Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 20


20. ஈசாவாஸ்ய உபநிஷதமும் ஏழைச்சிறுமியின்


பண்பு தந்த விளக்கமும்

ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஓம் நமோ குருராயாõ வாக்கு முத்துகளைப் பிரஸாதமாக வழங்கும் மானஸஸரோவர்1 நீர்நிலை நீரே. அனன்னிய (வேறொன்றிலும் நாட்டமில்லாத) பக்தர்களாகிய அன்னங்கள் தேவரீர் திருவடிகளைப் புக­டமாக நாடுகின்றன.

2 மஹா உதாரகுணம் படைத்த நீர். உம்மைப் புக­டமாகக் கொண்டவர்களுக்கு உமதருளென்னும் முத்தைத் தின்னக்2 கொடுத்து நிஜமான விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளித்து. ஜனனமரணச் சுழ­­ருந்து விடுதலையளிக்கிறீர்.

3 ஓõ எத்தனை அற்புதமான சித்தாசிரமம் (சித்தர்கள் வாசம் செய்யும் இடம்) இந்த ஸாயீõ வாழ்க்கையின் சிரமங்கள் அவரை தரிசனம் செய்த மாத்திரத்திலேயே நிவிர்த்தியாகிவிடுகின்றன. அவருடன் ஸஹவாசமாக (கூடவே வசித்தல்) இருப்பவர்கள் பிறவியால் ஏற்பட்ட பிரமைகளி­ருந்து விடுதலையடைகின்றனர்.

4 மூல நிலையில் ஸாயீ உருவமற்றவர். பக்தர்களின் மங்களத்திற்காகவே உருவமெடுத்துக் கொண்டார். மாயையென்னும் மாபெரும் நடிகையின் சவாலை ஏற்றுக்கொண்டு. நடிகர் திலகமாகத் தம்முடைய பங்கையும் நன்கு நிறைவேற்றிவிட்டார்.

5 இவ்வாறான ஸாயீயை நமது மனத்துக்குள் கொணர்வோம். மத்தியான ஆரதிக்குப் பின்பு அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனத்துடன் காண்பதற்கு ஒரு கண நேரம் சிர்டீக்குப் போவோம். வாரீர்õ

6 மத்தியான ஆரதி முடிந்தபிறகு. பாபா மசூதியின் கைப்பிடிச்சுவரின் மூலைக்கு வந்து நிற்பார். கிருபை கனிந்த பார்வையுடன் பக்தர்களுக்கு உதீ விநியோகம் செய்வார்.

7 பக்தர்களும் பிரேமையின் எழுச்சியால் பாபாவின் பாதங்களைக் கட்டியணைத்துக் கொள்வர். அங்கேயே நின்றுகொண்டு உதீமழையை அனுபவித்துக்கொண்டு பாபாவின் திருமுகத்தையே பார்த்துக்கொண் டிருப்பர்.

8 பாபா தம்முடைய கட்டைவிரலால் அவர்களுடைய நெற்றியில் சிறிது உதீ இட்டுவிட்டு. ஏந்திய கைகளிலும் கைநிறைய உதீயை வழங்குவார். பக்தர்களின்மேல் அவருக்கிருந்த அடக்கமுடியாத அன்பு அத்தகையது.

9 ''போம். பாவூ. போய்ச்சாப்பிடும்õ அண்ணா. போய் இனிமையான சாப்பாட்டைச் சுவைத்து உண்ணும்õ போங்கள். எல்லாரும் அவரவர் இல்லத்திற்குச் செல்லுங்கள்.ஃஃ இவ்வாறு பாபா மக்களிடம் சொல்லுவார்.

10 இவ்வானந்தம் இப்பொழுது அனுபவிக்கக் கிடைக்காதெனினும். சிர்டீயின் குறிப்பிட்ட இடங்களையும் குறிப்பிட்ட நேரங்களையும் அவ்வானந்தமான நாள்களையும் திடமான தியான பலத்தினால் இன்றும் மனக்கண்முன் கொணர்ந்து அனுபவிக்கமுடியும்.

11 ஆகவே நாம் அவ்வாறு தியானம் செய்வோமாக. பாபாவினுடைய கால் கட்டைவிர­­ருந்து முகம்வரை மனக்கண்முன் கொணர்ந்து. பிரேமையுடன் நமஸ்காரம் செய்துவிட்டுக் கதையை மேலும் தொடர்வோம்.

12 சென்ற அத்தியாயத்தின் முடிவில். வேதத்தின் ஒரு பகுதிக்கு விளக்கத்தை ஒரு வேலைக்காரச் சிறுமியின் பண்பால் பாபா மலரச் செய்தார் என்று கதை கேட்பவர்களுக்குச் சொல்லப்பட்டது.

13 'ஈசாவாஸ்ய பா(ஆஏஅ)வார்த்த போதினியைஃ தாஸகணு எழுத ஆரம்பித்து விட்டாரெனினும். அதை எழுதும்போது சில ஸந்தேஹங்கள் எழுந்ததால். அவற்றை சிர்டீயி­ருந்த ஸத்குருவின் பாதங்களுக்குக் கொண்டுவந்தார்.

14 அந்த சந்தர்ப்பத்தில் பாபா சொன்னதாவது. 'நீர் திரும்பிப் போகும்போது. 'காகாஃ1 வீட்டு வேலைக்காரி உம்முடைய ஸந்தேஹங்களை நிவிர்த்தி செய்வாள்.ஃ

15 அவ்வார்த்தைகளே இக்காதையின் பின்னணியாக அமைகின்றன. அங்கிருந்து நாம் தொடர்வோமாகõ கேள்விக்குக் குறைவேற்படாத வகையில். செவிமடுப்பவர்கள் கவனத்தைக் கொடுப்பீர்களாகõ

16 ஸம்ஸ்கிருதபாஷை தெரியாத மக்களுக்கு. ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் அர்த்தத்தைப் பதம் பதமாக மராட்டிமொழியில் ஓவி2 வடிவில் கொடுக்க வேண்டும்.

17 ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் மராட்டியில் எழுத ஆரம்பித்தபோது. இதுவே தாஸகணுவின் விருப்பமாக இருந்தது.

18 இந்த உபநிஷதம் சுலபமாகப் புரிந்துகொள்ளமுடியாதது; கூடமான அர்த்தம் (மறைபொருள்) நிரம்பியது. பதம் பதமாகப் பிரித்து உரை எழுதிவிட்டாரே தவிர. தாஸகணுவிற்கு உபநிஷதத்தின் முழுமையான அர்த்தம் பிடிபட்டுவிட்டது எனத் திருப்தியுற முடியவில்லை.

19 நான்கு வேதங்களின் முடிவான சிகரங்களே உபநிஷதங்கள். குருவினுடைய கிருபையும் ஹரியினுடைய கிருபையும் இல்லாது உபநிஷதங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

20 'நான் மெத்தப் படித்தவன்; பண்டிதன்; என்னுடைய சுய முயற்சியாலேயே உபநிஷதங்களைப் படித்துப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விளக்குவேன்ஃ என்று ஒருவர் நினைத்தால்.--

21 அது முடியவேமுடியாது; யுக முடிவுவரை முயன்றாலும் சாத்தியமாகாது. குருவின் அருளின்றி. வழியில் அடிக்கு அடி இடைஞ்சல்கள் தோன்றும்; கடைசிவரை ரஹஸியமான அர்த்தம் கைக்குப் பிடிபடாது.

22 ஆனால். குருபாதங்களில் சரணடைந்தவருக்கு அணுமாத்திரமும் ஸங்கடம் ஏற்படாது. தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் கூடமான அர்த்தம் அவருடைய கண்களுக்குத் தெரியும்; புத்திக்கு விளங்கும்.

23 ஆத்மஞானமென்னும் சாஸ்திரம் அவ்வாறே; ஜனனமரணச் சுழலை வெட்டியெறிய உதவும் ஆயுதம். தேஹாபிமானம் இல்லாது உலகபந்தங்களி­ருந்து முற்றும் விடுபட்டவரே அதை அளிக்கக்கூடிய ஸத்பாத்திரம் (நல்ல தகுதியுள்ளவர்).

24 அம்மாதிரியானவரைச் சார்ந்தால். ஒரு கணத்தில் உண்மையான அர்த்தம் தென்படுகிறது; புத்தியும் தடங்கல்களி­ருந்து விடுபடுகிறது; கூடமான அர்த்தமும் வெளிப்படுகிறது.

25 ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டியில் மொழிபெயர்த்தபோது. தாஸகணுவும் அந்நிலையில் இருந்தார். ஸாயீநாதர் கிருபை புரிந்தவுடன் அவருடைய எழுத்து வேலையில் இருந்த இடைஞ்சல்கள் தகர்ந்தன.

26 தாஸகணுவுக்கு ஸம்ஸ்கிருத ஞானம் போதுமான அளவு இல்லை. எனினும் அவர் ஆசார்ய வித்யாரண்யர்1. ஸாயீபாபா. இவர்களின் பாதங்களைத் தொழுதுவிட்டு ஓவி எழுத ஆரம்பித்தார்.

27 தாஸகணுவின் எழுத்து பால் தாரை. அதில் பாபாவின் அருள் என்னும் சர்க்கரை கரைக்கப்பட்டிருக்கிறது. செவிமடுப்பவர்கள் அந்த மாதுரியமான (மிக இனிமையான) தாரையை அனுபவிப்பீர்களாக.

28 உங்களுக்கு பா(ஆஏஅ)வார்த்த போதினியை அறிமுகப்படுத்துவதற்காகவே இதைச் சொன்னேன். அதனுடைய இதயத்தைப் பார்க்கவேண்டுமென்றால். மூலத்தைப் படிக்க வேண்டும். என்னுடைய கதையின் நோக்கமே வேறு; அதை இப்பொழுது கேளீர்õ

29 ஒரு வார்த்தையும் பேசாமல். தம் பக்தர் படித்துக்கொண் டிருந்த உபநிஷதத்தின் சிக்கலானதும் புரிந்துகொள்ள இயலாததுமான பகுதிகளை பாபா எப்படிப் புரியவைத்தார் என்பதைப் பார்ப்போம்.

30 இக் கதையின் முக்கியமான உத்தேசம் இதுவே. இதையே கேட்பவர்களுக்குத் தாத்பரியம் (உட்பொருள்) புரியும்படியாக. ஸாராம்சமாகச் சொல்லவேண்டுமென்பதே என்னுடைய மன ஓட்டம். ஆகவே. மனம் கொடுத்துக் கேளுங்கள்õ

31 தாஸகணு தம்முடைய வியாக்கியானத்தை ஓவி வடிவில் இயற்றினார்; பண்டிதர்கள் பாராட்டினர். தாஸகணுவின் விருப்பம் நிறைவேறியது. ஆயினும் ஒரு ஸந்தேஹம் இருந்தது.

32 அதைப் பண்டிதர்களின் முன்பு வைத்தார். ஆஹா. ஊஹூ என்று விவாதம் நடந்தது. ஆயினும் ஸந்தேஹத்தை யாராலும் நிவிர்த்திசெய்ய முடியவில்லை.

33 இதன் நடுவே தாஸகணு ஏதோ வேலையாக சிர்டீ செல்ல நேர்ந்தது. அவருடைய ஸந்தேஹம் சுலபமாக நிவாரணமடைந்தது.

34 அவர் ஸாயீதரிசனம் செய்யச் சென்றார். பாபாவின் பாதங்களில் நெற்றியை வைத்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்; மனமகிழ்ச்சியடைந்தார்.

35 ஞானிகளின் கிருபை கனிந்த பார்வை. திருவாய்மொழி. மலர்ந்த முகம் - இவையே பக்தகோடிகளுக்கு ஸகல மங்களங்களையும் கொண்டுவரும்.

36 தரிசனமாத்திரத்திலேயே ஸகல தோஷங்களும் அழியும். அவ்வாறிருக்க. ஞானிகளுடைய ஸந்நிதியிலேயே இருப்பவர்களின் புண்ணியத்தை யாரால் வர்ணிக்க முடியும்?

37 ''ஓ. தாஸகணுவாõ எங்கிருந்து திடீரென்று வந்தீர்? சௌக்கியமாக இருக்கிறீரா? எப்பொழுதும் திருப்தியுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கிறீரா?ஃஃ என்று பாபா குசலம் விசாரித்தார்.

38 தாஸகணு பதிலுரைத்தார். ''உங்களுடைய கிருபையென்னும் குடையின்கீழ் வாழும் எனக்கு என்ன குறை இருக்கமுடியும்? ஆனந்தம் நிரம்பியவனாக இருக்கிறேன்.--

39 ''ஆயினும் உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும். உலகியல் உபசாரத்திற்காக இக் கேள்விகளைக் கேட்கிறீர். நீங்கள் ஏன் குசலம் விசாரிக்கிறீர்கள் என்று என் மனத்துக்கும் தெரிந்திருக்கிறது.--

40 ''நீங்களே என்னை ஒரு வேலையை ஆரம்பிக்கவைக்கிறீர்கள். வேலை ஓர் அளவிற்கு உருவெடுக்கும்போது திடீரென்று ஒரு தடங்கலை ஏற்படுத்துகிறீர்கள். யார். எவ்வளவு முயன்றாலும் தடங்கலை விலக்கமுடியவில்லைõஃஃ

41 இவ்வாறாக சம்பாஷணை தொடர்ந்தது. தாஸகணு பாபாவின் பாதங்களைப் பிடித்து விட்டுக்கொண்டே மெதுவாக. 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதினிஃ சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டார்.

42 ''பாபா. ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை நான் உட்கார்ந்து எழுதத் தொடங்கும்போது. என்னுடைய எழுதுகோல் ஸந்தேஹங்களாலும் குழப்பங்களாலும் தடைபடுகிறது. பாபா. என்னுடைய ஸந்தேஹங்களுக்கு விளக்கமளியுங்கள்õஃஃ

43 பிறகு. என்ன நடந்ததென்பதை தாஸகணு பாபாவுக்கு விவரமாக பயபக்தியுடன் விளக்கினார். நிவாரணமடையாத தம்முடைய ஸந்தேஹத்தையும் பாபாவின் பாதங்களில் வைத்தார்.

44 தாஸகணு ஸாயீநாதரைக் கெஞ்சினார். ''பாபா. நான் இந்நூலை எழுத எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாகப் போய்க்கொண் டிருக்கின்றன. என்னுடைய ஈசாவாஸ்யக் கதை உட்பட ஸகலமும் நீங்கள் அறிந்ததே.--

45 ''இந்த ஸந்தேஹம் நிவிர்த்தியாகாவிட்டால் இந்த கிரந்தத்தின் (நூ­ன்) சூக்குமமான அர்த்தம் விளங்காது.ஃஃ மஹராஜ் அவரை ஆசீர்வதித்தார். ''நீர் பிரஸன்னமான (மலர்ந்த) மனமுடையவராக இரும்.--

46 ''என்னய்யாõ இதில் என்ன பெரிய கடினம் இருக்கிறது? நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கே திரும்பிப் போகும்போது. காகாவின் வீட்டு வேலைக்காரி உம்முடைய ஸந்தேஹத்தை நிவாரணம் செய்துவிடுவாள்õஃஃ

47 காகாவென்று இங்கே குறிப்பிடப்பட்டவர் பாவூஸாஹேப் தீக்ஷிதர். பாபாவினுடைய அத்தியந்தமான (மிக நெருக்கமான) பக்தர்; மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பாபாவுக்கு ஸேவை செய்துவந்தவர்.

48 இந்த ஹரிபாவூ பம்பாய் நகரத்தின் புறநகர்ப்பகுதியான விலேபார்லேவில் வசித்து வந்தார்.

49 அவருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் ஹரி; மக்கள் அவரைப் பாவூஸாஹேப் என்றழைத்தாலும். பாபா அவருக்கு முற்றிலும் வித்தியாசமான வேறொரு பெயரையே அளித்தார்.

50 காகா மஹாஜனியைப் 'பெரிய காகாஃ என்றும். நானா ஸாஹேப் நிமோண்கரைக் 'கிழவர் காகாஃ என்றும். பாவூஸாஹேப்பைச் சில சமயங்களில் 'நொண்டிக் காகாஃ என்றும் சில சமயங்களில் 'பம்பாய் காகாஃ என்றும் அழைத்தார்.

51 பெற்றோர் குழந்தைக்கு ஒரு பெயரிடுகின்றனர்; ஜாதகத்தில் வேறொரு பெயர் காணப்படுகிறது. சில மனிதர்கள் பரிஹாஸப் பெயரால் அழைக்கப்படுகின்றனர்; பெயரிடுவதில் விதவிதமான முறைகள் வழங்குகின்றன.

52 எப்பொழுது ஸாயீ மஹராஜ் ஒரு பக்தருக்குப் பெயரிட்டாலும். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. பக்தர்களும் அதை அன்புடன் ஏற்றுக்கொண்டனர். பாபா அளித்த பெயரை ஒரு விருதாகவும் பட்டமாகவும் கருதினர்.

53 சில சமயங்களில் பிட்சு என்றும் சில சமயங்களில் காகா என்றும் தீக்ஷிதருக்கு பாபா முத்திரையளித்தார். சிர்டீயில் வாழ்ந்த மக்களிடையே காகா என்ற பெயரே பிரஸித்தியாகிவிட்டது.

54 தாஸகணு ஆச்சரியமடைந்தார். எல்லாருமே ஆச்சரியமடைந்தனர். என்னõ இத்தனை நபர்கள் இருக்க. காகாவின் வேலைக்காரியாõ அவள் எப்படிப் புதிருக்கு விடையளிக்கப் போகிறாள்?

55 வேலைக்காரி. வேலைக்காரிதானேõ அவளுக்கென்ன படிப்பிருக்கும்? அவளுக்கென்ன பொது அறிவும் ஞானமும் இருக்கும்? இதொன்றும் சரியாகத் தோன்றவில்லையேõ

56 வேதங்களின் சூக்குமமான தாத்பரியங்களை விளக்குவதற்குத் தேவையான பாண்டித்தியம் எங்கே? ஒரு வீட்டு வேலைக்காரியின் அறிவுத்திறம் எங்கே? ஸாயீ மஹராஜ் ஏதோ பரிஹாஸம் செய்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.

57 பாபா ஏதோ பரிஹாஸம் செய்கிறார் என்றுதான் எல்லாருமே நினைத்தனர். ஆனால். தாஸகணுவோ தமாஷாகச் சொன்னதையும் ஸத்தியமாகவே எடுத்துக்கொண்டார்.

58 மேலெழுந்தவாரியாகப் பார்த்த மக்களுக்கு பாபாவின் திருவாய்மொழி நையாண்டி வார்த்தைகளாகவே தோன்றியது. தாஸகணு அவ்வாறு கருதவில்லை; அதை ஸத்திய வாக்காகவே எடுத்துக்கொண்டார்.

59 ஸாயீ ஏதோ பரிஹாஸமாகப் பேசினார் என்று மக்கள் நினைத்தாலும். அவ்வார்த்தைகளால் விளையக்கூடிய லீலையை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்õ

60 வார்த்தைகள் கே­யாகச் சொல்லப்பட்டாலும். அவ்வாறு இல்லாவிட்டாலும் பாபா கூறிய வார்த்தைகள் வீண்போகா.

61 பாபாவின் திருவாய்மொழி வெறும் சொற்களல்ல; அவை பிரம்ம­பியாகும்1. அதில் ஒரு சொல்லும் வீண்போகாது; தக்க சமயத்தில் நடந்தேறிவிடும்.

62 இது தாஸ்கணுவின் திடமான நம்பிக்கை; மற்றவர்களுக்கு எப்படியாயினும் சரி. நம்பிக்கை எப்படியோ அப்படியே பலனும் விளையும்.

63 விசுவாசம் எப்படியோ அப்படியே அதனுடைய பலம். நம்பிக்கை எப்படியோ அப்படியே அதனுடைய பலன். உள்மனத்தில் எவ்வளவு பிரேமையோ அவ்வளவு தூய்மையான ஞானம் கிடைக்கும்.

64 ஞானிகளின் சிரோமணியாகிய ஸாயீயின் வார்த்தைகள் எக்காலத்தும் பயனில்லாமல் போகா. 'பக்தர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்வேன்ஃ என்பது அவருடைய உறுதிமொழி.

65 குருவினுடைய வார்த்தைகள் என்றும் வீண்போகா. இக்காதையை மன ஈடுபாட்டுடன் கேளுங்கள். பிறவிப்பிணிகள் அனைத்தும் ஒழியும்; ஆன்மீக ஸாதனை மார்க்கத்தில் முன்னேறுவீர்கள்.

66 தாஸகணு விலேபார்லேவில் இருந்த காகாஸாஹேப் தீக்ஷிதரின் வீட்டிற்குத் திரும்பினார். காகாவின் வீட்டுவேலைக்காரி எவ்வாறு காரியத்தை2 நிறைவேற்றப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.

67 அடுத்த நாள் விடியற்காலையில். தாஸகணு ஆனந்தமான அரைத்தூக்க நிலையை அனுபவித்துக்கொண்டு படுக்கையில் படுத்திருந்தபோதே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

68 ஒரு குணபிச்3 சிறுமி. காதுக்கினிய குர­ல் பாடுவதைக் கேட்டார். பாட்டின் இனிமை தாஸகணுவின் இதயத்தைக் கவர்ந்தது.

69 அந்தப் பாட்டின் நீண்ட ஆலாபனையும் ஸாஹித்தியத்தின் (கவிதையின்) சொற்கட்டும் தாஸகணுவின் இதயத்தைச் சுண்டியிழுத்தன. மனத்தைப் பறிகொடுத்து அப்பாட்டை கவனமாகக் கேட்டார்.

70 அப்பாட்டினுடைய அர்த்தம் அவருடைய மனத்தை ஈர்த்ததால். படுக்கையி­ருந்து சட்டென்று எழுந்துவிட்டார். ஒருமுகமான மனத்துடன் அப்பாட்டைக் கேட்டபின் அவருள் மகிழ்ச்சி பொங்கியது.

71 ''யார் மகள் இவள்? நல்ல ஸ்வரத்துடனும் கம்பீரமாகவும் பாடும் இந்தச் சிறுமி யார்? ஈசாவாஸ்யத்தின் புதிரை வாஸ்தவமாகவே விடுவித்துவிட்டாளேõ இவள் யார்?ஃஃ என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார்.

72 ''ஆஹா. இவள்தான் அந்த வேலைக்காரச் சிறுமியாõ யாருடைய கிராமியமான. செம்மையடையாத வாக்கி­ருந்து நான் ஈசாவாஸ்யத்திற்குத் தெளிவு பெற்றேனோ அச்சிறுமியை நான் காணவேண்டும்.ஃஃ (தாஸகணு)

73 அவர் வெளியில் வந்த பார்த்தபோது. வீட்டின் புறக்கடையில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண் டிருந்த ஒரு குணபிச் சிறுமியையே கண்டார்.

74 தீக்ஷிதருடைய வீட்டில் நாம்யா என்று அழைக்கப்பட்ட வேலையாள் ஒருவன் இருந்தான். இச் சிறுமி அவனுக்குத் தங்கை. விசாரணையில் இது தெரியவந்தது.

75 ஆகவே இச் சிறுமிதான் காகா வீட்டின் வேலைக்காரப் பெண்õ அவருடைய ஸந்தேஹங்கள் சிறுமியின் பாட்டினால் நிவாரணமடைந்தன. ஞானிகளால் செய்ய முடியாதது ஏதும் உண்டோõ ஓர் எருமைமாட்டை வேதம் ஓதவைத்தார் ஞானேச்வர்1 மஹராஜ்õ

76 சிறுமியின் பாட்டு அவ்வாறிருந்தது; தாஸகணுவின் மனம் திருப்தியடைந்து ஸமாதானமாகியது. பாபா விளையாட்டாகச் சொன்னார் என்று நினைத்த வார்த்தைகளின் மஹிமையை எல்லாரும் உணர்ந்தனர்.

77 சிலர். காகாவின் வீட்டுப் பூஜையறையில் அமர்ந்து தாஸகணு பூஜை செய்து கொண்டிருந்தபோது இந்தப் பாட்டைக் கேட்டதாகச் சொல்கின்றனர்.

78 அப்படியேயிருந்தாலும் சரி. தாத்பரியம் ஒன்றுதான். பாபா தம் பக்தர்களுக்குப் பலவிதமான யுக்திகளின்மூலம் போதனை செய்தார் என்பதையே நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

79 ''நீ எங்கிருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னைக் கேள்வி கேள்õ தேவையில்லாது எதற்காகக் காட்டிலும் வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தைத் திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.--

80 ''நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமேயில்லை. பக்தர்களுடைய பா(ஆஏஅ)வத்திற்காக நான். எங்கும். எப்படியாவது தோன்றுவேன்.ஃஃ

81 அந்த எட்டு வயதுச் சிறுமி ஒரு கிழிந்துபோன மேலாக்கை அணிந்துகொண்டு ஆரஞ்சுநிறப் புடவையின் மேன்மையான தோற்றத்தைப்பற்றிக் கேட்பதற்கு இனிமையான பாட்டைப் பாடினாள்.

82 ஆஹாõ தங்கச்சரிகை போட்ட அந்தப் புடவை எவ்வளவு அற்புதமாக இருந்ததுõ எவ்வளவு அழகான கரைõ கண்கவரும் தலைப்பு வேறுõ பாட்டைப் பாடிக்கொண்டே புடவையின் அழகில் மூழ்கிப்போனாள் அச் சிறுமி.

83 அவளுக்குச் சாப்பாட்டுக்கே தகராறு; உடம்பை முழுமையாக மூடிக்கொள்ளவும் தேவையான உடை இல்லை. ஆயினும் அவள் எங்கோ பார்த்த ஆரஞ்சுநிறப் புடவையின் அழகை நினைத்துக் குதூகலம் நிரம்பியவளாக இருந்தாள்.

84 பரிதாபகரமான வறுமையில் வாழ்ந்தும். உல்லாசமாகவும் குஷியாகவும் அவள் இருந்ததைப் பார்த்த தாஸகணுவின் மனம் இரக்கத்தால் உருகி. அவர் மோரேச்வரிடம்1 சொன்னார்.

85 ''உடம்பைச் சரியாக மறைக்காத அவளுடைய ந­ந்த ஆடைகளைப் பாருங்கள். தயவுசெய்து. அவசியம் அவளுக்கு ஒரு புடவை வாங்கிக்கொடுங்கள். இறைவன் ஆனந்தமடைவான்; உங்களுக்கும் புண்ணியம் சேரும்.ஃஃ

86 மோரேச்வர் பிரதான் சுபாவமாகவே கருணையுள்ள மனிதர். தாஸகணு விநயமாகக் கேட்டுக்கொண்டவுடனே ஓர் அழகான புடவையை வாங்கிக்கொண்டுவந்து அச் சிறுமியிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

87 அச் சிறுமி புடவையைக் கண்டவுடன். சோளத்தையும் கம்பையும் கேழ்வரகையும் தினமும் உண்பவனுக்குப் பஞ்சபக்ஷ பரமான்ன விருந்து கிடைத்தாற்போல் மகிழ்ச்சியடைந்தாள்õ

88 அடுத்த நாள் அச்சிறுமி புதுப்புடவையை அணிந்துகொண்டு வந்தாள். ஸந்தோஷத்தால் துள்ளிக் குதித்தாள்; நடனமாடினாள். தன்னுடைய குதூகலத்தை வெளிப்படுத்த. மற்றப் பெண்களுடன் சேர்ந்துகொண்டு தட்டாமலை (தத்தங்கி) ஆடிச் சுற்றிச் சுற்றி வந்தாள். புதுப்புடவை உடுத்திக்கொண்டதால் மற்றப் பெண்களைவிட கம்பீரமாகக் காட்சியளித்தாள். அப்புடவையின்மீது அவள் மையல் கொண்டாள்õ

89 ஆனால். அடுத்த நாளே தன்னுடைய புதுப்புடவையை மடித்துச் சிறப்பான ஆடைகள் அடங்கிய மூட்டையில் கட்டிவைத்துவிட்டு. பழைய கந்தலாடையையே சுற்றிக்கொண்டு வந்தாள். ஆயினும் எவ்விதத்திலும் உற்சாகமிழந்தவளாகக் காணப்படவில்லைõ

90 புதுப்புடவையைக் கட்டிக்கொள்ளாமல் மடித்து வைத்துவிட்டு வந்திருந்த போதிலும். தாஸகணுவின் புதுக் கண்ணோட்டத்தில் அவளுடைய பழைய வறுமை காணாமற்போய்விட்டது.

91 புதுப்புடவையை வீட்டில் வைத்துவிட்டுப் பழைய கந்தலையே கட்டிக்கொண்டு வந்தாலும். அவளுடைய மனத்தில் வருத்தமென்பதே இல்லை. புதுப்புடவைதான் கிடைத்துவிட்டதேõ

92 வறுமையின் காரணத்தால் கந்தலைக் கட்டிக்கொள்வதும் வசதி ஏற்பட்டபோதும் அதையே செய்வதும் -- இதுதான் வறுமையைப் பெருந்தன்மையுடன் கழிக்கும் யுக்தி போலும். சுகமும் துக்கமும் மனத்தின் உணர்வுகள்தானேõ

93 தாஸகணுவின் புதிர் இவ்வாறு சிக்கறுக்கப்பட்டு. ஈசாவாஸ்ய உபநிஷத ஸந்தேஹங்களைத் தீர்க்கும் விடைக்கு வழிகாட்டியது; அர்த்தபோதனை கிடைத்துவிட்டது.

94 இப் பிரம்மாண்டம் அனைத்திலும் இறைவன் நிறைந்திருக்கும்போது. இறைவன் இல்லாத இடத்தை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்?

95 அது பூர்ணம்; இதுவும் பூர்ணம். பூர்ணத்தி­ருந்து பூர்ணம் உதயமாகியுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தும். பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.2

96 அந்தச் சிறுமியின் வறுமை இறைவனின் ஓர் அம்சம்; நைந்துபோன புடவையிலும் அந்த அம்சம் இருந்தது. தானம் கொடுத்தவர். தானம் கொடுத்த பொருள். தானம் கொடுத்த செய்கை -- இவையனைத்திலும் ஊடுருவியிருப்பதும் அந்த ஒன்றான பரம்பொருளே.

97 '''நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதைத் தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே.ஃஃ

98 இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி; இதனுடைய பிரமாணம் பலரால் உணரப்பட்டது. வாழ்நாள் முழுவதும் சிர்டீயை விட்டு எங்கும் செல்லாமலேயே. பக்தர்களுக்கு அவர் எங்கும். எதிலும் - ஜனக்கூட்டம் நிறைந்த இடங்களிலும் ஜனநடமாட்டமே இல்லாத வனங்களிலும் - காட்சியளித்தார்.

99 நினைத்த மாத்திரத்தில். அவர் சிலருக்கு மச்சிந்தர்கட்டிலும் பலருக்கு கோல்ஹாபூர். ஸோலாபூர். இராமேச்வரம் போன்ற நகரங்களிலும் காட்சியளித்தார்.

100 சிலருக்குத் தாம் எப்பொழுதும் இருக்கும் உருவத்திலும் உடையிலும் காட்சியளித்தார். மற்றவர்களுக்குப் பக­லோ. இரவிலோ. விழித்திருந்தபோதோ. கனவிலோ. அவர்களைத் திருப்திசெய்யும் வகையில் தரிசனம் அளித்தார்.

101 இம்மாதிரியான அனுபவங்கள் ஒன்றில்லை. இரண்டில்லைõ ஓ. நான் எத்தனையைச் சொல்­ வர்ணிப்பேன்? பாபா சிர்டீயில் வசித்தாலும் எவரும் அறியாதவாறு எங்கெங்கோ சென்றுவந்தார்.

102 இந்த வேடிக்கையைப் பாருங்கள்õ யார் இந்தச் சிறுமி? யாருக்கு உறவு? அவள் ஓர் ஏழை வேலைக்காரப் பெண். ஆரஞ்சுநிறப் புடவையைப்பற்றிய பாட்டு அவளுடைய வாயி­ருந்து எவ்வளவு ஸஹஜமாக வெளிவந்ததுõ

103 பாபாவிடம் ஸந்தேஹம் எழுப்பப்பட வேண்டும். வீட்டுவேலை செய்யும் சிறுமி விடையளிக்க வேண்டுமா? அதுவும் காகாவின் வீட்டில் இருந்துகொண்டுõ ஈதனைத்தும் மாயையின் விளையாட்டன்றோ?

104 முதலாவதாக. அச் சிறுமி அங்கிருப்பாள் என்பது பாபாவுக்கு எப்படித் தெரிந்திருந்தது? குறிப்பிட்ட காலத்தில் அவள் எப்படி உபநிஷத விளக்கமளிக்கும் பாட்டைப் பாடினாள்?

105 ஆனால். இவ்வாறு நடந்தது என்பதென்னமோ உண்மை. தாஸகணு ஆச்சரியமடைந்தார். அவருடைய ஸந்தேஹம் தெளிந்து. ஈசாவாஸ்யத்தின் அர்த்தம் புரிந்துவிட்டது1.

106 இந்தத் திட்டங்களும் யுக்திகளும் எதற்காக? அங்கேயே. அப்பொழுதே. பாபாவே இந்த ஸங்தேஹத்தை நிவிர்த்தி செய்திருக்கலாமே என்று கதை கேட்பவர்கள் மனத்தில் ஒரு கேள்வி எழலாம்.

107 அவரே. அங்கேயே அதைச் செய்திருக்க முடியும். ஆனால். இந்த சம்பவத்தின் மஹிமை எவருக்கும் கிடைத்திருக்காது. ஏழை வேலைக்காரச் சிறுமியினுள்ளும் இறைவன் உறைகின்றான் என்பதையே பாபா நிதரிசனமாகச் செய்து காண்பித்தார்.

108 ஆத்மாவைப்பற்றிய ஞானத்தை அளிப்பதே எல்லா உபநிஷதங்களின் சீரிய நோக்கமாகும். அதுவே மோக்ஷதர்மத்தின் ஸாரம்; அதுவே ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசமுமாகும்.

109 உயிர்வாழும் பிராணிகளில் வேற்றுமை உண்டு. ஆயினும் அவற்றுள் உறையும் ஆத்மா வேறுபாடற்ற ஒன்றே. ஆத்மா செயல்புரிவதில்லை; பலனை அனுபவிப்பதும் இல்லை. ஆத்மா என்றும் அசுத்தமாவதில்லை; பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆத்மா செயல்புரிய பந்தப்பட்டது அன்று.

110 'நான் உயர்ந்த ஜாதி பிராமணன்; மற்றவர்கள் நீசமான ஜாதியைச் சேர்ந்தவர்கள்ஃ என்ற பேதப்படுத்திப் பார்க்கும் உணர்வு இருக்கும்வரையில் கருமபந்தங்களில் உழல்வது அவசியமாகிறது1.

111 'நான் உருவமற்றவன்; அனைத்தும் ஒன்றே; என்னைத் தவிர வேறெதுவுமே இல்லை; நான் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறேன்ஃ -- இதுவே தன்னைப்பற்றிய உண்மையான ஞானம்.

112 பூரணமான பிரம்மத்தோடு ஒன்றிய ஜீவாத்மா அதி­ருந்து பிரிந்துவிட்டது. மறுபடியும் முன்போலவே பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும் என்பதே ஜீவாத்மாவின் நிச்சயமான குறிக்கோள்.

113 சுருதிகளும் (வேதங்கள்) ஸ்ம்ருதிகளும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வேதாந்தமும் (தத்துவ நூல்கள்) உரைக்கும் ஸித்தாந்தம் இதுவே. 'எது நழுவிப் போய்விட்டதோ. அது மறுபடியும் வந்து. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும்.ஃ

114 எல்லா உயிரினங்களுக்குள்ளும் இறைவன் ஸமமாக உறைந்திருக்கின்றான் என்கிற மனோபாவம் நம்மிடம் வாராதவரையில். எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறைவனாற்கூட ஞானதீபத்தை ஏற்றமுடியாதுõ

115 சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களைச் சித்தசுத்தியுடன் செய்துகொண்டு வந்தால். மனம் பரிசுத்தமாகி. படிப்படியாக பேதம் பாராத நிலை உருவாகும். சோகம். மயக்கம். சபலங்கள் இவற்றை ஒதுக்கித் தள்ளும் சுத்தமான ஞானம் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும்.

116 மூவுலகங்களிலுமுள்ள சராசரங்களில் (நகரும் நகராப்பொருள்களில்) வியாபித்திருக்கும் இறைவனாகிய பரமேச்வரன். செயல்புரியாதவன்; மாற்றமில்லாதவன்; தூய்மையானவன்; அப்பாலுக்கும் அப்பாற்பட்டவன்; உருவமில்லாதவன்; என்றும் நிலைத்திருக்கும் ஸத்தியம்.

117 பெயர்களும் உருவங்களும் நிறைந்த இந்த சிருஷ்டியில். உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் இறைவன் நானே. விசேஷமான லக்ஷணங்கள் ஏதுமில்லாது அனைத்தையும் வியாபித்திருக்கும் அவனே நான்; நான் மாத்திரமே.

118 உண்மையில் உருவமேதுமில்லாதது. மாயையால் உருவமுள்ளதுபோலத் தோன்றுகிறது. விருப்பங்களாலும் ஆசைகளாலும் நிறைக்கப்பட்டவனுக்கே இந்த ஸம்ஸாரம். அவற்றை வென்றுவிட்டவனுக்கு இது ஸாரமில்லாத உலகம்.

119 ஒரு விஷயம் ஸந்தேஹமில்லாமல் நிர்த்தாரணமாக அறியப்பட வேண்டும். பஞ்ச பூதங்களாலும் உயிருள்ள ஜந்துக்களாலும் உயிரில்லாத ஜடப்பொருள்களாலும் நிறைந்த இவ்வுலகம். இரண்டற்ற ஒன்றேயான பரம்பொருளே.

120 இவ்வுலகத்தைப்பற்றிய இந்த விவேகம் மனத்திற்கு ஏற்புடையதாகாவிட்டாலும். பணத்தையும் பொன்னையும் தேடி அலைவதையாவது விட்டுவிடு.

121 இதையும் செய்யமுடியாவிட்டால். நீ சாகும்வரை. நூறு வருடங்களாயினும் சரி. கர்மம் செய்துகொண் டிருப்பதற்குத்தான் தகுதியுடையவன்õ

122 அந்தக் கர்மமும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு உன்னுடைய வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் ஏற்றவாறே செய்யவேண்டும். அக்னிஹோத்திரம் போன்ற கர்மாக்களை விதிகளின்படி சடங்குபூர்வமாக மனம் பரிசுத்தமடையும்வரை செய்யவேண்டும்.

123 தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள இது ஒரு வழி (கர்மயோகம்); இரண்டாவது வழி ஸர்வ ஸங்க பரித்யாகம் (எல்லாத் தொடர்புகளையும் துறந்துவிடுதல் - துறவறம்). இவ்விரண்டையுமே அனுசரிக்கமுடியாத நிலையில். வாழ்க்கையின் சுகங்களையும் துக்கங்களையும் விதி வழங்கியவாறு அனுபவித்துக்கொண்டு. உழல வேண்டியதுதான்.

124 ஒவ்வொரு பக்தனுடைய ஆன்மீக அதிகாரத்தை நன்கு அறிந்த ஸத்குரு. பிரம்மவித்தையான உபநிஷத ஞானத்தை எல்லாருக்கும் கொடுத்துவிட மாட்டார். ஏனெனில் அபேத பா(க்ஷட்அ)வத்தை அடையாதவனுக்கு உபநிஷதம் வெறும் சொற்களே.

125 ஆயினும். ஞானத்தைத் தேடுபவர்கள் முதற்கட்டத்தில் இதையே கேட்பதால். 'சொல்லுக்குச் சொல் நிலைஃ ஞானத்தையும் அளிக்கவேண்டியிருக்கிறது. ஆகையினால்தான். 'வேலைக்காரச் சிறுமி விளக்கமளிப்பாள்ஃ என்று சொல்­. பாபா அவரைத் திருப்பியனுப்பினார்.

126 பாபாவே விளக்கமளித்து அனுப்பிவிட்டிருந்தால். இந்தச் சுவையான நிகழ்ச்சி நடைபெற்றிருக்காது. 'இருப்பது ஒன்றே; அதைத்தவிர வேறெதுவுமே இல்லைஃ என்ற தத்துவம் தாஸகணுவின் மனத்தில் பதிந்திருக்காது.

127 காகா வீட்டு வேலைக்காரச் சிறுமியும் நான் அல்லேனோ? 'நான்தான் அவள்ஃ என்றும் குறிப்பை பாபா அவருக்களித்து. அவருடைய நேரிடை அனுபவத்தாலேயே உபநிஷதத்தின் தாத்பரியத்தை விளக்கினார்.

128 பரமேச்வரனுடைய அநுக்கிரஹம் சிறிதளவும். ஸத்குருவினுடைய அநுக்கிரஹம் விசேஷமாகவும் இல்லாவிட்டால். ஆத்மஞான மார்க்கத்தில் பிரவேசிக்கமுடியாது. ஒரு சித்தரின் உபதேசம் தேவை.

129 ஆத்மஞானத்தைப்பற்றிய சாஸ்திரங்களையே காதால் கேளுங்கள். 'நான் அனைத்திலும் வியாபித்திருக்கிறேன்; என்னைத் தவிர எங்குமே வேறெதுவுமில்லைஃ என்றே சிந்தனை செய்யுங்கள்.

130 இவ்வாறாக ஆத்ம தத்துவத்தை அறிந்துகொண்டு. நானும் என்னுடைய ஆத்மாவும் ஒன்றே என்ற கருத்தை தியானம் செய்பவனுக்கு ஆத்மா பிரஸன்னமாகும் (காட்சியளிக்கும்).

131 இவ்வாறாக ஆத்ம நிரூபணம் நடக்கும்போது. ஆத்மாவுடன் நிச்சலமான சேர்க்கை ஏற்படும்போது. பரமாத்மா கையில் அகப்படுகிறது.

132 அடுத்த அத்தியாயத்தில் விநாயக் டாகூரின் காதையும் இன்னும் சில காதைகளும் சொல்லப்படும். செவிமடுப்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

133 இக் காதைகள் இனிமையானவை; கேட்பதால். மஹாபுருஷர்களை தரிசனம் செய்யவேண்டுமென்ற பக்தர்களின் ஆவலும் பூர்த்தியாகும்.

134 தினமணி (சூரியன்) உதித்தவுடன் இருள் எவ்வாறு விரட்டப்படுகிறதோ. அவ்வாறே இக்கதாமிருதம் மாயையை விரட்டிவிடும்.

135 ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு. ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட. 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில். 'ஈசாவாஸ்ய பா(ஆஏஅ)வார்த்த போதனம்ஃ என்னும் இருபதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play