்திரம்; அம் முனிவரேயன்றி வேறுயார் இதை எழுத முடியும்? புரிந்துகொள்ளமுடியாத பாபாவின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள முயல்வது, ஆகாயத்தை ஆங்கனம் செய்ய (அணைத்துக்கொள்ள)முயற்சி செய்வதற் கொப்பானது.
34 அவருடைய மஹிமையோ வானளாவியது; அதைப் பாடமுயலும் என்னுடைய மதியோ ஹீனமானது. ஆகவே, அவர் இந்த வேலையைத் தம் கைகளில் எடுத்துக்கொண்டு அவரளித்த உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும்.
35 பாபாõ யான் பிறப்பால் பிராமணன் ஆயினும், வேதங்கள் புராணங்கள் என்னும் இரு கண்களைப் பெற்றவனில்லை. என் மேற்குடிப்பிறப்பு இவ்வாறு கறைபடிந்ததாயினும், நீர் அதற்குப் பெருமை சேர்த்துவிட்டீர்.
36 சுருதியும் (வேதமும்) ஸ்மிருதியும் (வாழ்க்கைக் கோட்பாட்டு நெறிகளும்) பிராமணனின் இரு கண்களாகும். இவற்றில் ஒன்று இல்லையெனில் அப் பிராமணன் ஒற்றைக் கண்ணன்; இரண்டுமே இல்லையெனில் அவன் குருடனாகிறான். நான் இரண்டாமவன்போல் ஹீனனும் தீனனும் ஆவேன்.
37 ஆனால், என்னுடைய குருட்டுக்குக் கோலாக நீர் அமையும்போது நான் ஏன் வருந்த வேண்டும்? கோன் உதவியுடன் அடிமேல் அடியாக எடுத்துவைத்து ஒற்றையடிப் பாதையில் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன்.
38 இப்பொழுது மேற்கொண்டு எப்படி முன்னேறுவது என்று, பாமரனாகிய எனக்கு விளங்கவில்லை. உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள தேவரீர் என் புத்திக்கு வழிகாட்ட வேண்டும்.
39 அவருடைய யுக்திகளை அவரே அறிவார். எண்ணத்தால் கற்பனை செய்யமுடியாத அவருடைய மாயாசக்தி, ஊமையையும் பிருஹஸ்பதியைப் (தேவகுருவைப்) போன்று பேசவைக்கிறது; முடவனையும் மேருமலையைத் தாண்டவைக்கிறது.
40 நான் உம்முடைய பாதங்களின் தாஸன்; என்னை உதாசீனம் செய்துவிடாதீர். என்னுடல் சுவாஸம் ஓடும்வரை உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும்.
41 கதை கேட்கும் ஜனங்களேõ இக்காவியத்தின் பிரயோஜனம் என்ன என்பதைப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். ஸாயீயே இக் காதையை எழுதச் செய்வார்; தவறு, தவறு, தம் பக்தகோடிகளின் மங்களத்திற்காக இக் காதையைத் தாமே எழுதுவார்.
42 என்ன நாதம் எழுகிறதென்பதில் புல்லாங்குழலுக்கோ ஆர்மோனியத்திற்கோ சிரமம் என்ன இருக்கிறது? சிரமம் அனைத்தும் வாசிப்பவனுடையதுதானே? நான் எதற்காகக் கவலைப்படவேண்டும்?
43 சந்திரகாந்தம்1 பொழியும் அமுதம் அதனுடையதா? இல்லவேயில்லை; அது, உதயமாகும் சந்திரன் விளைவிக்கும் அற்புதம்õ
44 அதுபோலவே, ஆர்ப்பரிக்கும் பேரலைகள் ஸமுத்திரத்தின் வேலைப்பாடா என்ன? தானே அலைகளை உயரச்செய்ய ஸமுத்திரத்தால் ஆகாது; சந்திரோதயத்தைச் சார்ந்துதான் அது பொங்கமுடியும்.
45 கடல் நிறுவப்பட்ட சிவப்பு விளக்கேந்திய மிதப்புகள் எப்படிக் கப்பல்களைப் பாறைகளையும் சுழல்களையும் தவிர்த்து, வேகமாக முன்னேறச் செய்கின்றனவோ, அப்படியே--
46 அமிருதத்தைவிடச் சுவையான ஸாயீநாதனின் காதைகள், கடக்க இயலாத சம்சார ஸாகரத்தைக் கடப்பதை ஆபத்தின்றி சுலபமாக்கிவிடுகின்றன.
47 காதுவழியே இதயத்துள் புகுந்து, தேஹாபிமானத்தை (பௌதிக உடன்மேல் பற்றை) வெளியே தள்ளி, இரட்டைச் சுழல்கள்2 எனும் மாயையை இல்லாது செய்துவிடும் ஞானிகளின் கதைகள் புனிதமானவை.
48 இக் காதைகள் ஒருவருடைய ஹிருதயத்தில் ஏற ஏற, மனத்திலுள்ள சந்தேகங்களும் கேள்விகளும் படிப்படியாக முடிச்சவிழும்; ஞானம் மலரும்; உடல் ஏறியிருந்த கர்வம் இறங்கிவிடும்.
49 பாபாவின் தெய்வீகமான கீர்த்தியின் வர்ணனையைச் செவிமடுப்பது பக்தர்களின் மனமலங்களை எரிக்கும். ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச் சுலபமான பாதை இதுவே.
50 மாயையைக் கடந்த சுத்த பிரம்மம் எது? மாயையை எவ்விதம் கடப்பது? ஹரிக்குப் பிரியமானவனாக ஆவது எப்படி? கர்மங்களையும் தர்மங்களையும் நன்கு பின்பற்றுவதாலா?
51 மனிதன் கடைசியாக அடையக்கூடிய மிக உன்னதமான நிலை எது? பக்தி எது? முக்தி எது? விரக்தி எது? வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன? அத்வைதம் என்றால் என்ன? இத்தியாதி விஷயங்கள் மறைபொருளானவை.
52 இவ்விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஞானதாஹத்தைத் தணித்துக்கொள்ள, ஞானேச்வர், ஏகநாதர் போன்றோர் எழுதிய நூல்களை வாசிக்கவேண்டும்.
53 கிருதயுகத்தில் மனத்தையும் புலன்களையும் அடக்கித் தவம் செய்தல், திரேதாயுகத்தில் யாகம் செய்தல், துவாபர யுகத்தில் சடங்குகளோடு கூடிய பூஜை செய்தல், கயுகத்தில் கதாகாலட்சேபமும் நாமஸங்கீர்த்தனமும் செய்தல் -- இவை முக்தியடைவதற்கு உண்டான சாதனங்களாம். இவற்றுள் கயுக சாதனம் மிக சுலபமானது.
1 சந்திரனுடைய கிரணம் பட்டவுடன் நீர் பொழியும் கல்
2 இன்பம் / துன்பம் - வேண்டுதல் / வேண்டாமை - வெப்பம் / குளிர் - நன்மை / தீமை போன்றவை இரட்டைச் சுழல்கள்
54 குருவின் கதைகளைக் கேட்பதென்னும் முக்தி மார்க்கம் நான்கு வர்ணத்தாருக்கும் உண்டு. பெண்களாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோராக இருப்பினும் ஜாதியே இல்லாதவராக இருப்பினும் இவர்களனைவருக்கும் மார்க்கம் இதுவே.
55 புண்ணியம் சேர்த்தவர்களே இக் காதைகளைக் கேட்பார்கள். சிலருக்குக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே தூக்கம் வந்துவிடும். அவர்களையும் ஸ்ரீஹரி எழுப்பிவிடுவார்õ
56 முடிவேயில்லாத புலனின்பங்களை நாடி ஓடி, அடையமுடியாததால் மனமொடிந்து போனவர்களுக்குக்கூட, ஞானிகளின் கதாமிருதம் புலனின்ப வேட்கையிருந்து விடுதலை அளிக்கும்.
57 யோகமும் யாகமும் தியானமும் தாரணையும் நானாவிதமான பெருமுயற்சிகளால் அடையவேண்டியவை. ஒருமுகமான கவனம் ஒன்றைத்தவிர, இக் கதைகளைக் கேட்பதில் ஆயாஸம் ஏதுமில்லை.
58 இவ்விதமாக, ஸாயீயின் காதை நிர்மலமானது. பிரேமையுடன் இதை ஸத்ஜனங்கள் (நல்லோர்) செவிமடுக்கட்டும்; அவர்களுடைய பஞ்சமஹாபாபங்களும்1 வேரோடு எரித்து நாசமாக்கப்படும்.
59 மனிதப்பிறவி என்னும் பந்தத்தில் நாம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறோம். இந்தக் கட்டுகளுள் நம்முடைய நிஜரூபம் மறைந்துகொண் டிருக்கிறது. கதையைக் கேட்பது இக் கட்டுகளைத் தளர்த்தி ஆத்மதரிசனம் கிடைக்கச் செய்யும்.
60 ஆகவே, இக் காதைகளை மரணபரியந்தம் நினைவில் வைப்போம்; தினமும் இவற்றைப் பரிசீப்போம். உலக வாழ்வாலும் அதனுடைய துக்கங்களாலும் பொசுக்கப்படும் ஜீவன்களுக்கு சாந்தி கிடைக்கும்.
61 பக்தியுடனும் விசுவாசத்துடனும் இக் காதைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும் ஸாயீ தியானம் ஸஹஜமாகவே (இயல்பாகவே) மலரும். ஸாயீயின் ரூபம் கண்முன்னே தோன்றி, பிறகு இதயத்தில் அமரும்.
62 இவ்வாறு ஸத்குருவின்மீது பக்தி செலுத்துவதால் உலகவாழ்க்கையில் பற்றற்ற மனப்பான்மை வளரட்டும். குருவைப்பற்றிய நினைவில் பிரீதியுண்டாகி, மனம் நிர்மலமாகட்டும்.
63 இவ்வெண்ணம் கொண்டே, ஸாயீ என்னை ஆசீர்வதித்திருக்க வேண்டும். என்னைச் சாக்காக வைத்துக்கொண்டு, அவருடைய திட்டத்தை அவரே நிறைவேற்றிக்கொள்கிறார்.
64 பால் மிகுதியாகச் சுரந்து, மடி கனத்து வத்தாலும், கன்றில்லாமல் பசு பாலை வெளியே விடாது. இது பசுவினுடைய உடன்பிறந்த குணம்; ஸாயீயினுடைய அருளும் அவ்வாறே.
65 சாதகப்2 பறவையான நான் இதற்கு ஆசைப்பட்டபோது, என்னுடைய அல்பதாகத்தை மட்டுமல்லாமல் மற்ற பக்தர்களின் தாகத்தையும் தீர்க்கும் வகையில் என் அன்னை என்மீது ஆனந்த மழையாகப் பொழிந்தார்.
66 என்னே ஒரு தாயின் பிரேமையும் பக்தியும்õ ஒரு தாயால்தான் தன் குழந்தையின் பசியை உள்ளுணர்வால் அறிந்து, வாய் திறக்காதிருக்கும்போதே தன் முலைக்காம்பை அதன் வாயினுள் திணிக்க முடியும்.
67 ஆனால், அவளுடைய மெய்வருத்தத்தையும் சோர்வையும் யார் அறிவார்? குழந்தையோ ஏதும் அறியாதது. தாயைத் தவிர வேறு எவர், கேட்காமலேயே முலையமுதம் தருவார்?
68 கொலுசு அணிவதில் குழந்தைக்கு என்ன ஸ்வாரஸ்யம் (சுவை)? குதூகலத்தைத் தாயன்றோ அடைவாள்õ அவ்வகையே ஸத்குரு மாதாவின் செய்கைகளும்.
69 தம்முடைய குழந்தையின் சின்னச்சின்ன ஆசைகளை யார் திருப்தி செய்யப்போகிறாரோ, என்று தாயைத் தவிர வேறு எவர் இளகிய மனத்துடனும் பரிவுடனும் ஏங்குவார்? தாய்ப்பாசம் அசாதாரணமானதுõ
70 ஸத்துவ குணங்களுடைய அன்னைக்குக் குழந்தையாகப் பிறப்பது என்பது பாக்கியசாகளுக்கே அளிக்கப்படும் இறைவனின் வரம். குழந்தையை இவ்வுலகத்திற்குக் கொண்டுவர, தாய் பட்ட பிரஸவ வேதனையைக் குழந்தை அறியுமோ?
71 இப்பொழுது பாபாவின் திருவாய்மொழி ஒன்றை அதே உட்பொருளில் சொல்கிறேன். கதைகேட்கும் நன்மக்களே, பயபக்தியுடன் கவனமாகக் கேளுங்கள்.
72 என்னுடைய அரசாங்க உத்தியோகம் 1916ஆம் ஆண்டில் முடிவுற்று, எனக்குத் தகுதியான ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. சிர்டீக்குப் போகும் காலம் வந்தது.
73 அன்று குருபூர்ணிமை1 நாள். குருவைப் பூஜிப்பதற்காகப் பக்தர்கள் சிர்டீயில் குழுமியிருந்தனர். அண்ணா சிஞ்சணீகர்2 அவருடைய சொந்த உந்துதலால் எனக்கு சிபாரிசாக பாபாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
74 என்னிடம் உள்ள உண்மையான ஆதங்கத்தினால் பாபாவிடம் இவ்வாறு கெஞ்சினார். ''இவருடைய பெரிய குடும்பத்தின் பொருட்டு இவர்மீது கருணை காட்டுங்கள்
பாபா.--
75 ''இவருக்கு இன்னுமோர் உத்தியோகம் கொடுங்கள்; வாங்கும் ஓய்வூதியம் போதுமா என்ன? ஏதாவதோர் உதவியைச் செய்து அண்ணாஸாஹேப்பினுடைய கவலையை விலக்குங்கள்ஃஃ.
76 பாபா பதில் கூறினார், ''ஓ, அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும்; ஆனால், அவர் என்னுடைய ஸேவையில் இறங்க வேண்டும்; இறங்கினால் சுகமான வாழ்க்கை நடத்துவார்.--
77 ''அவருடைய உணவுத்தட்டு என்றும் நிறைந்திருக்கும்; உயிருள்ள வரையில் கா ஆகவே ஆகாது. என்னிடம் முழு விசுவாசத்துடன், இடைவிடாது என்னுடைய பாதுகாப்பை நாடுவாரானால், அவருடைய பிரச்சினைகள் முடிவுறும்.--
1 ஆடிமாதப் பௌர்ணமி நாள். குருபூர்ணிமா என்றும் வியாஸ பூர்ணிமை என்றும் பெயர் பெறும். ஸந்நியாசிகள் உட்பட அனைவரும் தத்தம் குருவுக்குச் சிறப்பாகப் பூஜை செய்யும் நாள்.
2 ஸாயீ பக்தர். பிற்காலத்தில் தமது சொத்துகளனைத்தையும் சிர்டீ ஸமஸ்தானத்திற்கு எழுதி வைத்தவர்.
78 ''யார், 'நாம் நமது இஷ்டம்போல் செயல்பட்டால் என்ன ஆகிவிடும்ஃ என்று சொல்கிறார்களோ, அவர்கள் வழிதவறிவிட்டார்கள் என்பதை அறிந்துகொள். தருமநெறியை விட்டு விலகியவர்களை நாம் முதற் காரியமாக விலக்கிவிட வேண்டும்.--
79 ''நேர்முகமாக அன்னவர் வந்தால், வேறுவழியில் சென்றுவிடுங்கள். அவர்களை பயங்கரமானவர்களாகக் கருதுங்கள். சிறிது சிரமப்பட்டாவது, அவர்களுடைய நிழலும் உங்கள்மீது விழாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.--
80 ''நெறிமுறை பாராதவனும் ஒழுக்கமில்லாதவனும் ஆத்ம விசாரம் செய்யாதவனும் அனுஷ்டானம் இல்லாதவனும் நன்மை-தீமை பாகுபாடு தெரியாதவனும் எப்படி நல்வாழ்வு வாழமுடியும்?--
81 ''மேலும், நாயாயினும் பன்றியாயினும் ஈயாயினும் சரி, யாரையும் எதையும் அவமரியாதையாக வெறுக்கவோ ஒதுக்கவோ செய்யாதீர்கள். ஏனெனில், முன்ஜன்ம பந்தம் ஏதோ இல்லாமல் யாரும் எதுவும் நம்மிடம் வருவதில்லை.--
82 ''இப்போதிருந்து அவர் (ஹேமாட் பந்த்) பக்தியுடன் எனக்கு சேவை செய்யவேண்டும்; இறைவன் அவர்மீது இரக்கம் காட்டுவான்; அள்ள அள்ளக் குறையாத தேவலோகத்துச் செல்வம் அவருக்குக் கிடைக்கும்.--
83 ''ஆக இந்தப் பூஜையை எவ்வாறு செய்யவேண்டும்? நான் யார் என்பதை ஆணித்தரமாக எப்படி அறியமுடியும்? என்னுடைய பூதவுடல் அழியக்கூடியது; என்றும் அழியாத பிரம்மமே வழிபாட்டுக்குரியது.-- (ஆகவே, கவனமாகக் கேளுங்கள்.)
84 ''எட்டுப் பிரகிருதிகளின்1 ரூபத்தில், நான் இப் பிரபஞ்சத்தின் நான்கு பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றேன். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் கீதையில் அர்ஜுனனுக்கு இதையே சொல்யிருக்கிறார். --
85 ''தாவரங்களும் ஜங்கமங்களும் நிறைந்த இந்த ஜகத்தில் ஒரு பெயராகவோ உருவமாகவோ தோற்றமாகவோ எது இருந்தாலும், அது எட்டுப் பிரகிருதிகளைப் போர்த்துக்கொண்ட நானேõ அதுவும் என்னுடைய சிருஷ்டியின் அற்புதமேõ--
86 ''ஓம் எனும் பிரணவம் என்னுடைய ஒயாகும்; நானே இவ்வொயின் பொருள். உருவெடுத்த இப் பிரபஞ்சத்தில் எத்தனை வஸ்துகள் உண்டோ, அவையனைத்திலும் நான் நிறைந்திருக்கிறேன்.--
87 ''இவ்வாறு தன்னைத் தவிர வேறு எதுவுமேயில்லை என்ற நிலையில் எதை விரும்புவது? இப் பிரபஞ்சத்தின் பத்துத் திசைகளையும் நான் வியாபிக்கிறேன்.--
88 ''என்னுடைய ஸர்வ வியாபக விழிப்பில், 'நான்ஃ 'எனதுஃ என்னும் உணர்வுகள் கரைந்துவிட்ட நிலையில், விரும்பப்படுவது யாது? முழுமையில் அனைத்தும் மூழ்கியிருக்கின்றன.--
89 ''புத்தியில் எத்தனையோ ஆசைகள் ஆத்மாவின் சம்பந்தமில்லாமல் எழுகின்றன. நான் (ஸாயீ) நிஜமான ஆத்மாவின் உருவமாக இருப்பதால், நினைவு அலைகள் எங்கிருந்து எழும்?--
90 ''உலகியல், ஆசைகள் பலவிதமானவை. ஆயினும் 'நான் யார்ஃ என்னும் சூக்குமம் புரிந்துவிட்டால், அவையனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.--
91 ''நான் மனமோ புத்தியோ இந்திரியங்களோ இல்லை; மகத்தான இப் பிரபஞ்சமும் இல்லை; தோன்றாத நிலையில் இருந்த பிரம்மாண்டமும் இல்லை. ஆரம்பமே இல்லாத பழம்பொருளான நான், சாக்ஷி மாத்திரமேõ--
92 ''இவ்வாறாகக் குணங்களையும் இந்திரியங்களையும் கடந்து நிற்கும் என்னைப் புலனின்பங்கள் கவர்வதில்லை. நான் இல்லாத இடமேயில்லை. நான் செயல் புரிபவனும் இல்லை; செயல்புரிய வைப்பவனும் இல்லை.--
93 ''மனமும் புத்தியும் இந்திரியங்களும் மனித உடன் தூலமான கருவிகள் என்றுணர்ந்துவிட்டால், பற்றற்ற மனப்பான்மை ஞானத்தை வெளிப்படுத்திக்கொண்டு வரும்.--
94 ''மனிதன் 'தான் யார்ஃ என்பதை மறந்து போவதே மாயை. எல்லா இருப்புகளுக்கும் ஸாரமான என்னை அறிந்துகொள்வதே உள்ளிருக்கும் தூய பூரணானந்தத்தைப் பெறுவதாகும்.
95 ''மனத்தின் தாவல்கள் அனைத்தும் எல்லாப் பிரியங்களும் திசைதிருப்பிவிடப்பட்ட என்னைப் போன்றவருக்கு, அதுவே உண்மையான வழிபாடு ஆகும். இந்த சிதானந்தத்தை அனுபவிப்பது சுத்த ஞானநிலை.--
96 ''இந்த ஆத்மாவே பிரம்மம் (முழுமுதற்பொருள்); சுத்த ஞானம் பிரம்மம்; ஆனந்தம் பிரம்மம். இந்தப் பிரபஞ்சமே ஒரு பிரமை; ஆதலால், அதைப்பற்றிய மாயைகளை உற்பத்தி செய்கிறது. உண்மையில் பிரம்மம் நானே.--
97 ''நான் வாஸுதேவன்; ஓம் என்பதும் நானே; நான் நித்தியன்; சுத்தன்; புத்தன்; முக்தன். சிரத்தையுடனும் உண்மையான பக்தியுடனும் என்னை வழிபடுவது சுய உயர்வு அளிக்கும்.--
98 ''இவ்வாறாக என்னை யார் எனத் தெரிந்துகொண்டு, யதார்த்தமாகப் பூஜை செய்யவேண்டும். மேலும் முழுமனத்துடன் என்னை சரணாகதி அடைந்து என்னுடன் கலந்துவிடவேண்டும்ஃஃ. (ஸாயீ திருவாய்மொழி 76 - 98)
(தாபோல்கரின் எண்ண ஓட்டம் இங்கு ஆரம்பம்.)
99 கடலுடன் கலந்துவிட்ட நதி திரும்பி வரமுடியுமா? கடல்தனை ஆங்கனம் செய்துகொண்டபிறகு, நதியெனும் தனிப்பட்ட அடையாளத்தை வைத்துக்கொள்ள முடியுமா?
100 என்ணெயில் நனைக்கப்பட்ட திரியானது தீபத்தின் ஜோதியைச் சந்தித்தால், அதனுடைய ஒளி மிகுந்து ஜுவாலையாக எரிகிறதன்றோ? அவ்வாறே, முனிவர்களின் பொன்னடிகளில் சேர்ந்துவிட்ட நமது முன்னேற்றமும்.--
101 'அல்லா மாக்ஃ என்ற உயிரூற்றைத் தவிர வேறெதையும்பற்றிச் சிந்தனை செய்யாதவரும் சாந்தமானவரும் தேவைகளும் ஆசைகளும் இல்லாதவரும் சமதரிசனம் உடையவருமானவர் பிரம்மத்திடமிருந்து வேறுபட்டவராக எவ்வண்ணம் இருக்கமுடியும்?
102 பற்றின்மை, அஹந்தையின்மை, இரட்டை எனும் மாயையின்மை, தன்னுடையது என்று எதையும் வைத்துக்கொள்ளாத தன்மை, இந்நான்கு தெய்வீகமான குணங்கள் எங்கு இருக்கின்றனவோ, அங்கு (பிரம்மத்திருந்து வேறுபட்டு) 'நான்ஃ என்ற உணர்வு எப்படி இருக்க முடியும்?
103 தாத்பரியம் என்னவென்றால், இம்மாதிரியான எட்டு தெய்வீகமான குணங்களும் ஸ்ரீஸாயீயினுடைய உடல் ஸம்பூர்ணமாக இருக்கும்போது 'என்னுடையதுஃ என்னும் உணர்வுக்கு இடமேது? அவரை விட்டுவிட்டுத் தனிநிலை அடையாளத்தோடு நான் (தாபோல்கர்) எவ்வாறு இருக்கமுடியும்?
104 என்னுடைய பிரக்ஞை, பிரபஞ்சத்தையே வியாபிக்கும் அவருடைய பிரக்ஞையில் ஒரு சிறு துளியே. ஆகவே, என்னுடைய அஹங்காரத்தை ஸாயீயின் பாதங்களில் ஸமர்ப்பிப்பதே அவருக்குச் செய்யும் முற்றும் முழுமையான ஸேவையாகும்.
105 'எனக்கு ஸேவை செய்தும், என்னுடைய புகழைப்பாடியும், முழுமனத்துடன் என்னை சரணாகதியடைபவன் என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான்ஃ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பாகவதத்தில் அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறார்.
106 வண்டைப்பற்றியே நினைத்துக்கொண் டிருக்கும் புழு, அந்நினைவினாலேயே வண்டாக மாறிவிடுகிறது. அதுபோலவே, சிஷ்யனும் தன்னுடைய குருவை நிஜமான பக்தியுடன் வழிபட்டு, குருவைப்போலவே ஆகிவிடுகின்றான்.
107 'போலஃ எனும் வார்த்தையில் மறைமுகமாகப் பிரிவினைத் தொனி ஒக்கிறது. இதை குருவால் ஒரு கணமும் பொறுத்துக்கொள்ளமுடியாது. ஏனெனில் சிஷ்யனின்றி குருவேது? சிஷ்யனை குருவிடமிருந்து பிரித்துப்பார்க்கமுடியாது.
108 நான் யாரை வழிபட ஆணையிடப்பட்டேனோ, அவரைச் சித்தரித்துவிட்டேன். இங்கு எனக்கு ஒரு காதை ஞாபகத்திற்கு வருகிறது. இந்த சந்தர்ப்பத்திற்குப் புஷ்டியளிப்பதாகக் கருதுவதால், அதை இங்கு விவரிக்கிறேன்.
109 பாபாவின் குணாதிசயங்களால் கவரப்பட்டு ஒரு ரோஹிலா (படாணன்) சிர்டீக்கு வந்தான். சிர்டீயில் பல நாள்கள் தங்கினான். அவ்வாறு தங்கியபோது அவனுக்கு பாபாவின்மீது அளவிலாத பிரேமை வளர்ந்தது.
110 உடற்கட்டில் புஷ்டியான எருமைக்கடா போன்றிருந்த அவன், நடத்தையில் கட்டுப்பாடில்லாதவன்; பிடிவாதி; எவர் சொல்லும் கேட்கமாட்டான். பாதங்கள்வரை தொங்கும் கப்னியை உடையாக அணிந்துகொண்டு வந்து, மசூதியில் தங்கிவிட்டான்.
111 அவன் விருப்பப்பட்ட போதெல்லாம் பகலும் இரவிலும் மசூதியிலோ சாவடியிலோ குர்ஆனின் சுலோகங்களை உச்சமான குரல் ஓதுவான்.
112 ஸாயீ மஹராஜ் என்னவோ சாந்திஸ்வரூபம்தான்; ஆனால், கிராம மக்கள் சோர்ந்து போயினர். எல்லாருடைய தூக்கமும் கெட்டுப்போகும் ரீதியில் நடுநிசியிலும் அவன் போடும் இரைச்சல் தொடர்ந்தது.
113 பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில் நிலத்திலும் காட்டிலும் கடுமையாக உழைத்துவிட்டுவந்த கிராம மக்கள், இரவில் சுகமான நித்திரையில்லாததால் அவதிப்பட்டனர். இந்நிலைமை மக்களைக் கடுமையாக எரிச்சலடையச் செய்தது.
114 பாபாவுக்கு இது ஒரு தொந்தரவாக இல்லாதிருந்திருக்கலாம்; ஆனால், கிராம மக்களுக்கு இது ஒரு பெரும்பாடாக இருந்தது. இரவில் அவர்கள் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை. ரோஹிலாவின்மேல் அவர்களுக்குக் கடுங்கோபம் விளைந்தது.
115 மரத்தினுச்சியிருக்கும் பேய்க்கும் கீழே இருக்கும் புக்கும் நடுவில் மாட்டிக்கொண்டவனைப்போல எவ்வளவு நாள்கள் அவர்கள் பொறுமையாகத் துன்பப்பட முடியும்? இரவு பகலாக அமைதியைத் தாக்கி எரிச்சலூட்டும் இரைச்சல் தொடர்ந்தது; பெரும் கவலைக்கிடமாகவும் ஆகியது.
116 ரோஹிலா ஏற்கெனவே ஒரு கோபக்காரன்; அது போதாதென்று அவனுக்கு பாபாவினிடமிருந்து பெரும் ஊக்கம் கிடைத்தது. ஆகவே, வந்தபோது இருந்ததைவிட அதிகமாகக் கட்டுக்கடங்காதவனாக ஆகிவிட்டான்.
117 கர்வம் மிகுந்து திமிர்பிடித்து கிராமமக்களை வசைமொழியில் திட்ட ஆரம்பித்தான். அவர்களை லக்ஷியம் செய்யாது அளவின்றி ஆர்ப்பாட்டம் செய்தான். இதனால், கிராமமே அவனை விரோதபாவனையில் எதிர்த்தது.
118 கருணையின் சிகரமானவரும் சரணாகதி அடைந்த எவரையும் காப்பவருமான ஸாயீயை நோக்கி கிராம மக்கள் தீனமான குரல் முறையிட்டனர்.
119 ஆனால், பாபா அவர்களை லக்ஷியம் செய்யவில்லை. எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக கிராமமக்களை, ''ரோஹிலாவை ஹிம்ஸை செய்யாதீர்கள்; அவன் எனக்கு மிகப் பிரியமானவன்ஃஃ என்று சொல்க் கண்டித்தார்.
120 ''இந்த ரோஹிலாவின் மனைவி ஒரு நடத்தை கெட்டவள்; அடங்காப்பிடாரியும் துஷ்டையும்கூட. அவனை ஏமாற்றிவிட்டு என்னிடம் வந்துவிட ஆவலாக இருக்கிறாள்.--
121 ''அடக்கமும் நாணமும் அற்ற இந்தப் பாவ ஜன்மா விரட்டியடிக்கப்பட்டாலும் பலவந்தமாகத் திரும்பி வந்துவிடுகிறாள்.--
122 ''ரோஹிலா இரைச்சலை நிறுத்தினால் போதும், அதையே நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு புகுந்துவிடுகிறாள். மறுபடியும் உரக்கக் குர்ஆன் ஓத ஆரம்பித்தால், அவனை விட்டு ஓடிவிடுகிறாள். அவள் ஓடிவிட்ட பிறகு, ரோஹிலாவின் மனமும் வாக்கும் உடலும் தூய்மையடைகின்றன; எனக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன.--
123 ''ரோஹிலாவின் வழிக்குப் போகாதீர்கள். அவன் இஷ்டப்படி முழுக்குரல் குர்ஆன் ஓதட்டும். அவனில்லாமல் இரவை நான் நிம்மதியாகக் கழிக்கமுடியாது. அவன் எனக்கு சௌக்கியத்தை அளிக்கிறான்.--
124 ''அவன் இவ்வாறு இரைச்சடுவது எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது. இந்தவிதத்தில் ரோஹிலா எனக்கு உபகாரி; மிகுந்த சுகத்தை அளிப்பவன்.--
125 ''அவனுடைய விருப்பப்படி கத்தட்டும், அதுதான் எனக்கும் இஷ்டம். இல்லையெனில், அந்த துஷ்டையான ரோஹி எனக்குத் துன்பம் கொடுத்துவிடுவாள். --
126 ''அவனாகவே சோர்ந்துபோய்க் கத்தலை நிறுத்திவிடுவான். அப்பொழுது உங்களுக்கும் காரியசித்தி ஆகும். அந்த துஷ்டையும் என்னுடன் போராடமாட்டாள்ஃஃ.--
127 ஸாயீ மஹாராஜே இவ்வாறு சொல்விட்ட பிறகு, வேறு வழியில்லை. மேலும், பாபாவுக்கு ஏதும் மனச்சஞ்சலம் இல்லை என்னும்போது நாம் புகார் செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது?
128 ஏற்கெனவே, ரோஹிலாவுக்கு அபரிமிதமான உற்சாகம் இருந்தது. இப்போது பாபாவேறு அவனுக்கு ஊக்கமளித்துவிட்டார்; கேட்க வேண்டுமாõ தொண்டை காய்ந்துபோகும்வரை வரம்பின்றிக் கத்தித் தீர்த்தான்.
129 மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள்; பாபாவின் மன்னிக்கும் குணந்தான் என்னேõ சாதாரணமாக, மண்டையை உடைக்கும் தலைவயைக் கொடுக்கக்கூடிய செய்கை, அவரை ஆழமாக ஈடுபாடடையச் செய்ததுõ
130 ஓ எவ்வளவு பயங்கரமான இரைச்சல்õ அவனுடைய தொண்டை கிழியாமருந்தது பெரிய ஆச்சரியம்õ பாபாவைப் பொறுத்தவரை அவருடைய ஆக்ஞை இதுதான்; ''ரோஹிலாவை பயமுறுத்தாதீர்கள்ஃஃ.
131 யோசித்துப் பார்த்தால், ரோஹிலா ஒரு பைத்தியக்காரன்; ஆயினும், பாபாவின்மீது அவனுக்கு எவ்வளவு பயபக்திõ அவனுடைய மதக்கட்டுப்பாடுகளின்படி நேரம் தவறாது, முறை தவறாது, எவ்வளவு மகிழ்ச்சியுடன் குர்ஆன் ஓதினான்õ
132 குரல் இனிமையாக இருந்தால் என்ன, கடூரமாக இருந்தால் என்ன? ஒவ்வொரு முறை உணர்வு பெறும்போதும் அல்லா நாமத்தை உரக்க ஓத ஆரம்பித்துவிடுவான்.
133 இயற்கையாகவே அமைந்த கரகரப்பான குரல், நேரம் தவறாதும் இடைவிடாதும் 'அல்லா-ஹோ-அக்பர்ஃ என்று உரக்கக்கூவிக் கல்மாக்களை1 ஓதினான்.
134 ஹரி நாமத்தின்மீது விருப்பமில்லாதவர்களின் உறவு அளிக்கக்கூடிய மாசுபற்றி பயந்த பாபா, ''அல்லாவின் புகழை விருப்பமுடன் பாடும் இந்த ரோஹிலாவைக் காரணமேதுமின்றி ஏன் விரட்டியடிக்க வேண்டும்?ஃஃ என்று சொல்விட்டார்.
135 ''எங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு நான் கண்கொட்டாமல் விழித்துக்கொண் டிருக்கிறேன்ஃஃ என்பது இறைவனுடைய வாக்கு. இவ்வுண்மையை நிரூபணம் செய்யும் வகையில் பாபா இந்த அனுபவத்தை சிர்டீவாசிகளுக்குக் கொடுத்தார்.
136 ரோஹிலா பிச்சை எடுத்துப் பிழைத்தவன்; சேர்த்துண்ண காய்கறி இருந்தோ இல்லாமலோ காய்ந்த ரொட்டியைத் தின்றவன்; சில நாள்களில் அதுவுமின்றிப் பட்டினி கிடந்தவன். அவனுக்கேது மனைவி? இல்லாத மனைவி எவ்விதம் பாபாவை அணுகுவாள்?
137 ரோஹிலா ஓர் ஆண்டி. ஒரு பைசாவே அவனுக்குப் பெரும் செல்வம். அவனுக்கெப்படிக் கயாணம், மனைவியெல்லாம்? மேலும், பாபா ஒரு பால பிரம்மச்சாரி அல்லரோõ முழுக்கதையும் பாபாவின் கற்பனை என்பது நன்கு தெரிந்ததேõ
138 ரோஹிலா எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சடட்டும்õ கல்மாக்களைச் செவிமடுப்பதில் பாபாவுக்குப் பரம சந்தோஷம்; இரவும் பகலும் கேட்டார்; தூக்கம் அவருக்கு விஷமன்றோõ
139 கல்மாக்கள் அளிக்கும் ஞானம் எங்கே? கிராமமக்களின் சிறிய தாபங்களும் சொத்தல் குற்றச்சாட்டுகளும் எங்கே? கிராம மக்களுக்கு ஒரு பாடம் புகட்டவே பாபா இந்த நாடகம் ஆடினார்.
140 ''இறைவனின் நாமத்தில் காதல் கொண்ட காரணத்தால், ரோஹிலா எனக்கு வேண்டியவன்ஃஃ என்ற தம்முடைய அபிப்பிராயத்தை எல்லாரும் நன்கு புரிந்துகொள்ளும்படி செய்தார். என்னே பாபாவின் சக்திõ
141 காண்பவனிலும் காணும் செயலும் காணப்படும் பொருளிலும் இறைவனைக் காண்பவருக்குப் பிராமணனும் படாணனும் வேறெவனும் ஒருவனே.
142 ஒருநாள் மத்தியான ஹாரதி முடிந்து, மக்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாபா என்ன திருவாய்மொழிந்தார் என்பதை இப்பொழுது கேளுங்கள்.
143 ''நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண் டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக, விவரமாகத் தெரியும்.
144 ''நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லாருக்கும் மிக அருகில் இருப்பவன்; ஒவ்வொருவருடைய இதயத்திலும் உறைபவன்; எங்கும் செல்பவன்; நான் எல்லாருக்கும் ஸ்வாமி.--
145 ''உயிருள்ளவையும் உயிரில்லாதவையும் நிறைந்த இந்த சிருஷ்டியில் நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன்; தனியாகவும் இருக்கிறேன். ஈதனைத்தும் தெய்வீகப் பொம்மலாட்டம்; சூத்ரதாரி நானேõ
146 ''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்.--
147 ''எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றிச் சவுக்கடிபடுவான்.--
148 ''ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகமனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருள்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜரூபமே.ஃஃ
149 எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுவாரஸ்யமான சூசகம் இதுõ இறைவனுக்கும் முனிவர்களுக்கும் பேதமே இல்லை; உலகத்தை உய்விக்கவே அவதாரம் நிகழ்கிறது.
150 குருவின் பாதங்களில் அமிழ்ந்துபோக விரும்புபவர்கள் குருவின் பெருமைகளைப் பாடவேண்டும்; அல்லது குருவின் கதைகளைக் காலட்சேபம் செய்யவேண்டும்; அல்லது குருவின் கதைகளை பக்தியுடன் கேட்கவேண்டும்.
151 ஸாதகன் குருவின் கதைகளைக் கேட்கும்போது, கேட்பவனும் கேள்வியும் ஒன்றாகி, மனம் உன்மன1 நிலையை அடையும்.
152 தினசரி நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுக்கொண் டிருக்கும்போதே, தற்செயலாகக் காதில் விழும் குருவின் கதை, தன்னுடைய சுபாவத்தினால் கேட்டவருக்கு நன்மை பல செய்யும். இதில் கேட்டவருடைய முயற்சி ஏதுமில்லை.
153 இப்படியிருக்கும்போது, பக்திபாவத்துடன் கேட்கப்பட்டால் எவ்வளவு சிரேயஸ் (ஆன்மீக லாபம்) கிடைக்கும்? கதை கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.
154 இந்த முறையில், குருவின் திருவடிகளின்மேல் பிரேமையுண்டாகும். படிப்படியாக மிக உயர்ந்த க்ஷேமமான நிலை விளையும். வேறு எவ்வகையான நியமமும் நிஷ்டையும் தேவையில்லை. வாழ்க்கையே பரம மங்களமானதாக மலரும்.
155 மனம் இவ்வாறு கட்டுப்படும்போது, கதைகளைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் அதிகமாகும்; புலனின்பக் கட்டுகள் தாமே உடைந்துவிடும்; பரமானந்த அனுபவம் ஏற்படும்.
156 பாபாவினுடைய இனிமையான வார்த்தைகளைக் கேட்டபின், நான் மனிதர்களுக்கு அடிமை வேலை செய்வதை விட்டுவிட்டு, குருவின் ஸேவையில் மாத்திரமே என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் செய்துவிட்டேன்.
157 இருப்பினும், என் மனத்தில் ஓர் ஏக்கமும் சலசலப்பும் இருந்தது. ''அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும்ஃஃ என்றுதான் பாபா பதில் சொல்யிருந்தார். அதற்கு நிரூபணம் ஏதாவது கிடைக்குமா?
158 பாபாவினுடைய சொல் நிறைவேறாதுபோவதென்பது சாதாரணமாக நடக்கும் காரியமன்று. ஆகவே, நான் மறுபடியும் மனிதர்களுக்கு அடிமை வேலை செய்வதில் மாட்டிக்கொள்ளலாம்; ஆனால், அது எனக்கு வாஸ்தவமான நன்மை எதையும் தரப்போவதில்லை.
159 அண்ணா சிஞ்சணீகரின் சொந்த உந்துதலாலேயே கேட்கப்பட்ட கேள்வியெனினும், நான் இன்னுமோர் உத்தியோகத்தை விரும்பவில்லை என்று சொல்லமுடியாது. இந்த விருப்பம் முன்வினையால் ஏற்பட்டதன்று.
160 இன்னுமொரு உத்தியோகம் கிடைக்கவேண்டுமென்று எனக்கும் உள்மனத்தில் ஓர் ஆசைதான். மருந்தைக் குடிக்கக் கொடுக்கும்போது வெல்லக்கட்டியைக் காட்டி ஆசைகாட்டுவது போல, ஸாயீயும் எனக்கு ஆசைகாட்டிவிட்டார்.
161 வெல்லம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் நான் மருந்தைக் குடித்துவிட்டேன்; திருப்தியடைந்தது என்னுடைய அதிருஷ்டம். எதிர்பாராதவிதமாக எனக்கு உத்தியோகமும் கிடைத்தது; திரவிய லாபத்தில் எனக்கிருந்த ஆசையால் அதை ஏற்றுக்கொண்டேன்.
162 ஆனால், இனிப்புப் பண்டமாயினும் எவ்வளவுதான் தின்னமுடியும்? வெல்லமும் பிடிக்காத நிலையும் வந்துதானே தீரும்õ அச்சமயத்தில், பாபாவினுடைய அமுதமான உபதேச மொழிகள் மிகச்சிறந்த சுவையை அளித்தன.
163 கிடைத்த உத்தியோகம் நீண்டகாலம் ஓடவில்லை; வந்தவழியே போய்விட்டது. உண்மையானதும் நிரந்தரமானதுமான சௌக்கியம் அளிக்கும் வகையில், பாபா என்னைப் பழைய நிலைக்கே திரும்பக் கொண்டுவந்தார்.
164 நகரும் நகராப் பொருள்களுடன் கூடிய இவ்வுலகமனைத்தும் இறைவனின் வெளிப்பாடே. ஆனால், பரமாத்மாவான இறைவன் இப் பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டவன்.
165 இறைவன் இவ்வுலகத்திருந்து வேறுபட்டவன் அல்லன்; ஆனால், இப் பிரபஞ்சம் இறைவனிடமிருந்து வேறுபட்டதுõ சிருஷ்டியின் ஆரம்பத்திருந்தே இவ்வுலகம் நகரும் நகராப் பொருள்களால் நிறைந்திருக்கிறது. ஈதனைத்திற்கும் இறைவனே ஆதாரம்.
166 சிலை, பபீடம் போன்ற எட்டு இடங்கள் இறைவனைப் பூஜை செய்ய உகந்த ஸ்தானங்களாகும்; இவையனைத்திலும் குருவின் திருவடிகளே மிகச்சிறந்தவை.
167 பூரண பிரம்மமான ஸ்ரீகிருஷ்ணரே, குரு ஸாந்தீபனியின் பாதங்களை சரணடைந்தார். அவர் கூறியிருப்பதாவது, ''ஸத்குருவின் நினைவில் நீ மூழ்கினால், நாராயணனாகிய நான் சந்தோஷமடைகிறேன்.--
168 ''என்னை வழிபடுவதைவிட, ஸத்குருவை நீ வழிபடுவதை நான் ஆயிரம் மடங்கு விரும்புகிறேன்ஃஃ. ஸத்குருவின் சிறப்பும் மஹிமையும் வானளாவியன.
169 குரு வழிபாட்டிற்குப் புறங்காட்டுபவன், அபாக்கியவானும் பாவியுமாவான். ஜனன மரணச் சுழற்சியில் மாட்டிக்கொண்டு இன்னல்பட்டே தீருவான். ஆன்மீக முன்னேற்றத்தின் வாய்ப்பைப் பாழடித்துவிடுகிறான்.
170 மறுபடி ஜனனம், மறுபடி மரணம்õ இவ்விரண்டிற்குமிடையில் அலைவதே நமது விதியாகிவிட்டது. ஆகவே, நாம் குருவின் சரித்திரத்தைச் செவிமடுப்போம்; நிஜமான விடுதலையைச் சம்பாதிப்போம்.
171 முனிவர்களின் வாயிருந்து ஸஹஜமாக (இயல்பாக) வெளிவரும் கதைகள் நம்முடைய அஞ்ஞான மூட்டையின் முடிச்சை அவிழ்த்து, பெரிய துன்பங்கள் வரும்போது தாரக மந்திரமாக அமையும். ஆகவே, இக் காதைகளை இதயத்தில் சேர்த்துவைப்போம்.
172 எதிர்காலத்தில், எவ்வித சக்திகள் எவ்விதமான சோதனைகளைக் கொண்டுவரும் என்பதை நாம் அறியோம். ஏனெனில், ஈதனைத்தும் அல்லாமியாவின் லீலையாகும்; பிரேமையுடைய பக்தர்கள் வெறும் பார்வையாளர்களேõ
173 ஞானபலத்தைப் பெற்றிராமலேயே, நான் ஸகலசக்திகளும் வாய்ந்த ஸத்குருவைப் பெற்றேன். இது தெய்வபலத்தால் நடந்ததென்றா ஏற்றுக்கொள்வது? இல்லவேயில்லைõ இதுவும் அவரது லீலைகளில் ஒன்றேõ
174 இக் காவியத்தின் பிரயோஜனம் என்னவென்று சொல்விட்டேன். அவருடைய உறுதிமொழியையும் விவரமாகச் சொன்னேன். இந்த சந்தர்ப்பத்தில், பாபா அவருடைய தன்மையைப்பற்றியும் தம்மை எப்படி வழிபடுவது என்பதுபற்றியும் வழிகாட்டினார்.
175 கதை கேட்பவர்களேõ அடுத்த அத்தியாயத்தில் ஸ்ரீஸமர்த்த ஸாயீ எப்படி சிர்டீயில் முதன்முறையாகத் தோன்றினார் என்பதுபற்றிக் கேட்பீர்கள்.
176 இளைஞர்களும் முதியவர்களும் அனைவரும் உலகியல் சிந்தனைகளைச் சிறிது நேரம் ஒதுக்கிவைத்துவிட்டுக் கபடமின்றி விசுவாசத்துடன் ஸாயீயின் அசாதாரணமான கதையைக் கேளுங்கள்.
177 இறைவனுடைய அவதாரமான ஸாயீ நிர்விகாரமானவராக1 இருப்பினும், மாயையின் பிடிக்கு உட்பட்டு, உலகியல் வாழ்வில் ஒரு சாதாரண மனிதனைப் போலவே பல வேடங்கள் பூண்டு நடித்தார்.
178 அவருடைய பாதங்களை ''ஸமர்த்த ஸாயீஃஃ என்னும் குறு (சிறிய) மந்திரத்தால் அடைந்துவிடலாம். பக்தர்களைப் பிறவிப்பிணியிருந்து விடுவிக்கும் நூலை இழுப்பவருடைய காதைகள், மிகத் தூய்மையானவை; புனிதமானவை.
179 பொழிப்பாகச் சொன்னால், ஸாயீயினுடைய சரித்திரம் புனிதமானது. இதைப் படிப்பவரும் கேட்பவரும் புண்ணியசாகள்; அவர்களுடைய அந்தரங்கம் சுத்தம் ஆகும்.
180 இக் கதைகள் பிரேமையுடன் கேட்கப்பட்டால், இவ்வுலகத் துன்பங்கள் அழியும்; கிருபாநிதியான ஸாயீ திருப்தியடைவார்; சுத்த ஞானம் தோன்றும்.
181 மசமசப்பு, தாவும் மனம், புலனின்பங்களிலேயே மூழ்கிப்போதல் -- இவையனைத்தும் கவனத்துடன் கேட்பதற்குத் தடங்கல்களாகும். இத் தடங்கல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்; கேள்வி சந்தோஷத்தை அளிக்கும்.
182 விரதங்கள் வேண்டா, விரத முடிவுவிழாக்களும் வேண்டா, உபவாஸம் வேண்டா, உடலை வருத்தவும் வேண்டா. புண்ணியத் தலங்களை தரிசனம் செய்வதற்கான பிரயாணமும் தேவையில்லை; இச்சரித்திரத்தைக் கேளுங்கள்; அதுவே போதுமானது.
183 நம்முடைய பிரேமை கள்ளமில்லாததும் விடாப்பிடியானதுமாக இருக்கவேண்டும்; பக்தியின் ஸாரத்தை கிரஹித்துக்கொள்ள வேண்டும்; விஷமமான அஞ்ஞானத்தை நாசம் செய்யவேண்டும். அப்பொழுதுதான், நமக்கு மனிதப்பிறவியின் உச்ச இலக்காகிய மோக்ஷம் சித்திக்கும்.
184 பிற சாதனைகளில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை; பழைய வினைகளும் புதிய வினைகளும் சுவடேயின்றி அழிந்துவிட, ஸாயீ சரித்திரத்தைக் கேட்போமாகõ
185 பேராசை பிடித்த செல்வந்தன் தான் எங்கிருந்த போதிலும் மறைத்துவைத்த புதையலைப்பற்றியே நினைத்துக்கொண் டிருப்பான். அதேவிதமாக, ஸாயீ நம்முடைய இதயத்தில் வீற்றிருக்கட்டும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'இக்காவியத்தின் பிரயோஜனம் -- காவியம் எழுத பாபா சம்மதம் அளித்ததுஃ என்னும் மூன்றாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.