Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் -7


7.ஸாயீயின் பல்வேறு உன்னத பரிமாணங்கள்


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 புராதனமான கோயில்களைப் புதுப்பிப்பதில் பாபா எவ்வளவு பிரீதியுடையவராக இருந்தார் என்ற முந்தைய காதையின் தொடர்ச்சியை நினைவு கூர்வோம்.

2 பரோபகார ரீதியில் பாபா எவ்வாறு சிரமங்களை மேற்கொண்டார் என்பதுபற்றியும், பக்தர்களுடைய துக்கங்களையும் உபாதிகளையும் தம்முட­ல் ஏற்றுக்கொண்டு அவர்களுக்காகத் தம்முடலை வருத்திக்கொண்டு எவ்வாறு அவர்களைக் காத்தருளினார் என்பதுபற்றியும்,--

3 ஸமாதி நிலையில் எவ்வாறு கண்டயோகம், தோதி-போதி, இத்தியாதி பிரயோகங்களைச் செய்தார் என்பதுபற்றியும், சிலசமயங்களில் உடம்பி­ருந்து தலை, கை, கால் ஆகிய அவயங்களைப் பிரித்தெடுத்து வைத்து, மறுபடியும் அவற்றை முன்போலவே எப்படி ஒன்றுகூட்டினார் என்பதுபற்றியும் இப்பொழுது சொல்கிறேன்.

4 ஹிந்து என்று கருதினால் அவர் பார்வைக்கு ஒரு முஸ்லீமைப்போல இருந்தார்; முஸ்லீம் என்று நினைத்தால் அவர் ஒரு ஹிந்துவின் லக்ஷணங்களுடன் விளங்கினார். இந்த அபூர்வமான அவதாரத்தை எந்தப் பேரறிஞரால் விளக்க முடியும்?

5 அவர் ஹிந்துவா, முஸ்லீமா என்று எவராலும் அணுப்பிரமாணமும் கண்டுபிடிக்க முடியவில்லை; இரண்டு வர்க்கத்தினரையும் அவர் ஒன்றுபோலவே நடத்தினார்.

6 ஸ்ரீராமநவமி ஒரு ஹிந்துப் பண்டிகை; ஆனால், அவர்தான் அதைக் கொண்டாடவைத்தார்õ ஸபா மண்டபத்தில் தொட்டில் கட்டிக் கதாகாலட்சேபமும் நடக்கும்படி செய்தார்.

7 மசூதியின் எதிரி­ருந்த சவுக்கத்தில் தொட்டில் கட்டப்படும்; ஸ்ரீராமஜனன கதாகாலட்சேபம் செய்யவைப்பார். அன்றிரவே முஸ்லீம்களுக்குச் சந்தனக்கூடு (சந்தனக்குடம்) ஊர்வலம் நடத்தவும் அனுமதி தந்தார்.

8 முஸ்லீம்கள் எவ்வளவு பேர்களைச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பேர்களையும் சேர்த்து, சந்தனக்கூடு ஊர்வலம் மரியாதையுடன் நடத்தப்பட்டது. இவ்விதமாக அவர் இரண்டு பண்டிகைகளையும் மகிழ்ச்சியுடன் சரிசமமாகக் கொண்டாடவைத்தார்.

9 ஸ்ரீராமநவமி உற்சவ சமயத்தில் மல்யுத்தப் போட்டிகள் நடத்துவதிலும் குதிரைகள், தோடாக்கள் (கங்கணங்கள்), தலைப்பாகைகள் போன்ற பொருள்களைப் பரிசாக அளிப்பதிலும் மிக மகிழ்ச்சியடைந்தார்.

10 கோகுலாஷ்டமி (ஸ்ரீகிருஷ்ணஜயந்தி) பண்டிகையன்று கோபாலகாலா கொண்டாடவைப்பார். அதுபோன்றே ஈத் பண்டிகையின்போது முஸ்லீம்கள் அவர் வாழ்ந்த மசூதியில் நமாஸ்(ழ) செய்வதற்குத் தடை ஏதும் சொல்லவில்லை.

11 ஒரு முறை முஹர்ரம் பண்டிகை நெருங்கியபோது சில முஸ்லீம்கள் ஒரு தாபூத்தைக் (பாடையைக்) கட்டிக்கொண்டு கிராமத்தினுள் ஊர்வலமாக எடுத்துச் செல்லவேண்டுமென்று விரும்பினர்.

12 பாபாவின் அனுமதி கிடைத்த பிறகு ஒரு பாடை கட்டப்பட்டு நான்கு நாள்கள் வைக்கப்பட்டிருந்தது. ஐந்தாவது நாள், மனத்தில் சுகமும் இன்றி துக்கமும் இன்றி அது கா­செய்யப்பட்டது.

13 முஸ்லீம் என்று நினைத்தால் அவருக்குக் காது குத்தப்பட்டிருந்தது. ஹிந்து என்று நினைத்தால் அவருக்கு ஸுன்னத் செய்யப்பட்டிருந்தது. அவதார புருஷரான ஸாயீ ஹிந்துவுமல்லர்; முஸ்லீமுமல்லர்.

14 ஹிந்துவென்று சொன்னால், அவர் சதா மசூதியிலேயே வாழ்ந்தார். முஸ்லீம் என்று சொன்னால், இரவு பகலாக மசூதியில் அக்கினி எரிந்துகொண் டிருக்கிறது.

15 இந்த மசூதியில் ஏந்திரத்தில் மாவு அரைக்கப்பட்டது; சங்கும் மணிகளும் முழங்கின; அக்கினியில் ஹவிஸ் (படையல்) இடப்பட்டது. இச்சூழ­ல் அவரை முஸ்லீம் என்று எவ்வாறு சொல்லமுடியும்? (மேற்கண்டவை இஸ்லாமிய மதத்தினருக்கு சம்மதம் இல்லாதவை).

16 மசூதியில் ஸதா பஜனை நடந்தது; அன்னதானமும் நடந்தது; ஹிந்துக்கள் அவருக்குப் பாதபூஜை செய்தனர்; அவர் எப்படி முஸ்லீம் ஆக முடியும்?

17 முஸ்லீமாக இருப்பின் உயர்குல பிராமணர்கள் எப்படி அவரை வணங்கினர்? அக்கினிஹோத்திரம்1 செய்யும் வேதம் ஓதிய பிராமணர்கள், மடி, ஆசார நியதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, எப்படி அவருக்கு நமஸ்காரம் செய்தனர்?

18 இவ்விதமாக மக்கள் வியந்துபோனார்கள். இது எவ்வாறு நடக்கமுடியும் என்று நேரில் கண்டுகொள்ள வந்தவர்களும் மேற்சொன்னவாறே நடந்துகொண்டார்கள்õ தரிசனம் செய்தவுடனே ஊமையராகிப்போனார்கள்õ

19 ஸதாஸர்வ காலமும் ஹரியைச் சரணடைந்தவரை ஹிந்துவென்றோ முஸ்லீமென்றோ எவ்வாறு சொல்ல முடியும்? அவர் பிற்படுத்தப்பட்டவராக இருக்கலாம்; பிற்படுத்தப்பட்டோரிலும் பிற்படுத்தப்பட்டவராகவும் இருக்கலாம்; அல்லது ஜாதியே எதுவும் இல்லாதவராகவும் இருக்கலாம்; ஜாதி இவர் விஷயத்தில் அணுவளவுகூடப் பிரமாணம் (மதிப்பிடும் அளவை - சான்று) ஆகாது.

20 தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ, மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை.

21 பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்துவிட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோணமாட்டார்.

22 அடுத்த ஆண்டு விளைச்சல் குறைந்துபோனால் பற்றாக்குறையைச் சரிக்கட்ட உதவுமென்ற நோக்கத்தில், விவசாயிகள் நடப்பு ஆண்டின் அறுவடையைப் பெருமளவில் சேமித்து வைக்கிறார்கள்.

23 அவ்வாறே பாபா ஒரு மூட்டை கோதுமையைக் கொள்முதலாக எப்பொழுதும் வைத்திருந்தார். மாவு அரைப்பதற்கு ஓர் ஏந்திரமும் ச­ப்பதற்கு ஒரு முறமும் ஜல்லடையும் மசூதியில் இருந்தன. வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள்கள் குறைவில்லாமல் இருந்தன.

24 முற்றத்தில் ஓர் அழகான துளசிமாடமும் இருந்தது. அவ்விடத்திலேயே அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான ஒரு தேரும் இருந்தது.

25 பூர்வஜன்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின் பலனாகவே நாம் ஓர் அவதார புருஷரைச் சந்தித்திருக்கிறோம். சாகும்வரை இழந்துவிடாதவாறு, உங்களுடைய மனமென்னும் பெட்டகத்தில் அவரை வைத்து நன்கு பூட்டிவிடுங்கள்.

26 பூர்வஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது. இதுவே நமக்கு மனத்தில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளி­ருந்து விடுதலையையும் அளிக்கிறது.

27 வருங்காலத்தில் எவ்வளவு செல்வச் செழிப்பும் சந்தோஷமும் வந்தாலும், ஸ்ரீ ஸமர்த்த ஸாயீயின் புனித சங்கத்தால் தற்காலத்தில் எனக்கு அருளப்படும் சந்தோஷத்திற்கு எதுவுமே இணையாகாது.

28 தன்னிலேயே மூழ்கி தன்னிலேயே மகிழும் ஸாயீயின் அற்புதமான செயல்பாடுகளை நான் எவ்விதம் முழுமையாக வர்ணிப்பேன்? எவரெவர் அவருடைய பாதங்களிலேயே மூழ்கிய மனத்துடன் இருக்கின்றனரோ, அவரவர் ஸாயீயால் விசுவாசம் நிலைபெறும்படி செய்யப்படுகின்றனர்.

29 தண்டமும் மான்தோலும் ஏந்திய தவசிகள், ஹரித்துவாரம் போன்ற புனிதத் தலங்களில் வசிப்பவர்கள், ஸந்நியாஸிகள், சாமியார்கள், துறவிகள், உதாஸீகள்1, இம்மாதிரியாகப் பலவகையான ஸாதுக்கள் பாபாவிடம் வந்தனர்.

30 பாபா அவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசி நன்றாகப் பழகினார். 'அல்லாமா­க்ஃ அவருடைய உதடுகளில் அகண்டமாகத் தவழ்ந்தது, வாதமும் விதண்டையும் அவருக்குப் பிடிக்காது. அவருடைய தண்டம் (ஸட்கா) கைவீச்சுக்குள்ளேயே எப்பொழுதும் இருந்தது.

31 தவத்தை மேற்கொண்ட அவர், சாந்தமும் தாந்தமும்2 நிறைந்தவராக இருந்தார். அவருடைய பேச்சில் பூரணமான வேதாந்தம் பொழிந்தது. கடைசிவரை பாபாவினுடைய உண்மையான பண்புகளை எவராலும் எடைபோடமுடியவில்லை.

32 அரசனாயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லாவிதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றேõ

33 நற்செய்கையோ அல்லது துர்ச்செய்கையோ, எல்லாருடைய செய்கைகளும் மற்றும் பக்தருக்கு மட்டுமே தெரிந்த மர்மங்களும் பாபாவுக்குத் தெரிந்திருந்தன. அதைப் பற்றிய சூசகமோ குறிப்போ சொல்­ பக்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்.

34 ஒன்றுமறியாதவர் போன்று நடித்த ஞானக்கடல் அவர். உலகம் தம்மை ஏற்றுக் கொள்வதற்காகவும் புகழுக்காகவும் பாடுபடுவதென்பது அவருக்கு மஹா எரிச்சலூட்டிய விஷயம். இதுவே ஸாயீயின் லக்ஷணம்.

35 மனித தேஹத்தில் இருந்தாலும் அவருடைய செய்கைகள் தெய்வங்களுடையதைப் போன்று அபூர்வமானவை. பாபா சிர்டீயில் வாழும் பிரத்யக்ஷமான (கண்கண்ட) தெய்வம் என்றே அனைத்து மக்களும் பா(ஆஏஅ)வித்தனர்.

36 பாபாவினுடைய அற்புதச் செயல்கள் என்னேõ பாமரனாகிய நான் அதை எவ்வளவுதான் வர்ணிக்கமுடியும்õ மூர்த்திகளுக்கும் கோயில்களுக்கும் பாபா செய்த புனருத்தாரணப் பணிகள் அபாரமானவை.

37 சிர்டீயி­ருந்த சனி, கணபதி, சங்கர்-பார்வதி, கிராமதேவி, மற்றும் மாருதி கோயில்களினுடைய சீரமைப்பு தாத்யா பாட்டீல்மூலம் செய்யப்பட்டது.

38 மக்களிடமிருந்து பாபா தக்ஷிணை ரூபமாக வாங்கிய பணத்தில் ஒரு பகுதி தர்ம காரியங்களுக்காகச் செலவிடப்பட்டது; ஒரு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

39 சிலருக்கு 30 ரூபாய், சில பேருக்கு 10 ரூபாய், 15 ரூபாய் அல்லது 50 ரூபாய் என்று, பாபா யாருக்கெல்லாம் கொடுக்கவேண்டுமென்று விரும்பினாரோ அவர்களுக்கெல்லாம் வழங்கினார்.

40 இந்தப் பணம் அனைத்தும் தருமத்தி­ருந்து வந்ததே; வாங்கிக் கொண்டவர்களும் அதை தருமம் என்றே கருதினர். பாபாவும் அத் தொகைகள் நல்ல காரியங்களுக்காகச் செலவிடப்படவேண்டுமென்று விரும்பினார்.

41 இவ்விதமாக ஸாயீ தரிசனத்தினால் சிலர் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் ஆனார்கள்; பலர் குஷ்டரோகத்தி­ருந்து நிவாரணமடைந்தார்கள்; பலர் க்ஷேமத்தை அடைந்தார்கள்.

42 பாபாவின் பாதங்களைப் பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக்கொள்ளாமல் பல குருடர்கள் கண்பார்வை பெற்றனர்; மூ­கைத் தைலம் ஏதும் தேய்க்காமலேயே முடவர்கள் கால்களில் சக்தி பெற்றனர்.

43 பாபாவினுடைய மஹிமை அபாரமானது; எவராலும் அளவிடமுடியாதது. நான்கு திசைகளி­ருந்தும் மக்கள் அவருடைய தரிசனத்திற்காக சிர்டீயை நோக்கி வந்தனர்.

44 காலைக்கடன்களை முடித்தபின், சில நாள்களில் குளித்துவிட்டும், சில நாள்களில் குளிக்காமலும் துனியின் அருகில் ஒரே இடமாக தினமும் தியானத்தில் அமர்ந்திருப்பார்.

45 இடுப்பைச் சுற்றி ஒரு சுத்தமான வேட்டியைக் கட்டிக்கொண்டு, நீளமான சட்டையைப் போட்டுக்கொண்டு, தலையில் அழகான வெள்ளைநிறத் தலைப்பாகை அணிந்துகொண் டிருப்பார். ஆரம்பகாலத்தில் இதுவே அவருடைய உடை.

46 கிராமத்து மக்களுக்கு அவர் நாட்டுமருந்துகளைக் கொடுத்துவந்தார். நோயினுடைய குறிகளை அறிந்து மருத்துவம் செய்து அதில் பெருமளவில் வெற்றியடைந்து புகழ்பெற்ற ஹகீமாகத்1 திகழ்ந்தார்.

47 ஒருமுறை பக்தர் ஒருவருக்குக் கண்கள் இரண்டும் சிவந்து வீங்கிப்போய் நெருப்புக் கோளங்களைப்போல் ஆகிவிட்டன. கண்விழிகளில் ரத்தநாளங்கள் வெடித்துவிடும்போலச் சிவப்பேறிக் கிடந்தன. சிர்டீயில் வைத்தியர் ஒருவரும் கிடைக்கவில்லை.

48 நம்பிக்கையுள்ள எளிமையான பக்தர்கள் அவருடைய கண்களை பாபாவிடம் காண்பித்தனர். உடனே பாபா சேங்கொட்டைக்2 காய்களைக் கொணரச் செய்து அவற்றை அரைத்து இரண்டு உருண்டைகளாகச் செய்துகொண்டார்.

49 இம்மாதிரியான உபாதைக்கு சிலர் சுர்மாவை உபயோகிப்பர்; சிலர் பசும்பாலைப் பஞ்சில் தோய்த்து கண்களின்மேல் வைப்பர்; சிலர் சீதள கற்பூரத்தையோ கண்ணுக்கிடும் மையையோ உபயோகிப்பர்.

50 ஆனால், பாபாவின் உபாயமோ யாருமே கண்டறியாதது. சேங்கொட்டை உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொரு கண்ணாக அப்பி, துண்டுத் துணியால் கட்டுப்போட்டுவிட்டார்.

51 மறுநாள் காலையில் கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களின்மீது தாரையாகத் தண்ணீர் ஊற்றப்பட்டது. வீக்கம் அறவே வடிந்துவிட்டிருந்தது. விழிக்கோளங்கள் நிர்மலமாக ஆகிவிட்டிருந்தன.

52 கண் எவ்வளவு நுட்பமான அங்கம்õ ஆனால், சேங்கொட்டையின் பிசின்கூட எரிச்சலையோ வ­யையோ உண்டாக்கவில்லை. நேத்திரரோகத்தை முழுமையாக நிவாரணம் செய்துவிட்டது; இம்மாதிரி எத்தனையோ அனுபவங்கள்õ

53 பாபாவுக்கு தோதீ-போதீ (ஹடயோகம்) தெரிந்திருந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்குச் சென்று குளியலை முடித்துவிட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டுவருவார். பிறகு குடலை நன்றாகக் கழுவி உலர்வதற்காகத் தொங்கவிடுவார்.

54 மசூதியி­ருந்து கிணறு இருந்த அதே தூரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. ஆலமரத்துக்கப்பால் மற்றொரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுக்கு அவர் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்வார்.

55 நண்பக­ல் கொளுத்தும் வெயி­ல் யாரும் பார்த்துக்கொண் டிருக்கவில்லை என்று தெரிந்துகொண்டு, அவரே கிணற்றி­ருந்து தண்ணீர் இழுத்து முகத்தையும் வாயையும் கழுவிக்கொள்வார்.

56 இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில், அவர் குளிப்பதற்கு உட்கார்ந்து கொண்டிருந்தபோது வேகமாகக் குடல்களை வெளியே எடுத்து அவ்விடத்திலேயே கழுவ ஆரம்பித்தார்.

57 ஓர் ஆடு கொல்லப்படும்போது அதனுடைய குடல்கள் உள்வெளியாகத் திருப்பிக் கழுவப்பட்டு மடிப்பு மடிப்பாக உலர வைக்கப்படும்.

58 அதுபோலவே பாபா குடல்களை வெளியே எடுத்து உள்வெளியாகத் திருப்பி, ஜாக்கிரதையாகக் கழுவிச் சுத்தம் செய்தார். பிறகு, அவர் குடல்களை ஒரு நாவல் மரத்தின்மீது உலர்த்தினார். மக்கள் இதைப் பார்த்து ஆச்சரியமும் பயமும் அடைந்தனர்.

59 இக்காட்சியைத் தம் கண்களாலேயே பார்த்த மனிதர்கள் இன்னும் வாழ்கின்றனர். அபூர்வமான சித்தர் இவர், என்று அவர்கள் சொல்கின்றனர்.

60 சில சமயங்களில் அவர் கைகளையும் கால்களையும் உட­­ருந்து பிரித்துக் கண்டயோகம் பயில்வார். பிரிந்த அவயங்கள் மசூதியில் தனித்தனியாகப் பல இடங்களில் விழுந்துகிடக்கும்.

61 உட­ன் அவயவங்கள் கண்டதுண்டமாக இவ்வாறு விழுந்துகிடக்கும் பயங்கரமான காட்சியைப் பார்க்க, மக்கள் கூட்டங்கூட்டமாக மசூதிக்கு ஓடிவந்தபோது அவர்கள் பார்த்தது பாபாவின் முழுமையான உருவத்தையேõ

62 ஒருசமயம் இந்தக் காட்சியைப் பார்த்த ஒருவர் பீதியடைந்து, யாரோ ஒரு கொலைகாரன் பாபாவைக் கொன்றுவிட்டுத் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுவிட்டான் என்று நினைத்தார்.

63 மசூதியின் நான்கு மூலைகளிலும் உட­ன் அங்கங்கள் இறைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. அது நள்ளிரவு நேரம்; யாருமே அருகில் இல்லை; அவர் மிகக் கவலையுற்றார்.

64 யாரிடமாவது போய்ச் சொல்லலாம் என்று பார்த்தால், சிக்க­ல் மாட்டிக் கொள்ளக்கூடும் என்பது அவருடைய பிரச்சினை. ஆகவே, அவர் மசூதிக்கு வெளியில் போய் உட்கார்ந்துகொண்டார்.

65 அது பாபாவினுடைய யோகப் பயிற்சிகளுள் ஒன்றாக இருக்கலாம், என்று அவருக்குக் கனவிலும் தோன்றவில்லை. சின்னாபின்னமாக வெட்டப்பட்ட உட­ன் காட்சி அவருக்குப் பெரும் பீதியையளித்தது.

66 அவர் கண்டதை யாரிடமாவது சொல்லவேண்டுமென்று அவர் விரும்பினாராயினும், முதற்செய்தி கொடுப்பதால் கொலைக்குற்றம் தம்மீது சாட்டப்படலாம் என்று பயந்தார். இந்த பயமே அவரை எவரிடமும் இச்செய்தியைச் சொல்லமுடியாமல் செய்துவிட்டது.

67 அவருடைய மனத்தில் எண்ணற்ற கற்பனைகள் தோன்றின. ஆகவே, அவர் பொழுது புலர்ந்த பிறகு மறுபடியும் சென்று பார்த்தார்; பெருவியப்படைந்தார்.

68 அவர் ஏற்கெனவே கண்ட காட்சி முழுக்க மறைந்துவிட்டது. பாபா தம்முடைய வழக்கமான இடத்தில் சௌக்கியமாக உட்கார்ந்துகொண் டிருந்தார். தாம் கண்டது ஒரு கனவோ என்று அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார்.

69 தோதி-போதி போன்ற யோகசாதனைகளை பாபா தம் சிறுவயதி­ருந்தே பயின்றுவந்தார். எவராலுமே அவருடைய யோகசக்திகளையும் அச்சக்திகளால் அடையமுடிந்த மர்மமான உடல்நிலைகளையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

70 ஒரு பைஸாவைக்கூட அவர் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை. மருத்துவ ரீதியில் அவருடைய புகழ், அவர் பெற்ற நோய் நிவாரண வெற்றிகளைச் சார்ந்தே வளர்ந்தது. ஏழையெளியவர்களின் நோய் தீர்த்து, ஆரோக்கியம் தந்து, அந்த ஜில்லாவிலேயே (அஹமத்நகர்) சிறந்த ஹகீம் எனப் புகழ் பெற்றார்.

71 ஆனால், இந்த ஹகீம் மற்றவர்களுடைய நல்வாழ்வுக்காகவே வாழ்ந்தார். தமக்கு என்ன கிடைக்கும் என்பதை உதாசீனம் செய்துவிட்டார். மற்றவர்களுக்கு நன்மை நடக்கவேண்டுமென்பதற்காக அவர்களுடைய சகிக்கமுடியாத வ­களையும் அவஸ்தைகளையும் தம்முடைய உட­ல் ஏற்றுக்கொண்டு பொறுத்துக்கொண்டார்.

72 கதை கேட்பவர்களுக்கு நிவேதனமாக, பாபாவின் தயை ஒழுகும் சுபாவத்தையும் எங்கும் நிறைந்த இயல்பையும் எடுத்துக்காட்டுமாறு இந்த சந்தர்ப்பத்தில் புதினமான கதை ஒன்று சொல்கிறேன்.

73 1910ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்னாள் தனத்திரியோதசியன்று பாபா துனியினுள் விறகுகளைப் போட்டுக்கொண்டு ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.

74 திடீரென்று பார்த்தால், கொழுந்துவிட்டுப் பெரிதாக எரிந்துகொண் டிருந்த துனியினுடைய தீயில் பாபாவினுடைய கை செருகப்பட்டிருந்தது. பாபா நிச்சிந்தையாகத்தான் இருந்தார்; கை என்னவோ கடுமையாகக் கருகிப்போய்விட்டது.

75 அவருடைய தொண்டரான மாதவ் இதை உடனே கவனித்தார். அருகி­ருந்த மாதவராவ் தேச்பாண்டேவும் இதைப் பார்த்துவிட்டு, உடனே பாபாவை நோக்கி ஓடினார்.

76 பாபாவுக்குப் பின்பக்கமாகச் சென்று, தம்முடைய இரு கைகளையும் பாபாவின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கோத்து பாபாவைப் பின்னுக்கு இழுத்தார்.

77 ''ஆஹாõ பாபா என்ன காரியம் செய்துவிட்டீர்?ஃஃ என்று கூவினார். இக் கூவலைக் கேட்ட பாபா, மோனநிலையி­ருந்து திரும்பி, ''ஓ சாமா, உனக்குத் தெரியுமா? ஒரு குழந்தை அதன் தாயினுடைய கையி­ருந்து திடீரென்று நழுவிக் கொல்லனுடைய உலைக்களத்தில் விழுந்துவிட்டது.--

78 ''தன் கணவன் சத்தம்போட்டதைக் கேட்ட அவள் பயந்து நடுங்கி, துருத்தியை வேகமாக (குழந்தையைக் கையிடுக்கில் வைத்துக்கொண்டே) இயக்கினாள்.--

79 ''அவ்வாறு செய்யும்போது அவளையுமறியாமல் கையில் இடுக்கிக்கொண் டிருந்த குழந்தையை மறந்துவிட்டாள். மிதமிஞ்சிய சுறுசுறுப்பான, அமைதியற்றிருந்த குழந்தை, கையி­ருந்து விழுந்துவிட்டது. ஆனால், சாமா, அப் பெண்குழந்தை விழுந்தவுடனேயே நான் குழந்தையைத் தூக்கிவிட்டேன்.--

80 ''அவ்வாறு அப் பெண்குழந்தையை உலைக்களத்தி­ருந்து எடுக்கும்போது இது நடந்துவிட்டதுõ கை எரிந்து கருகிப்போனால் போகட்டும்; குழந்தை உயிர் பிழைத்ததேõஃஃ

81 'யாரால், எந்த விதமாக, தீக்காயமடைந்த கைக்கு வைத்தியம் செய்யப்படவேண்டும்?ஃ என்றெண்ணி மாதவராவ் பிரமித்துப்போனார். நானா சாந்தோர்க்கருக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று தீர்மானித்தார்.

82 சாந்தோர்க்கருக்கு அவர் விவரமான கடிதம் ஒன்று எழுதினார். சாந்தோர்க்கரும் உடனே கிளம்பி, பரமானந்த் என்னும் பிரஸித்தபெற்ற டாக்டரை அழைத்துக்கொண்டு சிர்டீக்கு வந்தார்.

83 தீக்காயத்தின் எரிச்சலை அடக்கக்கூடிய பலவிதமான மருந்துகளை எடுத்துக் கொண்டு, டாக்டர் பரமானந்தையும் கூட அழைத்துக்கொண்டு, நானாஸாஹேப் சாந்தோர்கர் சிர்டீக்கு வந்து பாபாவின் எதிரில் நின்றார்.

84 பாபாவை வணங்கிவிட்டு, குசலம் விசாரித்துவிட்டுத் தாம் வந்த காரியம் என்ன என்பதையும் விளக்கி, தீக்காயம் ஏற்பட்ட கையைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

85 ஏற்கெனவே, தீக்காயம்பட்ட அன்றே பாகோஜி சிந்தே பாபாவின் கைக்கு நெய் தடவி ஓர் இலையைச் சுற்றி அதன்மேல் இறுக்கமாகக் கட்டுப்போட்டிருந்தார்.

86 கட்டுகளைப் பிரித்துக் கையைப் பார்த்தபின், டாக்டர் பரமானந்திற்கும் காண்பிக்க வேண்டும்; முறையான மருத்துவம் ஆரம்பிக்கப்பட வேண்டும்; பாபா சீக்கிரமாகக் குணமடைய வேண்டும்.--

87 இந்த நல்லெண்ணத்துடன் நானா பாபாவைப் பலவிதமாகக் கெஞ்சி வேண்டிக்கொண்டார். டாக்டர் பரமானந்தும் கையின் நிலைமையைப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கட்டுகளைப் பிரித்துவிட பாபாவைத் தூண்டும் வகையில் பலமுறைகள் முயன்றார்.

88 பாபா, ''அல்லாவே நம் வைத்தியர்ஃஃ என்று திரும்பத் திரும்ப விளம்பிக்கொண்டு, ''நாளைக்குப் பார்க்கலாம், நாளைக்குப் பார்க்கலாம்ஃஃ என்று சொல்­ இழுத்தடித்துவிட்டார். அவருடைய கையை டாக்டரிடம் காட்டவே இல்லை; இதுபற்றி பாபாவுக்கு வருத்தமும் ஏதும் இல்லை.

89 டாக்டர் பரமானந்த் கொண்டுவந்த மருந்துகள் சிர்டீயின் காற்றை சுவாசிக்கவே இல்லை. ஆனால், இந்நிகழ்ச்சியின் மூலமாக அவர் ஸாயீதரிசனம் செய்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்தது போலும்õ

90 பாகோஜிக்கு மட்டுமே பாபாவுக்கு தினமும் ஸேவை செய்யும் உரிமை அளிக்கப்பட்டது; ஆகவே, பாகோஜி மட்டுமே தினமும் கையை உருவிவிடுவார். இதன் விளைவாக சில நாள்களில் கை குணமடைந்தது. எல்லாரும் நிம்மதியடைந்து சந்தோஷப்பட்டனர்.

91 கை குணமடைந்த பின்னரும், தினந்தோறும் காலைவேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுகளைப் பிரிக்கவைத்து, உருவிவிடப்பட்டபின், மறுபடியும் கட்டுகளைப் போட்டுக்கொள்ளவைத்த பாபாவின் தணியாத ஆவல் என்னவாக இருக்கமுடியும் என்று யாருக்கும் தெரியாதுபோயிற்று.

92 வ­யோ புண்ணோ எதுவுமே இல்லாத உறுப்பு, தினமும் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கப்பட்டது. தீக்காயமோ அல்லது புண்ணோ இல்லாத இடத்தில் தினமும் நெய் தடவி உருவப்பட்டது. இந்த ஸேவை பாபா மஹாஸமாதி அடையும்வரை தொடர்ந்ததுõ

93 சித்தராகிய ஸாயீக்கு பாகோஜியினுடைய ஸேவை தேவையே இல்லை. இருப்பினும், பக்தர்களின் நல்வாழ்வுபற்றிய ஆழ்ந்த அக்கறையால், பாகோஜியை இந்த ஸேவையைச் செய்ய அனுமதித்தார்.

94 பூர்வஜன்மங்களில் செய்த மஹா பாவங்களினால் பாகோஜி குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். ஸாயீயின் சகவாசமாகிய விசேஷமான பாக்கியம் அவருக்குக் கிடைத்தது பெரும் புண்ணியமே.

95 பாபா தினமும் லெண்டிக்குப் போய்வந்தபோது பாகோஜி அவருக்குக் குடை பிடித்துக்கொண்டே செல்வார். உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்ட புண்கள் நிறைந்திருந்தன; ஆயினும், அணுக்கத் தொண்டர்களில் முதல்வர் அவரேõ

96 தினந்தோறும் காலைவேளையில் பாபா துனிக்கருகில் இருந்த தூண்மீது சௌகரியமாகச் சாய்ந்துகொண்டு உட்கார்ந்தவுடன், பாகோஜி ஸேவை செய்ய வந்துவிடுவார்.

97 கால்களி­ருந்தும் கைகளி­ருந்தும் கட்டுகளைப் பிரித்துவிட்டு, நெய் தடவிப் பிடித்துவிடுவார். இவ்விதமாக பாகோஜி ஸேவை செய்தார்.

98 பூர்வஜன்மத்தில் மஹாபாபிஷ்டரான பாகோஜி, உடல் முழுவதும் ரத்தக் குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட பெருவியாதியஸ்தரானாலும், பாபாவின் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார்.

99 கால்விரல்கள் அனைத்தும் குஷ்டரோகத்தால் அழுகி விழுந்துவிட்டன. உடல் சகிக்க முடியாத துர்நாற்றம் அடித்தது; அவ்வளவு துர்ப்பாக்கியமானவருக்கு பாபாவுக்கு ஸேவை செய்து மகிழும் மகத்தான பாக்கியம் கிடைத்தது.

100 ஓ, நான் எத்தனை அற்புதமான லீலைகளை விவரிப்பேன்õ ஒருசமயம் பிளேக் கொள்ளைநோய் கிராமத்தைத் தாக்கியது. அப்பொழுது நடந்த அற்புதமொன்றைக் கேளுங்கள்õ

101 தாதாஸாஹேப் காபர்டேவின்1 பாலகன், பாபாவின் ஸஹவாஸத்தில் தாயாருடன் ஆனந்தமாக சிர்டீயில் இருந்தான்.

102 பாலகன் மிகச் சிறியவன், தாப ஜுரத்தால் தவித்தான்; தாயார் (காபர்டேவின் மனைவி)2 மனமுடைந்துபோய் அவஸ்தைப்பட்டாள்.

103 அவளுடைய இல்லம் அமராவதியில் இருந்தது; வீடு திரும்பிவிடவேண்டும் என்று நினைத்தாள். ஆகவே, சாயங்கால நேரத்தில் தகுந்த வாய்ப்புக் கிடைத்தபோது பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக வந்தாள்.

104 பாபா மாலையில் சுற்றி வந்துகொண் டிருந்தபோது சத்திரத்துக்கருகில் வந்தார். காபர்டேவின் மனைவி பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, நடந்த விஷயத்தைச் சொன்னாள்.

105 இயல்பாகவே பெண்கள் பயந்த சுபாவமுள்ளவர்கள். குழந்தையினுடைய ஜுர நடுக்கம் நிற்கவேயில்லை. போதாததற்குக் கொடுமையான பிளேக் நோயைப்பற்றிய பீதியும் இருந்தது. குழந்தையினுடைய ஜுரத்தைப்பற்றியே மீண்டும் மீண்டும் முறையிட்டாள்.

106 பாபா கனிவுடன் இயம்பினார், ''வானம் மேகமூட்டமாக இருக்கிறது; ஆனால், மழை பெய்து விளைச்சலைக் கொண்டுவரும்; மேகங்கள் மறைந்துவிடும்.--

107 ''எதற்காக பயப்படவேண்டும்?ஃஃ என்று சொல்­க்கொண்டே தம்முடைய கப்னியை இடுப்புவரை தூக்கி, சிவந்துபோயிருந்த வீக்கங்களைக் காண்பித்தார்.

108 கோழி முட்டையளவில் நான்கு சிவந்த வீக்கங்கள் நான்கு இடங்களில் பரவியிருந்தது தெரிந்தது. ''பாருங்கள், உங்களுடைய உபாதைகளை எல்லாம் நான் என்மீதே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதுஃஃ என்று பாபா கூறினார்.

109 இந்த தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்õ

110 ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியதுõ பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்õ

111 ஒரு சமயம் நானாஸாஹேப் சாந்தோர்க்கர்1 நந்துர்பாரி­ருந்து பண்டர்பூருக்குச் சென்றார்.

112 நானா ஒரு பரம பாக்கியசா­õ பாபாவிடம் அவர் வைத்திருந்த பக்தியும் செய்த ஸேவையும் பலனளித்துவிட்டன. மஹாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டம் அவருக்கு பூமியிலேயே கிடைத்துவிட்டது. அவர் பண்டர்பூருக்கு மாம்லத்தாராக2 நியமிக்கப்பட்டார்.

113 நந்துர்பாருக்கு வந்த உத்தரவில், உடனே பண்டர்பூருக்குச் செல்லவேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. அவர் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலுடன் கிளம்பினார்.

114 சிர்டீயே அவருக்கு முதல் பண்டர்பூர். ஆகவே, முத­ல் பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் அவர் கிளம்பினார்.

115 ஆயினும், சிர்டீக்குக் கடிதம் எழுதவில்லை; தமது வரவுபற்றிச் செய்தியும் அனுப்பவில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அவசரமாக ரயிலேறிவிட்டார்.

116 நானா நந்துர்பாரி­ருந்து இவ்விதமாக அவசரமாகக் கிளம்பிவிட்டார் என்று சிர்டீயில் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஸாயீயினுடைய கண்கள் எங்கும் இருந்ததால் அவருக்கு எல்லா நடப்புகளும் தெரிந்திருந்தன.

117 நானா அவசரமாகக் கிளம்பி நிம்காங்வ் எல்லைக்கு வந்து சேர்ந்திருப்பார்; சிர்டீயில் ஓர் அதிசயம் நிகழ்ந்ததுõ கேளுங்கள்.

118 மஹால்ஸாபதி, ஆபா சிந்தே, காசிராம் ஆகிய பக்தர்களுடன் பாபா மசூதியில் இருந்தார்.

119 திடீரென்று பாபா சொன்னார், ''வாருங்கள், நாம் நால்வரும் சேர்ந்து பஜனை பாடுவோம். பண்டர்பூர் கோயில் கதவுகள் திறந்திருக்கின்றன. மகிழ்ச்சியுடன் பஜனை செய்துகொண்டே இருப்போம்.ஃஃ

120 நடந்ததையும் நடப்பதையும் நடக்கப்போவதையும் நன்கறிந்த ஸாயீ, நானா சாந்தோர்க்கர் வரப்போவதை அறிந்திருந்தார். நானா கிராமத்தின் எல்லையி­ருந்த ஓடையை வந்தடைந்தபோது, பாபா திடீரென்று பஜனை பாடுவதில் மிகுந்த உற்சாகம் காட்டினார்.

121 பாபா தாமே பல்லவியைப் பாடினார்; கூட இருந்த பக்தர்கள் பின்பாட்டுப் பாடினர். எல்லாருக்கும் பண்டரி விடோபாவின்மேல் அன்பும் பக்தியும் பொங்கியது. திடீரென்று நானா வந்துசேர்ந்தார்.

122 குடும்பத்தினருடன் பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கி, ''மஹராஜ், எங்களுடன் பண்டர்பூருக்கு வாருங்கள்; அங்கு நிச்சிந்தையாக எங்களுடன் வாழுங்கள்ஃஃ என்று வேண்டினார்.

123 ஆனால், இந்த வேண்டுகோள் தேவைப்படவில்லைõ அங்கிருந்தவர்கள், பாபா பண்டர்பூர் போவதற்குக் காட்டிய உற்சாகத்தைப்பற்றியும் அந்த உற்சாகம் எழுப்பிய பஜனையைப்பற்றியும் நானாவுக்குத் தெரிவித்தார்கள்.

124 நானா சாந்தோர்க்கர் பெருவியப்படைந்தார். பாபாவினுடைய லீலை அவரைப் பேராச்சரியம் அடையச்செய்தது. உணர்ச்சி வசப்பட்டுத் தொண்டை அடைத்தது. சிரம் தொடுமாறு பாபாவின் பாதங்களில் வணங்கினார்.

125 பாபாவினுடைய ஆசிர்வாதங்களையும் உதீயையும் பிரஸாதத்தையும் பெற்றுக்கொண்டபின், நானா பண்டர்பூர் செல்வதற்கு விடைபெற்றுக்கொண்டார்.

126 இவ்வாறு நான் எல்லாக் காதைகளையும் சொல்­க்கொண்டே போனால் இக்காவியம் மிக விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, பாபா மற்றவர்களுடைய துன்பத்தை நிவாரணம் செய்த லீலைகள் என்னும் பொருளை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

127 இந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்வோம்; பாபாவினுடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை. அடுத்த அத்தியாயத்தில் என்னுடைய நன்மைக்காக பலவிதமான காதைகளை நான் சொல்லப் போகிறேன்.

128 ஓ, என்னுடைய இந்த அஹங்காரம்õ எவ்வளவு முயன்றாலும் என்னால் இதை வெல்லமுடியவில்லை. யார் இந்த 'நான்ஃ? எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லையேõ வாஸ்தவத்தில் ஸாயீயே தம்முடைய காதையைத் தாமே சொல்லப்போகிறார்.

129 மனிதப் பிறவியின் மஹிமையையும் தாம் பிச்சையெடுத்த விவரங்களையும் பாயஜாபாயியின் ஒருமுகமான பக்தியைப்பற்றியும் தாம் உணவுண்ட முறையைப்பற்றியும் அவர் விவரிக்கப்போகிறார்.

130 பாபா எவ்வாறு மஹால்ஸாபதியுடனும்1 தாத்யா கோதே பாடீலுடனும் மசூதியில் உறங்கினார் என்பதுபற்றியும் கேளுங்கள்.

131 ஹேமாட் ஸாயீயை முழுமையாக சரணடைகின்றேன்; ஸாயீ பக்தர்களின் கால்களில் இருக்கும் காலணியாக என்னைக் கருதுகிறேன். அடியேனுக்கு ஸாயீயின் திருவாய்மொழியே பிரமாணமாகும். இவ்வாறாக, ஸாயீயின் காதை பிரவசன ரூபத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டது.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ''ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃஃ என்னும் காவியத்தில், 'பலவிதமான கதைகளின் விவரணம்ஃ என்னும் ஏழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play