TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
அத்தியாயம் - 14
14. பக்தருக்குப் புத்திரபாக்கியம் அருளிய லீலை
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 ஸாயீநாதா, ஞானிகளில் உத்தமரே, ஜய ஜயõ தயாளரே, குண கம்பீரரே, ஜய ஜயõ நிர்விகாரரே, அப்பாலுக்கும் அப்பாற்பட்டவரே, ஜய ஜயõ எல்லையற்றவரே, மாசிலாமணியே, ஜய ஜயõ
2 நிஜமான பக்தர்களின் மீதுள்ள தயையினால், அவர்களால் கண்டறிய முடியாதவற்றை மனத்திற்கொண்டு அவர்களை சங்கடங்களிருந்து விடுவிப்பதற்காகப் பல உருவங்களில் தோன்றுகிறீர்.
3 தீனர்களை உத்தாரணம் (தீங்கினின்றும் மீட்கை) செய்வதற்காகவும் பக்தர்களுக்குள்ளே இருக்கும் அரக்கத்தனம், கெட்ட புத்தி, துர்நடத்தையைத் தூண்டும் பூர்வஜன்ம வாசனைகள் இவற்றை வதம் செய்வதற்காகவும் தோன்றிய லீலாவதாரமே நீர்.
4 எவரெல்லாம் தூய மனத்துடன் ஸாயீ தரிசனத்திற்கு வந்தனரோ அவரெல்லாம் ஆத்மானந்த ரஸத்தைப் பருகினர்; உள்ளே ஆனந்தம் நிரம்பி வழிந்தது; அன்பினால் கண்ட சுகத்தில் ஊஞ்சலாடினர்.
5 ஹீனனும் தீனனுமாகிய நான், இக்குணங்கள் நிரம்பிய ஸமர்த்த ஸாயீயினுடைய பொற்பாதங்களில் சரணாகதியாக ஸாஷ்டாங்கமாக விழுந்து மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம் செய்கிறேன்.
6 மலேரியா ஜுரத்தால் பீடிக்கப்பட்ட பக்தர், கறுப்புநாய் தயிர்ச்சோறு தின்றதால் குணமடைந்த (முன்பு சொன்ன) காதையிருந்து நான் இப்பொழுது தொடர்கிறேன்.
7 பயங்கரமான காலராநோய், அவர் ஆட்காட்டி விரலை உயர்த்தியதாலும் தரண்1 குடிக்க வைத்ததாலும் வறுத்த வேர்க்கடலையைத் தின்பதற்குக் கொடுத்ததாலும் மறைந்துவிட்டது எவ்வாறு என்பதுபற்றியும்,--
8 அதுபோலவே, ஒருவருடைய சூலைநோய், மற்றொருவருடைய காதுவ, இன்னொருவருடைய க்ஷயரோகம் ஆகியவை தரிசனமாத்திரத்திலேயே எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதுபற்றியும்,--
9 எவ்வாறு ஸாயீயினுடைய அருளால் பீமாஜீ சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தார் என்பதையும், எவ்வாறு அவர் நன்றியுணர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் ஸாயீ பாதங்களில் சரணடைந்தார் என்பதையும் சொன்னேன்.
10 சொல்லப்போகும் நிகழ்ச்சியும் அதுபோன்றே விநோதமானது. யாரும் ஏற்கெனவே கண்டிராத அற்புதம். கதை கேட்பவர்கள் மேலும் கேட்பதற்கு எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், அதை இப்பொழுது சொல்கிறேன்.
11 கேட்பவர்களுக்கு ஆர்வமில்லையெனில், கதை சொல்பவர் எப்படி உணர்வூட்டப் படுவார்? கதை எவ்வாறு சிறக்கும்? எவ்வாறு ரஸபூர்ணமாக (ஆனந்தம் நிரம்பியதாக) இருக்கும்?
12 இந்நிலையில் பிரவசனம் செய்பவர் என்ன செய்யமுடியும்? அவர் முழுக்க முழுக்கக் கேட்பவர்களின் ஆதீனத்தில் அன்றோ இருக்கிறார். கதை கேட்பவர்களே அவருக்கு முக்கிய ஆதாரம்; அவர்களுடைய உற்சாகத்தினால்தான் கதை இனிமை நிரம்பியதாகிறது.
13 ஒரு ஞானியின் சரித்திரமாக இருப்பதால், சுபாவத்திலேயே காதை உள்ளும் புறமும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில், அவருடைய வாழ்க்கை நெறி, ஆஹாரப் பழக்கம், நடத்தை, போக்குவரத்து அனைத்துமே கவர்ச்சியானவை. அவருடைய ஸஹஜமான சொல்லே இனிமையானது.
14 இது வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று; ஆத்மானந்தத்தின் ஜீவனாகும். இதை தயாஸாகரமான ஸாயீ மஹராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன் பொழிந்திருக்கிறார்.
15 பிரவிருத்தி மார்க்கத்தைப்பற்றிப் (உலகியல் வாழ்முறைபற்றிப்) பேசியே அவர்களுக்கு நிவிர்த்தி மார்க்கத்தை (ஆன்மீக வாழ்முறையை)க் காண்பித்தார். ஸத்புருஷர்களின் கதைகள் இவ்விதமாக, இவ்வுலக வாழ்வையும் பரவுலக வாழ்வையும்பற்றிப் பேசும்.
16 இவ்வுலக வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதே இக்காதைகளின் நோக்கமாக இருக்கவேண்டும்.
17 அனந்தமான புண்ணியங்களின் பலத்தால் நரஜன்மம் எதிர்பாராமலேயே ஏற்படுகிறது. மனிதன் மேற்கொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்தால் அது மிகப்பெரும் பாக்கியம்.
18 இந்த நல்வாய்ப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளாதவன் தன்னைப் பூமிக்கு அர்த்தமற்ற பாரமாக்கிக்கொள்கிறான். அவன் பெறும் மகிழ்ச்சி, ஒரு மிருகத்தின் மகிழ்ச்சியைவிட எப்படி அதிகமாக இருக்கமுடியும்?
19 அம்மாதிரியான மனிதன் கொம்புகளும் வாலும் இல்லாத மிருகமே அல்லனோõ அவனுக்கு உண்பதும் உறங்குவதும் பயப்படுவதும் சிற்றின்பச் சேர்க்கையும் அல்லால் வேறெதுவும் தெரியாது.
20 ஓõ நரஜன்மத்தின் மஹிமைதான் என்னேõ பக்தியும் இறை வழிபாடும் முக்தியடைவதும் இந்த நரஜன்மத்தின் மூலமாகத்தான் லாபமாகும்; தன்னையறிதலும் இதன் மூலமாகவே.
21 மேகமண்டலத்தில் கணநேரமே ஒளிரும் மின்னலைப் போன்று நிலையில்லாதது இம்மனித வாழ்க்கை. பூமியில் வாழும் மனிதர்கள் காலன் என்னும் ஸர்ப்பத்தால் விழுங்கப்பட்டிருப்பதால், கணமேனும் சுகம் காண்பதரிது.
22 மாதா, பிதா, சகோதரன், சகோதரி, மனைவி, மகன், மகள், மாமன் ஆகியவர்களனைவரும் நதிப்பிரவாஹத்தில் கட்டைகள் அடித்துக்கொண்டு வருவதுபோல் குறுகிய காலத்துக்கு ஒன்றுசேர்கிறார்கள்.
23 ஒரு கணத்தில் கட்டைகள் ஒன்றுசேர்கின்றன; அடுத்த கணமே அலைகளால் சிதறியடிக்கப்படுகின்றன. ஒருமுறை பிரிவினை வந்துவிட்டால், மறுபடியும் முன்போன்றே ஒன்றுசேர்வது என்பது நடக்காத காரியம்.
24 ஆத்மாவுக்கு ஹிதமானதை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரஸவ வயைக் கொடுத்தது வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையாவிடின் அவனுடைய வாழ்க்கையே வீண்.
25 ஒரு பிராணி பிறந்தவுடனே, சாவின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. 'சாவு இன்று வராது, நாளைக்கோ அல்லது நாளைமறுநாளோதான் வரும்ஃ என்று நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.
26 காலனைப்பற்றிய நினைவு மனத்தைவிட்டு மறைய வேண்டா. இந்த தேஹமானது கேவலம் காலனுக்கு உணவே. இதுதான் இவ்வுலக வாழ்வின் லக்ஷணம். ஆகவே உஷார்õ
27 எவர் உலக விவகாரங்களை விவேகத்தோடும் ஞானத்தோடும் அணுகுகிறாரோ, அவர் பிரயாசையின்றியே ஆன்மீக முன்னேற்றம் அடைவார். ஆகவே, உலகியல் விவகாரங்களில் மந்தமோ சோம்பேறித்தனமோ உதவாது. மனித வாழ்வின் நான்கு புருஷார்த்தங்களில் (அறம் - பொருள் - இன்பம் - வீடு) ஆர்வமின்மையோ உதாசீனமோ உதவாது.
28 ஸாயீயின் காதைகளைப் பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்க்கையில் உயர்ந்த சிரேயசை (மேன்மையை) அடைவார்கள். அவர்களுக்கு ஸாயீயின் பாதங்களின்மேல் பக்தி வளர்ந்து சந்தோஷமென்னும் பெருநிதி அவர்களுடையதாகும்.
29 ஸாயீயின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்கதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களை நினைவுகொள்வார்கள்.
30 இக்காதைகள் நிசப்தமானதைப்பற்றிய சப்தம் மிகுந்த வர்ணனை; இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதை இந்திரியங்களால் சுவைத்த அனுபவம். ஆகவே, இந்த அமிருதபானத்தை எவ்வளவு அருந்தினாலும் திருப்தி கிடைப்பது துர்லபம் (அரிது)õ
31 ஞானிகளுடைய மஹிமை சொல்லுக்கப்பாற்பட்டது; அவர்களுடைய லீலையோ கற்பனைக்கப்பாற்பட்டது; வார்த்தைகளால் முழுமையாக விளக்கும் ஸாமர்த்தியம் யாருக்கு உண்டு?
32 இக்காதைகள் எப்பொழுதெல்லாம் காதில் விழுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் ஸாயீ கண்முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவுபகலாக நிலைத்துவிடுவார்.
33 கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்றுவந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.
34 இவ்வாறு அவரை நிதித்யாஸனம் (ஈடுபாட்டுடன் திரும்பத் திரும்பச் செய்யப்படும் தியானம்) செய்தால் உம்முடைய மனம் உன்மன1 நிலையில் நுழைந்துவிடும். அனுதினமும் இவ்வாறு நடப்பின், உம்முடைய மனம் ஸச்சிதானந்தத்தில் கலந்துவிடும்.
35 இப்பொழுது, முந்தைய அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடப்பட்ட காதையை ஆரம்பிப்போம். கேட்பவர்களேõ பயபக்தியுடன் கேளுங்கள்.
36 பா(ஆஏஅ)வ2 பக்தியென்பது, சிராபுரீ (ரவாகேசரியும் பூரியும்) தின்பதைப் போன்றது. எவ்வளவு அதிகமாகத் தின்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவலும் பெருகும். தொண்டைவரை தின்றாலும் முழுத்திருப்தி கிடைக்காதுõ
37 ஆகவே, கதை கேட்பவர்களேõ இன்னுமொரு காதையை நீங்கள் பயபக்தியுடன் கேட்டால் ஞானிகளை தரிசனம் செய்வது எவ்வளவு நன்மையை அளிக்கக்கூடியது என்பதுபற்றி திடமான நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
38 வெளிப்பார்வைக்கு, பாபா ஏதும் செய்யாதவர் போலவே தெரிந்தார். தம்முடைய ஆஸனத்தை விட்டு எங்கும் வெளியே போகவில்லை. ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே அவருக்கு எங்கு நடப்பதும் தெரிந்திருந்தது. ஸகல ஜனங்களுக்கும் இதை அவர் அனுபவத்தால் காண்பித்தார்.
39 ஸத் என அழைக்கப்படும் முழுமுதற்பொருள் நம்முள்ளே இருப்பதுபோன்றே பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கிறது. இதை எப்பொழுதும் மனத்திற்கொண்டு, இறைவனின் ஸேவைக்கு உடலை அர்ப்பணம் செய்துவிடுங்கள்.
40 'ஸத்ஃ எனும் தத்துவத்திடம் (முழுமுதற்பொருளிடம்) சரணடைந்தவர் எப்பொருளிலும் எம்மனிதரிலும் ஒன்றையே பார்ப்பார். 'பலஃ என்னும் தத்துவத்தைக் கைக்கொள்பவர் ஜனனமரணச் சுழல் மாட்டிக்கொள்வார்.
41 துவைதத்தை (இறைவன் வேறு, மனிதன் வேறு என்னும் தத்துவம்) நிர்த்தாரணம் செய்யும் புத்தியானது அஞ்ஞானமேயன்றி வேறெதுவும் இல்லை. குருவினிடம் செல்வதால் சித்தம் சுத்தமடைகிறது; தன்னையறியும் ஞானம் பிறக்கிறது.
42 அவித்யையிருந்து (அஞ்ஞானத்திருந்து) விடுபடுவதே 'இருப்பது ஒன்றேஃ என்ற ஞானம் பெறும் வழி. அணுவளவு பேதபுத்தி இருப்பினும், இருப்பதனைத்தும் இறைவனே என்ற நிலையை எவ்வாறு உணரமுடியும்?
43 பிரம்மாவிருந்து (படைக்கும் கடவுள்) நகராப் பொருள்கள்வரை அனைத்தையும் எக்கோணத்தில் பார்த்தாலும் முழுமுதற்பொருளே. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு குணாதிசயங்களைக் காட்டுவதால், விவேகம் இல்லாதவர்களுக்கு அவை முழுமுதற்பொருளிருந்து வேறுபட்டனவாகத் தெரியலாம்.
44 எது ஸகல விஞ்ஞானங்களையும் சுபாவத்தினாலேயே அறிந்திருக்கிறதோ, எது பெயரையும் உருவத்தையும் இழந்து நிற்கிறதோ, எதற்கு ஸம்ஸார தர்மம் என்பது இல்லையோ, அதுவே பகுதியும் விகுதியும் இல்லாத பிரம்மம் (முழுமுதற்பொருள்).
45 சுபாவத்தினால் 'தான் வேறுஃ என்று நினைத்துக் கொள்வதாலும், அஞ்ஞானத்தாலும் மோஹத்தாலும் விளையும் தவறுகளாலும், துவைத மாயையால் தடம் புரண்ட மனம், ஏகத்துவ போதனையால் அமைதியையும் சாந்தியையும் அடைகிறது.
46 இவ்வுலகத்தையே ஒன்றாகவும் ஒரேசக்தி நிரம்பியதாகவும் நினைத்து, 'நான் வேறு மற்ற ஜனங்கள் வேறுஃ என்று நினைக்காதவர், தன்னிருந்து வேறுபட்டதாக எதையும் காண்பதில்லை.
47 பெயரையும் உருவத்தையும் செயல்புரிவதையும் தடங்கல்களாகக் கருதி, துவைத பா(ஆஏஅ)வனையை அடியோடு விட்டுவிடுவதே முழுமுதற்பொருளுடன் ஐக்கியமாவதாகும்.
48 ''நான் ஒருவனே இருக்கிறேன்; நான் இல்லாத இடமே இல்லை; பத்துத் திசைகளிலும் நான் வியாபித்திருக்கிறேன்; என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை.ஃஃ (அத்துவைதத்தின் சிகரம்)
49 இந்த பா(ஆஏஅ)வனையை திடமாகப் பற்றிக்கொள்; மயக்கம் தரும் மாயையை உதறித் தள்ளிவிடு. 'என்னைத் தவிர வேறெந்த வஸ்துவும் இங்கில்லைஃ என்பதை மனத்திற்கொண்டு உன்னையே அறிவாயாகõ
50 எங்கிருந்து இந்த துவைத பா(ஆஏஅ)வனை எழுகிறது? கதை கேட்பவர்களுக்கு இந்த ஸந்தேஹம் எழுவது ஸஹஜமே. பிரம்மம், அறிந்துகொள்ளப்பட வேண்டியது; ஜீவன், அறிந்துகொள்ள முயல்பவன். எந்த உபாயத்தினால் துவைத பா(ஆஏஅ)வனையை விலக்கிவிட முடியும்?
51 பேதபுத்தி சிறிதளவு இருந்தாலும் 'ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லைஃ என்னும் நம்பிக்கையை அழித்துவிடும். மேலும், பிரித்துப் பார்க்கும் மனப்பான்மையை வளர்த்து ஜனனமரணச் சுழலுக்குக் காரணமாகிவிடும்.
52 அஞ்ஞான நோக்கை அகற்றிவிட்டால், ஸகல சிருஷ்டியும் கரைந்துபோய்த் 'தானும் பிறவும் ஒன்றேஃ என்ற காட்சி தோன்றும். துவைத மாயை உடனே அகன்றுவிடும்.
53 சுத்தமான நீரில் சுத்தமான நீரைக் கலந்தால், இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. முன்பு இருந்த நிலையும் பின்பு ஏற்பட்ட நிலையும் எவ்வித வித்தியாசமுமின்றி ஒன்றேயாகிவிடுகிறது.
54 விறகுகட்டைகள் உருவத்தில் வேறுபடலாம்; ஆனால், அக்கினி சொரூபத்தில் எந்த வேறுபாடும் இல்லை. அவற்றின் தனித்தன்மையையும் உருவ வேறுபாடுகளையும் இழந்துவிட்டு அக்கினி சொரூபமாகவே ஆகிவிடுகின்றன.
55 அதுபோலவே, ஆத்தும ஐக்கிய விஞ்ஞானத்திற்கு வேறெந்த நிரூபணமும் தேவையில்லை. ஆத்மா எல்லா உயிர்களிலும் உறைகிறது; ஆனால், எப்பொழுதும் உருவமற்ற நிலையில்தான் இருக்கிறது.
56 விபரீதமான, எதிர்மறையான, அபிப்பிராயங்கள் சித்தத்தில் குழப்பத்தையே விளைவிக்கின்றன. ஜனனமரணச் சுழல் மாட்டிக்கொண்டு எப்பொழுதும் மனம் கொந்தளித்தவாறே இருக்கிறது.
57 நாம ரூப தடங்கல்களைத் தாண்டியவர், மாயையால் பாதிக்கப்படாதவர், நிஜமான ஆனந்தத்தில் மூழ்கியவர், இறையனுபவம் பெற்றவர் - ஒரு சித்த புருஷராவார்.
58 இந்நிலைக்குச் சிறந்த உதாரணம் ஸ்ரீஸாயீ. இந்த மூர்த்தியின் பாதங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லாப்பேறும் பெற்றவர்கள்; எல்லாப்பேறும் பெற்றவர்கள்õ
59 சந்திரன் தண்ணீரில் இருப்பதுபோல் தெரியலாம்; ஆனால், அது வானில்தான் இருக்கிறது. அதுபோலவே ஞானிகள் பக்தர்களால் சூழப்பட்டிருப்பதைப் போலத் தோன்றலாம்; ஆனால் அவர்களுக்கு எந்த வஸ்துவின்மீதும் ஒட்டுதல்லை.
60 எந்நேரமும் பக்தர்களுக்கிடையில் இருந்தாலும் அவர்களுக்கு எவர்மீதும் ஒட்டுதல்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே மூழ்கியிருப்பதால் அவர்களுக்கு வெளிக்காட்சிகள் தெரிவதில்லை.
61 மஹாஸாதுக்களும் ஞானிகளும் இவ்வாறே; அவர்கள் மூலமாக இறைவன் பேசுகிறார். அவர்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை; அவர்களால் அடையமுடியாததும் ஏதுமில்லை.
62 ஆன்மீக போதனையைப் பெறுவதும் அளிப்பதுமாகக் கணக்கற்ற சிஷ்யர்களும் குருமார்களும் இவ்வுலகில் இருக்கின்றனர். ஆனால், ஞானத்துடன் அனுபவத்தையும் சேர்த்து அளிக்கும் குரு அபூர்வமே.
63 பூர்வாங்கமான வர்ணனை போதும்; முக்கியமான காதைக்குப் போவோம். ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண் டிருக்கும் கதைகேட்பவர்கள் நன்மை பெறுவர்.
64 நிஜாம் ஸமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் நகரில் பிரக்கியாதி (புகழ்) பெற்ற பார்ஸி வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். தார்மீகமாகவும் உலகத்தினரால் விரும்பப்பட்டவராகவும் வாழ்ந்துவந்தார். அவருடைய பெயர் ரதன்ஜி. (முழுப்பெயர் ரதன்ஜி சாபூர்ஜி வாடியா)
65 அவருக்கு ஏராளமான செல்வமும் வண்டி, குதிரை, விளைநிலங்கள், காடுகள் போன்று பலவகையில் சொத்துகளும் இருந்தன. அவருடைய வீட்டின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன; எவருமே அவருடைய வீட்டிருந்து முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரும்பவில்லை.
66 வெளிப்பார்வைக்கு அவர் மகிழ்ச்சிக் கடல் மூழ்கியிருந்தாலும், இரவு பகலாக அவருடைய மனத்தைக் கவலையென்னும் பெரிய முதலை கடித்துத் தின்றுகொண் டிருந்தது.
67 எவருமே பூரணமான, குறையொன்றுமே இல்லாத, ஆனந்தத்தை அனுபவிக்கமுடியாது என்பது இறைவனின் ஆணை போலும்õ ஒருவருக்கு ஒரு குறை; மற்றொருவருக்கு வேறு குறை; ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை அல்லது ஏக்கம் இருக்கவே செய்கிறது.
68 ஒருவர் சொல்லலாம், 'நான் ஒருவனே ஸர்வ ஐசுவர்யங்களையும் பெற்ற உயர்ந்த மனிதன்ஃ என்று. கர்வத்தால் தலைவீங்கிக் கெட்டவழிகளில் செல்ல ஆரம்பிக்கலாம்.
69 திருஷ்டி வந்துவிடுமோ என்று பயந்து, ஒரு தாய் குழந்தைக்குத் தாடையில் தம்முடைய விரலால் கறுப்புப்பொட்டு இட்டுவிடுவதுபோல, இறைவனும் அப்பழுக்கற்ற நற்குணவான்களுக்கும் கண்ணேறு வாராத வகையில் ஏதோ ஒரு சிறிய குறையை வைத்துவிடுகிறான் என்பது நிதரிசனமாகத் தெரிகிறது.
70 ரதன்ஜி அனுபவித்த பொன்னும் பொருளும் வருபவர்களுக்கெல்லாம் அன்னமிடும் தருமசிந்தனையை அளித்தது. ஏழையெளியவர்களின் துயர் துடைக்க உதவிகளையும் செய்துவந்தார். எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருந்தார்.
71 இவ்வாறு, வெளியுலகப் பார்வைக்கு அவர் சந்தோஷமாக வாழ்பவராகத் தெரிந்தார். ஆனால், ஆண் ஸந்ததி இல்லாதவர்களுக்குச் செல்வத்தின் மகிழ்ச்சி ஏது?
72 ஒன்றின்பின் ஒன்றாக அவருக்குப் பன்னிரண்டு மகள்கள் இருந்தனர். எப்படி அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எப்படி அவருடைய மனம் சாந்தியடைய முடியும்?
73 பக்தியில்லாத பஜனை, சுருதியும் தாளமும் இல்லாத இசை, பூணூல் அணியாத பிராமணன், சோபை எங்கே இருக்கிறது?
74 ஸகலகலாவல்லவர், ஆனால் விவேகமற்றவர்; ஆசாரசீலர், ஆனால் ஜீவராசிகளின்மேல் தயையோ கருணையோ இல்லாதவர்; இவர்களிடம் சோபை எங்கே இருக்கிறது?
75 நெற்றியில் கோபிசந்தனம், கழுத்தில் துளசி மாலை, ஆனால் நாக்கு ஞானிகளைப் பற்றி அவதூறு பேசுகிறது, சோபை எங்கே இருக்கிறது?
76 பாவ மன்னிப்பு கோராத தீர்த்த யாத்திரை, அட்டிகை இல்லாத நகை அலங்காரம், ஆண் குழந்தை இல்லாத இல்லம், சோபை எங்கே இருக்கிறது?
77 ''நாராயணன் எனக்கு ஒரு மகனையாவது கொடுப்பாரா?ஃஃ அனுதினமும் இதுவே அவருடைய சிந்தனையாக இருந்தது. மனம் அமைதியாக இருக்க மறுத்தது.
78 இதனால் சேட்ஜி ஸதா சோகமாகவே இருந்தார். அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. எப்பொழுதும் உடைந்த மனத்துடன் இரவுபகலாகக் கவலையில் மூழ்கியவராக இருந்தார்.
79 ''இறைவனேõ என்னுடைய மகிழ்ச்சியிருக்கும் இக்குறையை நீக்கி, என்னைக் களங்கமில்லாதவனாக ஆக்குவீராக. என்னுடைய வம்சவிருத்திக்காக ஒரு மகனையாவது அளிப்பீராக, ஓ பிரபுராயாõ இந்த அவப்பெயரிருந்து என்னைக் காப்பாற்றும்.ஃஃ
80 கவி தாஸகணுவிடம் அவருக்கு மிகுந்த விசுவாசமிருந்தது. தம்முடைய இதயத்தில் இருந்த ரஹஸியமான ஆசையை அவரிடம் தெரிவித்தார். தாஸகணு கூறினார், ''சிர்டீக்குப் போய்வாருங்கள்; உங்களுடைய மனோரதம் நிறைவேறும்.--
81 ''பாபாவை தரிசனம் செய்யுங்கள்; அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள்; உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள். அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார்.--
82 ''போனால் உங்களுக்கு சுபம் உண்டாகும்; பாபாவின் வழிமுறைகள் கற்பனைக் கெட்டாதவைõ 'நீரே கதிஃ என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.ஃஃ
83 இந்த யோசனை சேட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது; சிர்டீ போவதென்று தீர்மானித்துவிட்டார். முடிவு செய்தவாறே சில நாள்களில் ரதன்ஜி சிர்டீ வந்து சேர்ந்தார்.
84 தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்று ஸாயீ பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். புண்ணியகோடியான ஸாயீமஹராஜைப் பார்த்தவுடனே அவருடைய இதயத்தில் பிரேமை பொங்கியது.
85 ஒரு பூக்கூடையைத் திறந்து மாலை ஒன்றை எடுத்து அன்புடன் பாபாவின் கழுத்திட்டார். பிறகு, அவர் பலவிதமான சிறந்த பழங்களை பாபாவின் பாதங்களில் ஸமர்ப்பணம் செய்தார்.
86 மிகுந்த விநயத்துடன் பாபாவின் அருகில் ரதன்ஜி உட்கார்ந்துகொண்டார். பயபக்தியுடன் அவர் பாபாவிடம் பிரார்த்தனை செய்ததை இப்பொழுது கேளுங்கள்.
87 ''மக்கள் பெரிய சங்கடங்களில் மாட்டிக்கொள்ளும்போது பாபாவின் பாதங்களை நாடுகிறார்கள்; பாபா உடனே அவர்களை ரக்ஷிக்கிறார்; இதுவே நான் கேள்விப்பட்டது.--
88 ''ஆகவே, நான் உங்களை தரிசனம் செய்து ஒரு வேண்டுகோள் விடுக்கவே இவ்வளவு தூரம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். உங்களுடைய பாதங்களில் என் வேண்டுகோளை வைக்கிறேன்; மஹராஜ் என்னை நிராகரணம் (புறக்கணிப்பு) செய்துவிடாதீர்கள்õஃஃ
89 பாபா அவரிடம் கூறினார், ''ஆக, இவ்வளவு நாள்கள் கழித்து இன்று என்னிடம் வந்திருக்கிறீர்õ ஆனால், இப்பொழுது முதல் எவ்வளவு தக்ஷிணை கொடுக்க விரும்புகிறீரோ அதைக் கொடும். அப்பொழுதுதான் உமக்குப் பலன் கிடைக்கும்.ஃஃ
90 யார் தரிசனத்திற்கு வந்து அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினாலும், அவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, பார்ஸியானாலும் சரி, பாபா முதல் அவரிடம் தக்ஷிணை கேட்பார்.
91 தக்ஷிணை என்ன சொல்பமான தொகையா? ஒன்றா இரண்டா அல்லது ஐந்தா? கிடையவே கிடையாதுõ நூறோ ஆயிரமோ லக்ஷமோ கோடியோ அவர் விரும்பிய தொகையைக் கேட்பார்.
92 தக்ஷிணை கொடுக்கும்போது, 'மேலும் கொண்டுவாஃ என்று கேட்பார். கையில் பணம் தீர்ந்துவிட்டது என்று சொன்னால், 'கடன் வாங்கிக்கொண்டுவாஃ என்று சொல்வார். யாரிடமும் மேற்கொண்டு கடன் வாங்கமுடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் தக்ஷிணை கேட்பதை நிறுத்துவார்.
93 அந்நிலையில் பக்தரிடம் சொல்வார், ''சிறிதும் கவலைப்படாதீர்õ நான் உமக்கு
94 ''இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் யாரோ இருக்கிறார்; யாராவது ஒருவர் இருக்கிறார். ஆனால் எனக்கோ இங்கு யாருமே இல்லை; அல்லா, அல்லா மட்டும்தான் இருக்கிறார்.--
95 ''என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனைவிட அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவருக்கு, அவர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன்.ஃஃ
96 கோடீச்வரராக இருக்கலாம், அவரும் எங்காவது ஏழை எளியவர்களிடம் தக்ஷிணைக்காகக் கடன் வாங்கிக்கொண்டு வரும்படி ஆணையிடப்பட்டார்.
97 செல்வரோ, ஆண்டியோ, ஏழையோ, பலமில்லாதவரோ, பணமில்லாதவரோ - ஸாயீ அவர்களுக்குள்ளே ஒருவர் முக்கியமானவர், மற்றவர் முக்கியம் அல்லர் என்று பேதம் பார்த்ததில்லை.
98 இவ்வாறு, யாராக இருந்தாலும் சரி, தம்முடைய கௌவரத்தையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு பாபாவின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு, ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று பாபாவுக்கு தக்ஷிணை கொடுப்பதற்காகப் பிச்சை எடுத்தனர்.
99 சுருங்கச் சொன்னால், தக்ஷிணை கேட்டு வாங்கும் சாக்கில் பாபா அவர்களுக்குப் பணிவை போதனை செய்தார்.
100 ஒரு ஸாதுவுக்குப் பணம் எதற்காக வேண்டும் என்று எவருக்கும் ஸந்தேஹம் எழலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், மிக எளிதாக இந்த ஸந்தேஹம் நிவிர்த்தியாகும்.
101 ஸாயீ பூர்ணகாமர் (எல்லா ஆசைகளும் முழுமையாக நிறைவேறியவர்) என்றால் அவர் தக்ஷிணை எதற்காகக் கேட்கவேண்டும்? பக்தர்களைப் பணம் கேட்பவரை, விருப்பமேதும் இல்லாதவர் என்று எவ்வாறு சொல்லமுடியும்?
102 எவருக்கு வைரமும் சிக்கிமுக்கிக்கல்லும் ஒன்றோ, எவருக்குத் தாமிரக் காசும் தங்கமொஹராவும் ஒன்றோ, அவர் எதற்காகப் பணத்துக்காகக் கை நீட்டுகிறார்?
103 வயிற்றுப்பிழைப்புக்காகப் பிச்சை எடுப்பவர், ஏழ்மையையும் பற்றற்ற வாழ்வையும் விரதமாகக் கொண்டவர், ஆசைகள் ஏதுமின்றி வைராக்கியத்துடன் வாழ்பவர் எதற்காக தக்ஷிணை எதிர்பார்க்கிறார்?
104 எவருடைய வாசல் அஷ்டஸித்திகளும் காத்துக்கொண் டிருக்கின்றனவோ, எவருடைய ஆணையை நவநிதிகளும் எதிர்பார்த்துக்கொண் டிருக்கின்றனவோ அவருக்குப் பணம் தேவைப்படும் இழிநிலை ஏன்?
105 இவ்வுலக இன்பங்களைத் 'தூஃவென்று உதறியவர்களுக்கு, பரவுலக வாழ்வையும் வெறுத்து லட்சியம் செய்யாதவர்களுக்கு, எங்கு நன்மை இருக்கிறது என்பதை நன்கறிந்த பற்றற்ற ஸாதுக்களுக்குப் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது?
106 பக்தர்களின் க்ஷேமத்திற்கும் மங்களத்திற்காகவுமே வாழும் ஞானிகளுக்கும் ஸாதுக்களுக்கும் சான்றோர்களுக்கும் செல்வம் எதற்காக?
107 ஸாதுக்கள் எதற்காக தக்ஷிணை கேட்கிறார்கள்? அவர்களுடைய மனம் ஆசையற்று இருக்கவேண்டும். பக்கீராக ஆகியும் பணத்தாசை விடாமல் பைஸாவை ஏன் நித்திய ஆராதனை செய்கிறார்கள்?
108 முதல் தரிசனத்தின்போது தக்ஷிணை ஏற்றுக்கொள்கிறார்; இரண்டாவது தரிசனத்தின்போது மறுபடியும் தக்ஷிணை கேட்கிறார்; விடை பெற்றுக்கொள்ளும்போது ''தக்ஷிணை கொண்டுவாரும்ஃஃ என்று இன்னுமொருமுறை கேட்கிறார். ஒவ்வொரு நிமிடமும் எதற்காக தக்ஷிணை?
109 சடங்குகளுடன் ஆசாரமாகச் செய்யும் பூஜையில் ஆசமனம் செய்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. நைவேத்தியம் (படையல்) ஆனவுடன் கைகளையும் வாயையும் அலம்பிக்கொள்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. பிறகு கைக்கு வாஸனைத்திரவியம் பூசியபின் தாம்பூலம் அளிக்கப்படுகிறது. இதெல்லாம் நடந்து முடிந்தபிறகு, கடைசியாகத்தான் தக்ஷிணை அளிக்கப்படுகிறது.
110 ஆனால், பாபாவின் கிரமமே வேறு. சந்தனம் பூசப்பட்டுக்கொண் டிருக்கும்போதே, அக்ஷதை அலங்காரம் செய்யப்படும்போதே, தக்ஷிணை உடனே கொடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பார்.
111 'ஓம் தத் ஸத் பிரம்மார்ப்பண மஸ்துஃ என்று ஓதி, பூஜையின் முடிவில் கொடுக்க வேண்டிய தக்ஷிணையை 'சுக்லாம்பரதரம்ஃ குட்டும்போதே பாபா கேட்பார்; அதை உடனே கொடுத்துவிட வேண்டும்.
112 இருப்பினும் இந்த ஸந்தேஹத்தை பெருமுயற்சி ஏதும் எடுக்காமலேயே நிவிர்த்தி செய்துகொள்ளலாம். கொஞ்சம் கவனமாகக் கேட்பின் நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள்.
113 செல்வம் சேமிப்பதின் நோக்கமே தருமகாரியங்களில் செலவிடவேண்டும் என்பதுதான். அதற்குப் பதிலாக, அல்பமான புலனின்ப நுகர்ச்சியிலேயே அது செலவாகிவிடுகிறது.
114 செல்வம் தருமத்தை வளர்க்க வேண்டும்; தருமத்திருந்து இறைஞானம் தோன்றும். செல்வம் இவ்விதமாக நம்மை ஆன்மீகப் பாதையில் அழைத்துச்சென்று மனத்திற்கு மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கிறது.
115 ஆரம்பத்தில் வெகுகால பரியந்தம் பாபா எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எரிந்துபோன தீக்குச்சிகளையே சேர்த்து ஜோபி நிறைய வைத்திருந்தார்.
116 பக்தரோ, பக்தரல்லாதவரோ, அவர் எவரிடமும் ஏதும் கேட்கவில்லை. யாராவது ஒருவர் அவர் முன்னால் ஒரு தம்பிடியோ1 துகாணியோ1 வைத்தால் அக்காசுக்குப் புகையிலையோ எண்ணெயோ வாங்கிக்கொள்வார்.
117 அவருக்குப் புகையிலையின்மேல் பிரேமை; பீடியோ அல்லது சிலீமோ (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடிப்பார். சிலீம் செய்த ஸேவை எல்லையற்றது; அது புகையாத நேரமேயில்லை.
118 பிறகு, யாரோ ஒருவருக்குத் தோன்றியது. ஞானியை தரிசனம் செய்ய எப்படி வெறுங்கையுடன் செல்வது? ஆகவே அவர் கையில் சிறிது தக்ஷிணை எடுத்துக்கொண்டு சென்றார்.
119 ஒரு தம்பிடி கொடுக்கப்பட்டால் பாபா அதைத் தம் ஜோபியில் போட்டுக்கொள்வார். ஆனால், எவராவது இரண்டு பைஸா நாணயத்தை வைத்தால், அதை யார் வைத்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார். வெகுகாலம் இதுவே அவருடைய கிரமமாக இருந்தது.
120 சில காலத்திற்குப் பிறகு, பாபாவின் மாஹாத்மியம் பரவியது. பக்தர்களுடைய கூட்டம் சிர்டீயில் குழுமியது. சாஸ்திர விதிகளோடுகூடிய பூஜையும் ஆரம்பிக்கப்பட்டது.
121 சாஸ்திர விதிகளின்படி, எந்தப் பூஜையும் பொன்னும் மலர்களும் தக்ஷிணையும் ஸமர்ப்பணம் செய்யப்படாமல் நிறைவு பெறாது. இதை நித்தியவழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர்.
122 மன்னனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே குருபூஜைக்கும் தக்ஷிணை ஸமர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.
123 தக்ஷிணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைகிறார்கள்; பொன்னை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று வேதம் மொழிகிறது.
124 அரைத்த சந்தனத்தை தெய்வத்திற்குப் பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை ஸமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வத்தையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே, தக்ஷிணை நிறைந்த செல்வத்தை அளிக்கிறது.
125 எப்படிச் சந்தனமும் அக்ஷதையும் மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷிணையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை அடைய முக்கியமானவை.
126 தெய்வபூஜைக்கு தக்ஷிணை அவசியமானது; ஒரு விரதத்தை முடிக்கும்போதும் தக்ஷிணை கொடுக்கப்படவேண்டும்.
127 உலகியல் விவகாரங்களெல்லாம் பணத்தைக் கொடுத்தும் வாங்கியுமே நடக்கின்றன. தங்களுடைய புகழையும் கௌரவத்தையும் தக்கவைத்துக்கொள்ள, மக்கள் அம்மாதிரியான சமயங்களில் தாராளமாகவே செலவு செய்கின்றனர். (கயாணம், கிருஹப் பிரவேசம் போன்றவை)
128 'ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம்ஃ என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தக்ஷிணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப் பூஜை செய்யும்போது ஏன் தக்ஷிணை கொடுக்கக்கூடாது?
129 ஒரு மஹானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.
130 சிலர் பக்தியுடனும் விசுவாசத்துடனும் செல்கின்றனர். சிலர் ஞானியினுடைய சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்õ
131 சிலர் நீண்ட ஆயுளை வேண்டுகின்றனர். சிலர் யானை, பொன், செல்வம், ஸம்பத்துகள், சொத்து - இவற்றை வேண்டுகின்றனர். வேறு சிலர் புத்திரனையும் பௌத்திரனையும் (பேரனையும்) வேண்டுவர். சிலர் குன்றாத செல்வாக்கையும் பதவியையும் வேண்டுவர்.
132 ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கே செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர்.
133 சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். நேரடியான அனுபவம் பெற்று, அஹங்காரத்தை விலக்கிவிட்டு நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.
134 இவர்களனைவரும் இவ்வுலக வாழ்க்கையில் உழலும் சாதாரண மக்களே. தக்ஷிணை அளிப்பதால் அவர்கள் மனத்தூய்மை அடையவேண்டுமென்றே பாபா விரும்பினார்.
135 ''யாகத்தால், தானத்தால், தவத்தால்ஃ' என்னும் தெளிவான சொற்களால் தக்ஷிணை அளிப்பது ஒரு 'ஸாதனை யுக்திஃ என்று ஆத்மஞானத்தை நாடுபவர்களுக்கு வேதம் போதனை செய்கிறது.
136 அடியவர், உலகியல் நன்மைகளை விரும்பினாலும் ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பினாலும், தாம் விரும்பியதை அடைவதற்காகவும் தம்முடைய சொந்த நலனுக்காவும் தம் குருவுக்கு தக்ஷிணை அளிக்கவேண்டும்.
137 பிரஜாபதியே தம் சிருஷ்டியான தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும் மனிதர்களுக்கும் குருகுலவாசம் முடிந்தபின் அவர்கள் உபதேசம் கேட்கும்போது இதைச் சொன்னார்.
138 பிரஜாபதி அவர்களுக்குத் 'தஃ (ஈஅ) என்ற ஒரே எழுத்தை உபதேசமாக அளித்துவிட்டு, இதிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள் என்றும் கேட்டு, உபதேசத்தை அவர்கள் மனத்தில் பதியவைத்தார். குருமார்கள் சிஷ்யர்களிடம் செய்யும் லீலை விநோதமானதுõ (இது பிரஹதாரண்யக உபநிஷதத்தில் இடம் பெறுகிறது.)
139 தேவர்கள் 'தஃ வை (தாந்த) அடக்கத்துடன் வாழுங்கள் என்று புரிந்துகொண்டனர். அஸுரர்கள் அதே 'தஃ வை தயை காட்டுங்கள் என்று புரிந்துகொண்டனர்; மனிதர்களோ 'தஃ வை தானம் செய்யுங்கள் என்று புரிந்துகொண்டனர். பிரஜாபதி பலேõ பலேõ என்று மூன்று இனத்தினரையும் பாராட்டினார்õ (ஒவ்வொரு இனத்தவரும் தங்களிடம் இல்லாத நற்குணத்தை வளர்த்துக்கொள்ளும்படி குரு உபதேசம் செய்கிறார் என்றே புரிந்துகொண்டனர்.)
140 தேவர்கள் சுபாவத்தில் வேறுபட்ட மனிதர்களே தவிர வேறெவரும் அல்லர். உத்தமகுண ஸம்பன்னர்களாக இருந்தாலும் புலனடக்கமில்லாத மனிதர்களே தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
141 அஸுரர்கள் துஷ்டபுத்தியும் குரூர சுபாவமுமுள்ள, ஹிம்ஸையை நாடும் மனிதர்களே. மனித இனமோ அடக்க முடியாத பேராசையால் அவதிப்படுகிறது. மனிதர்களில் இவ்வாறு மூன்று வகைõ (பிருஹதாரண்யக உபநிஷதம் - 5ஆவது அத்தியாயம் - ஸ்ரீசங்கர பாஷ்யம்).
142 கருணாஸாகரமான ஸாயீநாதர், பேராசையால் பீடிக்கப்பட்ட மனித இனத்தை அவர்களுடைய நல்வாழ்வை மனத்திற்கொண்டு, கைகொடுத்துத் தூக்கி விடுதலை செய்கிறார்.
143 தைத்திரியோபநிஷதத்தின் பதினொன்றாவது அனுவாகம் (செய்யுள் தொகுப்பு) தானத்தைப் பற்றிய பல ஆணைகளை இடுகிறது. ஒவ்வொன்றையும் கவனமாகக் கேளுங்கள்.
144 ''முதலாவதாக, தானம் சிரத்தையுடன் கொடுக்கப்பட வேண்டும். அசிரத்தையுடன் கொடுக்கப்படும் தானத்திற்குப் பலனேதும் இல்லை. அரசனுடைய ஆணைக்கோ அல்லது சாஸ்திர விதிகளுக்கோ பயந்துகொண்டு கொடுக்கவேண்டும். வெட்கத்திற்குப் பயந்து சிறிதாவது கொடுக்கவேண்டும்.ஃஃ
145 திருமணம் போன்ற சுபமான நிகழ்ச்சிகளின்போது, நட்பின் தாக்ஷிண்ணியத்தை நிறைவேற்றுவதற்காவது ஏதாவது ஒரு பரிசு அளிக்கப்பட வேண்டும். உலக விவகாரங்களின் படிப்பினை இதுவே.
146 பாபாவும் தம் பக்தர்களிடம் அவர்களுடைய நன்மைக்காக 'தஃ என்னும் எழுத்தால் (உபநிஷதத்தில்) குறிப்பிடப்பட்டதையே கேட்டார். ''புலனடக்கத்துடன் வாழுங்கள்; தயை காட்டுங்கள்; தானம் செய்யுங்கள்; உங்களுக்கு அமோகமான மகிழ்ச்சி விளையும்.ஃஃ
147 குருராயர் இந்த ஓரெழுத்து மந்திரத்தைத் தம் சிஷ்யர்கள் மூன்று தோஷங்களிருந்தும் விடுபடவேண்டும் என்பதற்காகவே உபயோகித்தார்.
148 காமம், கோபம், பேராசை ஆகிய தோஷங்களை வெல்வது கடினம். இம்மூன்றும், தன்னையே உயர்த்திக்கொள்ளும் பாதைக்கு ஒவ்வாதன. ஆகவே, இந்த சுலபமான வழி பரிந்துரைக்கப்பட்டது.
149 வேதங்களில் சொல்லப்பட்டவாறே ஸ்மிருதிகளிலும் (வாழ்க்கை நெறி நூல்களிலும்) சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும், கேட்பவர்கள் திடமாகப் பிரீதிடைவதற்காக அதை நான் இங்கே தருகிறேன்.
150 காமம், கோபம், பேராசை இம்மூன்றும் ஆத்மநாசத்தை உண்டுபண்ணும் நரகத்தின் வாயில்கள் என அறிந்துகொள். ஆகவே, இம்மூன்றையும் முற்றும் துறந்துவிடு.
151 பரம தயாளரான ஸமர்த்த ஸாயீ, தம்முடைய பக்தர்களின் நலனுக்காகவே தக்ஷிணை கேட்டு வாங்கினார். அவர்களுக்குத் தியாகம் செய்யவேண்டுமென்ற படிப்பினையைச் சொல்க்கொடுத்தார்.
152 தக்ஷிணையால் அவருக்கு என்ன பெரிய பிரயோஜனம்? குருவினுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு உயிரையும் கொடுக்கத் தயாராக இல்லாதவனுடைய ஆன்மீக வாழ்வு எப்படி உயர்வானதாகும்?
153 வாஸ்தவமாக, பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்தைத் தவிர, பாபாவுக்கு தக்ஷிணையால் என்ன உபயோகம்? அவர் உயிர் வாழ்வதற்கு தக்ஷிணையையா நம்பியிருந்தார்õ
154 பசியாறுவதற்கு அவர் பிச்சையெடுத்தார். ஆகவே, தக்ஷிணை வாங்குவதில் சுயலாப நோக்கம் ஏதும் இருந்திருக்கமுடியாது. தக்ஷிணை கொடுப்பதால் பக்தர்கள் மனத்தூய்மை பெறவேண்டும் என்பதே அவருடைய ஒரே லட்சியமாக இருந்தது.
155 மேலே சொல்லப்பட்ட வேதவசனத்தின்படி, தக்ஷிணை கொடுக்கப்படாமல் குருபூஜை முடிவு பெறாது.
156 போதும் தக்ஷிணையைப்பற்றிய பிரஸங்கம்õ பேராசையாலோ சுயநலத்துக்காகவோ தக்ஷிணை கேட்கப்படவில்லை என்பதும் பக்தர்களின் நலனுக்காகவே கேட்கப்பட்டதென்பதுமான முக்கியமான கருத்து நன்கு தெளிவாகிவிட்டது.
157 ஆகவே, இப்பொழுது ஏற்கெனவே விரிவாகச் சொல்லப்பட்ட காதையைத் தொடர்வோமாக. சேட் ரதன்ஜி பாபாவுக்கு தக்ஷிணை கொடுத்தபோது பாபா புரிந்த அற்புதமான லீலையைக் கேளுங்கள்.
158 கேட்பவர்கள் கிருபைகூர்ந்து இந்த அற்புதமான காதையை கவனத்துடன் கேட்கவேண்டும். ஸாயீயின் எங்கும் நிறைந்த தன்மையையும் விசேஷமான குணத்தையும் அவர்களே காணலாம்õ
159 சேட்ஜியை பாபா தக்ஷிணை கேட்டபோது பழைய நிகழ்ச்சியொன்றைப்பற்றிப் பேசினார். ஆனால், அது ஞாபகம் வராததால் சேட்ஜி வியப்படைந்தார்.
160 ''நீர் ஏற்கெனவே மூன்று ரூபாயும் பதினான்கு அணாவும்1 எனக்குக் கொடுத்திருக்கிறீர். இப்பொழுது தக்ஷிணையாகக் கொண்டுவந்த பணத்தில் மீதியைக் கொடும்.ஃஃ
161 அதுதான் அவர் செய்த முதல் தரிசனமானதால், சேட்ஜி பாபாவின் வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார். தம் நினைவுச்சுவடுகளில் தேடிப் பார்த்தார்.
162 ''நான் இதற்குமுன் சிர்டீக்கு வந்ததேயில்லை. எவர்மூலமும் எதையும் கொடுத்தனுப்பியதுமில்லை. இவ்வாறிருக்கும்போது ஸாயீ மஹராஜ் என்ன சொல்கிறார் என்பது எனக்குப் புதிராக இருக்கிறதுõஃஃ என்று அவர் நினைத்தார்.
163 அம்மாதிரியான நிகழ்ச்சி (தக்ஷிணை கொடுத்தது) நடந்ததே கிடையாதுõ ரதன்ஜீயை இது தர்மசங்கடநிலையில் வைத்தது. அவர் தக்ஷிணையைக் கொடுத்துவிட்டுப் பாதங்களில் வணங்கினார்; ஆனால் புதிர் விடுபடாமலேயே இருந்தது.
164 இருந்தாலும், இதுவிஷயம் அவ்வண்ணமே நிறுத்தப்பட்டது. ரதன்ஜி தாம் வந்த காரியத்தை எடுத்துச் சொன்னார். பாபாவை மறுபடியும் வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக்கொண்டு உட்கார்ந்துகொண்டார்.
165 சேட்ஜி மனத்தளவில் மிகத் திருப்தியடைந்து சொன்னார், ''பாபா, என்னுடைய பூர்வபுண்ணிய பலனால் நான் இன்று உங்களை தரிசனம் செய்கிறேன்.--
166 ''நான் தெய்வ அருள் பெற்றவனில்லை; அல்ப ஞானம் படைத்தவன். எனக்குப் பூஜையைப்பற்றியோ யாகங்களைப்பற்றியோ எதுவுமே தெரியாது. விதிவசத்தால் இன்று நான் முக்காலத்தையும் அறிந்த ஒரு ஞானியை தரிசனம் செய்கிறேன்.--
167 ''என்னுடைய மனக்குறையை நீங்கள் நன்கு அறிவீர்கள். கிருபாநிதியேõ தயாளரேõ இந்த விசுவாசமுள்ள அடியவனை உம்முடைய பாதங்களிருந்து விலக்கிவிடாதீர்கள்.ஃஃ
168 ஸாயீநாதர் மனமுருகி தயையுடன் கூறினார், ''அனாவசியமாகக் கவலைப்படாதீர்õ உம்முடைய போதாதகாலம் இப்போதிருந்து தேயும்.ஃஃ
169 பிறகு, அவர் சேட்ஜியின் கையில் உதீ பிரஸாதத்தை அளித்தார்; அருட்கரத்தை சேட்ஜியின் சிரத்தின்மேல் வைத்து, பின்வரும் வார்த்தைகளால் ஆசீர்வாதம் செய்தார். ''அல்லா உம்முடைய வேண்டுதலைப் பூர்த்திசெய்வார்.ஃஃ
170 ரதன்ஜி விடைபெற்றுக்கொண்டு நாந்தேட் திரும்பினார். தாஸகணுவிடம் சிர்டீயில் நடந்ததையெல்லாம் விரிவாகவும் வரிசைக்கிரமமாகவும் விவரித்தார்.
171 ''நல்ல தரிசனம் கிடைத்து ஆனந்தமடைந்தேன். அவருடைய பிரஸாதமும் உறுதிமொழியும் ஆசீர்வாதமும் கிடைத்தன.--
172 ''எல்லாமே மிகத் திருப்திகரமாக நடந்தன; ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மஹராஜ் எனக்குச் சொன்னது என்னவென்றே புரியவில்லைõ--
173 '''மூன்று ரூபாய் பதினான்கு அணா நீர் ஏற்கெனவே கொடுத்துவிட்டீர் என்று எனக்குத் தெரியும்ஃ. பாபா என்ன தெரிவிக்கிறார் இங்கு? எனக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.--
174 ''என்ன ரூபாய்? என்ன அணா? நான் அவருக்கு எப்படி முன்னமேயே ஏதும் கொடுத்திருக்க முடியும்? இப்பொழுதுதான் நான் முதன்முறையாக சிர்டீ சென்றேன். ஓ, எனக்கு இதனுடைய முக்கியத்துவம் ஒன்றுமே புரியவில்லையேõ--
175 ''எனக்கென்னவோ இது புரியவில்லை. இது ஒரு சூக்குமமாகத் தெரிகிறது; என்னால் விடுவிக்கமுடியாத புதிர்; நீங்களாவது இதை எனக்குப் புரியவைக்க முடியுமா?ஃஃ
176 இது ஒரு மர்மமாகத்தான் இருந்ததுõ தாஸகணு இதனுடைய சூக்குமம் என்னவாக இருக்குமென்று யோசனைசெய்ய ஆரம்பித்தார். மனத்தில் எந்த சூசகமும் தென்படவில்லை.
177 சிறிது நேரம் ஆழமாகச் சிந்தித்த பிறகு, அவருக்கு திடீரென்று ஞாபகம் வந்தது. மௌலீஸாஹேப் என்ற முஸ்லீம் ஞானியின் உருவம் அவருடைய மனக்கண்முன் தோன்றியது.
178 இஸ்லாம் மதத்தில் பிறந்த அவர், வாழ்முறையில் ஒரு ஞானி; பளு தூக்கும் கூயாளாக வேலை செய்தார்; விதிவசத்தால் அமைந்த வாழ்க்கையை நடத்தினார்.
179 அவருடைய சரித்திரத்தை இங்கு விவரிக்கப் புகுந்தால், பிரதமமான காதையிருந்து பாதை பிரிந்துவிடுவோம். நாந்தேடில் இருக்கும் மக்களனைவர்க்கும் அவருடைய வாழ்க்கைச் சரித்திரம் தெரியும்.
180 சேட்ஜி சிர்டீக்குப் போவதென்பது தீர்மானிக்கப்பட்ட பிறகு, மௌலீஸாஹேப் தம்முடைய விருப்பப்படி ஒருநாள் சேட்ஜியின் வீட்டுக்கு வந்தார்.
181 இருவருக்குமிடையே அளவுகடந்த அன்பு இருந்தது. மௌலீஸாஹேப்புக்குப் பூமாலையும் பழங்களும் உபசாரமாக அளிக்கப்பட்டன.
182 அந்த சமயத்தில், மௌலீஸாஹேப்புக்கு ஒரு சிற்றுண்டியாவது அளிக்க வேண்டுமென்று சேட்ஜிக்கு திடீரென்று மனத்தில் உதயமாகியது. தாஸகணுவுக்கு இதற்கான செலவுபற்றி உடனே ஞாபகம் வந்தது.
183 செலவுப்பட்டியல் வரவழைக்கப்பட்டு ஒரு பைஸாவையும் விட்டுவிடாமல் எண்ணப்பட்டது. எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், மொத்தத் தொகை துல்யமாக ஒத்துப்போயிற்று.
184 கூடவோ குறையவோ இல்லாமல், மொத்தச் செலவு மூன்று ரூபா பதினான்கு அணா ஆகியிருந்ததுõ இதை நான் பெற்றுக்கொண்டேன் என்று பாபா குறிப்பிட்டதுதான் எல்லாருக்கும் பலவிதங்களில் ஆச்சரியத்தை விளைவித்தது.
185 ஸாயீ மஹராஜ் ஞானகோடியாவார். மசூதியில் உட்கார்ந்தபடியே இவ்வுலகத்தின் எந்தப் பகுதியிலும் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தையும் அறிந்திருந்தார்.
186 உயிரினங்களனைத்தும் ஏகாத்மமாக இல்லையெனில், ஸமர்த்த ஸாயீ இதை அனுபவித்து, மற்றவர்களுக்கு எப்படிச் சொல்யிருக்க முடியும்?
187 சிர்டீக்கும் நாந்தேடுக்கும் இடையில் எவ்வளவோ தூரம் இருக்கிறது. மேலும், இரு ஞானிகளும் பரஸ்பரம் அறிந்தவர்களில்லை. ஸாயீபாபாவுக்குத் தந்தி வந்தது எவ்வாறு?
188 'நான் ஸாயீ பாபா, மௌலீஸாஹேப் என்னிருந்து முற்றிலும் வேறுபட்டவர்ஃ என்னும் பேதபுத்தி அவர்கள் இருவருக்குமே இல்லை.
189 மௌலீஸாஹேப்பின் ஆத்மா எல்லாருடைய அந்தராத்துமாவுடன் ஒன்றியதாகும். இந்த மர்மத்தைப் புரிந்துகொண்டவர் மஹா பாக்கியசா.
190 வெளிப்பார்வைக்கு இருவேறு தேஹங்களில் குடியிருந்தாலும், உள்ளுக்குள் இருவரும் ஒருவரே. எண்ணிப் பார்த்தால், 'அவர்கள் இருவரும்ஃ என்னும் சொல்லாட்சியே தவறாகும்; ஏனெனில், அவர்கள் எப்பொழுதுமே பிரிந்திருந்ததில்லை.
191 ஞானத்திலும் பிராணனிலும் அனுஸந்தானத்திலும் (வாழ்க்கை ஒழுக்கத்திலும்) அவர்கள் இருவரும் ஒருவரே. அவர்களிருவருடைய சைதன்யமும் (ஆத்மாவும்) வாழ்வின் நோக்கமும் குறிக்கோளும் ஒன்றேயானவை.
192 சிர்டீ நாந்தேடிருந்து வெகு தூரத்திருந்தது; ஸந்தேஹமேயில்லை. ஆனால், அவர்களிருவருடைய இதயமும் பிராணனும் சரீரமும் ஒன்றாக இருந்தன. ஆகவே, ஒருவர் மற்றவருக்குத் தந்திச்செய்தி அனுப்ப முடிந்தது.
193 கம்பியில்லாத் தந்தியையும் தந்தி இயந்திரத்தையும் உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் ஸாதுக்களும் ஞானிகளும் எவ்வளவு விநோதமானவர்கள்õ இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும், எங்கு நடந்தாலும் அதை அவர்கள் முழுதும் அறிந்திருந்தனர்.
194 குறிப்பிட்ட காலம் கழிந்தபின், சேட்ஜிக்கு இறைவன் அருள் புரிந்தார். ரதன்ஜியின் மனைவி கர்ப்பம் தரித்தார். வம்சவிருக்ஷம் துளிர்விட ஆரம்பித்தது.
195 சுபகரமான வேளையில் ரதன்ஜியின் மனைவி பிரஸவித்தார். பாபாவின் ஆசீர்வாதம் ஸத்தியமாகியது. ரதன்ஜிக்குப் பெருமகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு புத்திரன் பிறந்தான்.
196 பல வருடங்கள் மழை பெய்யாது வறட்சியால் அவதிப்படும் மக்கள் திடீரென்று பெய்த கொட்டுமழையைப் பெற்றதுபோல், புத்திரஸந்தானம் பெற்ற சேட்ஜி பெருமகிழ்ச்சியடைந்தார்.
197 காலப்போக்கில் வம்சவிருக்ஷம் வளர்ந்து பல கிளைகள் விட்டு, மகன்களும் மகள்களுமாகப் பூத்துக் குலுங்கியது. சேட்ஜி மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்தார்.
198 அதன் பிறகும் சிர்டீக்கு ஸாயீ தரிசனத்திற்காகப் போவதை ரதன்ஜி தொடர்ந்தார். ஸாயீயினுடைய ஆசீர்வாதத்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறி, சேட்ஜி மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வாழ்ந்தார்.
199 வஸந்தகாலத்தில் மாமரம் காய்த்துக் குலுங்குகிறது. ஆனால், எல்லாக் காய்களும் பழமாகிவிடுவதில்லை. பன்னிரண்டு மகன்களில் நான்கு பேரே நீண்ட ஆயுள் பெற்றனர்; தற்பொழுது (காவியம் எழுதப்பட்ட காலத்தில்) நால்வரும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.
200 சுபாவமாகவே சமநோக்கு கொண்ட ரதன்ஜி, விதிவசத்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சிறிதும் வருத்தப்படாது சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
201 அடுத்த காதையின் ஸாரத்தைப் பார்ப்போம்õ நகரும் நகராப் பொருள்களனைத்திலும் ஸாயீ நிறைந்திருக்கிறார். இதை எவரும் எங்கும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்துகொண்டால் அனுபவிக்கலாம்.
202 தாணேயில் வாழ்ந்த ஏழையும், பணிவு மிகுந்தவருமான சோல்கர் என்னும் அடியவரின் பக்தியும் விசுவாசமும் குருவரரை (பாபாவை) எவ்வாறு மகிழ்ச்சியடையச் செய்தது என்பதையும்,--
203 முன்னால் பார்த்தறியாத பாபாவின் (படம்) முன்னிலையில் அவர் எவ்வாறு ஒரு விரதத்தை மேற்கொண்டார் என்பதையும், எப்படி அவருடைய மனோரதம் நிறைவேறியது என்பதையும் இது விஷயமாக அவர் பெற்ற நேரிடையான அனுபவத்தையும் விவரிக்கிறேன்.
204 பிரேமை இல்லாது என்ன பஜனை? அர்த்தம் புரியாமல் புராண பாராயணம் எதற்கு? நம்பிக்கை இல்லாதவனுக்கு இறைவன் எங்கே இருக்கிறான்? இவையனைத்தும் வீண் பிரயாசையல்லவோ?
205 மங்களகரமான குங்குமத் திலகமில்லாத நெற்றி, அனுபவமில்லாத ஏட்டுப்படிப்பு ஆகியன வீண். இவ்வார்த்தைகள் புத்தகங்கள் படித்ததால் வெளிவந்தவை அல்ல. நீங்களே அனுபவித்துப் பார்த்துவிட்டுப் பிறகு மதிப்பிடுங்கள்.
206 ஸாயீ லீலைகளைப்பற்றிய இப்பிரபந்தம் எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். இதனுடைய பிரயோஜனம் என்னவென்று எனக்குத் தெரியாது. என்னைக்
207 இவ்வகையான காவியம் எழுதுவதற்கு ஆன்மீக பலம் மிகுதியாகத் தேவை. நானோ ஸாயீயின் பணியாள்; அவருடைய ஆக்ஞைக்குக் கட்டுப்பட்ட அடிமை. அவருடைய ஆணையின்படி குறிப்பெடுத்துக்கொள்கிறேன்.
208 என்னிடம் கதை கேட்பவர்கள் தாகம் மிகுந்த சாதகப் பறவைகள்1; ஸமர்த்த ஸாயீயோ ஆனந்தத்தால் கனத்த கருமேகம். இக்காதைகளின் மூலமாக மழையைப் பொழிந்து, அவர்களுடைய தாகத்தைத் தீர்த்துவைக்கிறார்.
209 எந்த சக்தியின் திவ்விய சரித்திரத்தை விவரிக்கிறேனோ, எந்த சக்தி என்னுடைய எழுத்தை உந்துகிறதோ, அந்த சக்தியின் பாததூளியில் என்னுடைய உடல் புரண்டு, புரண்டு எழட்டும்.
210 என்னுடைய பேச்சை உந்துபவர் அவரே; தம்முடைய காதையைத் தாமே சொல்கிறார். என்னுடைய சஞ்சலபுத்தி ஒருமைப்படட்டும்; அவருடைய பாதங்களைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளட்டும்.
211 இந்த பஜனை (காதைகளை எழுதும் செயல்) வெறும் பௌதிகச் செயலாகவும் சொற்கட்டாகவும் மட்டுமின்றி மானஸீகமாகவும் ஆகட்டும்; எனக்கு அழியாத ஆனந்தத்தையளிக்கட்டும். நான் ஸாயீயின் செய்தியைக் கொண்டுவரும் தீனனான தபால்காரனே.
212 சரித்திர எழுத்தாளரும் சரித்திர நாயகரும் ஸாயீயேõ இருப்பினும், கேட்பவர் அவரிடமிருந்து வேறுபட்டவரா என்ன? இல்லவேயில்லை; ஸாயீயியிடமிருந்து பிரிந்து இருப்பவர் இல்லை.
213 மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஒரு காவியம்; ஆனால், உண்மையில் இது ஸாயீலீலையேõ அவரே பிேைமயுடன் அரங்கில் இறங்கி இந்த சக்திவாய்ந்த விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டார்.
214 ஸாயீபாபாவினுடைய சரித்திரம் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது. என்னைக் கருவியாக மாத்திரம் கொண்டு, பக்தர்களுக்கு விசித்திரமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறார். இவ்விதமாகக் கணக்கற்ற அடியவர்களுக்குத் திருப்தியை அளிக்கிறார்.
215 இது ஒரு சரித்திரமன்று; ஆனந்தக் கிடங்கு; நிஜமான பரமாமிருதம். பக்தி பா(ஆஏஅ)வத்துடன் அணுகும் பாக்கியசாகளால்தான் இதை அனுபவிக்க முடியும்.
216 பக்தர்களுடைய சாந்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும், குருவினுடைய கிருபையின் மஹிமையை அடியார்களாகிய நாமெல்லாரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் நான் சிரமப்பட்டு இக்காவியத்தை எழுதியிருக்கிறேன்.
217 பக்தியுடனும் பிரேமையுடனும் சொல்லப்படும்போது இக்காதை, கேட்பவர்களுடைய மகிழ்ச்சியை அதிகரிக்கும். திரும்பத் திரும்பப் படித்து, இந்நிகழ்ச்சிகளின் ஆன்மீகப் படிப்பிைைனயை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் பக்தியும் பிரேமையும் பெருகும்.
218 இரவுபகலாகக் கேட்டால், மாயை மோஹம் ஆகிய பந்தங்கள் அறுந்துவிடும். அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் செயல் என்னும் பேதங்கள் மறைந்துவிடும். கேட்பவர்கள் சுகத்தைப் பெறுவார்கள்.
219 ஸாயீ பாதங்களைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அனன்னிய (வேறெதையும் நாடாத) மனோபா(ஆஏஅ)வத்துடன் சரணடைந்து, ஒருகணமும் அவருடைய பாதங்களைப் பிரியாமல் அகண்டமாக ஹேமாட் நமஸ்காரம் செய்கிறேன்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'சேட் ரதன்ஜி ஸாயீயை தரிசனம் செய்ததுஃ என்னும் பதினான்காவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.