Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 28


28. அருட்பெருக்கு - மூன்று சிட்டுக்குருவிகள்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஸாயீ ஓரிடத்தில் மட்டும் வசிப்பவரல்லர்; அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார். பிரம்மதேவரி­ருந்து ஈ, எறும்பு, பூச்சி, புழு உட்பட அனைத்து ஜீவன்களுள்ளும் மற்றும் எங்கும் உறைபவர் ஸாயீ.

2 ஸாயீ பூரணமான சப்த பிரம்மம் (வேதங்கள்); அவரே பர பிரம்மத்தின் அடையாளம். இவ்விருவகையிலும் தலைசிறந்த அவர் ஸத்குருவாக விளங்க எல்லாத் தகுதிகளையும் பெற்றவர்.

3 வானளாவிய ஞானம் படைத்தவராயினும், தம்முடைய சிஷ்யனை ஆன்மீக எழுச்சி பெறச் செய்து 'தன்னை அறிந்தஃ நிலைக்கு உயர்த்த முடியாத ஸத்குருவால் யாருக்கு என்ன பயன்?

4 தேகத்தினுடைய ஜனனத்தைத் தந்தையும் தாயும் அளிக்கின்றனர். ஆனால், இந்த ஜனனத்தை மரணம் தொடர்கிறது. தாய்தந்தையரைவிடக் கருணை மிகுந்த குரு ஜனனமரணச் சுழற்சியையே நாசம் செய்துவிடுகிறார்.

5 கதையை விட்ட இடத்தில் தொடரும் வகையில், கனவில் தெய்வீகக் காட்சிகள் பற்றிய இந்த அத்தியாயத்தில், பக்தர்களின் கனவில் தோன்றி பாபா எவ்வாறு தரிசனமளித்தார் என்ற விவரத்தைக் கேளுங்கள்.

6 ஒருவரைத் திரிசூலம் வரையச் சொன்னார். இன்னொருவரிடம் கிச்சடி வேண்டுமென்று கேட்டார். மற்றொருவருக்கு ஆசிரியர் வடிவில் தோன்றிப் பிரம்பால் அடித்துப் பாடம் புகட்டினார்.

7 சிலரைக் குடிப்பழக்கத்தி­ருந்து விடுவிக்கக் கனவில் தோன்றி பயமுறுத்தினார். இவ்வாறு பக்தர்களை அநேக சங்கடங்களி­ருந்து விடுவித்துத் தம்மிடம் ஈடுபாடு கொள்ளுமாறு செய்தார்.

8 ஒரு பக்தரின் கனவில் தோன்றி, முதுகில் பிரம்பால் விளாசியதும் மார்பின்மேல் குழவி ஓட்டியதும் பதின்மூன்றாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டது. இது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

9 இனிவரும் கதை அபூர்வமானது. சொல்பவரும் கேட்பவர்களும் பாக்கியசா­கள். இருசாராரும் ஆடாது அசையாது அமர்ந்து கதையில் மூழ்குவோம்; என்றும் அழியாத மகிழ்ச்சி எய்துவோம்.

10 நிந்தையையும் பொய்களையும் கெட்ட கதைகளையும் கேட்ட பாவம் ஒழிந்து போகும். எப்பொழுதும் புனிதமானதும் தூய்மையளிப்பவையுமான ஞானிகளின் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்போமாக, கேட்போமாக.

11 கதை கேட்பவர்களே, ஸாயீயின் கருணையை ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்தும் இந்தக் கதையைப் பயபக்தியுடன் கேளுங்கள்.

12 'ராலீ சகோதரர்கள்ஃ என்பது ஒரு கிரேக்கநாட்டுக் கம்பெனி. ஒவ்வொரு நகரத்திலும் ஒரு கிளை அமைத்து, அகில இந்திய ரீதியில் வியாபாரம் செய்துவந்த இந்தக் கம்பெனிக்கு பம்பாயிலும் ஒரு கிளை இருந்தது.

13 லக்மீசந்துக்கு அங்கேதான் கம்பெனி அதிகாரிகளின் கீழ் வேலை கிடைத்தது. குமாஸ்தாவாக இருந்த அவர் மிகுந்த விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடந்துகொண்டார்.

14 ஆரம்பத்தில் அவர் ரயில்வே உத்தியோகம் பார்த்தார். அதன் பிறகு வேங்கடேச அச்சகத்தில் வேலை செய்தார். அப்பொழுதுதான் அவருக்கு ஸாயீயின் சங்கமும் உறவும் கிட்டியது. இது எவ்வாறு கிடைத்ததென்பதைக் கேளுங்கள்.

15 ''என்னுடைய மனிதன் (பக்தன்) வேறு தேசத்தி­ருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் சரி, சிட்டுக்குருவியின் கா­ல் நூல்கட்டி இழுப்பதுபோல் அவனை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பேன்.ஃஃ

16 பல சந்தர்ப்பங்களில் பாபா இவ்விதமாகத் திருவாய்மொழிந்திருக்கிறார். உலகத்து மக்கள் பலர் இதைக் கேட்டிருக்கின்றனர்; அவர்களுடைய அனுபவமும் அவ்வாறேõ இப்பொழுது இந்த லீலையைச் சொல்கிறேன்.

17 நம்பிக்கையுள்ள, கபடமற்ற குழந்தைகளைப் பல மாநிலங்களி­ருந்து பாபா சிர்டீக்கு இழுத்தார். இக் குழந்தைகளில் ஒன்றே லக்மீசந்த்.

18 மோஹத்தால் விளைந்த தாமஸகுணம் நாசமடைந்து பல ஜன்மங்களாகச் சேர்த்துவைத்த நற்செயல்களின் பலன் மேலோங்கும்போது, ஒருவருக்கு ஞானியிடம் வந்துசேரும் பாக்கியம் லாபமாகிறது.

19 இதற்குப்பின், விவேகமெனும் அக்கினி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கிறது; துறவு மனப்பான்மை உதித்து ஞானத்தைக் கொணர்கிறது; எஞ்சியிருக்கும் பாவங்கள் ந­ந்து போகின்றன; பிறவிப் பயனை எய்துகிறோம்.

20 ஒருமுறை ஸாயீநாதரின் காட்சி கிடைத்துவிட்டால், வேறெதற்குமே இடமில்லாமல் போகிறது. கண்களை மூடியபோதும், அவர்களுக்கு எங்கும் நிறைந்த ஸாயீபாபாவே தெரிகிறார்.

21 லாலாஜீயை (லக்மீசந்த்) ஒருமுறை நான் பேட்டி கண்டேன். அவர் விவரித்த சொந்த அனுபவங்களைப் பிரேமையுடன் என்னுடைய இதயமெனும் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். அதை உங்களுக்கு விவரிப்பதற்கு மிகுந்த உற்காசமாக இருக்கிறேன்.

22 பாபாவிடமிருந்து அவருக்கு வந்த அழைப்பே ஒரு தெய்வீக லீலை. விசுவாசமுள்ள பக்தர்கள் இதயத்தைக் காதுகளுக்குக் கொணர்ந்து கேட்கட்டும்.

23 1910ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது லாலாஜீக்கு சிர்டீ பிரயாண யோகம் கிடைத்தது.

24 பாபாவை நேருக்குநேர் தரிசனம் செய்ததும் அவருக்கு அதுதான் முதல் தடவை. ஆனால், அந்த விஜயத்தைப் பற்றி ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவருக்கு ஒரு சூசகம் கிடைத்தது. அது எப்படி நடந்ததென்று கேளுங்கள்.

25 அவர் அப்பொழுது ஸாந்தாகுரூஜில் (பம்பாயின் புறநகர்ப் பகுதி) வசித்துவந்தார். சிர்டீயைப்பற்றிய சிந்தனையே ஏதும் இல்லாத காலம் அது. திடீரென்று ஒருநாள் கனவில் அற்புதக் காட்சியொன்று தோன்றியது.

26 தாடியுடன் கூடிய ஸாது ஒருவர் கனவில் தோன்றினார். அந்த மஹாத்மாவைச் சுற்றி அநேக பக்தர்கள் நின்றுகொண் டிருந்தனர். லாலாஜீ பிரேமையுடன் அவருக்கு நமஸ்காரம் செய்தார்.

27 பின்னர் ஒரு சமயம் அவர் தத்தாத்ரேய மஞ்ஜூநாத் பிஜூர் என்பவரின் இல்லத்திற்கு தாஸகணுவின் உபநியாஸம் (சமயச் சொற்பொழிவு) கேட்கச் சென்றார்.

28 உபநியாஸம் செய்யும்போதெல்லாம் பாபாவின் படத்தைத் தம் அருகே வைத்துக்கொள்வது தாஸகணுவின் தவறாத பழக்கம். படத்தைப் பார்த்தவுடனே லக்மீசந்துக்குக் கனவில் கண்ட உருவம் ஞாபகத்திற்கு வந்தது.

29 அதே பிராயம், அதே தாடி, அதே அவயங்கள், அதே பாதங்கள் - அந்த மஹாத்மா பாபாதான் என்று தெரிந்தவுடன் அவர் மனம் லயத்தில் மூழ்கியது.

30 கீர்த்தனம் செய்பவரோ தாஸகணு; சர்க்கரைப் பந்த­ல் தேன்மழை பொழிந்தாற்போல், கதையோ துகாராமினுடையது; கனவில் ஏற்கெனவே ஸாதுவின் தரிசனம்வேறு ஆகியிருந்ததுõ லாலாஜீயின் மனம் வானத்தில் சிறகடித்துப் பறந்ததுõ

31 மென்மையான மனம் படைத்த லக்மீசந்தின் கண்களில் அன்புக்கண்ணீர் பெருகியது. 'இவ்வுருவத்தின் மீது எப்பொழுது என் பார்வையைப் பதிப்பேன்ஃ என்று அவருடைய இதயம் துடித்தது.

32 கனவுக் காட்சியில் எந்த உருவத்தைக் கண்டாரோ, எந்த உருவத்தின் நகல் உபநியாசத்தில் இருந்த படத்தில் காணப்பட்டதோ, அந்த உருவம் அவருக்குள்ளே புகுந்துவிட்டது. அவருடைய சிந்தனையில் வேறெதுவும் நுழையமுடியவில்லை.

33 'என்னுடன் சிர்டீக்கு வரக்கூடிய நண்பரை எப்பொழுது சந்திப்பேன்? எப்பொழுது இந்த ஞானியைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்து அவர் பாதங்களில் தலைசாய்ப்பேன்?--

34 'இந்த ஸாதுவின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்? அவருடைய பிரேமானந்தம் எனக்கு எப்பொழுதாவது கிடைக்குமா?ஃ லக்மீசந்தின் மனத்தில் இதுவே இடைவிடாத சஞ்சலமாக இருந்தது.

35 'மேலும், பயணச் செலவுக்குப் பணம் வேண்டும். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? தாமதம் செய்யாமல் தரிசனம் பெறுவது எப்படி?ஃ அதற்கான உபாயங்களைப் பற்றிச் சிந்தித்தார்.

36 இறைவன் பக்தர்களின் அன்புக்கும் விசுவாசத்திற்கும் ஏங்குபவன் அல்லனோõ என்ன அற்புதம் நிகழ்ந்ததென்று பாருங்கள்õ அன்றிரவே 8 மணியளவில் நண்பரொருவர், வீட்டின் வாசற்கதவைத் தட்டினார்.

37 கதவைத் திறந்து பார்த்தபோது, லக்மீசந்த் சிர்டீக்கு வர விரும்புகிறாரா என்று கேட்கும் நோக்கத்துடன் நண்பர் சங்கர் ராவ் வந்திருந்தார்.

38 சங்கர் ராவ் முத­ல் நாராயண மஹாராஜை தரிசனம் செய்ய கேட்காங்வ் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தார். பிறகு அவர் மனம் மாறி முத­ல் சிர்டீக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார்.

39 எந்த இலக்குக்காக லக்மீசந்த் எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டுமென்று நினைத்தாரோ, அது பிரயாசை ஏதுமில்லாமலேயே அவருடைய வாயிற்படி தேடி வந்ததுõ லக்மீசந்தின் மகிழ்ச்சி கரை கடந்தது.

40 தம் சிற்றப்பனின் மகனிடமிருந்து ரூ.15/- கடன் வாங்கிக்கொண்டார். நண்பர் சங்கர் ராவும் அவ்வாறே செய்தார். இருவரும் கிளம்பத் தயாராயினர்.

41 மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இருவரும் கிளம்பினர். ரயில் நிலையத்திற்கு நேரத்தோடு சென்று பயணச் சீட்டுகளை வாங்கிக்கொண்டு சௌகரியமாக ரயில் வண்டியைப் பிடித்தனர்.

42 சங்கர் ராவ் ஒரு பஜனைப் பிரியர். ஆகவே இருவரும் ரயில் வண்டியிலேயே பஜனை பாட ஆரம்பித்தனர். இயல்பாகவே விஷய ஆர்வம் கொண்ட லக்மீசந்த், வழியிலேயே தகவல்களை அறிந்துகொள்ள முயன்றார்.

43 தங்களுடைய நம்பிக்கையை விருத்தி செய்துகொள்வதற்காக, சிர்டீயி­ருந்து வந்த மக்கள் எவர்களையாவது சந்திக்க நேர்ந்தால், அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து ஸாயீபாபாவின் மஹிமையைச் சொந்த அனுபவத்தால் அறிந்தவாறு விளக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

44 இருவரும் விசாரித்தனர், ''ஸாயீ பாபா ஒரு பெரிய மஹான்; அஹமத் நகரப் பிராந்தியத்தில் பெரும் புகழுடையவர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆயினும் உங்களுடைய சொந்த அனுபவங்களை எங்களுக்கு அறுதியிட்டுச் சொல்லுங்கள்.ஃஃ

45 அவர்கள் பயணம் செய்த பெட்டியில் சிர்டீயின் அருகி­ருந்து வந்த நான்கு முஸ்லீம்கள் இருந்தனர். அவர்களுடன் சம்பாஷணை செய்ததில் இருவருக்கும் மிகுந்த திருப்தி கிடைத்தது.

46 எளிமையும் நம்பிக்கையும் நிறைந்த பக்தரான லக்மீசந்த், அன்புடன் அவர்களிடம் கோரினார், ''உங்களுக்கு ஸாயீ பாபாவைப்பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.ஃஃ

47 அவர்கள் பதில் கூறினர், ''ஸாயீ பாபா ஒரு பெரிய மஹான். சிர்டீயில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் ஒரு தலைசிறந்த அவ­யா (இஸ்லாமிய முனிவர்); சித்த புருஷர்.ஃஃ

48 இவ்விதமாக சம்பாஷணை செய்துகொண்டே சந்தோஷமாகப் பயணம் செய்து அவர்கள் கோபர்காங்வை அடைந்தபோது, சட்டென்று லக்மீசந்துக்கு ஞாபகம் வந்தது.

49 ''ஸாயீ பாபாவுக்கு கொய்யாப்பழங்கள்மீது பிரியம்; கொய்யா கோபர்காங்வில் அமோகமாக விளைகிறது. கோதாவரி நதிக்கரையில் விற்பனை நடக்கும். நாம் கொய்யாப்பழங்களை பாபாவுக்கு ஸமர்ப்பிக்கலாம்.ஃஃ

50 ஆனால், கோதாவரிக் கரையை அடைந்தபோதோ, அழகான இயற்கைக் காட்சிகளில் மயங்கிக் கொய்யா வாங்க மறந்துவிட்டனர். ஞாபகம் திரும்பியபோது, குதிரைவண்டி அக்கரை சேர்ந்துவிட்டிருந்ததுõ

51 அங்கிருந்து சிர்டீ நான்கு கிராமங்களுக்கு அப்பால் இருந்தது. குதிரைவண்டி முழு வேகத்துடன் ஓட ஆரம்பித்தது. கடைசியில் பார்த்தால், ஞாபகம் வந்த பிறகு எங்குமே கொய்யாப்பழம் காணப்படவில்லை.

52 திடீரென்று பார்த்தால், ஒரு கிழவி கூடையொன்றைத் தலையில் சுமந்துகொண்டு குதிரைவண்டியை நோக்கி ஓடிவருவதைக் கண்டனர். அவளுக்காக வண்டியை நிறுத்தினர். கொய்யாப்பழம் அவர்களைத் தேடிவந்தது கண்டு பெருமகிழ்ச்சியடைந்தனர்.

53 ஆனந்தத்தால் நிரம்பிய லக்மீசந்த் மிகுந்த அக்கறையுடன் நல்ல பழங்களாகப் பொறுக்கி எடுத்துக்கொண்டார். கூடையில் மீதியிருந்த பழங்களைப்பற்றிக் கிழவி சொன்னாள், ''என்னுடைய சார்பில் இந்தப் பழங்களை பாபாவுக்கு ஸமர்ப்பித்துவிடுங்கள்.ஃஃ

54 கொய்யாப்பழத்தைப்பற்றி ஞாபகம் வந்ததும் பிறகு அது அறவே மறந்து போனதும் எதிர்பாராமலேயே கிழவியைச் சந்தித்ததும் கிழவியின் ஸாயீ பக்தியும் இருவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.

55 லாலாஜீயின் மனம் வாதித்தது, ''ஆரம்பத்தில் ஒரு கிழவனார் கனவில் தோன்றினார்ó. அவரையே சமயச் சொற்பொழிவு நடந்த இடத்திலும் கண்டேன். இந்தக் கிழவியும் அவருக்கு ஏதாவதொரு விதத்தில் உறவாக இருப்பாளோ?ஃஃ

56 இது இவ்வாறு இருக்க, குதிரைவண்டி பயணத்தைத் தொடர்ந்து சிர்டீ கிராமத்தை சீக்கிரமாக அடைந்தது. மசூதியின் உச்சியில் பறந்துகொண் டிருந்த கொடிகள் தூரத்தி­ருந்தே தென்பட்டன. இருவரும் பயபக்தியுடன் கைகூப்பி வணங்கினர்.

57 சிர்டீ சென்றடைந்தவுடனே பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு நேராக மசூதிக்குச் சென்றனர். ஸாயீயைக் கண்ணால் கண்டதும் அவர்களுடைய இதயம் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது.

58 தாழ்வாரத்தின் வாசல் வழியாக சபாமண்டபத்தினுள் நுழைந்தனர். தூரத்தி­ருந்தே பாபாவின் உருவத்தைக் கண்டதும் இருவருக்கும் உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது.

59 ஏங்கித் தவித்த தரிசனம் கிடைத்தவுடன் லக்மீசந்த் தம்மை மறந்து பாபாவின் பாதங்களில் லயித்துவிட்டார். உள்ளிருந்து ஆனந்தம் பொங்கப் பொங்க, பசியும் தாஹமும் பறந்தோடின.

60 சுத்தமான ஜலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாபாவின் திருவடித்தாமரைகளைக் கழுவினார். அர்க்யம்1, பாத்யம்1 போன்ற சகல பூஜை விதிமுறைகளையும் செய்தார். தேங்காயையும் வாழைப்பழங்களையும் அர்ப்பணம் செய்தார்.

61 தூபம்1, தீபம்1, தாம்பூலம், தக்ஷிணை போன்ற வழிபாட்டுச் சடங்குகளையும் செய்து மானசீகமாக பாபாவை வலம் வந்தார். மாலையை அணிவித்துவிட்டு பாபாவினுடைய பாதங்களுக்கருகில் அமர்ந்தார்.

62 பிரேமை மிகுந்த பக்தரான லக்மீசந்த், குருவருளில் மூழ்கி ஆனந்தமடைந்து தேனீ தாமரையில் அமர்வதுபோல் ஸாயீயின் பாதகமலங்களுக்கு அருகில் அமர்ந்தார்.

63 பாபா அப்பொழுது கடிந்துகொண்டார், ''அயோக்கியப் பயல்கள்õ வழியில் பஜனை செய்துகொண்டே மற்றவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள்õ பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?--

64 ''தனக்குத் தானே பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே? மற்றவர்களிடம் எதற்காகக் கேள்வி கேட்கவேண்டும்? அவ்வளவு தூய கனவு எப்பொழுதாவது பொய்யாக இருக்கமுடியுமா? உம்முடைய சிந்தனையை நீரே தெளிவு

செய்துகொள்ளும். --
65 ''மார்வாரியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்திற்கு வரவேண்டிய அவசியமும் அவசரமும் என்ன? இப்பொழுதாவது உமது மனத்தின் ஆவல் நிறைவேறியதா?ஃஃ இந்த வார்த்தைகளைக் கேட்ட இருவரும் வியந்தனர்.

66 ''வரும் வழியில் நாம் செய்த விசாரணைபற்றி இங்கிருந்தபடியே பாபா எப்படி அறிந்தார்?ஃஃ லக்மீசந்த் இவ்வற்புதத்தை நினைத்துப் பரம ஆச்சரியமடைந்தார்.

67 ''கனவு என்னுடைய இல்லத்தில் தோன்றியது; பஜனை செய்ததோ ரயில்வண்டியில்; பாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? என்ன அற்புதமான அந்தர்ஞானம் இதுõ--

68 ''நான் பாபாவை தரிசனம் செய்யப் பேராவல் கொண்டது உண்மை. என்னிடம் தேவையான பணம் இல்லை; ஆகவே கடன் வாங்கிக்கொண்டேன். அது எப்படி இவருக்குத் தெரிந்ததுõஃஃ

69 வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு லக்மீசந்த் ஆச்சரியமடைந்தார். தாமரையால் கவரப்படும் தேனீக்களைப்போல் பாபாவின் திருவடித்தாமரையை நாடி வந்திருந்த பக்தர்களும் ஆச்சரியமடைந்தனர். பாபாவின் லீலைகள் கற்பனைக்கு எட்டாதவை அல்லவோõ

70 கடன் வாங்கிப் புனிதப் பயணம் சென்றோ பண்டிகைகளைக் கொண்டாடியோ கடனாளி ஆவது பாபாவுக்கு அறவே பிடிக்காத விஷயம். இது இங்கு முக்கியமான படிப்பினை.

71 பின்னர், மற்ற பக்தர்களுடன் லக்மீசந்த் சந்தோஷமாக ஸாடே வாடாவுக்குச் சென்றார். மதிய வேளையில் சாப்பாட்டுக்கு கோஷ்டியில் உட்கார்ந்தார்.

72 அதுசமயம், யாரோ ஒரு பக்தர் கொண்டுவந்த ஸாஞ்ஜா1 பாபாவின் பிரசாதமாக ஒவ்வொரு தட்டிலும் சிறிது பரிமாறப்பட்டது. இதை உண்ட லாலாஜீ திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

73 அடுத்த நாள் சாப்பாட்டு நேரத்தில் லாலாஜீக்கு ஸாஞ்ஜா ஞாபகம் வந்தது. ஆனால், ஸாஞ்ஜா தினமும் பரிமாறப்படும் உணவுப்பண்டம் அன்று. ஆகவே, அவருடைய ஆசை நிறைவேறாமற்போயிற்று.

74 மூன்றாவது நாளில், இந்த நிறைவேறாதுபோன ஆசையை எவ்விதமான உபாயங்களால் நஷ்டஈட்டுடன் பாபா திருப்தி செய்துவைத்தார் என்னும் அற்புதத்தைப் பாருங்கள்.

75 ஜோக்(எ) பூஜைக்குரிய சாமான்களான சந்தனம், அட்சதை, மலர்கள், விளக்குகள், மணி ஆகிய பொருள்களுடன் மசூதிக்கு வந்தார். பாபாவை வினவ ஆரம்பித்தார்.

76 ''பாபா, இன்று நைவேத்தியமாக என்ன கொண்டுவர வேண்டும்?ஃஃ மஹராஜ் ஆணையிட்டார், ''எனக்கு ஒரு தட்டு நிறைய ஸாஞ்ஜா கொண்டுவாரும். பூஜை, ஆரதியெல்லாம் பிறகு செய்துகொள்ளலாம்.ஃஃ

77 பூஜை சாமான்களை அங்கேயே வைத்துவிட்டு ஜோக் உடனே அங்கிருந்து சென்றார். திரும்பி வந்தபோது எல்லாருக்கும் விநியோகம் செய்யுமளவிற்கு சிரா (ரவா கேசரி) கொண்டுவந்தார்.

78 சிறிது நேரம் கழித்து மதிய ஆரதி நடந்தது. பக்தர்கள் கொண்டுவந்திருந்த நைவேத்தியங்களெல்லாம் தட்டுகளில் ஒவ்வொன்றாக பாபாவைச் சென்றடைந்தன. பாபா அப்பொழுது பக்தர்களிடம் சொன்னார்,--

79 ''இன்று ஒரு விசேஷமான நாள். ஆகவே இன்றைய பிரசாதம் ஸாஞ்ஜாவாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். ஸாஞ்ஜாவுக்குச் சொல்­யனுப்புங்கள். சீக்கிரமாகக் கொண்டுவாருங்கள். எல்லாருக்கும் யதேஷ்டமாகக் (விரும்பியவரை) கிடைக்க வேண்டும்.ஃஃ

80 பக்தர்கள் சென்று இரண்டு போகணிகள் நிறைய ஸாஞ்ஜா கொண்டுவந்தனர். லக்மீசந்த் ஏற்கெனவே பசியுடன் இருந்தார். வாய்வுப் பிடிப்பால் இடுப்புவ­யும் இருந்தது.

81 வயிற்றி­ருந்த பசியும் இடுப்பி­ருந்த வ­யும் லக்மீசந்தை நிலைகொள்ளாமல் செய்து கொண்டிருந்தன. இந்நேரத்தில் பாபா என்ன திருவாய்மொழிந்தார் என்பதைக் கவனத்துடன் கேளுங்கள்.

82 பாபா கூறினார், ''இப்பொழுது பசியுடன் இருப்பது நன்று. இடுப்பில் வ­ இருக்கிறது; அதற்கு மருந்து தேவை. ஆனால் இது ஸாஞ்ஜா உண்ணும் நேரம். ஆரதிக்குத் தயாராகும்.ஃஃ

83 லக்மீசந்தின் மனத்தில் இருந்த எண்ணம் பாபாவின் வார்த்தைகளாகத் தெளிவாகவும் பிரகடனம் போன்றும் வெளிவந்தது. ஒ­யே எழுப்பாமல் ஏற்பட்ட எதிரொ­õ மஹராஜ் அந்தர்ஞானத்தால் அனைத்தையும் அறிந்திருந்தார்.

84 ஆரதி முடிவடைந்தது. மதிய உணவில் ஒரு பண்டமாக ஸாஞ்ஜா பரிமாறப்பட்டது. லக்மீசந்தின் ஆசை நிறைவேறியது. அவர் ஆனந்தமடைந்தார்.

85 இந்தக் கட்டத்தி­ருந்து அவருக்கு பாபாவின் மீதிருந்த அன்பு பெருகியது. தேங்காய், ஊதுவத்தி, மாலைகள் ஆகியவற்றை ஸமர்ப்பணம் செய்வது ஒரு நியமம் ஆகிவிட்டது. பூஜையும் அதையொட்டிய செயல்களும் தொடர்ந்து நடந்தன. லக்மீசந்துக்கு க்ஷேமத்தைக் கொண்டுவந்தன.

86 சிர்டீக்கு யாராவது செல்வது தெரிந்தால், அவரிடம் மாலை, தக்ஷிணை, ஊதுவத்தி, கற்பூரம் ஆகிய பொருள்களைத் தவறாது கொடுத்தனுப்பும் அளவிற்கு லக்மீசந்தின் பக்தி ஆழமாகியது.

87 சிர்டீக்கு எவர் போனாலும் சரி, அது லக்மீசந்துக்குத் தெரிந்தவுடனே அவரிடம் இம்மூன்று பொருள்களையும் தக்ஷிணையையும் பாபாவிடம் ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் கட்டாயம் கொடுத்தனுப்புவார்.

88 இதுவரை விவரிக்கப்பட்ட விஜயத்தில்தான், பாபா சாவடிக்குச் செல்லும் இரவு ஒன்றில், அந்தக் கோலாகலத்தைப் பார்க்க லக்மீசந்த் சென்றார். திடீரென்று பாபா குக்கிக் குக்கி இருமினார். இருமல் துன்பத்தையளித்து அவரை நிலைதடுமாறச் செய்தது.

89 லக்மீசந்த் தமக்குள் சொல்­க்கொண்டார், ''ஓ, என்ன வேதனை இந்த இருமல்õ ஜனங்களுடைய கண்ணேறுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறதுõஃஃ

90 இது லக்மீசந்தின் மனத்தில் எழுந்த ஓர் எண்ண அலையே. ஆயினும், அவர் காலையில் மசூதிக்கு வந்தபோது பாபா என்ன சொன்னார் என்னும் அற்புதத்தைப் பாருங்கள்.

91 மாதவராவும் அப்பொழுது அங்கு வந்திருந்தார். பாபா அவரிடம் தம்மிச்சையாகவே சொன்னார், ''நேற்று நான் குக்கிக் குக்கி இருமி அவஸ்தைப்பட்டேன். இது கண்ணேறு காரணமாக ஏற்பட்டிருக்குமோ?--

92 ''யாரோ ஒருவன் என்மீது கெட்ட திருஷ்டியைப் போட்டுவிட்டான் போ­ருக்கிறது. அதனால்தான் இந்த இருமல் என் உயிரை வாங்குகிறது.ஃஃ

93 லக்மீசந்தின் மனத்தில் மின்னலடித்தது. ''இது என்னுடைய எண்ணத்தின் எதிரொ­யேõ ஆயினும் பாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? எல்லாருடைய உடல்களிலும் வாசம் செய்கிறார் அல்லரோõஃஃ

94 கைகளைக் கூப்பிக்கொண்டு பாபாவை வேண்டினார், ''மஹராஜ், உங்களுடைய தரிசனத்தால் ஆனந்தமடைந்தேன். இதுபோலவே கருணை கூர்ந்து எப்பொழுதும் என்னைக் காப்பாற்றுங்கள்.--

95 ''தங்களுடைய பாதகமலங்களைத் தவிர இவ்வுலகில் இப்பொழுது வேறெந்தக் கடவுளையும் யான் அறியேன். என்னுடைய மனம் உங்களுடைய பாதங்களிலும் வழிபாட்டிலும் எப்பொழுதும் லயிக்கட்டும்.--

96 ''ஓ ஸமர்த்த ஸாயீ, உங்களுடைய பாதங்களில் வணங்கி வீடு திரும்ப அனுமதி வேண்டுகிறேன். எங்களுக்கு அனுமதி தந்து அநாதைகளாகிய எங்களை ரட்சிப்பீராக.--

97 ''இவ்வுலக வாழ்வில் நாங்கள் மாட்டிக்கொண்டு கஷ்டப்படாதவாறு எப்பொழுதும் உங்கள் கடைக்கண்பார்வையைச் செலுத்துங்கள். உங்கள் நாமத்தைக் கீர்த்தனம் செய்யும் வழக்கம் புஷ்டியடைந்து எங்களைச் சுற்றி சுகமும் திருப்தியும் நிலவட்டும்.ஃஃ

98 ஸாயீயின் ஆசீர்வாதங்களையும் உதியையும் வாங்கிக்கொண்டு, வழிநெடுக ஸாயீயின் புகழைப் பாடிக்கொண்டு லக்மீசந்த் ஆனந்தமாக வீட்டிற்கு வந்துசேர்ந்தார்.

99 இன்னுமொரு சிட்டுக்குருவியும் பாபாவால் நூல் கட்டி இழுக்கப்பட்டு சிர்டீக்குக் கொண்டுவரப்பட்டது. பக்தைக்கு நேருக்குநேராக தரிசனம் செய்யும் நல்லநேரம் வந்தபோது இது நடந்தது. அவ்வம்மையாருடைய அற்புதமான காதையைக் கேளுங்கள்õ

100 இந்தச் சிட்டுக்குருவி ஓர் அன்பார்ந்த பெண்மணி. அவருடைய காதை மிக சுவாரசியமானது. பர்ஹாண்பூரில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது; அதில் ஸாயீ மஹராஜைப் பார்த்தார்.

101 அவர் அதற்குமுன் பாபாவைப் பிரத்யட்சமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும், பாபா தம் வீட்டு வாயிற்படிக்கு வந்து, கிச்சடி உணவு தருமாறு கேட்கின்ற காட்சியைக் கனவில் கண்டார்.

102 உடனே தூக்கத்தி­ருந்து எழுந்து வீட்டைச் சுற்றித் தேடிப்பார்த்தார். வெளியில் யாரும் தென்படவில்லை. எல்லாருக்கும் தம் கனவுக் காட்சியைப்பற்றி ஆவலுடன் தெரிவித்தார்.

103 அம்மையாரின் கணவர் அப்பொழுது பர்ஹாண்பூரிலேயே தபால் இலாகாவில் அதிகாரியாக வேலை பார்த்துவந்தார். பின்னர் அவருக்கு அகோலாவுக்குப் பணிமாற்றம் ஏற்பட்டது. அகோலாவுக்கு மாறியவுடன் சிர்டீ செல்வதற்கு அம்மையார் ஆயத்தம் செய்தார்.

104 கணவனும் மனைவியும் பக்தி பா(ஆஏஅ)வம் மிகுந்தவர்கள். ஸாயீயை தரிசனம் செய்யவேண்டுமென்று பேராவல் கொண்டனர். கனவில் வந்த காட்சியைப் போற்றிப் பெருமிதம் அடைந்தனர். ஸாயீயினுடைய லீலை இவ்வுலக நடப்பிற்கு அப்பாற்பட்டதன்றோõ

105 ஒரு தகுந்த நாளைத் தேர்ந்தெடுத்து இருவரும் சிர்டீக்குக் கிளம்பினர். வழியில் கோமதி தீர்த்தத்திற்கு (கோதாவரி நதிக்கு) வந்தனம் செலுத்திவிட்டு சிர்டீக்கு வந்துசேர்ந்தனர்.

106 பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்து பக்தியுடன் பூஜையும் செய்தனர். பாபாவின் பாதங்களைத் தினமும் சேவித்துக்கொண்டு மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் சிர்டீயில் தங்கினர்.

107 இவ்வாறு கணவனும் மனைவியும் சிர்டீயில் ஆனந்தமாக இரண்டு மாதங்கள் தங்கினர். பாபாவும் அவர்கள் அத்தியந்த பக்தியுடன் அளித்த கிச்சடி போஜனத்தை ஏற்றுக்கொண்டதில் பரிபூரணமாகத் திருப்தியடைந்தார்.

108 கணவனும் மனைவியும் கிச்சடியை பாபாவுக்கு நைவேத்தியமாக அளிப்பதற்காகவே சிர்டீக்குப் பயணமாக வந்திருந்தனர். ஆனால், பதினான்கு நாள்கள் கடந்தும் கிச்சடியை ஸமர்ப்பணம் செய்யமுடியாத நிலைமையாக இருந்தது.

109 அப்பெண்மணிக்குத் தாம் செய்துகொண்ட சங்கற்பம் இவ்வாறு காலம் கடந்துகொண்டே போனது பொறுக்கவில்லை. ஆகவே, பதினான்காவது நாள் மதியவேளை வந்தவுடனே கிச்சடியுடன் மசூதிக்கு வந்தார்.

110 வந்துசேர்ந்தவுடன், பாபா தமது பக்தர்களுடன் உணவருந்த அமர்ந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் மசூதியில் படுதா போடப்பட்டிருந்ததைக் கண்டார்.

111 போஜன நேரத்தில் யாருமே படுதாவை விலக்கமாட்டார்கள். ஆயினும் கீழேயிருக்கும் சபாமண்டபத்தில் வெறுமனே உட்கார்ந்திருக்க அவ்வம்மையாருக்குப் பொறுமை இல்லை.

112 பாபாவுக்குக் கிச்சடி ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அவர் அகோலாவிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து சிர்டீக்கு வந்திருந்தார். இந்த அபரிமிதமான உற்சாகம் எப்படி அவரை சபாமண்டபத்தில் சும்மா உட்கார்ந்திருக்க விட்டுவைக்கும்?

113 ஆகவே, அவர் யார் சொன்னதையும் கேட்காமல் படுதாவைத் தம்முடைய கைகளாலேயே விலக்கிவிட்டு நைவேத்தியத்துடன் உள்ளே புகுந்தார். அவருடைய ஏக்கமும் தணிந்தது.

114 பாபாவோ அங்கிருந்தோர் அனைவரையும் ஆச்சரியத்தில் முழுக்கினார். கிச்சடியின்மேல் பேரார்வம் காண்பித்து, மற்றப் பண்டங்களுக்கு முன்பாக அதை உண்ணவேண்டுமென்று விரும்பித் தம்முடைய இருகைகளையும் நீட்டித் தட்டை அவசரமாக வாங்கிக்கொண்டார்.

115 கிச்சடியைக் கண்டவுடன் மிகுந்த உற்சாகத்துடன் பிடிப்பிடியாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அங்கிருந்த எல்லாரும் அவரை அன்புடன் பார்த்து அதிசயப்பட்டனர்.

116 பாபா காண்பித்த ஆர்வத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். ஆயினும் கிச்சடியின் கதையைக் கேட்டபின், பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக நடப்புக்கு அப்பாற்பட்டவை என்று அறிந்துகொண்டனர்.

117 மேற்கொண்டு சொல்லப்போகும் காதையைக் கேட்டால் உங்கள் மனம் பிரேமையால் பொங்கும். திடீரென்று கிளம்பி பாபாவுக்கு சேவை செய்யவந்த ஒரு குஜராத்தி பிராமணரின் கதை இது.

118 ஆரம்பத்தில் ராவ்பஹதூர் ஸாடேவின்1 இல்லத்தில் வேலை செய்தவர் இவர். ஸாடேவுக்கு அந்தரங்க சுத்தமாகவும் விசுவாசத்துடனும் பணி செய்த பிறகு, ஸாயீ பாதங்களில் அடைக்கலம் புகுந்தார்.

119 இதுவும் ஒரு சுவாரசியமான கதை. பக்தியும் பிரேமையும் நிரம்பிய வாழ்க்கையை நடத்துபவர்களின் ஏக்கங்களை ஸ்ரீஹரி எவ்வாறு தீர்த்துவைக்கிறார் என்பதைக் கேளுங்கள்.

120 மேகா என்பது இந்த பிராமணரின் பெயர். பூர்வஜன்ம சம்பந்தமே இவரை ஸாயீயிடம் கொண்டுவந்து சேர்த்தது. இப்பொழுது கதையை விவரமாகக் கேளுங்கள்.

121 ஸாடே, கேடா ஜில்லாவில் உதவி மாவட்டாட்சியராக உத்தியோகம் பார்த்துவந்தார். அங்கேதான் எதிர்பாராமல் மேகாவைச் சந்திக்க நேர்ந்தது. சிவாலயத்தில் நித்திய பூஜை செய்வதற்காக அவரைப் பணியில் அமர்த்தினார்.

122 பின்னர் இந்த ஸாடே சிர்டீக்கு வந்தார்; பாக்கியம் பெற்றார். ஸாயீ மஹராஜின் அன்பையும் புனிதமான சங்கத்தையும் அனுபவித்தார். அவருடைய பாதங்களில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டார்.

123 தரிசனம் செய்ய வரும் கூட்டத்தைக் கண்டு, தாம் அங்கு வந்தால் தங்குவதற்காகச் சொந்தமாகவே ஒரு வாடா கட்டிவிடலாம் என்று முடிவெடுத்தார்.

124 கிராமத் தலைவர்களைச் சந்தித்து பாபா முதன்முத­ல் தோன்றிய இடத்தை விலைக்கு வாங்கினார். அந்த இடத்தில் வாடா கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது.

125 இந்தப் புனிதமான இடத்தின் முக்கியத்துவம் நான்காவது அத்தியாயத்தில் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. இங்கு மறுபடியும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. விட்ட இடத்தி­ருந்து கதையை மேலும் தொடர்வோம்.

126 ஆக, மேகா, ராவ் பஹதூர் ஸாடேவைச் சந்திக்க நேர்ந்தது அவருடைய பூர்வபுண்ணிய பலத்தாலேயே. ஏனெனில், ஸாடேதான் பெருமுயற்சி செய்து மேகாவுக்கு ஆன்மீகப் பாதையில் வழிகாட்டினார்.

127 சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட மேகா, பிராமணர்களுக்குரிய வழிபாடுகளையும் சடங்குகளையும் உதாசீனம் செய்துவிட்டார். ஆயினும், ஸாடே காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஸன்மார்க்கத்தில் பிரவேசம் செய்யவைத்தார்.

128 மேகா ஸாடேவிடம் பணி செய்ய ஆரம்பித்தபின், பரஸ்பர மரியாதை வளர்ந்தது. இவ்விதமாக மேகா ஸாடேவைத் தம் குருவாகக் கருதி அவரிடம் பாசம் கொண்டார்.

129 ஒருநாள் சகஜமாகப் பேசிக்கொண் டிருந்தபோது, ஸாடே தம் குருவின் மஹாத்மியத்தை எடுத்துரைத்தார். சித்தத்தில் பிரேமை பொங்கிவழிய அப்பொழுது மேகாவிடம் சொன்னார்,--

130 ''பாபாவுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யவேண்டுமென்று என் இதயத்தின் ஆழத்தில் விரும்புகிறேன். உம்மை சிர்டீக்கு அனுப்புவதன் முக்கிய காரணம் இதுவே என்றறிந்துகொள்ளும்.--

131 ''மேலும், வேறெதிலும் நாட்டமின்றி நீர் எனக்குச் செய்யும் சேவையைப் பார்க்கும்போது, நீர் ஸத்குருவிடம் போய்ச்சேரவேண்டும் என்றும் அவரிடம் பரிபூரணமான நம்பிக்கையையும் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.--

132 ''நீர் பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும். இந்த ஜன்மத்தில் பரம மங்களங்களை அடைவீர். போங்கள், போங்கள், போய் ஸத்குருவின் பாதங்களை மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் (உடலாலும்) வழிபடுங்கள்.ஃஃ

133 மேகா ஸாயீயின் ஜாதி என்னவென்று கேட்டார். உண்மையில் அது ஸாடேவுக்குத் தெரியாது. ஸாடே சொன்னார், ''அவர் மசூதியில் வசிப்பதால் அவரைச் சிலர் 'அவிந்தஃ (காது குத்தப்படாதவர் - முஸ்லீம்) என்று சொல்கிறார்கள்.

134 'அவிந்தஃ என்னும் வார்த்தை காதில் விழுந்தவுடனே மேகா மனமுடைந்துபோனார். ''ஒரு முஸ்லீமைவிட நீசமான பிராணி இவ்வுலகில் ஏதும் உண்டோ? நீசன் எப்படி ஒரு குரு ஆகமுடியும்?ஃஃ

135 ஆனால், முடியாது என்று சொன்னால் ஸாடே சினம் கொள்வார்; போகிறேன் என்று ஒத்துக்கொண்டால் நரகந்தான் கிட்டும். என்ன செய்யலாம் என்று அவரால் யோசிக்க முடியவில்லை. அவர் மனம் கவலையில் உளைந்தது.

136 பேய்க்கும் பெருங்கடலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட நிலைமை. அவர் மனம் அலைபாய்ந்து அமைதியிழந்தது. ஆனால், ஸாடேவோ மனப்பூர்வமாக அவரைப் போகும்படி வற்புறுத்திக்கொண் டிருந்தார். 'சரி, போய்த் தரிசனம் செய்துவிட்டு வரலாம்ஃ என்று மேகா முடிவெடுத்தார்.

137 பின்னர் மேகா சிர்டீக்கு வந்துசேர்ந்தார். முற்றத்தினுள் சென்று மசூதியின் படிகளில் ஏற ஆரம்பித்தார். பாபா தம் லீலையை ஆரம்பித்தார்õ

138 உக்கிரமான முகத்துடன் கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டே இரைச்ச­ட்டார், ''ஜாக்கிரதைõ படிமேல் கால் வைத்து ஏறினால் தெரியும் சேதிõ இது ஒரு யவனன் (முஸ்லீம்) வாழும் இடம்.--

139 ''ஓ, நீரோ உயர்குலத்து பிராமணன். நானோ நீசனிலும் நீசனான யவனன். உம்மேல் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும். போம் வெளியே; இக்கணமே திரும்பிவிடும்õஃஃ

140 கடுமையான இவ்வார்த்தைகள் மேகாவின்மீது தணலைப்போலக் கொட்டின. பாபா பிரளயகால ருத்திரனைப்போலக் காட்சியளித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெலவெலத்தனர். மேகா பயத்தால் நடுநடுங்கிப்போனார்.

141 இந்தக் கோபமென்னவோ ஒரு நடிப்புதான்; உள்ளே இதயம் தயையால் நிரம்பி வழிந்துகொண் டிருந்தது. மேகா வியப்பால் நிறைந்து செய­ழந்துபோனார். ''என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்த எண்ணங்களை இவர் எப்படி அறிந்தார்?--

142 ''எங்கோ இருக்கும் கேடா ஜில்லா எங்கே? வெகுதூரத்தில் இருக்கும் அஹமத் நகரம் எங்கே? என்னுடைய மனக்கோணலும் சந்தேகங்களுமே பாபாவின் கோபமாக உருவெடுத்தன போலும்õஃஃ

143 பாபா மேகாவை அடிப்பதற்கு நெருங்க, நெருங்க, மேகாவின் தைரியம் அவரைக் காலைவாரிவிட்டது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஓரடி பின்னுக்கு வைத்தார். கிட்ட நெருங்கத் தைரியம் இல்லாது போயிற்று.

144 இந்நிலையிலேயே, பாபாவின் மனநிலையை அறிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டு சிர்டீயில் சில நாள்களைத் தள்ளினார். முடிந்த அளவிற்கு ஏதோ சேவை செய்தாரே தவிர, திடமான விசுவாசம் ஏற்படவில்லை.

145 பின்னர் மேகா தம்முடைய சொந்த ஊருக்கே சென்றார். அங்கு ஜுரத்தில் படுத்து மீண்டார். இந்நிலையில் பாபாவைப்பற்றிய ஏக்கம் உள்ளிருந்து வளர்ந்தது. மறுபடியும் சிர்டீக்கே திரும்பி வந்தார்.

146 திரும்பிவந்த பிறகு மனம் சந்தோஷமடைந்தது; சிர்டீயிலேயே தங்கினார். ஸாயீ பாதங்களில் வீசுவாசம் வளர்ந்து அனன்னிய பக்தரானார். ஸாயீயைவிட்டால் வேறு தெய்வமில்லை என்னும் நிலைக்கு உயர்ந்தார்.

147 மேகா ஏற்கெனவே ஒரு சிவபக்தர். ஸாயீ பாதங்களின்மேல் ஈடுபாடு வளர, வளர ஸாயீநாதனில் சிவனைப் பார்த்தார். ஸாயீநாதனே அவருக்கு உமாநாதன் (சிவன்).

148 மேகா இரவுபகலாக ஸாயீசங்கர நாமகோஷம் செய்தார். அவருடைய புத்தி ஸாயீயில் ஒன்றிவிட்டது. கறைகளும் குறைகளும் வெளியேறி மனம் தூய்மையடைந்தது.

149 ஸாயீயைக் கண்ணுக்கெதிரே தெரியும் சங்கரராகப் பாவித்ததால், ஸாயீயின் அனன்னிய பக்தரானார். சங்கர, சங்கர, என்று எந்நேரமும் உரக்கச் சொல்­க்கொண் டிருந்தார். வேறெந்த தெய்வத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

150 ஸாயீயே அவர் தினமும் பூஜை செய்யும் தெய்வம். ஸாயீயே கிரிஜாரமணன் (சிவன்). இந்த மனோபாவம் வேரூன்றிய பிறகு மேகா சதாசர்வ காலமும் சந்தோஷமாக இருந்தார்.

151 சிவனுக்கு வில்வத்தின்மீது பிரியம்; ஆனால், சிர்டீயில் வில்வமரம் இல்லை. வில்வ தளங்களை சிவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டுமென்ற ஆவலைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகத் தினமும் இரண்டு மூன்று மைல்கள் நடப்பார் மேகா.

152 இரண்டு மூன்று மைல்கள் நடப்பது என்ன பெரிய காரியம்? வில்வதளங்களைக் கொணர்ந்து சிறப்பாக சிவபூஜை செய்து திருப்தியடைய, மலையைக் கடக்கவும் அவர் தயாராக இருந்தார்.

153 வெகுதூரம் நடந்துசென்று வில்வதளங்களைக் கொணர்ந்து இதர பூஜை சாமான்களையும் சேகரித்துக்கொண்டு, கிராமத்து தேவதைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் சாஸ்திர விதிகளின்படி பூஜை செய்வார்.

154 இது முடிந்தவுடன் மசூதிக்குச் செல்வார். பாபா அமரும் இருக்கைக்கு அன்புடன் நமஸ்காரம் செய்வார். பிறகு பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட்டுவிட்டு பாத தீர்த்தத்தை (பாதங்களைக் கழுவிய நீர்) முதலாக அருந்துவார்.

155 மேகாவைப்பற்றி, கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய காதைகள் பல உண்டு. இக் காதைகள் ஸாயீயின் எங்கும் நிறைந்த சக்தியையும் ஸாயீ கிராம தேவதைகள் மீது வைத்திருந்த பக்தியையும் எடுத்துக்காட்டும்.

156 மேகா உயிர் வாழ்ந்தவரை தினமும் மதிய ஆரதியை அவரே செய்தார். கிராம தேவதைகளின் பூஜையை முத­ல் முடித்துக்கொண்டு, கடைசியாக மசூதிக்குச் செல்வார்.

157 இதுவே அவருடைய தினப்படி நடவடிக்கையாக இருந்தது. ஒருநாள் இந்தக் கிரமம் தவறிவிட்டது. எவ்வளவு முயன்றும் கண்டோபா1 பூஜையை அன்று செய்ய முடியவில்லை.

158 அன்றும் நித்திய கிரமப்படி பூஜை செய்ய விரும்பினார். ஆனால், எவ்வளவு பிரயத்தனம் செய்தபோதிலும் கோயி­ன் கதவுகளைத் திறக்க முடியவில்லை. ஆகவே, பூஜையைச் செய்ய முடியாமல் விட்டுவிட்டு மசூதிக்கு ஆரதியுடன் வந்தார்.

159 பாபா உடனே விளம்பினார், ''இன்று உம்முடைய நித்தியபூஜையில் ஒரு துண்டு விழுந்திருக்கிறது. மற்ற தெய்வங்களுக்குப் பூஜை செய்துவிட்டீர்; ஆனால், ஒரு தெய்வம் இன்னும் பூஜை செய்யப்படாமலேயே இருக்கிறது.--

160 ''போம், போய் அந்தப் பூஜையைச் செய்துவிட்டுத் திரும்பிவாரும்.ஃஃ மேகா பதிலுரைத்தார், ''பாபா, கதவு மூடியிருந்தது. நான் திறக்க முயன்றேன்; முடியவில்லை. ஆகவே நான் பூஜை செய்யாமலேயே இங்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஃஃ

161 பாபா கூறினார், ''போம், மறுபடியும் சென்று பாரும். கதவை இப்பொழுது திறக்க முடியும்.ஃஃ மேகா ஒருகணமும் தாமதியாது கோயிலுக்கு ஓடினார். பாபா கூறிய வார்த்தைகள் உண்மையென்பதை அனுபவத்தில் கண்டார்.

162 மேகா கண்டோபா பூஜையை முடித்தார். தம்முடைய மனக்குறையும் தீர்ந்தது கண்டார். இதன் பின்னரே பாபா மேகாவைத் தமக்குப் பூஜை செய்ய அனுமதித்தார்.

163 மேகா பயபக்தியுடன் சந்தனம், புஷ்பம் ஆகிய பூஜை திரவியங்களால் அஷ்டோபசார பூஜை செய்தார். மாலையையும் பழங்களையும், தம் சக்திக்கேற்றவாறு தக்ஷிணையையும் ஸமர்ப்பித்தார்.

164 ஒரு மகர ஸங்க்ராந்தி தினத்தன்று (பொங்கல் திருநாள்) கோதாவரி நதியி­ருந்து நீர் கொணர்ந்து, பாபாவுக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காயும் வாசனைத் திரவியங்கள் கலந்த சந்தனமும் தேய்த்து, உடம்பு முழுவதும் குளிப்பாட்ட விரும்பினார் மேகா.

165 பாபாவை அனுமதி கேட்டுப் பிடுங்கியெடுத்தார். கடைசியில் பாபா சொன்னார், ''சரி, உம் இஷ்டப்படி செய்யும்.ஃஃ மேகா நீர் கொண்டுவரக் குடத்துடன் சென்றார்.

166 சூரிய உதயத்திற்கு முன்பே, கா­க் குடத்துடன், செருப்பு அணியாது குடையும் இல்லாது கோமதி (கோதாவரி) நதியி­ருந்து நீர் கொண்டுவர மேகா கிளம்பினார்.

167 போகவரப் பதினாறு மைல்கள் இருந்த தூரத்தைப்பற்றியோ, சென்றுவருவதில் இருந்த கடுமையான சிரமத்தைப்பற்றியோ, கஷ்டங்களைப்பற்றியோ எந்த எண்ணமும் அவருடைய கனவிலும் எழவில்லை.

168 இவற்றைப்பற்றி அவர் கவலைப்படவேயில்லை. அனுமதி கிடைத்த உடனே அவர் கிளம்பிவிட்டார். திடமான தீர்மானமே எடுத்த காரியத்தில் உற்சாகத்தை ஊட்டுகிறதன்றோõ

169 ஸாயீயை கங்கை நீரால் குளிப்பாட்ட வேண்டுமென்ற விருப்பம் எழுந்தபின், சிரமம் என்றால் என்ன? அசதி என்றால் என்ன? திடமான சிரத்தையே இங்கே பிரமாணம் அன்றோõ

170 இவ்விதமாக கோதாவரி நீர் கொண்டுவரப்பட்டு, தாமிரத் தவலையில் நிரப்பப்பட்டது. எழுந்துவந்து குளிப்பதற்குத் தயாராகும்படி பாபாவை மேகா மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தினார். ஆனால், பாபா இதை ஏற்றுக்கொள்பவராக இல்லை.

171 மதிய ஆரதி முடிந்துவிட்டிருந்தது. பக்தர்கள் அவரவர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டனர். ''குளிப்பதற்கு சகலமான பொருள்களும் தயாராக இருக்கின்றன. சாயங்கால நேரம் நெருங்குகிறதுஃஃ என்று மேகா சொன்னார்.

172 லீலைக்காகவே அவதாரம் செய்த பாபா, மேகாவின் விடாமுயற்சியைக் கண்டு மேகாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்துக்கொண்டு சொன்னார்.

173 ''ஓய்õ எனக்கு இந்த கங்கா ஸ்நானம் வேண்டா. நீர் என்ன இவ்வளவு மதியீனமாக இருக்கிறீர்õ என்னைப் போன்ற பக்கீருக்கு கங்கைநீர் எதற்காக?ஃஃ

174 ஆனால், மேகா இதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை. அவருக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அவரைப் பொறுத்தவரை பாபாவும் சங்கரரும் (சிவனும்) ஒன்றே; சங்கரர் கங்கைநீர் அபிஷேகத்தால் பிரீதி அடைகிறார்.

175 மேகா சொன்னார், ''பாபா, இன்று மகர ஸங்க்ராந்திப் பண்டிகை நாள் (பொங்கல் திருநாள்). இன்று கங்கைநீரால் அபிஷேகம் செய்தால் சங்கரர் பிரீதியடைகிறார்.ஃஃ

176 மேகாவின் அளவுகடந்த பிரேமையையும் தூய உள்ளத்தையும் திடமான தீர்மானத்தையும் கண்டு பாபா சொன்னார், ''சரி, உம்முடைய ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ளும்.ஃஃ

177 இவ்வாறு சொல்­க்கொண்டே, இருக்கையி­ருந்து எழுந்துவந்து குளிப்பதற்காக இடப்பட்டிருந்த குட்டையான ஆசனத்தில் பாபா அமர்ந்தார். மேகாவுக்கெதிரே தலையை நீட்டிக்கொண்டே சொன்னார், ''இங்கே சிறிது ஜலம் தெளியும்.--

178 'எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். தலையில் சிறிது நீர் தெளித்து விட்டீரானால், அது உடம்பு முழுக்க ஸ்நானம் செய்ததற்கு சமானம். இந்த அளவிற்காவது நான் சொல்வதைக் கேளும்.ஃஃ

179 ''சரி, சரிஃஃ என்று சொல்­விட்டுக் கலசத்தைப் பிரேமையுடன் உயர்த்தி, பாபாவின் தலைமீது கோதாவரி நீரை மேகா அபிஷேகம் செய்தார். ''ஹர் கங்கேஃஃ என்று கோஷமிட்டுக்கொண்டே நீரைத் தலையில் மட்டுமின்றி உடல் முழுவதும் அபிஷேகம் செய்துவிட்டார்.

180 ''என் சிவனை ஆடைகளுடன் சேர்த்து முழுமையாகவே அபிஷேகம் செய்துவிட்டேன்ஃஃ என்று நினைத்து, மேகா தம்முடைய செய்கையைத் தாமே பாராட்டிக்கொண்டு ஆனந்தமடைந்தார். ஆனால், என்னே அதிசயம்õ கா­க் குடத்தைக் கீழே வைத்துவிட்டு பாபாவைப் பார்த்தார்; பெருவியப்படைந்தார்.

181 உடம்பு முழுவதும் நீரை அபிஷேகம் செய்திருந்த போதிலும், பாபாவின் தலை மாத்திரமே நனைந்திருந்தது. உட­ன் மற்ற பாகங்கள் நனையவேயில்லை. உடைகளின்மீது ஒரு சொட்டு நீரும் இல்லைõ

182 மேகா தலைகுனிய நேரிட்டது. சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். பக்தர்களின் ஆசைகளை பாபா பூர்த்தி செய்துவைக்கும் விநோதம் இவ்வாறே.

183 ''நீர் என்னைக் குளிப்பாட்ட விரும்பினீர். உம்முடைய விருப்பப்படியே செயல்படும். ஆனால், அதிலும் என் மனத்துள் இருக்கும் சூக்குமத்தை சுலபமாகவே அறிந்து கொள்வீர்.ஃஃ

184 இதுதான் ஸாயீபக்தியின் ரஹஸியம். அவருடைய அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும்; அதன் பிறகு, தாண்டமுடியாதது எதுவுமே இல்லை. கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.

185 ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, காலையிலும் மாலையிலும் ஒரு சுற்று எங்காவது போய்வருவதோ, எந்தக் காரியமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத சிரத்தையைக் கடைப்பிடித்தால், பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.

186 ஆனாலும், ஆரம்பநிலையில் தினப்படி விவகாரங்களில் ஏதாவதொரு அற்புதம் காட்டி ஆன்மீகப் பாதையில் ஈடுபாடு ஏற்படச் செய்து பக்தர்களை வழிநடத்தினார் பாபா.

187 மேகாவைப்பற்றி இதேமாதிரியாக இன்னொரு கதையும் உண்டு. கேட்பவர்கள், பக்தர்கள்மீது பாபா செலுத்திய பிரேமையைக் கண்டு ஆனந்தமடைவார்கள்.

188 நானாஸாஹேப் சாந்தோர்கர் அன்பளிப்பாக அளித்த, புதியதும் பெரியதுமான படம் ஒன்று மேகாவிடம் இருந்தது. அதை வாடாவில் வைத்து பக்தியுடன் பூஜை செய்துவந்தார்.

189 மசூதியில் பாபா பிரத்யக்ஷமாக இருந்தார். வாடாவிலோ உருவத்தின் அச்சாக முழு உயரப்படம் பெரியதாக இருந்தது. இரண்டு இடங்களிலும் மேகா பூஜையும் ஆரதியும் செய்துவந்தார்.

190 இம்மாதிரியான சேவை பன்னிரண்டு மாதங்கள் தொடர்ந்து ஸஹஜமாக நடந்தது. பின்னர் ஒருநாள் விடியற்காலை நேரத்தில், மேகா படுக்கையில் விழித்துக் கொண்டிருந்தபோது ஒரு தெய்வீகக் காட்சி கண்டார்.

191 படுக்கையில் இருந்தபோதே கண்கள் மூடியிருந்தாலும் விழிப்புடனிருந்த நிலையில் பாபாவின் உருவத்தைத் தெளிவாகப் பார்த்தார்.

192 மேகா விழித்துக்கொண் டிருந்தார் என்பது நன்கு தெரிந்து, பாபா அவர்மீது அக்ஷதையைத் தெளித்து, ''மேகா, திரிசூலம் வரையுமய்யாõஃஃ என்று சொல்­விட்டு மறைந்துவிட்டார்.

193 பாபாவின் வார்த்தைகளைச் செவியுற்ற மேகா கண்களைத் திறந்து பார்த்தார். பாபாவின் உருவம் மறைந்துகொண் டிருந்ததைப் பார்த்து வியப்பிலாழ்ந்தார்.

194 மேகா சுற்றுமுற்றும் பார்த்தார். படுக்கை முழுவதும் அக்ஷதை இறைந்து கிடந்தது. வாடாவின் கதவுகளோ முன்போலவே சாத்தப்பட்டிருந்தன. அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

195 உடனே மசூதிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்தார். தாம் கண்ட காட்சியை விவரித்தபின், திரிசூலம் வரைவதற்கு பாபாவின் அனுமதி வேண்டினார்.

196 மேகா தாம் கண்ட காட்சியை விரிவாக எடுத்துச் சொன்னார். பாபா அப்பொழுது வினவினார், ''என்ன காட்சி? நான் உம்மைத் திரிசூலம் வரையும்படி சொன்னது உமது காதுகளில் விழவில்லையா?--

197 ''காட்சி என்று அதற்குப் பெயர் கொடுத்து என்னுடைய வார்த்தைகளை எடைபோடப் பார்க்கிறீரா? என்னுடைய வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியவை. அவற்றில் ஓர் எழுத்துக்கூட அர்த்தமில்லாமற்போகாது.ஃஃ

198 மேகா பதிலுரைத்தார், ''நானும் முத­ல் நீங்கள் என்னை எழுப்பினீர்கள் என்றே நினைத்தேன். ஆனால், ஒரு கதவும் திறந்திருக்கவில்லை. ஆகவே, நான் கண்டது ஒரு காட்சியே என்று அனுமானித்தேன்.ஃஃ

199 பாபா இதற்கு என்ன விடையிறுத்தார் என்று கேளுங்கள், ''நான் நுழைவதற்குக் கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன்.--

200 ''தம்முடைய பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய உலக சம்பந்தமான சகல விவகாரங்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன்.ஃஃ

201 கதை கேட்பவர்களே, இப்பொழுது பாபாவின் லீலையை மேற்கொண்டு கேளுங்கள். திரிசூலம் எதற்காக வரையச் சொன்னார் என்ற சம்பந்தம் அப்பொழுது விளங்கும்.

202 மேகா வாடாவுக்குத் திரும்பிவந்து, சுவரில் பாபாவின் படத்திற்கருகில் திரிசூலம் வரைய ஆரம்பித்தார். திரிசூலம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டது.

203 அடுத்த நாளே புணேயி­ருந்து ஒரு ராமதாச பக்தர் மசூதிக்கு வந்தார். அவர் பாபாவுக்குப் பிரேமையுடன் நமஸ்காரம் செய்துவிட்டு ஒரு சிவ­ங்கத்தை பாபாவுக்கு அர்ப்பணம் செய்தார்.

204 அச்சமயத்தில் மேகாவும் அங்கு வந்து பாபாவின்முன் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பாபா சொன்னார், ''இதோ பாரும், சங்கரர் வந்துவிட்டார். அவரை நீர் நன்கு கவனித்துக்கொள்ளும்.ஃஃ

205 திரிசூலம் பற்றிய காட்சி கிடைத்த மறுநாளே சற்றும் எதிர்பாராமல் சிவ­ங்கம் இவ்விதமாகக் கிடைக்கிறதேõ மேகா சிவ­ங்கத்தையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் மெய்ம்மறந்து நின்றார். உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது.

206 காகாஸாஹேப் தீக்ஷிதருக்கு ஏற்பட்ட அபூர்வமான சிவ­ங்க தரிசன அனுபவத்தையும் கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்கவேண்டும். ஸாயீ பாதங்களின்மீது விசுவாசம் பெருகும்.

207 மேகா சிவ­ங்கத்தை எடுத்துக்கொண்டு மசூதியி­ருந்து வெளிவந்தபோது, தீக்ஷிதர், வாடாவில் ஸ்நானத்தை முடித்தபின் நாமஸ்மரணத்தில் மூழ்கியிருந்தார்.

208 மேல்துண்டால் தலையை மூடிக்கொண்டு ஒரு பாறையின்மேல் நின்றுகொண்டு உடம்பை உலர்ந்த துணியால் துடைத்துக்கொண்டே, ஸாயீ நாமஸ்மரணம் (ஸாயீ நாமத்தை நினைத்தல்) பண்ணிக்கொண் டிருந்தார்.

209 தலையைப் போர்த்தியவாறு ஸாயீ நாமஸ்மரணம் செய்யும் நித்திய நியமத்தை அனுசரித்துக்கொண் டிருந்தபோது அவருக்கு சிவ­ங்க தரிசனம் கிடைத்தது.

210 ''ஸாயீ நாமஸ்மரணம் செய்யும்போது இன்று மட்டும் என்ன எனக்கு சிவ­ங்க தரிசனம் கிடைக்கிறது?ஃஃ தீக்ஷிதர் இவ்வாறு வியந்துகொண் டிருந்தபோதே, மேகா மகிழ்ச்சி பொங்கப் பக்கத்தில் நிற்பதைக் கண்டார்.

211 மேகா கூவினார், ''காகா, இங்கே பாருங்கள்õ பாபா எனக்களித்த சிவ­ங்கத்தைப் பாருங்கள்.ஃஃ காகா சிவ­ங்கத்தின் விசேஷமான வடிவமைப்பைக் கண்டு வியப்படைந்தார்.

212 வடிவத்திலும் பரிமாணத்திலும் மே­ருந்த ரேகைகளாலும் அவருக்குச் சற்றுமுன் காட்சியில் தோன்றிய ­ங்கத்தைப் போலவே அச்சாக மேகா வைத்திருந்த ­ங்கம் இருந்ததைப் பார்த்துக் காகா மகிழ்ச்சியடைந்தார்.

213 பின்னர், மேகா தமது கைகளால் சுவரில் திரிசூலம் வரையும் வேலையை முடித்தவுடன் திரிசூலத்தின் சன்னிதியிலேயே சிவ­ங்கத்தை ஸ்தாபனம் செய்யவைத்தார் பாபா.

214 சிவபூஜை செய்வதில் மேகா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பாபா அவருக்கு சிவ­ங்கம் அளித்து அவருடைய பக்தியை திடப்படுத்தினார். ஸாயீயின் லீலை அளவிடற்கரியதுõ

215 இந்தக் கதை ஒன்றுதானாõ இம்மாதிரியான கதைகள் அபரிமிதமாக உள்ளன. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், இக் காவியம் அளவுக்கு மீறி விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, கதை கேட்பவர்களே, என்னை மன்னித்துவிடுங்கள்õ

216 ஆயினும் நீங்கள் மேன்மேலும் கேட்க ஆர்வம் காட்டுவதால், அடுத்த அத்தியாயத்தில் இம்மாதிரியான கதை இன்னுமொன்று சொல்கிறேன். நீங்கள் இதைவிட அற்புதமான ஸாயீ லீலைகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.

217 ஸாயீ பாதங்களில் சரணமடைந்து, ஹேமாட் உங்களை ஸாயீ சரித்திரத்தைக் கேட்கும்படி செய்கிறேன். கேட்பவர்களின் பிறவிப் பயம் அழியும்; எல்லாத் தொல்லைகளும் துரிதமாக நிவாரணமடையும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'தெய்வீகக் காட்சிகள்ஃ என்னும் இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play