Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 33

33. உதீயின் பிரபாவம் (பகுதி 1)




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 எந்த ஞானிகளின் கிருபைமிகுந்த கடைக்கண்பார்வை மலைபோன்ற பாவங்களை அக்கணமே எரித்துவிடுமோ, க­யுகத்தின் மலங்களைக் கழுவி அடித்துக்கொண்டு போகுமோ, அவர்களை வணங்குவோமாக.

2 அவர்கள் செய்யும் உபகாரங்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் போதாது. அவர்கள் இயல்பாகப் பேசுவதே நமக்கு நலந்தரும் உபதேசம்; அதுவே முடிவில்லாத பரம சுகத்தைக் கொடுக்கும்.

3 'இது என்னுடையது, அது அவருடையதுஃ என்னும் எண்ணமே அவர்களுடைய சித்தத்தில் எழுவதில்லை. உலகியல் வாழ்வுக்கே உரித்தான பேதங்காட்டும் எண்ணங்களுக்கு அவர்களுடைய இதயத்தில் இடமில்லை.

4 கடந்த அத்தியாயத்தில் குரு மஹிமையின் ஓர் அம்சத்தைக் கேட்டீர்கள். கதை கேட்பவர்களேõ இந்த அத்தியாயத்தில் உதீயின் சக்தியைப்பற்றிக் கேளுங்கள்.

5 பாபா கேட்டுக் கேட்டு தக்ஷிணை வாங்கினார். அதை ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தருமம் செய்தார். மீதியிருந்த பணத்திற்கு விறகுகட்டுகளை வாங்கிக் குவியலாகச் சேமித்துவைத்தார்.

6 இவ்விதம் சேமித்த காய்ந்த விறகுகளைத் தமக்கெதிரில் இருந்த துனீயில் ஹோமம் செய்தார். அதி­ருந்து கிடைத்த அபரிமிதமான உதீ (சாம்பல்) பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.

7 சிர்டீயி­ருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபாவின் பழக்கம். இது அனைவருக்கும் தெரிந்திருந்தது.

8 வேறுவிதமாகச் சொன்னால், பாபா 'உதீ கொண்டு வாஃ என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

9 ஆனால், பக்தர்கள் சிர்டீயில் தங்கும்வரை, காலையோ நண்பகலோ மாலையோ எந்த நேரத்திலும் பாபா உதீ கொடுத்ததில்லை; வெறுங்கையுடன்தான் தங்குமிடத்திற்குத் திருப்பியனுப்பினார்.

10 இதுவே நித்திய கிரமமாக இருந்தது. இந்த உதீயின் தருமநெறிதான் என்ன? மசூதியில் எதற்காக எப்பொழுதும் எரிந்துகொண் டிருக்கும் அக்கினி? ஏன் இது ஒரு தினப்படி வழிமுறையாக இருந்தது?

11 விபூதியை பாபா எந்த உள்நோக்கத்தோடு அளித்தார்? இவ்வுலகில் கண்ணுக்குத் தெரியும் சிருஷ்டியெல்லாம் சாம்பல்தான் என்பதை அனைவரும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே அவருடைய உள்ளக்கிடக்கை.

12 மனித உடலும் பஞ்சபூதங்களாலான ஒரு மரக்கட்டையே. சுகதுக்கங்களை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறது. அனுபவம் முடிந்தவுடன் பொத்தென்று கீழே வீழ்கிறது; சாம்பலாக்கப்படுகிறது. இதற்கு விதிவிலக்கே கிடையாது.

13 நீரும் நானும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். இதை உமக்கு ஞாபகப்படுத்தவும் இது விஷயமாக நீர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவுமே நான் இந்த விபூதியை அளிக்கிறேன்.

14 அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக.

15 மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகி­ருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

16 உதீயைப் பூசிக்கொள்வதால் ஆதிவியாதி (பிறவிப்பிணி) தொலைந்துபோகிறது. உதீயின் மிக உயர்ந்த தத்துவார்த்தம் என்னவென்றால், 'விவேகத்தால் விளைந்த பற்றற்ற நிலை.ஃ

17 நம்மால் முடிந்த தக்ஷிணை கொடுத்துப் பிரவிருத்தி மார்க்கத்தி­ருந்து (உலகியல் உழற்சியி­ருந்து) விடுபட முடிந்தால், கொஞ்சங்கொஞ்சமாக நிவிர்த்தி மார்க்கத்தின் (விடுதலையடையும் பாதையின்) குறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

18 பற்றற்ற நிலை கைக்குக் கிடைத்தாலும் விவேகம் இல்லாதுபோனால் அது பயனின்றிப் போகும். ஆகவே உதீயை மரியாதையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

19 விவேகத்தையும் பற்றற்ற மனப்பான்மையையும் இணைப்பது விபூதியையும் தக்ஷிணையையும் இணைப்பது போலாகும். இவ்விணைப்பு ஏற்படவில்லையெனில், பிறவியென்னும் நதியின் அக்கரை சேர்வது இயலாத காரியம்.

20 பெரியவர்களும் சிறியவர்களும் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர். பாபாவின் பாதங்களில் விநயத்துடன் வணங்கிவிட்டு வீடு திரும்புமுன், பாபா அவர்களுக்கு விபூதி அளித்தார்.

21 மசூதியில் தினமும் இரவுபகலாகக் குன்றாது துனீ எரிந்துகொண் டிருந்தது. பாபா பிடிப்பிடியாக ரட்சையை எடுத்து பக்தர்கள் விடைபெறும்போது அளித்தார்.

22 பக்தர்களின் தலைமேல் கைவைத்து, அதே சமயம் நெற்றியில் கட்டைவிரலால் ரட்சை இட்டு மங்கள வாழ்த்தும் கூறி, துனீயின் சாம்பல் பிரசாதமாக அளிக்கப்பட்டது.

23 சாம்பல், ரட்சை, விபூதி, உதீ இவை நான்கும் வெவ்வேறு சொற்களாக இருப்பினும் வஸ்து (பொருள்) ஒன்றே. பாபா குறைவேதுமின்றி அபரிமிதமாக தினமும் அளித்த பிரசாதம் இதுவே.

24 சம்சார வாழ்க்கையும் உதீயைப் போன்றதே. நாமும் விபூதியாகிவிடும் நாள் வரத்தான் செய்யும். இதுதான் உதீயின் மஹிமை. இதை ஒருநாளும் மறக்க வேண்டா.

25 தாமரையிலைத் தண்ணீரைப்போல், இந்த தேகம் ஒருநாள் கீழே விழும். ஆகவே, தேகாபிமானத்தை விட்டுத்தொலையுங்கள். இதைத்தான் பாபா உதீ அளிப்பதன் மூலம் தெரிவித்தார்.

26 இவ்வுலகமனைத்தும் சாம்பலால் போடப்பட்ட ஒரு கோலமே என்பதை உறுதியாக அறியவும். உலகமே ஒரு மாயை என்பதுபற்றிச் சிந்தித்து, உதீயின் ஸத்தியத்துவத்தை மட்டும் நம்புக.

27 உதீ, மண்ணே என்று தெரிந்துகொள்ளவும். உருவமும் பெயரும் உள்ள வஸ்து பொருள் எதுவாக இருந்தாலும் சரி, கடைசியில் மண்ணாகத்தான் ஆகவேண்டும். மாறுபாடில்லாத, என்றும் அழியாத மண்ணைப் பார்த்து, இவ்வுலகில் மற்ற பொருள்கள் அடையும் வளர்ச்சியும் மாறுபாடுகளும் தேய்மானமும் வெறும் பெயரளவிற்கே என்பதை அறியவும்.

28 பாபா குதூகலமான மனோநிலையில் இருக்கும்போது ஒரு பாட்டுப் பாடுவார். கதை கேட்பவர்களேõ உதீயைப் பற்றிய இக் குறுஞ்செய்யுள் பாட்டை பயபக்தியுடன் கேளுங்கள்.

29 ''நெஞ்சத்தைக் கிள்ளும் ராமன் வந்தான், வந்தானே; கோணி கோணியாய் உதீயைக் கொண்டுவந்தானேõஃஃ (பல்லவி) மனத்தில் மகிழ்ச்சி அலைகள் பொங்கும்போது, பாபா இந்தப் பல்லவியைத் திரும்பத் திரும்ப மிக இனிமையான குர­ல் பாடுவார்.

30 சாராம்சம் என்னவென்றால், பாபாவின் துனீ மங்களம் தரும் உதீயை மூட்டை மூட்டையாக விளைவித்தது. மூட்டைகளைக் கணக்கு வைத்துக்கொள்ளும் அளவிற்கு சாமர்த்தியம் யாருக்கு இருந்தது?

31 உதீ அளிப்பதின் சூக்குமமான அர்த்தத்தையும் வெளிப்படையான அர்த்தத்தையும் உதீயின் ஆன்மீக மேன்மையையும் நன்கு அறிந்துகொண்ட கதைகேட்பவர்கள், ஒளிவுமறைவு இல்லாத சுயநல நோக்கத்துடன் கேட்கலாம், ''க்ஷேமமாக இவ்வுலகில் வாழ்வதற்கு உதீ ஏதும் உபயோகமாக இருக்குமா?ஃஃ

32 நன்று, உதீக்கு இந்தப் பலனை அளிக்கும் குணமும் உண்டு. இல்லையெனில், அது எப்படி இவ்வளவு புகழ் அடைந்திருக்கும்? பரமார்த்த மார்க்கத்தில் விற்பன்னராகிய ஸாயீ, ஆன்மீக லாபத்தையும் உலகியல் லாபத்தையும் சேர்த்தே அளிக்கிறார்.

33 உதீ யோகக்ஷேமம் அளித்த காதைகள் அநேகம், அநேகம். விரிவுக்கு அஞ்சி ஒருசில கதைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

34 ஒருகாலத்தில், ஜனீ என்ற குடும்பப் பெயரும் மோதீராம் நாராயண் என்ற பெயரும் கொண்ட ஒருவர் நாசிக்கில் வசித்துவந்தார். அவர் ஓர் இல்லறத்தவர். ஓளதீச்ய உட்பிரிவைச் சேர்ந்த குஜராத்தி பிராமணர்.

35 ராமச்சந்திர வாமன் மோடக் என்பவர் பாபாவின் விசுவாசம் நிறைந்த பக்தர்களுள் ஒருவர். நாராயண் ஜனீ அவரிடம் வேலை செய்துவந்தார்.

36 பாபா ஜீவிதமாக இருந்தபோதே நாராயண் ஜனீ தம் தாயாருடன் தரிசனத்திற்குச் சென்றிருந்தார்.

37 பாபா அத் தருணத்தில் தாமாகவே சூசகமாகத் தெரிவித்திருந்தார், ''இப்பொழுதி­ருந்து நமக்கும் அடிமைத் தொழிலுக்கும் சம்பந்தமில்லை.--

38 ''போதும் இந்த ஏவலாள் உத்தியோகம். சுதந்திரமான வியாபாரம் இதைவிட எவ்வளவோ மேன்மையாக இருக்கும்.ஃஃ சிலகாலம் கழிந்த பின்னர், இறைவன் ஜனீக்குக் கருணை புரிந்தான்.

39 அடிமைத் தொழிலும் பிறரைச் சார்ந்த வாழ்வும் அகன்றது. ஜனீ சுதந்திரத்தை அனுபவித்தார். சொந்தமாகவே உணவு வசதியுடன் கூடிய ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்.

40 'ஆனந்தாச்ரமம்ஃ என்று அதற்குப் பெயர் வைத்தார். கடுமையாக உழைத்தார். நாளுக்குநாள் அவ்விடுதியின் புகழ் பரவி அவருக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.

41 பாபா சூசகமாகத் தெரிவித்தவாறே அனைத்தும் நடந்ததை உணர்ந்து, ஸாயீபாதங்களில் விசுவாசம் வளர்ந்தது; நாள்கள் செல்லச் செல்ல திடமான பக்தியாக சொரூபம் ஏற்றது. பாபாவின் அறிவுரையைப் பின்தொடர்ந்த அனுபவம் ஜனீயின் மனத்தில் அழியாத சுவடுகளை விட்டுச் சென்றது.

42 ஸாயீயின் திருவாய்மொழி அருளிய அனுபவம் ஜனீக்குக் கிடைத்தது; அதன் பயனாகக் கேட்பவர்களுக்கு இப்பொழுது ஒரு காதை கிடைக்கிறது. அவருக்கு ஸாயீயின் மீதிருந்த பிரேமை பெருகியது. ஸாயீயின் செயற்கரிய செயல்கள் கற்பனைக் கெட்டாதவை அல்லவோõ

43 அவருடைய பேச்செல்லாம் தம்மைப்பற்றியதுபோல் தோன்றும்; ஆனால், அவர் வேறொருவரைப்பற்றிப் பேசிக்கொண் டிருப்பார். இரவுபகலாக பாபாவுடன் இருந்தவர்கள் இந்த அனுபவத்தைப் பெற்றனர்.

44 பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக இவ்வனுபவங்கள் தொடர்ந்தன. நாராயண் ஜனீயின் பக்தியும் பிரேமையும் வளர்ந்தது. அவருடைய பக்திபா(ஆஏஅ)வத்தை வெளிப்படுத்தும் புத்தம் புதிய கதையொன்றைக் கேளுங்கள்.

45 ஒரு சமயம் நாராயண் ஜனீயின் நண்பர் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அவர் வ­யாலும் வேதனையாலும் துடித்தார்.

46 கொட்டுவாயில் தடவுவதற்கு பாபாவின் உதீயே சிறந்த மருந்து. ஆனால், எங்கே தேடியும் ஜனீக்கு உதீ கிடைக்கவில்லை.

47 நண்பருக்கு வேதனை பொறுக்கமுடியவில்லை; ஆயினும் உதீ எங்கும் கிடைக்கவில்லை. பாபாவின் நிழற்படத்தை நோக்கினார்; கருணை வேண்டினார் ஜனீ.

48 படத்தின் கீழே ஊதுவத்தியி­ருந்து விழுந்த சாம்பல் சிறிது இருந்ததை ஜனீ பார்த்தார். அக்கணமே அதை ரட்சிக்கும் உதீயாகவே நினைத்தார்.

49 அந்தச் சாம்ப­­ருந்து ஒரு சிட்டிகை எடுத்துத் தேள்கொட்டிய இடத்தில் ஸாயீநாம மந்திரத்தைச் சொல்­க்கொண்டே தடவினார். நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்; நம்பியவருக்கு நடராஜாõ

50 சாம்பலை விரல்களால் கொட்டுவாயில் பூசியவுடனே வேதனை, வந்தவழியே சென்று மறைந்ததென்று சொன்னால், கேட்பதற்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இருவரும் பிரேமையால் மனம் நெகிழ்ந்தனர்.

51 இந்நிகழ்ச்சியிலாவது ஊதுவத்தியி­ருந்து விழுந்த விபூதி தேள்கொட்டுக்கு மருந்தாகப் பூசப்பட்டது. ஆனால், புழுதிமண்ணும் உதீயாக உபயோகப்படுத்தப்பட்ட போது அதே அனுபவத்தை அளித்தது.

52 ஒருவர் நெற்றியில் இடப்பட்ட புழுதிமண், வேறு எங்கோ இருந்த நோயாளியை குணப்படுத்தியதுõ

53 வேறு கிராமத்தில் வசித்துவந்த தம் மகள் பிளேக் வியாதிக் கட்டிகளாலும் ஜுரத்தாலும் அவதிப்படுகிறாள் என்று தெரிந்து ஒரு தந்தை கவலையுற்றார்.

54 தந்தை பாந்த்ராவில் வசிக்க, மகள் வேறொரு கிராமத்தில் வசித்துவந்தாள். ஆகவே அவர் நானாவுக்குச் (நானா கோவிந்த சாந்தோர்க்கருக்குச்) செய்தி அனுப்பினார்.

55 அவருக்காக நானா பாபாவிடம் பிரார்த்தனை செய்து அவரை இக் கவலையி­ருந்து விடுவிக்கவேண்டும் என்றும் பாபாவின் உதீ பிரசாதம் சிறிது அவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கெஞ்சி, செய்தி அனுப்பினார்.

56 செய்தியைக் கொண்டுபோனவர் நானாவை வழியிலேயே சந்தித்தார். நானா அப்பொழுது தம் மனைவியுடன் கல்யாண் என்னும் இடத்திற்குப் போகக் கிளம்பிவிட்டிருந்தார்.

57 தாணே ரயில் நிலையத்திற்கு அருகில் அவருக்கு இச் செய்தி கிடைத்தது. நானாவின் கைவசம் அப்பொழுது உதீ இல்லை. ஆகவே சாலையி­ருந்த புழுதிமண்ணில் ஒரு சிட்டிக்கை எடுத்துக்கொண்டார்.

58 சாலையில் நின்றவாறே ஸமர்த்த ஸாயீயை மன்றாடிப் பிரார்த்தனை செய்தபின், திரும்பி, எடுத்த புழுதிமண்ணைத் தம் மனைவியின் நெற்றியில் இட்டார்.

59 அங்கோ, அந்த பக்தர் (தந்தை) வீட்டி­ருந்து கிளம்பி தம் மகள் வசிக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு அவருக்காகக் காத்திருந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தார்.

60 மூன்று நாள்களாக மகள் கடுமையான ஜுரத்தால் அவதிப்பட்டுப் பெரும் வேதனையை அனுபவித்தாள். தந்தை சென்ற நாளுக்கு முந்தைய நாள்தான் ஜுரம் சிறிது இறங்கியிருந்தது.

61 பின்னோக்கிப் பார்த்தபோது, நானா ஸாயீயைப் பிரார்த்தனை செய்தபின் புழுதிமண்ணை உதீயாக உபயோகித்த நேரத்தி­ருந்துதான் மகளின் ஜுரம் குறைய ஆரம்பித்தது என்பதைத் தந்தை உணர்ந்தார்.

62 எப்படியும், இந்த வியாதியின் கதை விஸ்தாரமாகத் தக்க சமயத்தில் பிறகு சொல்லப்படும். உதீ சம்பந்தமான விவரத்தை மட்டும் இப்பொழுது சொன்னேன்.

63 பக்தனுக்கு மங்களம் அருள எப்பொழுதும் தயாராக இருந்த ஸாயீ, பிரேமை மிகுந்த பக்தரான இதே நானா சாந்தோர்கருக்கு ஜாம்நேரில் மாம்லத்தாராக உத்தியோகம் செய்துகொண் டிருந்தபோது அற்புதமொன்று செய்தார். அதைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

64 உதீயின் மஹிமை அபாரமானது. கதை கேட்பவர்களேõ அந்த அற்புதத்தைச் சொல்கிறேன்; கேட்டு ஆச்சரியப்படுவீர்கள்.

65 நானாவின் மகள் பிரஸவ வேதனையால் துடித்துக்கொண் டிருந்தாள். எந்நேரமும் பிரஸவம் ஆகலாம் என்ற நிலைமை. ஜாம்நேரில் நானாஸாஹேப் ஸமர்த்த ஸாயீயைத் தம்மால் இயன்ற வழிகளிலெல்லாம் கூவி அழைத்துக்கொண் டிருந்தார்.

66 சிர்டீயிலோ, ஜாம்நேரில் என்ன நடந்துகொண் டிருந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எங்கும் செல்லும் வல்லமை பெற்ற, எல்லாம் அறிந்த ஸாயீக்கு இவ்வுலகில் நடப்பது எதுவும் தெரியாமல் இருக்கமுடியாதேõ

67 பக்தனுடைய ஆத்மாவுடன் ஒன்றிவிட்ட பாபாவுக்கு நானாவின் இல்லத்தில் இருந்த அவஸ்தை தெரிந்தது. இளகிய மனத்தினரான ஸாயீ என்ன செய்தார் என்று பாருங்கள்.

68 நானாவுக்கு உதீ அனுப்பவேண்டும் என்று பாபா விரும்பினார். கோசாவி ராம்கீர் புவாவுக்குத் தம்முடைய கிராமத்திற்குத் திரும்பவேண்டுமென்ற பலமான எண்ணம் திடீரென்று எழுந்ததுõ

69 அவருடைய சொந்த ஊர் கான்தேச் ஜில்லாவில் இருந்தது. ஆகவே, அவர் அங்கே செல்வதற்குண்டான ஆயத்தங்களைச் செய்துகொண்டு பாபாவை தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.

70 பாபா ஜீவிதமாக இருந்தபோது, யார், எந்த வேலைக்காகச் செல்லவேண்டியிருந்தாலும் பாபாவின் பாதங்களை வணங்கி அனுமதி பெறாமல் யாரும் வெளியில் சென்றதில்லை.

71 திருமணமோ, உபநயனமோ, விதிமுறைகளின்படி சடங்குகளுடன் செய்யவேண்டிய விழாக்களோ, வேறு ஏதாவது விழாவோ, இவை சம்பந்தமாகச் செய்யப்பட்ட திட்டமிடுதலோ -- அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பாபாவின் அனுமதி, தவறாது பெறப்பட்டது.

72 பாபாவின் மனப்பூர்வமான அனுமதியும் உதீ பிரசாதமும் ஆசிகளும் இன்றி, எந்த விழாவும் விக்கினமின்றி நிறைவேறாது. இதுவே சகலமான மக்களின் பூரணமான நம்பிக்கை.

73 இதுவே கிராமத்தின் வாழ்க்கை இயல்பாகிவிட்டது. இதை அனுசரித்து ராம்கீர் புவாவும் மசூதிக்கு வந்து பாபாவின் பாதங்களை வணங்கி, கிளம்புவதற்கு அனுமதி வேண்டினார்.

74 அவர் சொன்னார், ''பாபா, நான் கான்தேச் ஜில்லாவிலுள்ள என்னுடைய கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறேன். ஆசிகளுடன் உதீயும் அளித்து, உங்கள் சேவகனாகிய எனக்கு அனுமதியளியுங்கள்.ஃஃ

75 பாபுகீர் என்று பாபா செல்லமாக அழைத்த ராம்கீர் புவாவிடம் பாபா சொன்னார், ''போம், உம்முடைய கிராமத்திற்குக் குஷியாகப் போய்வாரும். வழியில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளும்.--

76 ''ஆகவே முத­ல் ஜாம்நேருக்குச் சென்று நானாவின் வீட்டில் தங்கும். அவருடைய சமாசாரங்களை விசாரித்தபின், நீர் உமது வழியில் செல்லலாம்.ஃஃ

77 பாபா மாதவராவிடம் கூறினார், ''சாமா, அட்கர் இயற்றிய ஆரதிப்பாட்டை ஒரு காகிதத்தில் எழுது. அதை இந்த கோசாவியின் மூலம் நானாவுக்கு அனுப்பலாம்.ஃஃ

78 பிறகு அவர் கோசாவிக்கு உதீ கொடுத்தபின், ஒரு சிறிய உதீ பொட்டலமும் கட்டி அவரிடம் கொடுத்தார். இவ்விதமாக பாபா நானாவுக்கு உதீ அனுப்பினார்.--

79 ''இந்த உதீ பொட்டலத்தையும் ஆரதிப் பாட்டையும் நானாவிடம் கொடும். அவருடைய குடும்ப க்ஷேமம்பற்றிக் குசலம் விசாரித்துவிட்டு உம்முடைய சொந்த ஊருக்குச் செல்லும்.ஃஃ
8
80 'ஆரதி ஸாயீ பாபாஃ என்ற இந்த ஆரதிப் பாட்டு ராமஜனார்த்தனர் இயற்றிய 'ஆரதி ஞான ராஜாஃ என்ற பாட்டைப் போலவே அமைந்திருக்கிறது. இரண்டுமே ஒரே விருத்தத்தில் (மெட்டில்) அமைந்தவை.

81 ராமஜனார்த்தனர் என்பவர் ஜனார்த்தன சுவாமியின் பக்தர். மாதவ் அட்கர் ஸாயீ பாதங்களில் மூழ்கியவர். இந்தக் கவிதை பரிபூரணமாக ஸாயீ பிரசாதம் நிரம்பியது. எந்த பஜனையும் இந்தப் பாட்டைப் பாடாமல் நிறைவுபெறாது.

82 இந்த ஆரதி பாபாவுக்குப் பிடித்தமானதுங்கூடõ இதை முழுமையாகக் கேளுங்கள். இந்தப் பாட்டு உதீயுடன் பாபாவால் அனுப்பப்பட்டது. பலனைப்பற்றிப் பிறகு தெரிந்துகொள்வீர்கள்; பாட்டைக் கேளுங்கள்.

ஆரதிப் பாட்டு
ஆரதி செய்கிறோமே, ஓ ஸாயீ பாபாõ ஜீவன்களுக்கு
சௌக்கியம் அளிப்பவரே, பாததூளிகளில் இவ்வடிமைக்கு
அடைக்கலம் தாருங்கள்; பக்தர்களுக்கு அடைக்கலம்
தாருங்கள். (பல்லவி)

மன்மதனை எரித்தவரே, சுய சொரூபத்தில் மூழ்கியவரே,
மோட்சத்தை நாடும் ஜனங்களுக்கு ஸ்ரீரங்கனாகத் தோன்றுகிறீர்;
ஸ்ரீரங்கனாகவே தோன்றுகிறீர். 1

மனத்தின் பா(ஆஏஅ)வம் எப்படியோ, அப்படியே தேவரீர்
அளிக்கும் அனுபவமும். கருணைக்கடலே, உம்முடைய
மாயை அவ்விதமே, உம்முடைய மாயை அவ்விதமே. 2

உம்முடைய நாமத்தை ஜபம் செய்தால் சம்சார துக்கங்கள்
அழிந்துபோகின்றன. உம்முடைய செய்கை ஆழங்காண
முடியாததுõ அநாதைகளுக்கு வழி காட்டுகிறீர்;
அநாதைகளுக்கு வழி காட்டுகிறீர். 3

க­யுகத்தின் அவதாரமே, தேவரீர் குணமுள்ள பிரம்மமாக
அவதரித்திருக்கிறீர். ஓ, சுவாமி தத்த திகம்பரரே1,
தத்த திகம்பரரே. 4

வாரமொருமுறை வியாழக்கிழமையில் பக்தர்கள் பிரபுவின் பாதங்களை
தரிசனம் செய்ய புனிதப் பயணம் செய்கிறார்கள்.
பிறவி அச்சத்தை நிவாரணம் செய்யுங்கள்; அச்சத்தை
நிவாரணம் செய்யுங்கள். 5

உமது பாததூளிகளுக்குச் செய்யும் சேவையே என்னுடைய
பொக்கிஷம்; நான் உங்களை வேறெதுவும் கேட்கவில்லை.
ஓ, தேவாதிதேவா, தேவாதிதேவா. 6

இந்த எளிய சாதகப்பறவை நிர்மலமான தண்ணீராகிய
ஆனந்தத்தையே நாடுகிறது. இந்த மாதவனுக்கு1 அதை
அளித்து உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்;
ஓ, உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர். 7
ஆரதி செய்கிறோமே............... (பல்லவி)

83 கோசாவி பாபாவிடம் கேட்டார், ''என்னிடம் இரண்டு ரூபாய்தான் இருக்கிறது. நான் எப்படி ஜாம்நேருக்குச் சென்று, வீட்டிற்குப் போய்ச் சேரமுடியும்?

84 பாபா சொன்னார், ''நீர் தைரியமாகக் கிளம்பும். உம்முடைய தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்.ஃஃ ஸாயீ பாதங்களில் நம்பிக்கை வைத்து கோசாவி உடனே கிளம்பினார்.

85 பாபாவின் ஆக்ஞைக்குத் தலைவணங்கி உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, காரியமே கண்ணாக பாபாவின் அனுமதியுடன் பாபுகீர் உடனே புறப்பட்டார்.

86 இப்பொழுது இருப்பதுபோல் அப்பொழுது ஜாம்நேருக்கு இருப்புப்பாதைத் தொடர்பு கிடையாது. பிரயாணம் சுலபம் இல்லை. கோசாவியின் சித்தம் கலங்கியது.

87 ரயிலேறி ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கி மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும்.

88 ரயில் கட்டணம் ஒரு ரூபாய் பதினான்கு அணா2; மிச்சம் இரண்டு அணாவை வைத்துக்கொண்டு மீதி தூரத்தை எவ்வாறு கடக்கமுடியும்?

89 இவ்விதமாகக் கலங்கிய கோசாவி, ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கிப் பயணச் சீட்டைத் திருப்பிக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது, சிறிது தூரத்தில் ஒரு பியூன் தெரிந்தான்.

90 பியூன், ''உங்களில் யார் சிர்டீயி­ருந்து வரும் பாபுகீர் புவா என்று எனக்கு விவரம் சொல்லவேண்டும்ஃஃ என்று வெளியே வரும் பிரயாணிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

91 பியூன் தேடிக்கொண் டிருந்த நபர் தாமே என்று அறிந்த கோசாவி, முன்னுக்கு வந்து, ''நான்தான் அது; உமக்கென்ன வேண்டும்?ஃஃ என்று கேட்டார்.

92 பியூன் சொன்னான், ''சாந்தோர்கர் உமக்காக என்னை அனுப்பியிருக்கிறார். வாருங்கள், சீக்கிரமாகக் குதிரைவண்டியில் ஏறுங்கள். அவர் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.ஃஃ

93 புவா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். சிர்டீயி­ருந்து நானாவுக்குச் செய்தி போயிருக்கும் போ­ருக்கிறது. அதனால்தான், சரியான நேரத்திற்குக் குதிரைவண்டி வந்திருக்கிறது. என்னுடைய பெரிய தொல்லை தீர்ந்தது.

94 மீசை, தாடி, கிருதாவெல்லாம் வைத்துக்கொண்டும் பளிச்சென்று முழுக் காற்சட்டை அணிந்துகொண்டும் பியூன், பார்ப்பதற்கு சாமர்த்தியசா­யாகத் தெரிந்தான். குதிரைவண்டியும் அழகாகக் காட்சியளித்தது.

95 வண்டியைப் போலவே குதிரைகளும் கம்பீரமாக இருந்தன. அவை வாடகைவண்டிக் குதிரைகளா என்ன? இலக்கை நோக்கி உற்சாகத்துடன் ஓடி, மற்ற வண்டிகளைப் பின்னுக்குத் தள்ளின.

96 இரவு பதினொன்று மணியளவில் கிளம்பிய வண்டி, இரவெல்லாம் வேகமாக ஓடி விடியற்காலையில் ஓர் ஓடைக்கருகில் நின்றது.

97 வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிப்பதற்கு அவிழ்த்துவிட்டுவிட்டு, ''நான் இதோ வந்துவிடுகிறேன். நாம் சாவகாசமாகச் சிறிது சிற்றுண்டி உண்ணலாம்ஃஃ என்று சொன்னான்.

98 ''நான் போய்க் கொஞ்சம் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவருகிறேன். பிறகு நாம் மாம்பழம், பேடா, குள் பாபடி1 எல்லாம் உண்ணலாம். அதன் பிறகு குதிரைகளைப் பூட்டிக்கொண்டு நம் பயணத்தைத் தொடரலாம்ஃஃ என்று வண்டியோட்டி கூறினான்.

99 இந்த வார்த்தைகளைக் கேட்ட கோசாவியின் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டது. 'தாடி வைத்துக்கொண்டு முஸ்லீமைப்போல் காட்சியளிக்கும் இவன் அளிக்கும் சிற்றுண்டியை நான் ஏற்றுக்கொள்வதா வேண்டாவா?ஃ

100 ஆகவே அவர் வண்டியோட்டியிடம் ஜாதிபற்றி விசாரித்தார். வண்டியோட்டி பதில் சொன்னான், ''நீங்கள் ஏன் இப்படி சந்தேகத்தால் மனம் உளைகிறீர்கள்? நான் கார்வாலைச் சேர்ந்த இந்து க்ஷத்திரியன். ராஜபுதன ஜாதியைச் சேர்ந்தவன்.--

101 ''மேலும், இவ்வுணவுப் பொருள்கள் நானாவால் உங்களுக்கென்று என்னிடம் கொடுக்கப்பட்டன. ஆகவே சிறிதளவும் சந்தேகம் இன்றி அமைதியான மனத்துடன் சிற்றுண்டி அருந்துங்கள்.ஃஃ

102 இவ்விதமாக கோசாவிக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் இருவரும் சிற்றுண்டி அருந்தினர். குதிரைகள் மறுபடியும் வண்டியில் பூட்டப்பட்டுப் பயணம் தொடர்ந்தது; சூரியோதய சமயத்தில் முடிந்தது.

103 குதிரைவண்டி கிராமத்தினுள் நுழைந்தவுடனே நானாவின் கச்சேரி (அரசு அலுவலகம்) தெரிந்தது. குதிரைகளும் சிறிது ஓய்வெடுத்தன. ராம்கீர் புவாவின் மனம் சாந்தியடைந்தது.

104 புவா சிறுநீர் கழிப்பதற்காகச் சாலையின் மறுபக்கம் சென்றார். அதே இடத்திற்குத் திரும்பிவந்தபோது அவருக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

105 வண்டியைக் காணோம்; குதிரைகளைக் காணோம்; வண்டியோட்டியையும் காணோம்õ யாருமே இல்லாமல் அவ்விடம் வெறிச்சென்றிருந்தது.

106 ராம்கீர், 'இதென்ன அற்புதம்ஃ என்று நினைத்து வியந்தார். ''என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தவர் எப்படி திடீரென்று எங்கோ போய்விட்டார்?ஃஃ

107 இருந்தபோதிலும், நானாவைச் சந்திக்கவேண்டுமென்ற ஆவ­ல் புவா கச்சேரிக்குள் சென்றார். நானா அவரது இல்லத்தில் இருந்தாரென்று அறிந்தார். ஆகவே புவா நானாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார்.

108 வழியைக் கேட்டு விசாரித்துக்கொண்டு சுலபமாக நானாவின் இல்லத்தைச் சென்றடைந்தார். தாழ்வாரத்தில் சிறிது நேரம் உட்காரலாம் என்று ஆயத்தம் செய்தபோது நானா அவரை உள்ளே வரும்படி அழைத்தார்.

109 ஒருவரையொருவர் சந்தித்தனர். புவா உடனே உதீயையும் ஆரதிப் பாடலையும் நானாவின் எதிரில் வைத்து, நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்.

110 இதில் அற்புதம் என்னவென்றால், நானாவின் மகள் பிரஸவிக்க முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண் டிருந்தபோது இந்த உதீ வந்துசேர்ந்ததுõ

111 பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக, நவசண்டி ஹோமமும் துர்க்கா ஸப்தசதி1 பாராயணமும் நடந்துகொண் டிருந்தது. இதையெல்லாம் கண்ட கோசாவி பெருவியப்பில் ஆழ்ந்தார்.

112 பசியால் வாடியவனுக்குச் சற்றும் எதிர்பாராமல் தட்டு நிறைய சுவையான சாப்பாடும் இனிப்புகளும் கிடைத்தது போலவும், சகோர பட்சிக்கு அமிருதம் கிடைத்தது போலவும் நானாவுக்கு அந்நேரத்தில் உதீ கிடைத்தது. இது நானா உணர்ந்தவாறு.

113 நானா தம் மனைவியைக் கூப்பிட்டு, சிறிது உதீயைத் தண்ணீரில் கரைத்து மகளுக்குக் கொடுக்கச் சொல்­விட்டுத் தாமே ஆரதிப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்.

114 உடனே வீட்டினுள்ளிருந்து செய்தி வந்தது. உதீ கலந்த நீர் உதடுகளில் பட்டவுடனே மகளுக்கு நிவாரணம் கிடைத்தது.

115 உதீ கலந்த நீர் வயிற்றின் உள்ளே சென்றவுடன் வ­ குறைந்தது; மகளுக்குத் தடங்கல் ஏதுமின்றிப் பிரசவம் ஆயிற்று. சுகமாகப் பிரசவம் ஆனது கண்டு அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

116 நானாவை புவா வினவினார், ''வண்டியோட்டி எங்கே? அவனை இங்கேயும் காணோமே? நீங்கள் எனக்காக அனுப்பிய குதிரைவண்டி எங்கே?ஃஃ

117 நானா பதிலுரைத்தார், ''குதிரை வண்டியா? நான் அனுப்பவில்லையேõ எனக்கு இதைப்பற்றி ஏதும் தெரியாதே. நீங்கள் வரப்போவதே எனக்குத் தெரியாதே; நான் எப்படிக் குதிரைவண்டி அனுப்புவேன்?ஃஃ

118 புவா, குதிரை வண்டிபற்றி ஆரம்பத்தி­ருந்து கடைசிவரை விவரமாக முழுக் காதையையும் சொன்னார். பாபாவின் தாயினும் சாலப் பரிந்தூட்டும் அன்பை எண்ணி நானா ஆச்சரியமடைந்தார்; மனம் நெகிழ்ந்தார்.

119 குதிரைவண்டி என்னõ பியூன் என்னõ ஸாயீமாதாதான் இத்தனை உருவங்களுமெடுத்து நாடகமாடினாள்õ பக்தர்களின்பால் கொண்ட அன்பினால், அவர்கள் சங்கடப்படும்போது தக்க தருணத்தில் ஓடோடி வருகிறாள் ஸாயீமாதாõ

120 இப்பொழுது நாம் நாராயண் ஜனீயின் கதையைத் தொடர்வோம். சிலகாலம் கழிந்த பின்னர் பாபா மஹாஸமாதி அடைந்தார்.

121 1918ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகையின்போது, சுபதினமான விஜயதசமியன்று பாபா தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.

122 பிறகு, உடல் சமாதியில் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, பாபா ஜீவிதமாக இருந்தபோதே நாராயண் ஜனீ பாபாவை இரண்டு தடவைகள் தரிசனம் செய்திருந்தார்.

123 சமாதி கட்டிய பிறகு மூன்று ஆண்டுகள் கழிந்தன. தரிசனம் செய்யவேண்டுமென்ற பலமான ஆவல் இருந்தும் அவருக்குச் சரியான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இது அவருடைய மனத்தை நிம்மதி இழக்கச் செய்தது.

124 பாபா மஹாஸமாதியானபின் ஓர் ஆண்டு கழித்து நாராயண் ஜனீயை வியாதிகள் பிடித்துவாட்டின. உலக வழக்கி­ருந்த அத்தனை மருந்துகளும் உபசாரங்களும் கையாளப்பட்டன. எதுவும் பலனளிக்கவில்லை.

125 துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பினும், ஜனீ இரவுபகலாக பாபாவை தியானம் செய்தார். குருராஜருக்கு மரணமும் உண்டோõ பாபா ஜனீக்கு தரிசனம் அளித்தார்.

126 ஜனீ ஒருநாள் இரவில் கனவு கண்டார். கனவில், ஸாயீ பூமிக்குக் கீழேயிருக்கும் ஒரு நிலவறையி­ருந்து வெளிவந்து ஜனீக்கருகில் நின்றுகொண்டு அவரிடம் ஆறுதலாகப் பேசினார்,--

127 ''மனத்தில் கவலையைத் தேக்காதீர்; நாளை உதயகாலத்தி­ருந்து நிவாரணம் ஆரம்பிக்கும். எட்டு நாள்களில், நீரே சுயமாக எழுந்து உட்காருவீர்.ஃஃ

128 எட்டு நாள்கள் இவ்வாறு கழிந்தன. பாபாவின் திருவாய்மொழி எழுத்துக்கெழுத்து உண்மையாகியது. நாராயண் ஜனீ மறுபடியும் எழுந்து நடமாட ஆரம்பித்தார். அவருடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

129 இவ்வாறு சில நாள்கள் கடந்தன. நாராயண் ஜனீ சமாதி தரிசனத்திற்காக சிர்டீக்கு வந்தார். அந்த சமயத்தில் இந்த அனுபவத்தை விவரமாகச் சொன்னார்.

130 பாபா பூதவுடல் தரித்திருந்தபோதுதான் உயிரோடிருந்தார் என்றோ, சமாதி ஆகிவிட்டதால் மரணமடைந்துவிட்டார் என்றோ, நாம் எப்படி நினைக்கவோ சொல்லவோ முடியும்? பாபா ஜனனமரணங்களுக்கு அப்பாற்பட்டவர்; நகரும் நகராப் பொருள்கள் அனைத்தும் நிறைந்த சிருஷ்டியையே வியாபித்திருக்கிறார் அல்லரோõ

131 அரணிக் கட்டையினுள் மறைந்திருக்கும் தீ, கடைந்தால் எப்படி வெளிப்படுகிறதோ அப்படியே பக்தர்களுக்கு ஸாயீõ

132 ஒருமுறை ஸாயீயைப் பிரேமையுடன் நோக்கினால், அவர் ஜன்மம் முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். அனன்னியப் பிரேமையைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் வேண்டுவாரில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார்õ

133 அந்நேரத்தில் காலமோ இடமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.

134 இம்மாதிரியாக அவர் செயல்படும்போது நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, அவருடைய பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், தியானமும் தாரணையும் (மனம் ஒருமுகப்படுதல்) விருத்தியடையும்.

135 ஒருமுகப்பட்ட மனத்தில் ஸாயீசிந்தனை பின்தொடரும். இதைத்தான் ஸாயீ நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்க­ன்றி நிறைவேறுகிறது.

136 உலகியல் விவகாரங்களை விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும், இவ்வாறு மனத்தை அப்பியாசம் செய்தால், உலகியல் விஷயங்களின் மீதான மோஹம் தானாகவே விலகும். முயற்சிகளும் சுலபமாக வெற்றியடையும்.

137 பூமியில் பிறந்த தேஹம் செயல் புரிந்தே ஆகவேண்டும். இதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆகவே, மனைவி, மக்கள், செல்வம், வீடு, வாசல் இவற்றை மனம் நிறையும்வரை தேடி அடையுங்கள்.

138 எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் யதேஷ்டமாக நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு ஸத்குருவைப்பற்றிய சிந்தனையில்தான் இருக்கிறது. சங்கற்பங்களும்1 விகற்பங்களும் நஷ்டப்பட்டுப் போகும். விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துகளும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்õ

139 மஹானுபாவரான ஸாயீ, பக்தர்களின் பா(ஆஏஅ)வத்தைக் கண்டு அவர்களுடைய பக்தியைப் பாராட்டுவதற்காக ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.

140 விரும்பிய வேஷத்தை அணிந்து எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு மங்களம் அருள்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும்õ

141 கதை கேட்பவர்களேõ இது சம்பந்தப்பட்ட காதையொன்றை பயபக்தியுடன் கேளுங்கள். ஞானிகள் தம் பக்தர்களுக்காக இரவுபகலாக எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதை இக் காதை காட்டும்.

142 உங்களுடைய இதயக் கோயி­னுள் இக் காதை புகுமாறு, கதவுகளாகிய காதுகளைத் திறந்துவையுங்கள். பிறவி அச்சத்தையும் சங்கடங்களையும் கடப்பதற்கு அனுகூலமாக இருக்கும்.

143 சமீபத்தில் முடிவுக்கு வந்த, ஜெர்மனிக்கு எதிரான முதல் உலக மஹாயுத்தம், எதிரியுடன் போரிடுவதற்காக ஒரு படையைத் தயார் செய்யவேண்டிய நெருக்கடியை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியது.

144 பிரிட்டிஷ் அரசாங்கம் பாரத பூமியின் எல்லா நகரங்களிலும் ராணுவத்திற்கு ஆள் சேர்த்தது.

145 ஆண்டு 1917. டாணே ஜில்லாவில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பக்தர் ஒருவருக்கு நல்ல நேரம் வந்தது. ஒரு விநோதமான நிகழ்ச்சி நடந்தது.

146 பக்தருடைய பெயர் ஆப்பாஸாஹேப் குள்கர்ணீ. ஸாயீயின் பிரபாவத்தாலும் கற்பனைக் கெட்டாத லீலையாலும் அவருக்கு பக்திபா(ஆஏஅ)வம் ஏற்பட்டது.

147 பல ஆண்டுகளுக்கு முன்பு பாலாஸாஹேப் பாடே அவர்களால் அளிக்கப்பட்ட பாபாவின் நிழற்படத்தை அவர் ஏற்கெனவே வழிபட்டுவந்தார்.

148 உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, சந்தனம், அக்ஷதை, மலர்கள் இவற்றால் பூஜை செய்து நைவேத்தியமும் சமர்ப்பணம் செய்துவந்தார்.

149 எப்பொழுது என் கர்மவினைகள் தீரும்? எப்பொழுது ஸாயீயைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்யும் யோகம் கிடைத்து, என் ஏக்கம் நிறைவேறும்? இதுவே ஆப்பாவின் இதயதாபமாக இருந்தது.

150 ஸாயீயின் நிழற்படத்தை தரிசனம் செய்வது ஸாயீயை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம். ஆனால், பா(ஆஏஅ)வமென்னவோ பூரணமாக இருக்கவேண்டும்.

151 ஸாயீயின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதையொன்றைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள்.

152 பாலாபுவா ஸுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த கீர்த்தங்கர் (பஜனை செய்பவர்) ஒருவர், நவீன துகாராம் என்று புகழ் பெற்றவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டீக்குச் சென்றார்.

153 அதுதான் அவருடைய முதல் தரிசனம். அவர் அதற்கு முன்பு ஸாயீயை தரிசனம் செய்ததில்லையெனினும், அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார்,--

154 ''இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்.ஃஃ பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார், என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார்.

155 ''பாபா சிர்டீயை விட்டு எங்கும் வெளியே போனதில்லை. நானோ சிர்டீக்கு வருவது இதுதான் முதல் தடவை. பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?ஃஃ

156 இதுபற்றித் திரும்பத் திரும்ப யோசித்தபின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்திற்கு ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது.

157 பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த ஸத்தியம் விளங்கியது. அவர் நினைத்தார், ''ஞானியரின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவர்களுக்கு இருக்கும் தாயன்பையும் பாரீர்õ--

158 ''இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாகக் காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே. அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும், பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்õ--

159 ''ஆயினும், 'நான் மறந்துவிட்டேன்ஃ என்று சொல்வது சரியாகாது. நான் நிழற்படத்திற்கு நமஸ்காரம் செய்ததைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை உடனே புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் என்னிடம் இல்லாததுதான் குறை.--

160 ''பாபாவுக்கு என்னைத் தெரிந்திருந்தது; எனக்கு அது கொஞ்சங்கூடத் தெரியவில்லையேõ ஞானிகள் ஞாபகமூட்டும்போதுதான் எல்லாமே மனத்திரைக்குத் திரும்பிவருகின்றன.ஃஃ

161 எவ்வாறு நிர்மலமான தண்ணீரிலும் கண்ணாடியிலும் நம்முடைய பிரதிபிம்பத்தைப் பார்க்கிறோமோ, அவ்வாறே நிழற்படமும் ஒரு பிரதிபிம்பம்; மூல உருவத்தின் தெளிவான பிரதி.

162 ஆகவே ஒரு ஞானியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம். அனைத்தையும் இயல்பாகவே அறியும் ஞானிகள் நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.

163 முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் தொடர்வோம். கேட்பவர்கள் கவனமான சித்தத்துடன் கேளுங்கள்.

164 ஆப்பா, டாணே நகரில் வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் வேலை நிமித்தமாக பிவண்டீக்குப் போகவேண்டியிருந்தது. எட்டு நாள்கள் கழித்துத் திரும்பி வருவேன், என்று சொல்­விட்டு வீட்டை விட்டுக் கிளம்பினார்.

165 அவர் கிளம்பி இரண்டு நாள்கள்கூட ஆகவில்லை. இங்கு, டாணேயில் அபூர்வமான சம்பவமொன்று நிகழ்ந்தது. ஒரு பக்கீர் ஆப்பாவின் வீட்டு வாசலுக்கு வந்தார்õ

166 அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது வீட்டி­ருந்தவர்கள் அனைவரும் ஸாயியே வந்திருக்கிறார் என்று நினைத்தனர். நகத்தி­ருந்து சிகைவரை, உருவத்திலும் சாய­லும் அங்க அமைப்பிலும் அவர்கள் வைத்திருந்த நிழற்படத்தைப் போலவே பக்கீர் இருந்ததைக் கண்டனர்.

167 ஆப்பாவின் மனைவியும் குழந்தைகளும் பக்கீருடைய முகத்தையே உற்றுப்பார்த்து வியப்படைந்தனர். பாபாவே வந்திருக்கிறார் என்று நினைத்தனர்.

168 அவர்களில் யாருமே பாபாவைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும் நிழற்படத்திற்கும் பக்கீருக்கும் இருந்த உருவ ஒற்றுமையால் அவர்தான் பாபா என்று நினைத்தனர்; உண்மையை அறிந்துகொள்ள ஆர்வமுற்றனர்.

169 ஆகவே பக்கீரைக் கேட்டனர், ''நீங்கள்தான் சிர்டீயில் வசிக்கும் ஸாயீயா?ஃஃ பக்கீர் என்ன பதிலுரைத்தார் என்பதைக் கருத்தூன்றிக் கேளுங்கள்.

170 ''நானே சிர்டீ ஸாயீ பாபா இல்லை. ஆனால் நான் அவருடைய ஆணைக்குக் கட்டுப்பட்ட அடிமை. அவருடைய ஆக்ஞையின்படி குழந்தைகுட்டிகளின் நலன்பற்றி விசாரிப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்.ஃஃ

171 பிறகு பக்கீர் தக்ஷிணை கேட்க ஆரம்பித்தார். குழந்தைகளின் தாயார் உடனே ஒரு ரூபாயை எடுத்து சம்பாவனையாகக் கொடுத்தார். அவரும் உதீ பிரசாதம் அளித்தார்.

172 ஸாயீ பாபாவின் உதீயை ஒரு பொட்டலத்தில் அப் பெண்மணிக்கு அளித்தபின் பக்கீர் சொன்னார், ''இதை பாபாவின் படத்திற்கருகில் வைத்துக்கொள்ளுங்கள். சௌக்கியமாக வாழ்வீர்கள்.ஃஃ

173 இவ்விதமாக, வந்த காரியத்தை முடித்துக்கொண்டு, ''ஸாயீ எனக்காக வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண் டிருப்பார்ஃஃ என்று சொல்­விட்டுப் பக்கீர் விடைபெற்றுக்கொண்டார்.

174 அங்கிருந்து கிளம்பியவர் தாம் வந்த வழியே சென்றார். ஆப்பாவின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி, உண்மையில் ஸாயீயின் அபூர்வமான லீலைகளில் ஒன்றேõ

175 ஆப்பாஸாஹேப் பிவண்டீக்கென்னவோ சென்றார். ஆனால், அவருடைய வண்டிக் குதிரைகள் நோயுற்றதால், மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாமல் வீடு திரும்ப நேர்ந்தது.

176 ஆப்பாஸாஹேப் பிற்பக­ல் டாணேவுக்குத் திரும்பினார். அவர் இல்லாதிருந்தபோது என்ன நடந்ததென்பதைக் கேட்டவுடன், தரிசனத்தைக் கோட்டைவிட்டதற்காக மனம் வருந்தினார்.

177 ஒரே ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கப்பட்டதை நினைத்து லஜ்ஜையடைந்தார். ''நான் இங்கு இருந்திருந்தால் தக்ஷிணையாக பத்து ரூபாயாவது கொடுக்காமல் அவரை அனுப்பியிருக்கமாட்டேன்.ஃஃ

178 ஆப்பாஸாஹேப் தமக்குத்தாமே இவ்வாறு சொல்­க்கொண்டார்; கொஞ்சம் மனம் வாடினார். பக்கீரை ஒருவேளை மசூதியில் காணமுடியலாம் என நினைத்து, சாப்பிடாமலேயே அவரைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்பினார்.

179 மசூதியிலும் தகியாவிலும், எங்கெல்லாம் பக்கீர்கள் வழக்கமாகத் தங்குவார்களோ அங்கெல்லாமும் தேடி அலைந்தார்.

180 தேடித் தேடிக் களைப்புற்றாரே தவிர, பக்கீரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பசியுடனும் ஏமாற்றத்துடனும் வீடு திரும்பியபின் உணவுண்டார்.

181 வெறும் வயிற்றுடன் தேடும் வேலை எதையும் செய்யக்கூடாது என்பதை அவர் அறிந்திருந்தாரில்லை. முத­ல் ஜீவனைத் திருப்திசெய்ய வேண்டும். அதன் பிறகுதான் தேடும் வேலையை ஆரம்பிக்கவேண்டும்.

182 இந்த யதார்த்தமான உண்மையாகிய தத்துவம், பாபா சொன்ன கதையி­ருந்தே விளங்கியிருக்கும். அதை மறுபடியும் சொல்வதால் என்ன பயன்?

183 சென்ற அத்தியாயத்தில் 'குரு மஹிமைஃ என்ற தலைப்பில் மனங்கவரும் கதையொன்று சொல்லப்பட்டது. இக் கதையில், கருணை மிகுந்த ஸ்ரீஸாயீ, தம் குருவின் அறிவுரையைத் தம்முடைய திருவாய்மொழி மூலமாகவே விளக்கினார்.

184 அந்த வார்த்தைகளின் ஸத்தியம் இப்பொழுது ஆப்பாவுக்கு அனுபவமாகக் கிடைத்தது. உணவுண்டபின் சித்ரே என்னும் நண்பருடன் மறுபடியும் சகஜமாக வெளியே கிளம்பினார் ஆப்பா.

185 சிறிது தூரம் சென்றபின், ஒருவர் தம்மையே பார்த்துக்கொண் டிருந்ததையும் தம்மை சந்திப்பதற்காகத் தாமிருந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்து வந்ததையும் கண்டார்.

186 அவர் நெருங்கி வந்தபோது ஆப்பாஸாஹேப் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். காலையில் தமது வீட்டுக்கு வந்த நபர் அவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தார்.

187 ''நான் இவ்வளவு நேரம் தேடிய பக்கீர் இவர்தான் என்று தோன்றுகிறது. நகத்தின் நுனிவரை, நான் வைத்திருக்கும் நிழற்படத்தைப் போலவேயிருக்கிறார். எனக்கு ஒரே வியப்பாக இருக்கிறது.ஃஃ

188 இவ்வாறு ஆப்பா தமக்குள்ளேயே தெளிவு தேடிக்கொண் டிருந்தபோது, திடீரென்று பக்கீர் கையை நீட்டினார். நீட்டிய கையில் ஆப்பா ஒரு ரூபாயை வைத்தார்.

189 பக்கீர் மேலும் கேட்டபோது, ஆப்பா இன்னொரு ரூபாய் கொடுத்தார்; மேலும் ஒரு ரூபாயும் கொடுத்தார். ஆனால், பக்கீரோ இன்னும் வேண்டுமென்று கேட்டார். உண்மையான அதிசயம் இனிமேல்தான் மலரப்போகிறது.

190 நண்பர் சித்ரேவிடம் மூன்று ரூபாய் இருந்தது. ஆப்பா அதையும் வாங்கிப் பக்கீரிடம் கொடுத்தார். அப்பொழுதும் பக்கீர் மேலும் வேண்டுமென்று கேட்பதை நிறுத்தவில்லை.

191 ஆப்பாஸாஹேப் பக்கீரிடம் சொன்னார், ''வீட்டுக்கு வந்தால் மேலும் தருவேன்.ஃஃ பக்கீர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூவரும் ஆப்பாவின் வீட்டுக்குத் திரும்பினர்.

192 வீட்டுக்குத் திரும்பியவுடனே ஆப்பா மேலும் மூன்று ரூபாய் கொடுத்தார். அதுவரை மொத்தம் ஒன்பது ரூபாய் கொடுத்தாயிற்று; ஆனால் பக்கீர் அப்பொழுதும் திருப்தி அடைந்தாரில்லைõ

193 அவர் மேலும் தக்ஷிணை கேட்டபோது ஆப்பா சொன்னார், ''என்னிடம் இப்பொழுது ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டுதான் இருக்கிறது.--

194 ''சில்லறை நாணயங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். வேறு சில்லறை இல்லை.ஃஃ ''நோட்டைக் கொடுத்துவிடலாமேஃஃ என்று பக்கீர் சொன்னார். ஆப்பா நோட்டைக் கொடுத்துவிட்டார்.

195 பத்து ரூபாய் நோட்டு கைக்கு வந்தவுடன், ரூபாய் நாணயங்கள் ஒன்பதையும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பக்கீர் வந்த வழியே மிக வேகமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.

196 பக்தர்கள் தாமாகவே வெளிவிடும் வார்த்தைகள் என்னவோ, அவற்றை ஸாயீ பரிபூரணமாக நிறைவேற்றிக்கொள்வார் என்னும் உறுதியே இக் காதையின் சாரமாகும்.

197 கேட்பவர்கள் உற்சாகம் கொண்டவர்களாக இருப்பதால், இந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வருகின்ற, இதே கருத்தை வெளிப்படுத்தும் இன்னொரு காதையைச் சொல்கிறேன். மிகுந்த பயபக்தியுடன் கேளுங்கள்.

198 ஹரிபாவு கர்ணிக் என்ற பெயர்கொண்ட பக்தரொருவர் இருந்தார். டஹாணூ என்ற கிராமத்தில் வசித்த இவர், ஸாயீயிடம் அனன்னிய பக்தி வைத்திருந்தார்.

199 1917ஆம் ஆண்டு குரு பூர்ணிமா புண்ணிய தினத்தன்று சிர்டீக்குப் புனிதப் பயணமாகச் சென்றார். அப்பொழுது நடந்த நிகழ்ச்சியைத்தான் நான் இப்பொழுது சொல்லப்போகிறேன்.

200 விதிமுறைகளின்படி பூஜையைச் செய்தபின், உடைகளையும் தக்ஷிணையையும் அர்ப்பணம் செய்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு கிளம்பினார். மசூதியின் படிகளில் இறங்கியபோது மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது.

201 திரும்பிச் சென்று மேலும் ஒரு ரூபாய் தக்ஷிணையாக அளிக்கவேண்டுமென்று தோன்றியது. ஆனால், அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அவரே அந்த ரூபாயை வைத்துக்கொள்ளும்படி நேர்ந்தது.

202 எவர், வீடு திரும்ப அனுமதி பெற்றுக்கொடுத்தாரோ அவர் (மாதவராவ் தேச்பாண்டே), கர்ணிக் விடைபெற்றுக்கொண்டுவிட்டதால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரவேண்டுமென்றும் திரும்பி வரவேண்டாவென்றும் மே­ருந்து சமிக்ஞையால் (சைகையால்) தெரிவித்தார்.

203 சைகையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட கர்ணிக், இடத்தை விட்டு நகர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். வீடு திரும்பும் பயணத்தில் அவரும் நண்பரும் நாசிக்கில் தங்கினர்.

204 நாசிக்கில் 'காளாராமர்ஃ கோயிலுக்குச் சென்றபோது எதிர்பாராமல் நரஸிங்க மஹராஜ் என்னும் ஞானியை தரிசனம் செய்தனர்.

205 பக்தர்கள் குழாம் சூழ்ந்திருந்தபோதிலும், மஹராஜ் சட்டென்று எழுந்துவந்து கர்ணிக்கின் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, ''என்னுடைய ரூபாயைக் கொடுஃஃ என்று கேட்டார்.

206 கர்ணிக் ஆச்சரியமடைந்து, மிகுந்த ஆனந்தத்துடன் ரூபாயைக் கொடுத்தார். தாம் முன்னம் மனத்தளவில் சமர்ப்பணம் செய்த ஒரு ரூபாயை ஸாயீயே இப்பொழுது வாங்கிக்கொண்டார் என்று உணர்ந்தார்.

207 'ஸாயீ வாங்கிக்கொண்டார்ஃ என்று சொல்வது முற்றிலும் சரி என்று சொல்லமுடியாது. கொடுப்பதைப்பற்றிய எண்ணம் மனத்தின் மூலையில் எங்கோ அடங்கியிருக்கும் சமயத்தில், ஸாயீ பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்கிறார். அதுதான் இங்கு நடந்ததுõ

208 மனிதனின் நெஞ்சத்தில் எத்தனையோ சங்கற்பங்களும் விகற்பங்களும் அலைமேல் அலையாக ஓடுகின்றன. முத­ல் ஒரு நல்ல எண்ணம் தோன்றுகிறது; ஆனால், அதைச் செயல்படுத்தும் தருணம் வரும்போது எத்தனையோ கற்பனைகள் குறுக்கிடுகின்றன.

209 ஆயினும் ஆரம்பத்தில் தோன்றிய அலைதான், அது ஒரு நல்ல எண்ணமாக இருக்கும் பட்சத்தில், ஊட்டம் பெற்று மங்களமான செய்கையாக முடிகிறது.

210 அந்த நல்ல திட்டத்தின்மேல் மனத்தைக் குவிக்கவேண்டும்; திடமாக அப்பியாசம் செய்யவேண்டும்; திரும்பத் திரும்ப மனத்தில் உருட்டவேண்டும்; அதை மறந்துபோக விடக்கூடாது; எப்பாடுபட்டாவது வாக்கை (திட்டத்தை) நிறைவேற்றவேண்டும்.

211 ஆப்பாஸாஹேப் ஒரு நேரத்தில் அந்த வார்த்தைகளைச் சொல்­விட்டு, பிறகு மறந்துபோகும் வாய்ப்பு இருக்கவே செய்தது. ஆகவே அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட தினத்தன்றே அவற்றை நிறைவேற்றிவைத்து பக்தியின் பெருமையை இவ்வுலகம் அறியும்படி செய்தார் ஸாயீõ

212 மொத்தமாகப் பத்தொன்பது ரூபாய் கைக்கு வந்தபின், அவர் ஏன் ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்? ஏனெனில், ஆப்பாவின் நிறைவேறாத விருப்பம் பத்து ரூபாய்க்குக் குறையாமல் கொடுக்கவேண்டும் என்பதேõ

213 பாபாவின் கையால் தொடப்பட்ட இந்த ஒன்பது ஆணிப்பொன் நாணயங்களால் ஆன அட்டிகை, வாஸ்தவத்தில் அவர் பக்தகோடிகளுக்கு நவவிதபக்தி என்னும் ஆன்மீகப் பாதையை ஞாபகப்படுத்தும் சாதனமே.

214 பாபா தேஹவியோகம் அடைந்த கதையைக் கேட்கும்போது, கடைசி நேரத்தில் அவர் ஒன்பது ரூபாய் தானம் செய்த புதுமையைப்பற்றிக் கேட்பீர்கள்.

215 ஆப்பாவின் மனைவி உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, ஒரே ஒரு ரூபாயை தக்ஷிணையாக அளித்தார். அதை பாபா மிகுந்த திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார். மேலும் வேண்டுமென்று அவரைக் கேட்கவேயில்லை.

216 ஆனால் ஆப்பாவோ, தம் மனைவி கொடுத்த தக்ஷிணை அற்பமான தொகை என்று நினைத்தார். ''நான் வீட்டில் இருந்திருந்தால் அந்தப் பக்கீருக்கு அங்கேயே அப்பொழுதே அதைப் போல் பத்துமடங்கு அளித்திருப்பேன்ஃஃ என்று அவர் நினைத்தார்; சொன்னார்.

217 'நான் பத்து ரூபாய் கொடுத்திருப்பேன்ஃ என்று ஆப்பா வாய்விட்டுச் சொல்­ யிருந்ததால், முழுப்பணத்தையும் கொடுக்காது அவர் எப்படித் தம் வாக்கைக் காப்பாற்றமுடியும்; எப்படிக் கடனி­ருந்து விடுபடமுடியும்?

218 இந்தப் பக்கீர் மற்றவர்களைப் போல் அல்லர். கையில் கிடைத்ததை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பிப் போக, அவர் என்ன ஊர் ஊராகத் திரியும் பிச்சைக்காரரா என்ன?

219 ஆப்பா வாய்விட்டுச் சொன்ன நாள் அஸ்தமனமாவதற்கு முன்பாகவே அவர் திரும்பி வந்தார். ஆப்பாவுக்குத்தான் அவர் வேறு யாரோ முன்பின் தெரியாத பக்கீர் என்னும் குழப்பம் ஏற்பட்டது.

220 பக்கீர் தக்ஷிணை கேட்டபோது அவரிடம் ஆறு ரூபாய் இருந்தது. ஆயினும் அவர் தம் வசம் இருந்த முழுப் பணத்தையும் கொடுக்கவில்லை.

221 ஆப்பாவின்மீது பிரேமை இல்லையென்றால், பக்கீர் வேஷத்தில் பாபா வந்திருப்பாரா? மேலும், மீண்டும் மீண்டும் தக்ஷிணை கேட்டு பாபா நாடகமாடியிருக்காவிட்டால், இக் காதை எப்படி ருசியாக இருந்திருக்கும்?

222 ஆப்பாஸாஹேப் நிகழ்ச்சி ஓர் உதாரணம் மாத்திரமே. உங்களுடைய கதியும் என்னுடைய கதியும் வேறில்லைõ நாம் எல்லோருமே ஆரம்பத்தில் பெரிய திட்டங்கள் போடுகிறோம். ஆனால், சரியான நேரம் வரும்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வேறுவிதமாகச் செயல்படுகிறோம்.

223 வாக்கும் உறுதிமொழியும் அளிப்பதில் நமது உற்சாகத்திற்குக் குறைவே இல்லை. ஆனால், கொடுக்கவேண்டும் என்று வரும்போது, சந்தேகங்கள் முளைத்துத் தடுமாறுகிறோம்; திடமாகச் செயல்படுவது துர்லபம் (எப்பொழுதோதான்).

224 மிதமாகப் பேசி, அதையும் இதமாகப் பேசி, தம்முடைய வாக்கின்படி செயல்பட்டு அதை நிறைவேற்றுபவரை நம்மிடையே காண்பது அரிது.

225 தம்மிடம் அனன்னியமான பா(ஆஏஅ)வத்துடன் பக்தி செலுத்துபவருடைய இவ்வுலக விருப்பங்களையும் மேலுலக விருப்பங்களையும் ஸமர்த்த ஸாயீ நிறைவேற்றிவைக்கிறார்.

226 ஆப்பா புத்திசா­; ஆங்கிலப் படிப்பும் படித்திருந்தார். ஆயினும் ஆரம்பத்தில் அவருக்கு அரசாங்கம் ரூ. 40/- மட்டுமே மாதச் சம்பளமாகக் கொடுத்தது.

227 பின்னர், நிழற்படத்தைக் கொண்டுவந்த பிறகு அவருக்குச் சம்பளம் படிப்படியாக உயர்ந்து நாற்பது ரூபாயைப் போலப் பல மடங்காக ஆயிற்று.

228 பாபாவுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். -- பத்து மடங்கு அதிகாரம் -- பத்து மடங்கு சக்தி. சகலமான பக்தர்களும் இந்த அனுபவத்தை அவ்வப்பொழுது அடைந்தார்கள்.

229 அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான நிஷ்டையி­ருந்து ஆன்மீக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபாவின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோõ

230 பின்னர், பக்கீர் அளித்த விபூதியைப் பார்க்கவேண்டுமென்று ஆப்பாஸாஹேப் விரும்பினார். அது ஒரு பொட்டலமாக இருந்தது; பிரேமையுடன் பொட்டலத்தைப் பிரித்தார்.

231 பொட்டலத்தில் விபூதியுடன் மலர்களும் அக்ஷதையும் இருந்தன. அவற்றைப் போற்றுதற்குரிய பொருள்களாக ஏற்று, ஒரு தாயித்தில் இட்டு புஜத்தில் பயபக்தியுடன் கட்டிக்கொண்டார்.

232 பின்னர் அவர் பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று கிடைத்தது. அதை அவர் பிரேமையுடன் ஏற்கெனவே அணிந்திருந்த தாயித்தினுள் சேர்த்து அணிந்துகொண்டார்.

233 பாபாவின் உதீயின் மஹிமைதான் என்னேõ உதீ சிவனுக்கு பூஷணம் (அணிகலன்). உதீயை நம்பிக்கையுடன் பூசிக்கொள்பவரின் பாதையிலுள்ள விக்கினங்கள் உடனே விலக்கப்படுகின்றனõ

234 காலை ஸ்நானத்தை முடித்தபின் எவர் தினமும் நெற்றியில் உதீ பூசி, சிறிது உதீயைப் பாபாவின் பாததீர்த்தத்துடன் கலந்து அருந்துகிறாரோ, அவர் பரிசுத்தமடைகிறார்; புண்ணியம் சேர்க்கிறார்.

235 அதுமாத்திரமின்றி, உதீயின் மேலுமொரு விசேஷமான குணம் என்னவென்றால், அது பூரணமான ஆயுளை அளிக்கும். எல்லாப் பாதகங்களையும் மிச்சமின்றி முழுவதுமாக அழிக்கும். சுகமும் சந்தோஷமும் எப்பொழுதும் நிலவும்.

236 ஆப்பாவைச் சாக்காக வைத்து தேவாமிருதத்தையொத்த சுவையுடைய இக் காதை விருந்தை ஸாயீ அளித்திருக்கிறார். நாமும், அழையாத விருந்தாளிகளாக இருந்த போதிலும், பந்தியில் உட்கார்ந்து யதேஷ்டமாக (திருப்தியாக) விருந்துண்டோம்.

237 விருந்தாளியும் விருந்தளித்தவரும் எல்லாருமே ஒரே விருந்தைத்தான் உண்டோம்; இனிமையையும் சுவையையும் பொறுத்தவரை வித்தியாசம் ஏதுமில்லை. இந்த ஆத்மானந்த போஜனத்தை உண்டு திருப்தி அடையுங்கள்.

238 ஹேமாட் ஸாயீ பாதங்களை சரணடைகிறேன். நாம் இதுவரை கேட்டது தற்சமயத்திற்குப் போதும். அடுத்த அத்தியாயத்தில் உதீயின் பிரபாவம் தொடரும்.

239 ஸாயீதரிசனம் செய்து உதீயைப் பூசியதால், நெடுநாள்களாக ஆறாது புரையோடிய ரணம் பூரணமாகக் குணமடைந்த காதையையும் நரம்புச்சிலந்தி வியாதியும் பிளேக் நோயும் நிவாரணம் ஆன காதைகளையும் சொல்லப்போகிறேன். பூரணமான மனவொன்றிப்புடன் கேளுங்கள்.

எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்ஃ என்னும் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play