Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் -48

48. சந்தேகிகளுக்கும் அருள்õ




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 இந்த அத்தியாயத்தைத் தொடங்கும் சமயத்தில், கதையை மிகுந்த பக்தியுடன் கேட்பவர்களில் ஒருவர், ''ஸ்ரீஸாயீ ஒரு குருவா, ஸத்குருவா?ஃஃ என்ற கேள்வியை எழுப்பினார்.

2 அவருக்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு ஸத்குருவின் லக்ஷணங்களைச் (சிறப்பு இயல்புகளைச்) சுருக்கமாக எடுத்துரைப்போமாக. பின்னர், ஸமர்த்த ஸ்ரீஸாயீயின் பாதங்களில் அந்த லக்ஷணங்களை நம்மால் காணமுடிகிறதா என்றும் பார்ப்போமாகõ

3 வேதங்களை ஓதுவிப்பவர்களையோ, ஆறு சாஸ்திரங்களில் அடங்கிய ஞானத்தைக் கற்பிப்பவர்களையோ, வேதாந்த நிரூபணம் செய்து அறிவைப் பெருக்குபவர்களையோ, ஸத்குரு என அறிஞர்கள் அழைப்பதில்லை.

4 சிலர் மூச்சை அடக்குகின்றனர். சிலர் மதச்சின்னங்களை உடம்பில் முத்திரையாகச் சூடுபோட்டுக்கொள்கின்றனர். சிலர் சமயச் சொற்பொழிவு ஆற்றிக் கேட்பவர்களை மகிழ்விக்கின்றனர். இவர்களில் யாரையும் ஸத்குருவென்று விஷயமறிந்தவர்கள் அழைப்பதில்லை.

5 சிலர் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு சிஷ்யர்களுக்கு மந்திர உபதேசம் அளித்து, ஜபம் செய்யும்படியாக ஆணையிடுகின்றனர். ஜபம், எப்பொழுது என்ன பயன் அளிக்கும் என்பது யாருக்குமே உறுதியாகத் தெரியாதுõ

6 வார்த்தை ஜாலத்துடன் செய்யப்படும் பிரம்ம தத்துவ நிரூபணம், கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கலாம். ஆனால், சுயானுபவம் விளைவிக்காத ஞானம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்õ

7 கவனமாக நிரூபணத்தைக் கேட்பவர்களின் மனத்தில் இவ்வுலக, மேலுலக இன்பங்களின்மேல் விரக்தி ஏற்படலாம். ஆயினும், பிரம்ம ஞானத்தைத் தாமே அனுபவித்தவர்தாம், அந்த இனிமையான அனுபவத்தைப் பிறருக்குப் பிரகடனம் செய்யமுடியும்.

8 வேதங்களை முழுமையாக அறிந்து, பூரணமான அனுபவத்தைப் பெற்றுக் கண்கூடாக அவ்வனுபவத்தை சிஷ்யனுக்கு அளிக்கும் சக்தி பெற்றவருக்குத்தாம், சிஷ்யனை எழுப்பிவிடும் அதிகாரம் உண்டு. அவரைத்தாம் ஸத்குரு என்று அழைக்கலாம்.

9 தாமே இறையனுபவம் பெறாதவர், சிஷ்யனுக்கு என்ன அளிக்க முடியும்? எவருக்குப் பிரத்யட்சமான இறையனுபவம் இல்லையோ, அவரை எக்காலத்தும் ஸத்குரு என்று அழைக்கலாகாது.

10 எவர், தம் சிஷ்யனிடமிருந்து சேவை பெறவேண்டுமென்று கனவிலும் நினைக்காமல், அதற்கு மாறாக, சிஷ்யனுக்காகத் தமது உடலை ஓடாகத் தேய்க்க விரும்புகிறாரோ அவரையே ஒரு ஸத்குருவென்று அறிவீராக.

11 'சிஷ்யன் ஒரு துரும்பு, குருவோ உத்தமர்களில் உத்தமமானவர்ஃ என்ற அஹம்பாவம் இல்லாத ஸத்குருவே நன்மை செய்யக்கூடியவர்.

12 சிஷ்யனை முழுமுதற்பொருளாகக் கருதி அவனைத் தம் மகனைப்போல நேசித்துத் தம்முடைய வாழ்க்கைத் தேவைகளுக்காக சிஷ்யனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத ஸத்குருவே, இப்புவியில் பரம சிரேஷ்டமானவர் (தலைசிறந்தவர்).

13 பரம சாந்தியின் இருப்பிடமானவரும், ஞானகர்வம் இல்லாதவரும், சிறியோரையும் பெரியோரையும் சரிசமமாக மதிப்பவருமாகியவரையே ஸத்குரு எனக் கொள்வீராக.

14 இவையே ஒரு ஸத்குருவின் ஸர்வசாதாரணமான லக்ஷணங்கள். இவற்றைத் தொகுத்துச் சுருக்கிக் கதைகேட்பவர்களுக்கு அடியேன் அளித்திருக்கிறேன்.

15 ஏற்கெனவே ஸாயீதரிசனம் செய்து திருப்தியடைந்த கண்களைப் பெற்றிருக்கும் பாக்கியசா­களுக்கு, ஒரு ஸத்குருவின் லக்ஷணங்களைப்பற்றி (சிறப்பு இயல்புகளைப்பற்றி) அடியேன் மேற்கொண்டு என்ன வர்ணனை செய்யமுடியும்?

16 ஜன்மஜன்மங்களாகச் சேமித்துவைத்த புண்ணியங்களின் விளைவாக நாம் ஸத்குருராயர் ஸாயீயின் பாதங்களை வந்தடைந்தோம்.

17 இளமையிலேயே அவர் தமதென்று எதையும் உடைமையாக்கிக் கொள்ளவில்லை; வீடுவாசல் ஏதும் இன்றி நிராதரவாக வாழ்ந்தார். உடைமைகள் என்று அவர் வைத்திருந்தவை புகையிலையும் சிலீமும் மகத்தான மனவொடுக்கமுமேõ

18 பதினெட்டு வயதிலேயே அவர் பூரண மனோஜயம் பெற்றவராக இருந்தார். தன்னிலேயே லயித்து ஏகாந்தமாகவும் நிர்ப்பயமாகவும் (பயமின்றியும்) வாழ்ந்தார்.

19 'நான் பக்தர்களின் அடிமைஃ என்னும் தம் வாக்குறுதியை நிரூபிப்பதற்காக, எங்கே சுத்தமான அன்பை பக்தர்களிடம் கண்டாரோ, அங்கே அவர் எப்பொழுதும் இருந்தார்.

20 பர பிரம்மமே, பழம்பொருளே, ஜய ஜயõ தீனர்களைக் கைதூக்கிவிடுபவரே, மலர்ந்த முகத்தோரே, ஜய ஜயõ பிரபஞ்சப் பேருணர்வால் நிரம்பியிருப்பவரே, பக்தர்களின் வசத்தில் இருப்பவரே, ஜய ஜயõ பக்தர்களுக்கு தரிசனம் தாரும் ஸ்வாமிõ

21 இரட்டைச் சுழல்களுக்கு அப்பாற்பட்டவரே, ஜய ஜயõ உருவமுள்ளதும் உருவமில்லாததுமான இறையே, ஜய ஜயõ பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சாட்சியே, ஜய ஜயõ அனைத்திற்கும் அப்பாற்பட்டவரே, ஜய ஜயõ பக்தர் அல்லாதவருடைய புத்திக்கு நீர் எட்டமாட்டீர்.

22 இவ்வுலக வாழ்வின் இன்னல்களையும் துக்கங்களையும் அழிப்பவரே, ஜய ஜயõ பிறவியெனும் யானையைக் கிழித்துக் கொல்பவரே, ஜய ஜயõ அடைக்கலம்

23 தேவரீர் உருவமற்ற இறையுடன் கலந்தபோது உருவத்தை விடுத்து உருவமற்ற நிலையை அடைந்தீர். ஆயினும், தேஹத்தை உதறிய பிறகும் பக்தர்களுக்கு மங்களங்களை விளைவிக்கும் செயல்கள் தொடர்கின்றன.

24 தேஹத்துடன் வாழ்ந்தபோது என்னென்ன செய்தீரோ அவையனைத்தும் உருவமற்ற இறையுடன் கலந்த பிறகும் தொடர்கின்றன. உம்மை பக்தியுடன் அணுகுபவர்கள் இன்றும் அதே அனுபவத்தைப் பெறுகின்றனர்.

25 பாமரனாகிய என்னை ஒரு கருவியாகக்கொண்டு அஞ்ஞான இருளை நீக்கி, பக்தர்களை உத்தாரணம் செய்யக்கூடிய சக்திபடைத்த உமது சரித்திரம் என்னும் சூரியனை உதிக்கச் செய்துவிட்டீர்õ

26 ஆஸ்திக புத்தியும் சிரத்தையுடன்கூடிய பக்தியுமே, பக்தனின் இதயமாகிய அகல் விளக்கு. அன்பாகிய எண்ணெயுடன் திரி பிரகாசமாக எரியும்பொழுது ஞானஜோதி வெளிப்படுகிறது.

27 அன்பில்லாத ஞானம் வறண்டது; அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? அன்பின்றி வாழ்வில் திருப்தி ஏது? அன்பு குறைபடாததாகவும் இருக்கவேண்டும்.

28 அன்பின் மஹிமையை யான் எங்ஙனம் எடுத்துரைப்பேன்õ அன்பின் எதிரில் மற்றவை அனைத்தும் துச்சம் அல்லவோ? இதயத்தின் ஆழத்தில் அன்பில்லாதவனின் படிப்பும் கேள்விஞானமும் பயனளிக்கா.

29 அன்பில் பக்தி உறைந்திருக்கிறது. சாந்தியும் விரக்தியும் அன்பில் பொதிந்திருக்கின்றன. ஸகல ஸம்பத்துகளுடன் கூடிய முக்தியும் அன்பின் பின்னே நிற்கிறது.

30 பா(ஆஏஅ)வம் இன்றி அன்பு உண்டாவதில்லை. பா(ஆஏஅ)வம் இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறான் என்றறிக. பா(ஆஏஅ)வத்தின் வயிற்றி­ருந்துதான் பூரணமான அன்பு பிறக்கிறது. பா(ஆஏஅ)வந்தான் பிறவிக்கடலைக் கடக்க உதவும் நாவாய்.

31 கங்கைநீர் போன்று பரம பவித்திரமான 'ஸாயீ ஸத் சரித்திரத்தின்ஃ இனிமை அளவிடற்கரியது. ஸாயீயே அதன் சுலோகங்களில் உறைந்திருக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே.

32 ஸாயீ ஸத் சரித்திரத்தைக் கேட்பதால், கேட்பவர்கள், சொல்பவர்கள் இரு சாராருமே தூய்மையடைகின்றனர். புண்ணியங்களும் பாவங்களும் அடித்துச் செல்லப்பட்டு இரு சாராருமே நித்தியமுக்தி பெறுகின்றனர்.

33 கேட்பவர்களின் காதுகள் பாக்கியம் பெற்றவை. சொல்பவரின் நாக்கோ விசேஷமான பாக்கியம் பெற்றது. பக்தர்களால் மிகப் பவித்திரமானதாகக் கருதப்படும் ஸ்ரீஸாயீ தோத்திரம் பெரும்பேறு அளிக்கக்கூடியது.

34 தூய்மையான மனத்துடனும் ஸத்பா(ஆஏஅ)வத்துடனும் சரித்திரத்தைக் கேட்பவர்களின் சகல மனோரதங்களும் நிறைவேறும்; எல்லாச் செயல்களும் நற்பயன்களை அளிக்கும்.

35 ஸத் சரித்திரத்தைச் சொற்பொருள் அறிந்து பயபக்தியுடன் கேட்பவர்களுக்கு ஆத்மஞானம் அனாயாசமாகக் கைகூடும்.

36 பக்திபா(ஆஏஅ)வத்துடன் ஸாயீயின் பொன்னடிகளைத் தொழுவதாலும், ஸாயீயை மனத்தில் நிலைபெறச் செய்வதாலும், புலன்கள் இஷ்டம்போல் செயல்படுவதை நிறுத்திவிடுகின்றன. பிறவிக்கடல் சுலபமாகவும் விரைவாகவும் கடக்கப்படுகிறது.

37 ஸாயீ ஸத் சரித்திரத்தைப் படிப்பதும் கேட்பதும், பக்தர்களாகிய சாதகப் பறவைகளுக்கு ஜீவனளிக்கும் நீராகும். கேட்பவர்கள், கேட்டதை மனத்தில் இருத்துவதால் இறைவனின் கிருபையைப் பெறுவதற்கு ஆயத்தமாகின்றனர்.

38 இந்தக் கதையை எந் நிலையிலும் கருத்தூன்றிக் கேட்பவர்களின் கர்மபந்தங்கள் அறுந்து, விழும். அவர்கள் பிறவிக்கடலை இயல்பாகக் கடந்துவிடுவார்கள்.

39 இப்பொழுது, கதைகேட்பவர்கள், ''கதை எப்பொழுது ஆரம்பிக்கப்போகிறது?ஃஃ என்று தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்புவது எனக்குப் புரிகிறது. பீடிகையை ஆரம்பித்து அவர்களுடைய சஞ்சலத்தை நிவிர்த்தி செய்கிறேன்.

40 விரோதம், கொலை, கடன் ஆகிய பாவங்களி­ருந்து விடுபடுவதற்காகப் புனர்ஜன்மம் எடுத்தாகவேண்டும் என்பதும், கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன.

41 மக்களுக்கு முன்ஜன்ம ஞாபகம் இருக்காது. ஆனால், ஞானிகளோ அதை மறப்பதில்லை. பக்தர்கள் எங்கு மறுபிறவி எடுத்தாலும் அவர்களை சங்கடங்களி­ருந்து ஞானிகள் விடுவிக்கின்றனர்.

42 கொடுப்பதிலும் வாங்குவதிலும் உட்காருவதிலும் எழுந்திருப்பதிலும் (எல்லாச் செயல்களிலும் எல்லா நேரங்களிலும்) ஞானிகளின் பாதங்களில் நம்பிக்கை வைக்கும் அடியவர்கள், வாழ்க்கையில் எவ்வாறு வெற்றியடைகிறார்கள் என்பதை விளக்கும் காதை ஒன்று இப்பொழுது சொல்லப்படும்.

43 ஒரு காரியத்தைத் தொடங்கும்போது இறைவனின் பாதங்களை நினைப்பவர்களுடைய மனக்கவலைகளை இறைவனே நிவாரணம் செய்கிறான். பக்தர்களும் தங்களுடைய கருமத்தில் கண்ணாக இருக்கவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

44 'செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன்ஃ என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

45 ஞானிகள் கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவர்களாகத் துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும், அவர்களுடைய அன்பு, லாபம் எதையும் எதிர்பார்க்காதது. பொறுமையாகவும் தைரியமாகவும் உறவைத் தொடர்ந்தால், நமக்கு மங்களங்கள் விளைவிப்பார்கள்.

46 சாபங்களும் தாபங்களும் சுயநல நோக்கத்தால் ஏற்படும் ஆசாபாசங்களும், ஞானிகளின் ஸத்சங்க நிழ­ல் நாம் புகும்போது ஒவ்வொன்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் ஞானிகளின் பாதங்களை வணங்க வேண்டும்.

47 அகந்தையை விடுத்து, விநயத்துடன் ஞானிகளை சரணாகதி அடையவேண்டும். நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய விருப்பத்தைப் பிரார்த்தனையாக

அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். ஞானிகள் நம்முடைய மனத்துக்குப் பெரும் திருப்தியை அளிப்பார்கள்.

48 அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால், சிலர் ஆரம்பகாலத்தில் ஞானிகளின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி நஷ்டத்திற்கு ஆளாவர். ஆயினும், பின்னர் விசுவாசம் ஏற்பட்டால், மங்களங்கள் விளையும்.

49 ஓர் உண்மையான ஞானியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். ஞானியரின் ஆற்றல் அளவிடற்கரியதுõ

50 இந்தக் கருத்தைப் போதிக்கும் காதையொன்றை இப்பொழுது கவனத்துடன் கேளுங்கள். கேட்பவர்கள் ஆனந்தத்தால் நிரம்புவர்; அவ்வாறே, சொல்பவருக்கும் உற்சாகம் ததும்பும்.

51 அக்கல்கோட்வாசியும் ஸபட்ணேகர் என்ற பெயர் கொண்டவருமான ஒரு வக்கீ­ன் அனுபவங்களைக் கேளுங்கள். உங்களுடைய மனம் மகிழ்ச்சியடையும்.

52 சட்டப்படிப்பை முழுமுயற்சியுடன் இரவுபகலாகப் படித்துக்கொண்டிருந்தபோது, சேவடே என்ற சக மாணவரை இவர் சந்தித்தார். இருவரும் படிப்பு விஷயமாகப் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.

53 மேலும் சில சக மாணவர்களும் அங்கு வந்தனர். எல்லாரும் ஒரே அறையில் உட்கார்ந்தனர். யார், எந்த அளவிற்குப் படித்துத் தெளிவடைந்திருக்கிறார் என்று அறிந்துகொள்ள ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.

54 யாருடைய விடை சரியானது என்பதையும், யார் எந்த இடத்தில் எவ்விதமாகத் தவறு செய்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டு, சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொண்டு மனநிறைவு பெறுவதே நோக்கம்.

55 சேவடேவின் விடைகள் அனைத்தும் தவறானவையாக இருந்தன. கடைசியில் எல்லா மாணவர்களும் சொன்னார்கள், ''இவர் எப்படிப் பரீட்சையில் வெற்றிபெறப் போகிறார்? படித்ததெல்லாம் அரைகுறையாக இருக்கிறதேõஃஃ

56 சக மாணவர்கள் இவ்வாறு இளக்காரமாகப் பேசிய போதிலும், சேவடே முழுநம்பிக்கையுடன் கூறினார், ''படிப்பு அரைகுறையாக இருந்தாலும், முழுமையாக இருந்தாலும், வேளை வரும்போது நான் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடுவேன்.--

57 ''நான் முழுமையாக அப்பியாசம் செய்திராவிட்டாலும், என் பாபா எனக்குப் பரீட்சையில் வெற்றியளித்துவிடுவார். நான் எதற்காகக் கவலைப்படவேண்டும்?ஃஃ

58 இந்த வார்த்தைகளைக் கேட்ட ஸபட்ணேகர் ஆச்சரியமடைந்தார். சேவடேவைத் தனியாக அழைத்துச் சென்று கேள்வி கேட்கத் தொடங்கினார்.

59 ''அடடாõ நீர் வானளாவப் புகழும் இந்த ஸாயீ பாபா யார் ஐயா? அவர்மீது பூரணமான விசுவாசம் வைத்திருக்கிறீரே; அவர் எங்கு வாசம் செய்கிறார்?ஃஃ

60 இதற்கு விடையாக சேவடே ஸாயீ பாபாவின் மஹத்துவத்தை எடுத்துரைத்தார். கூப்பிய கைகளுடன், தாம் அவர்மீது வைத்திருந்த ஆத்மவிசுவாசத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவித்தார்.

61 ''பிரஸித்தி பெற்ற அஹமத்நகர ஜில்லாவில் சிர்டீ என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கீர் வாழ்ந்துவருகிறார். அவர் ஒரு புகழ்பெற்ற ஸத்புருஷர்.--

62 ''எங்கெங்கோ எத்தனையோ ஞானியர் இருக்கின்றனர். ஆயினும், அமோகமான புண்ணியம் சேர்த்திராவிட்டால், எவ்வளவு முயன்றாலும் அவர்களை தரிசனம் செய்யும் நல்வாய்ப்பு நேராது.--

63 ''அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும். நடக்காமல் தடுக்க எச் சக்தியாலும் யுகமுடிவுவரை முயன்றாலும் இயலாது.--

64 ''நான் எவ்வளவு பிரயாசை செய்தாலும் இவ்வாண்டு பரீட்சையில் தேர்ச்சி அடையப்போவதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நான் பிரயாசையின்றியே தேர்ச்சி பெறுவேன். இது முவ்வகையிலும் ஸத்தியம்.--

65 ''இது அவர் எனக்களித்த வாக்குறுதி. எனக்கு அவரிடம் முழுநம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாகா. இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன்.--

66 ''நான் அதிசயம் ஏதும் இன்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி, இதற்கடுத்த பரீட்சையிலும் வெற்றி பெறப்போகிறேன்.ஃஃ இந்த வார்த்தைகள் வெறும் பிதற்றல் என்றும், கே­க்குரியவை என்றும் ஸபட்ணேகர் சந்தேகமற நினைத்தார்.

67 ஸபட்ணேகர் விகற்பமாகச் சிந்தித்தார், ''இவர் சொல்வதை எப்படி நம்பமுடியும்?ஃஃ இது இவ்வாறிருக்க, சேவடே அங்கிருந்து சென்றுவிட்டார். பிற்காலத்தில் என்ன நடந்ததென்பதைக் கேளுங்கள்.

68 சிலகாலம் கடந்த பிறகு, சேவடே சொன்னது அனுபவபூர்வமாக உண்மையாகியது. சேவடே இரண்டு பரீட்சைகளிலும் வெற்றி பெற்றார். ஸபட்ணேகர் ஆச்சரியத்தில் மூழ்கினார்õ

69 அதன்பின் பத்தாண்டுகள் கழிந்தன. ஸபட்ணேகருக்குக் கெட்டகாலம் துவங்கியது. துரதிருஷ்டம் அவரை திடீரென்று தாக்கித் துயரத்தில் ஆழ்த்தியது. அவர் சோகமயமானார்.

70 1913 ஆம் ஆண்டு ஸபட்ணேகரின் ஒரே மகன் டிப்தீரியா ஜுரம் கண்டு இறந்துபோனான். அவருக்கு வாழ்க்கையே வெறுத்தது.

71 ஆகவே, அவர் பண்டர்பூர், கண்காபூர் போன்ற தலங்களுக்குப் புனிதப் பயணம் சென்றார். எங்கே சென்றும் மனம் நிம்மதியடையவில்லை. பின்னர் அவர் வேதாந்தம் படிக்க ஆரம்பித்தார்.

72 இவ்வாறு சிலகாலம் கழிந்தது. மனச்சாந்தி பெறுவது எவ்வாறு என்று யோசித்துக்கொண் டிருந்தபோது திடீரென்று அவருக்கு ஒரு பாதை தென்பட்டது. சேவடே பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விருத்தாந்தம் ஞாபகத்திற்கு வந்தது.

73 ஸாயீபாதங்களில் சேவடேவுக்கு இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் உறுதியும் அவருக்கு ஞாபகம் வந்தது. தாமும் ஸாயீதரிசனத்திற்குப் போகவேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உதித்தது.

74 அந்த ஞானியை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் மூண்டது. சிர்டீ செல்வதென்று முடிவெடுத்தார். உறவினர் ஒருவருடன் கிளம்பினார்.

75 தம்முடைய பாதங்களில் பணிவதற்காக அவரை சிர்டீக்கு இழுத்தவர் ஸாயீயேõ சேவடே எப்பொழுதோ சொன்ன வார்த்தைகள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குப்போக்கே)õ நான் இப்பொழுது சொல்லப்போவதைக் கவனத்துடன் கேளுங்கள்.

76 தம் இளையசகோதரர் பண்டித் ராவையும் கூட்டிக்கொண்டு ஸபட்ணேகர் ஞானி தரிசனத்திற்காக சிர்டீக்குக் கிளம்பினார்.

77 அவர்கள் இருவரும் சிர்டீக்கு வந்து சேர்ந்தவுடனேயே ஸாயீதரிசனத்திற்குச் சென்றனர். தூரத்தி­ருந்து பாபாவை தரிசனம் செய்தபோதே மனங்குளிர்ந்தனர்.

78 தூரத்தி­ருந்து பாபாவின் கண்களைச் சந்தித்தவுடன் இருகைகளையும் கட்டிக்கொண்டு விரைவாக அவரருகில் சென்று நின்றனர்.

79 இருவரும் மிகுந்த பணிவுடன் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். தூய்மையான உள்ளத்துடனும் பிரேமையுடனும் ஒரு தேங்காயை பாபாவின் பாதங்களில் ஸமர்ப்பணம் செய்தனர்.

80 தேங்காயை பாபாவின் பாதங்களில் ஸபட்ணேகர் ஸமர்ப்பித்தபோது, ''போ வெளியேஃஃ என்று சத்தம் போட்டு பாபா அவரை விரட்டியடித்தார்.

81 பாபா கோபங்கொண்டதைக் கண்ட ஸபட்ணேகர் மனக்கலக்கம் அடைந்தார். 'இதற்கு என்ன பொருள் என்பதை, குறிப்பறிந்தவர் யாரையாவது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.ஃ இவ்வாறு தமக்குள்ளேயே சொல்­க்கொண்டார்.

82 தரிசனம் செய்து மனமகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டியவர், சுடுசொல் கேட்டுத் துணுக்குற்றுப் பின்வாங்கினார். வருத்தத்துடன் முகங்கவிழ்ந்து உட்கார்ந்தார்.

83 'இப்பொழுது யாரிடம் செல்வது? பாபாவின் சுடுசொல்லுக்கு அர்த்தம் என்னவென்று எந்த பக்தரைக் கேட்பது? பாபாவின் எண்ண ஓட்டம் என்னவென்று யாரைக் கேட்பது?ஃ

84 அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்ட யாரோ ஒருவர், அவரை சமாதானப்படுத்தும் வகையில் பாலா சிம்பியின் பெயரை சிபாரிசு செய்தார். ஆகவே, ஸபட்ணேகர் பாலா சிம்பியைத் தேடிச் சென்றார்.

85 விருத்தாந்தத்தை முழுமையாக பாலா சிம்பியிடம் விவரித்தபின், ஸபட்ணேகர் வேண்டினார், ''பாபா உக்கிரமான வார்த்தை பேசி என்னை விரட்டிவிட்டார்.--

86 ''தாங்கள் என்னுடன் வந்தாலாவது எனக்கு சாந்தமான தரிசனம் கிடைக்கலாம். பாபா கோபப்படாமல் நம்மீது கிருபைகனிந்த பார்வையைச் செலுத்த வாய்ப்பு உண்டு.ஃஃ

87 பாலா சிம்பி இதற்கு ஒத்துக்கொண்டார். ஸபட்ணேகர் சஞ்சலத்தி­ருந்து விடுபட்டார். பாபாவின் படம் ஒன்றை வாங்கிக்கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்குக் கிளம்பினார்.

88 பாலா சிம்பியும் உடன் சென்றார். படத்தைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டபின், பாபாவிடம் அதைக் கொடுத்துப் பணிவன்புடன் பாலா சிம்பி கேட்டார்,--

89 ''இறைவாõ இது என்ன சித்திரம்?ஃஃ பாபா படத்தைப் பார்த்துவிட்டு ஸபட்ணேகரைச் சுட்டிக்காட்டியவாறு பதிலளித்தார், ''இது அவர் நண்பரின் படம்.ஃஃ

90 இவ்வாறு சொல்­க்கொண்டே பாபா நகைத்தார். கூடியிருந்தவர்களுக்கும் சிரிப்பு வந்தது. ''பாபா, இதன் இங்கிதம் (குறிப்பு) என்னவோ?ஃஃ என்று பாலா சிம்பி பாபாவை வினவினார். (பாபாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.)

91 உடனே பாலா சிம்பி ஸபட்ணேகரிடம் சொன்னார், ''தரிசனம் செய்துகொள்ளுங்கள்; சீக்கிரம்.ஃஃ ஆனால், நமஸ்காரம் செய்தபொழுது, ''போ வெளியேஃஃ என்ற முழக்கத்தை ஸபட்ணேகர் செவிமடுத்தார்.

92 ''ஐயகோõ அதே 'போ வெளியேஃ இன்னும் என்னைப் பின்தொடர்கிறதேõ இப்பொழுது நான் எவ்வழி செல்வேன்?ஃஃ இதுவே ஸபட்ணேகரின் பெருவியப்பு.

93 அவர்கள் இருவரும் பாபாவின் எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தபோது பாபா அவர்களுக்கு ஆணையிட்டார், ''இங்கிருந்து உடனே வெளியே போய்விடுங்கள்õஃஃ

94 ''ஸமர்த்த ஸ்வாமியேõ உம்முடைய ஆணையை எப்பொழுதும் எவராலும் தாண்டமுடியாது. இவ்வாறிருக்கையில், பாமரர்களாகிய எங்களுடைய கதை என்னõ இக்கணமே நாங்கள் வெளியேறிவிடுகிறோம். --

95 ''பெரும் உதாரகுணம் படைத்தவரென்று கேள்விப்பட்டு தரிசனம் செய்ய வந்தோம். ஆனால், ''போ வெளியேஃஃ என்ற வார்த்தைகளால் வரவேற்கப்பட்டோம்õ இதில் பொதிந்துள்ள ரகசியம் என்னவென்றும் அறியோம்.--

96 ''எங்களைக் கருணையுடன் நோக்குங்கள். நாங்கள் கூடியசீக்கிரம் மறுபடியும் வந்து உங்களை தரிசனம் செய்யவேண்டுமென்று ஆசியளியுங்கள்.ஃஃ அவர்கள் வேண்டிக்கொண்ட ஆறுதல் மேற்கண்டவாறு.

97 பாபாவின் மனத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறியும் சக்தியுடைய ஞானியும் உண்டோõ ஆகவே, ஆணைக்கு அடிபணிந்து இருவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.

98 பாபாவின் முதல் தரிசனம் இவ்வாறு நிகழ்ந்து, இருவரையும் வருத்தமடையச் செய்தது. தாமதம் ஏதும் செய்யாமல், இருவரும் அவரவர் கிராமத்தைச் சென்றடைந்தனர்.

99 மேலும் ஓராண்டு கழிந்தது. ஆனபோதிலும், ஸபட்ணேகரின் மனம் உறுதிப்படவில்லை. மறுபடியும் கண்காபூருக்குச் சென்றார். மனக்கலக்கம் அதிகரித்தது.

100 ஓய்வெடுப்பதற்காக மாடேகாங்விற்குச் சென்றார். கடைசியில் காசி க்ஷேத்திரத்திற்குச் செல்வதென்று முடிவெடுத்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

101 காசிக்குப் புனிதப் பயணமாகக் கிளம்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் மனைவிக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது. காசிப் பயணம் நிறுத்தப்பட்டதுõ

102 ஆச்சரியமளிக்கக்கூடிய அந்த தெய்வீகக் காட்சி ஏற்பட்டது எப்படியென்ற புதினத்தை விவரிக்கிறேன். ஸாயீயின் லீலைகளைக் கவனத்துடன் கேளுங்கள்.

103 ஸபட்ணேகரின் மனைவி படுக்கையில் உறங்கிக்கொண் டிருந்தபோது, ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு 'லக்கட்சாஃவின் கிணற்றுக்குத் தாம் செல்வதுபோல் கனவொன்று கண்டார்.

104 மனைவி கனவைக் கணவருக்கு விவரித்தார், ''அங்கு, ஒரு வேப்பமரத்தடியில், தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக்கொண்டிருந்த பக்கீர் ஒருவர் என்னருகில் வந்தார்.--

105 ''கோமளமான குர­ல் பக்கீர் இயம்பினார், 'குழந்தாய், ஏன் இப்படி வீணாக சிரமப்படுகிறாய்? நான் உன்னுடைய குடத்தை நிர்மலமான தூய நீரால் நிரப்பித் தருகிறேன்.ஃ--

106 ''எனக்குப் பக்கீரிடம் பீதி ஏற்பட்டது. கா­க்குடத்தை எடுத்துக்கொண்டு சரசரவென்று வீடு திரும்பினேன். பக்கீர் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். --

107 ''கனவின் இந்தக் கட்டத்தில் நான் விழித்துக்கொண்டேன்.ஃஃ மனைவி கண்ட கனவின் விவரத்தைக் கேட்ட ஸபட்ணேகர் சிர்டீ செல்வதென்று முடிவெடுத்தார்.

108 அதே முஹூர்த்தத்தில் இருவரும் கிளம்பி, மறுநாள் உதயகாலத்தில் சிர்டீ கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர். உடனே மசூதிக்குச் சென்றனர். அந் நேரத்தில் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார்.

109 ஆகவே, பாபா திரும்பிவரும் வரையில் அவருக்காகக் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி பாபாவும் அங்கு வந்தார்.

110 நகத்தி­ருந்து சிகைவரை, கனவில் கண்ட அதே உருவத்தைப் பார்த்த பெண்மணி (ஸபட்ணேகரின் மனைவி) ஆச்சரியப்பட்டார். மேலும் உன்னிப்பாகப் பார்த்தார்.

111 பாதங்களை அலம்பும் சேவை முடிந்தது. தரிசனம் செய்த பிறகு பாபாவின் பாதங்களுக்குப் பெண்மணி நமஸ்காரம் செய்தார். ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு பாபாவையே பார்த்துக்கொண் டிருந்தார்.

112 பெண்மணியின் விநயத்தைக் கண்டு ஸாயீநாதரின் சித்தம் மகிழ்ந்தது. அவளுடைய வியாதியை நிவாரணம் செய்ய, மெல்­ய குர­ல் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் பாபா.

113 வழக்கம்போல, அங்கிருந்த ஒரு மூன்றாவது நபரிடம் தம்முடைய வியாதியைப்பற்றிப் பிரேமையுடன் விஸ்தாரமாக பாபா தெரியப்படுத்தினார்.

114 உண்மையில் அது அப் பெண்மணியின் கதை. அதை அவளிடம் நேரிடையாகவே சொல்­யிருக்கவேண்டும். ஆயினும், அவளுடைய முன்னிலையில், மூன்றாமவர் ஒருவரிடம் அதைச் சொன்னபோது அப் பெண்மணி கண்கொட்டாது கதையைக் கேட்டாள்.

115 ''என்னுடைய கைகள், வயிறு, இடுப்பு, எல்லாம் பல வருஷங்களாகக் கடுமையாக வ­க்கின்றன. மருந்துகள் தின்று நான் களைத்துவிட்டேன். வியாதி பரிஹாரம் ஆகவில்லை (குணமடையவில்லை).--

116 ''மருந்துகளை விழுங்கி விழுங்கி என்னுடைய தொண்டை அழற்சியுற்றதுதான் மிச்சம். ஒரு நிவாரணமும் ஏற்படவில்லை. திடீரென்று அந்த வியாதி இப்பொழுது காணாமல் போய்விட்டது. என்னே ஆச்சரியம்õஃஃ

117 இதுதான் அப் பெண்மணியின் கதை. பெயரைக்கூடக் குறிப்பிடாமல் மூன்றாமவரிடம் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அப் பெண்மணி சம்பந்தப்பட்டவையே; அவளுடைய கதையேõ

118 பாபா மறைமுகமாக விவரித்த வியாதி, ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு நிவிர்த்தியானபோது, பெண்மணியின் அனுபவம் உண்மையை உணர்த்தியது.

119 அப் பெண்மணியின் விருப்பம் பின்னர்ப் பூரணமாக நிறைவேற்றப்பட்டது. ஆனபோதிலும், ஸபட்ணேகர் தரிசனம் செய்யப்போனபோது, 'போ வெளியேஃ என்ற பழைய வெகுமானத்தையே பாபா மறுபடியும் அளித்தார்.

120 ''பாபா விடாப்பிடியாக என்னை இழிவுபடுத்தும்படியாக நான் என்ன தவறு இழைத்தேன் என்று அறியேன். நான் நமஸ்காரம் செய்யும்போது அவர் கூறும் மறுமொழி, மாறமாட்டேன் என்கிறதுõ--

121 ''என் கண்ணெதிரிலேயே மற்றவர்களிடம் மிகுந்த பிரேமை காட்டுகிறாரே; அவர் என்னிடம் மட்டும் கோபங்காட்டுவதற்கு நான் முன்ஜன்மங்களில் என்ன பாவம் சம்பாதித்தேன்?--

122 ''காலையிலும் மாலையிலும் அவரைப் பார்ப்பதற்குச் செல்லும் மக்கள் நித்தியதீபாவளியைப்போல ஆனந்தம் அனுபவிக்கிறார்களே; என்னுடைய தலையில்மட்டும் 'போ வெளியேஃ என்றா எழுதியிருக்கிறது?--

123 ''என்னுடைய கர்மவினை என்னை அதர்மவழியில் செலுத்தி அளவற்ற பாவங்களைச் செய்யவைக்கும் அளவுக்குக் கொடுமையானதோ? அதனால்தான் பாபா எனக்கு அவகிருபை (கிருபைக்கேடு) காட்டுகிறாரோ?--

124 ''ஆரம்பகாலத்தில் பாபா விஷயமாக நான் குதர்க்கமாகச் சிந்தித்து சந்தேகப்பட்டேன். ஆகவே, பாபாவே இந்த உபாயத்தால் என்னைத் தம்மிடம் நெருக்கமாக இழுக்கிறார் என்று நினைக்கிறேன்.ஃஃ

125 ஆகவே, பாபாவின்மேல் உறுதிப்பாட்டுடன் மனம் செலுத்தி, பாபாவிடமிருந்து அநுக்கிரஹம் பெறும்வரை சிர்டீயி­ருந்து நகர்வதில்லை என்று ஸபட்ணேகர் நிர்த்தாரணம் செய்துகொண்டார்.

126 முவ்வகைத் தாபங்களால் தாக்குண்டபோதிலும், ஸாயீதரிசனம் செய்யவேண்டுமென்ற தாஹத்துடன் வந்தவர் யாராவது, மனத்திருப்தி அடையாமல் கூம்பிய முகத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறாரா?

127 அந்த நாளில், அன்னமும் பானமும், போவதும் வருவதும் பிடிக்காமல், எதிலும் விருப்பமின்றி ஸபட்ணேகர் சோகமாக இருந்தார். தூக்கம் வராமல் விழித்துக்கொண்டே படுக்கையில் படுத்திருந்தார்.

128 ''யாரும் அருகில் இல்லாத சமயம் பார்த்து, பாபா தனிமையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன்.ஃஃ

129 இவ்வாறு ஸபட்ணேகர் நிச்சயம் செய்துகொண்டார். அவருடைய தீர்மானத்திற்குப் பலனும் கிடைத்தது. மனத்துள்ளே ஏற்பட்ட நல்லெழுச்சியால் பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டார்.

130 பாதங்களில் தலையை வைத்து வணங்கியபோது பாபா தம்முடைய கையை ஸபட்ணேகரின் தலையின்மேல் வைத்தார். ஸபட்ணேகர் பாதசேவை செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது, ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.

131 வந்தவுடன், உட்கார்ந்த நிலையில் பாபாவின் இடுப்பை மும்முரமாகப் பிடித்துவிட ஆரம்பித்தாள். வழக்கம்போல பாபா அவளுடன் பேசுவதற்குத் தொடங்கினார்.

132 பேச்சின் அற்புதம் என்னவென்றால், ஸபட்ணேகர் அதை உன்னிப்பாகக் கேட்கக் கேட்க, எழுத்துக்கெழுத்து அது தம்முடைய காதை என்பதை அறிந்தார்.

133 ஆடு மேய்க்கும் பெண் அவ்வப்பொழுது 'ஊம்ஃ கொட்டிக் கதையைக் கேட்டாள். ஆயினும், ஸபட்ணேகரோ, தம்முடைய விருத்தாந்தத்தைத் தாமே கேட்டு ஆச்சரியமடைந்தார். அவர் திகைத்துப்போனார்õ

134 பாபா சொன்னதோ ஒரு மளிகைக் கடைகாரரின் கதை. ஆனால், உண்மையில் அது ஸபட்ணேகரின் காதை. கதையின் நடுவில், இறந்துபோன மகனைப்பற்றிய குறிப்பும் வெளிப்பட்டது.

135 நெருங்கிய உறவினர் ஒருவரால் விவரிக்கப்பட்டதுபோல் ஜனனத்தி­ருந்து மரணபரியந்தம், மகனின் கதை விரிவாகச் சொல்லப்பட்டது.

136 கதையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஆடு மேய்க்கும் பெண்ணிடம் கதை சொல்லப்பட்டது. அது ஒரு 'தகப்பன்- மகன்ஃ கதை. அனைத்து விஷயங்களும் அவ்விருவர் சம்பந்தமானவையே.

137 ஆகவே, அவ்வாறாகத் தம்முடைய கதையையே ஸாயீயின் திருவாய்மொழியாகக் கேட்ட ஸபட்ணேகரின் மனம் மிகுந்த வியப்பிலாழ்ந்தது. ஸாயீபாதங்களில் அவருக்கிருந்த பயபக்தி மேலோங்கியது.

138 அனைத்து விவரங்களையும் உள்ளங்கை நெல்­க்கனிபோல் பாபா அறிந்திருந்ததை ஸபட்ணேகர் மனத்தால் பாராட்டிப் போற்றினார்.

139 பிரம்ம சொரூபமாக இருப்பவருக்கு இவ்வுலகமே குடும்பம். இன்னும் சரியாகக் கூறுமிடத்து, அவரே பூரணமான சிருஷ்டி ஆவார். இதுவே ஸாயீயின் பரிமாணம்.

140 ஒன்றேயெனும் பொருளின் விஸ்தாரமே ஸாயீபாபா அவதாரம். அவரால், 'உன்னுடையதுஃ 'என்னுடையதுஃ என்று எப்படிப் பேதப்படுத்திப் பார்க்கமுடியும்? அவரே இவ்வுலக ரூபத்தில் விரிந்திருக்கிறார்õ

141 பரம புருஷனோடு ஒன்றியிருப்பவரால், எப்படி துவைத பாஷை (நான் வேறு, நீ வேறு என்று பிரித்துப் பேசுதல்) பேச முடியும்? காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்னும் பேதம் அவருக்கு இல்லை. பரந்த வானத்திற்கு வண்ணம் தீட்ட முடியுமோõ

142 பாபா மஹா அந்தர்ஞானி (பிறர் மனம் அறியும் சக்தி படைத்தவர்). ஆகவே, அந்த எண்ணம் (சுலோகம் 138) ஸபட்ணேகரின் மனத்தில் ஓடிக்கொண் டிருந்தபோதே பாபா அவரிடம் என்ன சொன்னார் என்பதைச் சொல்கிறேன். நற்குணவான்களாகிய நீங்கள் கேட்டு மகிழுங்கள்.

143 ஸபட்ணேகரை விரலால் சுட்டிக்காட்டிக்கொண்டே பாபா ஆச்சரியம் பொங்கும் குர­ல் முழங்கினார், ''இவர் மகனை நான் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார். என்மீது இக் குற்றத்தைச் சாட்டுகிறார்.--

144 ''நான் ஜனங்களின் குழந்தைகளைக் கொல்பவனாக இருந்தால், இவர் ஏன் மசூதிக்கு வந்து அழுகிறார்? நல்லது, இப்பொழுது நான் இவ்வாறு செய்கிறேன். இவர் புத்திரனை மறுபடியும் இவருடைய வயிற்றில் கொண்டுவருகிறேன். --

145 ''வேறொரு பெண்மணிக்கு, இறந்துபோன மகன் ராமதாசனை எவ்வாறு திருப்பியளித்தேனோ, அவ்வாறே, இவர் மகனையும் இவருடைய வயிற்றில் மறுபடியும் நான் கொண்டுவருகிறேன்.ஃஃ

146 இதைக் கேட்ட ஸபட்ணேகர் பாபாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் அங்கேயே காத்துக்கொண்டு நின்றார். பாபா ஸபட்ணேகரின் தலைமேல் கை வைத்து அவருக்கு தைரியமளித்தார்.

147 பாபா சொன்னார், ''இந்தப் பாதங்கள் புராதனமானவை. உம்முடைய கவலைகளெல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம் பூரணமான நம்பிக்கை வையும். சீக்கிரமே நீர் கிருதார்த்தர் (பேறுபெற்றவர்) ஆவீர்.ஃஃ

148 பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே இவ்வினிமையான வசனத்தைக் கேட்ட ஸபட்ணேகரின் நயனங்கள் கண்ணீரால் நிறைந்தன. பாபாவின் பாதங்களுக்கு அவர் வந்தனம் செய்தார்.

149 அஷ்டபா(ஆஏஅ)வம்1 அவரை ஆட்கொண்டது. ஆனந்தக்கண்ணீர் பொங்கியது. கண்ணீரால் பாபாவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார். பிரேமையுடன் பாதங்களைத் துடைத்தார்.

150 மறுபடியும் பாபா தம்முடைய கையை ஸபட்ணேகரின் தலைமேல் வைத்து, ''சௌக்கியமாக இரும்ஃஃ என வாழ்த்தினார். பிறகு, ஆனந்தம் பொங்கிய மனத்துடன் ஸபட்ணேகர் தாம் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினார்.

151 நைவேத்தியம் தயார் செய்யப்பட்டது. ஸபட்ணேகர் அதைத் தம் மனைவியின் கையில் கொடுத்தார். பூஜையும் ஆரதியும் நடந்துமுடிந்தபின், நைவேத்தியத் தட்டை அவர் பாபாவுக்கு முன்னால் வைத்தார்.

152 பின்னர், சடங்கு விதிமுறைகளின்படி தட்டைச் சுற்றி நீர் தெளித்துவிட்டுத் தட்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டார். ஐந்து பிராணன்களுக்கும் அர்ப்பணம்2 செய்தபின் பாபாவுக்கு நைவேத்தியத்தை ஸமர்ப்பணம் செய்தார்.

153 பாபா தினமும் செய்வது போன்று, நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தட்டைத் தம்முடைய கையால் தொட்டார். இதைக் கண்ட ஸபட்ணேகருக்கு மயிர்க்கூச்செறிந்தது.

154 பிறகு, அங்கே பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த இதர பக்தர்களின் ஊடே விரைவாகப் புகுந்துசென்று ஸபட்ணேகர் மறுபடியும் ஒரு நமஸ்காரம் செய்தார்.

155 அங்கு ஏற்பட்ட நெருக்கடியால், பக்தர்களின் தலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதைப் பார்த்த பாபா, ஸபட்ணேகருக்கு வழங்கிய சாந்தமான அறிவுரை என்னவென்று கேளுங்கள்.

156 ''ஓய்õ எதற்காக இப்படித் திரும்பத் திரும்ப நமஸ்காரத்தின்மேல் நமஸ்காரம்? நற்செயல் என்றுணர்ந்து பக்தியுடன் செய்யப்படும் ஒரு நமஸ்காரமே போதுமானதுõஃஃ

157 அன்றிரவு சாவடி ஊர்வலம் நடந்தது. ஸபட்ணேகர் பிரேமையுடனும் உற்சாகமாகவும் பல்லக்குக்கு முன்னே தண்டம் ஏந்தி ஆனந்தம் நிரம்பியவராக ஊர்வலத்தில் நடந்துசென்றார்.

158 கதைகேட்பவர்களுக்குச் சாவடி ஊர்வல விவரம் ஏற்கெனவே தெரியும். கூறியது கூறின் காவியம் நீளும்; ஆகவே, அது இங்கு அவசியமில்லை.

159 அன்றிரவு பாபா புரிந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்õ பாபாவை உற்றுப் பார்த்துக்கொண் டிருந்த ஸபட்ணேகருக்குப் பண்டரிபுரத்துப் பாண்டுரங்கனாக பாபா காட்சியளித்தார்.

160 பின்னர், ஸபட்ணேகர் வீடு திரும்ப அனுமதி வேண்டியபோது, ''சாப்பிட்டுவிட்டுப் போங்கள்ஃஃ என்று ஆணை பிறந்தது. அவ்வாணையைச் சிரமேற்கொண்டு, உணவருந்தியபின் புறப்படுவதற்கு முன்னதாக ஸபட்ணேகர் தரிசனம் செய்யச் சென்றார்.

161 திடீரென்று அவருடைய மனத்தில் ஒரு கற்பனை உதித்தது, ''பாபா தக்ஷிணை கேட்டால் அவருடைய விருப்பத்தை நான் எவ்விதம் திருப்திசெய்வேன்?ஃஃ

162 அவர் கொண்டுவந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டிருந்தது. பயணச் செலவுக்குத் தேவையான பணந்தான் கையி­ருந்தது. ஆகவே 'தக்ஷிணை கொடுஃ என்று பாபா கேட்டால் என்ன பதில் சொல்வது என்பதை மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார்.

163 'பாபா கேட்பதற்கு முன்னரே நான் ஒரு ரூபாயை அவருடைய கையில் வைப்பேன். அவர் மேலும் கேட்டால், இன்னுமொரு ரூபாயை அர்ப்பணம் செய்வேன். அதன் பிறகும் கேட்டால், என்னிடம் பணமில்லை என்று சொல்­விடுவேன்.--

164 'என்னிடம் புகைவண்டிக்குரிய கட்டணம் மட்டுந்தான் இருக்கிறது என்று பாபாவிடம் ஒளிவுமறைவின்றித் தெளிவாகச் சொல்­விடுவேன்.ஃ இந்தத் தீர்மானத்துடன் அவர் பாபாவிடமிருந்து விடைபெறுவதற்காகச் சென்றார்.

165 ஏற்கெனவே தீர்மானத்தபடி ஒரு ரூபாயை அவர் பாபாவின் கையில் வைத்தபோது பாபா மேலும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டார். அதை வாங்கிக்கொண்டு பாபா தெளிவாகச் சொன்னார்,--

166 ''இந்தத் தேங்காயை எடுத்துக்கொள்ளும். அதை உம் மனைவியின் சேலைத் தலைப்பில் இடும். பிறகு நீர் குசாலாகப் போய்வாரும். உம்மை வாட்டும் மனக்கிளர்ச்சியைத் தூக்கியெறியும்.ஃஃ

167 பன்னிரண்டு மாதங்கள் கழிந்த பிறகு, இந்த தம்பதிக்கு ஒரு புத்திரன் பிறந்தான். எட்டு மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு மறுபடியும் தரிசனத்திற்கு வந்தனர்.

168 குழந்தையை பாபாவின் பாதங்களில் கிடத்தினர். ஆஹாõ என்னே இந்த ஞானியர் விளைவிக்கும் அற்புதம்õ அவர்கள் இருவரும் கைகளைக் கூப்பிக்கொண்டு செய்த பிரார்த்தனையைக் கேளுங்கள்.

169 ''ஓ ஸாயீநாதரே, தேவரீர் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு என்ன செய்வதென்று அறியோம். ஆகவே, உம்முடைய பாதாரவிந்தங்களில் பணிகிறோம்.--

170 ''ஹீனர்களும் தீனர்களுமாகிய நாங்கள் பாமர மக்கள். அநாதைகளாகிய எங்களிடம் கிருபை காட்டுங்கள். இன்றி­ருந்து நிரந்தரமாக தேவரீர் பாதங்களில் நாங்கள் அடைக்கலம் காண்போமாக.--

171 ''விழிப்புநிலையிலும் சொப்பனநிலையிலும் எங்கள் மனத்தில் பலவிதமான எண்ண அலைகள் மோதிப் பக­லும் இரவிலும் சிரமபரிஹாரம் (இளைப்பாறுதல்) கிடைக்காமல் செய்கின்றன. ஆகவே, எங்களை உங்களுடைய வழிபாட்டுக்கு இழுங்கள்.ஃஃ

172 முரளீதரன் எனப் பெயரிடப்பட்ட மகன் பிறந்தது போல, காலக்கிரமத்தில் பாஸ்கரன், தினகரன் என்ற இரண்டு மகன்களும் பிறந்தனர். ஸபட்ணேகர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

173 இவ்வாறாக, தயை மிகுந்த ஸாயீயை வந்தனம் செய்ததால், சஞ்சலமடைந்திருந்த தம் மனத்தை உறுதியாக்கிக்கொண்டும், வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டும் ஸபட்ணேகர் தம் மனைவியுடன் வீடு திரும்பினார்.

174 ஆரம்பத்தில், கதையைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றே என் மனம் நினைத்தது. ஆயினும், என்னைச் சொல்லவைப்பவர் ஸாயீநாதர் என்ற காரணத்தால், கிரந்தம் (நூல்) விஸ்தாரமாகிவிட்டது.

175 ஹேமாட் அவரிடம் முழுமையாக சரணடைந்து, அடுத்த கதையின் தாத்பரியத்தைக் (உட்கருத்தைக்) கதைகேட்பவர்களுக்குக் கோடிகாட்டுகிறேன்.

176 அடுத்த கதை இதனினும் சுவாரசியமானது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஸாயீ, அற்புதங்களைப் பார்க்க விரும்பிய ஒரு பக்தரைத் திருப்திசெய்த காதை.

177 ஸாயீயின் பெருமையை மக்கள் பலர் போற்றுகின்றனர். ஆயினும், குற்றங்காணும் குணமுடையவனுக்குக் குற்றந்தான் தெரியும். உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவனுடைய மனம் தோஷங்களைக் காண்பதில்தான் மகிழ்ச்சியடையும்.

178 ''ஸாயீ பாபா ஒரு ஞானியாக இருக்கலாம். ஆனால், எனக்கே ஓர் அனுபவம் ஏற்பட்டாலன்றி, அதை அவர் எனக்கு அளித்தாலன்றி, நான் அவரைச் சிறிதும் மதிக்கமாட்டேன்.ஃஃ இவ்விதம் நினைத்து,--

179 பரீட்சை செய்து பார்ப்பதற்கென்றே சென்றவரையும் அவர் திருப்திசெய்தார்õ அடுத்த அத்தியாயத்தின் காதை இதுவே. கதைகேட்கும் நல்லவர்களே, கவனத்துடன் கேளுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில் , 'சந்தேகிகளுக்கும் அருள்ஃ என்னும் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play