Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 35

35. சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடந்த அத்தியாயத்தின் முடிவில் கோடிகாட்டிய கதைகளை இந்த அத்தியாயத்தில் தொடர்கிறேன். அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

2 தன்னுடைய பாதையே உயர்ந்தது என்று நினைத்துத் தன்னுடைய மதத்தின் உட்பிரிவின்மேல் வைக்கும் அளவுக்குமீறிய அபிமானத்தைவிட பயங்கரமானதும் தாண்டமுடியாததுமான விக்கினம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேறெதுவுமே இல்லை.

3 ''நாங்கள் உருவமற்ற கடவுளைத் தொழுபவர்கள். உருவமுள்ள கடவுளே
அனைத்து பிரமைகளுக்கும் மூலகாரணம். ஞானிகளும் சாதுக்களுங்கூட மனிதர்கள்தாமே? இவ்வாறிருக்க, அவர்களைப் பார்த்தால் நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும்?--

4 ''அவர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது; தக்ஷிணையும் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு மரியாதை ஏதும் செய்யக்கூடாது. ஏனெனில் அது பக்தியைக் கே­ செய்வதாகும்.ஃஃ

5 சிர்டீயைப்பற்றிச் சிலர் சிலவிதமாகவும், வேறு சிலர் வேறுவிதமாகவும், பலர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையுமே நாம் விழுங்கிவிட முடியாது.

6 சிலர் சொன்னார்கள், ''தரிசனத்திற்குப் போனால் ஸாயீபாபா தக்ஷிணை கேட்கிறார். சாதுக்கள் திரவியத்தை சம்பாதிக்க முயலும்போது அவர்களுடைய சாதுத்துவம் அடிபட்டுவிடுகிறதன்றோõ --

7 ''குருட்டு நம்பிக்கை நல்லதன்று. பிரத்யக்ஷமாக அனுபவம் கிடைத்த பிறகே நான் என்னுடைய மனத்தில் எவ்வழி செல்வதென்று முடிவுசெய்வேன்.--

8 ''பணத்தின் மீது நாட்டம் கொண்டவரின் ஞானித்துவத்தை என்னால் மெச்ச முடியவில்லை. நான் தக்ஷிணை கொடுக்கமாட்டேன். நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுள்ள பாத்திரமல்லர்.--

9 ''எது எப்படியிருப்பினும், நான் சிர்டீக்குச் சென்று அவரைப் பேட்டி காண்பேன். ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தக்ஷிணை கொடுக்கவும் மாட்டேன்.ஃஃ

10 எவரெவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினரோ, அவரவரெல்லாம் தரிசனயோகம் கிடைத்தபின் ஸாயீயை சரணடைந்தார்கள்.

11 எவரெவரெல்லாம் ஸாயீயைக் கண்ணால் கண்டார்களோ, அவரவரெல்லாம் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பிப் பார்க்கவே யில்லை. ஸாயீபாதங்களில் மூழ்கிவிட்டனர்õ

12 அவர்கள் தீர்மானம் செய்துகொண்டு வந்ததை அறவே மறந்து குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு ஸாயீபாதங்களை வணங்கினர்.

13 'தன்னுடைய மார்க்கமே சிறந்ததுஃ என்னும் அளவுக்குமீறிய மதாபிமானம் நல்லடக்கம் செய்யப்பட்ட கதை இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. பயபக்தியுடன் கேளுங்கள்; ஜீவனுக்கு அத்தியந்த சுகம் கிடைக்கும்.

14 அதுபோலவே, பாலா நெவாஸ்கர் எவ்வாறு ஒரு நல்லபாம்பை பாபாவாகவே கருதிப் பிரீதியுடன் நடந்துகொண்டார் என்பதுபற்றியும் கேளுங்கள். மேலும், இந்த அத்தியாயம் உதீயின் சூக்குமமான சக்தியைப்பற்றியும் பேசுகிறது.

15 கதை கேட்பவர்களேõ எனக்குக் கிருபை செய்யுங்கள். நான் கேவலம் ஸாயீயின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்ட ஓர் அடிமை. அவருடைய ஆணையை பயபக்தியுடன் நிறைவேற்றத்தான் எனக்குத் தெரியும். அதி­ருந்து எழுந்ததே இச் சரித்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும்.

16 அவருடைய பாதங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றி­ருந்து அலையலையாக எழும்பும் கவிதைகளை அவருடைய பவித்திரமான சரித்திரம் என்னும் குடத்தில் மேலும் மேலும் நிரப்பும் செய­ல் ஈடுபட்டிருக்கிறேன்.

17 நாமெல்லாம் தாய் ஆமையின் அன்பார்ந்த பார்வையொன்றாலேயே போஷாக்கு பெறும் ஆமைக்குட்டிகள். நமக்கு எப்போதும் பசியில்லை; தாகமுமில்லை; களைப்புமில்லை. எந்நேரமும் திருப்தியுள்ளவர்களாகவே இருக்கிறோம்.

18 கடைக்கண் பார்வையொன்றே போதும்; நமக்குச் சோறும் வேண்டா, நீரும் வேண்டா. அன்பான பார்வையே நம் பசியையும் தாகத்தையும் தணித்துவிடுகிறது. அதை எப்படித் தகுந்த அளவிற்குப் புகழமுடியும்?

19 கிருபாசமுத்திரமான ஸாயீராயரே நம்முடைய காட்சி அனைத்தும். இந்நிலையில், காட்சிப்பொருள், காண்பவன், காட்சி -- இந்த முக்கோண பேதம் மறைந்து, மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.

20 அதுபோலவே நாம் சருமத்திலும் தொடுவுணர்ச்சியிலும் ஸாயீயின் பிரகாசத்தைக் காண்கிறோம். மூக்கிலும் வாசனையிலும் அவ்வாறே ஸாயீ உறைகிறார்.

21 காதில் ஓர் ஒ­ விழும்போது ஸாயியின் உருவம் உடனே வெளிப்படுகிறது. கேள்வி, கேட்பவர், கேட்கும் செயல் -- இம்மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.

22 நாக்கு ஒரு சுவையை அனுபவிக்கும்போது ஸாயீ சுவையுடன் கலந்துவிடுகிறார். இதன் பிறகு, சுவையும், நாக்கும், சுவைக்கும் செயலும் ஒன்றாகிவிடுவதில் அதிசயம் என்ன இருக்கிறது?

23 கர்மேந்திரியங்கள் அனைத்தின் கதியும் இதுவே. அவையெல்லாம் ஸாயீயை சேவித்தால், கர்மவினைகள் அனைத்தும் அழியும். செயல்களின் விளைவுகளி­ருந்து விடுதலையும் கிடைக்கும்.

24 காவியம் நீண்டுகொண்டே போகிறது; இது ஸாயீயின் பிரேமையால் விளைந்ததே. நாம் இப்பொழுது ஏற்கெனவே கோடிகாட்டப்பட்ட விஷயங்களுக்குத் திரும்பிச்சென்று, விட்ட இடத்தி­ருந்து தொடர்வோமாக.

25 அருவ வழிபாட்டில் தீவிர நம்பிக்கை வைத்து உருவ வழிபாட்டிற்கு முதுகைக் காட்டுபவராக இருந்த நபர் ஒருவர், என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும் ஆர்வப்பசியால் மட்டுமே உந்தப்பட்டு சிர்டீக்குச் செல்ல உற்சாகம் கொண்டார்.

26 ஆகவே அவர் சொன்னார், ''சாது தரிசனம் செய்வதற்கு மட்டுமே நாம் சிர்டீக்கு வருவோம். அவருக்கு வணக்கம் செலுத்தமாட்டோம்; தக்ஷிணையும் கொடுக்க மாட்டோம்.--

27 ''இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டால்தான் நாம் சிர்டீக்கு வருவோம்.ஃஃ நண்பர் இதற்கு ஒத்துக்கொண்டவுடன் அந்த நபர் சிர்டீக்குத் தெம்புடன் கிளம்பினார்.

28 நண்பரின் பெயர் காகா மஹாஜனி; பாபாவின் மீது பவித்திரமான பக்தியும் பிரேமையும் வைத்திருந்தவர். அந்த ஆசாமியோ சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் நிரம்பிய பாத்திரம்.

29 இருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயி­ருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிர்டீ வந்துசேர்ந்தனர்.

30 ஸாயீதரிசனம் செய்வதற்கு இருவரும் உடனே மசூதிக்குச் சென்றனர். அப்பொழுது என்ன நடந்ததென்பதை கவனமாகக் கேளுங்கள்.

31 காகா மஹாஜனி மசூதியின் முதற்படியில் கால் வைத்தவுடனே நண்பரைத் தூரத்தி­ருந்தே பார்த்துவிட்ட பாபா, மதுரமான குர­ல் கேட்டார், ''நீர் ஏன் வந்தீர் ஐயா?ஃஃ

32 அன்பு ததும்பிய இவ்வார்த்தைகளைக் கேட்ட காகா மஹாஜனியின் நண்பர் சூக்குமமான குறிப்பை உடனே அடையாளம் கண்டுகொண்டார். வாக்கியத்தின் அமைப்பும் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்ட பாணியும் அவருக்குத் தம் தந்தையை நினைவூட்டின.

33 ''நீர் ஏன் வந்தீர் ஐயா?ஃஃ என்ற வார்த்தைகள் வெளிவந்த ஸ்வரம் (நாதம்) காகா மஹாஜனியின் நண்பரை வியப்பில் ஆழ்த்தியது.

34 இனிமையான அந்தக் குரல் அவருக்குத் தம் (காலமான) தந்தையை ஞாபகப்படுத்தியது. குரலும் வார்த்தைகள் வெளிவந்த பாணியும் அவருக்குத் தந்தையினுடையதைப் போலவே இருந்தன. பா(ஆஏஅ)வனைச் செயல், பூரணமாக யதார்த்தமாகவும் துல்­யமாகவும் இருந்தது.

35 ஓ, அச்சொற்களின் மோகனசத்திதான் என்னேõ காகாவின் நண்பர் வியப்படைந்த மனத்தினராய், ''இவை என் தந்தையின் சொற்களேõ குரலும் எனக்கு நன்கு பழக்கப்பட்டதுõஃஃ என்று சொன்னார்.

36 காலஞ்சென்ற தந்தையின் பேச்சைப் போன்றே வெளிவந்த வார்த்தைகள் நண்பரின் இதயத்தைத் தொட்டுவிட்டன. ஏற்கெனவே செய்துவைத்திருந்த தீர்மானங்களை விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தலைசாய்த்தார்.

37 பின்னர், பாபா காகாவிடம்மட்டும் தக்ஷிணை கேட்டார்; காகா மகிழ்ச்சியுடன் தக்ஷிணை கொடுத்தார். இருவரும் திரும்பினர். மறுபடியும் பிற்பகல் வேளையில் மசூதிக்குச் சென்றனர்.

38 இருவரும் சேர்ந்தே சென்றனர்; இருவருமே பம்பாய்க்குத் திரும்ப வேண்டும். காகா வீடு திரும்புவதற்கு அனுமதி கேட்டார். பாபா மறுபடியும் தக்ஷிணை கேட்டார்.

39 இம்முறையும் பாபா, ''எனக்குப் பதினேழு ரூபாய் கொடுஃஃ என்று காகாவைமட்டுமே கேட்டார். நண்பரை ஏதும் கேட்கவில்லை. நண்பரின் மனம் உறுத்தியது.

40 காகாவிடம் நண்பர் கிசுகிசுத்தார், ''பாபா ஏன் உங்களைமட்டும் தக்ஷிணை கேட்கிறார்? காலையிலும் உங்களைத்தான் கேட்டார்; இப்பொழுதும் உங்களை மட்டுமே கேட்கிறார்.--

41 ''நான் உங்களுடன் சேர்ந்து இருக்கும்போது தக்ஷிணைக்கு என்னை ஏன் விலக்கிவிடுகிறார்?ஃஃ காகா மெல்­ய குர­ல் பதிலுரைத்தார், ''பாபாவிடமே இந்தக் கேள்வியைக் கேளுங்கள்.ஃஃ

42 திடீரென்று பாபா காகாவைக் கேட்டார், ''என்ன? நண்பர் உம்மிடம் என்ன சொல்கிறார்?ஃஃ நண்பர் இப்பொழுது நேரிடையாகவே பாபாவைக் கேட்டார், ''நான் உங்களுக்கு தக்ஷிணை கொடுக்கலாமா?ஃஃ

43 பாபா பதில் சொன்னார், ''உம்முடைய மனத்தில் கொடுக்கவேண்டுமென்ற விருப்பம் இல்லை; ஆகவே நான் கேட்கவில்லை. இப்பொழுது உமக்குக் கொடுக்க விருப்பமிருந்தால் கொடுக்கலாம்.ஃஃ

44 பாபா கேட்டபோதெல்லாம் காகா தக்ஷிணை கொடுத்ததுபற்றி நண்பர் அவரைக் குற்றம் சாட்டுவது வழக்கம். இப்பொழுதோ, பாபா கேட்காமலேயே தக்ஷிணை கொடுக்கட்டுமா என்று அதே மனிதர் கேட்கிறார்õ காகா ஆச்சரியமடைந்தார்.

45 பாபா ''விருப்பமிருந்தால் கொடுக்கலாம்ஃஃ என்று சொன்னவுடனே நண்பரால் தாமதிக்க முடியவில்லை. உடனே பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் (பாபா கேட்காமலேயே) வைத்தார்.

46 பாபா அப்பொழுது அவரிடம் சொன்னார், ''போவதற்கு என்ன அவசரம்? ஒரு கணம் உட்காரும்.ஃஃ பிறகு பாபா அவருடைய பேதபுத்தியைச் சீர்படுத்துவதற்காக இனிமையான வார்த்தைகளால் உபதேசம் செய்தார்.

47 ''உமக்கும் எனக்கும் நடுவே பேதம் கற்பிக்கும் தே­1யின் சுவரை இடித்து நிரவிவிடுங்கள். ஒருவரையொருவர் சந்திக்க உதவும் வழி அகலமாகத் திறந்து கொள்ளும்.ஃஃ

48 பிறகு, அவர்கள் வீடு திரும்புவதற்கு பாபா அனுமதியளித்தார். ஆனால், இருண்ட வானத்தைப் பார்த்த மாதவராவ், ''போகும் வழியில் இவர்கள் மழையில் மாட்டிக்கொள்வார்கள் போ­ருக்கிறதேஃஃ என்று பாபாவிடம் சொன்னார்.

49 பாபா பதில் கூறினார், ''இவர்கள் தைரியமாகக் கிளம்பட்டும். மழையைப் பார்த்து வழியில் பயப்படுவதற்கு ஏதும் இல்லை.ஃஃ

50 ஆகவே, இருவரும் பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டுப் போய்க் குதிரைவண்டியில் உட்கார்ந்தனர். காற்றில் நீர்மூட்டம் அதிகரித்தது; வானத்தில் மின்னலடித்தது; கோதாவரி நதியின் பெருக்கம் அதிகமாகியது.

51 வானம் கடகடவென்று கர்ஜித்தது. நதியைப் படகினால் கடக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும் காகாவுக்கு பாபா அளித்த உறுதிமொழியின்மீது முழுநம்பிக்கை இருந்தது.

52 நண்பருக்கோ, எப்படி சௌகரியமாகவும் பத்திரமாகவும் வீடு போய்ச் சேர்வது என்பதே பெருங்கவலை. வழியில் நேரக்கூடிய சங்கடங்களைக் கற்பனை செய்து, 'ஏன் இங்கு வந்தோம்ஃ என்றெண்ணி வருத்தப்பட்டார்.

53 எப்படியோ அவர்கள் பத்திரமாகவும் சுகமாகவும் நதியைக் கடந்தபின் பம்பாய்க்கு ரயில் ஏறினர். அதன் பிறகே மேகங்கள் மழையைக் கொட்ட ஆரம்பித்தன. இருவரும் பயமேதுமின்றி பம்பாய் சென்றடைந்தனர்.

54 காகாவின் நண்பர் வீட்டிற்குத் திரும்பிக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவிட்டார். உள்ளே மாட்டிக்கொண்டிருந்த சிட்டுக்குருவி ஒன்று வேகமாகப் பறந்து வெளியே சென்றது. வீட்டினுள் இரண்டு சிட்டுக்குருவிகள் இறந்து கிடந்தன.

55 அன்னமும் பானமும் இல்லாததால் இறந்துபோன சிட்டுக்குருவிகளைப் பார்த்த அவர் மனமுடைந்து சோகமானார்.

56 ''சிர்டீக்குப் போவதற்குமுன் ஜன்னலைத் திறந்துவைத்துவிட்டுப் போயிருந்தால், அவை காலனின் பிடியில் சிக்கியிருக்கமாட்டா. பாவம்õ அதிருஷ்டக்கட்டைகளான இவ்விரண்டு சிட்டுக்குருவிகள் என் கைகளில் இறக்கும்படி ஆயிற்று.--

57 ''பறந்துபோன சிட்டுக்குருவியைக் காலனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே பாபா எங்களுக்கு இன்றே வீடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார் போலும்ஃஃ என்று நினைத்தார்.

58 ''இல்லையெனில் எப்படி உயிரோடிருக்கும்? ஆயுள் முடியும்போது இதுதானே கதி. ஒரு சிட்டுக்குருவியாவது பிழைத்ததேõஃஃ

59 அவருக்கு இன்னொரு சுவாரசியமான அனுபவமும் உண்டு; கேட்பதற்குகந்தது. பல மாதங்களாக அவருக்கு ஒரு குதிகா­ல் வ­ இருந்தது.

60 சிர்டீ செல்வதற்குமுன் பல மாதங்களாக இந்த வியாதியை அனுபவித்துவந்தார். சிர்டீ சென்றுவந்த பிறகு இந்தப் பாதிப்பு குறைந்தது; சில நாள்களில் அடியோடு மறைந்தது.

61 இதேமாதிரியான நிகழ்ச்சியொன்றில், ஞானியின் சக்தியைச் சோதிக்க முயன்ற ஒருவர் தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, ஞானியின் பாதங்களில் பணியவேண்டி நேர்ந்தது. அந்தக் காதையை இப்பொழுது கேளுங்கள்.

62 மேலும், அவருடைய விருப்பத்திற்கு மாறாகவும் ஏற்கெனவே செய்திருந்த திடமான தீர்மானத்திற்கு நேரெதிராகவும் தக்ஷிணை கொடுக்கவேண்டுமென்று மோகங்கொண்டு தக்ஷிணை கொடுத்த காதையைக் கேளுங்கள்.

63 டக்கர் தரம்ஸீ ஜேடாபாயீ என்னும் பெயர்கொண்ட, பம்பாய் நகரத்தில் வாழ்ந்த, சட்ட சம்பந்தமான ஆலோசகர் (நர்ப்ண்ஸ்ரீண்ற்ர்ழ்) ஒருவருக்குப் பூர்வபுண்ணிய பலத்தால் ஸாயீதரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.

64 அவர் காகா மஹாஜனியின் யஜமானர். ஒருவருக்கொருவர் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆகவே அவர் நேரிடையாக சிர்டீக்குச் சென்று பாபாவைப் பிரத்யக்ஷமாகப் பேட்டி காணவேண்டுமென்று நினைத்தார்.

65 காகா மஹாஜனி, டக்கர்ஜீயின் நிறுவனத்தில் நிர்வாக குமாஸ்தாவாக உத்தியோகம் செய்துவந்தார். தம்முடைய விடுப்பு அனைத்தையும் அடிக்கடி சிர்டீ சென்று வருவதற்காகவே உபயோகித்தார்.

66 சிர்டீக்குப் போனால் நேரத்தோடு திரும்பி வருவாரா என்னõ எட்டு நாள்கள் அங்கே தங்கிவிட்டு வருவார். கேட்டால், பாபா அனுமதியளிக்கவில்லை என்று காரணம் சொல்லுவார்õ ''இதுவும் ஒரு வேலை செய்யும் ரீதியா?ஃஃ என்று நினைத்து யஜமானர் எரிச்சலடைவது வழக்கம்.

67 ''இதென்ன ஞானிகளின் நடைமுறைõ இந்த அனாவசியமான தடபுடலெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லைõஃஃ இந்த ஸாயீ விவகாரத்தை ஒரு மாதிரியாக முடிவுகட்டவேண்டுமென்று தீர்மானித்து, ஹோ­ப்பண்டிகை விடுமுறையின்போது சிர்டீக்குக் கிளம்பினார்.

68 'தான்ஃ என்ற அஹங்காரத்தாலும் பணத்திமிராலும் நிரம்பிய அந்த சேட், ''ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்கள்தாமே; அவர்களை நாம் எதற்காக வணங்கவேண்டும்?ஃஃ என நினைத்தார்.

69 மெத்தப்படித்த பண்டிதர்களையும் சாஸ்திர விற்பன்னர்களையும் மண்டியிடவைத்த ஸாயீயின் ஆன்மீக, தார்மீக சக்தியின் முன்பாகக் கேவலம் தரம்ஸீயின் தீர்மானம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கப் போகிறது?

70 ஆயினும் அவர் நினைத்தார், ''குருட்டு நம்பிக்கை நன்றன்று; ஆகவே நானே உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன்.ஃஃ இவ்வாறு மனத்துள் தீர்மானம் செய்துகொண்டு அவர் சிர்டீக்குப் போக ஆயத்தங்கள் செய்தார்.

71 ஏற்கெனவே விவரிக்கப்பட்ட சிநேகிதர் செய்ததைப் போன்று இவரும் காகா மஹாஜனியுடன் சிர்டீக்குக் கிளம்பினார். அவரிடம் சொன்னார்,

72 ''நீர் சிர்டீக்குப் போனால் அங்கேயே முகாம் போட்டுவிடுகிறீர்; ஆனால், இம்முறை அது சரிப்படாது. நீர் என்னுடன் திரும்பிவிட வேண்டும். இது நிச்சயம் என்று அறிவீராக.ஃஃ

73 காகா பதில் கூறினார், ''இதோ பாரும், அது என்னுடைய கைகளில் இல்லை.ஃஃ இதைக் கேட்ட தரம்ஸீ, துணைக்கு இன்னொருவரையும் அழைத்துக்கொண்டார்.

74 ''ஒரு வேளை காகா திரும்பிவர முடியாமற்போகலாம். துணையின்றிப் பயணம் செய்யக்கூடாது.ஃஃ சேட் இவ்வாறு நினைத்து இன்னொருவரையும் அழைத்துக் கொண்டார். மூன்று பேராக சிர்டீக்குக் கிளம்பினர்.

75 இம்மாதிரியாக எத்தனையோ விதமான மனிதர்கள் உண்டு. அவர்களையெல்லாம் தம்மிடம் இழுத்துவந்து அவர்களுடைய சந்தேகங்களையும் தவறான நம்பிக்கைகளையும் பாபா நிவிர்த்தி செய்தார்.

76 அவர்கள் வீடு திரும்பித் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வர்; அல்லது மற்றவரின் உதவி கொண்டு அதை எழுதியும் வைப்பர். இதெல்லாம் மக்களை நல்ல பாதையில் கொண்டுவருவதற்காகவே.

77 தாத்பர்யம் (ஆழ்ந்த கருத்து) என்னவென்றால், இவ்வாறு சென்றவர்கள் தரிசன சுகத்தால் திருப்தியடைவார்கள். கிளம்பும்போது மனப்போக்கு எப்படி இருந்திருந்தாலும் சரி, கடைசியில் பரமானந்தம் அடைந்தனர்.

78 'விஷய ஆர்வத்தாலும் உட்புகுந்து நேரில் பார்க்க விரும்பிய ஆவலாலும் அவர்களாகவே சிர்டீக்குச் சென்றார்கள்ஃ என்று நாம் சொல்லலாமே தவிர, உண்மை என்னவோ வேறுவிதமாக இருந்தது. அவர்கள் பாபாவின் காரியசாதனைக்காகவே சிர்டீக்குச் சென்றனர்.

79 அவர்களுக்கு அந்த உள்ளுணர்வைக் கொடுத்தவரே பாபாதான். அதன் பிறகே அவர்களால் வீட்டை விட்டுக் காலடி எடுத்துவைக்க முடிந்தது. அவர்களுடைய இயல்பான மனோபாவத்தை மேலும் கிளறிவிட்டு, அவர்களை ஆன்மீகப் பாதையில் திருப்பினார் பாபாõ

80 பாபாவின் திட்டங்களை யாரால் அறிய முடியும்? அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்õ ஆனால், நீங்கள் அஹங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.

81 தேவர்கள், இருபிறப்பாளர்கள் (அந்தணர்), குரு, இவர்களைக் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது. ஆகவே, காகா, போகும் வழியில் இரண்டு சேர் திராட்சை (சுமார் 560 கிராம்) வாங்கிக்கொண்டார்.

82 திராட்சையில் விதையற்ற ஜாதியும் உண்டு. ஆனால், விதையுள்ள ஜாதிதான் அப்பொழுது கிடைத்தது. காகா அதையே வாங்கிக்கொண்டார்.

83 வழியெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டே மூவர் கோஷ்டி சிர்டீ போய்ச் சேர்ந்தது. மூவரும் ஒன்றாக பாபா தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.

84 பாபாஸாஹேப் தர்கட் என்ற பக்தரும் அங்கு உட்கார்ந்திருந்தார். விஷய ஆர்வம் கொண்ட சேட் தரம்ஸீ அவரை என்ன விசாரித்தார் என்பதைக் கேளுங்கள்.

85 ''இங்கு என்ன கண்டீர், திரும்பத் திரும்ப வருவதற்கு?ஃஃ தர்கட் பதிலுரைத்தார், ''நாங்கள் தரிசனம் செய்ய வருகிறோம்.ஃஃ சேட் குறுக்குச்சால் ஓட்டினார், ''ஆனால், இங்கு அற்புதங்கள் நிகழ்கின்றன என்று நான் கேள்விப்பட்டேனே?ஃஃ

86 ஆகவே தர்கட் சொன்னார், ''என்னுடைய பா(ஆஏஅ)வனை அதுவன்று. மனத்தில் ஆழமாக எதை விரும்பியவாறு வருகிறோமோ அந்தக் காரியம் ஸித்தியாகிறது.ஃஃ

87 காகா பாபாவின் பாதங்களில் விழுந்து திராட்சையைக் கைகளில் சமர்ப்பித்தார். மக்கள் ஏற்கெனவே கூடியிருந்தனர். பாபா திராட்சையை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.

88 மற்றவர்களுக்கு அளித்ததைப் போலவே தரம்ஸீ சேட்டுக்கும் சில திராட்சைகளைக் கொடுத்தார். ஆனால், தரம்ஸீக்கு இந்த ஜாதி பிடிக்காது; விதையற்ற ஜாதியே பிடிக்கும்.

89 விதையுள்ள திராட்சையே அவருக்குப் பிடிக்காது. பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்சினை எழுந்துவிட்டதுõ அவற்றை எப்படித் தின்பது என்பதே அவருடைய பிரச்சினை. வேண்டா என்று ஒதுக்குவதற்கும் மனோதிடம் இல்லை.

90 திராட்சையை நன்கு கழுவாமல் தின்னக்கூடாது என்று குடும்ப டாக்டர் தடைவிதித்திருந்தார்; தாமே கழுவுவதும் முறையான செயல் அன்று. நானாவிதமான கற்பனைகள் மனத்தில் உதித்தன.

91 ஆனாலும், வந்தது வரட்டுமென்று திராட்சைகளை வாயில் போட்டுக்கொண்டார். விதைகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்õ ஒரு சாது வாழும் இடத்தில் எச்சில் விதைகளை எறிந்து அவ்விடத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்த அவர் விரும்பவில்லை.

92 சேட் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார், ''இவர் ஒரு சாது. ஆயினும் எனக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதென்பது இவருக்குத் தெரியவில்லை. ஏன் எனக்கு இவற்றை பலவந்தமாகக் கொடுக்கவேண்டும்?ஃஃ

93 இந்த எண்ணம் அவருடைய மனத்தில் ஓடிக்கொண் டிருந்தபோதே, பாபா அவருக்கு இன்னும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அவையும் விதையுள்ள ஜாதி என்றறிந்த சேட் அவற்றை வாயில் போட்டுக்கொள்ளாமல் கையிலேயே வைத்திருந்தார்.

94 அவருக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதுதான்; ஆயினும், அவை பாபாவின் கையால் கொடுக்கப்பட்டவை. தரம்ஸீ தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை.

95 அவருக்கு திராட்சைகளை வாயில் போட்டுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆகவே, அவற்றைக் கைக்குள் அடக்கிக்கொண்டார். திடீரென்று பாபா சொன்னார், ''அவற்றைத் தின்றுவிடும்.ஃஃ சேட்ஜீ இந்த ஆணையை நிறைவேற்றினார்.

96 ''அவற்றைத் தின்றுவிடும்ஃஃ என்று பாபா சொல்­ முடிக்குமுன்பே சேட் அவற்றைத் தம் வாயில் இட்டுக்கொண்டார். அவையனைத்தும் விதையற்றவையாக இருந்தனõ சேட் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

97 திராட்சைகளில் விதை இல்லாமற்போனது கண்டு, தரம்ஸீ வியப்பிலாழ்ந்து தமக்குத்தாமே சொல்­க்கொண்டார்.

98 ''என்னுடைய மனத்தில் இருந்ததை அறிந்து, இந்த திராட்சைகள் விதையுள்ளனவாகவும் கழுவப்படாதனவாகவும் இருந்தபோதிலும், எனக்கு ஸாயீ கொடுத்தவை விதையற்றனவாகவும் நன்மையளிப்பனவாகவும் இருந்தன.ஃஃ

99 அவர் ஆச்சரியத்தால் செய­ழந்து போனார். பழைய சந்தேகங்களும் எதையும் உரித்துப் பார்க்கும் ஆர்வமும் எங்கோ ஓடி மறைந்தன. அவருடைய அகங்காரம் வீழ்ந்தது; மனத்தில் ஞானியின்மேல் பிரீதி பொங்கியது.

100 ஏற்கெனவே செய்துகொண்ட சங்கற்பங்கள் விலகின. ஸாயீபிரேமை இதயத்தில் பொங்கியது. சிர்டீ செல்லவேண்டுமென்ற ஆவலும், செய்துகொண்ட தீர்மானமும் நல்லதற்காகவே என்று நினைத்தார்.

101 பாபாஸாஹேப் தர்கடும் அப்பொழுது ஸாயீ பாபாவின் அருகில் அமர்ந்திருந்தார். அவருக்கும் சில திராட்சைகள் கிடைத்திருந்தன.

102 ஆகவே தரம்ஸீ அவரைக் கேட்டார், ''உங்களுடைய திராட்சைகள் எப்படி இருந்தன?ஃஃ தர்கட் ''விதையுள்ளவைஃஃ என்று சொன்னபோது சேட் அதிசயத்தால் வியந்துபோனார்.

103 பாபா ஒரு ஞானி என்னும் அவருடைய நம்பிக்கை உறுதியாகியது. மேலும் திடப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கற்பனை அவருடைய மனத்தில் உதித்தது. அவர் தமக்குள்ளேயே சொல்­க்கொண்டார். ''நீர் அசல் சாதுவாக இருப்பின் அடுத்ததாக திராட்சை பெறும் முறை காகாவினுடையதாக இருக்கவேண்டும்.ஃஃ

104 பாபா பல பேர்களுக்கு திராட்சை விநியோகம் செய்துகொண் டிருந்தார். ஆனால், மேற்சொன்ன எண்ணம் சேட்டின் மனத்தில் உதித்தவுடனே, அடுத்த சுற்றைக் காகாவிடமிருந்து ஆரம்பித்தார். சேட் அற்புதம் கண்டார்õ

105 சாது என்பதற்குண்டான இந்த அறிகுறிகளும் பிறர் மனம் அறியும் சக்தியும் தரம்ஸீ சேட்டுக்கு பாபாவை சாதுவாக ஏற்றுக்கொள்ளப் போதுமான முகாந்தரங்களாக அமைந்தன.

106 மாதவராவும் அப்பொழுது அங்கு இருந்தார். விளக்கம் சொல்வது போன்று அவர் பாபாவிடம் சொன்னார், ''காகாவின் யஜமானர் ஒரு சேட் உண்டே -- அவர் இவர்தான்õஃஃ

107 ''யார்? யாரென்று சொன்னாய்? இவர் எப்படிக் காகாவின் யஜமானராக இருக்க முடியும்? காகாவின் யஜமானர் வேறு யாரோ ஆயிற்றேõஃஃ என்று பாபா உடனே பதிலளித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட காகாவின் இதயம் பூரித்தது.

108 இதில் விநோதம் என்னவென்றால், பாபா துனீயருகே நின்றுகொண்டிருந்த ஆப்பா என்று பெயர்கொண்ட ஒரு சமையற்காரரை இந்தக் கே­யில் இழுத்துவிட்டதுதான்.

109 பாபா சொன்னார், ''இந்த சேட் இவ்வளவு தூரம் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இந்த சிரமத்தை இவர் எனக்காகப் படவில்லை. ஆப்பாவின்மேல் கொண்ட பிரேமையால்தான் இவர் சிர்டீக்கு வந்திருக்கிறார்.ஃஃ

110 பேச்சு இந்த ரீதியில் நடந்ததுõ தரம்ஸீ தாம் நிச்சயம் செய்துகொண்டுவந்ததை எல்லாம் விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தம்மிச்சையாகவே விழுந்தார். பிறகு இருவரும் வாடாவிற்குத் திரும்பினர்.

111 மதிய ஆரதி நடந்து முடிந்தது. இருவரும் வீடு திரும்பும் பயணத்திற்குத் தயார் செய்ய ஆரம்பித்தனர். பாபாவிடம் அனுமதி கேட்கும் நேரம் நெருங்கியது. இருவரும் மசூதிக்குச் சென்றனர்.

112 தரம்ஸீ அப்பொழுது காகாவிடம் சொன்னார், ''நான் வீடு திரும்ப அனுமதி வேண்டப் போவதில்லை. அனுமதி உமக்குத்தான் வேண்டும். ஆகவே நீர்தான் அனுமதி கேட்கவேண்டும்.ஃஃ இதைக் கேள்வியுற்ற மாதவராவ் சொன்னார்,--

113 ''காகா வீடு திரும்புவது என்பது நிச்சயமில்லை. ஒரு முழுவாரம் கழிந்தாலொழிய அவருக்கு அனுமதி கிடைக்காது. நீங்களே அனுமதி கேட்பதுதான் நல்லதுõஃஃ

114 ஆகவே, மூவரும் மசூதிக்குச் சென்று அமர்ந்தபோது, அவர்களின் சார்பாக மாதவராவ் அனுமதி கேட்டார். ஆனால், பாபா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அமைதியான மனத்துடன் கவனமாகக் கேளுங்கள்.

115 ''சஞ்சல புத்தியுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய இல்லத்தில் தனமும் தானியங்களும் மற்றப் பொருள்களும் ஸம்ருத்தியாக (ஏராளமாக) நிரம்பிக் கிடந்தன. உட­லும் மனத்திலும் வியாதியோ வெக்கையோ ஏதும் இல்லை. ஆயினும் அவன் உபாதிகளைத் தேடினான்.--

116 ''அவசியமில்லாமல் தலைமேல் பாரத்தை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்; உடனே அதைத் தூக்கிக்கொள்வான். அவனால் மனத்தைச் சலனமில்லாமல் செய்ய முடியவில்லை.--

117 ''அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது. நான் அவனிடம் சொன்னேன், 'உன்னுடைய மனத்தை நிலைபெறச்செய்து ஏதாவதொன்றில் நிறுத்து; அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்õ--

118 '''நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலைபெறச்செய்.ஃஃஃ இந்த வார்த்தைகள் தரம்ஸீயைத் தேள்போல் கொட்டின. அது தமக்காகச் சொல்லப்பட்ட அறிவுரையே என்று புரிந்துகொண்டார்.

119 எத்தனை வைபவங்கள் இருந்தபோதிலும், எக் காரணமும் இன்றிக் கவலையால் பீடிக்கப்பட்டவராகத் தமக்குத் தாமே இன்னல் தேடிக்கொண்டார்.

120 செல்வமும் சமூக கௌரவமும் ஏராளமாக இருந்தும் மனத்தில் அமைதி இல்லை. துக்கங்களையும் இன்னல்களையும் கற்பனை செய்துகொண்டு கவலையில் மூழ்கிவிடுவார்.

121 இந்தக் கதை ஸாயீயின் திருவாய்மொழியாக வெளிவந்தவுடன் சேட்ஜீ மிகுந்த வியப்படைந்தார். இதுதான் என்னுடைய மனோநிலை, என்றெண்ணி மிகுந்த பயபக்தியுடன் இக் கதையைக் கேட்டார்.

122 காகாவுக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்குமென்பது நடக்காத கதை. அதுவும் பிரயாசை இல்லாமலேயே கிடைத்ததுபற்றி தரம்ஸீ சந்தோஷமடைந்தார்.

123 காகா தம்முடனேயே திரும்பிவிடவேண்டுமென்று அவர் விரும்பினார். பாபா இருவருக்கும் அனுமதியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.

124 இதுவும் சேட்ஜீயின் மனத்தில் இன்னுமொரு பணயம். ஆனால், பாபாவுக்கு இது எப்படித் தெரிந்தது? அவர் ஒரு சாதுவென்பதற்கு இது ஒரு முக்கியமான லக்ஷணம் (சிறப்பியல்பு). இதை தரம்ஸீ இப்பொழுது முழுமனத்துடன் ஒப்புக்கொண்டார்.

125 சந்தேகங்கள், அனைத்தும் நிவிர்த்தியாகிவிட்டன. ஸாயீ ஒரு சாதுவென்பது மிகத் தெளிவாகிவிட்டது. அவருடைய மனத்தின் ஓட்டம் எப்படியிருந்ததோ அதற்கேற்றவாறே பாபா அளித்த அனுபவமும் இருந்தது.

126 எந்த எந்த மார்க்கத்தை எவரெவர் கடைப்பிடிக்க விரும்பினார்களோ, அந்த அந்த மார்க்கத்தில் அவரவரை பாபா வழி நடத்தினார். எல்லாருடைய ஆன்மீகத் தகுதிகளும் பாபாவுக்குத் தெரிந்திருந்தது. அதற்கேற்றவாறு அவரவருக்கு ஸாயீயிடமிருந்து ஆன்மீக லாபம் கிடைத்தது.

127 வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். ஸாயீ இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த ஸாயீமாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை.

128 ஆகவே அவர்கள் இருவரும் புறப்படும் சமயத்தில் பாபா காகாவைப் பதினைந்து ரூபாய் தக்ஷிணை கேட்டார். மேலும் அவரிடம் சொன்னார்,--

129 ''எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.--

130 ''நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.--

131 ''பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.--

132 ''அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில் இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன.--

133 ''கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்õ--

134 ''கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான செல்வம் சேர்த்து, அதைப் புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்.ஃஃ

135 ''கொடுக்காதவன் உயர்வதில்லைஃஃ என்னும் மறைமொழியை எல்லாரும் அறிவர். முன்பு கொடுத்தது பாபாவின் எதிரில் நிற்கிறது; ஆகவே அவர் தக்ஷிணை கேட்கிறார்.

136 மஹாவிஷ்ணு ராமாவதாரத்தில் பொன்னாலான கணக்கற்ற பெண்ணுருவப் பிரதிமைகளை தானமாகக் கொடுத்தார். அதன் பலனைக் கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் மடங்காக அனுபவித்தார்.

137 பக்தியும் ஞானமும் பற்றற்ற மனப்பான்மையும் இல்லாதவன் தீனன். அவனை முத­ல் பற்றற்ற மனப்பான்மையில் நிலைநிறுத்திய பிறகே, ஞானத்தையும் பக்தியையும் அளிக்க வேண்டும்.

138 பாபா மக்களை தக்ஷிணை கொடுக்கவைத்தது, சிறிதளவாவது பற்றற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்காகவே. பின்னர் அவர்களை பக்திப் பாதையில் செலுத்தி ஞானபண்டிதர்களாகவும் ஆக்குகிறார்.

139 ''நாம் ஏற்றுக்கொள்வதைப் போலப் பத்துமடங்காகத் திருப்பிக் கொடுத்துக் கொஞ்சங்கொஞ்சமாக ஞானமார்க்கத்தில் திருப்புவதைத் தவிர வேறென்ன நம்மால் செய்யமுடியும்?ஃஃ (பாபா)

140 ஏற்கெனவே செய்துகொண்ட தீர்மானத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் தம்மிச்சையாகவே சேட்ஜீ பாபாவின் கையில் பதினைந்து ரூபாய் தக்ஷிணை வைத்தார். அபூர்வமான செய்கைõ

141 'நான் முன்பு பிதற்றியதெல்லாம் வியர்த்தம். நான் நேராக வந்ததே நல்ல செய்கை. என்னுடைய நேரிடையான அனுபவத்தின் மூலமாக சாதுக்கள் எவ்வகையானவர்கள் என்பதை எனக்கு நானே போதித்துக்கொண்டேன். --

142 'சரியாகவும் திடமாகவும் சிந்தனை செய்யாது, இங்கு வரத் தேவையில்லை என்றும் வணக்கம் செலுத்தவேண்டா என்றும் நினைத்தேன். கடைசியில் அதை விருப்பப்பட்டே செய்தேன்õ சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ள
முடியாதவைõ--

143 'எந்நேரமும் 'அல்லா மா­க்ஃ என்று உச்சாரணம் செய்துகொண் டிருப்பவரால் சாதிக்க முடியாதது என்ன? ஆயினும், சாதுக்கள் செய்யும் அற்புதங்களைக் காணவே நான் விரும்பினேன்.--

144 'ஓ, என் தீர்மானம் விருதாவாகப் போய்விட்டது. என் போன்ற ஒரு மனிதருக்கு நமஸ்காரம் செய்தேன். அவர் கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தேன்.--

145 'என்னுடைய தற்புகழ்ச்சி அனைத்தும் வீண்õ நானாகவே ஸாயீயின் பாதங்களைப் பூஜிக்கும் பா(ஆஏஅ)வத்துடன் வணங்கினேன். இதைவிடப் பெரிய அற்புதம்
உண்டோ?--

146 'ஸாயீயின் திறமையை நான் எவ்வாறு விவரிப்பேன்? இவையனைத்திற்கும் காரணகர்த்தா அவரேயானாலும், வெளிப்பார்வைக்கு எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் காட்சியளிக்கிறார். இதைவிடப் பெரிய அதிசயம் என்ன இருக்கமுடியும்?--

147 'ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய ஸாயீ எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.--

148 'பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம்

149 மனத்தில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், ஸாயீ அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது ஸாயீயின் அற்புதமான சக்தி.

150 ஆகவே, ஸாயீயின் உதீ பிரசாதத்தையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு இருவரும் பம்பாய் திரும்பினர். விவாதங்கள் அனைத்தும் ஓய்ந்தன. ஸாயீயினுடைய கியாதி எப்படியிருந்தது என்றால்,--

151 சிர்டீயி­ருந்து புறப்படுவதற்குமுன் அவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஸாயீயின் ஆக்ஞையைத் தாண்டுவது விக்கினங்களுக்கு அழைப்பு விடுவதாகும்.

152 உம்முடைய இஷ்டம்போல் சிர்டீயி­ருந்து திரும்பினால், வழியில் கடக்கமுடியாத இன்னல்கள் தோன்றும்; கடைசியில் வெட்கமும் அனுதாபமுந்தான் மிஞ்சும்.

153 சிர்டீயி­ருந்து திரும்புவதென்பது மேற்சொன்னவாறே; எங்களுடைய கதியும் அதுவே. ''நான் அழைக்காமல் எவரும் இங்கு வருவதில்லை.ஃஃ இது பாபாவின் திருவாய்மொழி.

154 ''என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்? தம்மிச்சையாகவே யார் சிர்டீக்கு தரிசனம் செய்ய வரமுடியும்?ஃஃ

155 நம்முடைய ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான ஸமர்த்த ஸாயீயின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.

156 சிர்டீக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் இதுவே விதிமுறை. ஸாயீயின் மனம் மகிழாமல், திரும்பிச் செல்வதற்கு அனுமதி கிடைக்காது; உதீயும் கிடைக்காது.

157 அவரை நமஸ்காரம் செய்து அனுமதி வேண்டும்போது அவர் உதீயுடன் ஆசியும் அளிப்பதே அனுமதி கொடுப்பதற்கு ஒப்பாகும்.

158 இப்பொழுது விபூதியின் ஒரு நவீனமான அனுபவத்தையும் நெவாஸ்கரின் பக்திப் பிரபாவத்தையும் மஹானுபாவரான ஸாயீயின் கிருபையையும்பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.

159 பாந்த்ராவில் வாழ்ந்துவந்த காயஸ்தப் பிரபு ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தார் ஒருவரால் எவ்வளவு முயன்றும் இரவில் சுகமாகத் தூங்கமுடியவில்லை.

160 கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்கும்போது, காலஞ்சென்ற அவர் தந்தை கனவில் தோன்றி அவரை தினமும் தூங்கமுடியாமல் செய்வார்.

161 நல்லதும் கெட்டதுமான பழைய சங்கதிகளையெல்லாம் ஞாபகப்படுத்தி சாபங்களாலும் வசைமொழியாலும் அவரைத் துளைப்பார். ரகசியமானதும் பலகோணங்களுள்ளதும் பீடைபிடித்ததுமான விஷயங்களைக் கடுமையான இகழ்மொழியில் கொட்டுவார்.

162 ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் இந்தப் பிரசங்கம் நடந்து, அவருடைய தூக்கத்தைப் பாழ்படுத்தியது. இந்த இன்னலை அவரால் தாங்கவும் முடியவில்லை; தவிர்க்கவும் முடியவில்லை.

163 இந்த மனிதர் மேற்சொன்ன இன்னலால் வதைபட்டார்; விடுபட வழி தெரியவில்லை. ஆகவே, நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்று தம் நண்பர் ஒருவரை அவர் ஆலோசனை கேட்டார். (நண்பர் ஸாயீபக்தர்)

164 ''என்னைப் பொறுத்தவரை மஹானுபாவரான ஸாயீ மஹராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் உதீயை ஏற்றுக்கொண்டால், அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும்.ஃஃ

165 எப்படி எப்படி ஸாயீ பக்தர் சொன்னாரோ, அப்படி அப்படியே அவரும் செய்தார். அவருடைய அனுபவமும் அவ்வாறே இருந்தது. மறுபடியும் தந்தை கனவில் தோன்றவேயில்லை.

166 விதிவசத்தாலும் நற்செய­ன் விளைவாகவும், ஆலோசனை கேட்ட நண்பர் ஒரு ஸாயீபக்தர். உதீயின் விசித்திரமான மஹிமையைப்பற்றி விவரித்துவிட்டுச் சிறிதளவு அவருக்கு அளிக்கவும் செய்தார்.

167 ஸாயீபக்தர் சொன்னார், ''படுக்கப்போவதற்குமுன் சிறிது உதீயை நெற்றியில் பூசிக்கொள்ளவும், மீதியை ஒரு பொட்டலமாகத் தலையணையின் அருகில் வைத்துக்கொள்ளவும். ஸ்ரீஸாயீயை மனத்தில் வைக்கவும்.--

168 ''பக்திபா(ஆஏஅ)வத்துடன் உதீயை அணுகவும். பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்ன­­ருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே.ஃஃ

169 மேற்சொன்ன செயல்முறையை அனுசரித்து, அன்றிரவு அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும் கிட்ட நெருங்கவில்லை; அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.

170 அந்த ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்õ அவர் உதீ பொட்டலத்தைத் தலையணையின் அருகிலேயே எப்பொழுதும் வைத்துக்கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே இருந்தார்.

171 பின்னர், பாபாவின் நிழற்படம் ஒன்றை வாங்கி வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில் அப்படத்தை மாட்டி பயபக்தியுடன் பூஜை செய்தார்.

172 தினமும் அப்படத்தை தரிசனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மானசீகமாகப் பூஜை செய்து ஒவ்வொரு வியாழனன்றும் பூமாலை சாத்தி வணங்கினார். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது.

173 இந்த நியமநிஷ்டையைக் கடைப்பிடித்து எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெற்றார். தூக்கமில்லாத இரவுகள், கெட்ட கனவுகள் பற்றியெல்லாம் மறந்தே போனார்.

174 இந்த சம்பவம் உதீயின் ஓர் உபயோகம். இன்னும் பெரிய அற்புதமான உபயோகமொன்றை விவரிக்கிறேன். மிக சங்கடமான சூழ்நிலையில் பிரயோகம் செய்யப்பட்டபோது, நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த சம்பவம் அது.

175 பாலாஜீ பாடீல் நெவாஸ்கர் என்று பெயர்கொண்ட தீவிர ஸாயீபக்தர் ஒருவர் இருந்தார். உலகம் காணாத வகையில் உடலுழைப்பால் பாபாவுக்கு சேவை செய்தவர் அவர்.

176 சிர்டீ கிராமத்தின் முகப்புச் சாலைகளையும் பாபா தினசரி நடந்துசென்ற லெண்டிக்குச் செல்லும் சாலையையும் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை அவர் செய்துவந்தார்.

177 அவருக்குப் பிறகு அந்த ஸேவை, அதே செயல்முறையில், உலகியல் வழக்கில் காணமுடியாத அளவிற்குத் திறமைவாய்ந்த ராதாகிருஷ்ணபாயீ என்னும் பெண்மணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

178 மக்களால் வணங்கப்படும் பிராமண குலத்தில் பிறந்தவராயினும், 'இந்த ஈனமான வேலையை நான் செய்வது தகாதுஃ என்னும் முட்டாள்தனமான எண்ணம் அப் பெண்மணியின் தூய்மையான மனத்தில் உதிக்கவேயில்லை.

179 விடியற்காலையில் எழுந்து கையில் துடைப்பத்தை ஏந்தி பாபா நடமாடக்கூடிய அனைத்துச் சாலைகளையும் தாமே பெருக்கிச் சுத்தம் செய்வார். அவருடைய சேவை போற்றுதற்குரியதுõ

180 அவருடைய வேலை எவ்வளவு வேகம்; எவ்வளவு சுத்தம்õ அந்தப் பணியில் அவருக்கு நிகர் யார்? சில காலம் கழித்து அப்பணியை அப்துல் ஏற்றுக்கொண்டார்.

181 உலகியல் வாழ்வில் இருந்தும், அதில் ஒட்டாது தாமரையிலைத் தண்ணீரைப்போல் வாழ்ந்துவந்த நெவாஸ்கர் மஹாபாக்கியசா­. அவருடைய தியாகத்தை விளக்கும் இப் பகுதிக் காதையைக் கேளுங்கள்.

182 வயல்களில் அறுவடை முடிந்தவுடன், மொத்த தானிய மகசூலையும் மசூதிக்குக் கொண்டுவந்து வெளிமுற்றத்தில் அம்பாரமாகக் குவித்துவிட்டு பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடுவார்.

183 பாபாவே தம்முடைய உடைமைகள் அனைத்திற்கும் யஜமானர் எனக் கருதித் தாமும் தம்முடைய குடும்பமும் பிழைப்பதற்குத் தேவையான அளவிற்கு பாபா கொடுத்ததை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார்.

184 பாபா ஸ்நானம் செய்ததும், கை கால் முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார்.

185 நெவாஸ்கர் ஜீவிதமாக இருந்தவரை இந்தச் செயல்முறை (மகசூல் சமர்ப்பணம்) உடையாமல் தொடர்ந்தது. நெவாஸ்கரின் அன்பான மகனும் இதைத் தொடர்ந்து வருகிறார்; ஆனால் பகுதியாக மட்டுமே.

186 பாபா தேஹவியோகம் அடையும்வரை மகனும் தானியம் அவ்வப்பொழுது அனுப்பினார். அந்தச் சோளத்தை உபயோகித்துச் செய்த ரொட்டியையே பாபா ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் உண்டார்.

187 ஒருநாள் நெவாஸ்கரின் வருடாந்திர சிராத்த தினம் (ஈமக்கடன் செய்யும் நாள்) வந்தது. உணவு சமைக்கப்பட்டுத் தயாராகியது; பரிசாரகர்கள் பரிமாற ஆரம்பித்தனர்.

188 எதிர்பார்க்கப்பட்ட விருந்தினர்களுக்குத் தேவையான உணவு சமைக்கப்பட்டிருந்தது. ஆயினும் பரிமாற ஆரம்பித்தபோது எதிர்பார்க்கப்பட்டதுபோல் மூன்று மடங்கு விருந்தாளிகள் வந்திருப்பது தெரிந்தது.

189 நெவாஸ்கரின் மருமகள் கதிகலங்கிப்போனார். தம் மாமியாரிடம் (பாலாஜீ பாடீல் நெவாஸ்கரின் மனைவியிடம்) தம்முடைய பயத்தை மெல்­ய குர­ல் கிசுகிசுத்தார், 'நாம் இந்த சங்கடத்தி­ருந்து விடுபடுவது எப்படி?ஃ

190 மாமியாருக்கு பாபாவிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. ''ஸமர்த்த ஸாயீ நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்போது நமக்கென்ன கவலை? பயப்படாதேஃஃ என்று மாமியார் தைரியம் சொன்னார்.

191 இவ்வாறு மருமகளுக்கு தைரியம் அளித்துவிட்டு, மாமியார் ஒரு பிடி உதீயை எடுத்துக்கொண்டுபோய் உணவு சமைத்து வைத்திருந்த எல்லாப் பாத்திரங்களிலும் கொஞ்சங்கொஞ்சம் தூவிவிட்டு அவையனைத்தையும் துணியால் மூடிவிட்டார்.

192 பிறகு அவர் சொன்னார், ''குஷியாக உணவை எடுத்துப் பரிமாறு. எந்தப் பாத்திரத்தையும் முழுவதும் திறக்காதே. உணவை முகப்பதற்குத் தேவையான அளவிற்குத் திறந்து, உடனே துணியால் மூடிவிடு. இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் நீ உஷாராகச் செயல்படவேண்டும்.--

193 ''இவ்வுணவு அனைத்தும் ஸாயீயின் இல்லத்து அன்னம்; ஒரு பருக்கையும் நம்முடையதன்று. அவமானம் வாராமல் காப்பவர் அவரே; பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டால் அதுவும் அவருடையதே; நம்முடையதன்றுõஃஃ

194 அந்த மாமியாரின் நிச்சயமான நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவருடைய அனுபவமும் ஆயிற்று. எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படவில்லை. எல்லா விருந்தினர்களுக்கும் திருப்தியடையும்வரை உணவளிக்க முடிந்தது.

195 வந்தவர்கள் அனைவரும் விருந்துண்டு திருப்தியடைந்தனர். எல்லாம் நன்றாக நடந்துமுடிந்த பின்னரும் பாத்திரங்கள் முன்பு இருந்ததைப் போலவே உணவால் நிறைந்திருந்தனõ

196 உதீயின் பிரபாவம் இதுவே. ஞானிகளுக்கு இதெல்லாம் ஸஹஜமான சுபாவம். பக்தனைப் பொறுத்தவரை, பா(ஆஏஅ)வம் எப்படியோ அப்படியே அனுபவம்.

197 உதீயின் மஹிமையையும் நெவாஸ்கரின் ஆழமான பக்தியைப்பற்றியும் பேசும்போது, இன்னுமொரு காதை எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அதை ஆடாத அசையாத மனத்துடன் கேளுங்கள்.

198 பிரதமமான கதையி­ருந்து பாதைமாறிச் செல்கிறேனோ என்னும் சிறிய சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், அவ்வாறாகவே இருந்தாலும், அக் கதையை இந்த சந்தர்ப்பத்தில் அளிக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

199 அவ்வாறு மனத்தில் முடிவெடுத்துவிட்டதால், இப்பொழுது அக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். அது இடம் மாறியிருக்கிறது என்று கதைகேட்பவர்கள் நினைத்தால், என்னை மன்னித்துவிட வேண்டுகிறேன்.

200 சிர்டீ கிராமவாசியான ரகு பாடீல் என்பவர் ஒரு சமயம் நெவாஸா கிராமத்திற்குச் சென்று பாலாஜீ பாடீல் நெவாஸ்கரின் விருந்தாளியாக அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார்.

201 ஒருநாள் இரவு, மாடுகள் எல்லாம் தறியில் கட்டப்பட்டிருந்த நேரத்தில், மாட்டுக் கொட்டகைக்குள் ஒரு நல்லபாம்பு புகுந்து 'புஸ்ஃ என்று சீறியது.

202 இந்த ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்ட அனைவரும் என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர். பாம்போ படமெடுத்த நிலையில் அங்கு சுகமாக அமர்ந்துகொண்டது.

203 மாடுகளோ நிலைகொள்ளாது கட்டுத்தறியி­ருந்து விடுவித்துக்கொள்ள முயன்றன. ஆயினும் வந்திருப்பது ஸாயீயே என்று நெவாஸ்கர் தீவிரமாக நம்பினார்õ

204 மாடுகளை அவிழ்த்துவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. மாடுகளில் ஒன்று தப்பித்தவறி பாம்பை மிதித்துவிட்டால் பெரும் நாசம் விளையும்.

205 தூரத்தி­ருந்து புஜங்கத்தைப் பார்த்த நெவாஸ்கர், தலைகால் புரியாமல் மகிழ்ச்சியடைந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. நல்லபாம்பை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

206 ''புஜங்க ரூபத்தில் பாபா நமக்குப் பேட்டி அளிக்க வந்திருப்பது ஸாயீயின் கிருபா கடாட்சமேஃஃ என்று சொன்னார். பிறகு, பாம்பிற்கு ஒரு கிண்ணம் நிறையப் பால் கொண்டுவந்தார்.

207 அணுவளவும் பயமில்லாமல் இருப்பதற்கு நெவாஸ்கருக்கு எவ்வளவு பக்தியும் விசுவாசமும் இருந்திருக்கவேண்டும்? அவர் நல்லபாம்பிடம் என்ன சொன்னார் என்பதை சாவதானமாகக் கேளுங்கள்õ

208 ''பாபா, ஏன் இப்படிக் கோபமாகப் புஸ்ஸென்று சீறுகிறீர்கள்? எங்களை பயமுறுத்தப் பார்க்கிறீர்களா என்ன? எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தக் கிண்ணத்தில் உள்ள பாலை நிம்மதியாக அருந்துங்கள்.ஃஃ

209 பாம்பிற்கு ஒரு கிண்ணம் பால் போதுமா? ஆகவே நெவாஸ்கர் ஒரு பெரிய பாத்திரம் நிறையப் பாலைக் கொண்டுவந்து பயமின்றிப் பாம்புக்கெதிரில் வைத்தார். உண்மையில் பயம் என்பது மனத்தில் உற்பத்தியாவதுதானேõ

210 பால் நிரம்பிய பாத்திரத்தைப் பாம்புக்கெதிரில் வைத்துவிட்டு, நெவாஸ்கர் அகலாதும் அணுகாதும் பழைய இடத்திற்குப் போய் உட்கார்ந்துகொண்டார். அகமும் முகமும் மலர்ந்து பாம்பைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்.

211 பாம்பு நுழைவது பீதியைத்தான் அளிக்கும். ஆயினும், இச் சம்பவத்திற்கு எல்லாருடைய பிரதிப­ப்பும் ஒரே மாதிரியாக இருக்குமா என்ன? இந்த ஆபத்தி­ருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் திகைத்துப்போய், எல்லாரும் விசாரமடைந்தனர்.

212 'நாம் வெளியே சென்றால் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துவிடும். அங்கிருந்து பாம்பு வெளியே வருவது கடினம்ஃ என்று நினைத்து எல்லாரும் அங்கேயே காவலாக உட்கார்ந்திருந்தனர்.

213 மாட்டுக்கொட்ட­ல் இருந்த பாம்பு திருப்தியடைந்தது. யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஓடி மறைந்தது. யாருக்குமே பாம்பு எங்கே சென்றதென்று தெரியவில்லை. எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

214 பிறகு அவர்கள் மாட்டுக்கொட்டில் முழுவதும் தேடினர்; பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நெவாஸ்கர் ஒருவரைத் தவிர மற்றவரெல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நெவாஸ்கருக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்தது.

215 மனக்குறை என்னவென்றால், பாம்பு மாட்டுக்கொட்டி­ல் நுழைவதைப் பார்த்தது போலவே வெளியே சென்றதையும் பார்க்கமுடியவில்லையே என்பதுதான்õ

216 நெவாஸ்கருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். குழந்தைகள் எல்லாரும் இளம் பிராயத்தினர். அவ்வப்பொழுது குடும்பத்தினர் அனைவரும் நெவாஸாவி­ருந்து சிர்டீக்கு தரிசனம் செய்ய வந்தனர்.

217 நெவாஸ்கரின் இரண்டு மனைவிகளுக்கும் பாபா புடவைகளும் ரவிக்கைத் துணிகளும் வாங்கிக் கொடுத்து அவர்களை ஆசீர்வாதம் செய்வார். இவ்விதமாக வாழ்ந்த பாலாஜீ நெவாஸ்கர் சிறந்த பக்தர்.

218 இந்த ஸத் சரித்திரத்தின் பாதை எளிமையானது; நேர்மையானது. இது படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயீõ ஆகவே, ஸாயீயும் அங்கு நிச்சயம் வாசம் செய்கிறார்.

219 அவ்வாறே அங்கும் கோதாவரிக்கரை இருக்கிறது. அருகில் சிர்டீ கிராமமும் இருக்கிறது. அவ்விடத்திலேயே துனீயருகில் ஸாயீ அமர்ந்திருக்கிறார்; அவரை நினைப்பவர்களை சங்கடங்களி­ருந்து விடுவிக்கும் ஸாயீõ

220 எங்கு ஸாயீ ஸத் சரித்திரம் படிக்கப்படுகிறதோ, அங்கு ஸாயீ எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடனும் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(ஆஏஅ)வங்களுடனும் அங்கு வாசம் செய்வார்.

221 ஆத்மானந்தத்தில் திளைக்கும் ஸாயீயை மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தவங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை.

222 அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும்
நிறைவேறும்;--

223 அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்; வாழ்க்கையில் நிறைவு பெறுவர். உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் குஹ்யமாக மறைந்திருக்கும் அர்த்தங்கள் அவர்களுக்கு வெளிப்பாடாகும்.

224 உதீயின் சம்பந்தம் அவர்களுடைய பஞ்சமஹா பாவங்களையும் அவற்றைச் சார்ந்த கிளைப்பாவங்களையும் ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கிவிடும். உள்ளும் புறமும் தூய்மையடையும்.

225 விபூதி தரிப்பதின் மஹிமை பக்தர்களுக்கு நன்கு தெரிந்ததேõ கதை கேட்பவர்களுடைய மங்களத்திற்காகவே விபூதி வர்ணனை இவ்வளவிற்கு நீண்டது.

226 ஆயினும், நீண்ட வர்ணனை என்று சொல்வதும் பொருத்தமாகாது. எனக்கே அது முழுமையாகத் தெரியாத நிலையிலும், நான் கதை கேட்பவர்களுடைய நன்மை கருதி சுருக்கமாகச் சொல்­யிருக்கிறேன்.

227 கதை கேட்பவர்களுக்கு இதுவே என் பிரார்த்தனை. ஸாயீயை வழிபடுங்கள்; உங்களுடைய அனுபவத்தை நீங்களே காணலாம். என்னுடைய பேச்சை ஒருமுறையாவது கேளுங்கள்õ

228 இங்கு காரணவாதமும் தர்க்கமும் செல்லாது; பூஜிக்க வேண்டுமென்ற பா(ஆஏஅ)வமே தேவை. புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது; உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது.

229 சிரத்தையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் ஞானிகளிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள். சுத்தமான பா(ஆஏஅ)வம் உடையவரே ஞானம் பெறுவார்.

230 கதையில் ஏதாவது குறைபாடுகள் நுழைந்திருந்தால், அவற்றையும் ஸாயீ எனக்களித்த அருள்வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே கருதி, இந்த ஸத் சரித்திரத்தைப் படிக்கும்போது தெரியும் தோஷங்களை ஒருபொருட்டாகக் கருதாது விட்டுவிடுங்கள்.

231 இந்த ஸத் சரித்திரத்தை ரசித்து வாசிப்பவர்களின் இதயத்தில், எப்பொழுதும் கருணை ததும்பிவழியும் ஸாயீயின் நிஜமான சொரூபம், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் வகையில் ஸ்தாபிதம் ஆகட்டும் (நிலைபெறட்டும்).

232 கோவா எங்கே இருக்கிறது? சிர்டீ எங்கே இருக்கிறது? அங்கு நடந்த திருட்டைப் பற்றிய சுவாரசியமான கதையை ஆதியி­ருந்து அந்தம்வரை விவரமாக ஸாயீ எடுத்துரைத்தார். அடுத்ததாக அதைச் சொல்கிறேன்.

233 ஆகவே, ஹேமாட் மனப்பூர்வமாக ஸாயீ பாதங்களில் பணிகிறேன். கதை கேட்பவர்களை பயபக்தியுடன் கேட்கும்படி பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்ஃ என்னும் முப்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play