TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
அத்தியாயம் - 44
44. மஹாஸமாதி (மூன்றாம் பகுதி)
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 பிரபஞ்சம் அனைத்தும் வியாபித்திருக்கும் தெய்வீகப் பேருணர்வேõ சகல சௌக்கியங்களின் அடித்தளமேõ சகல சம்பத்துகளின் களஞ்சியமேõ கிருபை கூர்ந்து வறுமையை ஒழிப்பவரேõ ஓம் நமோ ஸ்ரீ ஸாயீõ
2 ஒரு தடவை உமது பாதங்களை வந்தனம் செய்தாலே எல்லாப் பாவங்களும் அழிந்துபோகின்றன. இவ்வாறிருக்கையில், பா(ஆஏஅ)வத்துடன் பஜனையும் பூஜையும் செய்பவர்-ஆஹாõ எவ்வளவு பாக்கியவான் ஆகிவிடுவார்õ
3 எவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்தால் எல்லா சம்சார துக்கங்களும் மறந்துபோகின்றனவோ, பசியும் தாஹமும் அப்பொழுதே அங்கேயே தணிந்துவிடுகின்றனவோ, அவருடைய தரிசனம் அற்புதமானதன்றோõ
4 எந்நேரமும் 'அல்லா மாக்ஃ தியானம் செய்பவர், ஆசைகளோ அபிமானமோ இல்லாதவர், மனத்தில் பேராசையோ வாசனைகளோ (பூர்வஜன்ம அனுபவங்களால் ஏற்பட்ட பற்றுகள்) இல்லாதவர்- அவருடைய மஹிமையை யான் எங்ஙனம் வர்ணிப்பேன்?
5 கேடு செய்தவர்களுக்கும் நன்மை செய்யுமளவிற்கு சாந்தி எவருடைய மேல்துண்டிலும் இருக்கிறதோ, அவரை ஒருகணமும் மறக்கலாகாது. அவரை இதயத்தில் குடிவைத்துத் தியானம் செய்யவேண்டும்.
6 ராமனும் கிருஷ்ணனும் தாமரைக்கண் படைத்தவர்கள். ஞானிகளுக்கோ ஒரு கண் இருக்கலாம்; கண்களே இல்லாமலும்1 இருக்கலாம். தேவர்கள் உருவத்தில் சுந்தர சொரூபமானவர்கள்; ஞானிகளோ ஆனந்த சொரூபமானவர்கள்.
7 தேவர்களின் பார்வைக்கும் கேள்விக்கும் (அருள் வீச்சுக்கு) ஓர் எல்லையுண்டு. ஞானிகளின் கடைக்கண்பார்வைக்கு முடிவென்பது இல்லை. 'யார் எங்களை எவ்வாறு அணுகுகின்றனரோ, அவ்வாறே அவர்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்ஃ என்பது தேவர்களின் கூற்று. ஞானிகளோ நிந்தனை செய்பவர்களுக்கும் கருணை காட்டுவர்õ
8 ராமன், கிருஷ்ணன், ஸாயீ. இம்மூவருள் பேதம் ஏதுமில்லை. பெயர்கள் மூன்றாயினும் வஸ்து (பொருள்) ஒன்றுதான். காலத்தால் வேறுபடினும் இம் மூவரும் ஒருவரேõ
9 இந்த வஸ்துவுக்கு மரண அவஸ்தை உண்டு என்று சொல்லுவது அடியோடு மாயை. காலனை வென்றவர்களை மரணம் எப்படித் துன்புறுத்த முடியும்?
10 பிரார்த்தம்1 (ப்ராரப்தம்) என்றாலோ, ஸஞ்சிதம்2 என்றாலோ, என்னவென்று யான் அறியேன். கிரியமாணம்3 என்றாலும் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆயினும், குருராஜரான ஸாயீ கருணாகரர் என்பது நன்கு தெரியும். அவரிடம் கருணை வேண்டவும் தெரியும்.
11 வாசனைகளின் அலைகள் நானாவிதமாகப் பொங்குவதால் மனம் சாந்தியடையமாட்டேன் என்கிறது. தேவரீர் கருணை காட்டாவிடின் இந்த ஜீவன் நிலைகொள்ளாது.
12 கடந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அளித்த வாக்கை என்னால் பாலனம் (பாதுகாப்பு) செய்யமுடியவில்லை. ஆகவே, விவரணம் நிறைவடையவில்லை. ஆதியிருந்து அந்தம்வரை இப்பொழுது சம்பூர்ணமாகக் கேளுங்கள்.
13 அந்திமகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்து ஒரு பிராமணரை ராமாயணம் வாசிக்கச் சொல், பதினான்கு நாள்கள் இரவுபகலாக இடையறாது பாபா செவிமடுத்தார்.
14 இவ்வாறு இரண்டு ராமாயண ஸப்தாஹங்கள் கேட்டு முடிந்த பிறகு, விஜயதசமி நாளன்று பாபா பூதவுடலை உதிர்த்தார்.
15 பாபா உயிர்நீத்த பிறகு லக்ஷ்மண் மாமா பூஜை செய்ததும் ஜோக்(எ) நீராஞ்ஜன ஆரதி செய்ததும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன.
16 அதன் பிறகு, பாபாவின் பூதவுடலுக்கு எங்கு, எவ்வாறு நற்கதி அளிப்பது என்பதுபற்றிய பேச்சுவார்த்தை இந்துக்களுக்கும் முஸல்மான்களுக்கும் இடையே 36 மணி நேரம் நிகழ்ந்தது.
17 ஸமாதி செய்யப்படவேண்டிய இடம் முன்கூட்டியே (பாபாவால்) திட்டமிடப்பட்டது பற்றியும், எதிர்பாராதவிதமாக செங்கல் கீழே விழுந்து உடைந்த சங்கதியும், பாபா ஒருசமயம் மூன்று நாள்களுக்கு நிர்விகல்ப ஸமாதியில் ஆழ்ந்த விஷயமும்,--
18 அது ஸமாதி நிலையா மரணமா என்று எல்லாரும் சந்தேகப்பட்டதுபற்றியும், சுவாசம் நின்றுபோனதைக் கண்டு மீண்டும் உயிர்பெறுதல் நடக்காத காரியம் என்று அனைவரும் தீர்மானம் செய்த விவரமும்,--
19 அவ்வாறு மூன்று நாள்கள் கழிந்த பிறகு பாபா மரணமடைந்துவிட்டார் என்ற முடிவுக்கு அவர்கள் வந்ததும், உத்தரகிரியைபற்றிய பேச்சு சமத்த (எல்லா) மக்களிடையே இயல்பாக எழுந்ததும்,--
20 அவ்வாறான சூழ்நிலையிலும் உள்ளுக்குள் விழிப்புணர்வுடன் இருந்த பாபா, மீண்டும் தேஹவுணர்வு பெற்று மக்களின் கவலையை அகற்றியதும், இப்பொழுது விரிவாக எடுத்துரைக்கப்படும்.
21 கதைகேட்பவர்களேõ இந்தக் கதைகள் அனைத்தையும் கேட்கும்போது பிரேம பா(ஆஏஅ)வத்துடன் கேளுங்கள். கேட்கும்போது உணர்ச்சி தொண்டையை அடைக்கும்; உங்களுடைய சித்தம் ஆனந்தமடையும்.
22 இவை வெறும் கதைகளல்ல. ஸாயீ என்னும் விலைமதிப்பற்ற ரத்தினத்தைக் கர்ப்பத்தில் வைத்திருக்கும் பெட்டகம். பிரேமபூர்வமாகத் திறந்து உள்ளே பாருங்கள்; சுகத்தை அளிக்கும் தரிசனத்தை அனுபவியுங்கள்.
23 இந்த அத்தியாயங்களுக்குள் ஸாயீநாதர் பூரணமாக நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். காதுகொடுத்துக் கேட்டால், மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். நினைவுக்குக் கொண்டுவருவதால், நாதன் (காப்பாற்றுவோன்) உடையவர்கள் ஆவீர்கள்.
24 பரம உதாரத்துவத்துடன் (பெருங்கொடைத்தன்மையுடன்) எவர் நடந்துகொண்டாரோ அந்த ஸாயீயின் சரித்திரம் இது. பிரேமையுடனும் ஒருமுகப்பட்ட மனத்துடனும் கேட்பதற்குத் தயாராகுங்கள்.
25 இந்தப் புனிதமான கதைகளைக் கேட்கும் பக்தர்களின் மனம் திருப்தியடையாது. காரணம், கதை கேட்கும்போது உலகவாழ்வின் அல்லல்களிருந்து விடுபட்டு இளைப்பாறி ஆனந்தத்தால் நிரம்புகின்றனர் அல்லரோõ
26 மலர்ந்த மனத்தின் மகிழ்ச்சியும் சுயானந்தமும் அவர்களை எதிர்கொள்கின்றன. சர்வ சுகங்களிலும் மேன்மையான, தூய்மையான சுகம் ஸாயீயின் கதைகள்.
27 எத்தனை தடவைகள் கேட்டாலும் தினமும் ஒரு நூதனம் (புதுமை) தென்படுகிறது. ரமணீயமான விஷயங்களுக்கு இதுவே அடையாளம். ஆகவே, இந்த ஞானியின் புனிதமான கதையை வேறெதிலும் நாட்டமின்றிக் கவனத்துடன் கேளுங்கள்.
28 இவ்வாறாக, பூதவுடலுக்கு நற்கதியளிப்பதுபற்றி வாதித்து, வாதித்து அனைவரும் களைப்படைந்தனர். கடைசியில் என்ன நடந்ததென்று பாருங்கள்.
29 புட்டீ வாடாவின் பெரிய கூடத்தில் முரளீதரர் சிலையை ஸ்தாபனம் செய்வதற்காகக் கட்டப்பட்டிருந்த கர்ப்பக்கிருஹம் பாபாவின் தலம் என்று முடிவுசெய்யப்பட்டது.
30 ஒருகாலத்தில், கட்டடத்திற்கு அஸ்திவாரம் போடும் வேலை நடந்துகொண் டிருந்தது. அச்சமயம் பாபா லெண்டிக்குப் போனபொழுது மாதவராவ் (சாமா) விநயத்துடன் விடுத்த வேண்டுகோளுக்கு பாபா தலையசைத்து அங்கீகாரம் அளித்தார்.
31 முரளீதரர் சிலையை ஸ்தாபனம் செய்ய கர்ப்பக்கிருஹ (கருவறை) வேலை நடந்துகொண் டிருந்தபோது மாதவராவ் ஒரு தேங்காயை பாபாவின் கையில் வைத்து, அவருடைய அருட்பார்வையை அதன்மேல் செலுத்தும்படி வேண்டினார்.
32 அது சுபமுஹூர்த்த வேளை என்றறிந்து பாபா சொன்னார், ''தேங்காயை உடை. நாமும் சமத்த (அனைத்து) பாலகோபாலர்களும் (குழந்தைகளும்) இவ்விடத்திலேயே காலத்தைக் கழிப்போம்.--
33 ''மேலும், இங்கு நாம் உட்கார்ந்து, எழுந்து, நடமாடும்போது நம்முடைய சுகதுக்கங்கள்பற்றி உரையாடுவோம். இவ்விடத்திலேயே ஆண் பெண் அனைத்து மக்களும் மன அமைதி பெறுவர்.ஃஃ
34 பாபா இதைச் சொன்ன காலத்தில், ஏதோ பேசவேண்டுமென்பதற்காக பாபா இவ்வாறு பேசினார் என்றே அனைவரும் நினைத்தனர். பிற்காலத்தில் நேரிடை அனுபவம் ஏற்பட்டபோது அவ் வார்த்தைகளின் சூக்குமப் பொருளைப் புரிந்துகொண்டனர்.
35 பாபா காலமானதால் முரளீதரர் சிலை ஸ்தாபனம் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக ஸாயீ என்னும் பொக்கிஷத்தைப் பாதுகாக்க அவ்விடமே உத்தமமான தலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
36 ''இந்த சரீரத்தை வாடாவில் வையுங்கள்ஃஃ என்ற பாபாவின் கடைசி உத்தரவே இறுதி முடிவாயிற்று. பாபாவே முரளீதரர் ஆனார்õ
37 ஸ்ரீமான் புட்டீ இந்த முடிவை விரும்பினார். இந்துக்களும் முஸல்மான்களும் அனைத்து மக்களும் இந்தத் திட்டத்தில் ராஜியாயினர் (சமாதானமாகி ஒன்றுபட்டனர்). புட்டீவாடா ஒரு நல்ல காரியத்திற்கு உபயோகமாயிற்று.
38 அவ்வளவு விலையுயர்ந்த மாளிகை இருந்தபோது, பாபாவின் தேஹத்தை வேறெங்காவது அடக்கம் செய்திருந்தால், அந்த மாளிகை சூனியமாகப் போயிருக்கும்; பாழடைந்த காக் கட்டடமாகக் காட்சி அளித்திருக்கும்.
39 இன்று அங்கு நடக்கும் பூஜைக்கும் பஜனைக்கும் கதாகீர்த்தனத்துக்கும் ஆன்மீகப் பேருரைக்கும், அதிதியாக அங்கு வரும் பக்தர்களுக்குச் செய்யப்படும் அன்னதானத்திற்கும், அனைத்திற்கும் ஸாயீயே காரணம்.
40 இன்று அங்கு நடக்கும் அன்ன சந்தர்ப்பணம் (பல மக்களுக்கு அன்னமிட்டு மகிழ்வித்தல்), நாட்டின் பல பகுதிகளிருந்து வரும் பக்தர்கள் செய்யும் லகுருத்ர- மஹாருத்ர1 பாராயணம், ஹோமங்கள், இவையனைத்திற்கும் ஸாயீயே காரணம்.
41 ஆகவே, ஒரு ஞானியின் திருவாய்மொழியைக் காதுகளால் கேட்டு ஒவ்வொரு எழுத்தையும் கவனத்தில் வைக்கவேண்டும். ஏதோ சொல்கிறார் என்றெண்ணி அச் சொற்களை அவமதிக்கவோ கைவிடவோ செய்யாதீர்.
42 ஆரம்பத்தில் முட்டாள்தனமானதாகவும் துர்ப்போதனையாகவுங்கூடத் தோன்றலாம். காலம் செல்லச் செல்ல அவற்றின் உட்கருத்து விளங்கும்.
43 தேஹம் விழுவதற்கு சில நாள்களுக்கு முன்னர், சிர்டீயின் மசூதியில், வரப்போகும் நிகழ்ச்சியைக் கோடிகாட்டும் வகையில் சில துர்ச்சகுனங்கள் நிகழ்ந்தன.
44 அவற்றில் ஒன்றை மட்டும் கேட்பவர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். ஏனெனில், அவை அனைத்தையும் விவரமாகச் சொல்லப் புகுந்தால், இந் நூல் மிக விஸ்தாரமானதாக ஆகிவிடும்.
45 எத்தனையோ ஆண்டுகளாக பாபாவிடம் ஒரு செங்கல் இருந்துவந்தது. யோகாசனமாக அமரும்போது பாபா அச் செங்கல்ன்மீது ஒரு கையை வைத்துக்கொள்வார்.
46 ஏகாந்தமான இரவுநேரத்தில் அச் செங்கல்ன்மீது ஆதாரமாக ஒரு கையை ஊன்றிக்கொண்டு அமைதியான மனத்துடன் யோகாசனத்தில் பாபா அமர்ந்திருப்பார்.
47 இந்தக் கிரமம் எத்தனையோ ஆண்டுகளாக சிரமமின்றியும் தடங்கன்றியும் நடந்துவந்தது. கிரமம் உடையவேண்டுமென்றும் எதிர்பாராதது நடக்கவேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்கும்போது, எவ்வளவு முறைதவறாத நியமமாயினும், அது செல்லாமற் போகிறதுõ
48 ஒருசமயம் பாபா மசூதியில் இல்லாதிருந்தபோது ஒரு பையன் தரையைப் பெருக்கிக்கொண் டிருந்தான். அடியில் சுத்தமாகப் பெருக்கவேண்டும் என்பதற்காகச் செங்கல்லைக் கொஞ்சம் தூக்கினான்.
49 உடையவேண்டிய வேளை வந்துவிட்டபடியால், செங்கல் பையனுடைய கையிருந்து நழுவியது. தடாலென்று கீழே விழுந்து உடனே இரண்டு துண்டுகளாக உடைந்தது.
50 இதுபற்றிக் கேள்வியுற்ற பாபா சொன்னார், ''உடைந்தது செங்கல் அன்று; என்னுடைய விதி உடைந்துவிட்டது.ஃஃ இவ்வாறு கூறியபின் பாபா மிகவும் கொந்தளிப்படைந்தார். நேத்திரங்களிருந்து துக்கக்கண்ணீர் வடிந்தது.
51 கையை ஊன்றிக்கொண்டு தினமும் யோகாசனத்தில் அமரும் செங்கல் உடைந்தபோது, அவருடைய இதயமும் உடைந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.
52 எத்தனையோ ஆண்டுகளாக யோகாசனத்திற்கு மூலபீடமாக விளங்கிய பழைய செங்கல் இவ்வாறு திடீரென்று உடைந்தது கண்டு, அவருக்கு மசூதியே வெறிச்சோடிப்போனது போலத் தெரிந்தது.
53 தம்முடைய பிராணனைவிட அதிகமாக நேசித்த செங்கல்லை அந்த நிலையில் பார்த்த பாபா மனமுடைந்துபோனார். அவருடைய சித்தம் கலங்கியது.
54 அந்தச் செங்கல்ன்மீதுதான் பாபா கையை ஊன்றிக்கொண்டு யோகாசனத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் யோகம் பயில்வார். அதனிடம் அவர் பெரும்பிரேமை வைத்திருந்தது இயல்பே.
55 ''எதனுடைய கூட்டுறவில் ஆத்மசிந்தனை செய்தேனோ, எதை என் உயிருக்குயிராக நேசித்தேனோ, எது என்னுடைய சங்கத்திருந்து விடுபட்டுவிட்டதோ, அது இல்லாமல் நானும் இருக்கமுடியாது.--
56 ''அந்தச் செங்கல், இந்த ஜன்மத்து நண்பன், என்னைப் புறக்கணித்துவிட்டுப் போய்விட்டது.ஃஃ இவ்வாறு அதன் நற்குணங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு பாபா அழ ஆரம்பித்தார்.
57 ஒரு சந்தேகம் இங்கு எழுவது ஸஹஜமே (இயல்பே). செங்கல் ஒருகணத்தில் அழியக்கூடிய பொருள்தானே? சோகப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்?
58 முதற்பார்வையில் இந்த சந்தேகம் எவருடைய மனத்திலும் எழலாம். முதல் பாபாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு விளக்கம் அளிப்பதற்கு முயல்கிறேன்.
59 உலகை எவ்வாறு உத்தாரணம் செய்யலாம், தீனர்களையும் பாமரர்களையும் எப்படிக் கரை சேர்க்கலாம், என்ற நோக்கத்துடன்தான் ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். செய்யவேண்டியது வேறொன்றும் அவர்களுக்கு இல்லை.
60 ஞானிகள் சிரிப்பதும் அழுவதும் ஆடுவதும் பாடுவதும் உலகியல் நாட்டியம். இதுவே இங்கே சாரம்.
61 முனிவர்கள் பூரண ஞானிகள்; எல்லா ஸங்கல்பங்களும் நிறைவேறியவர்கள். ஆயினும், உலகமக்களை உய்விப்பதற்காகக் கர்ம மார்க்கத்தில் (செயல் புரிய) உந்தப்படுகின்றனர்.
62 1918 ஆம் ஆண்டு நடந்த நிர்யாணத்திற்கு 32 ஆண்டுகளுக்கு முன்னரே ஸமாதி நடந்துவிட்டிருக்கும். ஆனால், மஹால்ஸாபதியின் மிகத் தெளிவான சித்தம் அந்த அமங்கல நிகழ்ச்சியை நடக்காமல் தடுத்து நிறுத்திவிட்டது.
63 அந்த அமங்கல நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டிருக்காவிட்டால், மக்கள் எங்ஙனம் ஸாயீயின் நலந்தரும் கூட்டுறவை அனுபவித்திருப்பர்? அந்தக் கெட்டவேளையின் விளைவாக இன்றைக்கு1 43 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாபா நம்மிடமிருந்து பிரிந்துவிட்டிருப்பார்.
64 அன்று மார்கழி மாதத்துப் பௌர்ணமி நாள். பாபா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டுக்கொண் டிருந்தார். தேஹத்தின் வேதனையை சகித்துக்கொள்வதற்காக ஆத்மாவை பாபா பிரம்மாண்டத்தில் வைத்தார் (நிர்விகல்ப ஸமாதி நிலை).
65 பாபா எல்லாரிடமும் சொல்யிருந்தார், ''நான் இப்போதிருந்து மூன்று நாள்களுக்கு என்னுடைய பிராணனை பிரம்மாண்டத்தில் வைக்கப்போகிறேன். என்னை எழுப்ப முயலாதீர்.ஃஃ
66 சபாமண்டபத்தின் ஒரு மூலையை விரலால் சுட்டிக்காட்டிச் சொன்னார், ''அங்கு ஸமாதிக்குழி தோண்டி, என்னை அவ்விடத்தில் வைத்துவிடுங்கள்.ஃஃ
67 தாமே மஹால்ஸாபதியிடம் அழுத்தந்திருத்தமாகச் சொன்னார், ''மூன்று நாள்கள்வரை என்னைப் பிரிந்துவிடாதீர்; சிரத்தை தவறாதீர்.--
68 ''அந்த இடத்தை ஸமாதியென்று அடையாளம் காட்ட இரண்டு கொடிகளை ஏற்றும்.ஃஃ இவ்வாறு கூறியபடியே பாபா பிராணனை பிரம்மாண்டத்தில் வைத்தார்.
69 திடீரென்று ஏற்பட்ட மயக்கத்தால் தேஹம் அசைவற்றுக் கீழே விழுந்தது. மஹால்ஸாபதி பாபாவின் தலையைத் தம் மடியில் ஏந்திக்கொண்டார். இதர மக்கள் அனைவரும் ஆசையைத் துறந்தனர் (நம்பிக்கை இழந்தனர்).
70 இது இரவு நேரத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது மணி பத்து. 'ஐயகோõ இதென்ன திடீரென்று வந்த பெருந்துன்பம்õஃ என்று நினைத்து மக்கள் ஸ்தம்பித்துப் (செயழந்து) போயினர்.
71 மூச்சும் இல்லை; நாடித் துடிப்பும் இல்லை. உயிர் உடலைத் துறந்துவிட்டாற்போல் இருந்தது. மக்களுக்கு அது ஒரு பயங்கரமான நிலைமையாகத் தெரிந்தது. பாபாவுக்கோ அது சுகம் நிறைந்த நிலைமையாக அமைந்தது.
72 இதன் பிறகு, எப்பொழுதுமே உஷார் மிகுந்த மஹால்ஸாபதி பாபாவின் தலையை மடியில் வைத்தவாறே இரவுபகலாக விழித்திருந்து பாபாவைப் பாதுகாத்தார்.
73 'ஸமாதிக்குழி தோண்டுங்கள்ஃ என்ற ஆக்ஞை ஸாயீயின் திருவாய்மொழியாகவே வந்திருந்தபோதிலும், எவருக்கும் அந்தக் காரியத்தைச் செய்ய மனம்வரவில்லை.
74 கிராமத்து சமத்த மக்களும் பாபாவின் ஸமாதி நிலையைப் பார்க்க அங்கே குழுமினர்; பார்த்து வியப்படைந்தனர். மஹால்ஸாபதி பாபாவின் தலையை மடியிருந்து கீழே இறக்க மறுத்துவிட்டார்õ
75 'திடீரென்று பிராணன் போய்விட்டதைப் பார்த்து நாமெல்லாம் அதிர்ச்சியுற்றுக் கல்லாய்ச் சமைந்துபோய்விடுவோம் என்று நினைத்து, மூன்று நாள்களுக்குத் தம்மைப் பாதுகாக்கும்படி சொன்னார். ஸாயீ நம்மை ஏமாற்றிவிட்டார்.ஃ மக்கள் இவ்வாறு நினைத்தனர்.
76 சுவாசம் நின்றுவிட்டது; இந்திரியங்கள் சம்பந்தம் இழந்துவிட்டன; உயிரோட்டத்தின் அறிகுறியே இல்லை; உயிரொளி மங்கிவிட்டது.
77 வெளியுலகத்தைப்பற்றிய உணர்வே இல்லை; வாக்கு திடமௌனம் சாதித்தது. 'எப்படி மறுபடியும் பிரக்ஞை திரும்பப் போகிறதுõஃ என்று வியந்து எல்லாரும் ஆழ்ந்த கவலையுற்றனர்.
78 சரீரம் உணர்வு பெறவில்லை. இரண்டு நாள்கள் இவ்வாறு கழிந்தன. மௌலவீ, முல்லா, பக்கீர்--அனைவரும் அங்கு வந்து அடுத்து என்ன செய்வதென்று யோசித்தனர்.
79 ஆப்பா குல்கர்óணியும் காசீராமும் வந்தனர். பாபா நிஜமான சுகம் தரும் இடத்திற்குச் சென்றுவிட்டார் என்று உறுதியான முடிவெடுத்தனர். ஆகவே, தேஹத்தை நல்லடக்கம் செய்யவேண்டும்.
80 யாரோ ஒருவர் சொன்னார், ''கொஞ்சம் பொறுங்கள்; இந்த அவசரம் நன்றன்று; பாபா மற்ற மனிதர்களைப் போல அல்லர்; பாபாவின் வார்த்தைகள் குறி தவறாதவை.ஃஃ
81 உடனே மற்றொருவர் பதில் சொன்னார், ''சில்ட்டுப்போன உடம்பில் உயிர் எப்படித் திரும்பவும் நுழையும்? எவ்வளவு, சிந்திக்கும் திறமையற்ற மக்கள்
இவர்களெல்லாம்õ--
82 ''சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் சவக்குழி தோண்டுங்கள். எல்லா மக்களையும் கூட்டிவாருங்கள். நேரங்கடத்தாது நல்லடக்கம் செய்யுங்கள். வேண்டியவை அனைத்தையும் தயார் செய்யுங்கள்.ஃஃ
83 இவ்விதமான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண் டிருந்தன. மூன்று நாள்கள் கழிந்தன. பின்னர், அதிகாலை 3 மணிக்கு பாபா உயிர்த்தெழும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.
84 கொஞ்சங்கொஞ்கமாகக் கண்கள் மலர்ந்தன. உடன் அங்கங்கள் மெதுவாக அசைய ஆரம்பித்தன. சுவாசமும் திரும்பியது; வயிறு மேலும் கீழும் போய்வருவது நன்கு புலனாகியது.
85 முகத்தில் மலர்ச்சி உதயமாகியது. கண்கள் முழுமையாகத் திறந்தன. அசைவற்ற நிலை மறைந்தது. உயிர்த்து எழுந்ததன் லக்ஷணங்கள் (அடையாளங்கள்) நன்கு தெரிந்தன.
86 மறந்துபோன தேகவுணர்வு மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தது போலவும், காணாமற்போன புதையல் திரும்பக் கிடைத்தது போலவும், இந் நிகழ்ச்சி தோன்றியது. பொக்கிஷம் மறுபடியும் திறந்துகொண்டதுõ
87 ஸாயீ விழித்தெழுந்தது கண்டு எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர். தெய்வாதீனமாக ஒரு விக்கினம் உடைந்தது கண்டு ஜனங்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
88 பகத் (மஹால்ஸாபதி) பாபாவின் முகத்தைக் குதூகலத்துடன் பார்த்தார். ஸாயீயும் மௌனமாகத் தலையை அசைத்தார். மௌலவீயும் பக்கீரும் முகம் வெளுத்தனர். இவ்வாறாக, ஒரு பயங்கரமான நிகழ்வு தவிர்க்கப்பட்டது.
89 மௌலவீயின் துராக்கிரகத்தைக் (அத்து மீறும் செயலைக்) கண்டு, பாபாவின் ஆணையைப் பாலனம் செய்யாது பகத் விட்டிருந்தாலோ, அல்லது தமது உறுதிப்பாட்டிருந்து லவலேசம் (சிறிதளவு) தளர்ந்திருந்தாலோ, பயங்கரமான விளைவு ஏற்பட்டிருக்கும்.
90 43 வருஷங்களுக்கு முன்னரே ஸமாதி நடந்துவிட்டிருக்கும். அவருடன் உரையாடுவது எங்கே? மனோஹரமான தரிசனந்தான் எங்கே?
91 உலகத்திற்கு உபகாரம் என்ற காரணத்துக்காவே ஸாயீ ஸமாதி நிலையை விடுத்து சாதாரண நிலைக்குத் திரும்பி வந்தார். பக்த ஜனங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
92 பக்தர்களின் நன்மைக்காக உழைத்துக் களைப்படைந்தவர் பரமானந்தத்துடன் லயிப்பதற்காகச் சென்றார். அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விழித்தெழுவது எப்படி சாத்தியம்? அவருடைய லீலை அளப்பறியதுõ
93 பாபா இவ்வாறு இயல்பான நிலைக்குத் திரும்பியது கண்டு பக்த ஜனங்கள் ஆனந்தமடைந்தனர். தரிசனம் செய்யக் குதித்தோடி முண்டியடித்தனர். இவ்வாறாக, புனருஜ்ஜீவனம் (மீண்டும் உயிர்பெற்று எழுதல்) அனைவரையும் மகிழ்ச்சிக் கடல் ஆழ்த்தியது.
94 ஆக, பாபாவின் நிர்யாணம்பற்றிய நிறைவுபெறாத காதை, இன்று என் நினைவுக்கு எட்டியபடி ஸம்பூர்ணமாக எடுத்துரைக்கப்பட்டுவிட்டது.
95 கதைகேட்கும் எல்லாருக்கும் சொல்கிறேன். ஒருகணம் உங்கள் மனத்தையே கேள்வி கேளுங்கள். நாம் ஏன் மகிழ்ச்சியடையவோ சோகமடையவோ வேண்டும்? இரண்டுமே ஆதாரமற்றதும் விவேகமற்றதுமான செயல்கள் அல்லவோ?
96 தேஹமும் இந்திரியங்களும் பொருந்திய ஓர் அமைப்பு- மூன்றரைமுழ நீளமுள்ள பாரவண்டி-இது மட்டுந்தானா நமது ஸாயீ? இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள்.
97 வெறும் தேஹந்தான் ஸாயீ என்று கருதினால், உள்ளுறையும் பொருளுக்குப் பெயரில்லாமல் போகிறது; அந்த வஸ்துவுக்கு உருவமும் இல்லை. ஸ்ரீஸாயீ உருவத்திற்கு அப்பாற்பட்டவர்.
98 தேஹம் நசித்துப் போகக்கூடியது. தேஹத்தில் உறையும் வஸ்து சுதந்திரமுள்ளது; அழிவிற்கு அப்பாற்பட்டது. தேஹம் பஞ்சபூதங்களால் ஆனது; உள்ளுறையும் வஸ்துவோ ஆதியந்தமில்லாதது.
99 தேஹத்தினுள்ளே இருப்பது சுத்த ஸத்துவ சைதன்யம். அதுவே பௌதிக இந்திரியங்களை இயக்கும் பிரம்மம். அந்த வஸ்துவுக்கு ஸாயீ என்று பெயர்.
100 அதுவென்னவோ இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டது. ஜடமான இந்திரியங்கள் அதை அறிந்துகொள்ளமுடியாது. ஆனால், அதுதான் இந்திரியங்களைச் செயல்படும்படி ஊக்குவிக்கிறது. பிராண ஓட்டத்தைச் சுழலச் செய்கிறது.
101 அந்த சக்தியின் பெயர் ஸாயீ. அது இல்லாத இடமேயில்லை. அது பத்துத் திசைகளிலும் நிரம்பியிருக்கிறது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்தையும் வியாபித்திருக்கிறது.
102 ஸாயீயின் அவதார நிலைமையும் இதுவே. ஆதியில் எது தோன்றாநிலையில் இருந்ததோ, அது ஒரு பெயரையும் உருவத்தையும் ஏற்றுக்கொண்டு தோன்றிய நிலைக்கு மாறியது. வேலை முடிந்த பிறகு மீண்டும் தோன்றாநிலைக்குத் திரும்பிவிட்டது.
103 அவதாரம் ஏற்றுக்கொண்டு வந்தவர்கள் எல்லாரும் எவ்வாறு ஒரு காலகட்டத்தில் அவதார தேஹத்தைத் துறந்து ஆதியந்தமில்லாத இருப்பிடத்திற்குத் திரும்பினரோ, அவ்வாறே ஸாயீயும் செய்தார்.
104 மறைந்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றியவுடன், ஸ்ரீ நரஸிம்ஹஸரஸ்வதி, 'பர்வத யாத்திரையாகச் செல்கிறேன்ஃ என்று சொல்விட்டுச் சட்டென்று காண்காபூரிருந்து கிளம்பிவிட்டார்.
105 பக்தர்கள் தடுக்க முயன்றபோது அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், ''நான் போவது உலகியல் ரீதியில்தான்; காண்காபூரை விட்டு நான் போகமாட்டேன்.--
106 ''கிருஷ்ணா நதியில் காலையில் நீராடிவிட்டு பிந்து க்ஷேத்திரத்தில் அனுஷ்டானத்தை (ஸந்தியா வந்தனம், ஜபம் போன்ற தினமும் செய்யவேண்டிய தொழுகைகளை) முடித்துக்கொண்டு மடத்திற்கு வந்து என்னுடைய பாதுகைகளைப் பூஜைசெய்யுங்கள். நான் அங்கு நிரந்தரமாக வாசம் செய்கிறேன்.ஃஃ
107 அவ்வாறே ஸாயீபாபாவின் வழியும்õ அவருடைய மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகரப் பொருள்கள் அனைத்தினுள்ளும் ஸ்ரீஸாயீயைப் பார்க்கலாம்.
108 ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்கவேண்டா; ஸாயீ மரணத்திற்கு அப்பாற்பட்டவர்.
109 நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் ஸாயீ நிரம்பியிருக்கிறார். ஸாயீ எல்லாருடைய அகத்திலும் புறத்திலும் இருக்கிறார். உம்முள்ளேயும் என்னுள்ளேயும் நிரந்தரமாக வசிக்கிறார்.
110 ஸமர்த்த ஸாயீ தீனதயாளர்; பா(ஆஏஅ)வத்துடன் பக்தி செய்து வணங்குபவர்களைப் பாலனம் செய்பவர் (பாதுகாப்பவர்); உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர்; அனைத்து மக்களுக்கும் சிநேகிதர்.
111 நம் ஊனக்கண்களுக்குத் தெரியாதபோதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார்.
112 அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையிருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார்.
113 அவருடைய இதயத்தில் கனிந்த அனுராகத்தை (அபரிமிதமான அன்பை - காதலை) கெட்டியாகப் பற்றிக்கொள்வோமாகõ அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாகõ
114 சிறந்த மனோபா(ஆஏஅ)வத்துடன் அவரைப் பூஜைசெய்வோம். பக்திபா(ஆஏஅ)வத்துடன் அவரை நினைவில் இருத்துவோம். சகலமான பக்தர்களுக்கும் அனுபவம் கிட்டும். அவர் எங்கும் வியாபித்திருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்.
115 ஸ்ருஷ்டி (ஆக்கல்), ஸ்திதி (காத்தல்), லயம் (அழித்தல்) ஆகியவற்றால் ஆத்மாவுக்குப் பயம் ஏதுமில்லை. அது சதாசர்வகாலமும் ஞானமயமாக இருக்கிறது. விகாரங்களுக்கு (தீக்குணங்களுக்கு) இடமளிப்பதில்லை.
116 ஆத்மா சுவர்ணம் (பொன்) போன்றது. அலங்காரம் ஏதும் இல்லாவிட்டாலும் சுவர்ணமாகவே இருக்கும். பலவிதமான ஆபரணங்களாக மாற்றப்பட்டாலும் தன்னுடைய 'பொன் தன்மையைஃ இழக்காது.
117 எப் பெயர் கொண்ட நகையையும் உருத்தெரியாமல் உருக்கிப் பொன்னாக ஆக்கிவிடலாம். ஆனாலும், பொன்னின் குணம் மாறுபடாது. பொன்னுக்கென்னவோ (பொன்னுக்கு உபமானம் செய்யப்பட்ட ஆத்மாவுக்கென்னவோ) உருவமும் இல்லை; உருவத்தால் ஏற்படும் பெயரும் இல்லை.
118 அந்தப் பொன்னில் இந்த ஹேமாட் பந்த் முழுக்க முழுக்கக் கரைந்து சீரிய பண்புகள் நிறைந்த ஸாயீபாதங்களில் அமிழ்ந்து பிரளயகாலம்வரை வசிப்பானாகõ
119 பின்னர், பதின்மூன்றாவது நாள் ஈமச்சடங்கு செய்யப்பட்டது. பக்த ரத்தினமாகிய பாலா ஸாஹேப் பாடே (ஆஏஅபஉ). கிராமத்துப் பிராமணர்களைக் கூட்டி உத்தரகிரியைச் செய்ய ஆரம்பித்தார்.
120 ஆடைகளுடன் ஸ்நானம் செய்துவிட்டுத் தம்முடைய கைகளாலேயே திலாஞ்ஜ, தில (எள்) தர்ப்பணம், பிண்டப்பிரதானம் ஆகிய கிரியைகளைச் செய்தார்.
121 ஸபிண்டீகரணம் (12 ஆம் நாள் சடங்கு) போன்ற உத்தரகிரியைகளும் மாசிகங்களும் (ஒரு வருடம் முடியும்வரை மாதாமாதம் செய்யவேண்டிய சடங்குகளும்) சாஸ்திர விதிகளின்படியும் தர்மநியாயப் பிரமாணத்தின்படியும் சரியான சமயங்களில் செய்யப்பட்டன.
122 பக்த சிரேஷ்டரான (தலைசிறந்த பக்தரான) உபாஸனி, ஜோக்(எ)குடன் பவித்திரமான பாகீரதி (கங்கை) நதிக்கரைக்குச் சென்று ஹோமங்களையும் ஹவன்களையும் செய்தார்.
123 சாஸ்திர விதிகளின்படி பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து, அன்ன ஸந்தர்ப்பணம் (பல ஜனங்களுக்கு அன்னமளித்து மகிழ்வித்தல்) செய்து, தக்ஷிணையும் அளித்தனர். பின்னர் இருவரும் திரும்பி வந்தனர்.
124 இப்பொழுது பாபாவும் இல்லை; ஸம்வாதமும் (உரையாடலும்) இல்லை. இந்த பேதம் நிகழ்ந்துவிட்ட போதிலும், மசூதியின்மேல் பார்வை பட்டவுடன் கடந்த காலத்தின் சுகமான உரையாடல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.
125 பாபா எப்பொழுதும் அமர்ந்த யோகாசன நிலையில் அவரை மறுபடியும் பார்த்து, ஆனந்தத்தில் மெய்மறக்கச் செய்யும்படியாக, உத்தமோத்தமமான (சிறந்தவற்றில் சிறந்த) பாபாவின் உருவப்படம் ஒன்று வண்ண ஓவியமாக மசூதியில் பிரேமையுடன் நிறுவப்பட்டுள்ளது.
126 ஸாயீ தேகநிவிர்த்தி அடைந்துவிட்ட போதிலும், இந்த உருவப்படத்தை தரிசனம் செய்தால் அவரை நேரில் காணும் திருப்தி ஏற்படுகிறது. பா(ஆஏஅ)வமுள்ள பக்தர்களுக்கு, பாபா திரும்பி வந்துவிட்டது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.
127 ஜயகர் என்ற குடும்பப் பெயர் கொண்ட சாம்ராவ் இந்த அழகிய ஓவியத்தை வரைந்தார். நிரந்தரமான நினைவை அளிக்கும்படியாக இந்த மனோஹரமான வண்ண ஓவியம் அமைந்திருக்கிறது.
128 பிரசித்தி பெற்ற சித்திரக்காரரான சாம்ராவ் ஜயகர் பாபாவிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தார். பாபாவின் ஆக்ஞையை அனுசரித்துச் சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறார்.
129 அவர் இம்மாதிரியான பல அழகிய சித்திரங்களைத் தம்முடைய கைகளால் வரைந்திருக்கிறார். அவையனைத்தும் பக்தர்களின் இல்லங்களில் தியானம் நிலைப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
130 ஞானிகள் என்றும் மரணமடைவதில்லை. இது முன்னரே அநேக முறைகள் விவரணம் செய்யப்பட்டுவிட்டது. இது உங்களுக்கு ஞாபகமிருக்கும். மேலும் தெளிவு படுத்தவேண்டிய அவசியம் இல்லை.
131 இன்று பாபா தேகத்துடன் இல்லை. ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் பல செய்து பாதுகாத்துவருகிறார்.
132 அவர் யாரிடமாவது ஏதாவது சொல்யிருக்கலாம்; அது இன்னும் அனுபவமாகாமலும் இருக்கலாம், அவர் தேகத்தை விடுத்துவிட்டதால், அவை வெறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டா.
133 ஏனெனில், பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும். நம்பிக்கையுடன் அனுபவத்திற்காகக் காத்திருங்கள். உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில் நிச்சயமாக நடக்கும்.
134 இந்த விவரணத்தில் ஜோக்(எ)கின் பெயர் எழுந்ததால், பிரதானமான காதையைச் சொல்லும்போது, ஓர் உபகாதை ஞாபகத்திற்கு வருகிறது. காதையைக் கேட்டால், அதன் அபூர்வத்தையும் ஸாயீயின் பிரேமையையும் காண்பீர்கள்.
135 சுருக்கமான உரையாடலாக இருப்பினும், குருபக்தர்களுக்குச் சிறந்த போதனையாக அமைந்திருக்கிறது. துறவு மனப்பான்மை உள்ளவன் பாக்கியசா. சம்சார பந்தத்தில் உழல்பவன் அபாக்கியவான்.
136 ஒருசமயம் ஜோக்(எ) பாபாவைக் கேட்டார், ''நான் ஏன் இன்னும் இந் நிலையில் இருக்கிறேன்? ஏன் என்னுடைய தலையெழுத்து இவ்வளவு விசித்திரமாக அமைந்திருக்கிறது? எப்பொழுது நான் நல்ல நிலையை அடைவேன்?--
137 ''தேவாõ பல ஆண்டுகளாக வேறெதிலும் நாட்டமின்றி உங்களுக்கு சேவை செய்யும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இருந்தபோதிலும் சஞ்சலப்படும் என் சித்தத்திற்கு ஓய்வும் இல்லை; அமைதியும் இல்லை. இது ஏன்?--
138 ''நான் எப்படி இவ்வளவு துர்ப்பாக்கியம் பிடித்தவனாக இருக்கமுடியும்? ஒரு ஞானியின் சங்கத்தில் நான் பெற்ற பேறு இதுதானா? ஸத்ஸங்கத்தால் விளையும் பரிணாம நற்பயனை நான் எப்பொழுது அனுபவிப்பேன்?ஃஃ
139 பக்தரின் விநயமான வேண்டுகோளைக் கேட்டபின் ஸமர்த்த ஸாயீ பரம பிரீதியுடன் என்ன பதில் கூறினார் என்பதை அமைதியான மனத்துடன் கேளுங்கள்.
140 ''உம்முடைய கெடுவினைகள் அனைத்தும் எரிந்துபோனபின், புண்ணிய பாவங்கள் அனைத்தும் பொடிப்பொடியானபின், உமது தோளிருந்த ஒரு ஜோ (பிச்சையெடுக்கும் பை) தொங்குவதைக் காணும்போதுதான், நான் உம்மை பாக்கியசாயாகக் கருதுவேன்.--
141 ''உலகியல் பற்றுகளைத் துறந்து, எந்நேரமும் பகவத்-பக்தியில் மூழ்கி, கடைசியில் ஆசாபாசங்களை முழுக்கத் துண்டித்துவிட்ட நிலையில்தான், உம்மை நான் பாக்கியசாயாகக் கருதுவேன்.--
142 ''உலகவிஷயங்களில் அபரிமிதமான ஆசை அறவே ஒழிக்கப்படவேண்டியது என்பதை ஏற்று, நான், நீ என்று பேதம் பார்ப்பதை அயோக்கியமான செயலாகக் கருதி விலக்கி, சுவையுணர்வையும் காமத்தையும் வெல்லுவதை எப்பொழுது யோக்கியமான செயலாக ஏற்றுக்கொள்கிறீரோ, அப்பொழுதுதான் உம்மை நான் பாக்கியசாயாகக் கருதுவேன்.ஃஃ
143 இவ்வாறாக, சிறிது காலத்திற்குப் பிறகு பாபாவின் திருவாய்மொழி உண்மையாயிற்று. உரையாடல் விவரிக்கப்பட்ட துறவு மனப்பான்மை ஜோக்(எ)குக்கு ஸத்குருவின் கிருபையால் ஸித்தியாகியது.
144 புத்திர, சந்ததி பாசங்களிருந்து ஏற்கெனவே விடுபட்டிருந்த அவருக்கு, மனைவியும் நற்கதியடைந்தாள். துறவு மனப்பான்மை இயல்பாக மலர்ந்தது. தேகத்தைச் சாய்ப்பதற்கு முன்னரே சன்னியாசம் ஏற்றுக்கொண்டார்.
145 இந்த ஜோக்(எ) ஒரு பாக்கியவான். ஸாயீயின் திருவாய்மொழி ஸத்தியமாயிற்று. சன்னியாச தர்மத்தை ஏற்றுக் கடைசியில் பிரம்மத்துடன் ஐக்கியமானார்.
146 ஸாயீ எவ்வாறெல்லாம் கூறியிருந்தாரோ அவ்வாறெல்லாம் ஜோக்(எ)குக்குப் பரிணாம முன்னேற்றம் ஏற்பட்டது. ஸாயீயின் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாயின. ஜோக்(எ) பெரும் பாக்கியசா அல்லரோõ
147 தாத்பர்யம் என்னவென்றால் பாபா தீனதயாளர். சிர்டீயில் இருந்தபடியே பக்தர்களுக்கு மங்களம் விளைவிப்பதைக் கருத்திற்கொண்டு அமிர்தம் போன்ற போதனையைச் சரியான சமயத்தில் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் அளித்தார். அவற்றை இப்பொழுது கேளுங்கள்õ
(போதனை இங்கு ஆரம்பம்)
148 ''யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.--
149 ''அவர் என்னையே அகண்டமாக தியானம் செய்வார்; நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும். எங்கே போனாலும் எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக்கொண் டிருப்பார்.--
150 ''இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு, செயல்புரிவது, செயல்புரியாதிருப்பது இரண்டையுமே மறந்துவிடுவார். எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ, அங்கேதான் நான் நிரந்தரமாகக் காத்திருக்கிறேன்.--
151 ''என்னிடம் அனன்னியமாக சரணடைந்து என்னையே அகண்டமாக எவர் நினைத்துக்கொண் டிருக்கிறாரோ, அவருடைய ருணத்தை (கடனை) என்னுடைய தலையில் ஏற்றிக்கொள்கிறேன். அவரைக் கைதூக்கிவிடுவதன் மூலம் அக் கடனைத் திருப்பிச் செலுத்துகிறேன்.--
152 ''எவர் எனக்கு முதல் ஸமர்ப்பணம் செய்யாமல் உணவுண்பதில்லையோ-பானங்கள் அருந்துவதில்லையோ, எவர் என்னை நிதித்யாசனம் (திரும்பத் திரும்ப நினைத்தல்) செய்கிறாரோ, அவருடைய ஆதீனத்தில் (வசத்தில்) நான் வாழ்கிறேன்.--
153 ''எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, எவர் எனக்கு சமானமானவர் என்று எவரையும் அறியமாட்டோரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன்.--
154 ''தந்தை, தாயார், உறவினர்கள், நண்பர்கள், மனைவி, மக்கள் இவர்களிடமிருந்து எவர் பிரிந்துவிட்டாரோ, அவ்வகையானவர் என்னுடைய பாதங்களின்மீது காதல் கொள்கிறார்.--
155 ''மழைக்காலத்தில் பல்வேறு நதிகள் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடி சமுத்திரத்தை சந்திக்கின்றன. நதிகள் என்னும் அடையாளத்தைத் துறந்துவிட்டு மஹா சமுத்திரமாகவே ஆகிவிடுகின்றன.--
156 ''நதிகளின் உருவங்கள் மறைந்துபோகின்றன; பெயர்களும் மறைந்துபோகின்றன. நீர்ப்பெருக்கு மாத்திரமே சமுத்திரத்துடன் கலந்துவிடுகிறது. நதிக்கும் சமுத்திரத்துக்கும் திருமணம் நிகழ்கிறது. இரண்டென்னும் நிலை, ஒருமையில் காணாமற்போகிறது.--
157 ''இவ்வாறான சமரசநிலையைக் கண்டவுடன் சித்தம் உருவத்தையும் பெயரையும் மறந்துவிடுகிறது. தன் நிஜமான இயல்பால் சுய இயக்கத்தாலேயே என்னைப் பார்க்கிறது. என்னைத் தவிர அதற்கு வேறு இடம் இல்லாமற்போகிறது.--
158 ''நான் ஸ்பர்சவேதி1 (பரிசனவேதி) இல்லை என்றும், சாதாரணக் கல்தான் என்றும், மக்களுக்கு நிரூபிப்பதற்காகப் புத்தகப் பண்டிதர்கள் ஆரவாரம் செய்துகொண்டு இரும்புக் கடப்பாரைகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர்.--
159 ''கடப்பாரைகள் என்னைத் தாக்கியபோது, பண்டிதர்களுடைய விருப்பத்திற்கு எதிர்மாறாக அவை பொன்னாக மாறின. நான் வெறும் கல் இல்லை என்பது நிரூபணமாகியது. அந்த அனுபவத்தால் அவர்கள் திகைப்பில் மூழ்கினர்.--
160 ''அணுப் பிரமாணமும் 'நான், எனதுஃ என்ற உணர்வின்றி, உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்துவிடும். உடனே உம்மிடமிருந்து அவித்யை (அறியாமை-மாயை) விலகும். சொற்பொழிவுகளை மேலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.--
161 ''தேஹபுத்தி (உடல்தான் நான் எனும் உணர்வு) அவித்யையின் பிரஸவம். தேஹபுத்தியிருந்துதான் எல்லா மனோவியாதிகளும் உடலுபாதிகளும் தோன்றுகின்றன. தேஹபுத்திதான் மனிதனைச் 'செய்ய உகந்தது எது, செய்யத் தகாதது எதுஃ என்னும் சட்டதிட்டங்களின்மீது மோதச் செய்கிறது. இம் மோதல் ஆத்மசித்திக்குத் தடையாகும்.--
162 ''நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்? உம்மை எப்படி சந்திக்க வருவேன்? என்றெல்லாம் நீர் கேட்கலாம். ஆனாலும், நான் உமது இதயத்தில் நின்றுகொண் டிருக்கிறேன். ஆகவே, பிரயாசை ஏதுமின்றியே உம்மை சந்திப்பேன்.--
163 ''நீர் கேட்கலாம், 'யார் இந்த இதயத்தில் வசிப்பவர்? அவர் எப்படி இருப்பார்? அவருடைய லக்ஷணங்கள் (அடையாளங்கள்) யாவை? எந்தச் சாடையை, குறிப்பை வைத்து நான் அவரை அடையாளம் காணமுடியும்ஃ என்று.--
164 ''இப்பொழுது, யாரிடம் சென்று சரணடைவது? உம்முடைய இதயத்தில் வசிப்பவர் யார்? என்பனபற்றிய தெளிவு நிரம்பிய வியாக்கியானத்தைக் கவனத்தைக் கொடுத்துக் கேளும்.--
165 ''இந்த சிருஷ்டி நானாவிதமான உருவங்களாலும் நானாவிதமான பெயர்களாலும் நிரம்பியிருக்கிறது. இவற்றை எவராலும் கணக்கெடுக்கமுடியாது. இவை அத்தனையும் மாயையின் சொரூபங்கள்.--
166 ''அதுபோலவே, ஸத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட எந்த மெய்ப்பொருளை உள்ளுணர்வால் உமது மனத்தில் உணர்கிறீரோ, அப்பொருளின் உருவத்தையே உமது இதயவாசியாக அறிவீராகõ--
167 ''பெயருக்கும் உருவத்துக்கும் அப்பால் உம்முள் ஒன்று இருக்கிறதே, அதுவே இதயவாசியின் (இறைவனின்) அடையாளம். இதையறிந்து அவனிடம்
சரணடைவீராக.--
168 ''நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து, அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால், உலகில் உள்ளதனைத்தும் உம் குருவாகத் தெரியும். நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.--
169 ''இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும். பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர். அன்னியம் என்று ஒன்று இல்லை என்ற உணர்வை அனுபவிப்பீர்.--
170 ''பிரபஞ்சப் பேருணர்வின்மீது தியானம் செய்வீராக. உம்முடைய அந்தக்கரணம் (மனம், புத்தி, சித்தம், அஹங்காரம்) சுத்தமடையும். கங்கைநீரைத் தொடாமலேயே கங்கா ஸ்நானம் செய்துவிடுவீர்õ--
171 ''இயற்கையான கர்மாக்களின்மேல் ஏற்படும் அபிமானம் திடமான பந்தங்களைக் கொண்டுவரும். ஆகவே, ஞானமுள்ளவர்கள் மனத்தளவில் இதுபற்றிக் கவனத்துடன் இருந்து அபிமானத்தை ஒட்டிக்கொள்ள விடமாட்டார்கள்:--
172 ''தம்முடைய சொரூபத்திலேயே மூழ்கி அணுப்பிரமாணமும் அதிருந்து விலகாமல் இருப்பவருக்கு, ஸமாதிநிலைக்குப் போவதாலும் அதிருந்து திரும்பி வருவதாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லை.ஃஃ
(போதனை இங்கு முடிகிறது)
173 ஆகவே, கதைகேட்பவர்களேõ உங்களுடைய பாதங்களில் மிகுந்த அன்புடன் வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். தேவர்கள், ஞானிகள், பக்தர்கள், சமத்த
மக்கள் -- அனைவரிடமும் பிரேமை காட்டுங்கள்.
174 ''யாராவது யாரையாவது மனம் நோகும்படி பேசினால், அவர் என்னைத்தான் மர்மஸ்தானத்தில் தாக்குகிறார்; என்னுடைய இதயத்தில்தான் வேல் பாய்ச்சுகிறார்.--
175 ''யாராவது யாரையாவது கெட்ட வார்த்தைகளால் திட்டும்போது அது உடனே என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதை ஒருவர் தைரியத்துடன் சகித்துக் கொண்டால், அச் செய்கை என்னை வெகுகாலத்திற்குத் திருப்தியுள்ளவனாகச் செய்கிறது.ஃஃ இவ்வாறு பாபா நமக்கு அடிக்கடி சொல்யிருக்கிறார்.
176 இவ்வாறாக, ஸாயீ அனைத்து உயிர்களிலும் உள்ளும் புறமும் நிரம்பியிருக்கிறார். பிரேமையைத் தவிர அவர் வேறெதையும் நாடவில்லைõ
177 ஸாயீயின் முகத்திருந்து எந்நேரமும் வெளிவந்த பரம மங்களங்களை அளிக்கக்கூடியதும், தேவாமிருதம் போன்றதுமான திருவாய்மொழி இதுவே. பக்தர்களின்மீது ஸாயீ அத்தியந்த (மிகுந்த) பிரேமை வைத்திருந்தார். இதை அறியாத பாக்கியவானும் உளனோõ
178 அவருடன் சேர்ந்து அமர்ந்து உணவுண்ணும் லாபம் அடைந்தவர்கள்- எவர்களுடன் அவர் சிரித்தும் விளையாடியும் பழகினாரோ அவர்கள்- அவர் திரும்பி வரமாட்டாரா என்று ஏங்குபவர்கள் - ஓõ அவர்களுடைய உணர்வுகள்தாம் எப்படியிருக்கும்õ
179 அந்தச் சான்றோர்களுக்கு உணவளிப்பதற்காக நான் மீந்ததைத்தான் தொகுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு மணியாகப் பொறுக்கிச் சேர்த்துவைத்ததை இப்பொழுது அவர்களுக்கு விநியோகம் செய்கிறேன்.
180 இதுவரை சொன்ன கதைகளைப்பற்றி ஹேமாட் பந்துக்கு என்ன தெரியும்? கதைகளைச் சொன்னவர் ஸமர்த்த ஸாயீõ அவற்றை எழுதியவரும் எழுதவைத்தவரும் அவரேõ
181 எத்தனை கதைகள் சொல்யும் என் மனம் திருப்தியடையவில்லை; ஸமர்த்த ஸாயீயின் கதை அத்தகையதுõ மேலும் மேலும் சொல்லவேண்டுமென்ற ஆசை என் சித்தத்தில் குடிகொண்டுள்ளது; கேட்பவர்களும் ஆனந்தமாகக் கேட்கின்றனர்.
182 மேலும், ஸாயீயின் கீர்த்தியைப் பாடுபவர்கள், ஸத்பா(ஆஏஅ)வத்துடன் கேட்பவர்கள், இரு சாராருமே ஸாயீ சொரூபம் ஆகிவிடுகின்றனர். இதை திடமான சித்தத்துடன் அறிந்துகொள்வீர்களாகõ
183 இத்துடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்து ஸாயீக்கு ஸமர்ப்பணம் செய்கிறேன்; பிரேமையுடன் ஸாயீயின் பாதங்களைப் பற்றிக்கொள்கிறேன். மேற்கொண்டு விவரணம் அதன் வழியே தொடரும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'மஹாஸமாதிஃ என்னும் நாற்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.